Sunday, November 8, 2020

தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்

 தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்

Resources copied from

https://ta.m.wikipedia.org/. For govt school students learning purpose.

இலக்கணம் - Grammar

எழுத்ததிகாரம் - Orthography

சொல்லதிகாரம் - Etymolgy

சொற்றொடர் இலக்கணம் - Syntax

யாப்பிலக்கணம் - Prosody

அணி - Figure of speech

சொல்லிலக்கணம் - Parsing

சூத்திரம் - Rule or Article

அதிகாரம் - Section

இயல் - Chapter

பாயிரம் - Preface

உயிரெழுத்துக்கள் - Vowels

குறில் - Short Vowels

நெடில் - Long Vowels

மெய்யெழுத்துக்கள் - Consonants

வல்லினம் - Hard consonants (surds)

மெல்லினம் - Soft consonants (nasals)

இடையினம் - Medial consonants (liquids)

சுட்டெழுத்து - Demonstrative letter

வினாவெழுத்து - Interrogative letter

விதி - Rule

பொது விதி - General rule

சிறப்பு விதி - Special rule

குற்றியலுகரம் - shortend u

குற்றியிலிகரம் - shortend e

பகுபதம்(இலக்கணம்) - Divisble word

பகுதி - Root

பகாப்பதம் - Indivisible word

மாத்திரை - Quantity

பெயர் - Noun

வினை - Verb

இடைச்சொற்கள் - Conjunctions, Particles

வியப்பிடைச்சொல் - Interjection

உரிச்சொல் - Attributive

பெயர் உரிச்சொல் - Adjective

வினை உரிச்சொல் - Adverb

பண்புப்பெயர் - Abstract noun

பிறவினை - Causative verb

ஏவல்வினை - imperative verb

காலம் - Tense

இறந்தகாலம் - Past tense

நிகழ்காலம் - Present tense

எதிர்காலம் - Future tense

புணர்ச்சி - Combination

வேற்றுமைப் புணர்ச்சி - Casal Combinations

வேற்றுமை - Case

முதல் வேற்றுமை - Nominative case

எழுவாய் - Nominative case

இரண்டாம் வேற்றுமை - Accusative case

மூன்றாம் வேற்றுமை - Instrumental base

நான்காம் வேற்றுமை - Dative case

ஐந்தாம் வேற்றுமை - Ablative case

ஆறாம் வேற்றுமை - Genitive case

ஏழாம் வேற்றுமை - Locative case

எட்டாம் வேற்றுமை - Vocative case

விளி வேற்றுமை - Vocative case

வேற்றுமையுருபு - Case ending

தொகைநிலைத்தொடர் Elliptical expressions

தொகாநிலைத்தொடர்கள் - Unelliptical expressions

இரட்டித்தல் - Re-duplication

திணை - Caste

பால் - Gender

எண் - Number

இடம்- Person

ஆண்பால் - Masculine Gender

பெண்பால் - Femine Gender

பலர்பால் - Common Gender

ஒன்றன்பால் - Neuter Singular

பலவின்பால் - Neuter Plural

தன்மை, தன்னிலை - First Person

முன்னிலை - Second Person

படர்க்கை - Third Person

ஆகுபெயர் - Meyonymy, Synecdoche

எண்ணுப்பெயர் - Numberals

சாரியைகள் - Euphonic particles

சொற்களின் வகை - Parts of Speech

வினைமுற்று - Finite Verb

எச்சம் - Participles, Infinitives

பெயரெச்சம் - Adjectival participle

வினையெச்சம் - Adverbial participle, gerund

குறிப்புவினை - Symbolic verb

வியங்கோள் - Optative verb

மூன்று காலங்களுக்கும் பொதுவான வினையெச்சம் - Infinitve mood

