இயல் 2
2 மதிப்பெண் வினாக்கள்
1). "நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை
வெட்டி அறியாமல் நட்டு வளர்ப்போம்"
- இது போன்ற உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழுக்கத் தொடர்களை எழுதுக.
உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான முழக்கத்தொடர்கள்:
1). மரம் தரும் உயிர்வளி
மனிதர் வாழ ...
மரம் வளர்ப்பதே ஒரே வழி.
2). பட்டம் கூட முட்டும்!
பாழ்படுத்தாதீர்..!
நித்தம் மூச்சும் முட்டும்!
2). வசன கவிதை - குறிப்பு வரைக.
வசன கவிதை
- உரைநடையும் கவிதையும் இணைந்து, யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் 'வசனகவிதை' எனப்படுகிறது.
- இவ்வடிவம் பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இவ்வசனகவிதையே 'புதுக்கவிதை' என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
3). பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
அழும் தம்பிக்கு என்னுடைய ஆறுதல்:
- அம்மாவும் அப்பாவும் இப்போதே வந்துவிடுவர். அழாதே செல்லம்! அழாதே!
- உனக்குப் பிடித்த தின்பண்டம் வாங்கி வருவார்கள். உருட்டி விளையாடப் பொம்மை வாங்கி வருவார்கள். அழாதே தங்கம்! அழாதே!
- அக்கா, உன்கூட விளையாடுவேன்; ஆசையாய்த் தூக்கிக் கொஞ்சிடுவேன். அழாதே! முத்தே அழாதே!
4). மாஅல் - பொருளும் இலக்கண குறிப்பும் தருக.
மாஅல்
பொருள்: மாஅல் - மால் - திருமால். பெருவடிவு கொண்டு உலகத்தை ஓரடியால் அளந்தவர்.
இலக்கணக்குறிப்பு: மாஅல் -இசைநிறை அளபெடை (செய்யுளிசை அளபெடை)
5). தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.
அ). தண்ணீர் குடி- தண்ணீரைக் குடி.
தினமும் ஐந்து லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
ஆ). தயிர்க்குடம் - தயிரை உடைய குடம்.
அவள் தயிரை உடைய குடத்தை எடுத்து வந்தாள்.
No comments:
Post a Comment