Tuesday, July 26, 2022

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

எந்த காட்சி கொடுக்கப்பட்டாலும் இந்த ஒரே கவிதை போதும்.


கண்ணில் தோன்றும் இக்காட்சி-மனக்

கண்ணில் நீளுது அதன்நீட்சி !

என்னைக் கவர்ந்த இக்காட்சி -என்னை

என்னவோ செய்யுது ஆட்சி !

எண்ணங்கள் பலவாய் விரியுது-என்றன் 

எழுத்துகள் கவியாய் மலருது !

உண்மையை உள்ளம் உணருது-உள்ளம் 

உரக்கச் சொல்லத் துடிக்குது !!



Tuesday, July 19, 2022

முதல் இடைப் பருவ மாதிரித் தேர்வு ஜூலை 2022

 

முதல் இடைப் பருவ மாதிரித் தேர்வு 

ஜூலை 2022

மொத்த மதிப்பெண்கள் 50.        நேரம்: 1மணி 30நிமிடங்கள்

பகுதி 1

சரியான விடையைத் தேர்வு செய்க.  6×1=6

  1. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'. இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே_______
    1. பாடிய கேட்டவர்
    2. பாடல் பாடிய
    3. கேட்டவர் பாடிய
    4. பாடல் கேட்டவர்
  2. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது_____
    1. இலையும் சருகும்
    2. தோகையும் சண்டும்
    3. தாளும் ஓலையும்
    4. சருகும் சண்டும்
  3. செய்தி 1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலக காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.   செய்தி 2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே.  செய்தி 3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
    1. செய்தி 2 மட்டும் சரி
    2. செய்தி 1,2 ஆகியன சரி
    3. செய்தி 3 மட்டும் சரி
    4. செய்தி 1,3 ஆகியன சரி
  4. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்-பாரதியாரின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
    1. உருவகம், எதுகை
    2. மோனை, எதுகை
    3. முரண், இயைபு
    4. உவமை, எதுகை
  5. காசிக் காண்டம் என்பது______
    1. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
    2. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
    3. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
    4. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்.
  6. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு.  இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை_______
    1. நிலத்திற்கேற்ற விருந்து
    2. இன்மையிலும் விருந்து
    3. அல்லிலும் விருந்து
    4. உற்றாரின் விருந்து

பொருத்துக 4×1=4

  1. கொண்டல் -மேற்கு 
  2. கோடை- தெற்கு 
  3. வாடை -கிழக்கு 
  4. தென்றல் -வடக்கு
பகுதி 2
ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க. 5×2=10
  1. 'இறடிப்பொம்மல் பெறுகுவீர்'-இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக
  2. கலைச்செல் தருக. Tornado, Homograph 
  3. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக. மலை -மாலை, வளி-வாளி
  4. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க. இன்சொல், முத்துப்பல்
  5. 'வேங்கை' என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
  6. நச்சப்படாதவன் செல்வம் இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
  7. உண்பதூஉம் உடுப்பதூஉம் காணின் பிறர் மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் -இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
பகுதி 3
பின்வரும் வினாக்களுக்கு விடை அளிக்க.
4×4=16
  1. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக. (அல்லது) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
  2. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர். திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்து அளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது. இப்படியாகக் காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக. (அல்லது) உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால் ....உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
  3. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.  வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். -இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக. (அல்லது) அறிந்தது அறியாதது புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக
  4. வேலொடு நின்றான் இடு என்றது போலும் கோலொடு நின்றான் இரவு-. குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.  (அல்லது) நயம் பாராட்டுக. "கத்துக்கடல் சூழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரிசி வரும். குத்தி உலையிலிட ஊரடங்கும். ஒரு அகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்."-காளமேகப் புலவர்.
பகுதி 4
1×5=5
  1. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக. (அல்லது) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
பகுதி 5
1×8=8
விரிவாக விடை தருக
  1. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக. (அல்லது) சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
அடி பிறழாமல் எழுதுக
  1. 'முயற்சி' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
  2. 'சிறுதாம்பு' எனத் தொடங்கும் முல்லைப்பாட்டுப் பாடலை எழுதுக.