Wednesday, September 9, 2020

இரட்டுற மொழிதல்- ஆழிக்கு இணை

 இரட்டுற மொழிதல்


ஒரு சொல்லையோ அல்லது தொடரையோ இரு பொருள் படுமாறு அமைப்பது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதற்கு சிலேடை அணி என்ற பெயரும் உண்டு.

ஆழிக்கு இணை

🌺முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

🌺மெத்த வணிகலமும் மேவலால் நித்தம் 

🌺அணை கிடந்தே சங்கத்தவர் காக்க ஆழிக்கு

🌺இணை கிடந்ததே தமிழ் ஈண்டு.

சிலேடை:

👉முத்தமிழ் துய்ப்பதால் 

✍️ மூன்று+தமிழ்=முத்தமிழ்

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்


என்று முத்தமிழாக வளர்ந்தது தமிழ் மொழி

✍️ முத்து+அமிழ்=முத்தமிழ்

முத்தினையும்


அமிழ்தினையும்

கடல் நமக்கு தருகிறது


👉 முச்சங்கம் கண்டதால்

🥀முச்சங்கம்=மூன்று+சங்கம்

✍️முதற்சங்கம் 

✍️இடைச்சங்கம் 

✍️கடைச்சங்கம் 

ஆகிய மூன்று சங்கங்கள் கூடி தமிழை வளர்த்தன.

🥀 மூன்று+சங்கு+அம்=முச்சங்கம்

அழகிய 

✍️வெண்சங்கு,


 ✍️சலஞ்சலம்,




 ✍️பாஞ்சசன்யம் 


ஆகிய மூன்று வகையான சங்குகளை கடல் தருகிறது

👉மெத்த வணிகலமும் மேவலால்

✍️மெத்த - மிகுதியான

✍️வணிகலமும்- வணிக கப்பல்களும்

✍️மிகுதியான வணிகக் கப்பல்கள் வந்து செல்லும் படி கடல் இருக்கிறது

🥀 மெத்த+அணிகலமும்

ஐம்பெருங்காப்பியங்களை


அணிகலன்களாக பெற்றது தமிழ்


👉 நித்தம் அணை கிடந்தே சங்கத்தவர் காக்க

✍️ தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்தி காக்கிறது, கடல்.

✍️ சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது, தமிழ்.


👉ஆழிக்கு இணை கிடந்ததே தமிழ்


=

👉 ஈண்டு - பொருள் தரும்.


துய்ப்பது= கற்பது, தருவது

மேவலால்= பொருந்துதலால், பெறுதலால்


-சந்தக்கவிமணி தமிழழகனார்.

2 comments:

  1. Understand nicely 🤗 thanks for your help..

    ReplyDelete
  2. ஈண்டு பொருள் தரும்

    ReplyDelete