Tuesday, March 29, 2022

மெய்க்கீர்த்தி ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. கல் இலக்கியமாக அமைந்தது எது? மெய்க்கீர்த்தி
  2. மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இலக்கியம் எது? பதிற்றுப்பத்து
  3. மெய்க்கீர்த்தி யாருடைய காலத்தில் செப்பமான வடிவம் பெற்றது? சோழர் காலத்தில்
  4. மெய்கீர்த்தி யாருடைய காலங்களில் முளைவிட்டது? பல்லவர், பாண்டியர்
  5. இந்திரன் முதல் திசாபாலர் எண்மர் யாவர்? இந்திரன், அக்னி தேவன், எமதர்மன், வருண பகவான், நிருதி தேவன், வாயு பகவான், குபேரன், ஈசானன்
  6. மனுவாணை-பொருள் தருக. மனு தர்மத்தின் படி
  7. மனுதர்மத்தின்படி ஆட்சி செய்த சோழ மன்னன் யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
  8. சோழ நாட்டில் பிணிக்கப்படுபவை எவை? பட்டத்துயானைகள்
  9. சோழநாட்டில் புலம்புபவை எவை? சிலம்புகள்
  10. சோழ நாட்டின் கலங்குபவை எவை? ஓடைகள்
  11. சோழ நாட்டில் சிறைப்படுபவை எவை? ஆற்று நீர்
  12. சோழநாட்டில் வடுப்படுவன எவை? மாங்காய்கள்
  13. சோழ நாட்டில் பறிக்கப்படுவன எவை? மலர்கள்
  14. சோழ நாட்டில் கொடியன எவை? காடுகள்
  15. சோழநாட்டில் கள்ளுண்பன எவை? வண்டுகள்
  16. சோழ நாட்டில் வெறுமை உடையன எவை? மலை மூங்கில்
  17. சோழ நாட்டில் போராய் எழுவது எங்கே? வயல்களில்
  18. சோழநாட்டில் எங்கு இருள் சூழ்ந்து இருக்கிறது? நீண்ட மலைகளில்
  19. சோழ நாட்டில் யாரிடத்தில் மருட்சி காணப்படுகிறது? இளம் மான்களின் கண்களில்
  20. சோழ நாட்டில் பிறழ்ந்து செல்வது யார்? குளத்து மீன்கள்
  21. சோழ நாட்டில் சினம்கொள்பவர் யார்? செவிலித் தாயர்
  22. சோழநாட்டில் பொருள் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது? புலவர்தம் பாட்டில்
  23. சோழநாட்டில் கூடி ஆடுவது யார்? இசைப்பாணர்
  24. விழிப்பெற்ற பயனாகவும் மெய்பெற்ற அருளாகவும் மொழிபெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூலாகவும் திகழ்வது யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
  25. ராஜராஜன் கால தமிழ் கல்வெட்டு எத்தனையாவது நூற்றாண்டைச் சார்ந்தது?11
  26. கோப்பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
  27. கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம் பட எழுதப்படும் வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? மெய்க்கீர்த்திகள்

சிலப்பதிகாரம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள்
  2. தண் நறுஞ் சாந்தம் பொருள் தருக. குளிர்ந்த மணம் மிக்க சந்தனம்
  3. மேவிய விரை பொருள் தருக. எழுந்து பரவுகின்ற நறுமணம்
  4. பகர்வனர் பொருள் தருக. விற்பனை செய்பவர்
  5. காருகர் பொருள் தருக. நெசவாளர்
  6. தூசு பொருள் தருக. பட்டு
  7. துகிர் பொருள் தருக. பவளம்
  8. ஆரம் பொருள் தருக. சந்தனம்
  9. அருங்கல வெறுக்கை பொருள் தருக. பலவகையான செல்வம்
  10. நனந்தலை மறுகு பொருள் தருக.-அகன்ற வீதி
  11. பால்வகை பொருள் தருக. பலவகை
  12. கூலம் பொருள் தருக. தானியம்
  13. காழியர் பொருள் தருக. பிட்டு வணிகர்
  14. கூவியர் பொருள் தருக. அப்பம் சுடுபவர்
  15. கல்நொடை ஆட்டியர்-பொருள் தருக. வலைச்சியர்
  16. பகருநர் பொருள் தருக. விற்பவர்
  17. பாசவர் பொருள் தருக வெற்றிலை விற்பவர்
  18. வாசவர் பொருள் தருக. நறுமண பொருட்கள் விற்பவர்
  19. பல் நிண விலைஞர்-பொருள் தருக. பலவகையான இறைச்சி விற்பவர்
