Monday, January 30, 2023

ஸ்டீபன் ஹாக்கிங்


அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம்

 

முன்னுரை

அறிவை விட முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில், அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்த பேரண்டத்தையும் அளப்பது.

ஹாக்கிங்குடன் நான்

நாசா நடத்திய தேர்வில் நான் முதலிடம் பெற்றதால், ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் செய்யும் வாய்ப்புப் பெற்றேன். ஏற்கனவே அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் காலத்தின் சுருக்கமான வரலாறு நூலை வாசித்திருந்தேன். அதனால் பேரண்டம் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட்டது.

தன்னம்பிக்கை மனிதர்

கொலம்பியா விண்வெளி ஓடத்தில் அமர்ந்தோம். அவர் புன்முறுவல் செய்தார். என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த அவரின் கன்னத்தசை அசைவுகளை உள்வாங்கி, நுண்ணறிவுக் கணினி என்னிடம் மொழிபெயர்க்கத் தொடங்கியது. அவரின் தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைத்தது.

கலந்துரையாடல்

அவருடனான கலந்துரையாடலின்போது பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திகூர்மை. அறியாமை அறிவாற்றலில் மிகப்பெரிய எதிரி அல்ல. அது அறிவின் மாயை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கினார். இப்பிரபஞ்சத்தைப் படைத்தவர் கடவுள் என்ற கருத்தை மறுத்தார்.

கருந்துளை

நம் பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளன. ஒரு விண்மீனின் ஆயுட்கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை சுருங்கி, அதன் ஈர்ப்பு உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது. அப்போது அதிலிருந்து ஒளிகூட தப்பி வரமுடியாது. அதனைச் சுற்றிய பகுதிகளில் இருந்து வரும் கதிர்வீச்சுகளைக் கொண்டுதான் அது ஒரு கருந்துளை என்பதை அறிய முடியும். அது இறுதியில் வெடித்துச் சிதறிவிடும். சிதறியவை மீண்டும் நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகும். ஆகவே, கருந்துளை என்பது படைப்பு ஆற்றல்.

பெற்ற விருதுகள்

  1. அமெரிக்க அதிபர் விருது
  2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது
  3. உல்ஃப் விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

நகைச்சுவை உணர்வு

தலைவிதி தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? எள்ளி நகையாடுகிறார்.

துணிச்சல்காரர்

சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். போயிங் 727 என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.

உலகிற்கு எடுத்துக்காட்டு

"உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ ஊனமோ ஒருவனுக்குக் குறையாகாது. ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத்தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும்" என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் ஹாக்கிங்.

முடிவுரை

விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். அவர் என் மனக்கண்ணில் தன்னம்பிக்கையின் சிகரமாக நிழலாடுகிறார். அறிவுத்தேடலில் உடல் உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை. அவரின் வாழ்வு உலகிற்கான பாதை.

 

 

Thursday, January 26, 2023

மிகவும் மெல்லக் கற்போருக்கு

 கவிதை

ஓவியம்… ஓவியம்… 

இது 

காவியம்… காவியம்…


ஓவியம்… ஓவியம்…

இது 

அழியாத… ஓவியம்…


ஓவியம்… ஓவியம்…

இது 

அழியாத… காவியம்…


ஓவியம்… ஓவியம்…

இது 

அழியாத… பாவியம்…


(நன்றி: சேட்டு மதார்ஸா ஈரோடு)

சான்றோர் வளர்த்த தமிழ்

1. சங்கப் புலவர்கள் தமிழ் வளர்த்தனர்

2. சமணப் பள்ளிகள், மடங்கள் தமிழ் வளர்த்தன

3. ஆழ்வார்கள், நாயன்மார்கள் தமிழ் வளர்த்தனர்

4. திருவள்ளுவர், கம்பர் தமிழ் வளர்த்தனர்

5. பாரதியார், பாரதிதாசன் தமிழ் வளர்த்தனர்.


விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

1. அரியானாவில் பிறந்தார்

2. அரசுப் பள்ளியில் படித்தார்

3. வானில் பறக்க ஆசைப்பட்டார்

4. வானியல் படித்தார்

5. விண்வெளியில் பறந்தார்

6. விண்கலம் வெடித்து இறந்தார்


அரசுப் பொருட்காட்சி

1. அரசுப் பொருட்காட்சி சென்றோம்

2. பல்துறை அரங்குகளைப் பார்த்தோம்

3. அழகாக இருந்தது

4. கண்ணைக் கவர்ந்தது

5. கருத்தைக் கவர்ந்தது

6. அறுசுவை உணவு உண்டோம்

7. மகிழ்வுடன் திரும்பினோம்


தமிழ்ச் சொல் வளம்

1. தமிழ் சொல் வளம் நிறைந்தது

2. எல்லாப் பொருளுக்கும் சொற்கள் உண்டு

3. ஒரு பொருளுக்குப் பல சொற்கள் உண்டு

4. அடிவகை, கிளை வகை, இலை வகை, பூ வகை, காய்கனி வகை, மணிவகை எனப் பல வகையான சொற்கள் உண்டு

5. புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப புதிய சொல்லாக்கம் தேவை.


ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

தமிழ் வாரஇதழ் வெளியிடும் ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

1. புதினங்கள்

2. குறும் புதினங்கள்

3. சிறுகதைகள்

4. சினிமா

5. விருதுகள்

6. சிறப்புகள்

வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள்!

விலை ரூ.30/-

தமிழ்ப் பதிப்பகம், மதுரை.


அன்னமய்யா

1. புதியவன் வந்தான்

2. தண்ணீர் கேட்டான்

3. அன்னமையா, நீச்சுத் தண்ணீர் கொடுத்தான்

4. பழைய சோறு தந்தான்

5. அன்பு காட்டினான்

6. அன்னமிட்டவனின் பெயர் அன்னமய்யா


ஒருவன் இருக்கிறான்

1. குப்புசாமி அனாதை

2. வயிற்று வலியால் துடித்தான்

3. வீரப்பன் குப்புசாமிக்கு உணவுவிட்டான்

4. கடன் வாங்கி உதவி செய்தான்

5. நோய் குணமாக கடவுளிடம் வேண்டினான்

6. அளவற்ற அன்பு காட்டினான்.


தற்குறிப்பேற்ற அணி

1. தன் குறிப்பு ஏற்றிக் கூறுவது

2. போருழத் தெடுத்த…

3. காற்றில் கொடி அசைவது இயல்பு. கோவலனை வர வேண்டாம் என்று கை அசைத்ததாகக் கவிஞர் கூறுகிறார்.


தீவக அணி

1. தீபம் போல நின்று பொருள் தருவது

2. சேந்தன வேந்தன்…

3. சேந்தன என்னும் சொல் விளக்கு போல நின்று பொருள் தருகிறது


நிரல்நிறை அணி

1. நிரல்நிறையாகப் பொருள் தருவது

2. அன்பும் அறனும் உடைத்தாயின் என் வாழ்க்கை பண்பும் பயனும் அது

3. அன்புக்குப் பண்பு அறனுக்குப் பயன். நிரல் நிறையாக வந்துள்ளது.


தன்மை அணி

1. இயல்புத் தன்மையைக் கூறுவது

2. மெய்யில் பொடியும்…

3. கண்ணகியின் கலைந்த கோலத்தை இயல்பாகக் கூறுகிறது.


மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல்

சென்னை,

01-01-2023.

அன்புள்ள நண்பா,

நான் நலம். நீ நலமா? மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றாய். உன்னை வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

___________.

பெறுநர்

_________,

_________,

_________.

 

உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

 புகார்க் கடிதம்

அனுப்புநர்

__________,

__________,

__________.

பெறுநர்

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

சென்னை.

அம்மா,

வணக்கம். முல்லை உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது விடுதலை மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

___________.

இடம்: சென்னை

நாள்:01-01-2023

பெறுநர்

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

சென்னை.

இணைப்பு:

1.       உணவின் புகைப்படம்

2.       உணவுக் கட்டணச் சீட்டு

 

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந் நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக

நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்

__________,

__________,

__________.

 

பெறுநர்

தினமணி ஆசிரியர்

சென்னை.

அம்மா,

வணக்கம்.  தினமணி நாளிதழின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற எனது கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

___________

இடம்: சென்னை

நாள்: 01-01-2023.

பெறுநர்

தினமணி ஆசிரியர்,

சென்னை.

 

உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுந்தடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

_________,

_________,

_________.

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

சென்னை.

அம்மா,

வணக்கம். ங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்ல அச்சமாக இருக்கிறது. சரி செய்யும் படி வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

___________

 

இடம்: சென்னை

நாள்: 01-01-2023.

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

சென்னை.

 

பா நயம் பாராட்டல்

1.       திரண்ட கருத்து

பாடல்

2.       மோனை

முதல் எழுத்து ஒன்று போல் வருவது

3.       எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது

4.       இயைபு

கடைசி எழுத்து ஒன்று போல் வருவது

5.       சொல் நயம்

பாடல்

Tuesday, July 26, 2022

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

எந்த காட்சி கொடுக்கப்பட்டாலும் இந்த ஒரே கவிதை போதும்.


கண்ணில் தோன்றும் இக்காட்சி-மனக்

கண்ணில் நீளுது அதன்நீட்சி !

என்னைக் கவர்ந்த இக்காட்சி -என்னை

என்னவோ செய்யுது ஆட்சி !

எண்ணங்கள் பலவாய் விரியுது-என்றன் 

எழுத்துகள் கவியாய் மலருது !

உண்மையை உள்ளம் உணருது-உள்ளம் 

உரக்கச் சொல்லத் துடிக்குது !!



