- கவிஞனின் எல்லை எது?
- கலையின் உச்சம் பெறுவதுதான் கவிஞனின் எல்லை ஆகும்
- 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் யார்?
- பாரதியார்
- கம்பனைப் பற்றி பாரதியார் கூறுவது என்ன?
- 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பாரதியார் பெருமைப்படுகிறார்
- கவிதை எனப்படுவது யாது?
- உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை
- கவிஞனின் உலகம் பற்றிக் குறிப்பிடு
- கவிஞனின் உலகம் இட எல்லை அற்றது
- கால எல்லை அற்றது
- கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியை, சொல்லைக் கொண்டு எழுப்புகிறான்
- அவன் கண்ட காட்சிகள் அதற்குத் துணைபுரிகின்றன
- கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன
- விழுமியங்கள் துணைபுரிகின்றன
- ஒப்புமைகள் துணைபுரிகின்றன
- கலையின் உச்சம் பெறுவதுதான் அவன் எல்லை ஆகிறது.
- சரயு ஆறு பாயும் விதத்தைக் கூறு
- மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி வேலியை உடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் ஆகிய அனைத்திலும் சரயு ஆறு பாய்ந்து ஓடுகிறது.
- அது, ஒரு உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போலப் பல இடங்களில் பாய்கிறது.
- இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பர் எவ்வாறு கவி பாடுகிறார்?
- குளிர்ந்த சோலைகளில் மயில்கள் நடனமாட,
- தாமரை மலர்கள் விளக்காக ஒளிர,
- மேகங்கள் மத்தளம் ஒலிக்க,
- குவளை மலர்கள் கண்விழித்துப் பார்க்க,
- தெளிந்த அலைகளை உடைய நீர்நிலைகள் திரைச்சீலையாய் விரிய,
- மகர யாழின் இசையை வண்டுகள் பாடுகின்றன.
- ஒன்றின் இருப்பால் மற்றொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக் கொண்டு ஒருநாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி பற்றி எழுது.
- கோசல நாட்டில் வறுமை சிறிதுமில்லை என்பதால், கொடைக்கு அங்கே இடமில்லை.
- நேருக்குநேர் போர்புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக் காட்ட வாய்ப்பு இல்லை.
- பொய்ம்மொழி இல்லாமையால் மெய்மை தனித்து விளங்க வில்லை.
- மற்ற பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை.
- இராமனை வருணிக்கும் கம்பன், தன் இயலாமையை எவ்வாறு இயன்றதாக்குகிறான்?
- பகலவனின் ஒளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு கரைந்து விடுகிறது.
- இடையே இல்லை என்று சொல்லும்படியாக, நுண்ணிய இடையை உடைய சீதையோடும் இளையவன் இலக்குவனோடும் இராமன் நடந்து சென்றான்.
- அவனது நிறம் மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? என்று வர்ணித்த கம்பன், ஐயோ! இவன் ஒப்பற்ற அழியாத அழகினை உடையவன் என்று சொல்வதன் மூலமாக தன் இயலாமையை இயன்றதாக்குகிறான்.
- "ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா" என்ற பாரதியின் சொல்லிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கம்பனின் கூற்று யாது?
- ஆழமும் பெரிய அலைகளையுமுடைய கங்கை ஆற்றை பரதன் முதலானோர் கடந்து செல்வார்களா?
- யானைகள் கொண்ட சேனையைக் கண்டு புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்?
- 'தோழமை' என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா?
- தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால், அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என்று உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா?
- கும்பகருணனை எழுப்பும் காட்சியை விவரிக்க.
- உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது
- அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
- காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற, வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே இனிப் படுத்து உறங்குவாயாக!
- இராமாயணம் -குறிப்பு வரைக
- இராமனது வரலாற்றைக் கூறும் நூல்
- இந்நூலுக்கு கம்பர் 'இராம அவதாரம்' எனப் பெயரிட்டார்
- இந்நூல் ஆறு காண்டங்களை உடையது
- கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
- கம்பர் - குறிப்பு வரைக.
- சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
- திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
- 'விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்று புகழப்பெற்றவர்.
- "கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" போன்ற முதுமொழிகளுக்கு உரியவர்.
- சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.
Tuesday, March 29, 2022
கம்பராமாயணம் 2 மதிப்பெண் வினாக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment