Friday, November 20, 2026

மெல்லக் கற்போர் கையேடு


பத்தாம் வகுப்பு 
தமிழ் 
மெல்லக் கற்போர் கையேடு 
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (8 மதிப்பெண் உறுதி

1. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது? 

அ. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

ஆ. என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ. இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்

ஈ. என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

 2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது-

அ. இலையும் சருகும் 

ஆ. தோகையும் சண்டும் 

இ. தாளும் ஓலையும்

ஈ. சருகும் சண்டும்

3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.....

அ.எந்+தமிழ்+நா

ஆ.எந்த+தமிழ்+நா

இ.எம்+தமிழ்+நா

ஈ.எந்தம்+தமிழ்+நா

4. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'-தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-

அ. பாடிய, கேட்டவர்

ஆ. பாடல், பாடிய

இ. கேட்டவர், பாடிய

ஈ. பாடல், கேட்டவர்

5.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றை குறிப்பது-

அ. குலைப்பெயர் வகை 

ஆ. மணிப்பெயர் வகை 

இ. கிளைப்பெயர் வகை 

ஈ. இலைப்பெயர் வகை

6.பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பை எவை?

அ. வானத்தையும் பாட்டையும் 

ஆ. வானொலியில், பேரொலியில்

இ. வானத்தில், பூமியையும்

ஈ. வானத்தையும் பேரொலியையும்

7. செய்தி 1-ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம். 

செய்தி 2-காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே. 

செய்தி 3-இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.

அ. செய்தி 1 மட்டும் சரி

ஆ. செய்தி 1,2 ஆகியன சரி

இ. செய்தி 3 மட்டும் சரி

ஈ. செய்தி 1,3 ஆகியன சரி

8. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ. கொண்டல்-1. மேற்கு 

ஆ. கோடை-2. தெற்கு 

இ. வாடை-3. கிழக்கு 

ஈ. தென்றல்-4. வடக்கு

அ. 1,2,3,4

ஆ. 3,1,4,2

இ. 4,3,2,1

ஈ. 3,4,1,2

9. 'மகிழுந்து வருமா?' என்பது-

அ. விளித்தொடர்

ஆ. எழுவாய்த்தொடர்

இ. வினையெச்சத் தொடர் 

ஈ. பெயரெச்சத் தொடர்

10. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -

அ. வேற்றுமை உருபு 

ஆ. எழுவாய்

இ. உவம உருபு 

ஈ. உரிச்சொல்

11. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது? 

அ. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

ஆ. தமிழர் வாழை இலைக்கு பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

12. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது_______

அ. சுட்டி 

ஆ. கிண்கிணி

இ.குழை

ஈ. சூழி

13. காசிக்காண்டம் என்பது-

அ. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் 

ஆ. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர் 

இ. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

ஈ. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

14. 'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீரியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-

அ. நிலத்திற்கேற்ற விருந்து 

ஆ. இன்மையிலும் விருந்து

இ. அல்லிலும் விருந்து 

ஈ. உற்றாரின் விருந்து

15. நன்மொழி என்பது-

அ. பண்புத்தொகை 

ஆ. உவமைத்தொகை 

இ. அன்மொழித்தொகை 

ஈ. உம்மைத்தொகை

16. கீழ்க்காண்பவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

அ. திருக்குறள் 

ஆ. கம்பராமாயணம் 

இ. கலித்தொகை 

ஈ. சிலப்பதிகாரம்

17. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்_______. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்________

அ. அமைச்சர், மன்னன்

ஆ. அமைச்சர், இறைவன்

இ. இறைவன், மன்னன்

ஈ. மன்னன், இறைவன்

18. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது_______.

அ. இட வழுவமைதி 

ஆ. பால் வழுவமைதி

இ. திணை வழுவமைதி 

ஈ. கால வழுவமைதி

19. இரவீந்திரநாத் தாகூர்_______மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை_____________மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.

அ. ஆங்கில, வங்காள 

ஆ. வங்காள, ஆங்கில 

இ. வங்காள, தெலுங்கு 

ஈ. தெலுங்கு, ஆங்கில

20. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

அ. யாம்

ஆ. நீவிர்

இ. அவர்

ஈ. நாம்

21. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது 

அ. கூற்று 1 சரி, 2 தவறு

ஆ. கூற்று 1 மற்றும் 2 தவறு

இ. கூற்று 1 தவறு 2 சரி

ஈ. கூற்று 1 மற்றும் 2 சரி

22. "மையோமர கதமோமறி கடலோ மலைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறி.

அ. கருமை 

ஆ. பச்சை 

இ. பழுப்பு 

ஈ. நீலம்

23. 'தூக்குமேடை' என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில் தான், 'கலைஞர்' என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது-இத்தொடருக்கான வினா எது?

அ‌. தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்? 

ஆ‌. கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ. தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ. யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?

24. சித்திரை, வைகாசி மாதங்களை_____காலம் என்பர்.

அ. முதுவேனில் 

ஆ. பின்பனி

இ.முன்பனி

ஈ. இளவேனில்

25. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்______

அ. முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

ஆ. குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

ஈ. மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

26. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ. உழவு, மண், ஏர், மாடு

ஆ.மண், மாடு, ஏர், உழவு

இ. உழவு, ஏர், மண், மாடு

ஈ. ஏர், உழவு, மாடு, மண்

27. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது_____

அ. திருக்குறள் 

ஆ. புறநானூறு 

இ. கம்பராமாயணம் 

ஈ. சிலப்பதிகாரம்

28. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு--இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே.....

அ. பாண்டியநாடு, சேர நாடு 

ஆ. சோழ நாடு, சேரநாடு 

இ. சேர நாடு, சோழநாடு 

ஈ. சோழநாடு, பாண்டியநாடு

29. இருநாட்டு அரசர்களும் தும்பைப்பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்_____

அ. நாட்டைக் கைப்பற்றல் 

ஆ. ஆநிரை கவர்தல் 

இ. வலிமையை நிலைநாட்டல்

ஈ. கோட்டையை முற்றுகையிடல்

30. "மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்"-மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

அ. திருப்பதியும் திருத்தணியும்

ஆ. திருத்தணியும் திருப்பதியும்

இ. திருப்பதியும் திருச்செந்தூரும்

ஈ. திருப்பரங்குன்றமும் பழனியும்

31. மேன்மை தரும் அறம் என்பது-

அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ. மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது 

இ. புகழ் கருதி அறம் செய்வது 

ஈ. பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

32. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?

அ. உதியன், சேரலாதன் 

ஆ. அதியன், பெருஞ்சாத்தன் 

இ. பேகன், கிள்ளிவளவன் 

ஈ. நெடுஞ்செழியன், திருமுடிக்காரி

33. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

அ. ஒரு சிறு இசை 

ஆ. முன்பின் 

இ. அந்நியமற்ற நதி 

ஈ. உயரப் பறத்தல்

34. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று______வேண்டினார்.

அ. கருணையன், எலிசபெத்துக்காக

ஆ. எலிசபெத், தமக்காக

இ. கருணையன், பூக்களுக்காக

ஈ. எலிசபெத், பூமிக்காக

35. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-

அ. அகவற்பா

ஆ. வெண்பா 

இ. வஞ்சிப்பா 

ஈ. கலிப்பா


குறுவினா- செய்யுள் (15 வினாக்களில் 2 கண்டிப்பாக வரும்) 4 மதிப்பெண்கள் 

1. "மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!'- இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

  1. சிலப்பதிகாரம் 
  2. மணிமேகலை

2. "கொள்வோர் கொள்க; 

குரைப்போர் குரைக்க! 

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது". பாடல் அடிகளில் உள்ள மோனை எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

  1. மோனை (முதல் எழுத்து)

    1. கொள்வோர் 
    2. கொள்க

  1. எதுகை (2ஆம் எழுத்து)

    1. கொள்வோர் 
    2. உள்வாய்

3. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

    1. வாங்க 
    2. நலமா ?
    3. சாப்பிடுங்க!
    4. மகிழ்ச்சி !

4. "நச்சப்படாதவன் செல்வம்"- இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

ஒருவராலும் விரும்பப்படாதவன்.

5. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக. 

    1. கடமை தவறக் கூடாது. 
    2. இரக்கம் காட்ட வேண்டும்.

6. செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கிறார்?

  1. முயற்சி செய்தால் செல்வம் பெருகும் 
  2. முயற்சி செய்யாமல் இருந்தால் வறுமை வந்து சேரும்.

7. "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"- இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

  1. கழிந்த பெரும் கேள்வியினான் - குலேச பாண்டியன்
  2. காதல் மிகு கேண்மையினான் - இடைக்காடன்

8. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

  1. சோலைகள் 
  2. செண்பகக் காடுகள்
  3. பொய்கைகள் 
  4. தடாகங்கள்
  5. பாக்குத் தோட்டங்கள்
  6. வயல்கள்

9. உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்' காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்'. கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்? 

