1) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவது யாவை?
- பழமை
- குமரி நில ஆட்சி
- தென்னன் தமிழ்
- திருக்குறளின் புகழ்
- பதினெண்மேற்கணக்கு
- பதினெண்கீழ்க்கணக்கு
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
2) ‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’. இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
- நெல்நாற்று நடப்பட்டுள்ளது
- மாங்கன்று நடப்பட்டுள்ளது
- தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது
- வாழைக்குருத்து வளர்ந்துள்ளது
- சோளப் பைங்கூழ் வளர்ந்துள்ளது.
3) ‘அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை எல்லாம் எமக்குத் தெரியும்.
இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக.
வினைமுற்றுகள் – தொழிற் பெயர்கள்:
- அறிந்தது – அறிதல்
- அறியாதது – அறியாமை
- புரிந்தது – புரிதல்
- புரியாதது – புரியாமை
- தெரிந்தது – தெரிதல்
- தெரியாதது – தெரியாமை
- பிறந்தது – பிறத்தல்
- பிறவாதது – பிறவாமை
4) மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வர்ணித்து எழுதுக .
குறிப்பு : இலைகளில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘ சளப் தளப் ‘ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்
இலைகளில் சொட் சொட் என்று நீர் சொட்டுகிறது. உடலில் மெல்லிய குளிர் ஓடுகிறது. தேங்கிய குட்டையில் ‘ சளப் தளப் ‘ என்று குழந்தைகள் குதிக்கின்றனர். நீரில் காகிதக் கப்பல் விடுகின்றனர்.
5) தோட்டத்தில் மல்லிகைப்பூப் பறித்த பூங்கொடி வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டிற்கு வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.
- மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- பூப்பறித்த- இரண்டாம் வேற்றுமைத்தொகை.
- ஆடுமாடுகள்- உம்மைத்தொகை.
- தண்ணீர்த்தொட்டி -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.
- குடிநீர்- வினைத்தொகை.
- சுவர்க் கடிகாரம்- ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
6) கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீ எழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!
-இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
தொடர் வகைகள்
- கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்
- காலையில் நீ எழும்பு! – ஐந்தாம் வேற்றுமைத் தொடர்.
- மாமழை பெய்கையிலே – உரிச்சொற்றொடர்.
- மாம்பூவே கண்ணுறங்கு! – விளித்தொடர்
- பாடினேன் தாலாட்டு! – வினைமுற்றுத் தொடர்.
- ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – அடுக்குத்தொடர்
7) வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
அணி: உவமை அணி
விளக்கம்: உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வந்துள்ளது.
8) “மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
இறைவன் நீங்காத துன்பத்தைத் தந்தாலும், அவனது அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்
9) நேற்று இரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலட்சுமி கூப்பிடுகிறாள், போய் பார்” என்றார். “இதோ சென்று விட்டேன்” என்றவாற அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு, அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
- நிறைத்திருந்தது
- இலட்சுமி கூப்பிடுகிறாள்
- இதோ சென்று விட்டேன்
- என்னடா விளையாட வேண்டுமா?
- நீயும் இவனும் விளையாடுங்கள்
- இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்
10) ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போது மொழிபெயர்ப்பது, விளக்குவது (interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிக் கேட்பியில் (headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர்கள் முன் உள்ள காதணிக்கேட்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார்.
இப்பகுதியில் இருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
- ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறதா?
- மொழிபெயர்ப்பது என்பது யாது?
- விளக்குவது என்பது யாது?
- ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் எங்கு அமர்ந்திருப்பர்?
- ஐ.நா. அவையில் காதணிக்கேட்பியின் பயன்பாடு யாது?
11) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார் . அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
- இளமையில் கல்
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
- கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
- இன்று நீ வேலைக்குச் சென்றால், உனக்குக் கிடைக்கும் தொகை பெரியதாகத் தோன்றும். ஆனால், உன்னுடைய எதிர்காலம் வீணாகும் என்று கூறுவேன்.
12) ‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’. – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக
குறிஞ்சி-
அன்று-தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்
இன்று-சுற்றுலா
முல்லை-
அன்று-ஆடுமாடு மேய்த்தல்
இன்று-காடுகள் சார்ந்த தொழில்கள்
மருதம்-
அன்று-வேளாண்மை
இன்று- வேளாண்மை
நெய்தல்-
அன்று- மீன்பிடித்தல், உப்பு விளைத்தல்
இன்று- மீன்பிடித்தல், உப்பு விளைத்தல்
பாலை-
அன்று-வழிப்பறி செய்தல்
இன்று-எண்ணெய் எடுத்தல்
13) வள்ளுவம் , சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
- கருவி, காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிதல்
- மனவலிமை, குடிமக்களைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகியவற்றுடன் திகழ்தல்.
- நுண்ணறிவு, நூலறிவு, உலக நடைமுறைகளை அறிதல் ஆகியவை இன்றும் பொருந்துகின்றன.
14) பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
- சுற்றத்தாருடன் அன்பு, துணை, வலிமை இல்லை என்றால் பகைவரை எதிர்கொள்ள முடியாது.
- துணிவு, அறிதல், அன்பு, உதவி இல்லாதவர் எளிதில் பகைக்கு ஆட்படுவார்.
15) “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
இடம்: ம.பொ.சி. அவர்களின் ‘எனது போராட்டம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
விளக்கம்: ம.பொ.சி. அவர்கள் சென்னை பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார்
16) பின்வரும் பத்தியைப் படித்து மையக் கருத்தை எழுதுக.
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவான இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்துத் தொடக்கத்தில் அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் பழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிசப் பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும், இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்தி கோளின் வமிச பரம்பரை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.
மையக்கருத்து
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சி ஆண்டு, போர் வெற்றிகள், வரலாறு, வாழ்த்து, சாசனம் எழுந்த நிகழ்ச்சி ஆகியவை காணப்படும். முதல் இராஜராஜனுடைய எட்டாம் ஆட்சி ஆண்டில்தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது.
17) “பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”
அ) இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
ஈ). காருகர் – பொருள் தருக.
உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
அ). இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
பகர்வனர்
பட்டினும்
பருத்தி
தூசும்
துகிரும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பகர்வனர்
நகர வீதியும்
பட்டினும்
கட்டு
ஈ). காருகர் – பொருள் தருக.
காருகர் – நெய்பவர்
உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனம், அகில்.
18) ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
- அளவடிகளைப் பெற்று வரும்
- இயற்சீர் பயின்று வரும். பிற சீரும் வரும்.
- ஆசிரியத் தளைகள் பயின்று வரும். பிற தளைகளும் கலந்து வரும்.
- மூன்றடி முதல் பல அடிகள் வரை வரும்.
- அகவலோசை பெற்று வரும்.
- ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
19) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
- அறம் செய்வதில் வணிக நோக்கம் கூடாது
- செங்கோல் போன்று ஆட்சி மேற்கொள்ளவேண்டும்.
- நீர்நிலை பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமை ஆகும்
- குற்றத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்
போன்ற அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே.
20) ‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. (குறிப்பு : சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)
சுற்றுச்சூழலைப் பேணுவதில் நாம் போதிய அக்கறை காட்டாமல் இருந்து வருகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மையால் சுற்றுச்சூழல் விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இது மிகவும் கவலைக்குரியதாகும். அறநெறியில் நின்று வாழ்க்கை நடத்தியவர்கள் நம் முன்னோர். அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். பூமியைத் தெய்வமாகவும் விலங்குகளை உற்ற தோழனாகவும் பாவித்தார்கள். காடுகளையும் காட்டு விலங்குகளையும் பாதுகாத்தார்கள். அவர்களது வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி நாமும் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ வேண்டும்.
21) எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
- உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
- உடலின் தன்மையை அறியேன்.
- உணவுத் தேடும் வழி அறியேன்.
- காட்டில் செல்லும் வழி அறியேன்.
22) கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
"ஆரெயில் நெடுங்கொடி ‘வாரல்’ என்பனபோல் மறித்துக் கைகாட்ட"
கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக் கருதி கொடிகள் கையசைத்து ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். எனவே, இது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.
23) ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதைமாந்தர் வாயிலாக விளக்குக.
- அவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டது. அதைக் கொண்டாட விரும்பினார்.
- பார்வையற்ற பிச்சைக்காரனின் அலுமினிய பாத்திரத்தில் இரண்டணாவை இட்டு மகிழ்ந்தார். டிக்கெட் விலை ஓரணா கூடியிருந்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிடத்திற்குள் ஒரு அணாவுக்கு யாசிக்கும் நிலை வந்ததை எண்ணினார்.
- பிச்சைக்காரனின் அலுமினியப் பாத்திரத்தில் தான் இட்ட இரண்டணா தன்னுடையது என்றும், தனக்குச் சொந்தமில்லை என்றும், ஓரணா போட்டுவிட்டு இரண்டணா எடுத்துக் கொண்டால் என்ன என்றும் தனக்குள் தர்க்கம் புரிந்தார்.