Tuesday, July 19, 2022

முதல் இடைப் பருவ மாதிரித் தேர்வு ஜூலை 2022

 

முதல் இடைப் பருவ மாதிரித் தேர்வு 

ஜூலை 2022

மொத்த மதிப்பெண்கள் 50.        நேரம்: 1மணி 30நிமிடங்கள்

பகுதி 1

சரியான விடையைத் தேர்வு செய்க.  6×1=6

  1. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'. இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே_______
    1. பாடிய கேட்டவர்
    2. பாடல் பாடிய
    3. கேட்டவர் பாடிய
    4. பாடல் கேட்டவர்
  2. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது_____
    1. இலையும் சருகும்
    2. தோகையும் சண்டும்
    3. தாளும் ஓலையும்
    4. சருகும் சண்டும்
  3. செய்தி 1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலக காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.   செய்தி 2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே.  செய்தி 3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
    1. செய்தி 2 மட்டும் சரி
    2. செய்தி 1,2 ஆகியன சரி
    3. செய்தி 3 மட்டும் சரி
    4. செய்தி 1,3 ஆகியன சரி
  4. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்-பாரதியாரின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
    1. உருவகம், எதுகை
    2. மோனை, எதுகை
    3. முரண், இயைபு
    4. உவமை, எதுகை
  5. காசிக் காண்டம் என்பது______
    1. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
    2. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
    3. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
    4. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்.
  6. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு.  இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை_______
    1. நிலத்திற்கேற்ற விருந்து
    2. இன்மையிலும் விருந்து
    3. அல்லிலும் விருந்து
    4. உற்றாரின் விருந்து

பொருத்துக 4×1=4

  1. கொண்டல் -மேற்கு 
  2. கோடை- தெற்கு 
  3. வாடை -கிழக்கு 
  4. தென்றல் -வடக்கு
பகுதி 2
ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க. 5×2=10
  1. 'இறடிப்பொம்மல் பெறுகுவீர்'-இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக
  2. கலைச்செல் தருக. Tornado, Homograph 
  3. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக. மலை -மாலை, வளி-வாளி
  4. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க. இன்சொல், முத்துப்பல்
  5. 'வேங்கை' என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
  6. நச்சப்படாதவன் செல்வம் இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
  7. உண்பதூஉம் உடுப்பதூஉம் காணின் பிறர் மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் -இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
பகுதி 3
பின்வரும் வினாக்களுக்கு விடை அளிக்க.
4×4=16
  1. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக. (அல்லது) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
  2. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர். திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்து அளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது. இப்படியாகக் காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக. (அல்லது) உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால் ....உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
  3. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.  வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். -இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக. (அல்லது) அறிந்தது அறியாதது புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக
  4. வேலொடு நின்றான் இடு என்றது போலும் கோலொடு நின்றான் இரவு-. குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.  (அல்லது) நயம் பாராட்டுக. "கத்துக்கடல் சூழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரிசி வரும். குத்தி உலையிலிட ஊரடங்கும். ஒரு அகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்."-காளமேகப் புலவர்.
பகுதி 4
1×5=5
  1. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக. (அல்லது) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
பகுதி 5
1×8=8
விரிவாக விடை தருக
  1. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக. (அல்லது) சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
அடி பிறழாமல் எழுதுக
  1. 'முயற்சி' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
  2. 'சிறுதாம்பு' எனத் தொடங்கும் முல்லைப்பாட்டுப் பாடலை எழுதுக.

