Tuesday, April 26, 2022
மொழியை ஆள்வோம் இயல் 8 பக்கம் 199
மொழியோடு விளையாடு இயல்7 பக்கம் 181
மொழியோடு விளையாடு இயல்7 பக்கம் 181
ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக
- புதுக்கோட்டை- புதுகை
- திருச்சிராப்பள்ளி- திருச்சி
- உதகமண்டலம் -உதகை
- கோயம்புத்தூர் -கோவை
- நாகப்பட்டினம்- நாகை
- புதுச்சேரி -புதுவை
- கும்பகோணம் -குடந்தை
- திருநெல்வேலி -நெல்லை
- மன்னார்குடி-மன்னை
- மைலாப்பூர் -மயிலை
- சைதாப்பேட்டை- சைதை
படம் தரும் செய்தியைப் பத்தியாகத் தருக
இந்தப் படம் திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் கண்டுபிடிக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டின் சுவர் ஓவியம் ஆகும். இப்படம் போருக்குச் செல்லும் குதிரைப்படை, காலாட்படை, யானைப் படை வீரர்களைக் காட்சிப்படுத்துகிறது. போருக்குச் செல்லும் வீரர்கள் வாள், வேல், வில்- அம்பு முதலியவற்றை ஏந்திச் செல்வர். தமிழர்கள் வீரத்தைத் உயிராகக் கருதினர். போரில் விழுப்புண் பட்டு உயிர் விடுவதை பெருமையாகக் கருதினர்.
மொழியை ஆள்வோம் இயல்7 பக்கம் 180
மொழியை ஆள்வோம்
பின்வரும் தொடர்களை கொண்டு பொருத்தமான தொடரமைக்க
வரப் போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்.
எ.கா.
இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்.
- நம் நாட்டில் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது
- இந்தியர்களுக்கு தேசப்பற்று கொஞ்சம் அதிகம்.
- திருடன் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தான்.
- பிறர் செய்த தீங்கை மறக்க நினைக்கிறேன்.
தொகைச் சொற்களைப் பிரித்து எழுதித் தமிழ் எண்ணுரு தருக.
மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்று செம்மாந்த கூற்றிற்குத் தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குவதை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.
- மூவேந்தர்கள்=மூன்று+வேந்தர்கள் ங
- நாற்றிசை =நான்கு+திசை ச
- முத்தமிழ் =மூன்று+தமிழ் ங
- இருதிணை =இரண்டு+திணை உ
- முப்பால் =மூன்று+பால் ங
- ஐந்திணை =ஐந்து+திணை ரு
- நானிலம் =நான்கு+நிலம் ச
- அறுசுவை=ஆறு+சுவை சா
- பத்துப்பாட்டு =பத்து+பாட்டு க0
- எட்டுத்தொகை=எட்டு+தொகை அ
பக்கம் 181
கவிதையை உரையாடலாக மாற்றுக
மகள் சொல்கிறாள்:
அம்மா என் காதுக்கு ஒரு தோடு -நீ அவசியம் வாங்கி வந்து போடு! சும்மா இருக்க முடியாது -நான் இப்போது சொல்லிவிட்டேன் உனக்கு இப்போது!
தாய் சொல்லுகிறாள்:
காதுக்கு கம்மல் அழகன்று -நான் கழறுவதைக் கவனி நன்று நீதர் மொழியை வெகு பணிவாய் நிதம் நீ கேட்டு வந்து காதில் அணிவாய்!
மகள் மேலும் சொல்லுகிறாள்:
கைக்கு இரண்டு வளையல் வீதம்- நீ கடன்பட்டுப் போட்டிடினும் போதும்! பக்கி என்று என்னை எல்லோரும் என் பாடசாலையில் சொல்ல நேரும்!
தாய் சொல்லும் சமாதானம்:
வாரா விருந்து வந்த களையில் -அவர் மகிழ உபசரித்தல் வளையல்! ஆராவமுதே மதி துலங்கு பெண்ணே அவர் சொல்வது உன் கைக்கு விலங்கு!
