- ஒருவரைப் படிப்பாளியாகவும் படைப்பாளியாகவும் பக்குவப்படுத்துவது எது? கதை படிப்பது
- இந்திய வரலாற்றில் 1906ஆம் ஆண்டு சிறப்புடைய ஆண்டாகும். எவ்வாறு?
- அந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்
- அந்த ஆண்டில்தான் வ உ சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
- ம பொ சி எங்கு எப்போது பிறந்தார்?
- சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் சால்வன் குப்பம் என்ற பகுதியில்
- ஜூன் 26, 1906 இல் பிறந்தார்
- ம பொ சி அவர்களின் பெற்றோர் யாவர்?
- பொன்னுச்சாமி - சிவகாமி
- ம பொ சி அவர்களுக்கு சிவஞானம் என்ற பெயர் வரக் காரணம் யாது?
- பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம்
- சரபையர் என்னும் முதியவர் சிவஞானி என்று அழைத்தார். சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்ற பெயர் நிலைத்தது.
- ம பொ சி வறுமையால் கல்வியை இழந்தார். அந்த நிகழ்வை விளக்குக.
- ம பொ சி மூன்றாம் வகுப்பில் நுழைந்த ஏழாம் நாளில் புத்தகம் இன்றி வந்ததற்காக ஆசிரியர் பள்ளியிலிருந்து விரட்டிவிட்டார்
- புத்தகம் கூட வாங்கிக் கொடுக்க முடியாத வறுமையின் காரணமாக கல்வியை இழந்தார்.
- ம பொ சி அவர்களின் கல்வி ஞானம் எத்தகையது?
- வறுமையின் காரணமாக பள்ளிக்கல்வியை இழந்தார்
- இருப்பினும் தாயார் மூலமாக அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்கள் கேட்டு இலக்கிய அறிவை வளர்த்து வந்தார்.
- சித்தர் பாடல்களை மனனம் செய்வது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவற்றின் மூலமாக இலக்கிய அறிவை வளர்த்தார்.
- ம.பொ.சி ஒரு புத்தகப் பித்தன் என்பதை நிறுவுக
- உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கி விட்டு பல வேளைகளில் பட்டினி கிடந்து இருக்கிறார்
- போதிய பணம் இல்லாத காரணத்தால் பழைய புத்தகக் கடைகளில் குறைந்த விலைக்குப் புத்தகங்கள் வாங்குவார்.
- குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விட்டால் பேரானந்தம் அடைவார்
- 'தமிழா! துள்ளி எழு' -துண்டறிக்கை குறிப்பு வரைக
- 30-9-1932இல் விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்த அறிக்கை 'தமிழா! துள்ளி எழு' என்பதாகும்
- நூற்றுக்கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டன
- இதை வெளியிட்டதற்காக மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் ம.பொ.சி அவர்களுக்கு விதிக்கப்பட்டது
- 'தமிழா! துள்ளி எழு'-துண்டறிக்கையின் சாரம்சம் யாது?
- பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது
- ம.பொ.சி அவர்களின் சிறை வாழ்க்கை பற்றிக் கூறு.
- 'தமிழா! துள்ளி எழு' துண்டறிக்கையை விநியோகம் செய்ததற்காக 6 மாத காலத்திற்குச் சிறைத்தண்டனை பெற்றார்
- 'சி' வகுப்புச் சோறு அவரின் பசியைப் போக்கினாலும் அவரது குடும்பத்தின் பட்டினியை எண்ணி வருந்தினார்
- வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட ம.பொ.சி துத்தநாகத் தகடுகளால் வேயப்பட்டிருந்த அமராவதி சிறையில் வாடினார்
- ம.பொ.சி அவர்களது வடக்கெல்லைப் போராட்டம் குறிப்பு வரைக
- மங்கலக் கிழாருடன் தமிழரசுக் கழகம் இணைந்து சென்னையிலும் திருத்தணியில் 'தமிழர் மாநாடு' நடத்தியது.
- சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய இடங்களில் வடக்கெல்லைப் போராட்டத்தைத் தொடங்கியது
- சர்தார் கே. எம். பணிக்கர் ஆணையம் 'சித்தூர்' மாவட்டத்தை ஆந்திராவிற்கு வழங்கியதை ஏற்காமல், "மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்" என்று முழங்கினார். அதனால், திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்களை மீட்கப்பட்டன.
- தலைநகரை மீட்கும் போராட்டம்-குறிப்பு வரைக
- ஆந்திர மாநிலம் அமைவதற்கான நீதிபதி வாஞ்சு ஆணையம், அதன் தலைநகராகச் சென்னையைப் பரிந்துரை செய்ததாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கள் நிலவின
- இராஜாஜி தனதுமுதலமைச்சர் பதவியைத் துறக்க முன்வந்தார்
- சென்னை மாநகராட்சியில் 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழங்கி, தீர்மானம் ஒன்றை ம.பொ.சி கொண்டு வந்தார்.
- இறுதியில், 25-03-1953இல் பாரத பிரதமர் நேரு ஆந்திர நாட்டின் தலைநகர் அதன் எல்லைக்குள்ளேயே அமையும் என்று அறிவித்தார்.
- தெற்கெல்லைப் போராட்டம் -குறிப்பு வரைக
- ம.பொ.சி அவர்கள் 25-10-1946இல் வடிவீசுவரத்தில் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றிப் பேசினார்
- 1953-54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைக் கிளர்ச்சிகளைத் தொடங்கி வைத்தது தமிழரசுக் கழகம்தான் என்றாலும் அதனை நடத்துகிற பொறுப்பு அந்தப் பகுதித் தலைவர்களிடமே இருந்தது
- போராட்டத்தில் தேவசகாயம், செல்லையா ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்
- மார்ஷல் நேசமணியின் வருகைக்குப் பிறகு போராட்டம் வலுப்பெற்றது
- பசல் அலி ஆணையம் -குறிப்பு வரைக
- 10-10-1955இல் பரிந்துரை வெளியானது
- மொழிவாரி மாநிலக் கொள்கை ஏற்கப்பட்டது
- திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீஸ்வரம், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு இணையவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. தேவிகுளம், பீர்மேடு நம் கைவிட்டுப் போனது.
- சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டங்கள் கேரளத்தோடு இணைய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது
- கடல் கடந்த தமிழ் வணிகம் பற்றிய சான்று தருக
- ஆஸ்திரிய நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது
- இச்சுவடி சேரநாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழர் ஒருவருக்கும் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் ஆகும்.
- இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
- ம.பொ.சி குறிப்பு வரைக
- சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்
- விடுதலைப் போராட்ட வீரர்
- சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் மேலவைத் தலைவராகவும் பதவி வகித்தவர்
- 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
- சிலம்புச் செல்வர் என்று ம.பொ.சி அழைக்கப்படக் காரணம் யாது?
- இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடு இல்லாதவகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஒரு இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தை தவிர வேறு இல்லை என்று உறுதியாக நம்பினார்.
- அதனால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார். இதன் காரணமாகவே ம.பொ.சி அவர்கள் 'சிலம்புச் செல்வர்' என்று அழைக்கப்படுகிறார்
- மார்ஷல் நேசமணி- குறிப்பு வரைக
- இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்
- வழக்கறிஞர்
- நாகர்கோவிலில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்
- குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
- தமிழக அரசு, இவருடைய நினைவாக நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.
Tuesday, March 29, 2022
சிற்றகல்ஒளி 2 மதிப்பெண் வினாக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment