Tuesday, March 29, 2022

அகப்பொருள் இலக்கணம் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. அன்பின் ஐந்திணை யாவை?
    1. குறிஞ்சி
    2. முல்லை
    3. மருதம்
    4. நெய்தல்
    5. பாலை
  2. பொருள் இலக்கணம் என்றால் என்ன?
    1. பொருள் என்பது ஒழுக்க முறை.
    2. அக வாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைப் பற்றி கூறுவது பொருள் இலக்கணம் ஆகும்.
  3. அகத்திணை என்றால் என்ன?
    1. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலையைக் கூறுவது அகத்திணை ஆகும்
  4. அகத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • அகத்திணை ஏழு வகைப்படும். அதை
      1. குறிஞ்சி
      2. முல்லை
      3. மருதம்
      4. நெய்தல்
      5. பாலை
      6. கைக்கிளை
      7. பெருந்திணை
  5. ஐந்து திணைகளுக்கும் உரியன யாவை?
    1. முதற்பொருள்
    2. கருப்பொருள்
    3. உரிப்பொருள்
  6. முதற்பொருள் என்றால் என்ன?
    • நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆகும்
  7. நிலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • நிலம் ஐந்து வகைப்படும். அவை,
      1. குறிஞ்சி
      2. முல்லை
      3. மருதம்
      4. நெய்தல்
      5. பாலை
  8. குறிஞ்சி என்றால் என்ன? மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும்
  9. முல்லை என்றால் என்ன? காடும் காடு சார்ந்த இடமும் முல்லை ஆகும்
  10. மருதம் என்றால் என்ன? வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும்
  11. நெய்தல் என்றால் என்ன? கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும்
  12. பாலை என்றால் என்ன? சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை ஆகும்
  13. பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • பொழுது இரண்டு வகைப்படும் அவை,
      1. சிறுபொழுது
      2. பெரும்பொழுது
  14. சிறுபொழுது என்றால் என்ன?
    • ஒரு நாளின் 6 கூறுகளைச் சிறுபொழுது என்று பிரித்துள்ளனர்
  15. பெரும்பொழுது என்றால் என்ன?
    • ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று பிரித்துள்ளனர்
  16. கார் காலத்திற்குரிய மாதங்கள் எவை? ஆவணி புரட்டாசி
  17. குளிர் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? ஐப்பசி கார்த்திகை
  18. முன்பனிக் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? மார்கழி தை
  19. பின்பனிக் காலத்திற்குரிய மாதங்கள் எவை? மாசி பங்குனி
  20. இளவேனில் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? சித்திரை வைகாசி
  21. முதுவேனில் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? ஆணி ஆடி
  22. காலை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? காலை 6 மணி முதல் 10 மணி வரை
  23. நண்பகல் என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? காலை 10 மணி முதல் 2 மணி வரை
  24. எற்பாடு என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
  25. மாலை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
  26. யாமம் என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? இரவு 10 மணி முதல் 2 மணி வரை
  27. வைகறை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
  28. எற்பாடு என்றால் என்ன?எல்-சூரியன், பாடு-மறையும் நேரம். ஏற்பாடு என்பது சூரியன் மறையும் நேரம் ஆகும்
  29. கருப்பொருள் என்றால் என்ன? ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு முதலானவை கருப்பொருள்கள் ஆகும்.
  30. குறிஞ்சி நிலத்திற்கு உரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுதுக
    1. தெய்வம் -முருகன்
    2. மக்கள் -குறவர், குறத்தியர்
    3. உணவு -மலைநெல், தினை
    4. பூ -குறிஞ்சி, காந்தள்
  31. முல்லை நிலத்திற்கு உரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுது
    1. தெய்வம் -திருமால்
    2. மக்கள் -ஆயர் ஆய்ச்சியர்
    3. உணவு -வரகு சாமை
    4. பூ -முல்லை தோன்றி
  32. மருத நிலத்துக்குரிய கருப்பொருள்கள் ஏதேனும் நான்கு எழுது
    1. தெய்வம் -இந்திரன்
    2. மக்கள் -உழவர் உழத்தியர்
    3. உணவு -செந்நெல் வெண்ணெல்
    4. பூ -செங்கழுநீர் தாமரை
  33. நெய்தல் நிலத்துக்குரிய கருப்பொருட்கள் ஏதேனும் நான்கு எழுது
    1. தெய்வம் -வருணன்
    2. மக்கள் -பரதன், பரத்தியர்
    3. உணவு -மீன், உப்புக்கு பெற்ற பொருள்
    4. பூ -தாழை, நெய்தல்
  34. பாலை நிலத்துக்குரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுது
    1. தெய்வம் -கொற்றவை
    2. மக்கள் -எயினர், எயிற்றியர்
    3. உணவு -சூறையாடலால் வரும்பொருள்
    4. பூ-குரவம், பாதிரி

திருக்குறள் 2மதிப்பெண் வினாக்கள்

  1. அரிய செயலைச் செய்வதற்கு அமைச்சர் அறிந்து கொள்ள வேண்டியவை எவை?
    1. தொழில் செய்வதற்குத் தேவையான கருவி
    2. அதற்கு ஏற்ற காலம்
    3. செயலின் தன்மை
    4. செய்யும் முறை
  2. அமைச்சருக்கு உரிய தகுதிகள் எவை?
    1. மனவலிமை
    2. குடிகளைக் காத்தல்
    3. ஆட்சி முறைகளைக் கற்றல்
    4. நூல்களைக் கற்றல்
    5. விடாமுயற்சி
  3. எப்படிப்பட்ட அமைச்சருக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது? இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சருக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது
  4. ஓர் அமைச்சர் ஒரு செயலை செய்வதற்கு உரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருந்தாலும் அவர் செய்ய வேண்டுவன யாது? உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்
  5. பொருளின் சிறப்பு யாது? ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.
  6. ஒருவருக்கு அறத்தையும் இன்பத்தையும் தருவது எது? முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த செல்வம் ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் தரும்.
  7. எத்தகைய செல்வத்தை நீக்கிவிட வேண்டும்? மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்
  8. மலைமேல் நின்று யானைப் போரைக் காண்பதற்கு ஒப்பானது எது? தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் செய்யும் செயல்
  9. ஒருவர் செல்வத்தை ஏன் சேர்க்க வேண்டும்? ஒருவர் பொருளை ஈட்டவேண்டும். அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை.
  10. பகைவரின் அழுத கண்ணீரின் உள்ளே வஞ்சகம் மறைந்து இருப்பது எதனோடு ஒப்பிடப்படுகிறது?பகைவரின் தொழுது நிற்கும் கையினுள் கொலைக்கருவி மறைந்திருப்பதற்கு ஒப்பானது
  11. யாரால் பகைவரை எதிர்கொள்ள இயலாது?
    1. சுற்றத்தாருடன் அன்பு இல்லாதவர்
    2. பொருந்திய துணை இல்லாதவர்
    3. வலிமை இல்லாதவர்
  12. பகைக்கு எளிதில் ஆட்படுபவர் யார்?
    1. மனதில் அன்பு இல்லாதவர்
    2. அறிய வேண்டியவற்றை அறியாதவர்
    3. பொருந்தும் பண்பு இல்லாதவர்
    4. பிறருக்குக் கொடுத்து உதவாதவர்
  13. யாருடைய குடி உயர்ந்து நிற்கும்?
    • விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து நிற்கும்
  14. யாரை உலகத்தார் உறவாக கொண்டு போற்றுவார்?
    • குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்
  15. ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது? வறுமை
  16. வறுமையின் கொடுமை எப்போது முழுவதும் கெடும்? தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்
  17. இரப்பவரின் உள்ளத்தினுள்ளே எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்? இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தினுள்ளே மகிழ்ச்சி பொங்கும்
  18. எதைப் போன்ற தோற்ற ஒப்புமையை எங்கும் காண இயலாது? மக்களைப் போன்ற கயவர்களின் தோற்ற ஒப்புமையை எங்கும் காண இயலாது
  19. தேவரும் கயவரும் ஒரே தன்மையர் எவ்வாறு? தேவர்களைப் போல கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவார்.
  20. சான்றோர் எப்போது பயன்படுவர்? கயவர் எப்போது பயன்படுவர்?
    1. ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்ட உடனே சான்றோர் உதவி செய்வர்
    2. கரும்பைப் பொழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் கயவர் பயன்படுவர்

மெய்க்கீர்த்தி 2 மதிப்பெண் வினாக்கள்

  1. மெய்க்கீர்த்தி என்றால் என்ன? கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம் பட எழுதப்படும் வரிகளே மெய்க்கீர்த்திகள் ஆகும்
  2. இரண்டாம் இராஜராஜ சோழன் யாரைப் போல ஆட்சி நடத்தினான்? இந்திரன் முதலாகத் திசை பாலகர் எட்டு பேரும் ஓர் உருவம் பெற்றது போல ஆட்சி செலுத்தினான்.
  3. இரண்டாம் ராஜராஜ சோழன் பெற்ற பட்டங்கள் எவை? கோப்பரகேசரி, திரிபுவனச் சக்கரவர்த்தி
  4. இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் பிணிக்கப்படுவன, புலம்புவன, கலக்கமடைவன, அடைக்கப்படுவன எவை?
    1. பிணிக்கப்படுவன -யானைகள்
    2. புலம்புவன -சிலம்புகள்
    3. கலக்கமடைவன- ஓடைகள்
    4. அடைக்கப்படுவன -ஆற்றுநீர்
  5. இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் வடுப்படுவன, பறிக்கப்படுவன, கொடியன, கள்ளுண்பன எவை?
    1. வடுப்படுவன-மாங்காய்கள்
    2. பறிக்கப்படுவன-மலர்கள்
    3. கொடியன-காடுகள்
    4. கள்ளுண்பன-வண்டுகள்
  6. இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் வெறுமையாய்த் தோன்றுவன, போராய் எழுவன, இருள் சூழ்ந்தன, மருள்வன எவை?
    1. வெறுமையாய்த் தோன்றுவன-மூங்கில்கள்
    2. போராய் எழுவன-நெற்கதிர்கள்
    3. இருள் சூழ்ந்தன-நீண்ட மலைகள்
    4. மருள்வன-இளமான்கள்
  7. இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் பிறழ்வன, சினம் காட்டுபவர், பொருள் மறைத்து வைப்பவர், தெருவில் கடிஆடிப்பாடுபவர் யாவர்?
    1. பிறழ்வன-குளத்து மீன்கள்
    2. சினம் காட்டுபவர்-செவிலித் தாயார்
    3. பொருள் மறைத்து வைப்பவர்-புலவர்கள்
    4. தெருவில் கூடி ஆடிப்பாடுபவர்-இசைப்பாணர்
  8. இரண்டாம் ராஜராஜ சோழனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு நிலை யாது?
    1. இரண்டாம் ராஜராஜ சோழன் தந்தை இல்லாதவருக்குத் தந்தையாக இருக்கிறான்
    2. தாய் இல்லாதவருக்குத் தாயாக இருக்கிறாள்
    3. மகன் இல்லாதவருக்கு மகனாக இருக்கிறான்
    4. உலகிலுள்ள உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கிறான்.
  9. இரண்டாம் ராஜராஜ சோழன் எவ்வாறெல்லாம் ஒப்பிடப்படுகிறார்?
    1. விழி பெற்ற பயன்
    2. மெய் பெற்ற அருள்
    3. மொழி பெற்ற பொருள்
    4. புகழ் பெற்ற நூல்
  10. மெய்க்கீர்த்தி -தோற்றம் குறித்து எழுதுக
    1. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களில் உள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி
    2. பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்டது
    3. சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி என்ற செப்பமான வடிவம் பெற்றது

சிலப்பதிகாரம் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு எவ்வழியாகச் சென்றனர்?
    1. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் எனும் இடத்தை அடைந்தனர்
    2. அங்கிருந்து தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்
    3. அல்லது அங்கிருந்து சிறுமலையின் இடப்பக்கம் வழியாகச் சென்றால் திருமால் குன்றம் வழியாக மதுரையை அடையலாம்
    4. இவ்விரண்டிற்கும் இடையில் சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன
    5. அந்த இடைப்பட்ட வழியிலேயே கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றார்.

மங்கையராய்ப் பிறப்பதற்கே 2 மதிப்பெண் வினாக்கள்

  1. எம் எஸ் சுப்புலட்சுமி பெற்ற விருதுகள் யாவை?
    1. தாமரையணி விருது-1954
    2. மகசேசே விருது-1974
    3. இந்திய மாமணி விருது-1998
  2. எம் எஸ் சுப்புலட்சுமி தாம் மறக்கமுடியாத நிகழ்வாக எதைக் குறிப்பிடுகிறார்?
    • 1954இல் தாமரையணி விருது பெற்றபோது, பார்வையற்ற ஹெலன் கெல்லர் தன்னைத் தொட்டுப்பார்த்துப் பாராட்டியதை மறக்க முடியாது என்கிறார்
  3. 'ஹரி தும் ஹரோ' என்னும் பாடலை எம்எஸ் சுப்புலட்சுமி பாடக் காரணமாக அமைந்த நிகழ்வு எது?
    1. ஒருமுறை எம்எஸ் சுப்புலட்சுமி, காந்தியடிகளைத் தில்லியில் சந்தித்தபோது 'ரகுபதி ராகவ ராஜா ராம்' என்ற பாடலைப் பாடினார்
    2. மிகவும் பாராட்டிய காந்தியடிகள், மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னார்
    3. பின் சிறிது நாள்களில் எம்எஸ் சுப்புலட்சுமி, முனைந்து அந்தப்பாடலைக் கற்றுப் பயிற்சி செய்தார்
    4. சென்னை வானொலியில் 1947இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று 'ஹரி தும் ஹரோ' என்னும் 'மீரா பஜன்' பாடல் ஒளிபரப்பானது.
  4. எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் இசைச் சூழல் பற்றி எழுதுக
    1. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் தாயார் வீணைக் கலைஞர் ஆவார். அவரே எம் எஸ் சுப்புலட்சுமியின் முதல் குரு.
    2. எம் எஸ் சுப்புலட்சுமி, இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடிப் பதிவு செய்தார்
    3. இசை மேதைகளின் வழிகாட்டுதல்களில் தன்னை வளர்த்துக்கொண்டார்
  5. எம் எஸ் சுப்புலட்சுமி எந்தெந்த மொழிகளில் பாடியுள்ளார்?
    1. தமிழ்
    2. தெலுங்கு
    3. கன்னடம்
    4. சமஸ்கிருதம்
    5. மலையாளம்
    6. இந்தி
    7. மராத்தி
    8. குஜராத்தி
    9. ஆங்கிலம்
  6. எம் எஸ் சுப்புலட்சுமியின் இசைக்கு கிடைத்த மகுடம் எது?
    1. 1974இல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது பெற்றார்
    2. இவ்விருது பெறும் முதல் இசைக்கலைஞர் எம் எஸ் சுப்புலட்சுமி ஆவார்.
  7. மீரா திரைப்படம் குறித்து எம் எஸ் சுப்புலட்சுமி கூறுவது என்ன?
    1. மீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது.
    2. அது எனது கடைசித் திரைப்படமாகவும் அமைந்தது.
  8. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த பாடல்களாக எம் எஸ் சுப்புலட்சுமி கூறுவது யாது?
    1. காற்றினிலே வரும் கீதம்
    2. பிருந்தாவனத்தில் கண்ணன்
  9. இங்கிலாந்திலும் ஐநா அவையிலும் எம் எஸ் சுப்புலட்சுமி எப்போது பாடினார்?
    1. இங்கிலாந்து-1963
    2. ஐநா அவை-1966
  10. எம் எஸ் சுப்புலட்சுமியின் குரல் எப்போது எவ்வடிவில் திருப்பதியில் ஒலித்தது?
    1. 1966
    2. வெங்கடேச சுப்ரபாதம்
  11. பரதநாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்று தந்தது எது?
    • டோக்கியோவில் உள்ள 'கிழக்கு மேற்கு சந்திப்பு' நிகழ்வில் இந்தியாவின் சார்பாக பாலசரஸ்வதி கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடினார். இந்நிகழ்வு பரதநாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தது.
  12. நடன கலைஞர் பாலசரஸ்வதி அவர்களின் தொடக்க கால நடன அரங்கேற்றம் பற்றிக் கூறுக.
    1. காஞ்சிபுரத்தில் ஏழு வயதாக இருக்கும்போது முதன் முதலில் மேடை ஏறினார்
    2. 15 வயதில் சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடனமாடினார்
    3. பால சரஸ்வதியின் நடன நிகழ்ச்சியைப் பார்த்த பிறகே பலரும் மரபுசார் நாட்டியத்தை வரவேற்கத் தொடங்கினார்கள்.
  13. பால சரஸ்வதிக்குப் பல வாய்ப்புகள் வரக் காரணம் யாது?
    1. சென்னையில் பால சரஸ்வதியின் கச்சேரியைப் பார்த்த பண்டிட் ரவி சங்கர் மிகவும் பாராட்டினார்
    2. பண்டிட் ரவிசங்கரின் தம்பியின் மூலமாக வட இந்தியாவின் பல இடங்களில் நடனமாடும் வாய்ப்பைப் பெற்றார்
  14. பால சரஸ்வதியின் 'ஜனகணமன' பாடலுக்கு நடனமாடிய நிகழ்வு யாது?
    1. பாலசரஸ்வதி கல்கத்தாவிலும் காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த இந்தியத் தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய 'ஜனகணமன' பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடியுள்ளார்.
    2. அதுவே அவர், நாட்டுப் பண்ணுக்கு நடனமாடிய முதலும் இறுதியுமான நிகழ்வாகும்
  15. ராஜம் கிருஷ்ணனின் புதினங்கள் யாவை?
    1. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
    2. கரிப்பு மணிகள்
    3. அலைவாய்க் கரையில்
    4. சேற்றில் மனிதர்கள்
    5. வேருக்கு நீர்
    6. கூட்டுக் குஞ்சுகள்
    7. மண்ணகத்துத் பூந்துளிகள்
    8. குறிஞ்சித் தேன்
  16. ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்களின் தனித்துவம் யாது?
    • சமூகச் சிக்கல்களை எழுதும் முன்பு அந்த மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று களப்பணி ஆற்றி, கதைகளாக உருவாக்குவார்.
  17. ராஜம் கிருஷ்ணன் எழுதிய இலக்கிய வடிவங்கள் எவை?
    1. புதினங்கள்
    2. சிறுகதைகள்
    3. கட்டுரைகள்
    4. குறுநாவல்
    5. குழந்தை இலக்கியம்
    6. வரலாற்று நூல்
  18. அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டும் புதினங்கள் எவை?
    1. சேற்றில் மனிதர்கள்
    2. வேருக்கு நீர்
  19. கூட்டுக் குஞ்சுகள் புதினம் எதைப் பற்றியது?
    • குழந்தைகள் தீப்பெட்டித் தொழிலில் முடங்கி, தீக்குச்சிகளை அந்தப் பெட்டியில் அடைப்பதைப் போன்று குழந்தைகளின் உடலையும் மனத்தையும் நொறுக்கும் அவல உலகைக் 'கூட்டுக் குஞ்சுகள்' புதினமாகக் காட்டுகிறது
  20. 'மண்ணகத்துப் பூந்துளிகள்' புதினத்தின் கதைக் களம் யாது?
    • பெண்குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதியதே 'மண்ணகத்துப் பூந்துளிகள்'
  21. ராஜம் கிருஷ்ணனின் வேண்டுகோள் யாது? எழுத்துக்களில் நேர்மையான சினம், அறச்சீற்றம் இருக்க வேண்டும்
  22. குறிஞ்சித்தேன் புதினத்தின் கதைக்களம் யாது? நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்ததே 'குறிஞ்சித்தேன்' புதினமாகும்.
  23. கரிப்பு மணிகள் புதினம் யாருடைய வாழ்க்கை பற்றியது? தூத்துக்குடியில் வாழும் உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையை 'கரிப்பு மணிகள்' புதினம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
  24. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பெற்ற விருதுகள் யாவை?
    1. இந்திய அரசின் தாமரைத் திரு விருது
    2. ஸ்வீடன் அரசின் வாழ்வுரிமை விருது
    3. சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது
  25. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஈடுபட்ட விடுதலைப் போராட்டங்கள் எவை?
    1. ஒத்துழையாமை இயக்கம்
    2. சட்டமறுப்பு இயக்கம்
    3. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  26. இந்திய விடுதலைக்குப் பின்பு கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் செய்த சேவை யாது?
    1. கணவருடன் இணைந்து பூதான இயக்கத்தில் பணிபுரிந்தார்
    2. 'உழுபவருக்கே நில உரிமை இயக்கம்' தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்
  27. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் சொல்ல விரும்பும் செய்தி யாது?
    • உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்.
  28. மதுரை சின்னப்பிள்ளை தொடங்கிய 'களஞ்சியம்' பற்றி எழுதுக.
    • பத்து பேரோடு ஆரம்பித்த மகளிர் குழு, இன்று பல மாநிலங்களில் கிளைவிட்டுப் பல லட்சம் பேருடன் இயங்கி வருகிறது. 30 ஆண்டுகளாக முகம் சுளிக்காமல் சின்னப்பிள்ளை பணியாற்றி வருகிறார்.
  29. மதுரை சின்னப்பிள்ளை பெற்ற விருதுகள் யாவை?
    1. பெண் ஆற்றல் விருது
    2. ஔவை விருது
    3. பொதிகை விருது
    4. தாமரைத்திரு விருது
  30. மதுரை சின்ன பிள்ளையின் மகளிர் குழு செய்த பணி யாது?
    1. பெண்களெல்லாம் குழுவாக சேர்ந்தனர்
    2. விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தனர்
    3. நடவு, களையெடுப்பு, அறுவடை போன்ற வேலைகளைச் செய்தனர்.
    4. வருகிற கூலியைச் சரிசமமாகப் பிரித்தனர்
    5. இதில் வயதானவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்து வேலை கொடுத்தனர்
    6. அவர்கள் குடும்பத்திற்கும் உதவியாக இருந்தனர்.
  31. மதுரை சின்னப்பிள்ளை இந்தியாவின் முதன்மை அமைச்சரிடம் விருது பெற்ற நிகழ்வைக் கூறுக
    • டெல்லியில் விருது வழங்கும் நிகழ்வின்போது, இந்தியாவின் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாய் அவர்கள் சின்னப் பிள்ளையின் காலில் விழுந்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சின்னப்பிள்ளையின் உடல் நடுங்கி, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

மங்கையராய்ப் பிறப்பதற்கே 1 மதிப்பெண் வினாக்கள்

  1. தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐநா அவையில் பரப்பும் வகையில் அங்கு தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர் யார்? எம்எஸ் சுப்புலட்சுமி
  2. 'காற்றினிலே வரும் கீதமாய்' மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் யார்? எம் எஸ் சுப்புலட்சுமி
  3. இசைப் பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் யார்? எம்எஸ் சுப்புலட்சுமி
  4. எம் எஸ் சுப்புலட்சுமி பெயர் விரிவாக்கம் தருக. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
  5. எம் எஸ் சுப்புலட்சுமிக்கு முதல் குரு யார்? எம் எஸ் சுப்புலட்சுமியின் தாயார்
  6. எம் எஸ் சுப்புலட்சுமியின் தாயார் எவ்வகை இசைக் கலைஞர்? வீணை
  7. எம் எஸ் சுப்புலட்சுமி எந்த வகுப்பு வரை கல்வி கற்றார்? ஐந்தாம் வகுப்பு
  8. எம்எஸ் சுப்புலட்சுமி எந்த வயதில் சென்னை மியூசிக் அகடமியில் கச்சேரி செய்தார்? 17
  9. எம் எஸ் சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் எது? மீரா
  10. எம் எஸ் சுப்புலட்சுமியின் கடைசி திரைப்படம் எது? மீரா
  11. எம் எஸ் சுப்புலட்சுமிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த பாடல்கள் எவை? காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன்
  12. எம் எஸ் சுப்புலட்சுமி எதைப் பெருமையாக கருதினார்? ஜவர்கலால் நேரு, சரோஜினி நாயுடு போன்ற பெரியவர் பாராட்டியதை...
  13. எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய பாடல்களில் எந்தப் பாடலை காந்தியடிகள் பாராட்டினார்? ரகுபதி ராகவ ராஜாராம்
  14. காந்தியடிகள் எம்எஸ்சுப்புலட்சுமியிடம் எந்தப் பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார்? ஹரி தும் ஹரோ
  15. ஹரி தும் ஹரோ பாடல் சென்னை வானொலியில் எந்த ஆண்டு ஒளிபரப்பானது? 1947 காந்தி அடிகள் பிறந்த நாள் அன்று.
  16. எந்த ஆண்டு எம்எஸ் சப்புலட்சுமி தாமரையணி விருது பெற்றார்? 1954
  17. எந்த ஆண்டு எம்எஸ்சுப்புலட்சுமி ஹெலன் கெல்லரால் பாராட்டு பெற்றார்?1963
  18. எந்த ஆண்டு எம்எஸ் சப்புலட்சுமி ஐநா சபையில் பாடினார்? 1966
  19. எந்த ஆண்டு முதல் எம்எஸ் சுப்புலட்சுமியின் குரல் திருப்பதியில் ஒலித்தது? 1966
  20. எந்த ஆண்டு எம்எஸ்சுப்புலட்சுமிக்கு மகசேசே விருது வழங்கப்பட்டது? 1974
  21. மகசேசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்? எம்எஸ் சுப்புலட்சுமி
  22. இந்திய மாமணி விருது  எம் எஸ் சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்ட ஆண்டு எது? 1998
  23. இந்தியாவின் மிக உயரிய விருது எது? இந்திய மாமணி
  24. பொதுவெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டு இருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர் யார்? பாலசரஸ்வதி
  25. பாலசரஸ்வதி இந்திய அரசு வழங்கிய விருது எது? தாமரைச் செவ்வணி
  26. சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடன நிகழ்ச்சியைப் பாலசரஸ்வதி தொடங்கியபோது வயது என்ன? 15
  27. மரபுசார் நாட்டியத்தை பலரும் தீவிரமாக வரவேற்கக் காரணமாக இருந்தவர் யார்? பாலசரஸ்வதி
  28. 'ஜன கண மன' பாடலை பாலசரஸ்வதி மெய்ப்பாடுகளுடன் எங்கெங்கு நடனமாடியுள்ளார்? கல்கத்தாவிலும் காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாடு மற்றும் சென்னையில் நடந்த இந்தியத் தேசியக் காங்கிரஸ் கண்காட்சி.
  29. பரத நாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தவர் யார்? பாலசரஸ்வதி
  30. எந்தக் கலையை முறையாக அணுகினால் ஆன்மீகப் பட்டறிவை நடனத்தால் வழங்க முடியும்? பரதநாட்டியக் கலை
  31. தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாகச் செவ்வியல் நடனம் திகழக் காரணமாக இருந்தவர் யார்? பாலசரஸ்வதி
  32. தமிழில் எழுதிய பெண்களில் முதல் முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டி கதைகள் எழுதியவர் யார்? ராஜம் கிருஷ்ணன்
  33. ராஜம் கிருஷ்ணனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது? வேருக்கு நீர்
  34. ராஜம் கிருஷ்ணன் எழுதிய பாரதியின் வரலாற்று புதினம் எது? பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
  35. தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைச் சொல்லும் புதினம் எது? கரிப்பு மணிகள்
  36. நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து பதிவு செய்த புதினம் எது? குறிஞ்சித் தேன்
  37. கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களை பேசும் புதினம் எது? அலைவாய்க் கரையில்
  38. அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டும் புதினங்கள் எவை? சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர்
  39. தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய புதினம் எது? கூட்டுக் குஞ்சுகள்
  40. பெண் குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட புதினம் எது? மண்ணகத்துப் பூந்துளிகள்
  41. ராஜம் கிருஷ்ணனின் வேண்டுகோள் யாது? எழுத்துக்களில் நேர்மையான சினம், அறச்சீற்றம் இருக்க வேண்டும்.
  42. மதுரையின் முதல் பட்டதாரி பெண் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  43. சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  44. சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது பெற்றவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  45. நாட்டின் விடுதலைக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் போராடிக் கல்வி கற்றவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  46. உழுபவனுக்கே நிலம் உரிமை இயக்கம் தொடங்கியவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  47. "உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்" என்பது யாருடைய கூற்று? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  48. காந்திய சிந்தனைகளால் ஈர்கப்பட்டு கணவருடன் பூதான இயக்கத்தில் இணைந்து பணிபுரிந்தவர் யார்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
  49. களஞ்சியம் என்பது யாது? மகளிர் சுய உதவிக் குழு
  50. 2018இல் தமிழக அரசின் ஔவை விருது பெற்றவர் யார்? சின்னப்பிள்ளை
  51. சின்னப்பிள்ளை இந்திய நாட்டின் முதன்மை அமைச்சரிடம் இருந்து பெற்ற விருது யாது? பெண் ஆற்றல் விருது

சங்க இலக்கியத்தில் அறம் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. வெட்சித் திணை என்றால் என்ன?
