Pages

Saturday, September 19, 2020

பழைய சோறு

 பழைய சோறு




பச்சை நெல் வயலைக் கண்கள் முழுவதும் சுமந்து, இள நெல்லை நுகர்ந்து, அதன்  பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான். 


அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாக்கும் முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கல் அரிசிச் சோறு.  இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழைய சோறு அல்லது பழையது.  காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒருவகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்து கொள்ள துடிப்பது இன்னொரு வகை.  சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம்!  நல்லது பழையது மாம்பழ வாசம் வீசுமாம்.  பழையசோறு - அது கிராமத்தின் உன்னதம்.

  "... மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து...". - முக்கூடற்பள்ளு

No comments:

Post a Comment