இயல் 7
3 மதிப்பெண் வினாக்கள்
1). "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்
இடம்: ம.பொ.சி. அவர்களின் 'எனது போராட்டம்' என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. ஆந்திர மாநிலத்தின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதிய போது, அதை எதிர்த்து ம. பொ. சி. அவர்கள் சென்னை மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டி, "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார்.
விளக்கம்: சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து ஆந்திரம் அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம், ஆந்திரத்தின் தலைநகராகச் சென்னை இருக்க வேண்டும் என்ற இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கள் நிலவின. இதை எதிர்த்து ம.பொ.சி. அவர்கள், மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் ஒன்றை அப்போதைய மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டி, சென்னை பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து, "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார்.
2). 'முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாகக் கு. ப. ராஜகோபாலன் கவிபாடுகிறார்?
ஏர் புதிதா?
- முதல் மழை விழுந்ததும் மேல்மண் பதம் ஆகிறது; வெள்ளி முளைக்கிறது; கிழக்கு வெளுக்கிறது.
- காளைகளை விரைந்து ஓட்டிக் கழனி செல்கின்றனர். பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்ல வேளையில் கொழுவை நாட்டுகின்றனர்.
- மாட்டைப் பூட்டிக் காட்டைக் கீறுகின்றனர். அவர்களின் ஏரும் காரும் புதிதன்று; நாளும் நட்சத்திரமும் புதிது; ஊக்கமும் உரமும் புதிது.
- மாட்டைத் தூண்டி, கொழுவை அமிழ்த்துகின்றனர். மண் புரளுகிறது; மழை பொழிகிறது; நிலம் சிலிர்க்கிறது; நாற்று நிமிர்கிறது; எல்லைத் தெய்வம் காவல் காக்கிறது.
3). பின்வரும் பத்தியைப் படித்து மையக் கருத்தை எழுதுக.
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவான இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்துத் தொடக்கத்தில் அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் பழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிசப் பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும், இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்தி கோளின் வமிச பரம்பரை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.
மையக்கருத்து
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சி ஆண்டு, போர் வெற்றிகள், வரலாறு, வாழ்த்து, சாசனம் எழுந்த நிகழ்ச்சி ஆகியவை காணப்படும். முதல் இராஜராஜனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதில் சோழ வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. பின்னர் வந்த மெய்க்கீர்த்திகள் அவற்றை விரித்துக் கூறுகின்றன.
4). "பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"
அ) இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
ஈ). காருகர் - பொருள் தருக.
உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
அ). இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
பகர்வனர்
பட்டினும்
பருத்தி
தூசும்
துகிரும்
ஆர்வமும்
அகிலும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பகர்வனர்
நகர வீதியும்
பட்டினும்
கட்டு
ஈ). காருகர் - பொருள் தருக.
காருகர் - நெய்பவர்
உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனம், அகில்.
5). அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான். அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
- அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான் - இது வஞ்சித் திணை ஆகும்.
- வஞ்சித் திணை: மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி, வஞ்சிப் பூவைச் சூடி போருக்குச் செல்வது வஞ்சித் திணை ஆகும்.
- திணை விளக்கம்: அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டைக் கைப்பற்ற விரும்புகிறான். மண்ணாசை காரணமாக வஞ்சிப் பூவைச் சூடி போருக்குச் செல்வதால், இது வஞ்சித்திணை ஆயிற்று.
No comments:
Post a Comment