எதிர்கால வினையெச்சம் - Subjunctive mood

எழுவாய் - Subject

பயனிலை - Predicate

செயப்படுபொருள் - Object

செயப்படுபொருள் குன்றாவினை - Transitive Verb

செயப்படுபொருள் குன்றியவினை - Intransitive Verb

செய்வினை - Active Verb

செயப்பாட்டுவினை - Passive Verb

உடன்பாடு - Affirmation

எதிர்மறை - Negation

ஒருபொருள் குறித்த பல சொற்கள், ஒத்தசொல் - Synonyms

பல பொருள் குறித்த ஒரு சொல் - Homonym

வாழாநிலை - Grammatical expressions

இடகரடக்கல் மங்கலம் - Euphemism

மரபு - Idiom, Usage

ஒருபொருட்பன்மொழி - Redundant words

அடைமொழி - Eplthet

பொருள்கோள் - Prose order

அசை - Metrical syllable

மொழிப்பயிற்சி - Language exercise

வாக்கியம் - Sentence

தனிவாக்கியம் - Simple Sentence

தொடர்வாக்கியம் - Compound sentence

கலவை வாக்கியம் - Complex sentence

வாக்கியப் பொருத்தம் - Sentence agreement or Concord

இடம்விட்டு எழுதல் - Spacing

சேர்த்து எழுதல் - Non-splitting of words

சொற் பொருத்தம் - Appropriate words

நிறுத்தற் குறிகள் - Punctuation marks

வாக்கிய மாற்றம் - Transformation of sentences

வல்லினம் மிகும் இடம் - Doubling of hard consonants

நேர்கூற்று - Direct speech

அயற்கூற்று - Indirect speech

உவமையணி - Simile

உருவக அணி - Metaphor

உயர்வு நவிற்சியணி - Hyperbole

வஞ்சப்புகழ்ச்சியணி - Irony

சிலேடையணி - Pun

வேற்றுமையணி - Anthighesis

மேன்மேலும் உயர்தல் - Climax

மேன்மேலும் தாழ்தல் - Anti - Climax

சொற்பின் வருநிலையணி - Tautophony

பொருட்பின் வருநிலையணி - Tautology

விரோத அணி - Epigram

உபசார வழக்கு - Transferred epithet

குறிப்புமொழி, இரட்டைக் கிளவி - Onomotopoeia

எதுகை, இயைபுத் தொடைகள் - Rhyme

முரண்தொடை - Oxymoron, Antethesis

மோனை - Alliteration

அழகுணர்ச்சி - Aesthetic

எதிர்சொற்கள் - Antonyms

ஓசை இல்லாதவை - Breathed

உயர்தனிச் செம்மொழி - Classical language

தொடர்ச்சி - Coherence

நடை- Diction

அகர வரிசை, அகராதி - Dictionaries

இனிமை - Euphony

எடுத்துக்காட்டுகள் - Examples

இடை அண்ணம் - hard palate

பேச்சுப் பழக்கங்கள் - Linguistic habits

குரல் ஏற்றத் தாழ்வு - Modulation of voice

பத்தி - Paragraph

இடைப்பிறவரல்குறிகள் - Paranthesis

ஒலியியல் - Phonetics

மொழி நூல் - Philology

வெடிப்பொலிகள் - Explosives

சுருக்கி எழுதல் - Precise writing

உச்சரிப்பு - Pronunciation

உரைநடை - Prose

பழமொழிகள் - Proverbs

ஓசை இனிமை - Rhythm

இழிவழக்கு - Vulgarisms

மிடற்றொலி - Gutturals

நாக்குஒலி - Palatals

தலையொலி - Cerebrals

பல்லொலி - Dentals

இதழ் ஒலி - Labials

எதிர் ஒலி - Alveoloar

உம்மைத்தொகை - Asyndeton

வீறுகோளணி - Climax

சுருங்கச் சொல்லல் - Epigram

அங்கதம் - Sarcasm

இயல் 1, கற்பவை கற்றபின்

 

இயல் 1, கற்பவை கற்றபின்

'எந்தமிழ்நா நின்பெருமை எடுத்தே உரைவிரிக்கும்' என்ற பாடல் அடியைக் கொண்டு வகுப்பறையில் ஐந்து நிமிட உரை நிகழ்த்துக.