  20. ஓசுநர்-பொருள் தருக. எண்ணெய் விற்பவர்
  21. கஞ்ச காரர்-பொருள் தருக வெண்கலப் பாத்திரம் செய்பவர்
  22. கருங்கைக் கொல்லர்-பொருள் தருக.இரும்பினால் கருவிகள் செய்பவர்
  23. கண்ணுள் வினைஞர் -பொருள் தருக. ஓவியர்
  24. மண்ணீட்டு ஆளர்-பொருள் தருக. சிற்பி
  25. நன்கலம் தருநர்-பொருள் தருக. இரத்தின வேலை செய்பவர்
  26. துன்ன காரர் -பொருள் தருக. தையல் தைப்பவர்
  27. தோலின் துன்னர்-தோல்பொருள் தைப்பவர்
  28. கிழி-பொருள் தருக. துணி
  29. கிடை -பொருள் தருக. கட்டை
  30. பால்கெழு மாக்கள்- பொருள் தருக. பலவகைத் தொழில் செய்யும் மக்கள்
  31. குரல் முதல் 7 எவை? குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
  32. மறு இன்றி -பொருள் தருக. குற்றமின்றி
  33. ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணியை முதலில் வைத்து பாடும் நூல் எது? திருத்தணிகையுலா
  34. வண்ணமும் சுண்ணமும்- இலக்கணக்குறிப்பு தருக. எண்ணும்மை
  35. பயில்தொழில் -இலக்கணக்குறிப்பு தருக. வினைத்தொகை
  36. சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலை புனைந்தான் நந்தா வளையாபதி தருவான் வாசகனுக்கு ஈந்தான் திளையாத குண்டலகேசிக்கும்-என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? திருத்தணிகை உலா
  37. கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் எந்தப் பாதையில் அழைத்துச் சென்றார்? இடைப்பட்ட வழி
  38. தென்னவன் சிறுமலையின் இடப்பக்கம் வழியாகச் சென்றால்__________வழியாக மதுரை செல்லலாம். (திருமால் குன்றம்)
  39. நெடுவேள் குன்றம் என்று அழைக்கப்படும் மலை எது? சுருளிமலை
  40. கண்ணகி, சுருளி மலையில் எந்த இடத்தை அடைந்தாள்? வேங்கைக் கானல்
  41. கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்துச் சென்றவர் யார்? கவுந்தி அடிகள்
  42. கொடும்பாளூர் என்னும் இடத்தில் இருந்து மதுரைக்குச் செல்லும் வழிகள் எத்தனை? 3
  43. காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து கொடும்பாளூர் செல்லும் வழி யாது? உறையூர்- திருவரங்கம்
  44. சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை எது? உரைப்பாட்டு மடை
  45. உரைப்பாட்டு மடை என்பதன் பொருள் யாது? உரைநடைப் பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு
  46. மடை என்பது யாது? வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை
  47. உரை என்பது யாது? பேசும் மொழியின் ஓட்டம்
  48. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் யாவை? முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
  49. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? 3
  50. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை? 30
  51. இரட்டைக் காப்பியங்கள் எனப்படுபவை எவை? சிலப்பதிகாரம், மணிமேகலை
  52. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்
  53. மணிமேகலையின் ஆசிரியர் யார்? சீத்தலைச்சாத்தனார்
  54. கோவலன் கண்ணகி கதையைக் கூறி, 'அடிகள் நீரே அருளுக' என்றவர் யார்? சீத்தலைச்சாத்தனார்
  55. நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்றவர் யார்? இளங்கோவடிகள்
  56. சிலப்பதிகாரத்தில் உள்ள மூன்று காண்டங்கள் எவை? புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்

அகப்பொருள் இலக்கணம் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. அன்பின் ஐந்திணை யாவை?