Sunday, May 15, 2022

பொதுத்தமிழ் பதினோராம் வகுப்பு

  1. யுகத்தின் பாடல் எழுதியவர் வில்வரத்தினம்
  2. வில்வரத்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள புங்குடு தீவில் பிறந்தவர்
  3. வில்வரத்தினம் எழுதிய கவிதைகளின் தொகுப்பு உயிர்த்தெழும் காலத்துக்காக
  4. உயிர்த்தெழும் காலத்துக்காக தொகுக்கப்பட்ட ஆண்டு 2001
  5. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை என்றவர் ரசூல் கம்சதேவ்
  6. கலைகளின் உச்சம் கவிதை
  7. இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றவர் மகாகவி பாரதி
  8. மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களை தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன என்றவர் எர்னஸ்ட் காசிரர்
  9. கவிதைகளை எதிரில் இருக்கும் வாசகன் உடன் பேசுவதுபோல் அமைப்பது நேரடி மொழி
  10. நேரடி மொழி ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்றவர் மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா
  11. குறியீட்டுக் கவிதை என்பது பொருள்களை பதிவு செய்வதன்று. நினைவு கூரத்தக்க தருணங்களை பதிவு செய்வதாகும்.
  12. குறியீடுகளின் கூட்டம் ஒரு முனையிலும் கவிதையின் பேச்சு மொழி மறுமுனையில் இருக்கையில்  இடையில் இருக்கும் வெளியில் புழங்குகிறது-இது மல்லார்மே போன்ற கவிஞர்கள் உத்தி.
  13. இறுக்கி சுற்றப்பட்ட கம்பிகளை போன்று அல்லாமல் பேச்சு மொழிக்கு உரிய தளர்வுடன் கட்டப்பட்ட கவிதைகள் -வால்ட் விட்மன் போன்ற கவிஞர்களின் உத்தி.
  14. புல்லின் இதழ்கள் என்ற நூல் எழுதியவர் வால்ட் விட்மன்
  15. வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் இதழாளர் கட்டுரையாளர்
  16. மல்லார்மே பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்
  17. மல்லார்மே அவரைப் புரிந்து கொள்வதன் மூலம் குறியீட்டியத்தையும் புரிந்துகொள்ள முடியும்
  18. வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையைப் பற்றி பேசும் கவிதை பாப்லோ நெரூடா
  19. பாப்லோ நெருடா சிலி நாட்டில் பிறந்தவர்
  20. பாப்லோ நெருடா நோபல் பரிசு பெற்ற ஆண்டு 1971
  21. கவிதை என்பது ஒரு பொருள் அன்று
  22. கவிதை மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்து விடுவதற்காக முயலும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு.
  23. பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம் என்ற நூலின் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகடாமி விருது பெற்றவர் இந்திரன்
  24. இந்திரனின் இயற்பெயர் ராஜேந்திரன்
  25. இந்திரன் சாகித்ய அகடமி விருது பெற்ற ஆண்டு 2011.
  26. முப்பட்டை நகரம் எழுதியவர் இந்திரன்
  27. சாம்பல் வார்த்தைகள் எழுதியவர் இந்திரன்
  28. தமிழ் அழகியல் எழுதியவர் இந்திரன்
  29. நவீன ஓவியம் எழுதியவர் இந்திரன்
  30. வெளிச்சம் இதழை நடத்தியவர் இந்திரன்
  31. நுண்கலை இதழை நடத்தியவர் இந்திரன்
  32. பாயிரத்துக்கு உரிய 7 பெயர்கள் முகவுரை பதிகம் அணிந்துரை புனைந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை
  33. முகவுரை என்பது நூலுக்கு முன் சொல்லப்படுவது
  34. பதிகம் என்பது ஐந்து பொதுவும் பதினோரு சிறப்பும் ஆகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்து சொல்வது
  35. அணிந்துரை புனைந்துரை என்பவை நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்து சொல்வது
  36. நூல்முகம் என்பது நூலுக்கு முகம் போல முற்பட்டு இருப்பது
  37. புறவுரை என்பது நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே செல்வது
  38. தந்துரை என்பது நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை தந்து சொல்வது
  39. பாயிரம் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் என இரண்டு வகைப்படும்
  40. நூலின் இயல்பு ஆசிரியரின் இயல்பு கற்பிக்கும் முறை மாணவரின் இயல்பு கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்
  41. சிறப்புப்பாயிரம் 8 செய்திகளை தெரிவிப்பது
  42. நன்னூல் எழுதப்பட்ட ஆண்டு கிபி 13ம் நூற்றாண்டு
  43. நன்னூலின் எழுத்ததிகாரம் ஐந்து பகுதிகளாகவும் சொல்லதிகாரம் ஐந்து பகுதிகளாகவும் அமைந்துள்ளன
  44. சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூல் இயற்றினார் எனப் பாயிரம் குறிப்பிடுகிறது.
  45. பவணந்தியாரின் சிற்பம் உள்ள இடம் ஈரோடு மாவட்டம் மேட்டுப்புதூர் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திர பிரபாவின் கோவிலில்.
  46. வடக்குவீதி என்னும் நூலை எழுதியவர் முத்துலிங்கம்
  47. வம்சவிருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவர் முத்துலிங்கம்
  48. அக்கா என்ற சிறுகதைத் தொகுப்பு எழுதியவர் முத்துலிங்கம்
  49. மகாராஜாவின் ரயில் வண்டி என்ற சிறுகதைத் தொகுப்பு எழுதியவர் முத்துலிங்கம்
  50. திகட சக்கரம் என்ற சிறுகதைத் தொகுப்பு எழுதியவர் முத்துலிங்கம்