பின்னும் மகள்:
ஆபரணங்கள் இல்லையானால் என்னை யார் மதிப்பார் தெருவில் போனால்? கோபமோ அம்மா இதைச் சொன்னால் என் குறை தவிர்க்க முடியும்
அதற்குத் தாய்
கற்பது பெண்களுக்கு ஆபரணம்- கெம்புக்கல் வைத்த நகை தீராத ரணம்! கற்ற பெண்களை இந்த நாடு தன் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அன்போடு
-பாரதிதாசன்
உரையாடல்
மகள்: அம்மா! என் காதுகள் வெறும் காதுகளாக உள்ளன. என் காதுக்கு ஒரு தோடு, நீ அவசியம் வாங்கி வந்து போட வேண்டும்.
அம்மா: மகளே! நான் சொல்வதைக் கவனமாக் கேள். காதுக்கு கம்மல் அழகு அன்று. சான்றோர் கூறும் சொற்களே காதுக்கு அழகு தரும். எனவே, சான்றோர் கூறும் சொற்களைப் பணிந்து கேட்பாயாக!
மகள்: அதெல்லாம் முடியாதம்மா! நீ கடன் வாங்கியாவது என் கைக்கு இரண்டு வளையல் போட வேண்டும். பாடசாலையில் என்னை எல்லோரும் ஏளனமாகப் பேசுகின்றனர்.
அம்மா: மகளே! இதற்கு முன் வராத விருந்தினர் வந்த பொழுது அவர் மகிழுமாறு உபசரிப்பதே வளையல். அமுதம் போன்றவளே! அறிவு மிகுந்த பெண்ணே! அவர்கள் கூறுவது உன் கைகளுக்கு விலங்காகும்.
மகள்: அம்மா, அணிகலன்கள் எதுவும் அணியாமல் நான் தெருவில் போனால் என்னை யார் மதிப்பார்கள்? இதைச் சொன்னால் உங்களுக்கு கோபமோ, அம்மா? எனக்கு வளையல் வாங்கித் தந்து என் குறையைத் தவிர்க்க வேண்டும், அம்மா.
அம்மா: மகளே! கற்பதே பெண்களுக்கு ஆபரணம். கல் வைத்த நகை, தீராத துன்பத்தைத் தரும். கற்ற பெண்களை இந்த நாடு அன்போடு கண்ணைப் போல் பாதுகாக்கும்.
மொழியோடு விளையாடு 152
மொழியோடு விளையாடு
தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக
- வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
- அனைவரின் பாராட்டுக்களால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது
- வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
- கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசுமையான புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது
- வெயிலில் அலையாதே; உடல் கருக்கும்
பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக
- விரட்டாதீர்கள்- பறவைக்கு மரம் வீடு. வெட்டாதீர்கள் -மனிதருக்கு அவை தரும் மர வீடு.
- காலை ஒளியினில் மலரிதழ் அவிழும். சோலைப்பூவினில் வண்டினம் கவிழும்.
- மலைமுகட்டில் மேகம் தங்கும்- அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.
- வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும்-இதைத் தத்துவமாய்த் தோற்பாவைக்கூத்து சொல்லும்.
- தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது.- அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.
மொழியை ஆள்வோம் இயல் 6 பக்கம் 150,151
மொழியை ஆள்வோம்
தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக
எ.கா.
அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
(தனிச் சொற்றொடர்களை கலவைச் சொற்றொடர்களாக மாற்றுக)
அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.
1) இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்ககங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
(தொடர் சொற்றொடராக மாற்றுக)
இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தகங்களில் அடுக்கி, கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
2) ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)
ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக் கொண்டனர். அவர்கள் காலில் சலங்கை அணிந்து கொண்டனர். அவர்கள் கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஆடுவர்.
3) கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
(கலவைச் சொற்றொடராக மாற்றுக)
கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
4) ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)
ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை சட்டென நின்றது. அதனால் அறையில் உள்ளவர்களின் பேச்சு தடைபட்டது.
பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக
புதிர்
உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்ட் பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.
விடை
தராசின் இரண்டு தட்டுகளிலு மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால் கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால் ஒரு பக்கத் தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டை போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!
பக்கம் 151
நாட்டுப்புறப் பாடலுக்கேற்ற சூழலை எழுதுக.
பாடல்
ஆத்துக்கு அந்தண்டையே அண்ணன் வச்ச தென்னம்புள்ளே!
அண்ணன் புள்ள வாடினாலும் யம்மாடி! யம்மாடி!
தென்னம்புள்ளை வாடலாமோ? யம்மாடி! யம்மாடி!
வாய்க்காலுக்கு மேற்குப்புறம் வஞ்சி வெச்ச வாழைமரம்
வஞ்சி மனம் வாடினாலும் யம்மாடி! யம்மாடி!
வாழைமரம் வாடலாமோ யம்மாடி! யம்மாடி!
பாடல் எழுந்த சூழல்
அண்ணன் நட்டுவைத்த தென்னம்பிள்ளைக்கு நீர் பாய்ச்ச, தோப்புக்கு வரும் பெண்ணொருத்தி குழந்தையை இடுப்பில் இருந்து இறக்கி விடுகிறாள். தென்னம்பிள்ளைக்கு நீரூற்றுகிறாள்; குழந்தை அழுகிறது; பாடலைப் பாடியவாறே குழந்தையின் அழுகையை நிறுத்தி நீரூற்றுதலைத் தொடர்கிறாள்.
பாடல்
பாடறியேன் படிப்பறியேன் -நான்தான்
பள்ளிக்கூடம் தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்- நான்தான்
எழுத்துவகை தானறியேன்
படிக்க நல்லா தெரிஞ்சிருந்தா-நான்தான்
பங்காளிய ஏன் தேடுறேன்
எழுத நல்லா தெரிஞ்சிருந்தா- நான் தான்
எதிராளிய ஏன் தேடுறேன்.
நாலெழுத்து படிச்சிருந்தா- நான்தான்
நாலு தேசம் போய் வருவேன்
நாலு பக்கம் வரப்புக்குள்ளே தெனமும்
நான் பாடுறேன் தெம்மாங்கு தான்.
பாடல் எழுந்த சூழல்
படிக்காத ஒருவன், தான் படிக்காத நிலையை எண்ணி வருந்துகிறான். தனக்கு எழுத்துக்கள் தெரியாததனால் உதவிக்குப் பங்காளியைத் தேட வேண்டிய நிலை வந்ததையும் எண்ணுகிறான். படிப்பறிவு இல்லாததால் எதிரியிடமும் உதவி கேட்க வேண்டிய இழிநிலை வந்ததையும் எண்ணி வருந்துகிறான். படித்திருந்தால் நான்கு நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதித்து வந்திருக்கலாம் என்று நினைத்துப் பார்க்கிறான். படிப்பறிவு இல்லாததால் வயல்வெளியில் நான்கு வரப்புக்குள்ளே தினமும் தெம்மாங்குப் பாடல் பாடுகிறான்.
மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க.
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
மாலையில் மாலைசூடும் மங்கையரே!
மலர்தூவி இறைதொழுது மனம்குளிர்வீர்!.
மொழியை ஆள்வோம் இயல் 6 பக்கம் 149
மொழியை ஆள்வோம்!
தொடர்களை அறிவோம், தொடர்ந்து செய்வோம்
தனிச் சொற்றொடர் : (தனி வாக்கியம்)
ஒரு தொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமைவது தனிச் சொற்றொடர் எனப்படும.
எ.கா.
- மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார்.
- மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.
தொடர் சொற்றொடர்:(தொடர் வாக்கியம்)
ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலைகளைக் கொண்டிருக்கும் தொடர்
எ.கா.
- இனிய நிலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.
- அன்வர் அரங்கத்திற்கு வந்து, நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.
