Showing posts with label மனப்பாடப் பாடல்கள். Show all posts
Showing posts with label மனப்பாடப் பாடல்கள். Show all posts

Wednesday, February 3, 2021

Sunday, January 24, 2021

திருக்குறள் மனப்பாடப் பாடல்கள் இயல் 3

 திருக்குறள் மனப்பாடப் பாடல்கள் இயல் 3 Click here 



Saturday, October 17, 2020

அன்னை மொழியே மனப்பாடப் பாடல்

 அன்னை மொழியே!

 மனப்பாடப் பாடல்



Saturday, September 5, 2020

பத்தாம் வகுப்பு- மனப்பாடப்பகுதி


அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே!

1.👉அன்னை மொழியே !அழகார்ந்த செந்தமிழே !

👉முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

 👉கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில் 

👉மன்னி அரசிருந்த மண்ணுலக பேரரசே!

2.👉தென்னன் மகளே !திருக்குறளின் மாண்புகழே!

👉இன்னறும் பாப்பத்தே ! எண் தொகையே!  நற்கணக்கே!

 👉மன்னுஞ் சிலம்பே! மணிமே கலை வடிவே!

👉முன்னும் நினைவால் முடி தாழ வாழ்த்துவமே!

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்.



முல்லைப்பாட்டு

👉சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் 

👉உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் 

👉நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய 

👉கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர

 👉இன்னே வருகுவர், தாயர் " என்போள் 

👉நன்னர் நன்மொழி கேட்டனம்.

-நப்பூதனார்


காசிக்காண்டம்


👉விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

👉வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் 

👉திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் 

👉எழுதல் முன் மகிழ்வன செப்பல் 

👉பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல் 

👉போமெனில் பின் செல்வதாதல்

👉பரிந்து முகமன்  வழங்கல் இவ்வொன்பான் 

👉ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

-அதிவீரராம பாண்டியன்.


திருக்குறள்


1. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்ப தறிவு

2. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே 

நல்லார் தொடர்கை விடல்

3. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் 

கண்ணோட்டம் இல்லாத கண்

4. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 

பெருமை முயற்சி தரும்

5. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 

இன்மை புகுத்தி விடும்

6. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து 

இயற்கை அறிந்து செயல்

7. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 

பொருளல்லது இல்லை பொருள்

8. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று 

உண்டாகச் செய்வான் வினை

9. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் 

சுற்றமாச் சுற்றும் உலகு

10. இன்மையின் இன்னாதது யாதனின் இன்மையின்

 இன்மையே இன்னா தது.


பெருமாள் திருமொழி


👉வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் 

👉மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

 👉மீளாத் துயர் தரினும் வித்துவக் கோட்டு அம்மா 

👉நீ ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே .

-குலசேகர ஆழ்வார்


நீதி வெண்பா


👉அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி 

👉மருளை யகற்றி மதிக்கும் தெருளை

👉அருத்துவதும் ஆவிக்கு அரும் துணையாய் இன்பம் 

👉பொருத்துவதும் கல்வி என்றே போற்று .

-செய்குத்தம்பி பாவலர்.


திருவிளையாடற் புராணம்


மன்னன் புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்

👉புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக்காடனார்க்குப் 

👉பண்ணிய குற்றமெல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

👉 நுண்ணிய கேள்வியோரும் மன்ன நீ நுவன்ற சொல்லாம் 

👉தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீ தணிந்தது என்னா.

-பரஞ்சோதி முனிவர்.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

ஆடுக செங்கீரை


👉செம்பொ னடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு கலந்தாடத்

👉திருவரை அரை ஞாண்அரை மணியொடு ஒளிதிகழ் அரைவடம் ஆடப்

👉பைம்பொன் அசும்பிய தொந்தி யொடுஞ் சிறு பண்டி சரிந்தாடப்

👉பட்ட நுதல் பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பரிந்தாடக் 

 👉கம்பி விதம் பொதி குண்டலமும் குழை காதும் அசைந்தாட 

 👉கட்டிய சூழியும் உச்சியும் உச்சிக் கதிர் முத்தொடுமாட 

👉வம்பவளத் திருமேனியும்  ஆடிட ஆடுக  செங்கீரை

 👉ஆதி வயித்திய நாத புரிக் குகனாடுக  செங்கீரை.

- குமரகுருபரர்.


கம்பராமாயணம்

பாலகாண்டம்- நாட்டுப் படலம்

👉தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க,

 👉கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க ,

👉தெண்திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின்

 👉வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ.


அயோத்தியா காண்டம்- கங்கைப் படலம்

👉வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப் 

👉பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்;

👉மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ

👉ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்.

-கம்பர்.


சிலப்பதிகாரம்

மருவூர்ப் பாக்கம்

தூசும் துகிரும் ஆரமும் அகிலும் 

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் 

அருங்கல வெறுக்கை யோடு அளந்து கடை அறியா 

வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகும் ;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும் ;

-இளங்கோவடிகள்.


காலக்கணிதம்

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

 மாறும் உலகின் மகத்துவம் அறிவேன் !

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை 

என்பதறிந்து ஏகுமென் சாலை !

தலைவர் மாறுவர் ; தர்பார் மாறும்;

 தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம் !

கொள்வோர் கொள்க ;குரைப்போர் குரைக்க!

 உள் வாய் வார்த்தை உடம்பு தொடாது ;

நானே தொடக்கம்; நானே முடிவு;

 நான் உரைப்பதுதான் நாட்டின் சட்டம் !

-கண்ணதாசன்.


தேம்பாவணி

இயற்கை கொண்ட பரிவு

👉நவமணி வடக்கயில் போல் 

👉நல்லறப் படலைப்  பூட்டும்

 👉தவமணி மார்பன் சொன்ன 

👉தன்னிசைக்கு இசைகள் பாடத்

👉துவமணி மரங்கள் தோறும் 

👉துணர் அணிச் சுனைகள் தோறும்

👉உவமணி கானம் கொல் என்று

👉ஒலித்து அழுவ போன்றே 

- வீரமாமுனிவர்.


--------------------------------------------------------