- மனிதன் அறத்தோடு வாழ வேண்டும்? ஏன்?
- மனிதன் தனியானவன் அல்லன்
- அவன் சமூகக் கடலின் ஒரு துளி
- அவனுக்குள்ளே சமூகம்- சமூகத்துக்குள்ளே அவன்
- மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகுகிறது
- இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும்.
- அறநெறிக் காலம் என்றால் என்ன?
- சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக் காலம் என்பர்
- அறநெறிக் கால அறங்கள் சமயம் சார்ந்தவை
- சங்க இலக்கிய அறங்கள் பற்றி எழுதுக
- சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை
- சங்ககால வாழ்க்கையில் இருந்து உருவான அறங்களே சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளன
- சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல
- அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை குறித்து எழுதுக
- அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்து
- இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது என்று கூறப்பட்டது
- "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்" எனச் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார்
- அரசியல் அறம் பற்றி எழுதுக
- அறநெறி முதற்றே அரசின் கொற்றம், அறநெறி பிழையாத் திறனறி மன்னர் என்பவை மன்னர்கள் அறநெறியின் அடிப்படையில் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன.
- நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமை என்று சொல்லப்பட்டது.
- அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன்பொதிப் பசுங்குடையார்
- அறங்கூறு அவையம் பற்றிக் கூறுக
- "அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்" என்கிறது புறநானூறு
- அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன
- உறையூரில் இருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது
- மதுரையில் இருந்த அற அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது
- சங்க இலக்கியத்தில் போர் அறம் பற்றி எழுதுக
- போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது
- போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் துன்பம் வராமல் போர் புரிய வேண்டும்
- தன்னை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது
- கொடைச் சிறப்பைப் பாடும் இலக்கியங்கள் எவை?
- சிறுபாணாற்றுப்படை
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
- கொடைப் பெருமைகளாகப் பேசப்படுவன எவை?
- அரியன என்று கருதாது தயங்காது கொடுத்தல்
- ஈதலால் வரும் இழப்புக்கு வருந்தாமை
- நாள்தோறும் கொடுத்தல்
- எவையேனும் 4 வள்ளல்களின் சிறப்பை எழுது
- வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவன் பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
- உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்
- இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைப்பவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
- மறுமை நோக்கி கொடுக்காதவன் பேகன்
- தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விடப் பெருந்துன்பம் தருவதாகக் கூறியவன் குமணன்
- எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி.
- ஈதல் பற்றிக் கலித்தொகை கூறும் செய்தி யாது?
- ஈயாமை இழிவு
- இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது
- ஈதல் பற்றி நக்கீரர் கூறுவது யாது?
- செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே
- பிறருக்கு உதவுதல் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவன யாவை?
- "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று கலித்தொகை கூறுகிறது
- உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்கிறது நற்றிணை
- 'உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும்' என்று பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார்
- வாய்மை பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவன யாவை?
- பொய்யாச் செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன
- 'பிழையா நன்மொழி' என்று நற்றிணை குறிப்பிடுகிறது
- நிலம் புடை பெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்று கூறுகிறது
- பொய்ச் சான்று கூறாமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது
- சங்க இலக்கிய அறங்களின் தரம் எத்தகையது?
- இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது
- சங்க இலக்கியங்கள் அறங்கள் இயல்பான முதல்தரமான அறங்கள்
- போதிதர்மர் குறிப்பு வரைக
- கிபி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப் பெயர் பூண்டு சீனாவுக்குச் சென்றார்
- பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே ஜென் தத்துவம்
- இது பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது
- போதி தர்மருக்குச் சீனர்கள் கோவில் கட்டிச் சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருகின்றனர்
Monday, March 28, 2022
சங்க இலக்கியத்தில் அறம் 2 மதிப்பெண் வினாக்கள்
Sunday, March 27, 2022
சங்க இலக்கியத்தில் அறம் ஒரு மதிப்பெண் வினாக்கள்
- தமிழர்கள் இல்வாழ்க்கையை_________ஆகக் கொண்டனர்(அற வாழ்க்கை)
- தமிழர் பொருள் ஈட்டி_______ செய்து இன்புற்றனர் (அறம்)
- சங்ககாலத்தில் எதை மனித உறவின் மையமாக கொண்டிருந்தனர்?. (அறம்)
- உலகே பரிசாகக் கிடைத்தாலும் எச்செயல்களைச் செய்ய மறுத்தவர், தமிழர்? பழி தரும் செயல்களை....
- சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் எது? சங்க காலம்
- மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு _______(துளி)
- மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய______ பெருகுகிறது(மகிழ்ச்சி)
- மனிதன் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான _______ஐ மனிதன் ஏற்க வேண்டும்.(அறத்தை)
- அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதி எது? அறம்
- அறநெறிக் காலம் என்பது எது? சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக் காலம் என்பர்.
- அறநெறிக் கால அறங்கள் சமயம் சார்ந்தவை. ஆனால், சங்க இலக்கிய அறங்கள்______(இயல்பானவை)
- "கவிதை வாழ்க்கையின் திறனாய்வு" என்று கூறியவர் யார்? திறனாய்வாளர் ஆர்னால்டு
- சங்க அறங்கள் __________களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல(சமயங்கள்)
- அறம் செய்வதில்________ நோக்கம் இருக்கக் கூடாது(வணிக)
- அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது _______ மக்களின் கருத்தாக இருந்தது(சங்ககால)
- இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற _______ நோக்கு கூடாது என்று கூறப்பட்டது.(வணிக)
- "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்று குறிப்பிடும் இலக்கியம் எது? புறநானூறு
- "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்று பாடியவர் யார்? ஏணிச்சேரி முடமோசியார்
- "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்ற பாடல் வரிகள் உணர்த்தும் கருத்து யாது? நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை தரும்
- மன்னர்களிடம் உள்ள செங்கோலும் வெண்கொற்றக் குடையும் எதன் குறியீடாகப் போற்றப்பட்டன? அறத்தின் குறியீடாகப் போற்றப்பட்டன
- 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்', 'அறநெறி பிழையாத் திறனறி மன்னர்' என்ற பாடல் வரிகள் எதனைச் சுட்டுகின்றன? மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.
- அரசன் எதைப்போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ளவேண்டும்? செங்கோல்
- அரசனின் கடமை யாது? நீர்நிலை பெருக்கி நில வளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது.
- எதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்? அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்
- அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று பாடிய புலவர் யார்? ஊன்பொதிப் பசுங்குடையார்
- நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் இலக்கியம் எது? மதுரைக்காஞ்சி
- "செம்மை சான்ற காவிதி மாக்கள்" என்று அமைச்சர்களைப் பாடுபவர் யார்? மாங்குடி மருதனார்
- அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தவை எவை?அறம் கூறும் மன்றங்கள்
- அறம் கூறு அவையம் பற்றி "அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்" என்று பாடும் இலக்கியம் எது? புறநானூறு
- மதுரையில் இருந்த அற அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் எது? மதுரைக்காஞ்சி
- தனிச்சிறப்பு பெற்ற அற அவையம் எது? உறையூர் அற அவையம்
- துலாக்கோல் போல நடுநிலை மிக்க அற அவையம் எது? மதுரை அற அவையம்
- போர் அறம் என்பது யாது? வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையே போர் அறம் ஆகும்
- போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று கூறும் நூல் எது? புறநானூறு
- தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்று பாடியவர் யார்? ஆவூர் மூலங்கிழார்
- "எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்" என்று பாடும் இலக்கியம் எது? புறநானூறு
- எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்" என்று பாடிய புலவர் யார்? ஆவூர் மூலங்கிழார்
- உண்மையான மகிழ்ச்சி எது? தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி.
