Wednesday, March 30, 2022

காலக்கணிதம் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. கவிஞன் என்பவன் யார்?
    • மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக் களை பறித்து, தத்துவ நீர்பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.
  2. மாற்றம் குறித்து கண்ணதாசன் கூறுவன யாவை?
    1. மாற்றம் என்பது மானிடத் தத்துவம்
    2. மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகச் சிறப்பை அறிவேன்.
    3. நன்மை எவை, தீமை எவை என்பதை அறிந்து அதன் அடிப்படையில் என் வாழ்க்கைப் பயணம் செல்லும்.
    4. தலைவர்கள் மாறுவர்; காட்சிகள் மாறும்; தத்துவம் மட்டுமே நிலையாக நிற்கும்.
  3. கண்ணதாசன் தன்னுடைய கவிதைகளின் சிறப்பாக எவற்றைக் காட்டுகிறார்?
    1. நல்ல கருத்துக்களைக் கவிதையாக விதைப்பேன். பொன்னைவிட விலைமதிப்பு மிகுந்தது என்னுடைய கவிதைகள்.
    2. சரி என்று தோன்றும் கருத்துக்களைக் கவிதையாக ஆக்குவது, அளிப்பது, அழிப்பது என்னுடைய வேலை.
  4. கண்ணதாசன் தன்னுடைய குணங்களாக எவற்றைக் காட்டுகிறார்?
    1. செல்வர்க்கு அடிபணிய மாட்டேன்.
    2. பதவியைக் கண்டு பயப்பட மாட்டேன்.
    3. அன்புடன் பழகுவேன்.
    4. பிடித்ததைச் செய்வேன்.
    5. என்னிடம் பொருளுண்டு என்றால் பிறருக்குக் கொடுப்பேன்.
    6. என்னிடம் பொருள் இல்லை என்றால் காலதேவனிடம் அடைக்கலம் புகுவேன்.
    7. வண்டாக எழுந்து மலர்களில் அமர்வேன்.
    8. எனக்குக் கிடைத்த செல்வத்தை ஊருக்கெல்லாம் கொடுப்பேன்.
    9. சிறந்த கவிஞர்களான கம்பர், பாரதி, பாரதிதாசன் சொல்லாத செய்திகளைச் சொல்ல முயற்சி செய்வேன்.
    10. புகழ்ச்சியைக் கண்டு மயங்கமாட்டேன்.  இகழ்ச்சியைக் கண்டு மனம் வாடமாட்டேன்.
  5. கண்ணதாசன் குறிப்பு வரைக
    1. இயற்பெயர் :முத்தையாஊர் :சிவகங்கை மாவட்டம்- சிறுகூடல்பட்டி.
    2. பெற்றோர் :சாத்தப்பன் -விசாலாட்சி.
    3. சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
    4. சேரமான் காதலி என்னும் நாவலுக்காக சாகித்திய அகடாமி விருது பெற்றவர். 
    5. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
    6. தமது திரைப்படப் பாடல்கள் மூலம் எளிய முறையில் மெய்யியலை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

No comments:

Post a Comment