- கிராமத்து விருந்தோம்பல் எத்தகையது?
- பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கின்ற நேயம் கிராமத்து விருந்தோம்பல் ஆகும்
- கோபல்லபுரத்து மக்கள் கதையில் கொத்தாளியின் கூற்று யாது?
- வரட்டும் வரட்டும்; ஒரு வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்.
- லாட சன்னியாசிகள் வேட்டி கட்டி இருக்கும் விதத்தை கூறு.
- இடுப்பை மறைத்த வேட்டி அதன் இரண்டு சொருகுநுனிகளும் குறுக்க மறுக்க மார்பின் மேல் ஏறிப் பிடரியில் வந்து முடிச்சாகி இருக்கும்.
- வேட்டியே வேட்டியும் மேல்வேட்டியுமாக இருக்கும்
- அன்னமய்யாவின் கூட வந்தவனின் தோற்றம் யாது?
- தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமும் வயோதிகன் போலவும் சாமியாரைப் போலவும் இருந்தது.
- ஆனால் அவன் இளைஞன். அவன் கண்களில் தீட்சண்யம் தெரிந்தது.
- வாலிபன் அன்னமய்யாவிடம் என்ன கேட்டான்?
- தம்பி, கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?
- கலயங்களின் வாய் எதன்கொண்டு மூடப்பட்டிருந்தது?
- தேங்காய் பருமனுள்ள கற்கள் கொண்டு மூடப்பட்டிருந்தது
- கரிசல் இலக்கியம் பற்றிக் குறிப்பு வரைக
- கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம் ஆகும்.
- காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கின்ற மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.
- கரிசல் இலக்கியத்தை முதலில் எழுதியவர் கு. அழகிரிசாமி
- கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்
- கரிசல் இலக்கியப் பரம்பரை யாவர்?
- பா செயப்பிரகாசம்
- பூமணி
- வீர வேலுச்சாமி
- சோ தர்மன்
- வேல ராமமூர்த்தி, இன்னும் பலர்
- இளைஞனின் பெயர் என்ன? அவன் தன்னை எவ்வாறு கூப்பிடச் சொன்னான்?
- பரமேஸ்வரன்
- மணி
- கோபல்லபுரத்து மக்கள் - குறிப்பு வரைக
- கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள்
- இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
- இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது
- 1991ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமி பரிசு பெற்றது
- கி.ராஜநாராயணன் குறிப்பு வரைக.
- 20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்
- இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்
- இவரின் கதைகள் அனைத்தும் 'கி ராஜநாராயணன் கதைகள்' எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன
- "கரிசல் வட்டாரச் சொல் அகராதி" ஒன்றை உருவாக்கியுள்ளார்
- இவர் தொடங்கிய வட்டார மரபு புனைகதைகள் 'கரிசல் இலக்கியம்' என்று அழைக்கப்படுகிறது
- எழுத்துலகில் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்
Tuesday, March 29, 2022
கோபல்லபுரத்து மக்கள் 2 மதிப்பெண் வினாக்கள்
தொகாநிலைத்தொடர்கள் 2 மதிப்பெண் வினாக்கள்
- தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.
- ஒரு தொடரில் இரு சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து நிற்காமல், அப்படியே பொருள் தருவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
- எ.கா. காற்று வீசியது
- தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும். அவை,
- எழுவாய்த் தொடர்
- விளித்தொடர்
- வினைமுற்றுத் தொடர்
- பெயரெச்சத் தொடர்
- வினையெச்சத் தொடர்
- வேற்றுமைத் தொடர்
- இடைச்சொல் தொடர்
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத் தொடர்
- தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும். அவை,
- எழுவாய்த்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- எழுவாயுடன் பயனிலைகள் தொடர்வது எழுவாய்த் தொடராகும்
- பயனிலைகள் பெயர், வினை, வினா என மூவகைப்படும்
- எ.கா. காவிரி பாய்ந்தது
- விளித்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- விளிச்சொல்லை அடுத்து வினைச்சொல் தொடர்வது விளித்தொடராகும்.
- எ.கா. நண்பா எழுது!
- வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- வினைமுற்றை அடுத்து பெயர்ச்சொல் தொடர்வது வினைமுற்றுத் தொடர் ஆகும்
- எ.கா. பாடினாள் கண்ணகி
- பெயரெச்சத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- எச்சவினை, பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் ஆகும்
- எ.கா. கேட்ட பாடல்
- வினையெச்சத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- எச்சவினை, வினையைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் ஆகும்
- எ.கா. பாடி மகிழ்ந்தனர்
- வேற்றுமைத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர் வேற்றுமைத் தொடர் ஆகும்
- எ.கா. கட்டுரையைப் படித்தாள்
- இத்தொடரில் 'ஐ' என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
- "அன்பால் கட்டினார்" என்பது எவ்வகைத் தொகாநிலைத் தொடர் ஆகும்?
- அன்பால் கட்டினார்-இத்தொடரில் 'ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்து பொருளை உணர்த்துகிறது.
- எனவே, இது மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்
- "அறிஞருக்குப் பொன்னாடை" என்பது எவ்வகைத் தொகாநிலைத்தொடர் ஆகும்?
- அறிஞருக்குப் பொன்னாடை-இத்தொடரில் 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்து பொருளை உணர்த்துகிறது.
- எனவே, இது நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.
- இடைச்சொல் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- இடைச்சொல்லை அடுத்து பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடராகும்
- எ.கா. மற்றொன்று
- 'மற்று' என்னும் இடைச்சொல்லை அடுத்து 'ஒன்று' என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
- உரிச்சொல் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- உரிச்சொல்லை அடுத்து பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்
- எ.கா. சாலச் சிறந்தது
- அடுக்குத்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும்
- எ.கா. வருக! வருக! வருக!
- கூட்டுநிலைப் பெயரெச்சம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.
- ஒன்றிற்கு மேற்பட்ட எச்சவினைகள், பெயரைக் கொண்டு முடிவது கூட்டுநிலைப் பெயரெச்சம் ஆகும்
- 'செய' என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை அடுத்து "வேண்டிய, கூடிய, தக்க, வல்ல" முதலான பெயரெச்சங்கள் தொடர்வது கூட்டுநிலைப் பெயரெச்சம் ஆகும்.
- எ.கா. கேட்க வேண்டிய பாடல்
- 'சொல்லத் தக்க செய்தி'- எவ்வாறு கூட்டு நிலைப் பெயரெச்சமாகிறது எனக் காட்டு.
- சொல்லத் தக்க செய்தி- இதில் 'சொல்ல' என்பது 'செய' என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஆகும்.
- 'தக்க செய்தி' என்பது பெயரெச்சம் ஆகும்.
- 'செய' என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்தை அடுத்து பெயரெச்சம் தொடர்ந்து வந்துள்ளதால், இது 'கூட்டு நிலைப் பெயரெச்சம்' ஆகிறது.
- இறங்கினார் முகமது- என்பது எவ்வகைத் தொகாநிலைத் தொடர் ஆகும்?
- இறங்கினார் முகமது - இதில் 'இறங்கினார்' என்னும் வினைமுற்றை அடுத்து 'முகமது' என்னும் பெயர் தொடர்ந்து வந்துள்ளது.
- இவ்வாறு வினைமுற்றை அடுத்து பெயர் தொடர்வது வினைமுற்றுத் தொடர் ஆகும்
- அவர் பாடகர்-இது எவ்வகைத் தொகாநிலைத்தொடர் எனக் காட்டு.
- அவர் பாடகர்- 'அவர்' என்பது எழுவாய். 'பாடகர்' என்பது பயனிலை.
- எழுவாயை அடுத்து பயனிலை தொடர்ந்து வருவது எழுவாய்த் தொடர் ஆகும்.
- பாடுவதும் கேட்பதும்-எவ்வகை தொகாநிலைத்தொடர் எனக் காட்டு.
- பாடுவதும் கேட்பதும்- இதில் 'உம்' என்னும் இடைச்சொல்லை அடுத்து வினைச்சொல் வந்துள்ளது.
- இடைச்சொல்லை அடுத்து பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடராகும்.
- கேட்ட பாடல்கள், கேட்காத பாடல்கள்- இவை எவ்வகைத் தொகாநிலைத்தொடர் எனக் காட்டு.
- கேட்ட பாடல்கள்-இதில் 'கேட்ட' என்னும் எச்சவினை, 'பாடல்கள்' என்னும் பெயரைக்கொண்டு தொடர்ந்து வந்துள்ளதால், இது பெயரெச்சத் தொடராகும்.
- கேட்காத பாடல்கள்- இதில் 'கேட்காத' என்னும் எச்சவினை, 'பாடல்கள்' என்னும் பெயரைக்கொண்டு தொடர்ந்து வந்துள்ளதால் இது பெயரெச்சத் தொடர் ஆகும். இதில் 'கேட்காத' என்னும் எதிர்மறைச் சொல் வந்துள்ளதால், இது 'எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்' ஆகும்.
- அடுக்கு அடுக்காக, பழகப் பழக-என்னும் தொடர்கள் எவ்வகைத் தொகாநிலைத் தொடர் எனக் கூறு.
- அடுக்கு அடுக்காக- இதில் 'அடுக்கு' என்னும் சொல் இரண்டு முறை அடுக்கி வந்துள்ளதால், இது அடுக்குத்தொடர் ஆகும்.
- பழகப்பழக-இதில் 'பழக' என்னும் சொல் இரண்டு முறை அடுக்கி வந்துள்ளதால், இது அடுக்குத்தொடர் ஆகும்.
- வந்தார் அண்ணன்-எவ்வகைத் தொடர்?
- வந்தார் அண்ணன்-'வந்தார்' என்னும் வினைமுற்று 'அண்ணன்' என்னும் பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.
- இவ்வாறு வினைமுற்றுச் சொல் பெயரைக் கொண்டு முடிவது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
- வடித்த கஞ்சி, நன்றாகப் பேசினான்-இவை எவ்வகைத் தொகாநிலைத் தொடர்கள் என்று கூறு.
- வடித்த கஞ்சி- இதில் 'வடித்த' என்னும் எச்சவினை, 'கஞ்சி' என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளதால், இது பெயரெச்சத் தொடர் ஆகும்.
- நன்றாகப் பேசினான்- இதில் 'நன்றாக' என்னும் எச்சவினை, 'பேசினான்' என்ற வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளதால், இது வினையெச்சத் தொடர் ஆகும்
- கவிதைகளின் தொகுப்பு-இது எவ்வகைத் தொகாநிலைத் தொடர்?
- கவிதைகளின் தொகுப்பு-இதில் 'இன்' என்னும் வேற்றுமை உருபு வெளிப்பட வந்து பொருள் உணர்த்தியமையால், இது வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.
இயல் 3 திருக்குறள்-இரண்டு மதிப்பெண் வினாக்கள்
- ஒழுக்கத்தை ஏன் உயிரை விட மேலானதாகக் கருதி காக்க வேண்டும்?
- ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால்...
- ஒழுக்கம் உடையவர் எந்த நிலையை அடைவர்? ஒழுக்கம் இல்லாதவர் எந்த நிலையை அடைவர்?
- ஒழுக்கம் உடையவர் மேன்மை அடைவர்
- ஒழுக்கம் இல்லாதவர் அடையக் கூடாத பழியை அடைவர்
- யார் பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுவார்?
- நல்ல பண்புகளை உடைய உயர்ந்தாரோடு ஒத்து வாழக் கல்லாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுவார்
- அறிவு எனப்படுவது எது?