- ___________யை மறப்பது தான் மகிழ்ச்சி (தன் மகிழ்ச்சி)
- "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று பாடிய புலவர் யார்? மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
- "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று பாடும் என்ன நூல் எது? புறநானூறு
- கொடையின் சிறப்பால் போற்றப்படும் வள்ளல்கள் எத்தனை பேர்? 7
- வள்ளல்களின் கொடைப் பெருமையைப் பாடும் இலக்கியங்கள் எவை? சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்
- ஆற்றுப்படை இலக்கியங்கள் _________இலக்கியங்களாகவே உள்ளன(கொடை)
- பதிற்றுப்பத்து_______ அரசர்களில் கொடைப் பதிவாகவே உள்ளது (சேர)
- "இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன்" என்று போற்றப்படுபவர் யாவர்? வள்ளல்கள்
- வழங்குவதற்குப் பொருள் உள்ளதா என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் வள்ளல் யார்? பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன்
- பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாராட்டுபவர் யார்? நக்கீரர்
- "வள்ளலின் பொருள் இரவலனின் பொருள். வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை" என்று குறிப்பிடுவர் யார்? பெரும்பதுமனார்
- உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்? அதியமான்
- "உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்" என்று பாடியவர் யார்? அவ்வையார்
- இரவலர் தேடி வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் யாருடைய இயல்பு? ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய புலவர் யார்? நச்செள்ளையார்
- மறுமை நோக்கிக் கொடுக்காதவன் யார்? பேகன்
- "மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் பேகன்" என்று பாடியவர் யார்? பரணர்
- "தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திருப்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் தருகிறது" என்று வருந்தியவர் யார்? பெருந்தலைச் சாத்தனார்
- பெருந்தலைச் சாத்தனாரைப் பாடிய புலவர் யார்? குமணன்
- எல்லாவற்றையும் கொடுப்பவன் யார்?மலையமான் திருமுடிக்காரி
- "எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி" என்று பாடிய புலவர் யார்? கபிலர்
- "ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டு விடுதல் மேலானது" என்று பாடும் நூல் எது? கலித்தொகை
- தாம் பெற்றதைப் பிறருக்கு வழங்கிய புலவர் யார்? பெருஞ்சித்திரனார்
- தாம் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளத்தைப் பலப்படுத்தும் இலக்கியம் எது? புறநானூறு
- உதவி செய்தலை ஈழத்துப் பூதன்தேவனார் எவ்வாறு குறிப்பிடுகிறார்? உதவியாண்மை
- "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று கூறும் இலக்கியம் எது? கலித்தொகை
- கலித்தொகையை பாடியவர் யார்? நல்லந்துவனார்
- "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று பாடியவர் யார்? நல்லந்துவனார்
- "உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்" என்று பாடியவர் யார்? நல்வேட்டனார்
- சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே என்று பாடும் இலக்கியம் எது? நற்றிணை
- "உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும்" என்று பாடியவர் யார்? பெருங்கடுங்கோ
- செல்வம் என்பது சிந்தையின் நிறைவு___________(நிறைவு)
- நிறைவடைகிறவனே செல்வன் என்று கூறுவது எது? சீன நாட்டுத் தாவோவியம்
- பிறருக்கு உதவாமல் மனிதத்திற்குக் கொடும்பாவி கட்டுவது _____காலத்தில் இல்லை.(சங்க)
- ______________ சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. (வாய்மையை)
- வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை வலியுறுத்தும் வரிகள் யாவை? பொய்யா செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா
- _______ ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள்(நாக்கு)
- இன்பத்தின் கதவைத் திறப்பதும் துன்பத்தின் கதவைத் திறப்பதும் எது? நாக்கு
- ______ பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. (மெய்)
- ______ பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது(பொய்)
- 'பிழையா நன்மொழி' என்று வாய்மை பற்றிக் குறிப்பிடும் நூல் எது? நற்றிணை
- நிலம் புடை பெயர்ந்தாலும் ____ சொல்லக்கூடாது(பொய்)
- தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் _______தரமானது(மூன்றாம்)
- சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் _______தரமானது (இரண்டாம்)
- இயல்பாக அறியும் அறம் ______தரமானது (முதல்)
- சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான _______ தரமான அறங்கள்.(முதல்)
- போதிதர்மர் எந்த நூற்றாண்டில் சீனாவிற்குச் சென்றார்? 6
- போதிதர்மர் சீனாவில் எந்தத் தத்துவத்தைப் போதித்தார்? பவுத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவு
- ஜென் தத்துவம் உருவாகக் காரணமானவர் யார்? போதிதர்மர்
- போதிதர்மர் யார்? கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர்
- போதி தர்மருக்கு சீனர்கள் செய்த கைம்மாறு என்ன? போதி தர்மருக்குச் சீனர்கள் கோவில் கட்டிச் சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருகின்றனர்.
- ஜென் தத்துவம் எதிலிருந்து உருவானது? போதி தர்மரின் தத்துவப் போதனையில் இருந்து...
