Pages

Saturday, January 23, 2021

அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான்


அந்த இடம் 

காற்றே! வா 

உன்னை பாடாமல் 

இருக்க முடியாது 

ஏனெனில் 

பாட்டின் மூல ஊற்றே 

நீதான்

பொய்கை இடம் போனால் 

குளிர்ந்து போகிறாய் 

பூக்களைத் தொட்டால் 

நறுமணத்தோடு வருகிறாய் 

புல்லாங்குழலில் புகுந்தால் 

இசை ஆகிவிடுகிறாய் 

எங்களிடம் வந்தால் மட்டுமே 

அழுக்காகிவிடுகிறாய் 

மரங்களின் 

ஊமை நாவுகள்

 உன்னிடம் மட்டுமே 

பேசுகின்றன 

கடலலைகள் 

உன்னோடு மட்டுமே 

குதித்து கும்மாளமிடுகின்றன 

வயலில் பச்சைப் பயிர்கள் 

நீ வந்தால் மட்டுமே 

ஆனந்த நடனம் 

ஆடுகின்றன 

நீ என்ன குதூகலமா?

 கொண்டாட்டமா?

 கோலாகலமா?

 நெடு நாட்களாகவே 

எனக்கு ஒரு சந்தேகம்

 விளக்குகளில் இருந்து 

பறிக்கும் சுடர்களை

பூக்களிலிருந்து திருடும் 

நறுமணத்தை 

வீணையில் இருந்து 

கவர்ந்த இசையை

 எங்கே கொண்டுபோய் 

ஒளித்து வைக்கிறாய்?

No comments:

Post a Comment