எந்தமிழ்நா நின்பெருமை எடுத்தே உரைவிரிக்கும்


தமிழன்னையின் தூதுவரான தமிழ் ஆசிரியருக்கும், மனவானில் என்னுடன் சிறகசைத்துப் பறக்கும் அருமை நண்பர்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இப்போது உங்கள் முன்னால், 'எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்' என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.

உலகில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி, தமிழ் மொழி.  எத்துணை கால மாற்றத்திற்குப் பிறகும் தன் இயல்பு மாறாமல் என்றும் இளமையாய்த் திகழும் மொழி, தமிழ் மொழி.  வளமான இலக்கியங்களும் வழுவாத இலக்கணங்களும் நிறைந்த மொழி; பாவாணர் சுட்டும் பதினாறு செவ்வியல் தன்மைகளும் வாய்ந்த நன்மொழி; அயல் நாட்டவரும் எளிதில் கற்கும் வகையில் அமைந்த தேன்மொழி; ஏராளமான வேர்ச் சொற்களைக் கொண்ட மொழி; பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் தனித்தியங்கும் வல்லமை உடைய மொழி; திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி; 

மக்களின் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த மொழி; முத்தமிழாய் வளர்ந்த மொழி; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாக அணிந்த மொழி; உயர்ந்த பண்பாட்டைப் பறைசாற்றும் இலக்கியங்களை ஆட்கொண்ட மொழி; உலகப் பொதுமறையான திருக்குறளையும் அறிவியல் முறையில் அமைந்த தொல்காப்பியத்தையும் மணிமுடியாய்த் தரித்த மொழி; தமிழரின் வாழ்வியல் அறங்களைப் பாடும் மொழி; வாழ்க்கை நெறிகளைப் பாடும் மொழி; நீதி நெறிகளை நோக்கி நெறிப்படுத்தும் மொழி; பக்திப் பரவசமூட்டும் தெய்வ மொழி; இன்னிசைச் சந்தமொழி; பாமரரின் வாய்ப்பாட்டு மொழி; 

புதுவழி இலக்கிய வடிவங்களை ஏற்றுப் புத்தெழுச்சி பெற்ற மொழி; கணினி மொழி; கன்னி மொழி; எதிர்கால உலகை ஆளும் உலக மொழி, தமிழ் மொழி.  உனது பெருமையை உரைவிரித்திட ஒருவராலும் இயலாது. ஓதியுணர்ந்து மகிழ்ச்சிக் கடலில் நீந்துவதைத் தவிர வேறு வழி இல்லை எங்களுக்கு. ஆகவே, உன்னை வாழ்த்தி வணங்குகிறோம், தாயே! தமிழே!

இதுவரை என்னுடைய பேச்சைக் கேட்டு மகிழ்ந்த என் நண்பர்களுக்கு, என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்!

இயல் 1, கற்பவை கற்றபின்

இயல் 1, கற்பவை கற்றபின்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை.

இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை

எட்டுதொகை நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது; 'நல்' என்னும் அடைமொழி பெற்ற நூல்; நானூறு அகத்திணைப் பாடல்களைக் கொண்டது; பன்னாடு தந்த மாறன் வழுதியால் தொகுக்கப்பட்டது.

குறுந்தொகை 

குறைந்த அடிகள் கொண்டதால் குறுந்தொகை எனப்படுகிறது; 'நல்ல' என்னும் அடைமொழி பெற்றது; உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்;  நானூறு பாடல்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ. அகம் பற்றியது.

ஐங்குறுநூறு 

குறுகிய அடிகளால் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐங்குறுநூறு எனப்படுகிறது; ஆசிரியப்பாவால் ஆனது; மருதத் திணை முதலில் வைக்கப்பட்டுள்ளது; தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

பதிற்றுப்பத்து

சேரமன்னர்கள் பத்துப்பேரைப் பற்றிப் பத்துப்பத்துப் பாடல்களாக நூறு பாடல்களைக் கொண்டதால் 'பதிற்றுப்பத்து' எனப்படுகிறது.  முதல் பத்தும் பத்தாவது பத்தும் கிடைக்கவில்லை. புறம் பற்றியது.