புறப்பொருள் இலக்கணம் 1 mark
புறப்பொருள் இலக்கணம் ஒரு மதிப்பெண் வினாக்கள்
- வெட்சி என்பது யாது? ஆநிரை கவர்தல்
- கரந்தை என்பது யாது? ஆநிரை மீட்டல்
- வஞ்சி என்பது யாது? மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது
- காஞ்சி என்பது யாது? மாற்று அரசனோடு எதிர்த்து போரிடுவது
- நொச்சி என்பது யாது? மதில் காத்தல்
- உழிஞை என்பது யாது? கோட்டையை சுற்றி வளைத்தல்
- தும்பை என்பது யாது? வீரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிடுவது
- வாகை என்பது யாது? வெற்றி பெற்ற மன்னன் வாகைப் பூவைச் சூடி மகிழ்வது
- பாடாண்திணை என்பது யாது? ஆண்மகனைப் புகழ்ந்து பாடுவது
- பொதுவியல்திணை என்பது யாது? வெட்சி முதல் பாடாண்திணை வரை சொல்லாத செய்திகளைப் பொதுவாகக் கூறுவது
- கைக்கிளை என்பது யாது? ஒருதலைக் காமம்
- பெருந்திணை என்பது யாது? பொருந்தாக் காமம்
- இட்லிப் பூ எனப்படுவது எது? வெட்சிப் பூ
- கரந்தையின் வேறு பெயர் என்ன? கொட்டைக்கரந்தை
- பஞ்சு போன்ற நுண்மயிர் உடைய பூ எது? வஞ்சி
- முடக்கத்தான் பூ என்பது எது? உழிஞை
- வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி எது? தும்பை
- கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீல நிற, மணம் உள்ள பூ எது? காஞ்சிப் பூ
- கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீல நிற மருதநிலப் பூ எது? நொச்சி
- கொத்துக் கொத்தாகப்பூக்கும் மங்கிய வெள்ளை நிறப் பூ எது? வாகை
Friday, March 5, 2021
இலக்கணக் குறிப்பு
இலக்கணக் குறிப்பு
பக்கம் 34
மூதூர்- பண்புத்தொகை
(முதுமை+ஊர்-->முதுமை ஆகிய ஊர். இங்கு 'மை' என்னும் பண்பு உருபும் 'ஆகிய', 'ஆன' ஆகிய பண்பு உருபுகளும் மறைந்து வந்துள்ளதால் இது பண்புத்தொகை ஆயிற்று.)
உறுதுயர்- வினைத்தொகை
உற்ற துயர்
உறுகின்ற துயர்
உறும் துயர்
இங்கு, 'உற்ற, உறுகின்ற, உறும்' ஆகியவை பெயரெச்சங்கள். 'உறுதுயர்' என்ற சொல்லில் மூன்று காலங்களையும் காட்டக்கூடிய எச்சங்கள் மறைந்து வந்துள்ளன. இவ்வாறு 'காலம் கரந்த பெயரெச்சம்' வினைத்தொகை எனப்படுகிறது. கரந்த- மறைந்து வந்த...
கைதொழுது- மூன்றாம் வேற்றுமைத்தொகை.
கைதொழுது என்பது 'கையால் தொழுது' என விரிந்து வரும். கைதொழுது என்ற சொல்லில் மூன்றாம் வேற்றுமை உருபு 'ஆல்' மறைந்து வந்துள்ளது. எனவே இது மூன்றாம் வேற்றுமைத்தொகை ஆயிற்று.
தடக்கை- உரிச்சொற்றொடர்
(தட- நீண்ட )
நீண்ட கை என்பது இதன் பொருள்.
பெயர் மற்றும் வினைச்சொற்களின் பொருளை உயர்த்திக் கூறுவது உரிச்சொற்கள் ஆகும். இயல்பான கையை நீண்ட கை என உயர்வாகக் கூறியதால் இது உரிச்சொல் ஆயிற்று.
பக்கம் 55
நன்மொழி-பண்புத்தொகை
நன்மொழி- நன்மை+மொழி
நன்மை ஆகிய மொழி, நன்மையான மொழி- என விரிந்து வருகிறது. இதில் 'மை', 'ஆன', 'ஆகிய' என்னும் பண்பு உருபுகள் மறைந்து வந்துள்ளதால் இது பண்புத்தொகை ஆயிற்று.
வியத்தல்- தொழிற்பெயர்
வியப்பு என்னும் வினையைக் குறிக்கக்கூடிய பெயர் ஆதலின் இது தொழிற் பெயர் ஆயிற்று.
தொழிற்பெயர் விகுதி 'தல்' வந்துள்ளது.
