Showing posts with label 1 mark. Show all posts
Showing posts with label 1 mark. Show all posts

Tuesday, March 29, 2022

ஒரு மதிப்பெண் வினா-விடை இயல் 4 5 6

ஒரு மதிப்பெண் வினா விடை
1) வித்துவக்கோடு எங்கு உள்ளது? கேரள மாநிலம் பாலக்காடு
2) வித்துவக்கோட்டில் உள்ள இறைவன் யார்? உய்யவந்த பெருமாள்
3) பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?குலசேகர ஆழ்வார்
4) பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக உள்ளது? ஐந்தாம் திருமொழி
5) பெருமாள் திருமொழியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எத்தனை?105
6) குலசேகர ஆழ்வாரின் காலம் என்ன? எட்டாம் நூற்றாண்டு
7) ஆறறிவுடைய மக்களை எவ்வாறு அழைப்பர்? உயர்திணை
8) மக்கள் தவிர மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் எவ்வாறு அழைப்பர்?அஃறிணை
9) திணையின் உட்பிரிவு யாது?பால்
10) உயர்திணை எத்தனை பால் பிரிவுகளை உடையது?3
11) அஃறிணை எத்தனை பால் பிரிவுகளை உடையது?2
12) இடம் எத்தனை வகைப்படும்?3
13) இலக்கண முறையுடன் பிழையின்றி எழுதுவதும் பேசுவதும் வழாநிலை  எனப்படும்
14) இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
15) இலக்கணப் பிழைகள் இல்லாது இருப்பின் அவை______ எனப்படும்(வழாநிலை)
16) கண்ணகி உண்டான் என்பது______வழு(பால்வழு)
17) செழியன் வந்தது என்பது______வழு(திணை வழு)
18) நீ வந்தேன் என்பது_____வழு(இட வழு)
19) நேற்று வருவான் என்பது________வழு(கால வழு)
20) ஒரு விரலைக் காட்டி ‘சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்பது_______வழு(வினா வழு)
21) “ எங்கே இருக்கிறார்?” என்ற வினாவிற்குக் “கண்ணாடி பைக்குள் இருக்கிறது” என்று விடை அளித்தல்________வழு(விடை வழு)
22) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல்_______(மரபு வழு)
23) இலக்கண முறைப்படி பிழை உடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது_________(வழுவமைதி)
24) “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது_________வழுவமைதி(திணை வழுவமைதி)
25) “வாடா ராஜா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது______வழுவமைதி(பால் வழுவமைதி)
26) மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது_______வழுவமைதி(இட)
27) ‘குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' என்பது____வழுவமைதி(கால)
28) “கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் படவேண்டும்” என்று பாரதியார் பாடுவது________வழுவமைதி(மரபு)
29) ‘அமைச்சர் நாளை விழாவிற்கு வரு கிறார்' என்பது_____வழுவமைதி(கால)
30) ‘அவனும் நீயும் அலுவலரை பார்க்க ஆயத்தமாகுங்கள்' என்பது________வழுவமைதி(இட)
31) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்-என்பது_________வழுவமைதி(இட)
32) “செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்” என்பது _______வழுவமைதி(இட)
33) “சிறுவயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்” என்பது_______வழுவமைதி(கால)
34) “அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது” என்பது_____வழு(திணை)
35) “அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை' என்பது_____வழுவமைதி(இட)
36) “குழந்தை அழுகிறான், பார்” என்பது_______வழு(திணை)
37) ‘உனதருளே பார்ப்பன் அடியேனே' யார் யாரிடம் கூறியது_______,_______(குலசேகர ஆழ்வார், இறைவனிடம்)
38) குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.இது _______வழுவமைதி(பால்)
39) பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். இது___________வழுவமைதி(திணை)
40) வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்.இது____________வழுவமைதி(கால)
41) “சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்பான்” என்று இறமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயை பற்றிக் கூறினார்.இது_________வழு(திணை)
42) ‘பெய்த மழை' என்பதன் வினைத்தொகை_______(பெய்மழை)
43) மீளாத்துயர் என்பதன் எதிர்மறை________(மீண்ட துயர்)
44) அவிர்தல் பொருள் தருக(ஒளிர்தல்)
45) அழல் பொருள் தருக(நெருப்பு)
46) உவா பொருள் தருக(முழு நிலவு)
47) கங்குல் பொருள் தருக(இரவு)
48) கனலி பொருள் தருக(சூரியன்)
49) புயலுக்குப் பின்- எதிர்மறையாக எழுதுக(புயலுக்கு முன்)
50) பெரியவரின் அமைதி-எதிர்மறையாக எழுதுக(சிறுவனின் அமைதி)
51) அருகில் அமர்க- எதிர்மறையாக எழுதுக(தொலைவில் அமர்க)
52) மறைத்து காட்டு- எதிர்மறையாக எழுதுக(வெளிப்படையாகக் காட்டு)
53) கொடுத்துச் சிவந்த- எதிர்மறையாக எழுதுக(கொடுக்காமல் சிவந்த)
54) Nanotechnology-கலைச்சொல் தருக(மீநுண் தொழில்நுட்பம்)
55) Biotechnology-கலைச்சொல் தருக(உயிரித் தொழில்நுட்பம்)
56) Ultraviolet rays-கலைச்சொல் தருக(புற ஊதாக் கதிர்கள்)
57) Space technology-கலைச்சொல் தருக(விண்வெளி தொழில்நுட்பம்)
58) Cosmic rays-கலைச்சொல் தருக(விண்வெளிக் கதிர்கள்)
59) Infrared red-கலைச்சொல் தருக(அகச்சிவப்பு கதிர்)
60) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்_________(செய்குத்தம்பி பாவலர்)
61) செய்குத்தம்பி பாவலரின் ஊர்________(கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி)
62) செய்குத்தம்பிப் பாவலர் _____ வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றார்(15)
63) சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்________(செய்குத்தம்பி பாவலர்)
64) _____________அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்துகாட்டி சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர் செய்குத்தம்பி பாவலர்.(சென்னை விக்டோரியா)
65) _______நாளில் செய்குத்தம்பிப் பாவலர் சதாவதானி பட்டம் பெற்றார்(1907 மார்ச் 10)
66) செய்குத்தம்பி பாவலர் மணிமண்டபம் ________ல் உள்ளது(இடலாக்குடி)
67) சதம் என்றால் ______ என்பது பொருள்(நூறு)
68) கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம்______(சங்க இலக்கியம்)
69) தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறும் நூல் ________(திருக்குறள்)
70) கல்வியைப் போற்றுவதை _________ காலத்திலிருந்து தமிழர் தொடர்கின்றனர்(சங்க)
71) உயிருக்கு அரிய துணையாய் இருப்பது_______(கல்வி)
72) மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தருவது_______(கல்வி)
73) அருளைப் பெருக்கி அறிவைத் திருத்துவது_______(கல்வி)
74) வினா _____ வகைப்படும்(6)
75) தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது_______வினா(அறி)
76) தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது________வினா(அறியா)
77) ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது______வினா(ஐய)
78) தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது_______வினா(கொளல்)
79) பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது________வினா(கொடை)
80) ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுவது________வினா(ஏவல்)
81) “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் செல்லுதல்_________வினா(ஏவல்)
82) “என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?” என்று கொடுப்பதற்காக வினவுதல்_________வினா(கொடை)
83) “ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?” என்று நூலகரிடம் வினவுதல்________வினா(கொளல்)
84) “இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?” என வினவுதல்______வினா(ஐய)
85) ஆசிரியரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று மாணவர் கேட்டல்______வினா(அறியா)
86) மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் கேட்டல்______வினா(அறி)
87) விடை_____வகைப்படும்(8)
88) “கடைத்தெரு எங்கு உள்ளது?” என்ற வினாவிற்கு, “வலப்பக்கத்தில் உள்ளது” எனக் கூறல்______விடை(சுட்டு)
89) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போக மாட்டேன்” என மறுத்துக் கூறல்_____விடை(மறை)
90) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்_______விடை(நேர்)
91) “இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது_______விடை(ஏவல்)
92) “என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு “வராமல் இருப்பேனா?” என்று கூறுவது_______விடை(வினா எதிர் வினாதல்)
93) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கிறது” என்று உற்றதை உரைப்பது______விடை(உற்றது உரைத்தல்)
94) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கும்” என்று உறுவதை உரைப்பது_______விடை(உறுவது கூறல்)
95) “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது________விடை(இன மொழி)
96) பொருள்கோள்_____வகைப்படும்(8)
97) செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் __________ என்று பெயர்.(பொருள்கோள்)
98) ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால், அது __________ பொருள்கோள் ஆகும்.(ஆற்று நீர்)
99) ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது _______ பொருள்கோள் ஆகும்.(நிரல் நிறை)
100) நிரல்நிறைப் பொருள்கோள் _____ வகைப்படும்(2)
101) செய்யுளில் எழுவாய்களை வரிசைபடுத்தி அவை  ஏற்கும் பயனிலை களை நிரல்நிறையாகக் கொண்டு பொருள் கொள்ளுதல் _______________(முறை நிரல் நிறை) பொருள்கோள் ஆகும்.
102) செய்யுளில் ஏழுவாய்களை வரிசைப் படுத்தி அதை ஏற்கும் பயனிலைகளைக் கொண்டு பொருள்கொள்ளுதல் _______நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்(எதிர் நிரல் நிறை)
103) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் ________________(எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்)
104) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்__________(முறை நிரல்நிறைப் பொருள்கோள்)
105) ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு –இப்பாடலில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
106) ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டிப் பொருள் கொள்வது____________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
107) “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?”-இது எவ்வகை வினா?(அறியா வினா)
108) “இந்த வழியாகச் செல்லுங்கள்”-இது எவ்வகை விடை?(சுட்டு விடை)
109) “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(வினா எதிர் வினாதல் விடை)
110) “ஆதிரை, ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?”-எவ்வகை வினா?(அறியா வினா)
111) “கவி அரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்”-எவ்வகை விடை?(நேர் விடை)
112) “நீங்கள் கவி அரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?”- எவ்வகை வினா?(ஐய வினா)
113) “இங்கு நகரப் பேருந்துகள் நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது எவ்வகை வினா?(அறியா வினா)
114) “அதோ, அங்கே பேருந்து நிற்கும்” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(சுட்டு விடை)
115) ‘அருந்துணை’ என்பதைப் பிரித்து எழுதுக(அருமை+ துணை)
116) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”-என்ற பாடல் வரியில் குறிப்பிடப்படுவது எது?(கல்வி)
117) “மின்விளக்கின் சொடுக்கு எந்தப் பக்கம் இருக்கிறது?”-எவ்வகை வினா?(அறியா வினா)
118) “சொடுக்கிய போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?”-எவ்வகை வினா?(ஐய வினா)
119) முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்-இதில் அமைந்துள்ள பொருள்கோள்________(ஆற்றுநீர்ப் பொருள்கோள்)
120) Lute music-கலைச்சொல் தருக(யாழிசை)
121) Chamber-கலைச்சொல் தருக(அறை)
122) To look up-கலைச்சொல் தருக(எட்டிப் பார்)
123) Grand-daughter-கலைச்சொல் தருக(பேத்தி)
124) Rote-கலைச்சொல் தருக(நெட்டுரு)
125) Didactic compilation-கலைச்சொல் தருக(நீதி நூல் திரட்டு)
126) “அருணா பாடினாள்” என்பதைப் பெயரெச்சத்தொடராக்கு(பாடிய அருணா)
127) ‘ஓடிய அருணா' என்பதை வினையெச்சத் தொடராக்கு.(ஓடி வந்தாள்)
128) ‘ஓடிய அருணா' என்பதை விளித்தொடராக்கு(அருணா, ஓடு)
129) “அம்மா சொன்னார்” என்பதை பெயரெச்சத் தொடராக்கு(சொன்ன அம்மா)
130) “அம்மா சொன்னார்” என்பதை விளித்தொடராக்கு(அம்மா, சொல்)
131) ‘தா' என்னும் வேர்ச்சொல்லைப் பயன்படுத்தி எழுவாய்த் தொடர் அமைக்க.(முருகன் தந்தான்)
132) “துளிர் பார்த்தாள்” என்பதைப் பெயரெச்சத் தொடராக்கு
133) “குழந்தை வந்தது” என்பதை வினையெச்சத் தொடராக்கு.
134) “மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்”- இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமைமை செய்க.
135) “கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
136) “வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களை கற்றுத் தருகிறது”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
137) “ மாணவர்கள் அனைவரும் தனித்தனியே எழுதித் தரவேண்டும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
138) “தார் போன்ற நிறமுண்டு. கரியுமில்லை. பார்முழுதும் பரந்து திரிவேன் மேகமும் இல்லை” -நான் யார்?(காகம்)
139) மன்றல்-பொருள் தருக(திருமணம்)
140) அடிச்சுவடு-பொருள் தருக(நடந்து வந்த காலடித்தடம்)
141) அகராதி-பொருள் தருக(அகரமுதலி)
142) தூவல்-பொருள் தருக(பேனா)
143) மருள்-பொருள் தருக(மயக்கம்)
144) Emblem-கலைச்சொல் தருக(சின்னம்)
145) Thesis-கலைச்சொல் தருக(ஆய்வேடு)
146) Intellectual-கலைச்சொல் தருக(அறிவாளர்)
147) Symbolism-கலைச்சொல் தருக(குறியீட்டியல்)
148) உள்ளதை உணர்ந்தபடி கூறுவது______(கவிதை)
149) “கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்” என்று பெருமைப்படுபவர்________(பாரதியார்)
150) ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பல இடங்களில் பாயும் ஆறு _______(சரயு ஆறு)
151) கொடை இல்லாத நாடு எது?(கோசலை)
152) “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று பாடியவர்__________(பாரதியார்)
153) ஏழைமை வேடன் யார்?(குகன்)
154) வேழ நெடும்படை கொண்டவர் யார்?(பரதன்)
155) தோழமை என்று சொன்னவர் யார்?(இராமன்)
156) கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி________ எனப் பெயரிட்டார்(இராமாவதாரம்)
157) இராமாயணம் ____ காண்டங்களை உடையது(6)
158) இராமாயணப் பாடல்கள் _____ நயம் மிக்கவை.(சந்த)
159) கம்பரின் ஊர்________(திருவழுந்தூர்)
160) கம்பரை ஆதரித்த வள்ளல்___________(சடையப்ப வள்ளல்)
161) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்தும்________ஐந்திணை(அன்பின்)
162) அகத் திணை எத்தனை வகைப்படும்?(7)
163) முதற்பொருள் என்பது_______,_________(நிலமும் பொழுதும்)
164) பொழுது எத்தனை வகைப்படும்?(2)
165) சிறுபொழுது எத்தனை வகைப்படும்?(6)
166) பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?(6)
167) கார் காலம் என்பது_______,______மாதங்கள்(ஆவணி புரட்டாசி)
168) குளிர்காலம் என்பது______&_________(ஐப்பசி கார்த்திகை)
169) முன்பனிக்காலம் என்பது________&________( மார்கழி தை)
170) பின்பனிக் காலம் என்பது______&______(மாசி பங்குனி)
171) இளவேனில் காலம் என்பது________&_______(சித்திரை வைகாசி)
172) முதுவேனில் காலம் என்பது______&_______(ஆனி ஆடி)
173) காலை என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 6 மணி முதல் 10 மணி வரை)
174) நண்பகல் என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 10 மணி முதல் 2 மணி வரை)
175) எற்பாடு என்பது_____மணி முதல்____மணி வரை(பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை)
176) மாலை என்பது_____மணி முதல்____மணி வரை(மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை)
177) யாமம் என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை)
178) வைகறை என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை)
179) குறிஞ்சித் திணைக்கு உரிய சிறுபொழுது______(யாமம்)
180) முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது ___________(மாலை)
181) மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது__________(வைகறை)
182) நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது ____________(எற்பாடு)
183) பாலைத் திணைக்குரிய சிறுபொழுது_________(நண்பகல்)
184) ஆறு பெரும் பொழுதுகளும் வரக்கூடிய திணை______,_________(மருதம் நெய்தல்)
185) குறிஞ்சித் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________,_________(குளிர்காலம் முன்பனிக்காலம்)
186) பாலைத் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________&_______(இளவேனில் முதுவேனில் பின்பனி)
187) முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது___________ (கார்காலம்)
188) ஒரு நிலத்தின் தெய்வம் மக்கள் தொழில் விலங்கு இவையெல்லாம்____________(கருப்பொருள்கள்)
189) குறிஞ்சித் திணைக்குரிய தெய்வம்_____(முருகன்)
190) முல்லைத் திணைக்குரிய தெய்வம்________(திருமால்)
191) மருதத் திணைக்குரிய தெய்வம்_________(இந்திரன்)
192) நெய்தல் திணைக்குரிய தெய்வம்________(வருணன்)
193) பாலைத் திணைக்குரிய தெய்வம் _________(கொற்றவை)
194) குறிஞ்சித் திணைக்குரிய பறை_______(தொண்டகப் பறை)
195) முல்லைத் திணைக்குரிய பறை________(ஏறுகோட்பறை)
196) மருதத் திணைக்குரிய பறை______&_______(மணமுழா, நெல்லரிகிணை)
197) பாலைத் திணைக்குரிய பறை_______(துடி)
198) நெய்தல் திணைக்குரிய பறை_________(மீன்கோட்பறை)
199) நெய்தல் திணைக்குரிய பண்_________(செவ்வழிப்பண்)
200) பாலைத் திணைக்குரிய பண்________(பஞ்சுரப்பண்)
201) குறிஞ்சித் திணைக்குரிய தொழில்கள்________&________(தேனெடுத்தல் கிழங்கு அகழ்தல்)
202) முல்லைத் திணைக்குரிய தொழில்கள்________&________(ஏறுதழுவுதல் நிரை மேய்த்தல்)
203) மருதத் திணைக்கு உரிய தொழில்கள்________&________(நெல்லரிதல் களை பறித்தல்)
204) நெய்தல் திணைக்குரிய தொழில்கள்________&_______(மீன்பிடித்தல் உப்பு விளைத்தல்)
205) பாலைத் திணைக்கு உரிய தொழில்கள்________&_______(வழிப்பறி, நிரை கவர்தல்)
206) குறிஞ்சித் திணைக்குரிய மக்கள்_______&________&_______(வெற்பன் குறவர் குறத்தி
207) முல்லைத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்)
208) மருதத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(ஊரன் உழவர் உழத்தியர்)
209) நெய்தல் திணைக்குரிய மக்கள்______&_____&______(சேர்ப்பன் பரதர் பரத்தியர்)
210) பாலைத் திணைக்குரிய மக்கள்______&______(எயினர் எயிற்றியர்)
211) குறிஞ்சித் திணைக்குரிய உணவு______&_____(மலைநெல், தினை)
212) முல்லைத் திணைக்குரிய உணவு_____&______(வரகு, சாமை)
213) மருதத் திணைக்குரிய உணவு______&_____(செந்நெல், வெண்ணெல்)
214) நெய்தல் திணைக்கு உரிய உணவு_____&_______(மீன் உப்புக்குப் பெற்ற பொருள்)
215) பாலைத் திணைக்குரிய உணவு____________(சூறையாடலால் வரும் பொருள்)
216) குரவம், பாதிரி ஆகியவை எந்தத் திணைக்குரிய பூக்கள்?(பாலை)
217) தாழை -எந்த திணைக்குரிய பூ?(நெய்தல்)
218) செங்கழுநீர் -எந்த திணைக்குரிய பூ?(மருதம்)
219) தோன்றி- எந்த திணைக்குரிய பூ?(முல்லை)
220) காந்தள்-எந்த திணைக்குரிய பூ?(குறிஞ்சி)
221) நீர்நாய் எந்த திணைக்குரிய விலங்கு?(மருதம்)
222) வலியிழந்த யானை எந்த திணைக்குரிய விலங்கு?(பாலை)
223) புன்னை ஞாழல் எந்த திணைக்குரிய மரங்கள்?(நெய்தல்)
224) இலுப்பை எந்த நிலத்திற்குரிய மரம்?(பாலை)
225) காஞ்சி எந்த நிலத்திற்குரிய மரம்?(மருதம்)
226) கொன்றை காயா எந்த நிலத்திற்குரிய மரங்கள்?(முல்லை)
227) அகில், வேங்கை எந்த நிலத்திற்குரிய மரம்?(குறிஞ்சி)
228) புறா எந்த நிலத்திற்குரிய பறவை?(பாலை)
229) குறும்பு எந்த நிலத்திற்குரிய ஊர்?(பாலை)
230) பாடி சேரி எந்த நிலத்திற்குரிய ஊர்கள்?(நெய்தல்)
231) சிறுகுடி எந்த நிலத்திற்குரிய ஊர்?(குறிஞ்சி)
232) பொய்கை எந்த நிலத்திற்குரிய நீர்?(மருதம்)
233) குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்_______&______&________(குறிஞ்சி மருதம் நெய்தல்)
234) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?(வறுமை இல்லாமையால்)
235) தால்-பொருள் தருக(நாக்கு)
236) உழுவை-பொருள் தருக(புலி)
237) அகவுதல்-பொருள் தருக(அழைத்தல்)
238) ஏந்தெழில்-பொருள் தருக(மிகுந்த அழகு)
239) அணிமை-பொருள் தருக(அருகில்)
240) Aesthetics-கலைச்சொல் தருக(அழகியல்)
241) Artifacts-கலைச்சொல் தருக(கலைப்படைப்புகள்)
242) Terminology-கலைச்சொல் தருக(கலைச்சொல்)
243) Myth-கலைச்சொல் தருக.(தொன்மம்)
244) சிறந்த அமைச்சருக்கு உரிய இயல்புகள் எத்தனை?(5) 
245) பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
246) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி)
247) இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
248) மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்-இதில் வந்துள்ள அணி______(உவமை அணி)
249) தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்-இதில் வந்துள்ள அணி யாது?(வஞ்சப்புகழ்ச்சி அணி)
250) சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி) 

சிற்றகல்ஒளி 1 மதிப்பெண் வினாக்கள்

  1. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு எது? 1906
  2. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை எங்கு தொடங்கினார்? தென் ஆப்பிரிக்கா
  3. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைச் எப்போது தொடங்கினார்? 1906
  4. சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1906
  5. ம பொ சி பிறந்த ஆண்டு எது? 1906
  6. ம பொ சி என்பதன் விரிவாக்கம் என்ன? மயிலாப்பூர் பொன்னுசாமி மகன் சிவஞானம்
  7. ம பொ சி பிறந்த நாள் எப்போது? ஜூன் 26
  8. ம பொ சி எங்கு பிறந்தார்? சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் - சால்வன் குப்பம்
  9. ம பொ சி யின் தந்தை யார்? பொன்னுச்சாமி
  10. ம பொ சி அவர்களின்தாயார் யார்? சிவகாமி
  11. ம பொ சி யின் இயற்பெயர் என்ன? ஞானப்பிரகாசம்
  12. ம பொ சி அவர்களை சிவஞானி என அழைத்தவர் யார்? சரபையர் என்ற முதியவர்
  13. ம பொ சி எந்த வகுப்போடு கல்வியை நிறுத்தினார்? மூன்றாம் வகுப்பு
  14. ம பொ சி யின் கல்வி எப்போது தடைபட்டது? மூன்றாம் வகுப்பில் நுழைந்த 7 ஆம் நாளோடு
  15. ம பொ சி யின் கல்வி ஏன் தடைபட்டது? ம பொ சி அவர்களின் குடும்ப வறுமை காரணமாக
  16. ம பொ சி காலத்தில் மூன்றாம் வகுப்பிற்கு தேவைப்பட்ட பாடப் புத்தகங்கள் எவை? தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடப் புத்தகங்கள்
  17. பள்ளியிலிருந்து ம பொ சி ஏன் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தார்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர் துரத்திவிட்டார். அதை அவமானமாகக் கருதியதால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார்.
  18. ம பொ சி எதை அவமானமாகக் கருதினர்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்த மா பொ சி யை துரத்தி விட்டதால், அதை அவமானமாகக் கருதினர்.
  19. ம பொ சி யை வீட்டிற்கு விரட்டி விட்டதற்காக அவரின் தந்தை என்ன செய்தார்? ஆசிரியரை வாயார வைதார்
  20. ம பொ சி சிறுவயதில் அன்னையிடம் கற்ற பாடல்கள் எவை?
    1. அரசாணி மாலை
    2. பவளக்கொடி மாலை
  21. ம பொ சி தானாகவே விரும்பி படித்த பாடல்கள் எவை? சித்தர் பாடல்கள்
  22. ம பொ சி யின் கேள்வி ஞானத்தை பெருகியதில் பெரும் பங்கு வகித்தவர் யார்? திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்
  23. ம பொ சி எதனுடன் கடும் போர் புரிந்ததாக குறிப்பிடுகிறார்? தனது அறியாமையுடன்
  24. ம பொ சி எப்போது பேரானந்தம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்? குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விடும் போது
  25. ம பொ சி எவற்றைத் தம் சொத்துக்களாகக் கருதினார்? தம்மிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களை
  26. பேராயக் கட்சி எனப்படுவது எது? காங்கிரஸ் கட்சி
  27. காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது? 1931
  28. அந்நியத் துணி கடை மறியல் எதன்படி அனுமதிக்கப்படவில்லை? காந்தி-இர்வின் ஒப்பந்தம்
  29. காந்தி-இர்வின் ஒப்பந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி செய்தது என்ன?
    1. தீண்டாமை விலக்கு
    2. கதர் விற்பனை
  30. தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை எப்போது வழங்கப்பட்டது? செப்டம்பர் 30 ,1932
  31. ம பொ சி முதன்முதலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு எது?1932
  32. மபொசி முதல் முதலில் எதற்காக சிறையிலிடப்பட்டார்?தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக
  33. தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட தண்டனை என்ன?
    1. மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை
    2. 300 ரூபாய் அபராதம். கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை.
  34. தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் தன்மை யாது? நூற்றுக் கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டிருந்தது
  35. தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் சிறப்பம்சம் யாது? பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது
  36. ம.பொ.சி அவர்களுக்குச் சிறையில் வழங்கப்பட்ட சோறு எந்த வகுப்பைச் சார்ந்தது?'சி' வகுப்பு
  37. இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் எது?1942 ஆகஸ்ட் 8
  38. இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?1942
  39. இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? பம்பாய் காங்கிரஸ் மாநாடு
  40. இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்திற்காக கைது செய்யப்பட்ட தலைவர்கள் யார்? காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
  41. இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி சிறையில் அடைக்கப்பட்ட நாள் எது? 1942 ஆகஸ்ட் 13
  42. இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி முதலில் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?வேலூர்
  43. இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக வேலூர் சிறையிலிருந்து எந்தச் சிறைக்கு மாற்றப்பட்டார்?அமராவதி
  44. அமராவதி சிறைச்சாலையின் அவல நிலை யாது? கூரை துத்தநாக தகடுகளால் வேயப்பட்டு இருந்தது
  45. வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது எப்போது? இந்திய விடுதலைக்கு மறுநாள்
  46. வடக்கெல்லை மீட்சிக்கு அழைப்பு விடுத்தது யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
  47. வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச்செய்தவர் யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
  48. ஆந்திரத் தலைவர்கள் எந்த மாவட்டத்தை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர்?சித்தூர்
  49. தமிழர் மாநாடு எங்கு நடைபெற்றது? திருத்தணி, சென்னை
  50. தமிழர் மாநாட்டை நடத்தியது யார்? தமிழரசுக் கழகம்
  51. தமிழரசுக் கழகம் யாருடன் இணைந்து தமிழர் மாநாட்டை நடத்தியது? தமிழ் ஆசான் மங்கலங்கிழார்
  52. வடக்கெல்லை போராட்டம் நடைபெற்ற இடங்கள் யாவை? சித்தூர் புத்தூர் திருத்தணி
  53. வடக்கெல்லை போராட்டத்தில் சிறைப்பட்டு உயிர் நீத்தவர் யாவர்?