  1. உம் பொய்யான வாழ்வு இன்று முடிவதைக் காண எழுந்திரு.
  2. காலதூதர் கையில் இனி உறங்கு.

10. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

  1. எள்ளி நகையாடாமல் கொடுப்பவரைக் கண்டால், 
  2. உதவி கேட்டு வருபவர் மகிழ்ச்சி அடைவார்.

11. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.(பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்)

  1. உழைத்ததால் கிடைத்த ஊதியம் 
  2. அது பகைவரை வெல்லும் ஆயுதம்.

12. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் -சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

  1. பாசவர் - வெற்றிலை விற்பவர் 
  2. வாசவர் -வாசனைப் பொருள் விற்பவர் 
  3. பல்நிண விலைஞர் - பல்வகை இறைச்சி விற்பவர் 
  4. உமணர்- உப்பு விற்பவர்

13. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ-இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை? 

  1. சேறு- அள்ளல்
  2. வயல்- பழனம்

14. "காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்"-உவமை உணர்த்தும் கருத்து யாது? 

  1. பால்பிடித்த நெற்பயிர் மழையின்றி, நெல்மணி ஆகாமல் காய்ந்தது போல
  2. கருணையன் தாயை இழந்து வாடினான்.

15. பழங்களை விடவும் நசுங்கிப் போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?

"அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை"

 

திருக்குறள் - மனப்பாடப் பாடல்கள் (கட்டாய வினா) 2 மதிப்பெண் உறுதி

1. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

2. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே 

நல்லார் தொடர்கை விடல்

3. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் 

கண்ணோட்டம் இல்லாத கண்.

4. அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் 

பெருமை முயற்சி தரும்.

5. முயற்சி திருவினை ஆக்கும் முயற்சிஇன்மை 

இன்மை புகுத்தி விடும்.

6. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து 

இயற்கை அறிந்து செயல்.

7. பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் 

பொருள்அல்லது இல்லை பொருள்.

8. குன்றேறி யானைப்போர் கண்டுஅற்றால் தன்கைத்துஒன்று 

உண்டாகச் செய்வான் வினை.

9.  குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் 

சுற்றமாச் சுற்றும் உலகு.

10.  இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் 

இன்மையே இன்னா தது.



உரைநடை குறுவினா( 10 வினாக்களில் 2 கண்டிப்பாக வரும்)-4 மதிப்பெண்கள்

1. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி எஞ்சிய தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

  1. முதல் மற்றும் மூன்றாம் தொடர்கள் சரியானவை. 
  2. தாற்றில் தான் சீப்புகள் இருக்கும்.

2. சொல் வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  1. செந்நெல், வெண்ணெல், கார், மட்டை , சம்பா எனப் பலவகை உண்டு.
  2. சம்பாவில் மட்டும் 60வகை உண்டு.

3. 'நமக்கு உயிர் காற்று காற்றுக்கு வரம் மரம் -மரங்களை வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்'-இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

  1. காற்று- நம் உயிர் ஊற்று
  2. காற்று - உயிர் வாழப் போற்று 

4. தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்? 

  1. கிழக்கு - கொண்டல் 
  2. மேற்கு - கோடை
  3. வடக்கு - வாடை
  4. தெற்கு - தென்றல் 

5. 'தானியம் ஏதுமில்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

  1. விருந்தோம்பலுக்குச் செல்வத்தைவிட
  2. அன்புதான் இன்றியமையாதது.

6. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக. 

  1. மொழிவளம் ஏற்படுகிறது.
  2. கருத்துப் பரிமாற்றம் ஏற்படுகிறது.

7. அயற்கூற்றாக மாற்றுக. 

"கலைஞர், பழுமரக்கனி பயன் கொள்ளும் பேச்சாளர்; படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்"-பேராசிரியர் அன்பழகனார்.

கலைஞரைப் பழுமரக்கனி பயன் கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் பேராசிரியர் அன்பழகனார் கூறுகிறார்.

8. பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறியீடுக. 

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன்- ம.பொ.சி.

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.- ம.பொ.சி.

9. குறிப்பு வரைக -அவையம்.

  1. அறநெறி ஆட்சிக்குத் துணை 
  2. துலாக்கோல் போன்றது.

10. சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?

  1. நீர்நிலைபெருக்கி உணவுப் பெருக்கம் காண்பது
  2. அறத்தின் அடிப்படையில் தண்டனை வழங்குவது.

இலக்கணம்- குறுவினா( 10 வினாக்களில் இரண்டு கண்டிப்பாக வரும்) 4 மதிப்பெண்கள்

1. பலகை என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

  1. பலகை- தனிமொழி 
  2. பல கை- தொடர்மொழி 

இவ்வாறு தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக அமைந்ததால் இது பொதுமொழி ஆகும்.

2. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்'என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

'சிரித்துச் சிரித்துப் பேசினார்'

3. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத் தொகையாக மாற்றி எழுதுக.

கல்விச்செல்வம் பெற்ற பெண்கள் விருந்தீகை செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். 

4. தண்ணீர் குடி, தயிர்க் குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

  1. தண்ணீர் குடி-2ஆம் வேற்றுமைத் தொகை. தண்ணீரைக் குடி. தண்ணீரைக் குடித்தான்.
  2. தயிர்க் குடம்-2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை. தயிரை உடைய குடம். தயிரை உடைய குடத்தை எடு.

5. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்- இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு? 

  1. 'செல்வேன்' என்று வர வேண்டும்.
  2. நிகழ்ச்சியின் உறுதித்தன்மை காரணமாக செல்கிறேன் என்று வந்துள்ளது.

6. "சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

"சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது" 

7. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக. 

உழவர்கள் மலையில் உழுதனர். 

முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

  1. உழவர்கள் வயலில் உழுதனர். 
  2. நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

8. தஞ்சம் எளியர் பகைக்கு- இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

  1. தஞ்/சம்- நேர் நேர் - தேமா
  2. எளி/யர் - நிரை நேர் - புளிமா
  3. பகைக் /கு- (நிரை நேர்) நிரைபு - பிறப்பு 

9. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

  1. வெட்சி × கரந்தை 
  2. வஞ்சி × காஞ்சி 
  3. நொச்சி × உழிஞை 

10. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

  • வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று 2 அடிகளில் வரும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு.



படிப்போம்! பயன்படுத்துவோம்!- 2 மதிப்பெண் உறுதி 


    1. aesthetics -அழகியல்
    2. agreement -ஒப்பந்தம்
    3. baby shower -வளைகாப்பு 
    4. border -எல்லை
    5. charity-ஈகை
    6. consonant -மெய்யெழுத்து
    7. conversation -உரையாடல்
    8. culture -பண்பாடு
    9. discourse -சொற்பொழிவு
    10. discussion -கலந்துரையாடல்
    11. feast -விருந்து
    12. gratuity -பணிக்கொடை
    13. happiness -மகிழ்ச்சி
    14. homograph -ஒப்பெழுத்து
    15. hospitality -விருந்தோம்பல்
    16. house warming -புதுமனைப் புகுவிழா
    17. human resource-மனித வளம்
    18. land breeze -கடல் காற்று
    19. monarchy -முடியாட்சி
    20. monolingual -ஒரு மொழி
    21. multi media -பல்லூடகம்
    22. playwright -நாடக ஆசிரியர்
    23. rebellion -கிளர்ச்சி
    24. sceptor- செங்கோல்
    25. screenplay -திரைக்கதை
    26. sea breeze -கடல் காற்று
    27. storm -புயல்
    28. story teller -கதை சொல்லி
    29. tempest -வன்புயல்
    30. tornado -சூறாவளி
    31. transfer -மாறுதல்
    32. translation -மொழிபெயர்ப்பு
    33. truth -வாய்மை
    34. vowel -உயிர் எழுத்து
    35. wealth -செல்வம்
    36. whirlwind -சுழல் காற்று

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.(5 மதிப்பெண்) கோடிட்ட இடத்தில் காட்சியில் கண்ட பொருளின் பெயரை எழுதவும்.

கவிதை (பொது) 

___________ காட்சி ஓவியம் !

கண்ணில் கண்ட ஓவியம் !

கருத்து நிறைந்த ஓவியம் !

கருப்பு வெள்ளை ஓவியம் !

கண்ணைக் கவரும் ஓவியம் !

சின்னச் சின்ன ஓவியம் !

சிக்கல் பேசும் ஓவியம் !

சிந்தை நிறைந்த ஓவியம் !

சிறப்பு வாய்ந்த ஓவியம் !

சிங்கார ஓவியம்!

எண்ண எண்ண மலருதே!

என்னை எழுதத் தூண்டுதே!

உள்ள உள்ள ஊறுதே!

உண்மையை எழுதத் தூண்டுதே!