நோக்கல்- தொழிற்பெயர்
நோக்கு+ அல்
'நோக்கு' என்ற வினையைக் குறிக்கக்கடிய தொழிலின் பெயர் ஆதலின் தொழிற் பெயர் ஆயிற்று.
தொழிற்பெயர் விகுதி 'அல்' வந்துள்ளது.
எழுதுதல்- எழுது என்ற வினையைக் குறிக்கக்கூடிய பெயர் ஆதலின் தொழிற்பெயர் ஆயிற்று.
தொழிற்பெயர் விகுதி 'தல்' வந்துள்ளது
உரைத்தல்- தொழிற்பெயர்
உரை என்ற வினையின் பெயர் ஆதலின் இது தொழிற் பெயர் ஆயிற்று.
தொழிற்பெயர் விகுதி 'தல்' வந்துள்ளது
செப்பல்- தொழிற்பெயர்
செப்பு (சொல்லு) என்ற வினையின் பெயரைக் குறிப்பதால் இது தொழிற் பெயர் ஆயிற்று.
செப்பு+ அல்
இங்கே தொழிற்பெயர் விகுதி 'அல்' வந்துள்ளது.
இருத்தல்- தொழிற்பெயர்
இரு என்ற வினையின் பெயரை குறிப்பதால் இது தொழிற் பெயர் ஆயிற்று.
இங்கே 'தல்' என்ற தொழிற்பெயர் விகுதி வந்துள்ளது.
வழங்கல்- வழங்கு என்ற வினையின் பெயரைக் குறிப்பதால் இது தொழிற் பெயராயிற்று.
வழங்கு+ அல்
இங்கே 'அல்' என்பது தொழிற்பெயர் விகுதி ஆகும்.
பக்கம் 57
அசைஇ- சொல்லிசை அளபெடை
அசைஇ- இளைப்பாறி
அசாவிடுதல்-இளைப்பாறுதல்
அசா- இளைப்பாறுதல்
அசா-->அ-ச்-❌ஐ-->அசை -->அசை+இ-->அசைஇ
ஐகாரத்தின் இனமான 'இ' அளபெடுத்து, இளைப்பாறுதல் என்ற பெயர்ச் சொல்லை (தொழிற்பெயரை) 'இளைப்பாறி' என்ற வினை எச்சச்சொல்லாக மாற்றுகிறது.
இவ்வாறு பெயர்ச் சொல்லின் மீது 'இ' என்னும் எழுத்து அளபெடுத்து வினையெச்சச் சொல்லாக மாற்றுவது சொல்லிசை அளபெடை ஆகும்.
கெழீஇ- சொல்லிசை அளபெடை
கெழு- துணை, உறவு, பழக்கம்
கெழு- பழக்கம்--> பெயர்ச்சொல் ( தொழிற்பெயர்)
கெழு+ஈ+இ-->பழகி
இவ்வாறு குறில் நெடிலாகி, நெடிலுக்கு இனமான குறில் அளபெடுத்து பெயர்ச்சொல்லை வினையெச்சச் சொல்லாக மாற்றுவது சொல்லிசை அளபெடை ஆகும்.
பரூஉக்குறை- இன்னிசை அளபெடை
பரு-->பரூ-->பரூ+உ-->பரூஉ
பரு-பருமன்(அளவு)
இங்கே எழுத்துக்கள் அளவு எடுக்கவில்லை எனில்
'பருக்குறை ' என்று வந்திருக்கும்
'பருக்குறை' என்று சொல்லும்போது செய்யுளில் ஓசை குறையவில்லை.
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக உயிரெழுத்துக்கள் அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
குரூஉக்கண்- இன்னிசை அளபெடை
குரு--> குரூ-->குரூஉ
குரு- நிறம் (சிவந்த நிறமுடைய)
குருக்கண் என்று சொல்லும்போது செய்யுளில் ஓசை குறையவில்லை. இனிய ஓசைக்காகவே குருக்கண்--> குரூஉக்கண் ஆனது. இவ்வாறு இனிய ஓசைக்காக உயிரெழுத்துக்கள் அளபெடுப்பதால் இது இன்னிசை அளபெடை ஆயிற்று.
பக்கம் 85
ஊழ் ஊழ்- அடுக்குத்தொடர்
சொற்கள் அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும்.
வளர்வானம்- வினைத்தொகை
வளர்ந்த வானம்
வளர்கின்ற வானம்
வளரும் வானம்
காலம் கரந்த பெயரெச்சம் ஆதலின் வினைத்தொகை ஆயிற்று.