    1. இராஜமுந்திரி சிறையில் இருந்த திருவாலங்காடு கோவிந்தராசன்
    2. பழனி சிறையிலிருந்த மாணிக்கம்
  54. மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? சர்தார் கே எம் பணிக்கர்
  55. மொழிவாரி ஆணையத்தின் தாக்கம் என்ன? சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிடம் அளித்துவிட்டது
  56. திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்கள் எந்த ஆணையத்தால் மீட்கப்பட்டன?படாஸ்கர் ஆணையம்
  57. இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு இல்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் எத?சிலப்பதிகாரம்
  58. தமிழினத்தின் பொதுச்சொத்து என்று மபொசி எதனைக் குறிப்பிடுகிறார்? சிலப்பதிகாரம்
  59. சிலம்புச் செல்வர் யார்?ம பொ சி
  60. தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்க முன் வந்தவர் யார்?இராஜாஜி
  61. ஆந்திரா மாநிலம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஆணையம் எது?நீதிபதி வாஞ்சு ஆணையம்
  62. தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? சென்னை மாநகராட்சி
  63. தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் யார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது? மாநகர தந்தை செங்கல்வராயன்
  64. ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்? பிரதமர் நேரு
  65. ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை எப்போது வெளியிடப்பட்டது? 25-3-1953
  66. மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எங்கு பேசினார்? வடிவீஸ்வரம்
  67. மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எப்போது பேசினார்?25-10-1946
  68. மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எந்த விழாவில் பேசினார்?வடிவை வாலிபர் சங்க ஆண்டு விழா
  69. தெற்கெல்லை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் யாவர்? தேவசகாயம், செல்லையா
  70. இயற்கையாகவே போர்க்குணம் கொண்டவர் யார்? மார்ஷல் நேசமணி
  71. தெற்கெல்லை போராட்டம் யாருடைய வருகைக்குப் பிறகு வலுப்பெற்றது? மார்சல் நேசமணி
  72. கன்னியாகுமரி மாவட்டம் எப்போது தமிழ்நாட்டுடன் இணைந்தது?1956 நவம்பர் 1
  73. மார்ஷல் நேசமணி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு யாது? நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபம் நிறுவியது.
  74. பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை எப்போது வெளியானது?10-10-1955
  75. பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை யாது? மொழிவாரி மாநிலம் அமைப்பது.
  76. பசல் அலி ஆணையத்தால் நம் கையை விட்டு சென்ற பகுதிகள் எவை? தேவிகுளம், பீர்மேடு
  77. ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக எவை அமைய வேண்டும்? மலையும் கடலும்
  78. தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும் தெற்கு எல்லையாக குமரி முனையையும் குறிப்பிடும் இலக்கியங்கள் எவை? புறநானூறு, சிலப்பதிகாரம்
  79. ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் எது? வியன்னா
  80. அலெக்ஸாண்ட்ரியா துறைமுகம் எங்கு உள்ளது? எகிப்து
  81. கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்த காலத்தைச் சார்ந்தது? கிபி இரண்டாம் நூற்றாண்டு
  82. கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? ஆஸ்திரியா நாட்டின் வியன்னா அருங்காட்சியகத்தில்
  83. கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்தத் தாளில் எழுதப்பட்டுள்ளது? பாபிரஸ்
  84. மபொசி அவர்களின் தன் வரலாற்று நூல் எது? எனது போராட்டம்
  85. மபொசி எப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்?1952-1954
  86. மபொசி எப்போது சட்டமேலவை தலைவராக இருந்தார்?1972-1978
  87. தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?ம பொ சிவஞானம்
  88. மபொசி அவர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
  89. மபொசி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு என்ன? திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் சிலை நிறுவியது
  90. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது? 1966

மெய்க்கீர்த்தி ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. கல் இலக்கியமாக அமைந்தது எது? மெய்க்கீர்த்தி
  2. மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இலக்கியம் எது? பதிற்றுப்பத்து
  3. மெய்க்கீர்த்தி யாருடைய காலத்தில் செப்பமான வடிவம் பெற்றது? சோழர் காலத்தில்
  4. மெய்கீர்த்தி யாருடைய காலங்களில் முளைவிட்டது? பல்லவர், பாண்டியர்
  5. இந்திரன் முதல் திசாபாலர் எண்மர் யாவர்? இந்திரன், அக்னி தேவன், எமதர்மன், வருண பகவான், நிருதி தேவன், வாயு பகவான், குபேரன், ஈசானன்
  6. மனுவாணை-பொருள் தருக. மனு தர்மத்தின் படி
  7. மனுதர்மத்தின்படி ஆட்சி செய்த சோழ மன்னன் யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
  8. சோழ நாட்டில் பிணிக்கப்படுபவை எவை? பட்டத்துயானைகள்
  9. சோழநாட்டில் புலம்புபவை எவை? சிலம்புகள்
  10. சோழ நாட்டின் கலங்குபவை எவை? ஓடைகள்
  11. சோழ நாட்டில் சிறைப்படுபவை எவை? ஆற்று நீர்
  12. சோழநாட்டில் வடுப்படுவன எவை? மாங்காய்கள்
  13. சோழ நாட்டில் பறிக்கப்படுவன எவை? மலர்கள்
  14. சோழ நாட்டில் கொடியன எவை? காடுகள்
  15. சோழநாட்டில் கள்ளுண்பன எவை? வண்டுகள்
  16. சோழ நாட்டில் வெறுமை உடையன எவை? மலை மூங்கில்
  17. சோழ நாட்டில் போராய் எழுவது எங்கே? வயல்களில்
  18. சோழநாட்டில் எங்கு இருள் சூழ்ந்து இருக்கிறது? நீண்ட மலைகளில்
  19. சோழ நாட்டில் யாரிடத்தில் மருட்சி காணப்படுகிறது? இளம் மான்களின் கண்களில்
  20. சோழ நாட்டில் பிறழ்ந்து செல்வது யார்? குளத்து மீன்கள்
  21. சோழ நாட்டில் சினம்கொள்பவர் யார்? செவிலித் தாயர்
  22. சோழநாட்டில் பொருள் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது? புலவர்தம் பாட்டில்
  23. சோழநாட்டில் கூடி ஆடுவது யார்? இசைப்பாணர்
  24. விழிப்பெற்ற பயனாகவும் மெய்பெற்ற அருளாகவும் மொழிபெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூலாகவும் திகழ்வது யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
  25. ராஜராஜன் கால தமிழ் கல்வெட்டு எத்தனையாவது நூற்றாண்டைச் சார்ந்தது?11
  26. கோப்பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
  27. கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம் பட எழுதப்படும் வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? மெய்க்கீர்த்திகள்

சிலப்பதிகாரம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள்
  2. தண் நறுஞ் சாந்தம் பொருள் தருக. குளிர்ந்த மணம் மிக்க சந்தனம்
  3. மேவிய விரை பொருள் தருக. எழுந்து பரவுகின்ற நறுமணம்
  4. பகர்வனர் பொருள் தருக. விற்பனை செய்பவர்
  5. காருகர் பொருள் தருக. நெசவாளர்
  6. தூசு பொருள் தருக. பட்டு
  7. துகிர் பொருள் தருக. பவளம்
  8. ஆரம் பொருள் தருக. சந்தனம்
  9. அருங்கல வெறுக்கை பொருள் தருக. பலவகையான செல்வம்
  10. நனந்தலை மறுகு பொருள் தருக.-அகன்ற வீதி
  11. பால்வகை பொருள் தருக. பலவகை