பொதுத்தமிழ்

  1. சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் என்று பாடியவர் சச்சிதானந்தன்
  2. கனிச்சாறு பாடியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  3. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய இதழ்கள் தென்மொழி தமிழ்ச்சிட்டு
  4. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம்
  5. உலகியல் நூறு என்னும் நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  6. பாவியக் கொத்து என்னும் நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  7. நூறாசிரியம் எனும் நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  8. எண்சுவை எண்பது என்ற நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  9. மகபுகுவஞ்சி என்னும் நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  10. பள்ளிப்பறவைகள் என்னும் நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  11. திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர் தமிழ்த்திரு ரா இளங்குமரனார்
  12. இமைகளை மூடியபடியே எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர்  இளங்குமரனார்
  13. தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர் இளங்குமரனார்
  14. திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் திருச்சிக்கு அருகிலுள்ள அல்லூர்
  15. சொல் ஆராய்ச்சியில் பாவாணர் வியந்த பெருமகனார் இளங்குமரனார்
  16. இலக்கண வரலாறு என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
  17. தமிழிசை இயக்கம் என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
  18. தனித்தமிழ் இயக்கம் என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
  19. பாவாணர் வரலாறு என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
  20. குண்டலகேசி உரை என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
  21. யாப்பருங்கலம் உரை என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
  22. புறத்திரட்டு உரை நூலை எழுதியவர் இளங்குமரனார்
  23. திருக்குறள் தமிழ் மரபுரை எழுதியவர் இளங்குமரனார்
  24. காக்கைபாடினியம் உரை எழுதியவர் இளங்குமரனார்
  25. தேவநேயம் என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
  26. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு மலேசியா
  27. மொழி ஞாயிறு எனப்படுபவர் தேவநேயப்பவாணர்
  28. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் தேவநேயப்பவாணர்
  29. உலகத் தமிழ் கழகத்தை நிறுவியவர் தேவநேயப் பாவாணர்
  30. கடல் கடந்து அச்சேறிய முதல் இந்திய மொழி தமிழ்
  31. கடல் கடந்து அச்சேறிய முதல் தமிழ் நூல் கார்டிலா
  32. கார்டிலா அச்சேறிய ஆண்டு 1554
  33. கார்டிலா எந்த நாட்டில் மொழிபெயர்க்கப்பட்டது? போர்ச்சுக்கல்
  34. சந்தக்கவிமணி தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்
  35. முதல் தமிழ் கணினி வெளிவந்த நாள் 1983 செப்டம்பர்
  36. முதல் தமிழ் கணினியின் பெயர் திருவள்ளுவர்
  37. உவமையும் பொருளும் வேற்றுமை அறிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகம் ஆகும் என்று எழுதியவர் தண்டி
  38. குறிஞ்சி மலர் எழுதியவர் நா பார்த்தசாரதி
  39. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவது இணை ஒப்பு
  40. மழையும் புயலும் எழுதியவர் ராமசாமி
  41. தமிழ்தென்றல் எனப்படுபவர் thiru.vi.ka
  42. சொல்லின் செல்வர் ரா பி சேதுப்பிள்ளை
  43. உண்மையில் முரண்படாத மெய்மைகளைச் செல்வது முரண்படு மெய்மை
  44. எதிரும் புதிரும் முரண்படும் கருத்துகளை சொல்வது எதிரிணை இசைவு
  45. புதிய உரைநடை என்னும் நூலை எழுதியவர் எழில்முதல்வன்
  46. எழில் முதல்வனின் இயற்பெயர் இராமலிங்கம்
  47. எழில் முதல்வன் எழுதி சாகித்திய அகடமி விருது பெற்ற நூல் புதிய உரைநடை
  48. தென்னவன் சிறுமலை எங்கு உள்ளது? திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை
  49. மரமது மரத்தில் ஏறி மரம் அதைத் தோளில் வைத்து என்னும் கவிதை பாடியவர் சுந்தர கவிராயர்
  50. தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் எனும் பாடலை பாடியவர் கவிமணி தேசிய விநாயகம்
  51. தேனினும் இனிய நற் செந்தமிழ் மொழியே என்று பாடியவர் நமச்சிவாயர்
  52. நாம் ஏன் தமிழ் கற்க வேண்டும் என்னும் நூலை எழுதியவர் முனைவர் சேதுமணி மணியன்
  53. தவறின்றித் தமிழ் எழுதுவோம் எனும் நூலை எழுதியவர் மா நன்னன்
  54. பச்சை நிழல் எனும் நூலை எழுதியவர் உதயசங்கர்.
  55. வாயுதாரணை என்னும் அதிகாரம் எழுதியவர் அவ்வையார்
  56. கிழக்கு என்பதன் பெயர் குணக்கு
  57. கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்
  58. மேற்கு என்பதன் பெயர் குடக்கு
  59. கிழக்கிலிருந்து வீசும் காற்று மழையைத் தரும்
  60. மேற்கிலிருந்து வீசும் காற்று வெப்பத்தை தரும்
  61. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று
  62. தெற்கில் இருந்து வீசும் காற்று தென்றல் கற்று
  63. ஊதைக்காற்று எனப்படுவது வடக்கிலிருந்து வீசும் காற்று
  64. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்று பாடும் இலக்கியம் சிலப்பதிகாரம்
  65. நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பில்-என்று பாடியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
  66. பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது பாடியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
  67. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்று பாடும் நூல் புறநானூறு
  68. வளிதொழில் ஆண்ட உரவோன் கரிகாலச்சோழன்
  69. ஹிப்பாலஸ் என்பவர் கிரேக்க மாலுமி
  70. ஹிப்பாலஸ் அவர்களின் காலம் முதலாம் நூற்றாண்டு
  71. வளிதொழில் ஆண்டவன் கரிகாலன் என்று பாடியவர் வெண்ணிக் குயத்தியார்
  72. வளி மிகின் வலி இல்லை என்று பாடியவர் ஐயூர் முடவனார்
  73. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை குறைவதாக அறிவித்துள்ள நிறுவனம் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
  74. உலக காற்று நாள் ஜூன் 15
  75. குளோரோ புளோரோ கார்பன் ஒரு மூலக்கூறு ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்துவிடும்
  76. மென் துகிலாய் உடல் வருடி வாஞ்சையுடன் மனம் வருடி- என்று பாடியவர் தேவகோட்டை மூர்த்தி
  77. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் பாடல்கள் திருவெம்பாவை திருப்பாவை
  78. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா பாரதியார்
  79. சிந்துக்கு தந்தை பாரதியார்
  80. எட்டயபுரத்து ஏந்தல் பாரதியார்
  81. பாரதியார் இந்தியா சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர்
  82. முல்லைப்பாட்டு பாடியவர் நப்பூதனார்
  83. முல்லைப் பாட்டில் உள்ள பாடல் அடிகள் 103
  84. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் முல்லைப்பாட்டு
  85. புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை உருவான ஆண்டு 2000
  86. கஜா என்ற பெயரை தந்த நாடு இலங்கை
  87. பெய்ட்டி என்ற பெயர் தந்த நாடு தாய்லாந்து
  88. கொரியாலிஸ் விளைவை கண்டறிந்தவர் காஸ்பார்ட் குஸ்டாவ்
  89. கொரியாலிஸ் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1835
  90. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை ஹவாய் தீவுகளை தாக்கும் புயல்கள் வலம்புரி புயல்கள்
  91. அமெரிக்காவை ஜப்பானை சீனாவை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள்
  92. வங்க கடலில் வீசும் புயல்கள் இடம்புரி புயல்கள்
  93. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் புயலிலே ஒரு தோணி
  94. புயலிலே ஒரு தோணி என்னும் புதினம் எழுதியவர் சிங்காரம்
  95. சிங்காரம் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி
  96. பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற பாடல் வரிகள் இடம்பற்றுள்ள நூல் அகநானூறு
  97. அதோ அந்த பறவை போல என்ற நூலை எழுதியவர் முகமது அலி
  98. உலகின் மிகச்சிறிய தவளை என்ற நூலை எழுதியவர் எஸ் ராமகிருஷ்ணன்
  99. தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம்
  100. உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு
  101. உண்டால் அம்ம இவ்வுலகம் என்னும் பாடலை பாடியவர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
  102. பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் கம்பராமாயணம்
  103. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மலர் போல என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் கலிங்கத்துப் பரணி
  104. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை
  105. ஏழடி நடந்து சென்று வழி அனுப்பும் செய்தி இடம் பெற்றுள்ள நூல் பொருநராற்றுப்படை
  106. குரல் உணங்கு விதை திணை உரல் வாய்ப்பெய்து என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு
  107. நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு 
  108. விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து சமைத்து விருந்து படைத்தவர் இளையான்குடி மாறநாயனார்
  109. நெய்தல் நிலத்தை வருபவர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று பாடும் நூல் சிறுபாணாற்றுப்படை
  110. காலின் ஏடிப் பின்சென்று என்ற பாடும் நூல் பொருநராற்றுப்படை
  111. மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் என்று பாடியவர் அம்சப்ரியா
  112. பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ என்று பாடும் நூல் குறுந்தொகை
  113. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று பாடும் நூல் கொன்றை வேந்தன்
  114. வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் என்று பாடியவர் அவ்வையார்
  115. வாழை இலை விருந்து விழா கொண்டாடப்படும் இடம் அமெரிக்காவின் மினசோட்டா
  116. இட்டதோர் தாமரைப் பூ இதழ் விரித்திருத்தல் போல என்று பாடியவர் பாரதிதாசன்
  117. காசிக்காண்டம் பாடியவர் அதிவீரராம பாண்டியர்
  118. அதிவீரராம பாண்டியர் கொற்கையின் அரசர்
  119. அதிவீரராம பாண்டியர் பாடிய மற்றொரு நூல் வெற்றிவேற்கை
  120. அதிவீரராம பாண்டியரின் வேறு பெயர் சீவல மாறன்
  121. நைடதம் பாடியவர் அதிவீரராம பாண்டியர்
  122. லிங்க புராணம் பாடியவர் அதிவீரராம பாண்டியர்
  123. திருக்கருவை அந்தாதி பாடியவர் அதிவீரராம பாண்டியர்
  124. வாயுசம்கிதை பாடியவர் அதிவீரராம பாண்டியர்
  125. கூர்ம புராணம் பாடியவர் அதிவீரராம பாண்டியர்
  126. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி என்ற பாடல் இடம்பெறும் நூல் விவேக சிந்தாமணி
  127. மலைபடுகடாம் என்ற நூலின் வேறுபெயர் கூத்தர்ஆற்றுப்படை
  128. மலைபடுகடாம் நூலில் இடம்பெற்றுள்ள பாடலடிகள் 583
  129. மலைபடுகடாம் நன்னனை பற்றிப் பாடுகிறது
  130. மலைபடுகடாமைப் பாடியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
  131. கி ராஜநாராயணனுக்கு முன்பு எழுத தொடங்கியவர் அழகிரிசாமி
  132. கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் ராஜநாராயணன்
  133. கோபல்லபுரத்து மக்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு 1991
  134. கறங்கு இசை விழவின் உறந்தை என்று பாடும் நூல் அகநானூறு
  135. கி ராஜநாராயணனின் ஊர் கோவில்பட்டி இடைசெவல்
  136. சிறுவர் நாடோடிக் கதைகள் எழுதியவர் கி ராஜநாராயணன்
  137. ஆறாம்திணை எழுதியவர் மருத்துவர் கு சிவராமன்
  138. செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன் வெளியானஆண்டு 2016
  139. இலா ஒரு உரையாடு மென்பொருள்
  140. இலா பாரத் ஸ்டேட் வங்கியின் உரையாடும் மென்பொருள்
  141. பெப்பர் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்
  142. வித்துவக்கோட்டு இறைவன் உய்யவந்த பெருமாள்
  143. வித்துவக்கோடு கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது
  144. பெருமாள் திருமொழி பாடியவர் குலசேகர ஆழ்வார்
  145. பெருமாள் திருமொழியில் 150 பாடல்கள் உள்ளன
  146. பெருமாள் திருமொழியில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் உள்ளது
  147. குலசேகர ஆழ்வாரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு
  148. பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது
  149. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்று பாடியவர் மாணிக்கவாசகர்
  150. பரிபாடலில் 70 பாடல்கள் உள்ளன
  151. பரிபாடலில் 24 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன
  152. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் நிறுவப்பட்ட ஆண்டு 1988
  153. பெரியர் அறிவியல் தொழில்நுட்ப கழக கோளரங்கத்தில் 360 பாகை அரைவட்ட வானத்திரை அமைக்கப்பட்ட ஆண்டு 2009
  154. தற்காலத்தின் ஐன்ஸ்டைன் ஸ்டீபன் ஹாக்கிங்
  155. ஸ்டீபன் ஹாக்கிங் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க வேண்டியதில்லை என்றார்
  156. கருந்துளை கோட்பாட்டை உருவாக்கியவர் ஜான் வீலர்
  157. உல்ஃப் விருது பெற்றவர் ஸ்டீபன் ஹாக்கிங்
  158. காப்ளி பதக்கம் பெற்றவர் ஸ்டீபன் ஹாக்கிங்
  159. கலிலியோவின் நினைவுநாளில் பிறந்து ஐன்ஸ்டைனின் பிறந்தநாளில் இறந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்
  160. தலைவிதியை நம்புபவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்றவர் ஸ்டீபன் ஹாக்கிங்
  161. 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா நாயகர் ஸ்டீபன் ஹாக்கிங்
  162. 60வது பிறந்தநாளை போயிங் 727 விமானத்தில் கொண்டாடியவர் ஸ்டீபன் ஹாக்கிங்
  163. காலத்தின் சுருக்கமான வரலாறு 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது
  164. காலத்தின் சுருக்கமான வரலாறு வெளிவந்த ஆண்டு 1988
  165. அறிவை விட மிக முக்கியமானது கற்பனைத்திறன் என்றவர் ஐன்ஸ்டைன்
  166. கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமா வியல் நகர் கருவூர் முன்துறை என்ற பாடல் இடம்பெறும் நூல் அகநானூறு
  167. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் எழுதியவர் நீலமணி
  168. அன்றாட வாழ்வில் அறிவியல் எனும் நூலை எழுதியவர் தமிழ்ச்செல்வன்
  169. உன் மொழியில் உணர்த்தப்பட்டதை வேறு ஒரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் மணவை முஸ்தபா
  170. உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிறகும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் என்றவர் ஜகந்நாதராஜா
  171. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்ததற்கான சான்று சின்னமனூர்ச் செப்பேடு
  172. மொழிபெயர்த்தல் என்ற தொடர் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது
  173. மொகு சாஸ்ட்டு என்ற தொடரின் பொருள் விடை தர அவகாசம் வேண்டும்
  174. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதியவர் ராகுல் சாங்கிருத்தியாயன்
  175. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டு 1942
  176. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்த ஆண்டு 1949
  177. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை டாக்டர் என் ஸ்ரீதர் மொழிபெயர்த்த ஆண்டு 2016
  178. முத்து மீனாட்சி வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை 2016 ஆண்டு மொழிபெயர்த்தார்
  179. 2018 ஆம் ஆண்டு வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை மொழி பெயர்த்தவர் யூமா வாசுகி
  180. காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகள் எல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ வேண்டும் என்று குறிப்பிடுபவர் குலோத்துங்கன்
  181. மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் ஓலைச்சுவடி இருக்கும் இடம் பிரான்சு தேசிய நூற்கூடம்
  182. செய்கு தம்பி பாவலர் சதாவதானி பட்டம் பெற்ற இடம் சென்னை விக்டோரியா அரங்கம்
  183. செய்குத்தம்பி பாவலர் சதாவதானி பட்டம் பெற்ற நாள் 1907 மார்ச் 10
  184. செய்கு தம்பிப் பாவலரின் ஊர் கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி
  185. திருவிளையாடல் புராணத்தில் 3 காண்டங்கள் 64 படலங்கள் உடையது
  186. பரஞ்சோதி முனிவரின் காலம் கிபி பதினேழாம் நூற்றாண்டு
  187. பரஞ்சோதி முனிவர் வேதாரண்ய புராணம் பாடியுள்ளார்
  188. திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா பாடியவர் பரஞ்சோதி முனிவர்
  189. மதுரை பதிற்றுப்பத்தந்தாதி பாடியவர் பரஞ்சோதி முனிவர்
  190. மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
  191. உனக்குப் படிக்கத் தெரியாது என்ற நூலைப் படைத்தவர் கமலாலயன்
  192. கமலாலயனின் இயற்பெயர் குணசேகரன்
  193. கொற்கைக் கோமான் கொற்கை அம் பெருந்துறை என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு
  194. ஒடுக்கப்பட்ட கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக இருந்த அமெரிக்க கருப்பின பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்
  195. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று என்ற நூலை எழுதியவர் வல்லிக்கண்ணன்
  196. குட்டி இளவரசன் என்ற நூலை எழுதியவர் ஸ்ரீராம்
  197. ஆசிரியரின் டைரி என்ற நூலை எழுதியவர் அகிலா
  198. தேவர் ஆட்டத்தில் 13 கலைஞர்கள் ஆடுவர்
  199. தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர் முத்துச்சாமி
  200. கலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் முத்துசாமி
  201. நாடகக் கலையை மீட்டெடுப்பது தமது குறிக்கோள் என்றவர் முத்துசாமி
  202. ராஜ சோழன் தெரு உள்ள ஊர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர்
  203. கவிஞர் உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்
  204. நட்சத்திரங்களின் நடுவே என்ற நூலை எழுதியவர் உமா மகேஸ்வரி
  205. வெறும் பொழுது என்ற நூலை எழுதியவர் உமா மகேஸ்வரி
  206. கற்பாவை என்ற கவிதை நூலை எழுதியவர் உமா மகேஸ்வரி
  207. குமரகுருபரரின் காலம் கிபி பதினேழாம் நூற்றாண்டு
  208. கந்தர் கலிவெண்பா பாடியவர் குமரகுருபரர்
  209. மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் பாடியவர் குமரகுருபரர்
  210. மதுரைக் கலம்பகம் பாடியவர் குமரகுருபரர்
  211. சகலகலாவல்லிமாலை பாடியவர் குமரகுருபரர்
  212. நீதிநெறி விளக்கம் பாடியவர் குமரகுருபரர்
  213. திருவாரூர் மும்மணிக்கோவை பாடியவர் குமரகுருபரர்
  214. தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் கந்தசாமி
  215. சாயாவனம் எழுதியவர் கந்தசாமி
  216. விசாரணைக் கமிஷன் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கந்தசாமி
  217. சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருது வென்றவர் கந்தசாமி
  218. தொலைந்து போனவர்கள் எழுதியவர் கந்தசாமி
  219. சூரியவம்சம் எழுதியவர் கந்தசாமி
  220. சாந்தகுமாரி எழுதியவர் கந்தசாமி
  221. ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம்
  222. சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் என்று பாடியவர் மகாகவி
  223. திருக்குறள் நீதி இலக்கியம் பாடியவர் திருநாவுக்கரசு
  224. நாட்டார் கலைகள் எழுதியவர் பெருமாள்
  225. ம பொ சி பிறந்த ஆண்டு 1906
  226. படாஸ்கர் ஆணையம் திருத்தணி வரை உள்ள நிலத்தை மீட்டது
  227. பணிக்கர் ஆணையம் சித்தூரை ஆந்திராவுக்கு வழங்கியது
  228. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு சாகித்திய அகாடெமி விருதை வென்ற ஆண்டு 1966
  229. கு ப ராஜகோபாலன் பிறந்த ஊர் கும்பகோணம்
  230. அகலிகை என்ற நூலை எழுதியவர் குப ராஜகோபாலன்
  231. ஆத்ம சிந்தனை என்ற நூலை எழுதியவர் கூபா ராஜகோபாலன்