Pages

Friday, October 16, 2020

3 மதிப்பெண் வினாக்கள், இயல் 1

 இயல் 1

3 மதிப்பெண் வினாக்கள்


1). தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு யாவை?

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள்:

  1. அன்னை மொழியாகவும், அழகாய் அமைந்த செந்தமிழாகவும் விளங்குபவள்.
  2. பழமைக்கும் பழமையாய்த் தோன்றி, நறுங்கனியாய்ச் சுவை தருபவள்.
  3. கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசாய் வீற்றிருந்தவள்.
  4. பாண்டிய மன்னனின் மகளாகப் பிறந்தவள்.
  5. திருக்குறளின் பெருமைக்கு உரியவள்.
  6. பத்துப்பாட்டாய், எட்டுத்தொகையாய், பதினெண்கீழ்க்கணக்காய், சிலப்பதிகாரமாய், மணிமேகலையாய்த் திகழ்பவள்.

இவையே பாவலரேறு, தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள் ஆகும்.



2). 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'. இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

இளம்பயிர் வகை அமைந்த தொடர்கள்:

  1. பெண்கள் நெல்நாற்றுகளை நடுகிறார்கள்.
  2. மாங்கன்று நட்டு வளர்த்தால், பின்னாளில் சுவைமிகு கனிதரும்.
  3. வாழைக்குருத்து தளிர்விட்டு வளர்கிறது.
  4. தென்னம்பிள்ளையை நடுவதற்கு மூன்றடிக்குழி தோண்டவேண்டும்.
  5. சோளப்பைங்கூழ் பசுமையாய் இருக்கிறது.

3). தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

கோப்பினைப் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடவும்


4). 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை எல்லாம் எமக்குத் தெரியும்.
 இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக.

வினைமுற்றுகள் - தொழிற் பெயர்கள்:


  1. அறிந்தது - அறிதல்
  2. அறியாதது - அறியாமை
  3. புரிந்தது - புரிதல்
  4. புரியாதது - புரியாமை
  5. தெரிந்தது - தெரிதல்
  6. தெரியாதது - தெரியாமை
  7. பிறந்தது - பிறத்தல்
  8. பிறவாதது - பிறவாமை

No comments:

Post a Comment