Wednesday, March 3, 2021

மொழியை ஆள்வோம் இயல் 4

 மொழியை ஆள்வோம் இயல் 4

பக்கம் 95


வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக


காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?


எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளது போல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும்.


பறவைகளுக்கு பார்த்தல் கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.


யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு


திருத்தம்:


காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா?


எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடியிருக்கும். மற்ற(ப்)படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது(க்) கேட்கும்.


பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி(ப்) பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு(க்) குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே(க்) கூறலாம்.


அடைப்புக் குறிக்குள் உள்ளவற்றை நீக்க வேண்டும். புரிதலுக்காக அடைப்புக் குறிக்குள் நீக்கப்பட வேண்டிய எழுத்துக்கள் தனியாகக் காட்டப்பட்டுள்ளன.


பக்கம் 96


கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.


அ) இயற்கை- செயற்கை


பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன.


ஆ) கொடு- கோடு 


கோடு போட உன்னுடைய அளவுகோலைக் கொடு.


இ) கொள்- கோள் 


பூமிக்கோள் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏற்ற சூழலைக் கொண்டிருக்கின்றது.


ஈ) சிறு- சீறு 


சீறும் பாம்பைக் கண்டதும் சிறுவன் நடுங்கினான்.


உ) தான்-தாம் 


அவர்கள் தாமே செய்ய வேண்டிய செயல்களைக் கூட என்னிடம்தான் ஒப்படைத்தார்கள்.


ஊ) விதி- வீதி 


விதியை நொந்து வீதியில் அலையாதே!


பத்தியைப் படித்துப் பதில் தருக.


பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகியஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக் காலம் கடந்தது


1) பத்தியில் உள்ள அடுக்கு தொடர்களை எடுத்து எழுதுக.


விடை: மீண்டும் மீண்டும்


2) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?


தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.


3) பெய்த மழை- இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.


பெய்மழை 


4) இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?


பெருவெடிப்புக் கொள்கை 


5) உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவீர் கருதுவன யாவை?


நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை அடங்கிய சூழலே உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும்.



மொழியை ஆள்வோம் இயல் 5

 மொழியை ஆள்வோம் இயல் 5

பக்கம் 123


அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.


ஓடு- வேர்ச்சொல்


எழுவாய்த் தொடர்- அருணா ஓடினாள்


பெயரெச்சத் தொடர்- ஓடிய அருணா


வினையெச்சத் தொடர்- ஓடி வந்தாள்


விளித்தொடர்- அருணா ஓடாதே!


வேற்றுமைத் தொடர்- அருணாவிற்காக ஓடினாள்






வேர்ச்சொல்- சொல்


எழுவாய்த் தொடர்- அம்மா சொன்னார்


பெயரெச்சத் தொடர்- சொன்ன அம்மா


வினையெச்சத் தொடர்- சொல்லிச் சென்றார்.


விளித்தொடர்- அம்மா, சொல்!


வேற்றுமைத் தொடர்- கதையைச் சொன்னார்




வேர்ச்சொல்- தா


எழுவாய்த் தொடர்- அரசர் தந்தார்


பெயரெச்சத் தொடர்- அந்த அரசர்


வினையெச்சத் தொடர்- தந்து சென்றார்


விளித் தொடர்- அரசே தருக!


வேற்றுமைத் தொடர்- பரிசைத் தந்தார்


வேர்ச்சொல்- பார்


எழுவாய்த் தொடர்- துளிர் பார்த்தாள்


பெயரெச்சத் தொடர்– பார்த்த துளிர்


வினையெச்சத் தொடர்– பார்த்துச் சிரித்தாள்


விளித் தொடர்- துளிர் பார்!


வேற்றுமைத் தொடர்– துளிருடன் பார்த்தேன்




வேர்ச்சொல்- வா


எழுவாய்த்தொடர்- குழந்தை வந்தது


பெயரெச்சத் தொடர்- வந்த குழந்தை


வினையெச்சத் தொடர்– தவழ்ந்து வந்தது


விளித்தொடர்- குழந்தாய் வா!


வேற்றுமைத் தொடர்- குழந்தைக்குத் தாலாட்டு




தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க


கடம்பவனத்தைவிட்டு இறைவன் நீங்கினான்.


எ.கா. அழகிய குளிர்ந்த கடம்ப வனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.




1) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.


நிழலையும் காய்கனிகளையும் ஒருங்கே தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.


2) வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களை கற்றுத் தருகிறது.


நீண்ட நெடிய வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களை கற்றுத் தருகிறது.


3) கல்வியே வருவதற்கு உயர்வு தரும்.


என்றும் அழியாத கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.


4) குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.


சுட்டித்தனம் செய்யும் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.



Sunday, February 21, 2021

குறைக்கப்பட்ட பாடத்திட்டம்- பத்தாம் வகுப்பு - தலைப்புகளும் வினாவிடைகளும்

தலைப்பு 2020-21

1) அன்னை மொழியே!

2) தமிழ்ச்சொல் வளம்

3) இலக்கணம் எழுத்து சொல்

4) காற்றே வா

5) தொகைநிலைத் தொடர்கள்

6) கோபல்லபுரத்து மக்கள்

7) தொகாநிலைத் தொடர்கள்

8) திருக்குறள் இயல் 3

9) பெருமாள் திருமொழி

10) இலக்கணம் பொது

11) நீதி வெண்பா

12) வினா, விடை வகைகள், பொருள்கோள்

13) கம்பராமாயணம்

14) அகப்பொருள் இலக்கணம்

15) திருக்குறள் இயல் 6

16) சிற்றகல் ஒளி

17) மெய்க்கீர்த்தி

18) சிலப்பதிகாரம்

19) மங்கையராய்ப் பிறப்பதற்கே

20) புறப்பொருள் இலக்கணம்

21) சங்க இலக்கியத்தில் அறம்

22) காலக்கணிதம்

23) இராமானுசர் நாடகம்

24) பா வகை, அலகிடுதல்

25) ஜெயகாந்தம்

26) தேம்பாவணி

27) ஒருவன் இருக்கிறான்

28) அணிகள்