    1. குறிஞ்சி
    2. முல்லை
    3. மருதம்
    4. நெய்தல்
    5. பாலை
  2. பொருள் இலக்கணம் என்றால் என்ன?
    1. பொருள் என்பது ஒழுக்க முறை.
    2. அக வாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைப் பற்றி கூறுவது பொருள் இலக்கணம் ஆகும்.
  3. அகத்திணை என்றால் என்ன?
    1. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலையைக் கூறுவது அகத்திணை ஆகும்
  4. அகத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • அகத்திணை ஏழு வகைப்படும். அதை
      1. குறிஞ்சி
      2. முல்லை
      3. மருதம்
      4. நெய்தல்
      5. பாலை
      6. கைக்கிளை
      7. பெருந்திணை
  5. ஐந்து திணைகளுக்கும் உரியன யாவை?
    1. முதற்பொருள்
    2. கருப்பொருள்
    3. உரிப்பொருள்
  6. முதற்பொருள் என்றால் என்ன?
    • நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆகும்
  7. நிலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • நிலம் ஐந்து வகைப்படும். அவை,
      1. குறிஞ்சி
      2. முல்லை
      3. மருதம்
      4. நெய்தல்
      5. பாலை
  8. குறிஞ்சி என்றால் என்ன? மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும்
  9. முல்லை என்றால் என்ன? காடும் காடு சார்ந்த இடமும் முல்லை ஆகும்
  10. மருதம் என்றால் என்ன? வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும்
  11. நெய்தல் என்றால் என்ன? கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும்
  12. பாலை என்றால் என்ன? சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை ஆகும்
  13. பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • பொழுது இரண்டு வகைப்படும் அவை,
      1. சிறுபொழுது
      2. பெரும்பொழுது
  14. சிறுபொழுது என்றால் என்ன?
    • ஒரு நாளின் 6 கூறுகளைச் சிறுபொழுது என்று பிரித்துள்ளனர்
  15. பெரும்பொழுது என்றால் என்ன?
    • ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று பிரித்துள்ளனர்
  16. கார் காலத்திற்குரிய மாதங்கள் எவை? ஆவணி புரட்டாசி
  17. குளிர் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? ஐப்பசி கார்த்திகை
  18. முன்பனிக் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? மார்கழி தை
  19. பின்பனிக் காலத்திற்குரிய மாதங்கள் எவை? மாசி பங்குனி
  20. இளவேனில் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? சித்திரை வைகாசி
  21. முதுவேனில் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? ஆணி ஆடி
  22. காலை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? காலை 6 மணி முதல் 10 மணி வரை
  23. நண்பகல் என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? காலை 10 மணி முதல் 2 மணி வரை
  24. எற்பாடு என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
  25. மாலை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
  26. யாமம் என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? இரவு 10 மணி முதல் 2 மணி வரை
  27. வைகறை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
  28. எற்பாடு என்றால் என்ன?எல்-சூரியன், பாடு-மறையும் நேரம். ஏற்பாடு என்பது சூரியன் மறையும் நேரம் ஆகும்
  29. கருப்பொருள் என்றால் என்ன? ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு முதலானவை கருப்பொருள்கள் ஆகும்.