பரிபாடல்

பரிபோல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூலாதலால் 'பரிபாடல்' எனப்படுகிறது. 'ஓங்கு' என்னும் அடைமொழி பெற்றது. இருபத்தைந்து அடி முதல் நானூறு அடி வரையுள்ள எழுபது பாடல்களைக் கொண்டது.  திருமால், முருகன், கொற்றவை, வையை, மதுரை பற்றி அகமும் புறமும் கலந்த பாடல்களால் ஆனது.

கலித்தொகை

கலிப்பாவால் பாடப்பட்டதால் 'கலித்தொகை' எனப்படுகிறது; 'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்னும் அடைமொழி பெற்றது. நூற்றைம்பது பாடல்களைக் கொண்டது; ஐந்திணைப் பாடல்களால் ஆனது.

அகநானூறு 

அகம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது; நெடுந்தொகை எனப்படுகிறது; தொகுத்தவர் உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதி.

புறநானூறு 

புறம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது.  பழந்தமிழரின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது.

இயல் 6, படித்துச் சுவைக்க

சிறு நண்டு 🦀 மணல் மீது படமொன்று கீறும் ... ஈழத்து மகாகவி ருத்ர மூர்த்தி பாடல்... கேட்டு ரசிக்க இணைப்பைத் தொடுக.  https://youtu.be/LCJQ5a5f6_s

இயல் 6, கற்பவை கற்றபின்

புதுக்கவிதையையும் குறளையும் ஒப்பிட்டுப் பேசுக.

புதுக்கவிதை

தக்காளியையும் வெண்டைக்காயும் 

தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில் 

தள்ளி நிற்கும் பிள்ளை 

அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை 

எப்படிக் கொடுக்க என்றே அவர் மனம் யோசிக்கும் 

"அத்தனை காய்களையும் விற்றால்தான் 

மீதி ஐநூறாவது மிஞ்சும்; என்ன செய்ய? "

காய்கறி வாங்கியவர் கவனக்குறைவாக கொடுத்த 

இரண்டாயிரம் ரூபாயைக்

கூப்பிட்டுத் தந்துவிட்டு

பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம் 

என்பதை அடுத்த படி யோசிக்கும் அவர் மனம்!


குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் 

புல்லார் புரள விடல்.

பொருள்செயல்வகை

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் முதற்பாவலரின் குறள்கருத்து புதுக்கவிதையில் மிளிர்கிறது. அருளும் அன்பும் கலவாத, நேர்மையற்ற வழியில் வரும் செல்வத்தை நல்லோர் மருத்துவிடுவர் என்ற குறளின் கருத்தைத் தள்ளுவண்டிக்காரர் பிரதிபலிக்கிறார். 

ஏழ்மைச் சூழலிலும், தன் குழந்தைக்கு அவசியமாய் ஆயிரம் ரூபாய் தேவைப்படும் சூழலிலும், யாரிடம் உதவி கேட்கலாம் என்று சிந்திக்கும் நல்ல மனிதராகத் திகழ்கிறார்; காய்கறி வாங்கியவர் கவனக்குறைவாகக் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயைக் கூப்பிட்டுத் தருகிறார்.  திருக்குறளில் அறிவுரையாக வழங்கப்பட்ட கருத்து, புதுக்கவிதையில் அனுபவமாக வழங்கப்பட்டுள்ளது.

Saturday, November 7, 2020

கவிதை

 காட்சி



கா.மு. ஷெரிப் அவர்களின் கவிதை


'காட்சியைக் கண்டு கவினுற எழுதுக' என்ற பகுதியில் கேட்கப்படலாம்.

PTA MODEL question paper

பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய PTA (PARENT TEACHER ASSOCIATION) model question paper Click here