  12. கூலம் பொருள் தருக. தானியம்
  13. காழியர் பொருள் தருக. பிட்டு வணிகர்
  14. கூவியர் பொருள் தருக. அப்பம் சுடுபவர்
  15. கல்நொடை ஆட்டியர்-பொருள் தருக. வலைச்சியர்
  16. பகருநர் பொருள் தருக. விற்பவர்
  17. பாசவர் பொருள் தருக வெற்றிலை விற்பவர்
  18. வாசவர் பொருள் தருக. நறுமண பொருட்கள் விற்பவர்
  19. பல் நிண விலைஞர்-பொருள் தருக. பலவகையான இறைச்சி விற்பவர்
  20. ஓசுநர்-பொருள் தருக. எண்ணெய் விற்பவர்
  21. கஞ்ச காரர்-பொருள் தருக வெண்கலப் பாத்திரம் செய்பவர்
  22. கருங்கைக் கொல்லர்-பொருள் தருக.இரும்பினால் கருவிகள் செய்பவர்
  23. கண்ணுள் வினைஞர் -பொருள் தருக. ஓவியர்
  24. மண்ணீட்டு ஆளர்-பொருள் தருக. சிற்பி
  25. நன்கலம் தருநர்-பொருள் தருக. இரத்தின வேலை செய்பவர்
  26. துன்ன காரர் -பொருள் தருக. தையல் தைப்பவர்
  27. தோலின் துன்னர்-தோல்பொருள் தைப்பவர்
  28. கிழி-பொருள் தருக. துணி
  29. கிடை -பொருள் தருக. கட்டை
  30. பால்கெழு மாக்கள்- பொருள் தருக. பலவகைத் தொழில் செய்யும் மக்கள்
  31. குரல் முதல் 7 எவை? குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
  32. மறு இன்றி -பொருள் தருக. குற்றமின்றி
  33. ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணியை முதலில் வைத்து பாடும் நூல் எது? திருத்தணிகையுலா
  34. வண்ணமும் சுண்ணமும்- இலக்கணக்குறிப்பு தருக. எண்ணும்மை
  35. பயில்தொழில் -இலக்கணக்குறிப்பு தருக. வினைத்தொகை
  36. சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலை புனைந்தான் நந்தா வளையாபதி தருவான் வாசகனுக்கு ஈந்தான் திளையாத குண்டலகேசிக்கும்-என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? திருத்தணிகை உலா
  37. கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் எந்தப் பாதையில் அழைத்துச் சென்றார்? இடைப்பட்ட வழி
  38. தென்னவன் சிறுமலையின் இடப்பக்கம் வழியாகச் சென்றால்__________வழியாக மதுரை செல்லலாம். (திருமால் குன்றம்)
  39. நெடுவேள் குன்றம் என்று அழைக்கப்படும் மலை எது? சுருளிமலை
  40. கண்ணகி, சுருளி மலையில் எந்த இடத்தை அடைந்தாள்? வேங்கைக் கானல்
  41. கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்துச் சென்றவர் யார்? கவுந்தி அடிகள்
  42. கொடும்பாளூர் என்னும் இடத்தில் இருந்து மதுரைக்குச் செல்லும் வழிகள் எத்தனை? 3
  43. காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து கொடும்பாளூர் செல்லும் வழி யாது? உறையூர்- திருவரங்கம்
  44. சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை எது? உரைப்பாட்டு மடை
  45. உரைப்பாட்டு மடை என்பதன் பொருள் யாது? உரைநடைப் பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு
  46. மடை என்பது யாது? வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை
  47. உரை என்பது யாது? பேசும் மொழியின் ஓட்டம்
  48. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் யாவை? முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
  49. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? 3
  50. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை? 30
  51. இரட்டைக் காப்பியங்கள் எனப்படுபவை எவை? சிலப்பதிகாரம், மணிமேகலை
  52. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்
  53. மணிமேகலையின் ஆசிரியர் யார்? சீத்தலைச்சாத்தனார்
  54. கோவலன் கண்ணகி கதையைக் கூறி, 'அடிகள் நீரே அருளுக' என்றவர் யார்? சீத்தலைச்சாத்தனார்
  55. நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்றவர் யார்? இளங்கோவடிகள்
  56. சிலப்பதிகாரத்தில் உள்ள மூன்று காண்டங்கள் எவை? புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்

மங்கையராய்ப் பிறப்பதற்கே 1 மதிப்பெண் வினாக்கள்

  1. தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐநா அவையில் பரப்பும் வகையில் அங்கு தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர் யார்? எம்எஸ் சுப்புலட்சுமி
  2. 'காற்றினிலே வரும் கீதமாய்' மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் யார்? எம் எஸ் சுப்புலட்சுமி
  3. இசைப் பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் யார்? எம்எஸ் சுப்புலட்சுமி
  4. எம் எஸ் சுப்புலட்சுமி பெயர் விரிவாக்கம் தருக. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
  5. எம் எஸ் சுப்புலட்சுமிக்கு முதல் குரு யார்? எம் எஸ் சுப்புலட்சுமியின் தாயார்
  6. எம் எஸ் சுப்புலட்சுமியின் தாயார் எவ்வகை இசைக் கலைஞர்? வீணை
  7. எம் எஸ் சுப்புலட்சுமி எந்த வகுப்பு வரை கல்வி கற்றார்? ஐந்தாம் வகுப்பு
  8. எம்எஸ் சுப்புலட்சுமி எந்த வயதில் சென்னை மியூசிக் அகடமியில் கச்சேரி செய்தார்? 17
  9. எம் எஸ் சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் எது? மீரா
  10. எம் எஸ் சுப்புலட்சுமியின் கடைசி திரைப்படம் எது? மீரா
  11. எம் எஸ் சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த பாடல்கள் எவை? காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன்
  12. எம் எஸ் சுப்புலட்சுமி எதைப் பெருமையாக கருதினார்? ஜவர்கலால் நேரு, சரோஜினி நாயுடு போன்ற பெரியவர் பாராட்டியதை...
  13. எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய பாடல்களில் எந்தப் பாடலை காந்தியடிகள் பாராட்டினார்? ரகுபதி ராகவ ராஜாராம்
  14. காந்தியடிகள் எம்எஸ்சுப்புலட்சுமியிடம் எந்தப் பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார்? ஹரி தும் ஹரோ
  15. ஹரி தும் ஹரோ பாடல் சென்னை வானொலியில் எந்த ஆண்டு ஒளிபரப்பானது? 1947 காந்தி அடிகள் பிறந்த நாள் அன்று.
  16. எந்த ஆண்டு எம்எஸ் சப்புலட்சுமி தாமரையணி விருது பெற்றார்? 1954
  17. எந்த ஆண்டு எம்எஸ்சுப்புலட்சுமி ஹெலன் கெல்லரால் பாராட்டு பெற்றார்?1963
  18. எந்த ஆண்டு எம்எஸ் சப்புலட்சுமி ஐநா சபையில் பாடினார்? 1966
  19. எந்த ஆண்டு முதல் எம்எஸ் சுப்புலட்சுமியின் குரல் திருப்பதியில் ஒலித்தது? 1966
  20. எந்த ஆண்டு எம்எஸ்சுப்புலட்சுமிக்கு மகசேசே விருது வழங்கப்பட்டது? 1974
  21. மகசேசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்? எம்எஸ் சுப்புலட்சுமி
  22. இந்திய மாமணி விருது  எம் எஸ் சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்ட ஆண்டு எது? 1998
  23. இந்தியாவின் மிக உயரிய விருது எது? இந்திய மாமணி
  24. பொதுவெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டு இருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர் யார்? பாலசரஸ்வதி
  25. பாலசரஸ்வதி இந்திய அரசு வழங்கிய விருது எது? தாமரைச் செவ்வணி
  26. சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடன நிகழ்ச்சியைப் பாலசரஸ்வதி தொடங்கியபோது வயது என்ன? 15
  27. மரபுசார் நாட்டியத்தை பலரும் தீவிரமாக வரவேற்கக் காரணமாக இருந்தவர் யார்? பாலசரஸ்வதி
  28. 'ஜன கண மன' பாடலை பாலசரஸ்வதி மெய்ப்பாடுகளுடன் எங்கெங்கு நடனமாடியுள்ளார்? கல்கத்தாவிலும் காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாடு மற்றும் சென்னையில் நடந்த இந்தியத் தேசியக் காங்கிரஸ் கண்காட்சி.
  29. பரத நாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தவர் யார்? பாலசரஸ்வதி
  30. எந்தக் கலையை முறையாக அணுகினால் ஆன்மீகப் பட்டறிவை நடனத்தால் வழங்க முடியும்? பரதநாட்டியக் கலை
  31. தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாகச் செவ்வியல் நடனம் திகழக் காரணமாக இருந்தவர் யார்? பாலசரஸ்வதி
  32. தமிழில் எழுதிய பெண்களில் முதல் முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டி கதைகள் எழுதியவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
  33. ராஜம் கிருஷ்ணனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது? வேருக்கு நீர்
  34. ராஜம் கிருஷ்ணன் எழுதிய பாரதியின் வரலாற்று புதினம் எது? பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
  35. தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைச் சொல்லும் புதினம் எது? கரிப்பு மணிகள்
  36. நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து பதிவு செய்த புதினம் எது? குறிஞ்சித் தேன்
  37. கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களை பேசும் புதினம் எது? அலைவாய்க் கரையில்
  38. அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டும் புதினங்கள் எவை? சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர்
  39. தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய புதினம் எது? கூட்டுக் குஞ்சுகள்
  40. பெண் குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட புதினம் எது? மண்ணகத்துப் பூந்துளிகள்
  41. ராஜம் கிருஷ்ணனின் வேண்டுகோள் யாது? எழுத்துக்களில் நேர்மையான சினம், அறச்சீற்றம் இருக்க வேண்டும்.
  42. மதுரையின் முதல் பட்டதாரி பெண் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  43. சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  44. சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது பெற்றவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  45. நாட்டின் விடுதலைக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் போராடிக் கல்வி கற்றவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  46. உழுபவனுக்கே நிலம் உரிமை இயக்கம் தொடங்கியவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  47. "உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்" என்பது யாருடைய கூற்று? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  48. காந்திய சிந்தனைகளால் ஈர்கப்பட்டு கணவருடன் பூதான இயக்கத்தில் இணைந்து பணிபுரிந்தவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  49. களஞ்சியம் என்பது யாது? மகளிர் சுய உதவிக் குழு
  50. 2018இல் தமிழக அரசின் ஔவை விருது பெற்றவர் யார்? சின்னப்பிள்ளை
  51. சின்னப்பிள்ளை இந்திய நாட்டின் முதன்மை அமைச்சரிடம் இருந்து பெற்ற விருது யாது? பெண் ஆற்றல் விருது

Sunday, March 27, 2022

சங்க இலக்கியத்தில் அறம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. தமிழர்கள் இல்வாழ்க்கையை_________ஆகக் கொண்டனர்(அற வாழ்க்கை)
  2. தமிழர் பொருள் ஈட்டி_______ செய்து இன்புற்றனர் (அறம்)
  3. சங்ககாலத்தில் எதை மனித உறவின் மையமாக கொண்டிருந்தனர்?. (அறம்)
  4. உலகே பரிசாகக் கிடைத்தாலும் எச்செயல்களைச் செய்ய மறுத்தவர், தமிழர்? பழி தரும் செயல்களை....
  5. சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் எது? சங்க காலம்
  6. மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு _______(துளி)
  7. மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய______  பெருகுகிறது(மகிழ்ச்சி)
  8. மனிதன் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான _______ஐ மனிதன் ஏற்க வேண்டும்.(அறத்தை)
  9. அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதி எது? அறம்
  10. அறநெறிக் காலம் என்பது எது? சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக் காலம் என்பர்.
  11. அறநெறிக் கால அறங்கள் சமயம் சார்ந்தவை. ஆனால், சங்க இலக்கிய அறங்கள்______(இயல்பானவை)
  12. "கவிதை வாழ்க்கையின் திறனாய்வு" என்று கூறியவர் யார்? திறனாய்வாளர் ஆர்னால்டு
  13. சங்க அறங்கள் __________களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல(சமயங்கள்)
  14. அறம் செய்வதில்________ நோக்கம் இருக்கக் கூடாது(வணிக)
  15. அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது _______ மக்களின் கருத்தாக இருந்தது(சங்ககால)
  16. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற _______ நோக்கு கூடாது என்று கூறப்பட்டது.(வணிக)
  17. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்று குறிப்பிடும் இலக்கியம் எது? புறநானூறு
  18. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்று பாடியவர் யார்? ஏணிச்சேரி முடமோசியார்
  19. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்ற பாடல் வரிகள் உணர்த்தும் கருத்து யாது? நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை தரும்
  20. மன்னர்களிடம் உள்ள செங்கோலும் வெண்கொற்றக் குடையும் எதன் குறியீடாகப் போற்றப்பட்டன? அறத்தின் குறியீடாகப் போற்றப்பட்டன
  21. 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்', 'அறநெறி பிழையாத் திறனறி மன்னர்' என்ற பாடல் வரிகள் எதனைச் சுட்டுகின்றன? மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.
  22. அரசன் எதைப்போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ளவேண்டும்? செங்கோல்
  23. அரசனின் கடமை யாது? நீர்நிலை பெருக்கி நில வளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது.
  24. எதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்? அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்
  25. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று பாடிய புலவர் யார்? ஊன்பொதிப் பசுங்குடையார்
  26. நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் இலக்கியம் எது? மதுரைக்காஞ்சி
  27. "செம்மை சான்ற காவிதி மாக்கள்" என்று அமைச்சர்களைப் பாடுபவர் யார்? மாங்குடி மருதனார்
  28. அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தவை எவை?அறம் கூறும் மன்றங்கள்
  29. அறம் கூறு அவையம் பற்றி "அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்" என்று பாடும் இலக்கியம் எது? புறநானூறு
  30. மதுரையில் இருந்த அற அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் எது? மதுரைக்காஞ்சி
  31. தனிச்சிறப்பு பெற்ற அற அவையம் எது? உறையூர் அற அவையம்
  32. துலாக்கோல் போல நடுநிலை மிக்க அற அவையம் எது? மதுரை அற அவையம்
  33. போர் அறம் என்பது யாது? வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையே போர் அறம் ஆகும்
  34. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று கூறும் நூல் எது? புறநானூறு
  35. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்று பாடியவர் யார்? ஆவூர் மூலங்கிழார்
  36. "எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்" என்று பாடும் இலக்கியம் எது? புறநானூறு
  37. எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்" என்று பாடிய புலவர் யார்? ஆவூர் மூலங்கிழார்
  38. உண்மையான மகிழ்ச்சி எது? தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி.
