- இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு எது? 1906
- காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை எங்கு தொடங்கினார்? தென் ஆப்பிரிக்கா
- காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைச் எப்போது தொடங்கினார்? 1906
- சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1906
- ம பொ சி பிறந்த ஆண்டு எது? 1906
- ம பொ சி என்பதன் விரிவாக்கம் என்ன? மயிலாப்பூர் பொன்னுசாமி மகன் சிவஞானம்
- ம பொ சி பிறந்த நாள் எப்போது? ஜூன் 26
- ம பொ சி எங்கு பிறந்தார்? சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் - சால்வன் குப்பம்
- ம பொ சி யின் தந்தை யார்? பொன்னுச்சாமி
- ம பொ சி அவர்களின்தாயார் யார்? சிவகாமி
- ம பொ சி யின் இயற்பெயர் என்ன? ஞானப்பிரகாசம்
- ம பொ சி அவர்களை சிவஞானி என அழைத்தவர் யார்? சரபையர் என்ற முதியவர்
- ம பொ சி எந்த வகுப்போடு கல்வியை நிறுத்தினார்? மூன்றாம் வகுப்பு
- ம பொ சி யின் கல்வி எப்போது தடைபட்டது? மூன்றாம் வகுப்பில் நுழைந்த 7 ஆம் நாளோடு
- ம பொ சி யின் கல்வி ஏன் தடைபட்டது? ம பொ சி அவர்களின் குடும்ப வறுமை காரணமாக
- ம பொ சி காலத்தில் மூன்றாம் வகுப்பிற்கு தேவைப்பட்ட பாடப் புத்தகங்கள் எவை? தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடப் புத்தகங்கள்
- பள்ளியிலிருந்து ம பொ சி ஏன் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தார்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர் துரத்திவிட்டார். அதை அவமானமாகக் கருதியதால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார்.
- ம பொ சி எதை அவமானமாகக் கருதினர்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்த மா பொ சி யை துரத்தி விட்டதால், அதை அவமானமாகக் கருதினர்.
- ம பொ சி யை வீட்டிற்கு விரட்டி விட்டதற்காக அவரின் தந்தை என்ன செய்தார்? ஆசிரியரை வாயார வைதார்
- ம பொ சி சிறுவயதில் அன்னையிடம் கற்ற பாடல்கள் எவை?
- அரசாணி மாலை
- பவளக்கொடி மாலை
- ம பொ சி தானாகவே விரும்பி படித்த பாடல்கள் எவை? சித்தர் பாடல்கள்
- ம பொ சி யின் கேள்வி ஞானத்தை பெருகியதில் பெரும் பங்கு வகித்தவர் யார்? திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்
- ம பொ சி எதனுடன் கடும் போர் புரிந்ததாக குறிப்பிடுகிறார்? தனது அறியாமையுடன்
- ம பொ சி எப்போது பேரானந்தம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்? குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விடும் போது
- ம பொ சி எவற்றைத் தம் சொத்துக்களாகக் கருதினார்? தம்மிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களை
- பேராயக் கட்சி எனப்படுவது எது? காங்கிரஸ் கட்சி
- காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது? 1931
- அந்நியத் துணி கடை மறியல் எதன்படி அனுமதிக்கப்படவில்லை? காந்தி-இர்வின் ஒப்பந்தம்
- காந்தி-இர்வின் ஒப்பந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி செய்தது என்ன?
- தீண்டாமை விலக்கு
- கதர் விற்பனை
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை எப்போது வழங்கப்பட்டது? செப்டம்பர் 30 ,1932
- ம பொ சி முதன்முதலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு எது?1932
- மபொசி முதல் முதலில் எதற்காக சிறையிலிடப்பட்டார்?தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட தண்டனை என்ன?
- மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை
- 300 ரூபாய் அபராதம். கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை.
