- கல் இலக்கியமாக அமைந்தது எது? மெய்க்கீர்த்தி
- மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இலக்கியம் எது? பதிற்றுப்பத்து
- மெய்க்கீர்த்தி யாருடைய காலத்தில் செப்பமான வடிவம் பெற்றது? சோழர் காலத்தில்
- மெய்கீர்த்தி யாருடைய காலங்களில் முளைவிட்டது? பல்லவர், பாண்டியர்
- இந்திரன் முதல் திசாபாலர் எண்மர் யாவர்? இந்திரன், அக்னி தேவன், எமதர்மன், வருண பகவான், நிருதி தேவன், வாயு பகவான், குபேரன், ஈசானன்
- மனுவாணை-பொருள் தருக. மனு தர்மத்தின் படி
- மனுதர்மத்தின்படி ஆட்சி செய்த சோழ மன்னன் யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
- சோழ நாட்டில் பிணிக்கப்படுபவை எவை? பட்டத்துயானைகள்
- சோழநாட்டில் புலம்புபவை எவை? சிலம்புகள்
- சோழ நாட்டின் கலங்குபவை எவை? ஓடைகள்
- சோழ நாட்டில் சிறைப்படுபவை எவை? ஆற்று நீர்
- சோழநாட்டில் வடுப்படுவன எவை? மாங்காய்கள்
- சோழ நாட்டில் பறிக்கப்படுவன எவை? மலர்கள்
- சோழ நாட்டில் கொடியன எவை? காடுகள்
- சோழநாட்டில் கள்ளுண்பன எவை? வண்டுகள்
- சோழ நாட்டில் வெறுமை உடையன எவை? மலை மூங்கில்
- சோழ நாட்டில் போராய் எழுவது எங்கே? வயல்களில்
- சோழநாட்டில் எங்கு இருள் சூழ்ந்து இருக்கிறது? நீண்ட மலைகளில்
- சோழ நாட்டில் யாரிடத்தில் மருட்சி காணப்படுகிறது? இளம் மான்களின் கண்களில்
- சோழ நாட்டில் பிறழ்ந்து செல்வது யார்? குளத்து மீன்கள்
- சோழ நாட்டில் சினம்கொள்பவர் யார்? செவிலித் தாயர்
- சோழநாட்டில் பொருள் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது? புலவர்தம் பாட்டில்
- சோழநாட்டில் கூடி ஆடுவது யார்? இசைப்பாணர்
- விழிப்பெற்ற பயனாகவும் மெய்பெற்ற அருளாகவும் மொழிபெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூலாகவும் திகழ்வது யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
- ராஜராஜன் கால தமிழ் கல்வெட்டு எத்தனையாவது நூற்றாண்டைச் சார்ந்தது?11
- கோப்பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
- கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம் பட எழுதப்படும் வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? மெய்க்கீர்த்திகள்
Tuesday, March 29, 2022
மெய்க்கீர்த்தி ஒரு மதிப்பெண் வினாக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment