Showing posts with label சங்க இலக்கியத்தில் அறம். Show all posts
Showing posts with label சங்க இலக்கியத்தில் அறம். Show all posts

Monday, March 28, 2022

சங்க இலக்கியத்தில் அறம் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. மனிதன் அறத்தோடு வாழ வேண்டும்? ஏன்?
    1. மனிதன் தனியானவன் அல்லன்
    2. அவன் சமூகக் கடலின் ஒரு துளி
    3. அவனுக்குள்ளே சமூகம்- சமூகத்துக்குள்ளே அவன்
    4. மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகுகிறது
    5. இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும்.
  2. அறநெறிக் காலம் என்றால் என்ன?
    1. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக் காலம் என்பர்
    2. அறநெறிக் கால அறங்கள் சமயம் சார்ந்தவை
  3. சங்க இலக்கிய அறங்கள் பற்றி எழுதுக
    1. சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை
    2. சங்ககால வாழ்க்கையில் இருந்து உருவான அறங்களே சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளன
    3. சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல
  4. அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை குறித்து எழுதுக
    1. அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்து
    2. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது என்று கூறப்பட்டது
    3. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்" எனச் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார்
  5. அரசியல் அறம் பற்றி எழுதுக
    1. அறநெறி முதற்றே அரசின் கொற்றம், அறநெறி பிழையாத் திறனறி மன்னர் என்பவை மன்னர்கள் அறநெறியின் அடிப்படையில் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன.
    2. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமை என்று சொல்லப்பட்டது.
    3. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன்பொதிப் பசுங்குடையார்
  6. அறங்கூறு அவையம் பற்றிக் கூறுக
    • "அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்" என்கிறது புறநானூறு
    • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன
    • உறையூரில் இருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது
    • மதுரையில் இருந்த அற அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது
  7. சங்க இலக்கியத்தில் போர் அறம் பற்றி எழுதுக
    1. போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது
    2. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் துன்பம் வராமல் போர் புரிய வேண்டும்
    3. தன்னை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது
  8. கொடைச் சிறப்பைப் பாடும் இலக்கியங்கள் எவை?
    1. சிறுபாணாற்றுப்படை
    2. பதிற்றுப்பத்து
    3. புறநானூறு
  9. கொடைப் பெருமைகளாகப் பேசப்படுவன எவை?
    1. அரியன என்று கருதாது தயங்காது கொடுத்தல்
    2. ஈதலால் வரும் இழப்புக்கு வருந்தாமை
    3. நாள்தோறும் கொடுத்தல்
  10. எவையேனும் 4 வள்ளல்களின் சிறப்பை எழுது
    1. வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவன் பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
    2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்
    3. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைப்பவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
    4. மறுமை நோக்கி கொடுக்காதவன் பேகன்
    5. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் தருவதாகக் கூறியவன் குமணன்
    6. எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி.
  11. ஈதல் பற்றிக் கலித்தொகை கூறும் செய்தி யாது?
    1. ஈயாமை இழிவு
    2. இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது
  12. ஈதல் பற்றி நக்கீரர் கூறுவது யாது?
    • செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே
  13. பிறருக்கு உதவுதல் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவன யாவை?
    1. "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று கலித்தொகை கூறுகிறது
    2. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்கிறது நற்றிணை
    3. 'உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும்' என்று பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார்
  14. வாய்மை பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவன யாவை?
    1. பொய்யாச் செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன
    2. 'பிழையா நன்மொழி' என்று நற்றிணை குறிப்பிடுகிறது
    3. நிலம் புடை பெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்று கூறுகிறது
    4. பொய்ச் சான்று கூறாமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது
  15. சங்க இலக்கிய அறங்களின் தரம் எத்தகையது?
    1. இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது
    2. சங்க இலக்கியங்கள் அறங்கள் இயல்பான முதல்தரமான அறங்கள்
  16. போதிதர்மர் குறிப்பு வரைக
    1. கிபி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப் பெயர் பூண்டு சீனாவுக்குச் சென்றார்
    2. பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே ஜென் தத்துவம்
    3. இது பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது
    4. போதி தர்மருக்குச் சீனர்கள் கோவில் கட்டிச் சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருகின்றனர்