இயல் 7
2 மதிப்பெண் வினாக்கள்
1). வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, தனக்குத் விருப்பமான புத்தகங்களை மிகமிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார். குறைந்த விலைக்கு நல்ல நூலொன்று கிடைத்துவிட்டால் பேரானந்தம் அடைவார்.
2). பொருத்தமான இடங்களில் நிறுத்தற்குறி இடுக.
பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.
விடை:
பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.
3). மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
மெய்க்கீர்த்தி பாடப்படுவது நோக்கம்:
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள். அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.
4). பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
பாசவர் - வெற்றிலை விற்பவர்
வாசவர் - ஏலம் முதலான நறுமணப்பொருள்கள் விற்பவர்
பல்நிண விலைஞர் - பல்வகை இறைச்சி விற்பவர்
உமணர் - வெண்மையான உப்பு விற்பவர்
5). புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
புறத்திணைகளில் எதிரெதிர்த்திணைகள்:
வெட்சி × கரந்தை
வஞ்சி × காஞ்சி
நொச்சி × உழிஞை
No comments:
Post a Comment