Tuesday, September 8, 2020

உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்

 உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்



👉சந்தக்கவிமணி என்னும் புனைப்பெயர் உடையவர்

👉இயற்பெயர் சண்முகசுந்தரம்

👉தமிழ் ஆசிரியர்

👉நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர்

👉சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்

👉திருச்சிக்கு அருகே உள்ள அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர்

👉பாவாணர் பெயரில் நூலகம் ஒன்றை அமைத்தவர்

👉எழுதிய நூல்கள்

✍️இலக்கண வரலாறு

✍️தமிழிசை இயக்கம்

✍️தனித்தமிழ் இயக்கம்

✍️பாவாணர் வரலாறு

✍️குண்டலகேசி உரை

✍️யாப்பருங்கல உரை

✍️புறத்திரட்டு உரை

✍️திருக்குறள் தமிழ் மரபுரை

✍️தேவநேயம்

✍️காக்கைப்பாடினிய உரை முதலியவை இவர்தம் தமிழ் பணியைத் தரம் உயர்த்திய நல்முத்துக்கள்.


👉விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழை இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர்

👉தமிழ்த்தென்றல் திரு வி க போல இமைகளை மூடியபடியே எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டவர்.

👉தற்போதும் அவ்வாறு எழுதி வருபவர்.

👉திருக்குறள் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருபவர்

👉தமிழ்வழியில் திருமணங்களை நடத்தி வருபவர். 


No comments:

Post a Comment