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் தன்மை யாது? நூற்றுக் கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டிருந்தது
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் சிறப்பம்சம் யாது? பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது
- ம.பொ.சி அவர்களுக்குச் சிறையில் வழங்கப்பட்ட சோறு எந்த வகுப்பைச் சார்ந்தது?'சி' வகுப்பு
- இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் எது?1942 ஆகஸ்ட் 8
- இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?1942
- இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? பம்பாய் காங்கிரஸ் மாநாடு
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்திற்காக கைது செய்யப்பட்ட தலைவர்கள் யார்? காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி சிறையில் அடைக்கப்பட்ட நாள் எது? 1942 ஆகஸ்ட் 13
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி முதலில் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?வேலூர்
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக வேலூர் சிறையிலிருந்து எந்தச் சிறைக்கு மாற்றப்பட்டார்?அமராவதி
- அமராவதி சிறைச்சாலையின் அவல நிலை யாது? கூரை துத்தநாக தகடுகளால் வேயப்பட்டு இருந்தது
- வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது எப்போது? இந்திய விடுதலைக்கு மறுநாள்
- வடக்கெல்லை மீட்சிக்கு அழைப்பு விடுத்தது யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
- வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச்செய்தவர் யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
- ஆந்திரத் தலைவர்கள் எந்த மாவட்டத்தை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர்?சித்தூர்
- தமிழர் மாநாடு எங்கு நடைபெற்றது? திருத்தணி, சென்னை
- தமிழர் மாநாட்டை நடத்தியது யார்? தமிழரசுக் கழகம்
- தமிழரசுக் கழகம் யாருடன் இணைந்து தமிழர் மாநாட்டை நடத்தியது? தமிழ் ஆசான் மங்கலங்கிழார்
- வடக்கெல்லை போராட்டம் நடைபெற்ற இடங்கள் யாவை? சித்தூர் புத்தூர் திருத்தணி
- வடக்கெல்லை போராட்டத்தில் சிறைப்பட்டு உயிர் நீத்தவர் யாவர்?
- இராஜமுந்திரி சிறையில் இருந்த திருவாலங்காடு கோவிந்தராசன்
- பழனி சிறையிலிருந்த மாணிக்கம்
- மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? சர்தார் கே எம் பணிக்கர்
- மொழிவாரி ஆணையத்தின் தாக்கம் என்ன? சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிடம் அளித்துவிட்டது
- திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்கள் எந்த ஆணையத்தால் மீட்கப்பட்டன?படாஸ்கர் ஆணையம்
- இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு இல்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் எத?சிலப்பதிகாரம்
- தமிழினத்தின் பொதுச்சொத்து என்று மபொசி எதனைக் குறிப்பிடுகிறார்? சிலப்பதிகாரம்
- சிலம்புச் செல்வர் யார்?ம பொ சி
- தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்க முன் வந்தவர் யார்?இராஜாஜி
- ஆந்திரா மாநிலம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஆணையம் எது?நீதிபதி வாஞ்சு ஆணையம்
- தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? சென்னை மாநகராட்சி
- தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் யார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது? மாநகர தந்தை செங்கல்வராயன்
- ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்? பிரதமர் நேரு
- ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை எப்போது வெளியிடப்பட்டது? 25-3-1953
- மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எங்கு பேசினார்? வடிவீஸ்வரம்
- மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எப்போது பேசினார்?25-10-1946
- மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எந்த விழாவில் பேசினார்?வடிவை வாலிபர் சங்க ஆண்டு விழா
- தெற்கெல்லை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் யாவர்? தேவசகாயம், செல்லையா
- இயற்கையாகவே போர்க்குணம் கொண்டவர் யார்? மார்ஷல் நேசமணி
- தெற்கெல்லை போராட்டம் யாருடைய வருகைக்குப் பிறகு வலுப்பெற்றது? மார்சல் நேசமணி
- கன்னியாகுமரி மாவட்டம் எப்போது தமிழ்நாட்டுடன் இணைந்தது?1956 நவம்பர் 1
- மார்ஷல் நேசமணி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு யாது? நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபம் நிறுவியது.
- பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை எப்போது வெளியானது?10-10-1955
- பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை யாது? மொழிவாரி மாநிலம் அமைப்பது.
- பசல் அலி ஆணையத்தால் நம் கையை விட்டு சென்ற பகுதிகள் எவை? தேவிகுளம், பீர்மேடு
- ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக எவை அமைய வேண்டும்? மலையும் கடலும்
- தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும் தெற்கு எல்லையாக குமரி முனையையும் குறிப்பிடும் இலக்கியங்கள் எவை? புறநானூறு, சிலப்பதிகாரம்
- ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் எது? வியன்னா
- அலெக்ஸாண்ட்ரியா துறைமுகம் எங்கு உள்ளது? எகிப்து
- கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்த காலத்தைச் சார்ந்தது? கிபி இரண்டாம் நூற்றாண்டு
- கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? ஆஸ்திரியா நாட்டின் வியன்னா அருங்காட்சியகத்தில்
- கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்தத் தாளில் எழுதப்பட்டுள்ளது? பாபிரஸ்
- மபொசி அவர்களின் தன் வரலாற்று நூல் எது? எனது போராட்டம்
- மபொசி எப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்?1952-1954
- மபொசி எப்போது சட்டமேலவை தலைவராக இருந்தார்?1972-1978
- தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?ம பொ சிவஞானம்
- மபொசி அவர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
- மபொசி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு என்ன? திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் சிலை நிறுவியது
- வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது? 1966
Tuesday, March 29, 2022
சிற்றகல்ஒளி 1 மதிப்பெண் வினாக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment