Tuesday, March 29, 2022

தொகைநிலைத் தொடர்கள் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. நீரின்றி அமையாது உலகு என்பது போல, எது இன்றி அமையாது உலகு உயிர் இயக்கம்?
    • காற்றின்றி அமையாது உலக உயிர் இயக்கம்
  2. காற்று, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையை எங்கிருந்து கொண்டு வருகிறது?
    • மகரந்தத் தூள்களிலிருந்து...
  3. காற்றுக்கு மிகுந்த ப்ராண ரஸம் எங்கிருந்து கிடைக்கிறது?
    • இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராயும்போது...
  4. காற்று, எது நீடித்து நிற்பதற்காக வீச வேண்டும்?
    • உயிர் - நெருப்பு
  5. காற்றின் சக்தி குறைந்தால் என்ன ஆகும்? காற்று, பேய்போல் வீசினால் என்ன ஆகும்?
    1. காற்றின் சக்தி குறைந்தால் உயிர் - நெருப்பு அவிந்துவிடும்
    2. காற்று, பேய்போல் வீசினால் உயிர் - நெருப்பு மடிந்துவிடும்
  6. காற்று எவ்வாறு வீச வேண்டும்?
    1. மெதுவாக நல்ல லயத்துடன் வீச வேண்டும்
    2. நெடுங்காலம் வீச வேண்டும்
  7. காற்று நல்ல லயத்துடன் நெடுங்காலம் வீசினால், பாரதியார் என்ன செய்வதாகக் கூறுகிறார்?
    1. பாட்டுகள் பாடுகிறோம்
    2. புகழ்ச்சிகள் கூறுகிறோம்
    3. வழிபடுகிறோம்
  8. பாரதியார் எத்தகைய பாராட்டுக்கு உரியவர்?
    1. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
    2. சிந்துக்குத் தந்தை
    3. பாட்டுக்கொரு புலவன்
  9. பாரதியாரின் பன்முகங்கள் யாவை?
    1. கவிஞர்
    2. கட்டுரையாளர்
    3. சிறுகதை ஆசிரியர்
    4. இதழாளர்
  10. பாரதியார் எதை எதிர்த்து எழுதியவர்?
    1. சமுதாய ஏற்றத்தாழ்வுகள்
    2. பெண்ணடிமைத்தனம்
  11. குழந்தைகளுக்காக பாரதியார் எழுதிய நூல்கள் எவை?
    1. கண்ணன் பாட்டு
    2. பாப்பா பாட்டு
    3. புதிய ஆத்திசூடி
  12. பாரதியார் எழுதிய காவியங்கள் எவை?
    1. குயில் பாட்டு
    2. பாஞ்சாலி சபதம்
  13. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் எவை?
    1. இந்தியா
    2. சுதேசமித்திரன்
  14. கருத்துப்படம் - கேலிச்சித்திரம் போன்றவற்றை உருவாக்கியவர் யார்?
    • பாரதியார்
  15. வசன கவிதை- குறிப்பு வரைக
    1. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது
    2. இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது
    3. இந்த வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம் ஆயிற்று
  16. எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் யார்?
    • பாரதியார்
  17. காற்று என்னும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
    • பாரதியார் கவிதைகள்.

No comments:

Post a Comment