_________ காட்சி காவியமே!


நிற்க அதற்குத் தக- 5 மதிப்பெண்கள்-(பொது)

    1. விதிகளை மதித்து நடப்பேன்
    2. நல்லதை நினைப்பேன் 
    3. நல்லதைச் சொல்வேன் 
    4. நல்லதைச் செய்வேன் 
    5. அறிவுரை சொல்வேன் 
    6. விழிப்புணர்வு தருவேன் 
    7. நம்பிக்கை வேண்டும் 
    8. பாதுகாக்க வேண்டும் 
    9. பின்பற்ற வேண்டும். 
    10. நல்லது நடக்கும்.

பகுபத உறுப்பிலக்கணம் தருக. 2 மதிப்பெண் உறுதி(இது பொது விதி இல்லை)

  1. முதல் இரண்டு எழுத்துக்களுக்குப் பிறகு ' / ' கோடு போட வேண்டும்.(எ.கா. உரைத்த-உரை/த்த)
  2. மூன்று மற்றும் நான்காவது எழுத்து மெய்யெழுத்தாக வந்தால், முதல் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு ' / ' கோடு போட வேண்டும்.(எ.கா.கிளர்ந்த-கிளர்/ந்த)
  3. ஒரே ஒரு மெய்யெழுத்து வந்தால் அந்த மெய்யெழுத்துக்கு முன்னும் பின்னும் ' / ' கோடு போடவும். (எ.கா. பதிந்து-பதி/ந்/து)
  4. எச்சமாக வரக்கூடிய சொற்களில் கடைசி எழுத்துக்கள் வரை ( உயிர் + மெய்) பிரித்து எழுதவும். (எ.கா. பதிந்து- பதி/ந்/த்/உ)
  5. வினைமுற்றுச் சொல் அல்லது வியங்கோள் வினைமுற்றுச் சொல் எனில் கடைசி எழுத்தை மட்டும் பிரிக்காமல் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் (எ.கா. தணி/ந்/த்/அ/து)
  6. 'ந்' வந்தால் அதை அடைப்புக் குறிக்குள் " (ந்) " என்று போட்டு அதற்கு அருகில் 'த்' போட வேண்டும். (எ.கா. பதிந்து-பதி/த் (ந்)/த்/உ
  7.  முதல் இரண்டு எழுத்துக்கள் பகுதி எனப்படும். அது ஒரு வினை அடியாக (வினைச்சொல்லாக) இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த இரண்டு எழுத்துகளை அடைப்புக் குறிக்குள் "(_____)" எழுதி, அதற்கு உரிய வினை அடியை அருகில் (வினைச்சொல்லை) எழுத வேண்டும். (எ.கா. கொண்ட- கொள்(கொண்)/ட்/அ
  8. பெயரெச்சச் சொற்கள்( 'அ' வில் முடியும்)


1. கிளர்ந்த= கிளர்+த்(ந்)+த்+அ

கிளர்- பகுதி

த்-சந்தி

(ந்)- விகாரம் 

த்- இடைநிலை 

அ-விகுதி

2. உரைத்த= உரை+த்+த்+அ

உரை-பகுதி

த்-சந்தி

த்-இடைநிலை

அ-விகுதி

3. கொண்ட=

கொள்(கொண்) +ட்+அ

கொள்-பகுதி

(கொண்)- விகாரம் 

ட்- இடைநிலை 

அ-விகுதி


வினையெச்சச் சொற்கள்(' உ ' வில் முடியும்)


4. பதிந்து= பதி+த்(ந்)+த்+உ

பதி-பகுதி

த்-சந்தி

(ந்)-விகாரம்

த்-இடைநிலை

உ-விகுதி

5. ஒலித்து= ஒலி+த்+த்+உ

ஒலி-பகுதி

த்-சந்தி

த்-இடைநிலை

உ-விகுதி


வினைமுற்று/ வியங்கோள் வினைமுற்றுச் சொல்

6. வருக= வா(வரு)+க

வா-பகுதி

(வரு)-விகாரம்

க-விகுதி

7. தணிந்தது=தணி+த்(ந்)+த்+அ+து

தணி-பகுதி

த்-சந்தி

(ந்)-விகாரம்

த்-இடைநிலை

அ-சாரியை

து- விகுதி


தொடர்களில் அமைத்து எழுதுக. 2 மதிப்பெண் உறுதி.

கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க. 

1. இயற்கை - செயற்கை 

நான் இயற்கை என்பதைச் செயற்கை என்று எழுதினேன்.

2. கொடு - கோடு 

நான் கொடு என்பதைக் கோடு என்று எழுதினேன்.

3. கொள் - கோள் 

நான் கொள் என்பதைக் கோள் என்று எழுதினேன்.

4. சிறு - சீறு

நான் சிறு என்பதைச் சீறு என்று எழுதினேன்.

5. தான் - தாம் 

நான் தான் என்பதைத் தாம் என்று எழுதினேன்

6. விதி - வீதி

நான் விதி என்பதை வீதி என்று எழுதினேன்.

 

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக 

1. சிலை -சீலை 

நான் சிலை என்பதைச் சீலை என்று எழுதினேன்.

2. தொடு - தோடு 

நான் தொடு என்பதைத் தோடு என்று எழுதினேன் 

3. மடு - மாடு 

நான் மடு என்பதை மாடு என்று எழுதினேன்.

4. மலை - மாலை 

நான் மலை என்பதை மாலை என்று எழுதினேன்.

5. வளி - வாளி

நான் வளி என்பதை வாளி என்று எழுதினேன்

6. விடு - வீடு 

நான் விடு என்பதை வீடு என்று எழுதினேன்.

 

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க. 

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். 

நல்ல கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் 

நல்ல மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் 

3. வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது 

நல்ல வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது 

4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் 

நல்ல கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் 

5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.

நல்ல குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.

 

வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

 

பழமொழிகளை நிறைவு செய்க. 

  1.  உப்பில்லாப் பண்டம் குப்பையிலே 
  2. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 
  3. உப்பிட்டவரை உள்ளளவும் நினை 
  4. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு 
  5. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

எண்ணுப் பெயர்களைக் கண்டுபிடித்துத் தமிழ் எண்களில் எழுதுக.

  1. கடலை -க
  2. உருண்டையை - உ
  3. நன்கு - ந
  4. சமைத்து - ச
  5. ருசித்துச் - ரு
  6. சாப்பிடு - சா
  7. என்று - எ
  8. அம்மா - அ
  9. கூறினாள் - கூ


  1. நாற்றிசையும் செல்லாத நாடில்லை -நான்கு- ச
  2. எறும்புந்தன் கையால் எண்சாண் -எட்டு-அ
  3. ஐந்து சால்பு ஊன்றிய தூண் -ஐந்து-ரு
  4. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி -நான்கு, இரண்டு -ச, உ
  5. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி-ஆயிரம்-க000

பிழைகளைத் திருத்தி எழுதுக.

தேணிலே ஊரிய செந்தமிழின் சுவை

தேரும் சிலப்பதிகாற மதை 

ஊனிலே எம்முயிர் உல்லலவும் - நிதம் 

ஓதி யுனர்ந்தின் புருவோமே"


திருத்தம்:

தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை

தேரும் சிலப்பதிகார மதை 

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம் 

ஓதி யுணர்ந்தின் புறுவோமே"

 

உரைநடை -சிறுவினா (6 மதிப்பெண்)

1. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'. இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

    1. மாங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது
    2. நெல்லிக்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது 
    3. ஆலங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது 
    4. அத்திக்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது 
    5. அரசங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது 

2. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப் பேசினால் .... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

  1. மழையாக நான்
  2. குடிநீராக நான்
  3. பண்பாட்டில் நான்
  4. வேளாண்மையில் நான் 
  5. மின் உற்பத்தியில் நான் 
  6. பல பெயர்களில் நான் 

3. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

  1. விதைத் தினையை விருந்தளித்தாள் தலைவி.
  2. முதல் நாள் யாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்.
  3. மறுநாள் வாளைப் பணையம் வைத்து விருந்தளித்தான் தலைவன்.

4. 'தனித்து உண்ணாமை'என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.

  1. திருவிழாவில் புதியவர்களுக்கும் உணவளிக்கிறோம்.
  2. இல்ல விழாக்களில் விருந்தளித்து மகிழ்கிறோம்.
  3. இன்று திருமண ஏற்பாட்டாளர்கள் கவனித்துக் கொள்கின்றனர்.

5. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை எழுதுக.

  1. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாட வழிவகுத்தார்.
  2. தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார்.

6. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

  1. அறநெறி ஆட்சி தேவை
  2. அறங்கூறு அவையம் தேவை
  3. ஈகை அறம் தேவை
  4. கொடை அறம் தேவை
  5. உதவி அறம் தேவை
  6. வாய்மை அறம் தேவை.

7. வாய்மை பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.

  1. பொய்யாச் செந்நா
  2. பொய்படு அறியா வயங்கு செந்நா
  3. பிழையா நன்மொழி

8. 'சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

(குறிப்பு-சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் செயலிலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்.)

  1. சுற்றுச்சூழல் மாசுபாடு 
  2. காரணங்கள் 
  3. விளைவுகள் 
  4. சுற்றுச்சூழல் சட்டங்கள்
  5. தடுக்கும் வழிமுறைகள்
  6. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு.