  30. குறிஞ்சி நிலத்திற்கு உரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுதுக
    1. தெய்வம் -முருகன்
    2. மக்கள் -குறவர், குறத்தியர்
    3. உணவு -மலைநெல், தினை
    4. பூ -குறிஞ்சி, காந்தள்
  31. முல்லை நிலத்திற்கு உரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுது
    1. தெய்வம் -திருமால்
    2. மக்கள் -ஆயர் ஆய்ச்சியர்
    3. உணவு -வரகு சாமை
    4. பூ -முல்லை தோன்றி
  32. மருத நிலத்துக்குரிய கருப்பொருள்கள் ஏதேனும் நான்கு எழுது
    1. தெய்வம் -இந்திரன்
    2. மக்கள் -உழவர் உழத்தியர்
    3. உணவு -செந்நெல் வெண்ணெல்
    4. பூ -செங்கழுநீர் தாமரை
  33. நெய்தல் நிலத்துக்குரிய கருப்பொருட்கள் ஏதேனும் நான்கு எழுது
    1. தெய்வம் -வருணன்
    2. மக்கள் -பரதன், பரத்தியர்
    3. உணவு -மீன், உப்புக்கு பெற்ற பொருள்
    4. பூ -தாழை, நெய்தல்
  34. பாலை நிலத்துக்குரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுது
    1. தெய்வம் -கொற்றவை
    2. மக்கள் -எயினர், எயிற்றியர்
    3. உணவு -சூறையாடலால் வரும்பொருள்
    4. பூ-குரவம், பாதிரி

திருக்குறள் 2மதிப்பெண் வினாக்கள்

  1. அரிய செயலைச் செய்வதற்கு அமைச்சர் அறிந்து கொள்ள வேண்டியவை எவை?
    1. தொழில் செய்வதற்குத் தேவையான கருவி
    2. அதற்கு ஏற்ற காலம்
    3. செயலின் தன்மை
    4. செய்யும் முறை
  2. அமைச்சருக்கு உரிய தகுதிகள் எவை?
    1. மனவலிமை
    2. குடிகளைக் காத்தல்
    3. ஆட்சி முறைகளைக் கற்றல்
    4. நூல்களைக் கற்றல்
    5. விடாமுயற்சி
  3. எப்படிப்பட்ட அமைச்சருக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது? இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சருக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது
  4. ஓர் அமைச்சர் ஒரு செயலை செய்வதற்கு உரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருந்தாலும் அவர் செய்ய வேண்டுவன யாது? உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்
  5. பொருளின் சிறப்பு யாது? ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.
  6. ஒருவருக்கு அறத்தையும் இன்பத்தையும் தருவது எது? முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த செல்வம் ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் தரும்.
  7. எத்தகைய செல்வத்தை நீக்கிவிட வேண்டும்? மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்
  8. மலைமேல் நின்று யானைப் போரைக் காண்பதற்கு ஒப்பானது எது? தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் செய்யும் செயல்
  9. ஒருவர் செல்வத்தை ஏன் சேர்க்க வேண்டும்? ஒருவர் பொருளை ஈட்டவேண்டும். அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை.
  10. பகைவரின் அழுத கண்ணீரின் உள்ளே வஞ்சகம் மறைந்து இருப்பது எதனோடு ஒப்பிடப்படுகிறது?பகைவரின் தொழுது நிற்கும் கையினுள் கொலைக்கருவி மறைந்திருப்பதற்கு ஒப்பானது
  11. யாரால் பகைவரை எதிர்கொள்ள இயலாது?
    1. சுற்றத்தாருடன் அன்பு இல்லாதவர்
    2. பொருந்திய துணை இல்லாதவர்
    3. வலிமை இல்லாதவர்
  12. பகைக்கு எளிதில் ஆட்படுபவர் யார்?
    1. மனதில் அன்பு இல்லாதவர்
    2. அறிய வேண்டியவற்றை அறியாதவர்
    3. பொருந்தும் பண்பு இல்லாதவர்
    4. பிறருக்குக் கொடுத்து உதவாதவர்
  13. யாருடைய குடி உயர்ந்து நிற்கும்?
    • விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து நிற்கும்
  14. யாரை உலகத்தார் உறவாக கொண்டு போற்றுவார்?
    • குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்
  15. ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது? வறுமை
  16. வறுமையின் கொடுமை எப்போது முழுவதும் கெடும்? தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்
  17. இரப்பவரின் உள்ளத்தினுள்ளே எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்? இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தினுள்ளே மகிழ்ச்சி பொங்கும்
  18. எதைப் போன்ற தோற்ற ஒப்புமையை எங்கும் காண இயலாது? மக்களைப் போன்ற கயவர்களின் தோற்ற ஒப்புமையை எங்கும் காண இயலாது
  19. தேவரும் கயவரும் ஒரே தன்மையர் எவ்வாறு? தேவர்களைப் போல கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவார்.
  20. சான்றோர் எப்போது பயன்படுவர்? கயவர் எப்போது பயன்படுவர்?
    1. ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்ட உடனே சான்றோர் உதவி செய்வர்
    2. கரும்பைப் பொழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் கயவர் பயன்படுவர்

மெய்க்கீர்த்தி 2 மதிப்பெண் வினாக்கள்

  1. மெய்க்கீர்த்தி என்றால் என்ன? கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம் பட எழுதப்படும் வரிகளே மெய்க்கீர்த்திகள் ஆகும்
  2. இரண்டாம் இராஜராஜ சோழன் யாரைப் போல ஆட்சி நடத்தினான்? இந்திரன் முதலாகத் திசை பாலகர் எட்டு பேரும் ஓர் உருவம் பெற்றது போல ஆட்சி செலுத்தினான்.
  3. இரண்டாம் ராஜராஜ சோழன் பெற்ற பட்டங்கள் எவை? கோப்பரகேசரி, திரிபுவனச் சக்கரவர்த்தி
  4. இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் பிணிக்கப்படுவன, புலம்புவன, கலக்கமடைவன, அடைக்கப்படுவன எவை?
    1. பிணிக்கப்படுவன -யானைகள்
    2. புலம்புவன -சிலம்புகள்
    3. கலக்கமடைவன- ஓடைகள்
    4. அடைக்கப்படுவன -ஆற்றுநீர்
  5. இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் வடுப்படுவன, பறிக்கப்படுவன, கொடியன, கள்ளுண்பன எவை?
    1. வடுப்படுவன-மாங்காய்கள்
    2. பறிக்கப்படுவன-மலர்கள்
    3. கொடியன-காடுகள்
    4. கள்ளுண்பன-வண்டுகள்
  6. இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் வெறுமையாய்த் தோன்றுவன, போராய் எழுவன, இருள் சூழ்ந்தன, மருள்வன எவை?
    1. வெறுமையாய்த் தோன்றுவன-மூங்கில்கள்
    2. போராய் எழுவன-நெற்கதிர்கள்
    3. இருள் சூழ்ந்தன-நீண்ட மலைகள்
    4. மருள்வன-இளமான்கள்
  7. இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் பிறழ்வன, சினம் காட்டுபவர், பொருள் மறைத்து வைப்பவர், தெருவில் கடிஆடிப்பாடுபவர் யாவர்?
    1. பிறழ்வன-குளத்து மீன்கள்
    2. சினம் காட்டுபவர்-செவிலித் தாயார்
    3. பொருள் மறைத்து வைப்பவர்-புலவர்கள்
    4. தெருவில் கூடி ஆடிப்பாடுபவர்-இசைப்பாணர்
  8. இரண்டாம் ராஜராஜ சோழனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு நிலை யாது?
    1. இரண்டாம் ராஜராஜ சோழன் தந்தை இல்லாதவருக்குத் தந்தையாக இருக்கிறான்
    2. தாய் இல்லாதவருக்குத் தாயாக இருக்கிறாள்
    3. மகன் இல்லாதவருக்கு மகனாக இருக்கிறான்
    4. உலகிலுள்ள உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கிறான்.
  9. இரண்டாம் ராஜராஜ சோழன் எவ்வாறெல்லாம் ஒப்பிடப்படுகிறார்?
    1. விழி பெற்ற பயன்
    2. மெய் பெற்ற அருள்
    3. மொழி பெற்ற பொருள்
    4. புகழ் பெற்ற நூல்
  10. மெய்க்கீர்த்தி -தோற்றம் குறித்து எழுதுக
    1. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களில் உள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி
    2. பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்டது
    3. சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி என்ற செப்பமான வடிவம் பெற்றது

சிலப்பதிகாரம் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு எவ்வழியாகச் சென்றனர்?
    1. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் எனும் இடத்தை அடைந்தனர்
    2. அங்கிருந்து தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்
    3. அல்லது அங்கிருந்து சிறுமலையின் இடப்பக்கம் வழியாகச் சென்றால் திருமால் குன்றம் வழியாக மதுரையை அடையலாம்
    4. இவ்விரண்டிற்கும் இடையில் சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன
    5. அந்த இடைப்பட்ட வழியிலேயே கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றார்.

மங்கையராய்ப் பிறப்பதற்கே 2 மதிப்பெண் வினாக்கள்

  1. எம் எஸ் சுப்புலட்சுமி பெற்ற விருதுகள் யாவை?
    1. தாமரையணி விருது-1954
    2. மகசேசே விருது-1974
    3. இந்திய மாமணி விருது-1998
  2. எம் எஸ் சுப்புலட்சுமி தாம் மறக்கமுடியாத நிகழ்வாக எதைக் குறிப்பிடுகிறார்?
    • 1954இல் தாமரையணி விருது பெற்றபோது, பார்வையற்ற ஹெலன் கெல்லர் தன்னைத் தொட்டுப்பார்த்துப் பாராட்டியதை மறக்க முடியாது என்கிறார்
  3. 'ஹரி தும் ஹரோ' என்னும் பாடலை எம்எஸ் சுப்புலட்சுமி பாடக் காரணமாக அமைந்த நிகழ்வு எது?
    1. ஒருமுறை எம்எஸ் சுப்புலட்சுமி, காந்தியடிகளைத் தில்லியில் சந்தித்தபோது 'ரகுபதி ராகவ ராஜா ராம்' என்ற பாடலைப் பாடினார்
    2. மிகவும் பாராட்டிய காந்தியடிகள், மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னார்
    3. பின் சிறிது நாள்களில் எம்எஸ் சுப்புலட்சுமி, முனைந்து அந்தப்பாடலைக் கற்றுப் பயிற்சி செய்தார்
    4. சென்னை வானொலியில் 1947இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று 'ஹரி தும் ஹரோ' என்னும் 'மீரா பஜன்' பாடல் ஒளிபரப்பானது.
  4. எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் இசைச் சூழல் பற்றி எழுதுக
    1. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் தாயார் வீணைக் கலைஞர் ஆவார். அவரே எம் எஸ் சுப்புலட்சுமியின் முதல் குரு.
    2. எம் எஸ் சுப்புலட்சுமி, இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடிப் பதிவு செய்தார்
    3. இசை மேதைகளின் வழிகாட்டுதல்களில் தன்னை வளர்த்துக்கொண்டார்
  5. எம் எஸ் சுப்புலட்சுமி எந்தெந்த மொழிகளில் பாடியுள்ளார்?
    1. தமிழ்
    2. தெலுங்கு
    3. கன்னடம்
    4. சமஸ்கிருதம்
    5. மலையாளம்
    6. இந்தி
    7. மராத்தி
    8. குஜராத்தி
    9. ஆங்கிலம்
  6. எம் எஸ் சுப்புலட்சுமியின் இசைக்கு கிடைத்த மகுடம் எது?
    1. 1974இல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது பெற்றார்
    2. இவ்விருது பெறும் முதல் இசைக்கலைஞர் எம் எஸ் சுப்புலட்சுமி ஆவார்.
  7. மீரா திரைப்படம் குறித்து எம் எஸ் சுப்புலட்சுமி கூறுவது என்ன?
    1. மீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது.
    2. அது எனது கடைசித் திரைப்படமாகவும் அமைந்தது.
  8. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த பாடல்களாக எம் எஸ் சுப்புலட்சுமி கூறுவது யாது?
    1. காற்றினிலே வரும் கீதம்
    2. பிருந்தாவனத்தில் கண்ணன்
  9. இங்கிலாந்திலும் ஐநா அவையிலும் எம் எஸ் சுப்புலட்சுமி எப்போது பாடினார்?
    1. இங்கிலாந்து-1963
    2. ஐநா அவை-1966
  10. எம் எஸ் சுப்புலட்சுமியின் குரல் எப்போது எவ்வடிவில் திருப்பதியில் ஒலித்தது?
    1. 1966
    2. வெங்கடேச சுப்ரபாதம்
  11. பரதநாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்று தந்தது எது?
    • டோக்கியோவில் உள்ள 'கிழக்கு மேற்கு சந்திப்பு' நிகழ்வில் இந்தியாவின் சார்பாக பாலசரஸ்வதி கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடினார். இந்நிகழ்வு பரதநாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தது.
  12. நடன கலைஞர் பாலசரஸ்வதி அவர்களின் தொடக்க கால நடன அரங்கேற்றம் பற்றிக் கூறுக.
    1. காஞ்சிபுரத்தில் ஏழு வயதாக இருக்கும்போது முதன் முதலில் மேடை ஏறினார்
    2. 15 வயதில் சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடனமாடினார்
    3. பால சரஸ்வதியின் நடன நிகழ்ச்சியைப் பார்த்த பிறகே பலரும் மரபுசார் நாட்டியத்தை வரவேற்கத் தொடங்கினார்கள்.
  13. பால சரஸ்வதிக்குப் பல வாய்ப்புகள் வரக் காரணம் யாது?
    1. சென்னையில் பால சரஸ்வதியின் கச்சேரியைப் பார்த்த பண்டிட் ரவி சங்கர் மிகவும் பாராட்டினார்
    2. பண்டிட் ரவிசங்கரின் தம்பியின் மூலமாக வட இந்தியாவின் பல இடங்களில் நடனமாடும் வாய்ப்பைப் பெற்றார்
  14. பால சரஸ்வதியின் 'ஜனகணமன' பாடலுக்கு நடனமாடிய நிகழ்வு யாது?
    1. பாலசரஸ்வதி கல்கத்தாவிலும் காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த இந்தியத் தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய 'ஜனகணமன' பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடியுள்ளார்.
    2. அதுவே அவர், நாட்டுப் பண்ணுக்கு நடனமாடிய முதலும் இறுதியுமான நிகழ்வாகும்
  15. ராஜம் கிருஷ்ணனின் புதினங்கள் யாவை?
    1. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
    2. கரிப்பு மணிகள்
    3. அலைவாய்க் கரையில்
    4. சேற்றில் மனிதர்கள்
    5. வேருக்கு நீர்
    6. கூட்டுக் குஞ்சுகள்
    7. மண்ணகத்துத் பூந்துளிகள்
    8. குறிஞ்சித் தேன்
  16. ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்களின் தனித்துவம் யாது?
    • சமூகச் சிக்கல்களை எழுதும் முன்பு அந்த மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று களப்பணி ஆற்றி, கதைகளாக உருவாக்குவார்.
  17. ராஜம் கிருஷ்ணன் எழுதிய இலக்கிய வடிவங்கள் எவை?
    1. புதினங்கள்
    2. சிறுகதைகள்
    3. கட்டுரைகள்
    4. குறுநாவல்
    5. குழந்தை இலக்கியம்
    6. வரலாற்று நூல்
  18. அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டும் புதினங்கள் எவை?