- எந்தப் பொருள் எந்த இயல்பானதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
- எப்போது ஆசை, சினம், அறியாமை ஆகியவற்றால் வரும் துன்பம் அழியும்?
- ஆசை, சினம், அறியாமை அழியும்போது அவற்றால் வரும் துன்பமும் அழியும்
- அரியவற்றுள் எல்லாம் அரியது எது?
- பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே அரியவற்றுள் எல்லாம் அரியது.
- எப்படிப்பட்ட மன்னன் தானே அழிவான்?
- குற்றம் கண்ட பொழுது இடித்துக் கூறும் பெரியாரின் துணை இல்லாத மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான்.
- பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது எது?
- நற்பண்பு உடையவரின் நட்பை கைவிடுவது...
- கள்வன் வழிப்பறி செய்வதற்கு நிகரான செயல் எது?
- அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு 'முறையற்ற வரி' விதிப்பது, ஆயுதங்களைக் காட்டி கள்வன் வழிப்பறி செய்வதற்கு நிகரானது.
- எப்படிப்பட்ட மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழப்பான்?
- தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன், தன் நாட்டை நாள்தோறும் இழப்பான்.
- இரக்கமில்லாத கண்கள் எதனுடன் ஒப்பிடப்படுகிறது?
- பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை.
- அதுபோல, இரக்கமில்லாத கண்களால் பயனில்லை.
- இந்த உலகம் யாருக்கு உரிமையானது?
- நடுவுநிலைமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இந்த உலகம் உரிமை உடையதாகும்.
- யார், பிறர் நன்மை கருதி நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவார்?
- விரும்பத்தகுந்த இரக்க இயல்பு கொண்டவர், பிறர் நன்மை கருதி நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவார்.
- பெருமை தருவது எது?
- ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எண்ணிச் சோர்வு அடையாமல் இருக்க வேண்டும்
- அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.
- யாரால் பிறருக்கு உதவ முடியும்?
- விடாமுயற்சி என்னும் உயர்பண்பு கொண்டவர்களால்தான் பிறருக்கு உதவ முடியும்.
- யாரிடம் செல்வம் பெருகும்? யாரிடம் வறுமை வந்து சேரும்?
- முயற்சி உடையவரிடம் செல்வம் பெருகும்
- முயற்சியே இல்லாதவரிடம் வறுமையே வந்து சேரும்.
- இழிவு இல்லாதது எது? இழிவானது எது?
- ஐம்புலன்களில் ஏதேனும் குறை இருந்தால், அது இழிவன்று.
- அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவாகும்.
- யாரால் முன்வினையைத் தோற்கடித்து வெற்றி பெற இயலும்?
- சோர்வு இல்லாது முயற்சி செய்பவரால், முன்வினையைத் தோற்கடித்து வெற்றி பெற இயலும்.
- யாருடைய செல்வத்தால் பயன் இல்லை?
- பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவரிடம் உள்ள செல்வத்தால் பயன் ஏதுமில்லை.
- பிறருக்கு உதவி செய்யாதவன் பெற்ற செல்வம் எதைப் போன்றது?
- ஊரின் நடுவே நச்சுமரம் பழுத்தது போன்றது.
- வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு-இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
- உவமை அணி
- பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்-இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
- எடுத்துக்காட்டு உவமையணி
- நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று-இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
- உவமை அணி.
எழுத்து சொல் 2 மதிப்பெண் வினாக்கள்
- இலக்கணத்தின் பயன் யாது?
- மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவுகிறது
- மொழியின் சிறப்புகளை அறிய உதவுகிறது
- சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஒளகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
- சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
- அளபெடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- அளபெடைகள் இரண்டு வகைப்படும். அவை,
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- அளபெடைகள் இரண்டு வகைப்படும். அவை,
- அளபெடையின் பயன் யாது?
- உணர்வை வெளிப்படுத்துவதற்கும்...
- இனிய ஓசையைத் தருவதற்கும்...
- உயிரளபெடை என்றால் என்ன?
- செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்.
- அவ்விடங்களில் நெடில் எழுத்துக்களின் இனமான குறில் எழுத்துக்கள் அவற்றின் பின்னால் வரும்.
- உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை.
- உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
- செய்யுளிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்கிறோம்
- எ.கா.
- ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்-மொழி முதலில் அளபெடுத்தது
- உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅர்க்கு வாழிய நெஞ்சே-மொழி இடையில் அளபெடுத்தது
- நல்ல படாஅ பறை-மொழி இறுதியில் அளபெடுத்தது
- இன்னிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
- எ.கா. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை
- சொல்லிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஒரு பெயர்ச்சொல், எச்சச் சொல்லாகத் திரிந்து அளவெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்
- எடுத்துக்காட்டு
- உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்
- நசை- விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என்று அளவு எடுத்தது. பெயர்ச்சொல் வினையடையாக மாறியது.
- ஒற்றளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துக்கள் பத்தும் ( ஞ ண ந ம ன ய ல வ ள) ஆய்த எழுத்தும் அளவெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
- எடுத்துக்காட்டு:
- எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர் வெஃஃ குவார்க்கில்லை வீடு
- சொல் என்றால் என்ன?
- ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்
- சொல்லின் பண்புகளைக் குறிப்பிடுக
- இருதிணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்
- மூவகை இடங்களிலும் வரும்
- உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்
- வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்
- மூவகை மொழிகள் யாவை?
- தனிமொழி
- தொடர்மொழி
- பொதுமொழி
- தனிமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனி மொழி எனப்படும்
- எ.கா. கண், படி
- பதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? எடுத்துக்காட்டு தருக.
- பதம் இரண்டு வகைப்படும். அவை,
- பகுபதம்
- எ.கா. கண்ணன், படித்தான்
- பகாப்பதம்
- எ.கா. கண், படி
- பகுபதம்
- பதம் இரண்டு வகைப்படும். அவை,
- தொடர் மொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழியாகும்
- எ.கா. கண்ணன் வந்தான்.
- பொதுமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
- எடுத்துக்காட்டு: எட்டு
- 'எட்டு' தனித்து நின்று 8 என்ற எண்ணைக் குறிக்கும்
- 'எட்டு'=எள்+து-->எனத் தொடர் மொழியாகப் பிரிந்து நின்று 'எள்ளை உண்' என்று பொருள் தருகிறது
- இவ்வாறு தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால், இது பொதுமொழி ஆகிறது
- வேங்கை எவ்வாறு பொது மொழியாகிறது?
- வேங்கை- தனித்து நின்று மரத்தைக் குறிக்கிறது
- 'வேம்+கை' எனப் பிரிந்து நின்று 'வேகின்ற கை' என்று பொருள் தருகிறது.
- இவ்வாறு தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால், இது பொதுமொழி ஆகிறது
- தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
- எ.கா. ஈதல், நடத்தல்
- விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
- வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
- நட+தல்=நடத்தல்
- எதிர்மறைத் தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர் ஆகும்.
- எ.கா. நடவாமை, கொல்லாமை
- முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயர் ஆதல் முதல்நிலைத் தொழிற்பெயர் ஆகும்.
- எடுத்துக்காட்டு: தட்டு, உரை, அடி. இவை முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும்போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.
- முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- விகுதி பெறாமல் முதல்நிலை திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
- எ.கா. கெடு- கேடு, சுடு-சூடு
- வினையாலணையும் பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்
- எ.கா. வந்தவர் அவர்தான்.
- தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
பெருமாள் திருமொழி 2 மதிப்பெண் வினாக்கள்
- சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்து இருக்கக் காரணம் என்ன?
- தமிழர், பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருப்பதால்...