செய்யுள்-சிறுவினா (6 மதிப்பெண்)

1. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

  1. மழை பெய்தது 
  2. பூமி குளிர்ந்தது
  3. தொடர்ந்து மழை பெய்தது. 
  4. வெள்ளத்தில் மூழ்கியது 
  5. உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.

2. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

  1. கால்- கிண்கிணிகளோடு சிலம்புகளும் ஆடின.
  2. இடை-அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடின.
  3. நெற்றியில் சுட்டி ஆடியது.
  4. காதில் குண்டலமும் குழைகளும் ஆடின.

3. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

  1. புலவர் பாடினார். 
  2. மன்னன் அவமதித்தான். 
  3. புலவர் முறையிட்டார். 
  4. இறைவன் நீங்கினான். 
  5. மன்னன் வேண்டினான். 
  6. புலவருக்குச் சிறப்புச் செய்தான்.

4. மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.

  1. மயில்கள் ஆட 
  2. தாமரை விளக்குகள் ஏந்த
  3. மேகங்கள் மத்தளம் கொட்ட.
  4. குவளைகள் பார்க்க
  5. நீர் அலைகள் படம் பிடிக்க 
  6. வண்டுகள் பாடுகின்றன.

5. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

  1. சேர நாடு-பறவைகள் மட்டுமே அஞ்சின.  அஞ்சுவார் இல்லை.
  2. சோழ நாடு- நெல் வளமும் வீரமும் உடையது.
  3. பாண்டிய நாடு - முத்துவளம் உடையது.

6. பின்வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 

பகர்வனர் திரிதரு நகர வீதியும் 

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் 

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

அ. இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது? 

சிலப்பதிகாரம்

ஆ. பாடலில் உள்ள மோனையை எடுத்து எழுதுக. 

பகர்வனர்
பட்டினும்

இ. எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக. 

பட்டினும்
கட்டு

ஈ. காருகர் - பொருள் தருக.

நெய்பவர்

உ. இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

ஆரமும் அகிலும்


இலக்கணம் - சிறுவினா (6 மதிப்பெண்)

1. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது'- இவை அனைத்தையும் யாம் அறிவோம். இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

  1. அறிந்தது -அறிதல்
  2. அறியாதது-அறியாமை
  3. புரிந்தது-புரிதல்
  4. புரியாதது-புரியாமை
  5. தெரிந்தது-தெரிதல்
  6. தெரியாதது-தெரியாமை
  7. பிறந்தது-பிறத்தல்
  8. பிறவாதது-பிறவாமை

2. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துக்களை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார். வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக.

  1.  பாடிக் காட்டினார் -வினையெச்சத் தொடர்
  2. கேட்டுப் பாடினார் -வினையெச்சத் தொடர்
  3. கேட்ட பாடலில் -பெயரெச்சத் தொடர்
  4. சிறுவினாக்களைக் கேட்டார்-வேற்றுமைத் தொடர்
  5. எழுதுபவருக்குப் பரிசு-வேற்றுமைத் தொடர்

3. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

  1. இதில் உவமை அணி வந்துள்ளது. 
  2. உவமை:வேலொடு நின்றான் இடுஎன்றது 
  3. பொருள்:கோலொடு நின்றான் இரவு
  4. உவம உருபு:போலும்
  5. இம்மூன்றும் வந்ததால், இஃது உவமை அணி.

4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், "இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்" என்றார். "இதோ சென்றுவிட்டேன்" என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, "என்னடா விளையாட வேண்டுமா?" என்று கேட்டு அவனை அவிழ்த்து விட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்" என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியில் உள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

  1. வாழைத்தோப்பில்- மரபு வழுவமைதி
  2. குட்டியுடன் நின்றிருந்த மாடு- மரபு வழுவமைதி 
  3. துள்ளிய குட்டியை -மரபு வழுவமைதி
  4. அவனை அவிழ்த்து விட்டேன்-திணை வழுவமைதி
  5. நீயும் இவனும் விளையாடுங்கள் -திணை வழுவமைதி
  6. நீரைக் குடித்தாள்-திணை வழுவமைதி

5. ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  1. கால வழுவமைதி - வருகையின் உறுதித் தன்மை. குடியரசுத் தலைவர் நாளை வருகிறார். 
  2. மரபு வழுவமைதி -கவிதையில் இடம் பெறுவது. கத்தும் குயில் ஓசை.

6. 'கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.'- காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் பண்டைத் தமிழரின் திணை நிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

  1. நெய்தல்-மேம்பட்ட மீன்பிடித்தலும் துறைமுகங்களும்
  2. குறிஞ்சி-சுற்றுலா மேம்பாடு
  3. மருதம்-நவீன வேளாண் முறைகள்.

7. "தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான்- இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம் பெற்றுள்ளதை விளக்குக.

  1. தேவர்களும் கயவர்களும் ஒரு தன்மையர்.
  2. தேவர்கள் விரும்பும் நல்ல செயல்களைச் செய்வர்
  3. கயவர்கள் விரும்பும் தீய செயல்களைச் செய்வர்.
  4. கயவர்களைப் புகழ்வது போலப் புகழ்ந்து பழித்துக் கூறப்பட்டுள்ளது

எனவே, இது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

8. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக. 

  1. அளவடிகள் வரும்
  2. அகவல் ஓசை வரும் 
  3. ஆசிரியத் தளை மிகுதியாக வரும்
  4. 3 அடி முதல் பல அடிகள் வரும் 
  5. ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு


மனப்பாடப் பாடல்கள் (3 மதிப்பெண்)

அன்னை மொழியே!

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே 

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் 

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே !

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! 

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! 

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! 

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

காசிக் காண்டம்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் 

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் 

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் 

எழுதல் முன் மகிழ்வன செப்பல் 

பொருந்து மற்றுஅவன் தன் அருகுற இருத்தல் 

போமெனில் பின் செல்வதாதல் 

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் 

ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

-அதிவீரராம பாண்டியர்.

திருவிளையாடல் புராணம்

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் 

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான் 

நுண்ணிய கேள்வியோரும் மன்ன நீ நுவன்ற சொல்லாம் 

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.

-பரஞ்சோதி முனிவர்.

கம்பராமாயணம் 

தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்க 

கொண்டல்கண் முழவின் ஏங்கக் குவளை கண்விழித்து நோக்கத் 

தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் 

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ.


வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோ என்னும் இடையாளொடும் இளையானொடும் போனான் 

மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ 

ஐயோஇவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்.

-கம்பர். 



சிலப்பதிகாரம்

தூசும் துகிரும் ஆரமும் அகிலும் 

மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் 

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; 

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும். 

-இளங்கோவடிகள்.

தேம்பாவணி

நவமணி வடக்கயில் போல் 

நல்லறப் படலைப் பூட்டும் 

தவமணி மார்பன் சொன்ன 

தன்னிசைக்கு இசைகள் பாடத் 

துவமணி மரங்கள் தோறும் 

துணர்அணிச் சுனைகள் தோறும் 

உவமணி கானம்கொல் என்று 

ஒலித்து அழுவ போன்றே.

-வீரமாமுனிவர்.


செய்யுள் நெடுவினா (5 மதிப்பெண்)

1. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

  1. புலவர் பாடினார்.
  2. மன்னன் அவமதித்தான்.
  3. இறைவனிடம் முறையிட்டார்.
  4. இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்.
  5. அறிந்த மன்னன் இறைவனை வேண்டினான். 
  6. இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.

2. வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

  1. கருவி, காலம், செயல், செய்முறை அறிந்து செயல்படுவது
  2. மனவலிமை, மக்களைக் காத்தல், கற்றறிதல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் அமைவது
  3. நுண்ணறிவு, நூலறிவு கொண்டிருப்பது
  4. உலக நடைமுறை அறிந்து செயல்படுவது 

இவை அனைத்தும் அமைச்சருக்கும் நமக்கும் பொருந்தும்.

3. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

  1.  அன்று வண்ணக் குழம்பு. இன்று ஒட்டும் பொட்டுகள்
  2. அன்று அகன்ற வணிக வீதிகள். இன்று குறுகலான வணிக வீதிகள். 
  3. அன்று கைத்தொழில்கள் அதிகம். இன்று பெருந்தொழில்கள் அதிகம். 
  4. அன்று சிறிய கடைகள். இன்று பெரிய கடைகள்.
  5. அன்று பொருள்கள் குவிந்து கிடந்தன.. இன்று பொருள்கள் பல்பொருள் அங்காடிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

4. கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

உவமைகள்: 

  1. பூப் போன்ற கை
  2. நெற்பயிர் வாடுவது போல
  3. பறிக்கப்பட்ட மலர் போல 
  4. அம்பு பட்ட புண் போல
  5. துணையைப் பிரிந்த பறவை போல
  6. மணிமாலை அணிந்தது போல

உருவகங்கள்:

  1. வாய்மையே மழை நீராகி
  2. நல்லற மாலை


உரைநடை நெடுவினா (8 மதிப்பெண்)

1. நாட்டு வளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழி நின்று விளக்குக.

