Saturday, September 19, 2020

நிற்க அதற்குத் தக

 இயல் 1



இதில் நீங்கள் செல்லும் வழி யாது?

இன்சொல் பேசுவதே எமது வழியாகும்

உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?

இன்சொல் பேச முடியாத சூழலில் அமைதியாக இருந்து விடு.  வன்சொல் பேசி விடாதே.  பேசிய வார்த்தைகளை ஒருபோதும் திரும்பப் பெற இயலாது என நண்பருக்கு வழிகாட்டுவேன்.




இயல் 2


மேற்கண்ட அறிவிப்பை கேட்ட நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

1. வானொலி அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்றச் செய்வேன்

2. புயலின் போது வெளியே செல்வதைத் தவிர்ப்பேன்

3. தொலைபேசி, மின் சாதனங்கள் பயன்படுத்துவதைத் தடுப்பேன்

4. மீனவ நண்பர்களைக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கச் செய்வேன்

5. மாடியில் இருப்பதைத் தவிர்த்து தளப் பகுதியிலேயே தங்கச் செய்வேன்

6.வாகனத்தை ஓட்ட நேர்ந்தால் கடற்கரைப் பகுதிகளுக்கு தொலைவிலும், மரங்கள் மின் கம்பிகள் உள்ள பாதைகள், நீர்வழிகள் ஆகியவற்றில் இருந்து விலகியும் வாகனங்களைச் செலுத்தச் செய்வேன்.

7.காற்று அடிப்பது நின்றாலும் மறுபடி எதிர் திசையில் இருந்து வேகமாக வீச ஆரம்பிக்கும். எனவே, காற்று அடிப்பது முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என அறிவுறுத்துவேன்.