    1. சேற்றில் மனிதர்கள்
    2. வேருக்கு நீர்
  19. கூட்டுக் குஞ்சுகள் புதினம் எதைப் பற்றியது?
    • குழந்தைகள் தீப்பெட்டித் தொழிலில் முடங்கி, தீக்குச்சிகளை அந்தப் பெட்டியில் அடைப்பதைப் போன்று குழந்தைகளின் உடலையும் மனத்தையும் நொறுக்கும் அவல உலகைக் 'கூட்டுக் குஞ்சுகள்' புதினமாகக் காட்டுகிறது
  20. 'மண்ணகத்துப் பூந்துளிகள்' புதினத்தின் கதைக் களம் யாது?
    • பெண்குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதியதே 'மண்ணகத்துப் பூந்துளிகள்'
  21. ராஜம் கிருஷ்ணனின் வேண்டுகோள் யாது? எழுத்துக்களில் நேர்மையான சினம், அறச்சீற்றம் இருக்க வேண்டும்
  22. குறிஞ்சித்தேன் புதினத்தின் கதைக்களம் யாது? நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்ததே 'குறிஞ்சித்தேன்' புதினமாகும்.
  23. கரிப்பு மணிகள் புதினம் யாருடைய வாழ்க்கை பற்றியது? தூத்துக்குடியில் வாழும் உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையை 'கரிப்பு மணிகள்' புதினம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
  24. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பெற்ற விருதுகள் யாவை?
    1. இந்திய அரசின் தாமரைத் திரு விருது
    2. ஸ்வீடன் அரசின் வாழ்வுரிமை விருது
    3. சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது
  25. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஈடுபட்ட விடுதலைப் போராட்டங்கள் எவை?
    1. ஒத்துழையாமை இயக்கம்
    2. சட்டமறுப்பு இயக்கம்
    3. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  26. இந்திய விடுதலைக்குப் பின்பு கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் செய்த சேவை யாது?
    1. கணவருடன் இணைந்து பூதான இயக்கத்தில் பணிபுரிந்தார்
    2. 'உழுபவருக்கே நில உரிமை இயக்கம்' தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்
  27. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் சொல்ல விரும்பும் செய்தி யாது?
    • உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்.
  28. மதுரை சின்னப்பிள்ளை தொடங்கிய 'களஞ்சியம்' பற்றி எழுதுக.
    • பத்து பேரோடு ஆரம்பித்த மகளிர் குழு, இன்று பல மாநிலங்களில் கிளைவிட்டுப் பல லட்சம் பேருடன் இயங்கி வருகிறது. 30 ஆண்டுகளாக முகம் சுளிக்காமல் சின்னப்பிள்ளை பணியாற்றி வருகிறார்.
  29. மதுரை சின்னப்பிள்ளை பெற்ற விருதுகள் யாவை?
    1. பெண் ஆற்றல் விருது
    2. ஔவை விருது
    3. பொதிகை விருது
    4. தாமரைத்திரு விருது
  30. மதுரை சின்ன பிள்ளையின் மகளிர் குழு செய்த பணி யாது?
    1. பெண்களெல்லாம் குழுவாக சேர்ந்தனர்
    2. விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தனர்
    3. நடவு, களையெடுப்பு, அறுவடை போன்ற வேலைகளைச் செய்தனர்.
    4. வருகிற கூலியைச் சரிசமமாகப் பிரித்தனர்
    5. இதில் வயதானவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் சேர்த்து வேலை கொடுத்தனர்
    6. அவர்கள் குடும்பத்திற்கும் உதவியாக இருந்தனர்.
  31. மதுரை சின்னப்பிள்ளை இந்தியாவின் முதன்மை அமைச்சரிடம் விருது பெற்ற நிகழ்வைக் கூறுக
    • டெல்லியில் விருது வழங்கும் நிகழ்வின்போது, இந்தியாவின் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாய் அவர்கள் சின்னப் பிள்ளையின் காலில் விழுந்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சின்னப்பிள்ளையின் உடல் நடுங்கி, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.