    • மக்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில் ஆநிரைகளைச் சொத்தாக கருதினர்
    • ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது
    • ஆநிரை கவர்ந்து வர வெட்சிப் பூவைச்சூடிக் கொண்டு செல்வர்
    • எனவே, ஆநிரை கவர்தல் வெட்சித்திணை எனப்பட்டது.
  2. கரந்தைத் திணை என்றால் என்ன?
    1. கவர்ந்து செல்லப்பட்ட தன் ஆநிரைகளை மீட்கச் செல்லும்போது கரந்தைப் பூவைச் சூடிக்கொள்வர்
    2. அதனால் கரந்தைத்திணை என்று பெயர் பெற்றது
  3. வஞ்சித் திணை என்றால் என்ன?
    1. மண் சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று
    2. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப் பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித் திணை ஆகும்.
  4. காஞ்சித் திணை என்றால் என்ன?
    • தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப் பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித் திணை ஆகும்
  5. நொச்சித் திணை என்றால் என்ன?
    • மண்ணைக் காக்க கோட்டைகள் கட்டப்பட்டன
    • கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகை அரசனோடு நொச்சிப் பூவைச் சூடி உள்ளிருந்தே போரிடுவது நொச்சித் திணை
  6. உழிஞைத் திணை என்றால் என்ன?
    • மாற்றார் அரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத் திணையாகும்
  7. தும்பைத் திணை என்றால் என்ன?
    1. பகை வேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட தன் வீரர்களுடன் தும்பைப் பூவைச் சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத்திணை
    2. போர்புரிகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப்பூ மாலையையே சூடி இருப்பார்கள்
  8. வாகைத் திணை என்றால் என்ன?
    • போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப் பூவைச் சூடி மகிழ்வது வாகைத் திணை
  9. பாடாண் திணை என்றால் என்ன?
    • பாடுவதற்குத் தகுதி உடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை
  10. பொதுவியல் திணை என்றால் என்ன?
    • வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளுள் பொதுவானவைப் பற்றியும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
  11. பெருந்திணை என்றால் என்ன? பொருந்தாக் காமத்தைக் குறிப்பது பெருந்திணை ஆகும்
  12. கைக்கிளை என்றால் என்ன? கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்.
  13. வெட்சிப்பூ குறிப்பு வரைக
    1. அழகுச் செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்ற சிவந்த நிறமுடையது வெட்சிப் பூ
    2. இது இட்லிப்பூ என்று அழைக்கப்படுகிறது
  14. கரந்தைப் பூ குறிப்பு வரைக
    1. சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக்கூடிய கரந்தை ஒரு சிறிய செடி
    2. இது செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கின்றது
    3. இதனைக் கொட்டைக்கரந்தை என்றும் கூறுவர்
  15. வஞ்சிப் பூ குறிப்பு வரைக
    • பளபளப்பான மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்து உள்ளது
  16. காஞ்சிப் பூ குறிப்பு வரைக
    1. கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீல நிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள பூ
    2. இது ஒருவகைக் குறுமரம்
  17. நொச்சிப் பூ குறிப்பு வரைக
    1. மருத நிலத்துக்குரிய நொச்சி கொத்து கொத்தான நீலநிற பூக்கள் கொண்டது
    2. இது மணி நொச்சி, கரு நொச்சி, மலை நொச்சி, வெள்ளை நொச்சி எனப் பல வகைகள் உள்ளன
  18. உழிஞைப்பூ குறிப்பு வரைக
    1. வேலிகளில் ஏறிப் படரும் நீண்ட கொடி உழிஞைக்கொடி
    2. இதன் கூட்டிலைகளும் மலர்களும் சிறியவை
    3. மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
    4. இதனை முடக்கத்தான் எனக் கூறுகின்றனர்
  19. தும்பைப்பூ குறிப்பு வரைக
    • எல்லா இடங்களிலும் வளரக்கூடிய தூய வெள்ளை நிற மலர்களைக் கொண்ட சிறிய செடி தும்பை.
  20. வாகைப்பூ குறிப்பு வரைக
    1. மங்கிய வெள்ளை நிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் பூ