செந்தீ- பண்புத்தொகை
செம்மை+ தீ
செம்மை ஆன தீ
செம்மை ஆகிய தீ
"மை, ஆன, ஆகிய " என்னும் பண்பு உருபுகள் மறைந்து வந்துள்ளதால் இது பண்புத்தொகை ஆயிற்று.
வாரா- ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
உரு அறிவாரா- உருவம் அறிய இயலாத
வாரா- இயலாத
'வாராத' என்று வந்திருக்க வேண்டும்.
ஆனால் ஈற்றெழுத்து ( கடைசி எழுத்து) கெட்டு அழிந்து போய், மீதமுள்ள எழுத்துகள் வந்துள்ளன.
வாராத- எதிர்மறைப் பொருளில் வந்துள்ளது.
இவ்வாறு, ஈறுகெட்டும் எதிர்மறை பொருளிலும் வந்துள்ளதால், இது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும்.
பக்கம் 110
கேள்வியினான்- வினையாலணையும் பெயர்
கருத்தா- வினையைச் செய்பவர் (பெயர்)
கருத்தா செய்யும் வினையால் பெயரின் (கருத்தாவின்) முக்கியத்துவம் குறைவது (அணைவது) போல அமையும் சொல், வினையாலணையும் பெயர் ஆகும். வினையால் அணையும் பெயர்.
ஒரே சொல் வினையையும் வினைசெய்பவரையும் காட்டும்.
வினையால் அணையும் பெயரின் பகுதி வினைச்சொல்லாகவும் விகுதி பிரதிப்பெயராகவும் (அவன், அவள், அவர், அது, அன், ஆர் ) அமையும்.
கேள்வியின்+ ஆனான்
சான்றோர்தம் வாய்ச் சொற்களைக் கேட்டறியும் தன்மையினை உடையவன் ஆனான்
கேள்வி- கேட்டறி- வினைச்சொல்
ஆனான்- (கேட்டறிந்தவன்)- கருத்தா- பெயர்ச்சொல்
வினைச்சொல்லால் பெயர்ச்சொல் அணைகிறது. அதனால் இது வினையாலணையும் பெயராயிற்று.
காடனுக்கும் கபிலனுக்கும் - எண்ணும்மை
காடனுக்கும்- உம்
கபிலனுக்கும்- உம்
இங்கு 'உம்' என்னும் அசைச்சொல் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வந்துள்ளது. எண்ணிக்கையில் வந்துள்ளதால் எண்ணும்மை ஆயிற்று.
பக்கம் 134
குண்டலமும் குழைகாதும்- எண்ணும்மை
குண்டலமும்-உம்
குழைகாதும்- உம்
எண்ணிக்கையில் 'உம்' என்னும் அசைச்சொல் வந்துள்ளதால் 'எண்ணும்மை' ஆயிற்று.
ஆடுக- வியங்கோள் வினைமுற்று
ஆடுக- வினைச் சொல்லின் பொருள் முழுமை பெற்றுள்ளதால் 'வினைமுற்று' ஆயிற்று.
வேண்டல், விதித்தல், வாழ்த்துதல், வைதல் என்னும் பொருள்பட வரும் தொடர் உணர்ச்சித் தொடர் ( வியப்புத் தொடர்) ஆகும்.
இங்கு 'ஆடுக' என்ற வினைமுற்று வியப்புப் பொருளில் வருவதால் இது வியங்கோள் வினைமுற்று ஆகும்.
பக்கம்-169
வண்ணமும் சுண்ணமும்- எண்ணும்மை
வண்ணமும்-உம்
சுண்ணமும்- உம்
எண்ணிக்கையில் 'உம்' வந்துள்ளதால் இது எண்ணும்மை ஆயிற்று.
பயில்தொழில்- வினைத்தொகை
பயின்ற தொழில்
பயில்கின்ற தொழில்
பயிலும் தொழில்
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை ஆகும்.
காக்கென்று- தொகுத்தல் விகாரம்
காக்கவென்று என்று வந்திருக்க வேண்டும்.
காக்க+ என்று--> காக்க+வ்+என்று---> காக்கவென்று (வ்- உடம்படு மெய்) ---என்று இயல்பாக வந்திருக்க வேண்டும்.
ஆனால்,
காக்க+ என்று--> காக்க்+என்று (அகர ஈறு கெட்டு) --> காக்கென்று
இவ்வாறு இயல்பான வடிவமாய் இல்லாமல் குறைந்த எழுத்துகளால் (சொல்லினது பொருளைத் தொகுத்து) கூறுவது, தொகுத்தல் விகாரம் ஆகும்.
கணீர்- இடைக்குறை
'கண்ணீர்' என்று வந்திருக்க வேண்டும். சொல்லின் இடையில் ஓர் எழுத்து குறைந்து வந்துள்ளதால் இது 'இடைக்குறை' ஆயிற்று.
காய்மணி- வினைத்தொகை
காய்த்த மணி
காய்க்கின்ற மணி
காய்க்கும் மணி
உய்முறை- வினைத்தொகை
உய்த்த முறை
உய்க்கின்ற முறை
உய்க்கும் முறை
செய்முறை- வினைத்தொகை
செய்த முறை
செய்கின்ற முறை
செய்யும் முறை
மெய்முறை- வேற்றுமைத் தொகை
மெய்யின்(உடலின்) முறை- 'இன்' வேற்றுமை உருபு- வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகையாகும்.
கைமுறை- மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
கையால் செய்யும் முறை-
'ஆல்'- மூன்றாம் வேற்றுமை உருபு
செய்யும்- 'கை' என்ற கருவியின் பயன்
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் மறைந்து வந்துள்ளதால் இது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும்.
பகுபத உறுப்பிலக்கணம்
பகுபத உறுப்பிலக்கணம்
பக்கம் 34
பொறித்த- பொறி+த்+த்+அ
பொறி- பகுதி
த்- சந்தி
த்-இறந்த கால இடைநிலை
அ- பெயரெச்ச விகுதி
பக்கம் 84
கிளர்ந்த- கிளர்+த்(ந்)+த்+அ
கிளர்- பகுதி
த்-சந்தி
ந்- விகாரம்
த்- இறந்த கால இடைநிலை
அ- பெயரெச்ச விகுதி
_____________________________________
பக்கம் 55
உரைத்த- உரை+த்+த்+அ
உரை- பகுதி
த்-சந்தி
த்-இறந்த கால இடைநிலை
அ- பெயரெச்ச விகுதி
வருக- வா(வரு)+ க
வா- பகுதி
வரு- விகாரம்
க- வியங்கோள் வினைமுற்று விகுதி
பக்கம் 57
மலைந்து- மலை- த்(ந்)+த்+உ
மலை- பகுதி
த்-சந்தி
ந்- விகாரம்
த்- இறந்த கால இடைநிலை
உ- வினையெச்ச விகுதி
பொழிந்த- பொழி+த்(ந்)+த்+அ
பொழி- பகுதி
த்-சந்தி
ந்-விகாரம்
த்-இறந்த கால இடைநிலை
அ-பெயரெச்ச விகுதி
பக்கம் 110
தணிந்தது- தணி+ த்(ந்)+த்+அ+து
தணி- பகுதி
த்-சந்தி
ந்- விகாரம்
த்-இறந்த கால இடைநிலை
அ- சாரியை
து- படர்க்கை வினைமுற்று விகுதி.
பக்கம் 134
பதிந்து- பதி+த்(ந்)+த்+உ
பதி- பகுதி
த்-சந்தி
ந்-விகாரம்
த்-இறந்த கால இடைநிலை
உ- வினையெச்ச விகுதி
பக்கம் 169
மயங்கிய-மயங்கு+இ(ன்)+ ய்+அ
மயங்கு- பகுதி
இ(ன்)- இறந்தகால இடைநிலை
ன்- விகாரம்(புணர்ந்து கெட்டது)
ய்- உடம்படுமெய் சந்தி
அ-பெயரெச்ச விகுதி
பக்கம் 215
அறியேன்- அறி+ய்+(ஆ)+ஏன்
அறி- பகுதி
ய்- உடம்படுமெய் சந்தி
ஏன்- தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
ஒலித்து- ஒலி+த்+த்+உ
ஒலி- பகுதி
த்-சந்தி
த்-இறந்த கால இடைநிலை
உ- வினையெச்ச விகுதி
Wednesday, March 3, 2021
மொழியை ஆள்வோம் இயல் 2
மொழியை ஆள்வோம்! இயல் 2
பக்கம் 45
சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க
இன்சொல், எழுகதிர், கீரி பாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்
எ.கா. இன்சொல்-பண்புத்தொகை-இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு
1) எழுகதிர்- வினைத்தொகை
எழுந்த கதிர், எழுகின்ற கதிர், எழும் கதிர்- காலம் கரந்த பெயரெச்சம்- ஆதலின் இது வினைத்தொகை ஆயிற்று.