நாட்டு வளமும் சொல்வளமும்

  1. பல்வகைப் பயிர்கள் தமிழ்நாட்டில் விளைந்தன. 
  2. எல்லாப் பயிர்களுக்கும் பெயர்கள் உண்டு. 
  3. கார், மட்டை, சம்பா எனப் பல நெல்வகைகள். சம்பாவில் மட்டும் 60 வகைகள்.
  4. அடி வகை, கிளை வகை, இலை வகை, காய்ந்த அடியும் கிளையும், கொழுந்து வகை
  5. பூவின் நிலைகள், பிஞ்சு வகை, குலை வகை, கெட்டுப்போன காய்கனி வகை
  6. பழத்தோல் வகை, மணி வகை, இளம்பயிர் வகை எனப் பலவகைச் சொற்கள் தமிழில் உண்டு.
  7. இலைகளை நுண்பாகுபாடு செய்து தாள், இலை, தோகை, ஓலை எனப் பெயர் இட்டனர்.
  8. பாவாணரின் சொல்லாய்வுக் கட்டுரை மூலம் நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை அறியலாம்.

2. தமிழின் இலக்கிய வளம் - கல்வி மொழி - பிற மொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் -அறிவியல் கருத்துக்கள் - பிற துறை கருத்துக்கள் - தமிழுக்குச் செழுமை- மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு 'செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புகலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புகலை

  1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு-மணவை முஸ்தபா.
  2. தமிழின் இலக்கிய வளம்:சங்க இலக்கியம், நீதி நூல்கள், பக்தி இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பல.
  3. கல்வி மொழி: பல்துறை அறிவு, வேலைவாய்ப்பு, ஓருலகத் தன்மை
  4. பிற மொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்: ஷேக்ஸ்பியர், தாகூர் போன்றோர் படைப்புகள். திறனாய்வுக் கொள்கைகள்.
  5. அறிவியல் கருத்துக்கள்: கலீலியோ, நியூட்டன், எடிசன், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்றோரின் அறிவியல் சிந்தனைகள்.
  6. பிற துறை கருத்துக்கள்: அறிவியல், அரசியல், பொருளியல், சமூகவியல், இலக்கியம் 
  7. தமிழுக்குச் செழுமை: மொழிவளம், புதிய இலக்கிய வடிவம், மொழியில் புதுக்கூறுகள்
  8. ஒற்றுமைப்படுத்த உதவுவது, அகன்ற பார்வையைத் தருவது, பயன்கலை.

3. நாட்டு விழாக்கள் -விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றம் - மாணவர் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் 

  1. நாட்டு விழாக்கள்: சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, குழந்தைகள் தின விழா, ஆசிரியர் தின விழா, காந்தி ஜெயந்தி போன்றவை.
  2. விடுதலைப் போராட்ட வரலாறு: இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம், வங்கப் பிரிவினை, சூரத் பிளவு, காந்தி வருகை, ரவுலட் சட்டம், ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம், தனிநபர் சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், மவுண்ட் பேட்டன் திட்டம், இந்திய விடுதலை.
  3. நாட்டின் முன்னேற்றம்: ஐந்தாண்டுத் திட்டங்கள், வேளாண்மை, தொழில்துறை வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்புத் திட்டங்கள், தனியார்மயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல், கல்வி, மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, தல வருமானம் மேம்பாடு.
  4. மாணவர் பங்கு: நாட்டுப்பற்று, பொதுச்சொத்துக்களைப் பாதுகாத்தல், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றில் இணைந்து சேவை செய்தல். பெரியோருக்குக் கீழ்ப்படிதல். தேசிய ஒருமைப்பாட்டைப் காத்தல்.


விரிவானம் - நெடுவினா (8 மதிப்பெண்கள்)

1. அன்னமய்யா என்ற பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

கோபல்லபுரத்து மக்கள்

  1. கோபல்லபுரத்து மக்கள்- ஆசிரியர் கி. ராஜநாராயணன்
  2. கதைக்கரு: இருப்பதைப் பகிர்ந்து கொடுக்கிற நேயம்- கிராமத்து விருந்தோம்பல் 
  3. கதை மாந்தர்கள்: அன்னமய்யா, லாட சந்நியாசி (மணி, பரமேஸ்வரன்), நண்பன் சுப்பையா, அருகு எடுக்கிறவர்கள்.

கதைச்சுருக்கம்

  1. சாமியாரின் தோற்றம்:அன்னமய்யா ஒரு சாமியாரை இழுத்துட்டு வந்தான். அவன் சன்னியாசியோ பரதேசியோ இல்லை. வயோதிகனோ சாமியாரோ இல்லை. 
  2. தண்ணீர் கேட்டான்: நடக்க முடியாமல் மெதுவாக வந்தான். அவன் கண்களில் தீட்சண்யம். புன்னகை காட்டினான். தண்ணீர் கேட்டான். 
  3. அன்னமய்யாவின் உபசரிப்பு: நீச்சுத் தண்ணீர் வாங்கிட்டு வரட்டுமா? என்றான். எழுந்திருக்க கையை நீட்டினான். எங்க இருந்து வர்றீங்க என்று கேட்டான். தோளைப் பிடித்து நடக்கும்படி கேட்டான். வேப்ப மரத்தின் அடியில் இருந்த கலயத்தின் நீச்சுப் பாகத்தை வடித்துக் கொடுத்தான். சும்மா கடிச்சுக் குடிங்க என்றான். உட்கார்ந்து குடிங்க என்று உபசரித்தான். சோற்றின் மகுளியை வார்த்துக் கொடுத்தான். 
  4. தாய் அன்பு: வந்தவனுக்கு மிடறு தொண்டை வழியாக இறங்குவது போல் இருந்தது. அப்படியே தூங்கி விட்டான். பால் குடிக்கும்போதே தூங்கும் குழந்தையைத் தாய் பார்ப்பது போல பிரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். 
  5. பெயர்ப் பொருத்தம்:தூக்கம் முடியும் வரை காத்திருந்தான். வரத்துக்காரன் கண் விழித்தான். புன்னகைத்தான். படுத்துக்கொண்டே பேசினான். ஊர்ப் பெயர், தன் பெயரைக் கூறினான். பதிலுக்கு "உன் பெயர் என்ன?" என்று கேட்டான். "அன்னமய்யா" என்ற பெயரைக் கேட்டு மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான். எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

2. "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துக்களை விவரிக்க.

உனக்கு படிக்கத் தெரியாது

  1. மேரியின் வாழ்க்கையை "உனக்கு படிக்கத் தெரியாது" என்ற தலைப்பில் கமலாலயன் நூலாகப் படைத்துள்ளார்.
  2. கதைக்கரு: கல்வி அறிவற்ற சமூகத்தில் ஒற்றைச் சுடராக வந்து ஓராயிரம் சுடர்களை ஏற்றிய மேரியின் கதை. 
  3. கதை மாந்தர்கள்: கருப்பினச் சிறுமி மேரி, அம்மா பாட்ஸி, அப்பா சாம், வெள்ளைக்கார பென் வில்சனின் இரு குழந்தைகள், மிஸ் வில்சன்

கதைச்சுருக்கம்: 

  1. மேரி: கருப்பினச் சிறுமி மேரி. பருத்திக்காட்டில் வேலை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவள். சுறுசுறுப்பானவள். 
  2. உனக்குப் படிக்கத் தெரியாது: வெள்ளைக்காரச் சிறுமி வீட்டில் விளையாடிய போது அங்கிருந்த புத்தகத்தை எடுத்தாள். அப்போது "உன்னால் படிக்க முடியாது" என்ற வார்த்தைகளால் மனம் துவண்டாள். 
  3. படிக்க விரும்பினாள்: தான் படிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள். அங்கு பள்ளிக்கூடம் இல்லை. அறிமுகம் இல்லாத மிஸ் வில்சன் மேரியைப் படிக்க அழைத்தாள். 
  4. மேரி பட்டம் பெற்றாள்: மேயஸ்வில்லிக்கு பத்து மைல் தூரம் நடந்து சென்று படித்தாள். அக்கம் பக்கத்தவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தாள். பட்டம் பெற்றாள். 
  5. உயர்கல்விப் பயணம்: மிஸ் வில்சனிடம் மேலும் படிக்க விருப்பம் தெரிவித்தாள். மீண்டும் பருத்திக் காட்டுக்குத் திரும்பினாள். நாட்கள் நகர்ந்தன. வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி படிக்கப் பணம் அனுப்பினாள். மேரி உயர்கல்வி கற்கப் புறப்பட்டாள். அண்டை வீட்டுக்காரர் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டார். ஒவ்வொரு தெருவிலும் சிலர் கூடச் சேர்ந்து கொண்டனர். ரயில் நிலையத்தில் பலரும் காத்திருந்தனர். வாழ்த்தி வழி அனுப்பினர். மேரி பிற்காலத்தில் அமெரிக்க அதிபரின் ஆலோசகரானார்.


3. பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

பாய்ச்சல்

  1. பாய்ச்சல் கதையின் ஆசிரியர் சா.கந்தசாமி
  2. கதைக்கரு: கலைஞன் தனக்குத் தகுந்த வாரிசு உருவாகிற போது மிகவும் மகிழ்வான்.
  3. கதை மாந்தர்கள்: அனுமார், சிறுவன் அழகு

கதைச் சுருக்கம்:

  1. அனுமார் ஆட்டம்: அனுமார் ஆட்டத்தைக் காண அழகு ஓடினான். அனுமார் துள்ளிப் பாய்ந்தார். வேகமாக நடந்தார். தாவிக் குதித்தார். 
  2. அழகு பின் தொடர்ந்தான்: அழகு தன்னை அனுமார் போல நினைத்துக் கொண்டான். அனுமார் பந்தலில் ஏறி மறைந்தார். வாலில் தீப்பந்தம் கட்டி, கரணமடித்தார் . வாலைச் சுமந்து வந்த சிறுவன், அழகுவிடம் கொடுத்தான். அனுமார் கூடவே அழகு ஓடினான். 
  3. ஆட்டம் நின்றது: மூச்சு வாங்க ஆடினார். ஆட்டத்தை நிறுத்தினார். ஆலமரத்தடியில் சாய்ந்தார். உடுப்புகளைக் கழற்றினார். 
  4. அழகுக்காக அனுமார் ஆட்டம்: அழகு அதை அணிந்து ஆடிக் காட்டினான். அனுமார் மகிழ்ந்தார். அடி தப்பியது. அனுமார் ஆடிக் காட்டினார். 
  5. அனுமார் வாரிசு அழகு: இப்போது அழகு துள்ளிப் பாய்ந்து ஆடினான். பிடிக்க முயன்ற அனுமார் தரையில் விழுந்தார். அழகு வேகமாக ஆடிக் கொண்டிருந்தான்.


4. எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.

சாதனைப் பெண்மணிகள்

  1. எம்.எஸ்.சுப்புலட்சுமி:தாயே முதல் குரு. 10 வயதில் பாடினார். காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன் பாடல் புகழ்பெற்றவை. மீரா பஜன், வெங்கடேச சுப்ரபாதம் இவர் பாடியவை. மகசேசே விருது, இந்திய மாமணி விருது இவர் பெற்றவை.
  2. பால சரஸ்வதி: பரதநாட்டியக் கலைஞர். பண்டிட் ரவிசங்கர் பாராட்டியுள்ளார். பரதநாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தவர்.
  3. ராஜம் கிருஷ்ணன்:களப்பணியாற்றி கதை எழுதியவர். கரிப்பு மணிகள், குறிஞ்சித்தேன், அலைவாய்க் கரையில், சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், மண்ணகத்துப் பூந்துளிகள் புகழ்பெற்றவை. அறச்சீற்றம் கொண்டவர்.
  4. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர். உழுபருக்கே நில உரிமை இயக்கம் நடத்தியவர். விடுதலைப் போராட்ட வீரர்.
  5. சின்னப்பிள்ளை : களஞ்சியம் சுய உதவிக் குழு தொடங்கியவர். குழு மூலம் சேவை செய்தவர். பெண் ஆற்றல் விருது, ஔவை விருது, தாமரைத்திரு விருது பெற்றவர்.


5. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா 

இடம்- பள்ளி கலையரங்கம் நாள்:08.03.2026

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் - தலைமை ஆசிரியரின் வரவேற்பு - இதழாளர் கலையரசியின் சிறப்புரை - ஆசிரியர்களின் வாழ்த்துரை - மாணவத் தலைவனின் நன்றியுரை.

மகளிர் நாள் விழா -அறிக்கை

இடம்- பள்ளி கலையரங்கம் நாள்:08.03.2026

  1. கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடினர்
  2. தலைமை ஆசிரியர் சிறப்பு விருந்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும் வரவேற்றார்
  3. இதழாளர் கலையரசி பெண்ணின் பெருமையை வலியுறுத்தி சிறப்புரை வழங்கினார்.
  4. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
  5. மாணவத் தலைவன் நன்றியுரை வழங்கினார்.


6. கிடைப்பதற்கு அரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.

இராமானுசர் நாடகம்

  1. நாடகக்கரு: கிடைத்தற்கு அரிய திருமந்திரத்தை மக்களுக்குச் சொன்னவர் இராமானுசர்
  2. நாடக மாந்தர்கள்: இராமானுசர், முதலியாண்டான், கூரேசர், பூரணர்.

கதைச் சுருக்கம்:

  1. இராமானுசர் வருகை: திருமந்திரத் திருவருள் வேண்டி 18 வது முறையாக இராமானுசர் திருக்கோட்டியூர் பூரணர் இல்லத்திற்கு தன் நண்பர்களான முதலியாண்டான், கூரேசர் ஆகியோருடன் வருகை தந்தார். 
  2. பூரணரின் எச்சரிக்கை: பூரணர் இராமானுசரை தண்டும் கொடியுடன் மட்டுமே வர வேண்டும் என்று கூறியிருந்தார். இராமானுசர் தன் நண்பர்களைத் தண்டு, கொடிக்கு இணையானவர்கள் என்று கூறினார். பூரணர் திருமந்திரத்தை யாரிடமும் கூறக்கூடாது என்று எச்சரித்தார். 
  3. மந்திரத்தைக் கூறிய பூரணர்: பூரணர், "திருமகளுடன் கூடிய நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன். திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற திருமந்திரத்தை மூன்று முறை உச்சரித்தார். 
  4. மந்திரத்தைப் பொதுமக்களிடம் கூறிய இராமானுசர்: பின்னர் இராமானுசர் திருக்கோட்டியூர் சௌம்ய நாராயணன் திருக்கோவிலின் மதில் சுவரில் மேல் நின்று பொதுமக்களை அழைத்துத் திருமந்திரத்தைக் கூறினார். 
  5. பூரணரின் கோபம்: இதை அறிந்த பூரணர் இராமானுசர் மீது கோபம் கொண்டார். காரணம் கேட்டார். 
  6. இராமானுசரின் பதில்: இதனால் நான் மட்டுமே நரகத்தைச் சேர்வேன். என் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்வார்கள் என்றார் இராமானுசர். 
  7. பூரணரின் வாழ்த்து: இதைக் கேட்ட பூரணர், "எம் பெருமான், நீங்கள் நீடூழி வாழ வேண்டும்" என்று வாழ்த்தினார்.


7. குறிப்புகளைக் கொண்டு ஒருபக்க அளவில் நாடகம் எழுதுக. 

மாணவன் - கொக்கைப் போல, கோழியைப் போல - உப்பைப் போல - இருக்க வேண்டும் - கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் - குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும் கோழி -கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் -ஆசிரியர் விளக்கம் -மாணவன் மகிழ்ச்சி.

மாணவன் எப்படி இருக்க வேண்டும்? 

இடம்: பள்ளிக்கூடம்
பாத்திரங்கள்: மாணவன், ஆசிரியர்

மாணவன்: வணக்கம் ஐயா. மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
ஆசிரியர்: மாணவன் கொக்கைப் போல, கோழியைப் போல, உப்பைப் போல இருக்க வேண்டும்.
மாணவன்: கொக்கைப் போல இருக்க வேண்டும் என்றால் எப்படி ஐயா?
ஆசிரியர்: கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும். அதுபோல் காலமறிந்து செயல்பட வேண்டும். 
மாணவன்: கோழியைப் போல இருக்க வேண்டும் என்றால் எப்படி ஐயா?
ஆசிரியர்: கோழி குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும். அதுபோல நமக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாணவன்: உப்பை போல இருக்க வேண்டும் என்றால் எப்படி ஐயா?
ஆசிரியர்: கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும். அதுபோல நமது தனித்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
மாணவன்: நன்றி ஐயா!


கட்டுரை - நெடுவினா (8 மதிப்பெண்)

1. குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக.

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக. 

குறிப்பு: நூலில் தலைப்பு - நூலின் மையப் பொருள் -மொழி நடை -வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்பு - நூல் ஆசிரியர்.

மதிப்புரை 

  1. நூலின் தலைப்பு : மணிமேகலை
  2. நூலின் மையப்பொருள் : மணிமேகலை மேற்கொண்ட துறவு
  3. மொழிநடை : நாவல்
  4. வெளிப்படுத்தும் கருத்து : நிலையாமை, பசிப்பிணி போக்குதல், புத்தரின் போதனைகள்
  5. நூலின் நயம் : அமுதசுரபி பெற்றது, சாதுவன் உயிர் பிழைத்தது, சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியது போன்றவை நயம் மிகுந்தவை.
  6. நூல் கட்டமைப்பு : இவள் பெயர் மணிமேகலை முதல் குற்றம் தவிர்த்த வாழ்க்கை ஈறாக 66 தலைப்புகளில் நாவல் வடிவில் விளக்குகிறது.
  7. சிறப்பு : ஒரே மூச்சில் படித்து விட வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. புத்தரின் நன்னெறிகள் நூல் முழுவதும் தொடர்கின்றன.
  8. நூல் ஆசிரியர்: என். சொக்கன்


2 சாலை விதிகள் குறித்துக் கட்டுரை எழுதுக.

சாலை விதிகள்

முன்னுரை : சாலைப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். சாலை விதிகளைப் பின்பற்றினால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
சாலை விபத்துக்கள்: நாள்தோறும் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பொருளட் சேதமும் ஈடு செய்ய முடியாதவை.  
சாலைப் பாதுகாப்பு : பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள ஒவ்வொருவரும் சாலை விதிகளைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு - உயிர்ப் பாதுகாப்பு.
சாலை விதிகள் :
  1. அடையாளப் பலகைகளைப் புரிந்துகொண்டு ஊர்திகளை இயக்க வேண்டும்.
  2. தலைக்கவசம், இருக்கைப் பட்டை அணிய வேண்டும்
  3. மெதுவாகச் செல்ல வேண்டும். 
  4. பாலங்கள், வளைவுகள் ஆகிய இடங்களில் முந்திச் செல்லக்கூடாது.
  5. அவசர ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும்.
  6. இடப்புறமாகச் செல்ல வேண்டும்.
  7. திரும்பும் முன்பு சைகை விளக்கை ஒளிரச் செய்து கவனமாகத் திரும்ப வேண்டும்.
  8. ஊர்தியை இயக்கும்போது கைபேசியைப் பயன்படுத்தக் கூடாது
முக்கிய ஆவணங்கள் :
  1. ஓட்டுநர் உரிமம் 
  2. பதிவுச் சான்றிதழ் 
  3. காப்பீட்டுச் சான்றிதழ் 
  4. வரிச் சான்றிதழ் 
  5. இசைவுச் சான்றிதழ் ஆகியவற்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
விதிகளை அறிவோம்! விழிப்புணர்வு தருவோம்!


கடிதங்கள் ( 5 மதிப்பெண்)

1. மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல் 

17.03.2027,

விருதுநகர். 

அன்புள்ள தோழா,

நலம். நலம் அறிய ஆவல். மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்றாய் என்பதை அறிந்தேன். உள்ளம் மகிழ்ந்தேன். உன் ஆற்றலை அறிவேன். மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன். 

இப்படிக்கு, 

வீ.மகேந்திரன்

பெறுநர் 

க. அழகன், 

கலாம் நகர், 

விருதுநகர்.

 

2. மாவட்ட அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல் 

17.03.2027,

விருதுநகர். 

அன்புள்ள தோழா,

நலம். நலம் அறிய ஆவல். மாவட்ட அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றாய் என்பதை அறிந்தேன். உள்ளம் மகிழ்ந்தேன். உன் ஆற்றலை அறிவேன். மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன். 

இப்படிக்கு, 

வீ.மகேந்திரன்

பெறுநர் 

க. அழகன், 

கலாம் நகர், 

விருதுநகர்.

 

3. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.

நூலக வசதி வேண்டி விண்ணப்பம் 

அனுப்புநர் 

க. அழகன், 

கலாம் நகர், 

விருதுநகர்.

பெறுநர் 

நூலகத்துறை இயக்குநர், 

பொது நூலகத்துறை, 

சென்னை.

ஐயா,

பொருள்: நூலக வசதி வேண்டுதல் சார்பாக...

வணக்கம். உங்கள் கிராமத்தில் சுமார் 2000 பேர் வாழ்கிறோம். பொழுதைப் பயனுள்ள வழியில் கழிக்கவும், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறவும் எங்கள் ஊரில் நூலக வசதி செய்து தருமாறு வேண்டுகிறேன். 

இப்படிக்கு, 

க.அழகன்

இடம்: விருதுநகர் 

நாள்:17.03.2027

பெறுநர் 

நூலகத்துறை இயக்குநர், 

பொது நூலகத்துறை, 

சென்னை.


4. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் 

அனுப்புநர் 

க. அழகன், 

கலாம் நகர், 

விருதுநகர்.

பெறுநர் 

உணவுப் பாதுகாப்பு ஆணையர், 

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அலுவலகம், 

சென்னை.

ஐயா,

பொருள்: குறிஞ்சி உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் சார்பாக...

வணக்கம். நான் நேற்று குறிஞ்சி உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். பிரியாணி சாப்பிட்டேன். அது கெட்டுப் போய் இருந்தது. உரிமையாளரிடம் முறையிட்டேன். அவர் மிரட்டினார். கூடுதலாகக் கட்டணம் வசூலித்தார். எனவே குறிஞ்சி உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு, 

க.அழகன்

இடம்: விருதுநகர் 

நாள்:17.03.2027

பெறுநர் 

உணவுப் பாதுகாப்பு ஆணையர், 

உணவுப் பாதுகாப்பு ஆணையர் அலுவலகம்,  

சென்னை.


5. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர் 

க. அழகன், 

கலாம் நகர், 

விருதுநகர்.

பெறுநர் 

ஆசிரியர் 

தினமலர் நாளிதழ் 

சென்னை. 

ஐயா,

பொருள்: எனது கட்டுரையை வெளியிட வேண்டுதல் சார்பாக...

வணக்கம். தங்கள் நாளிதழின் பொங்கல் மலரில் நான் எழுதிய 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன்.

இப்படிக்கு, 

க.அழகன்

இடம்: விருதுநகர் 

நாள்:17.03.2027

பெறுநர் 

ஆசிரியர் 

தினமலர் நாளிதழ் 

சென்னை. 


விடைக்கேற்ற வினா உருவாக்குதல்: (2 மதிப்பெண்)

  1. இரண்டு தொடர்களுக்கும் தனித்தனியே இரண்டு வினாக்கள் உருவாக்க வேண்டும்
  2. கொடுக்கப்பட்ட தொடரை எழுதி இறுதியில் "என்பது சரியா?" என்று எழுதி முடிக்கவும்.

எ.கா. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.

விடை:தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை என்பது சரியா?


6. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

உறவினருக்குக் கடிதம்

17.03.2027,

விருதுநகர். 

அன்புள்ள அத்தைக்கு,

நலம். நலம் அறிய ஆவல். பள்ளித் திடலில் பணப்பை கிடந்தது. உரியவரைத் தொடர்பு கொண்டேன். ஒப்படைத்தேன். பாராட்டுப் பெற்றேன். நீங்கள் நல்வழி காட்டினீர்கள். அதனால் இந்தப் பாராட்டு கிடைத்தது. நன்றி அத்தை. 

இப்படிக்கு,

க.அழகன்

பெறுநர் 

திருமதி. க.கயல்,

கலாம் நகர், 

விருதுநகர்.

 

7. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் 

அனுப்புநர் 

க. அழகன், 

கலாம் நகர், 

விருதுநகர்.

பெறுநர் 

மின்வாரிய அலுவலர், 

மின்வாரிய அலுவலகம், 

விருதுநகர். 

ஐயா,

பொருள்: தெரு விளக்குகளைச் சரி செய்து தருமாறு வேண்டுதல் சார்பாக...

வணக்கம். எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு அச்சமாக இருக்கிறது. தெருவிளக்குகளைச் சரிசெய்து தருமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

க.அழகன்

இடம்: விருதுநகர் 

நாள்:17.03.2027

பெறுநர் 

மின்வாரிய அலுவலர், 

மின்வாரிய அலுவலகம், 

விருதுநகர். 

 

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை அளித்தல்:

இதில் இடம் பெறும் வினாக்கள் கீழ்க்கண்டவாறு அமையும்

  1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் என்ன? 
  2. இப்பாடலின் ஆசிரியர் யார்? 
  3. பாடலில் இடம்பெறும் எதுகை என்ன? 
  4. பாடலில் இடம்பெறும் மோனை என்ன? 
  5. பாடலில் இடம்பெறும் அடியெதுகை என்ன?
  6. பாடலில் இடம்பெறும் அடி மோனை என்ன? 
  7. சொல்லைப் பிரித்து எழுதுக?
  8. சொல்லின் பொருள் யாது? 
  9. இலக்கணக் குறிப்புத் தருக.

1 மதிப்பெண் உறுதி

  1. எதுகை: முதல் எழுத்து அளவு ஒத்து வந்து இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது 
  1. அடியெதுகை: முதல் அடியில் உள்ள சொல்லிலும் இரண்டாம் அடியில் உள்ள சொல்லிலும் முதல் எழுத்து அளவு ஒத்து வந்து இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது. 
  1. மோனை: முதல் எழுத்து ஒன்று போல் வருவது. 
  1. அடிமோனை: முதல் அடியில் உள்ள சொல்லிலும் இரண்டாம் அடியில் உள்ள சொல்லிலும் முதல் எழுத்து ஒன்று போல் வருவது.

