இயல் 5
2 மதிப்பெண் வினாக்கள்
1). தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.
தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நான் கற்க விரும்பும் மொழி பிரெஞ்சு மொழி.
காரணம்: ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அதிகமான இலக்கிய நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு மொழியைக் கற்று, அம்மொழி சார்ந்த இலக்கியம், பண்பாடு, தொழில்வளர்ச்சி, கலை அறிவியல் குறித்த செய்திகளைத் தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்புகிறேன்.
2). செய்குத் தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்தொடர்களாக்குக.
அ) அருளைப் பெருக்கு!
அறிவைத் திருத்து !!
மயக்கம் அகற்று !!!
ஆ) அறிவுக்குத் தெளிவு தரும் !
உயிருக்குத் துணையாய் வரும்!!
3). "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுதுணர்ந்த கபிலன் தன்பால் பொழிந்த கேண்மையினால் இடைக்காட்டு புலவன் தென்சொல்" - இவ்வடிகளில் கழிந்த பெரும்கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?
- கழிந்த பெரும் கேள்வியினான் - மன்னன் குசேல பாண்டியன்
- காதல் மிகு கேண்மையினான் - புலவர் இடைக்காடனார்
No comments:
Post a Comment