  39. ___________யை மறப்பது தான் மகிழ்ச்சி (தன் மகிழ்ச்சி)
  40. "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று பாடிய புலவர் யார்? மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
  41. "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று பாடும் என்ன நூல் எது? புறநானூறு
  42. கொடையின் சிறப்பால் போற்றப்படும் வள்ளல்கள் எத்தனை பேர்? 7
  43. வள்ளல்களின் கொடைப் பெருமையைப் பாடும் இலக்கியங்கள் எவை? சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்
  44. ஆற்றுப்படை இலக்கியங்கள் _________இலக்கியங்களாகவே உள்ளன(கொடை)
  45. பதிற்றுப்பத்து_______ அரசர்களில் கொடைப் பதிவாகவே உள்ளது (சேர)
  46. "இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன்" என்று போற்றப்படுபவர் யாவர்? வள்ளல்கள்
  47. வழங்குவதற்குப் பொருள் உள்ளதா என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் வள்ளல் யார்? பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  48. பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாராட்டுபவர் யார்? நக்கீரர்
  49. "வள்ளலின் பொருள் இரவலனின் பொருள். வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை" என்று குறிப்பிடுவர் யார்? பெரும்பதுமனார்
  50. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்? அதியமான்
  51. "உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்" என்று பாடியவர் யார்? அவ்வையார்
  52. இரவலர் தேடி வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் யாருடைய இயல்பு? ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  53. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய புலவர் யார்? நச்செள்ளையார்
  54. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் யார்? பேகன்
  55. "மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் பேகன்" என்று பாடியவர் யார்? பரணர்
  56. "தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திருப்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் தருகிறது" என்று வருந்தியவர் யார்? பெருந்தலைச் சாத்தனார்
  57. பெருந்தலைச் சாத்தனாரைப் பாடிய புலவர் யார்? குமணன்
  58. எல்லாவற்றையும் கொடுப்பவன் யார்?மலையமான் திருமுடிக்காரி
  59. "எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி" என்று பாடிய புலவர் யார்? கபிலர்
  60. "ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டு விடுதல் மேலானது" என்று பாடும் நூல் எது? கலித்தொகை
  61. தாம் பெற்றதைப் பிறருக்கு வழங்கிய புலவர் யார்? பெருஞ்சித்திரனார்
  62. தாம் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளத்தைப் பலப்படுத்தும் இலக்கியம் எது? புறநானூறு
  63. உதவி செய்தலை ஈழத்துப் பூதன்தேவனார் எவ்வாறு குறிப்பிடுகிறார்? உதவியாண்மை
  64. "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று கூறும் இலக்கியம் எது? கலித்தொகை
  65. கலித்தொகையை பாடியவர் யார்? நல்லந்துவனார்
  66. "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று பாடியவர் யார்? நல்லந்துவனார்
  67. "உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்" என்று பாடியவர் யார்? நல்வேட்டனார்
  68. சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே என்று பாடும் இலக்கியம் எது? நற்றிணை
  69. "உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும்" என்று பாடியவர் யார்? பெருங்கடுங்கோ
  70. செல்வம் என்பது சிந்தையின் நிறைவு___________(நிறைவு)
  71. நிறைவடைகிறவனே செல்வன் என்று கூறுவது எது? சீன நாட்டுத் தாவோவியம்
  72. பிறருக்கு உதவாமல் மனிதத்திற்குக் கொடும்பாவி கட்டுவது _____காலத்தில் இல்லை.(சங்க)
  73. ______________ சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. (வாய்மையை)
  74. வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை வலியுறுத்தும் வரிகள் யாவை? பொய்யா செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா
  75. _______ ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள்(நாக்கு)
  76. இன்பத்தின் கதவைத் திறப்பதும் துன்பத்தின் கதவைத் திறப்பதும் எது? நாக்கு
  77. ______ பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. (மெய்)
  78. ______ பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது(பொய்)
  79. 'பிழையா நன்மொழி' என்று வாய்மை பற்றிக் குறிப்பிடும் நூல் எது? நற்றிணை
  80. நிலம் புடை பெயர்ந்தாலும் ____ சொல்லக்கூடாது(பொய்)
  81. தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம்  _______தரமானது(மூன்றாம்)
  82. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம்  _______தரமானது (இரண்டாம்)
  83. இயல்பாக அறியும் அறம்  ______தரமானது (முதல்)
  84. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான _______ தரமான அறங்கள்.(முதல்)
  85. போதிதர்மர் எந்த நூற்றாண்டில் சீனாவிற்குச் சென்றார்? 6
  86. போதிதர்மர் சீனாவில் எந்தத் தத்துவத்தைப் போதித்தார்? பவுத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவு
  87. ஜென் தத்துவம் உருவாகக் காரணமானவர் யார்? போதிதர்மர்
  88. போதிதர்மர் யார்? கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர்
  89. போதி தர்மருக்கு சீனர்கள் செய்த கைம்மாறு என்ன? போதி தர்மருக்குச் சீனர்கள் கோவில் கட்டிச் சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருகின்றனர்.
  90. ஜென் தத்துவம் எதிலிருந்து உருவானது? போதி தர்மரின் தத்துவப் போதனையில் இருந்து...

புறப்பொருள் இலக்கணம் 1 mark

புறப்பொருள் இலக்கணம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. வெட்சி என்பது யாது? ஆநிரை கவர்தல்
  2. கரந்தை என்பது யாது? ஆநிரை மீட்டல்
  3. வஞ்சி என்பது யாது? மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது
  4. காஞ்சி என்பது யாது? மாற்று அரசனோடு எதிர்த்து போரிடுவது
  5. நொச்சி என்பது யாது? மதில் காத்தல்
  6. உழிஞை என்பது யாது? கோட்டையை சுற்றி வளைத்தல்
  7. தும்பை என்பது யாது? வீரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிடுவது
  8. வாகை என்பது யாது? வெற்றி பெற்ற மன்னன் வாகைப் பூவைச் சூடி மகிழ்வது
  9. பாடாண்திணை என்பது யாது? ஆண்மகனைப் புகழ்ந்து பாடுவது
  10. பொதுவியல்திணை என்பது யாது? வெட்சி முதல் பாடாண்திணை வரை சொல்லாத செய்திகளைப் பொதுவாகக் கூறுவது
  11. கைக்கிளை என்பது யாது? ஒருதலைக் காமம்
  12. பெருந்திணை என்பது யாது? பொருந்தாக் காமம்
  13. இட்லிப் பூ எனப்படுவது எது? வெட்சிப் பூ
  14. கரந்தையின் வேறு பெயர் என்ன? கொட்டைக்கரந்தை
  15. பஞ்சு போன்ற நுண்மயிர் உடைய பூ எது? வஞ்சி
  16. முடக்கத்தான் பூ என்பது எது? உழிஞை
  17. வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி எது? தும்பை
  18. கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீல நிற, மணம் உள்ள பூ எது? காஞ்சிப் பூ
  19. கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீல நிற மருதநிலப் பூ எது? நொச்சி
  20. கொத்துக் கொத்தாகப்பூக்கும் மங்கிய வெள்ளை நிறப் பூ எது? வாகை