Tuesday, March 29, 2022

வினா விடை வகைகள் பொருள்கோள் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • வினா 6 வகைப்படும். அவை,
      1. அறி வினா
      2. அறியா வினா
      3. ஐய வினா
      4. கொளல் வினா
      5. கொடை வினா
      6. ஏவல் வினா
  2. அறி வினா என்றால் என்ன?
    1. தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது அறி வினா ஆகும்
    2. எடுத்துக்காட்டு: மாணவரிடம், "இந்தக் கவிதையின் பொருள் யாது?" என்று ஆசிரியர் கேட்டல்
  3. அறியா வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
    2. எடுத்துக்காட்டு: ஆசிரியரிடம், "இந்த கவிதையின் பொருள் யாது?" என்று மாணவர் கேட்டல்
  4. ஐய வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. தான் ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது
    2. எடுத்துக்காட்டு: "இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?" என வினவுதல்
  5. கொளல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது
    2. எடுத்துக்காட்டு: "ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?" என்று நூலகரிடம் வினவுதல்
  6. கொடை வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது
    2. எடுத்துக்காட்டு: "என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?" என்று கொடுப்பதற்காக வினவுதல்.
  7. ஏவல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுதல்
    2. எடுத்துக்காட்டு: "வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?" என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்
  8. விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • விடை எட்டு வகைப்படும். அவை,
      1. சுட்டு விடை
      2. மறை விடை
      3. நேர் விடை
      4. ஏவல் விடை
      5. வினா எதிர் வினாதல் விடை
      6. உற்றது உரைத்தல் விடை
      7. உறுவது கூறல் விடை
      8. இனமொழி விடை
  9. சுட்டு விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. சுட்டிக் கூறும் விடை
    2. "கடைத்தெரு எங்கு உள்ளது?" என்ற வினாவிற்கு 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறல்
  10. மறை விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. மறுத்துக் கூறும் விடை
    2. "கடைக்கு போவாயா?" என்ற கேள்விக்குப் 'போக மாட்டேன்' என மறுத்துக் கூறல்
  11. நேர் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. உடன்பட்டுக் கூறும் விடை
    2. "கடைக்கு போவாயா?" என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறல்
  12. ஏவல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை
    2. "இது செய்வாயா?" என்று வினவியபோது, 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது
  13. வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது
    2. "என்னுடன் ஊருக்கு வருவாயா?" என்ற வினாவிற்கு, 'வராமல் இருப்பேனா?' என்று கூறுவது
  14. உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல்
    2. "நீ விளையாட வில்லையா?" என்ற வினாவிற்குக், 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது
  15. உறுவது கூறல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்
    2. "நீ விளையாடவில்லையா?" என்ற வினாவிற்குக், 'கால் வலிக்கும்' என்று உறுவதைக் கூறுவது
  16. இனமொழி விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்
    2. "உனக்கு கதை எழுதத் தெரியுமா?"  என்ற வினாவிற்குக் "கட்டுரை எழுதத் தெரியும்" என்று கூறுவது.
  17. பொருள்கோள் என்றால் என்ன?
    • செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள் என்று பெயர்
  18. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை,
      1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
      2. மொழிமாற்றுப் பொருள்கோள்
      3. நிரல்நிறைப் பொருள்கோள்
      4. விற்பூட்டுப் பொருள்கோள்
      5. தாப்பிசைப் பொருள்கோள்
      6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
      7. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
      8. அடிமறி மாற்றுப் பொருள்கோள்
  19. ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனப்படும்
    2. எடுத்துக்காட்டு:அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
  20. நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது 'நிரல்நிறைப் பொருள்கோள்' எனப்படும்
    2. எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
  21. நிரல்நிறைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • நிரல்நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும். அவை,
      1. முறை நிரல்நிறைப் பொருள்கோள்
      2. எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
  22. முறை நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளியல் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும்
    2. எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
  23. எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள்கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்
    2. எடுத்துக்காட்டு: விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
  24. கொண்டுகூட்டு பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆகும்
    2. எடுத்துக்காட்டு: ஆலத்து மேல குவளை குளத்துல வாலின் நெடிய குரங்கு
  25. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
    • "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?" என்ற வினாவுக்கு "இந்த வழியாகச் செல்லுங்கள்" என்று விடை அளிப்பது.
      1. "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?"-அறியா வினா
      2. "இந்த வழியாகச் செல்லுங்கள்"-சுட்டு விடை
  26. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
    • "எனக்கு எழுதித் தருகிறாயா?" என்ற வினாவுக்கு, "எனக்கு யார் எழுதித் தருவார்கள்?" என்று விடையளிப்பது.
      1. "எனக்கு எழுதித் தருகிறாயா?" -ஏவல் வினா
      2. "எனக்கு யார் எழுதித் தருவார்கள்- ஏவல் விடை
  27. உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக
    • பாமகள்: வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?- அறியா வினா
    • ஆதிரை: ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்- நேர் விடை
    • பாமகள்: அப்படியா! என்ன தலைப்பு?- அறியா வினா
    • ஆதிரை: கல்வியில் சிறக்கும் தமிழர்!- (நேர் விடை) நீங்கள் கவியரங்கத்திற்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?- ஐய வினா
    • பாமகள்:ஏன் வராமல்?...வினா எதிர் வினாதல் விடை

No comments:

Post a Comment