இயல் 9
2 மதிப்பெண் வினாக்கள்
1). நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. - இத்தொடரை இரு தொடர்களாக்குக.
தனி வாக்கியங்கள்:
- நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு.
- நான் எழுதுவதற்கு உரிய காரணம் உண்டு.
2). வாழ்வில் தலைக்கனம், 'தலைக்கனமே வாழ்வு' என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
வாழ்வில் தலைக்கனம்:
பணம், பதவிகளால் வாழ்வில் தலைக்கனம் பிடித்தவர் உலகில் பலர் உண்டு.
தலைக்கனமே வாழ்வு:
அடுத்த வேளை உணவுக்காக, அலுக்காமல் கல் சுமக்கும் சித்தாளுக்கு தலைக்கனமே வாழ்வாகிப் போனது.
3). "காய் மணி ஆகும் முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்" - உவமை உணர்த்தும் கருத்து யாது?
காய் மணியாகும் முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்:
இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே, தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டன போல, கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றான்.
4). தீவக அணியின் வகைகள் யாவை?
தீவக அணி மூன்று வகைப்படும். அவை:
- முதல் நிலைத் தீவகம்
- இடை நிலைத் தீவகம்
- கடை நிலைத் தீவகம்.
5). 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது' - இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. இக்குறளில் சொல்லையும் பொருளையும் வரிசைப்படி நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளதால், இது நிரல்நிறை அணியாயிற்று.
No comments:
Post a Comment