கலவைச் சொற்றொடர்: (கலவை வாக்கியம்)
கலவைத் தொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத் தொடர்களும் கலந்து வரும்.
எ.கா.
மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்.
- பள்ளிக்கு நடந்து வந்தான் -முதன்மைத் தொடர்
- மழை கொட்டிக் கொண்டிருந்தாலும்-துணைத் தொடர்
.
Friday, April 22, 2022
மெல்லக் கற்போருக்கான மூன்று மதிப்பெண் வினாக்கள்
- பழமை
- குமரி நில ஆட்சி
- தென்னன் தமிழ்
- திருக்குறளின் புகழ்
- பதினெண்மேற்கணக்கு
- பதினெண்கீழ்க்கணக்கு
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- நெல்நாற்று நடப்பட்டுள்ளது
- மாங்கன்று நடப்பட்டுள்ளது
- தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது
- வாழைக்குருத்து வளர்ந்துள்ளது
- சோளப் பைங்கூழ் வளர்ந்துள்ளது.
வினைமுற்றுகள் – தொழிற் பெயர்கள்:
- அறிந்தது – அறிதல்
- அறியாதது – அறியாமை
- புரிந்தது – புரிதல்
- புரியாதது – புரியாமை
- தெரிந்தது – தெரிதல்
- தெரியாதது – தெரியாமை
- பிறந்தது – பிறத்தல்
- பிறவாதது – பிறவாமை
இலைகளில் சொட் சொட் என்று நீர் சொட்டுகிறது. உடலில் மெல்லிய குளிர் ஓடுகிறது. தேங்கிய குட்டையில் ‘ சளப் தளப் ‘ என்று குழந்தைகள் குதிக்கின்றனர். நீரில் காகிதக் கப்பல் விடுகின்றனர்.
- மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- பூப்பறித்த- இரண்டாம் வேற்றுமைத்தொகை.
- ஆடுமாடுகள்- உம்மைத்தொகை.
- தண்ணீர்த்தொட்டி -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.
- குடிநீர்- வினைத்தொகை.
- சுவர்க் கடிகாரம்- ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
தொடர் வகைகள்
- கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்
- காலையில் நீ எழும்பு! – ஐந்தாம் வேற்றுமைத் தொடர்.
- மாமழை பெய்கையிலே – உரிச்சொற்றொடர்.
- மாம்பூவே கண்ணுறங்கு! – விளித்தொடர்
- பாடினேன் தாலாட்டு! – வினைமுற்றுத் தொடர்.
- ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – அடுக்குத்தொடர்
அணி: உவமை அணி
விளக்கம்: உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வந்துள்ளது.
இறைவன் நீங்காத துன்பத்தைத் தந்தாலும், அவனது அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்
- நிறைத்திருந்தது
- இலட்சுமி கூப்பிடுகிறாள்
- இதோ சென்று விட்டேன்
- என்னடா விளையாட வேண்டுமா?
- நீயும் இவனும் விளையாடுங்கள்
- இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்
- ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறதா?
- மொழிபெயர்ப்பது என்பது யாது?
- விளக்குவது என்பது யாது?
- ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் எங்கு அமர்ந்திருப்பர்?
- ஐ.நா. அவையில் காதணிக்கேட்பியின் பயன்பாடு யாது?
- இளமையில் கல்
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
- கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
- இன்று நீ வேலைக்குச் சென்றால், உனக்குக் கிடைக்கும் தொகை பெரியதாகத் தோன்றும். ஆனால், உன்னுடைய எதிர்காலம் வீணாகும் என்று கூறுவேன்.
குறிஞ்சி-
அன்று-தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்
இன்று-சுற்றுலா
முல்லை-
அன்று-ஆடுமாடு மேய்த்தல்இன்று-காடுகள் சார்ந்த தொழில்கள்
மருதம்-
அன்று-வேளாண்மை
இன்று- வேளாண்மை
நெய்தல்-
அன்று- மீன்பிடித்தல், உப்பு விளைத்தல்
இன்று- மீன்பிடித்தல், உப்பு விளைத்தல்
பாலை-
அன்று-வழிப்பறி செய்தல்
இன்று-எண்ணெய் எடுத்தல்
- கருவி, காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிதல்
- மனவலிமை, குடிமக்களைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகியவற்றுடன் திகழ்தல்.