- சங்க இலக்கியத்திற்கு இணையாக எவ்வகை இலக்கியங்களில் அறிவியல் கருத்துக்கள் காணப்படுகின்றன?
- பக்தி இலக்கியங்களில்...
- குலசேகர ஆழ்வார், இறைவனை வழிபடுவதற்குக் கூறும் உவமை யாது?
- மருத்துவர், உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
- குலசேகர ஆழ்வார், இறைவனை எவ்வாறு வழிபடுகிறார்?
- மருத்துவர், உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
- வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள அன்னையே! அதுபோன்று உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தைக் எனக்குத் தந்தாலும், அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.
- வித்துவக்கோட்டு இறைவனைப் பற்றிக் கூறு.
- வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.
- குலசேகர ஆழ்வார், வித்துவக்கோட்டு இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியுள்ளார்.
- பெருமாள் திருமொழி -குறிப்பு வரைக.
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது
- 105 பாடல்கள் உள்ளன
- பாடியவர்: குலசேகர ஆழ்வார்
- காலம்: எட்டாம் நூற்றாண்டு.
இலக்கணம் பொது 2 மதிப்பெண் வினாக்கள்
- திணை என்றால் என்ன? உயர்திணை என்றால் என்ன? அஃறிணை என்றால் என்ன?
- திணை என்பது ஒழுக்கம் ஆகும்
- உயர்திணை என்பது உயர்ந்த ஒழுக்கம் உடைய மனிதர்களைக் குறிக்கும்.
- அஃறிணை என்பது ஒழுக்கமில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்
- பால் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- பால் என்பது திணையின் உட்பிரிவு
- பால் ஐந்து வகைப்படும். அவை,
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்.
- உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
- ஒன்றன்பால்
- பலவின்பால்
- ஒன்றன்பால் என்றால் என்ன?
- அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்
- பலவின்பால் என்றால் என்ன?
- அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
- இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- இடம் மூன்று வகைப்படும். அவை,
- தன்மை
- முன்னிலை
- படர்க்கை
- இடம் மூன்று வகைப்படும். அவை,
- தன்மைப் பெயர்கள் யாவை?
- நான், யான், நாம், யாம்...
- முன்னிலைப் பெயர்கள் யாவை?
- நீ, நீர், நீவிர், நீங்கள்
- படர்க்கைப் பெயர்கள் யாவை?
- அவன், அவள், அவர்
- அது, அவை...
- வழாநிலை என்றால் என்ன?
- இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்
- வழு என்றால் என்ன?
- இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
- வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- வழு ஏழு வகைப்படும் அவை,
- திணை வழு
- பால் வழு
- இட வழு
- கால வழு
- வினா வழு
- விடை வழு
- மரபு வழு
- வழு ஏழு வகைப்படும் அவை,
- செழியன் வந்தது, கண்ணகி உண்டான், நீ வந்தேன், நேற்று வருவான்- இவை எவ்வகை வழுக்கள் என்று கூறு?
- செழியன் வந்தது-திணை வழு
- கண்ணகி உண்டான்-பால் வழு,
- நீ வந்தேன்-இட வழு,
- நேற்று வருவான்-கால வழு
- ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்- எவ்வகை வழு?
- வினா வழு
- 'கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்கு, 'கண்ணாடி பைக்குள் இருக்கிறது' என்று விடை அளித்தல்-எவ்வகை வழு?
- விடை வழு
- தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந் தோட்டம் என்று கூறுதல் -எவ்வகை வழு?
- மரபு வழு
- வழுவமைதி என்றால் என்ன?
- இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்
- திணை வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக?
- "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும்
- இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது
- பால் வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
- "வாடா ராஜா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது, பால் வழுவமைதி ஆகும்.
- இங்கு உவப்பின் காரணமாக பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
- இடவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இட வழுவமைதி ஆகும்.
- காலவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்
- இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாக கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித் தன்மையை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
- மரபு வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- "கத்தும் குயிலோசை- சற்றே வந்து காதிற் படவேணும்"-பாரதியார்
- குயில் கூவும் என்பதே மரபு. குயில் கத்தும் என்பது மரபு வழு.
- இங்குக் கவிதையில் இடம் பெற்று இருப்பதால் இது மரபுவழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- "அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்" என்பது எவ்வகை வழுவமைதி எனக் காட்டு.
- இத்தொடர், "அமைச்சர் நாளை விழாவிற்கு வருவார்" என்று அமைதல் வேண்டும்.
- அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை.
- ஏனெனில், அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
- "இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான். -இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
- இத்தொடர், கண்ணன் என்பவர் தனக்குத் தானே கூறிக்கொண்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.
- தன்னைத் தன்மையிடத்தில் கூறுவதற்குப் பதிலாக படர்க்கை இடத்தில் கூறியுள்ளார்.
- இவ்வாறு கூறுவது இலக்கண ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதால், இது இடவழுவமைதியாகும்.
- சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்-இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
- "சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடினோம்" என்று வந்திருக்க வேண்டும்.
- இறந்தகாலம் வருவதற்குப் பதிலாக எதிர்காலம் வந்துள்ளது.
- எனவே, இது கால வழுவமைதி ஆகும்.
- செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.-இது எவ்வகை வழுவமைதி என்று கூறு.
- இத்தொடர், "செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறான்" என்று வந்திருக்க வேண்டும்.
- ஆண்பால் வருவதற்குப் பதிலாகப் பலர்பால் வந்துள்ளது.
- எனவே, இது 'பால் வழுவமைதி' ஆகும்.
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. தந்தை, "மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா" என்று சொன்னார். (ஆண்பாற் பெயர்களை பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக)
- தாய், "மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா" என்று சொன்னார்.
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
- அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பினார்
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. "இதோ முடித்து விடுவேன்" என்பது செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
- இதோ முடித்து விட்டேன்
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையை படர்க்கையாக மாற்றுக)
- நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக?
- குழந்தை அழுகிறது, பார்.
நீதி வெண்பா 2 மதிப்பெண் வினாக்கள்
- "கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது? "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது?
- கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -சங்க இலக்கியம்
- "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -திருக்குறள்
- அறிவு பெறுவது எவ்வாறு?
- பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல, நூல்களை நாடிச்சென்று அறிவு பெற வேண்டும்.
- கல்வியின் பயன் யாது?
- அருளைப் பெருக்குவது
- அறிவைச் சீராக்குவது
- மயக்கம் அகற்றுவது
- அறிவுக்குத் தெளிவு தருவது
- உயிருக்கு அரிய துணையாய் இருப்பது
- இன்பம் சேர்ப்பது
- கல்வியை ஏன் கற்க வேண்டும்?
- அருளைப் பெருக்குவதால்
- அறிவைச் சீராக்குவதால்
- மயக்கம் அகற்றுவதால்
- அறிவுக்குத் தெளிவு தருவதால்
- உயிருக்கு அரிய துணையாய் இருப்பதால்
- இன்பம் சேர்ப்பதால் கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும்
- சதாவதானம் குறிப்பு வரைக.
- சதம் என்றால் நூறு என்று பொருள்
- அவதானம் என்றால் கவனித்தல்
- ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளித்தலே சதாவதானம் எனப்படும்.
- செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பு வரைக.
- சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்.
- ஊர்: கன்னியாகுமரி மாவட்டம்- இடலாக்குடி
- 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
- சீறாப் புராணத்திற்கு உரை எழுதியவர்
- 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப் பெற்றார்.
- செய்குத்தம்பிப் பாவலருக்கு அரசு செய்த சிறப்பு என்ன?
- இவரது நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் அமைக்கப்பட்டுள்ளது
- இவரது அனைத்து நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)