Sunday, November 8, 2020

இயல் 1, கற்பவை கற்றபின்

இயல் 1, கற்பவை கற்றபின்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை.

இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை

எட்டுதொகை நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது; 'நல்' என்னும் அடைமொழி பெற்ற நூல்; நானூறு அகத்திணைப் பாடல்களைக் கொண்டது; பன்னாடு தந்த மாறன் வழுதியால் தொகுக்கப்பட்டது.

குறுந்தொகை 

குறைந்த அடிகள் கொண்டதால் குறுந்தொகை எனப்படுகிறது; 'நல்ல' என்னும் அடைமொழி பெற்றது; உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்;  நானூறு பாடல்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ. அகம் பற்றியது.

ஐங்குறுநூறு 

குறுகிய அடிகளால் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐங்குறுநூறு எனப்படுகிறது; ஆசிரியப்பாவால் ஆனது; மருதத் திணை முதலில் வைக்கப்பட்டுள்ளது; தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

பதிற்றுப்பத்து

சேரமன்னர்கள் பத்துப்பேரைப் பற்றிப் பத்துப்பத்துப் பாடல்களாக நூறு பாடல்களைக் கொண்டதால் 'பதிற்றுப்பத்து' எனப்படுகிறது.  முதல் பத்தும் பத்தாவது பத்தும் கிடைக்கவில்லை. புறம் பற்றியது.

பரிபாடல்

பரிபோல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூலாதலால் 'பரிபாடல்' எனப்படுகிறது. 'ஓங்கு' என்னும் அடைமொழி பெற்றது. இருபத்தைந்து அடி முதல் நானூறு அடி வரையுள்ள எழுபது பாடல்களைக் கொண்டது.  திருமால், முருகன், கொற்றவை, வையை, மதுரை பற்றி அகமும் புறமும் கலந்த பாடல்களால் ஆனது.

கலித்தொகை

கலிப்பாவால் பாடப்பட்டதால் 'கலித்தொகை' எனப்படுகிறது; 'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்னும் அடைமொழி பெற்றது. நூற்றைம்பது பாடல்களைக் கொண்டது; ஐந்திணைப் பாடல்களால் ஆனது.

அகநானூறு 

அகம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது; நெடுந்தொகை எனப்படுகிறது; தொகுத்தவர் உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதி.

புறநானூறு 

புறம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது.  பழந்தமிழரின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது.

இயல் 6, படித்துச் சுவைக்க

சிறு நண்டு 🦀 மணல் மீது படமொன்று கீறும் ... ஈழத்து மகாகவி ருத்ர மூர்த்தி பாடல்... கேட்டு ரசிக்க இணைப்பைத் தொடுக.  https://youtu.be/LCJQ5a5f6_s

இயல் 6, கற்பவை கற்றபின்

புதுக்கவிதையையும் குறளையும் ஒப்பிட்டுப் பேசுக.

புதுக்கவிதை

தக்காளியையும் வெண்டைக்காயும் 

தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில் 

தள்ளி நிற்கும் பிள்ளை 

அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை 

எப்படிக் கொடுக்க என்றே அவர் மனம் யோசிக்கும் 

"அத்தனை காய்களையும் விற்றால்தான் 

மீதி ஐநூறாவது மிஞ்சும்; என்ன செய்ய? "

காய்கறி வாங்கியவர் கவனக்குறைவாக கொடுத்த 

இரண்டாயிரம் ரூபாயைக்

கூப்பிட்டுத் தந்துவிட்டு

பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம் 

என்பதை அடுத்த படி யோசிக்கும் அவர் மனம்!


குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் 

புல்லார் புரள விடல்.

பொருள்செயல்வகை

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் முதற்பாவலரின் குறள்கருத்து புதுக்கவிதையில் மிளிர்கிறது. அருளும் அன்பும் கலவாத, நேர்மையற்ற வழியில் வரும் செல்வத்தை நல்லோர் மருத்துவிடுவர் என்ற குறளின் கருத்தைத் தள்ளுவண்டிக்காரர் பிரதிபலிக்கிறார். 

ஏழ்மைச் சூழலிலும், தன் குழந்தைக்கு அவசியமாய் ஆயிரம் ரூபாய் தேவைப்படும் சூழலிலும், யாரிடம் உதவி கேட்கலாம் என்று சிந்திக்கும் நல்ல மனிதராகத் திகழ்கிறார்; காய்கறி வாங்கியவர் கவனக்குறைவாகக் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயைக் கூப்பிட்டுத் தருகிறார்.  திருக்குறளில் அறிவுரையாக வழங்கப்பட்ட கருத்து, புதுக்கவிதையில் அனுபவமாக வழங்கப்பட்டுள்ளது.

Saturday, November 7, 2020

கவிதை

 காட்சி



கா.மு. ஷெரிப் அவர்களின் கவிதை


'காட்சியைக் கண்டு கவினுற எழுதுக' என்ற பகுதியில் கேட்கப்படலாம்.

PTA MODEL question paper

பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய PTA (PARENT TEACHER ASSOCIATION) model question paper Click here

வள்ளலார் பாடல்

Copied from http://interestingtamilpoems.blogspot.com/2012/04/blog-post_19.html?m=1

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. 

--------------------------------------------------------------------------------


கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே



கோடையின் சுட்டெரிக்கும் வெயில். ஒதுங்க நிழல் கிடைக்காதா என்று ஏங்கிய போது கண்ணில் ஒரு மரம் பட்டால் எப்படி இருக்கும்? அந்த மரமே இலை தழைகளோடு குளிர்ந்த நிழல் தந்தால் எப்படி இருக்கும்? நிழலோடு சேர்த்து அந்த மரம் உண்ண இனிப்பான கனியும் தந்தால் எப்படி இருக்கும்?



இந்த வாழ்க்கையில் நாம் கிடந்து உழலும் போது (கோடை) நமக்கு கிடைத்த குளிர் தரும், கனி தரும் மரமாய் இருக்கிறான் இறைவன்.



ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே = வெயிலில் நடந்த இளைப்பாற மரம் கிடைத்தது, கனி கிடைத்தது, சாப்பிட்டாகி விட்டது. தண்ணி வேண்டாமா ? அப்போது அங்கே ஒரு இனிமையான ஓடை, அதில் ஊரும் ஜில்லென்ற தண்ணீர் எப்படி இருக்கும் ?



இறைவன் அப்படி பட்டவன்.



தண்ணியும் குடிச்சாச்சு, அந்த ஓடையில் மணம் வீசும் மலரும் இருந்தால் எப்படி இருக்கும்?



இறைவன் அந்த மலர் போல் மனதுக்கு மகிழ்ச்சி தருபவன்.



மணம் மட்டும் இருந்தால் போதுமா, அது நம்மிடம் வர வேண்டாமா..அந்த மணத்தை ஏந்தி வரும் மெல்லிய பூங்காற்று போன்றவன் இறைவன்.



அந்த காற்று சுகமாய் வீசினால் ?



சிறு வயதில் என்னை மணந்த மணவாளா, நான் அணிவிக்கும் இந்த பாமாலையை ஏற்று அருளேன் என்று கொஞ்சுகிறார் வள்ளலார்.



இயல் 8 பா நயம் பாராட்டல்

 இயல் 8

பா நயம் பாராட்டல்

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

          குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

          உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

          மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

          ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

-வள்ளலார்.

இறைவாழ்த்து

திரண்ட கருத்து

"கோடை வெயிலில் இளைப்பாற உதவும் குளிர்ச்சி தரும் மரமாகவும், அதன் நிழலாகவும், அதன் கனியாகவும் இருப்பவனே! ஓடையில் ஓடும் சுவைதரும் தண்ணீராகவும், அவற்றிடையில் மலர்ந்த மணமலராகவும், மேடையில் வீசும் மெல்லிய பூங்காற்றாகவும் திகழ்பவனே! தென்றலின் சுகமாகவும், அதன் பயனாகவும் விளங்குபவனே! விளையாட்டுப் பருவத்தில் என்னை ஆட்கொண்ட இறைவா! பலர் கூடும் பொது இடத்தில் நடனம் ஆடுகின்ற இறைவா! என் பாமாலையை ஏற்று அருள்புரிக" என்று வள்ளலார், இறைவனை வணங்குகிறார்.

மையக் கருத்து

எல்லாமுமாகத் திகழும் இறைவனை வாழ்த்தி வணங்குவதே இப்பாடலின் மையக்கருத்து ஆகும்.

சொல் நயம்

"குளிர்தருவே,  தருநிழலே, நிழல் கனிந்த கனியே, சுகந்தமண மலரே, மெல்லிய பூங்காற்றே" ஆகிய அழகான சொற்கள் பாடலுக்கு நயம் கூட்டுகின்றன.

பொருள் நயம்

"சுகந்தமண மலரே, மென்காற்றில் விளைசுகமே, சுகத்தில் உறும் பயனே, ஆடையிலே எனை மணந்த மணவாளா" ஆகிய சொற்கள் ஆழமான பொருள் உடையன.

சந்த நயம்

சந்தம் செந்தமிழுக்கே சொந்தம்' என்பார்கள். வல்லோசையும் மெல்லோசையும் சேருமிடத்தில் சந்தநயம் பிறக்கிறது.

"ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

     உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

          மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே"என்ற வரிகளில் சந்தநயம் பயின்று வந்துள்ளது.

தொடை நயம்

"தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்பார்கள். இப்பாடலில் மோனை, எதுகை, முரண், இயைபு ஆகிய தொடை நயங்கள் பயின்று வந்துள்ளன.

மோனை நயம்

முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.

"படைக்கு அழகு யானை 

பாடலுக்கு அழகு மோனை" என்பதற்கு ஏற்ப,

கோடையிலே

கொள்ளும் வகை

குளிர்தருவே

டையிலே 

றுகின்ற 

கந்த 

மேடையிலே 

மெல்லிய 

மென்காற்றில் 

டையிலே 

டுகின்ற 

ரசே 

லங்கல் 

ணிந்தருளே

என்ற இடங்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது.

எதுகை நயம்

முதலெழுத்து அளவொத்து, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

கோடையிலே 

டையிலே 

மேடையிலே 

டையிலே 

ந்த 

சுந்த

என்ற இடங்களில் எதுகை நயம் பயின்று வந்துள்ளது.

முரண் நயம்

முரண்பட்ட சொற்களால் அமைவது முரண் நயம் ஆகும்.

கோடையிலே × குளிர்தருவே

இயைபு நயம்

பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ இயைந்து வருவது இயைபுநயம் ஆகும்.

கனியே

மலரே 

காற்றே 

அருளே

என்ற இடங்களில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

அணி நயம்

"அணியில்லாத கவிதை பணியில்லாத வனிதை" என்பார்கள். இப்பாடலில் இறைவனை மரமாகவும், நிழலாகவும், கனியாகவும், தண்ணீராகவும், மணமலராகவும், பூங்காற்றாகவும், சுகமாகவும் உருவகம் செய்து பாடியுள்ளார் எனவே, இஃது 'உருவக அணி' ஆகும்.

பா வகை

இப்பாடல், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பா வகையைச் சார்ந்தது.