- நுண்ணறிவு, நூலறிவு, உலக நடைமுறைகளை அறிதல் ஆகியவை இன்றும் பொருந்துகின்றன.
- சுற்றத்தாருடன் அன்பு, துணை, வலிமை இல்லை என்றால் பகைவரை எதிர்கொள்ள முடியாது.
- துணிவு, அறிதல், அன்பு, உதவி இல்லாதவர் எளிதில் பகைக்கு ஆட்படுவார்.
இடம்: ம.பொ.சி. அவர்களின் ‘எனது போராட்டம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
விளக்கம்: ம.பொ.சி. அவர்கள் சென்னை பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார்
மையக்கருத்து
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சி ஆண்டு, போர் வெற்றிகள், வரலாறு, வாழ்த்து, சாசனம் எழுந்த நிகழ்ச்சி ஆகியவை காணப்படும். முதல் இராஜராஜனுடைய எட்டாம் ஆட்சி ஆண்டில்தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது.
சிலப்பதிகாரம்
பட்டினும்பருத்திதூசும்துகிரும்
பகர்வனர்நகர வீதியும்பட்டினும்கட்டு
காருகர் – நெய்பவர்
சந்தனம், அகில்.
- அளவடிகளைப் பெற்று வரும்
- இயற்சீர் பயின்று வரும். பிற சீரும் வரும்.
- ஆசிரியத் தளைகள் பயின்று வரும். பிற தளைகளும் கலந்து வரும்.
- மூன்றடி முதல் பல அடிகள் வரை வரும்.
- அகவலோசை பெற்று வரும்.
- ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
- அறம் செய்வதில் வணிக நோக்கம் கூடாது
- செங்கோல் போன்று ஆட்சி மேற்கொள்ளவேண்டும்.
- நீர்நிலை பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமை ஆகும்
- குற்றத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்
போன்ற அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே.
சுற்றுச்சூழலைப் பேணுவதில் நாம் போதிய அக்கறை காட்டாமல் இருந்து வருகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மையால் சுற்றுச்சூழல் விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இது மிகவும் கவலைக்குரியதாகும். அறநெறியில் நின்று வாழ்க்கை நடத்தியவர்கள் நம் முன்னோர். அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். பூமியைத் தெய்வமாகவும் விலங்குகளை உற்ற தோழனாகவும் பாவித்தார்கள். காடுகளையும் காட்டு விலங்குகளையும் பாதுகாத்தார்கள். அவர்களது வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி நாமும் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ வேண்டும்.
- உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
- உடலின் தன்மையை அறியேன்.
- உணவுத் தேடும் வழி அறியேன்.
- காட்டில் செல்லும் வழி அறியேன்.
"ஆரெயில் நெடுங்கொடி ‘வாரல்’ என்பனபோல் மறித்துக் கைகாட்ட"
கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக் கருதி கொடிகள் கையசைத்து ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். எனவே, இது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.
- அவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டது. அதைக் கொண்டாட விரும்பினார்.
- பார்வையற்ற பிச்சைக்காரனின் அலுமினிய பாத்திரத்தில் இரண்டணாவை இட்டு மகிழ்ந்தார். டிக்கெட் விலை ஓரணா கூடியிருந்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிடத்திற்குள் ஒரு அணாவுக்கு யாசிக்கும் நிலை வந்ததை எண்ணினார்.
- பிச்சைக்காரனின் அலுமினியப் பாத்திரத்தில் தான் இட்ட இரண்டணா தன்னுடையது என்றும், தனக்குச் சொந்தமில்லை என்றும், ஓரணா போட்டுவிட்டு இரண்டணா எடுத்துக் கொண்டால் என்ன என்றும் தனக்குள் தர்க்கம் புரிந்தார்.