1). பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க.
தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல்.
தரிசு: பயிரிடப்படாத நிலம்
சிவல்: செந்நிலம்
கரிசல்: கரிய நிறமுடைய கரிசல்மண்
முரம்பு: பருக்கைக் கற்கள் உள்ள மேட்டுநிலம்
புறம்போக்கு: ஊர்ப்புறத்தில் குடிகள் வசம் இல்லாத நிலப்பகுதி
சுவல்: மேடு
அவல்: அகன்ற பள்ளம், விளைநிலம்
2). ஒரு பொருள் தரும் பல சொற்களைப் பட்டியலிடுக. எடுத்துக்காட்டு.
சொல்லுதல்: பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்.
ஒருபொருட்பன்மொழி
சொல்: பதம், மொழி, கிளவி.
காற்று: வளி, வாயு
அம்மா: தாய், அன்னை.
குழந்தை: குழவி, பிள்ளை.
விடை: செப்பு, இறை.
போல: புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, நேர, நிகர, அன்ன.
பெரிய: மா, நனி, கழி, கடி, கூர், சால, தவ, உறு, குரு
துயில்: உறக்கம், தூக்கம்.
கதிரவன்: வெய்யோன், பகலவன், ஞாயிறு, பரிதி.
நிலா :மதி, திங்கள், அம்புலி.
அழகு: அணி, வனப்பு, எழில், கவின்.
இன்பம்: உவகை, மகிழ்ச்சி களிப்பு.
வீடு: இல்லம், உறையுள், மனை.
சோலை: பொதும்பர், கா, பொழில்
No comments:
Post a Comment