சில முக்கிய இலக்கணக்குறிப்புகள்:

  1. மை உருபு மறைந்து வந்தால் பண்புத்தொகை 
  2. அல் தல் வந்தால் தொழிற்பெயர் 
  3. அவர் இவர் என முடிந்தால் வினையாலணையும் பெயர் 
  4. 'க' வில் முடிந்தால் வியங்கோள் வினைமுற்று 
  5. ஐ ஆல் கு இன் அது கண் உருபுகள் மறைந்து வந்தால் வேற்றுமைத்தொகை
  6. முற்றுப்பெறாமல் வந்தால் எச்சம். எச்சத்தின் பின் பெயர் வந்தால் பெயரெச்சம். எச்சத்தின் பின் வினை வந்தால் வினையெச்சம். 
  7. 'போன்ற' உவம உருபு மறைந்து வந்தால் உவமைத்தொகை.
  8. உவமை, பொருள் இடம் மாறி வந்தால் உருவகம்

நூல் - நூலாசிரியர் பட்டியல்(2 மதிப்பெண்)

  1. அன்னை மொழியே- கனிச்சாறு- பாவலரேறு பெருஞ்சித்திரனார் (துரை. மாணிக்கம்.)
  2. கண்ணதாசனின் ஆற்றல்-காலக்கணிதம்- கண்ணதாசன் (முத்தையா)
  3. பூமி உருவான விதம்-பரிபாடல்-கீரந்தையார்
  4. மேகத்தின் செயல்-மேகம்-நாகூர் ரூமி 
  5. விருந்தினரை வரவேற்கும் முறை-காசிக் காண்டம்-அதிவீர ராம பாண்டியர் 
  6. முருகன் செங்கீரைப் பருவம் அணிகலன்கள் ஆடியது- முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர் 
  7. இடைக்காடனார் மன்னர்- திருவிளையாடற் புராணம்-பரஞ்சோதி முனிவர் 
  8. கம்பனின் கவி நயம்- கம்பராமாயணம்-கம்பர்
  9. மருவூர்ப்பாக்க வணிக வீதிகள் சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள் 
  10. சேர சோழ பாண்டிய நாட்டு வளம்-முத்தொள்ளாயிரம்-பெயர் அறிய இயலவில்லை
  11. கருணையன் அழுகை-தேம்பாவணி-வீரமாமுனிவர் 
  12. தக்காளிக் கூடை-அக்கறை-கல்யாண்ஜி (வண்ணதாசன்)

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.(3 மதிப்பெண்)

மூன்று வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வினாவுக்கும் தனித்தனியே பதில் எழுத வேண்டும். கூடுமானவரை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். கண்டுபிடிக்க இயலவில்லை எனில் மூன்று வினாவுக்கும் தனித்தனியாக மூன்று முறை முழு பத்தியையும் எழுதவும். 
அ. முழுப் பத்தி
ஆ. முழுப் பத்தி
இ முழுப் பத்தி
பத்திக்கு ஏற்ற தலைப்பு கேட்டிருந்தால், பத்தியில் பலமுறைஇடம்பெற்றுள்ள ஒரு சொல்லை மட்டுமே விடையாக எழுத வேண்டும்.

அலகிட்டு வாய்ப்பாடு தருக. (3 மதிப்பெண்)

மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம் 

யாவுள முன்நிற் பவை

விதி 1:

கொடுக்கப்பட்ட சீர்களை வரிசையாக எழுதவும். 

  1. மதிநுட்பம் 
  2. நூலோ 
  3. டுடையார்க் 
  4. கதிநுட்பம் 
  5. யாவுள 
  6. முன்நிற் 
  7. பவை

விதி 2

மெய்யெழுத்து வந்தால் அதனை அடுத்து சாய்வுக்கோடு (' / ' ) போடவும். 

  1. மதிநுட்/பம் 
  2. நூலோ 
  3. டுடையார்க் 
  4. கதிநுட்/பம் 
  5. யாவுள 
  6. முன்/நிற் 
  7. பவை

விதி 3

முதல் எழுத்து குறிலாக இருந்தால் அதனுடன் கூடுதலாக ஒரு எழுத்தைச் சேர்த்துச் சாய்வுக்கோடு (' / ' ) போடவும். 

முதல் எழுத்து நெடிலாக இருந்தால் எந்த எழுத்தையும் சேர்க்காமல் உடனே சாய்வுக்கோடு (' / ' ) போடவும்.

  1. மதி/நுட்/பம் 
  2. நூ/லோ 
  3. டுடை/யார்க் 
  4. கதி/நுட்/பம் 
  5. யா/வுள 
  6. முன்/நிற் 
  7. பவை

விதி 4

இப்பொழுது மெய்யெழுத்தைத் தவிர்த்து, சாய்வுக் கோடுகளுக்கு இடைப்பட்ட எழுத்துக்களை எண்ணி எழுதவும்.

  1. மதி(2)/நுட்(1)/பம் (1)
  2. நூ(1)/லோ (1)
  3. டுடை(2)/யார்க் (1)
  4. கதி(2)/நுட்(1)/பம் (1)
  5. யா(1)/வுள (2)
  6. முன்(1)/நிற் (1)
  7. பவை(2)

விதி 5

1- எனில் 'நேர்' எனவும் 2-எனில் 'நிரை' எனவும் வலப்பக்கம் எழுதவும்.

  1. மதி(2)/நுட்(1)/பம் (1) - நிரை- நேர்- நேர் -
  2. நூ(1)/லோ (1)- நேர் -நேர் -
  3. டுடை(2)/யார்க் (1)- நிரை-நேர் -
  4. கதி(2)/நுட்(1)/பம் (1)- நிரை- நேர்-நேர்-
  5. யா(1)/வுள (2)-நேர்-நிரை-
  6. முன்(1)/நிற் (1)-நேர்-நேர்-
  7. பவை(2)-நிரை-

விதி 6

இதே போல் " தேமா புளிமா கருவிளம் கூவிளம்" ஆகிய ஈரசைச் சீர்களையும், "நாள் மலர் காசு பிறப்பு" ஆகிய ஓரசைச் சீர்களையும் பிரித்து அசை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஈரசைச் சீர்கள்

  1. தே(1)/மா (1)-நேர்-நேர்
  2. புளி(2)/மா (1)-நிரை-நேர்
  3. கரு(2)/விளம் (2)-நிரை-நிரை
  4. கூ(1)/விளம்(2)-நேர்-நிரை

ஓரசைச் சீர்கள்

  1. நாள் (1)- நேர்
  2. மலர் (2)-நிரை
  3. கா(1)/சு (1)- நேர்- நேர்
  4. பிறப்(2)/பு(1)- நிரை- நேர்

விதி 7

விதி 5 இல் உள்ள அசைகளையும் விதி 6 இல் உள்ள அசைகளையும் ஒப்பிட்டு விதி 6 இல் உள்ள வாய்ப்பாடுகளை எழுத வேண்டும். மூன்றாம் அசை வந்தால் வாய்ப்பாட்டின் இறுதியில் "காய்" சேர்த்து எழுத வேண்டும். இறுதிச் சீருக்கு மட்டும் "நாள் மலர் காசு பிறப்பு" இதில் எது பொருந்துகிறதோ அதை எழுதவும்.

  1. மதி(2)/நுட்(1)/பம் (1) - நிரை- நேர்- நேர் -புளிமாங்காய்
  2. நூ(1)/லோ (1)- நேர் -நேர் -தேமா
  3. டுடை(2)/யார்க் (1)- நிரை-நேர் -புளிமா
  4. கதி(2)/நுட்(1)/பம் (1)- நிரை- நேர்-நேர்-புளிமாங்காய்
  5. யா(1)/வுள (2)-நேர்-நிரை-கூவிளம்
  6. முன்(1)/நிற் (1)-நேர்-நேர்-தேமா
  7. பவை(2)-நிரை-மலர்

படிவம் நிரப்புதல்: 

  1. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை 
  2. பணி வாய்ப்பு வேண்டி தன்விவரப் படிவம் நிரப்புதல்
  3. நூலக உறுப்பினர் படிவம் 
  4. மேல்நிலை வகுப்பு -சேர்க்கை விண்ணப்பம்
  5. கொடுக்கப்பட்ட வினாவை நன்றாக வாசிக்க வேண்டும். பெயர், தந்தை பெயர், ஊர், மாவட்டம் ஆகியவற்றை அடிக்கோடு இடவேண்டும். அடிக்கோடிட்ட விவரங்களை கொடுக்கப்பட்ட படிவத்தில் முதலில் நிரப்ப வேண்டும். பிற விவரங்களைச் சுயமாக நிரப்பலாம். கையெழுத்து(பெயர்) கட்டாயமாக மறக்காமல் இட வேண்டும்.
  6. சேர்க்கை எண், அட்டை எண், உறுப்பினர் எண் போன்ற பொருந்தாத விவரங்களை நிரப்ப வேண்டாம். கொடுக்கப்பட்ட தகவல்களையும் அடிப்படையான தகவல்களையும் நிரப்பினால் போதும்.