எழு- ஏவல் வினை
தொடர்: எழுகதிரைத் தொழுதெழ இன்பங்கூடுமடி பாப்பா!
2) கீரிபாம்பு- உம்மைத்தொகை
கீரியும் பாம்பும்- இதில் ‘உம்’ மறைந்து வந்துள்ளதால் உம்மைத்தொகை ஆயிற்று.
கீரியும் பாம்பும் சண்டையிட்டுக் கொண்டன.
3) பூங்குழல் வந்தாள்- அன்மொழித்தொகை
பூப்போன்ற கூந்தலை உடைய பெண் ஒருத்தி வந்தாள்- இதில் போன்ற, உடைய பெண் ஒருத்தி ஆகிய சொற்கள் மறைந்து வந்துள்ளன. இத்தொடரில் அல்லாத சொற்கள் மறைந்து வந்துள்ளதால் இது அன்மொழித்தொகை ஆயிற்று.
தொடர்: பூப்போன்ற குழலை உடைய பெண் வந்தாள்
4) மலை வாழ்வார்- ஏழாம் வேற்றுமைத்தொகை
மலையின்கண் வாழ்வார்- ஏழாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதால் இது ஏழாம் வேற்றுமைத் தொகை ஆகும்.
தொடர்: மலையின்கண் வாழும் மலைவாழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினர்.
5) முத்துப்பல்- உவமைத்தொகை
முத்து போன்ற பல்- இதழ் ‘போன்ற’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. எனவே இது உவமைத்தொகை ஆயிற்று.
தொடர்: முருகப்பெருமானின் முத்துப்பல் ஒளி வீசியது.
பக்கம் 46
செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்
பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள்: மாலைமலர்; பலா மலர்.
மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகளில் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.
பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப்பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூக்கள் குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
1) மலர் உண்டு; பெயரும் உண்டு- இரண்டு தொடர்களையும் ஒரு தொடராகக்குக.
விடை: மலரும், மலருக்குப் பெயரும் உண்டு
2) அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரை கண்டறிக.
விடை: காய் தோன்றிக் கனியாகி….
3) நீங்கள் அறிந்த இழப்புக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.
பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.
கள்ளிப்பூ இறைவழிபாட்டிற்கு உரியது.
4) அரிய மலர்- இலக்கணக் குறிப்புத் தருக.
குறிப்புப் பெயரெச்சம்
5) தொடரில் பொருந்தாப் பொருள்தரும் மயங்கொலி எழுத்துக்களைத் திருத்துக.
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.
விடை:
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.
.
மொழியை ஆள்வோம் இயல் 3
மொழியை ஆள்வோம் இயல் 3
பக்கம் 67
பழமொழிகளை நிறைவு செய்க.
1. உப்பில்லாப்______________
பண்டம் குப்பையிலே!
2. ஒரு பானை _______________
சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
3) உப்பிட்டவரை ______________
உள்ளளவும் நினை.
4) விருந்தும் ___________
மருந்தும் மூன்று நாளைக்குத்தான்.
5) அளவுக்கு____________
மீறினால் அமிர்தமும் நஞ்சு.
பத்தியைப் படித்துக் கருத்தை சுருக்கி எழுதுக.
பழைய சோறு
பச்சை நெல் வயலைக் கண்கள் முழுவதும் சுமந்து, இள நெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான்.
அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாக்கும் முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கல் அரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழைய சோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒருவகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்து கொள்ள துடிப்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்லது பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழையசோறு – அது கிராமத்தின் உன்னதம்.
“… மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து…”. – முக்கூடற்பள்ளு
சுருங்கிய வடிவம்
பச்சை நெல்லை நீராவியில் அவித்து, காயவைத்து, குத்தி, பகலில் சமைத்த புழுங்கலரிசிச் சோற்றை இரவு முழுவதும் ஊறவைத்தால் அது பழைய சோறு. அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் கடித்துக் குடிப்பது ஒரு வகை. வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காயுடன் சேர்த்துச் சாப்பிடுவது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல்நாள் குழம்புடன் சேர்த்துக்கொள்வது மற்றொரு வகை. பழைய சோறு – அது கிராமத்து உன்னதம்.
“மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து” …… முக்கூடற்பள்ளு