Saturday, August 31, 2024

வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்கள்

 

வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்கள்

வேற்றுமையில் வல்லினம்

1.        எழுவாய் வேற்றுமையில் வல்லினம். மிகாது. (முதல் வேற்றுமை)

கமலா சிரித்தாள்.

2.        இரண்டாம் வேற்றுமையில் வல்லினம் மிகும்.

பாடத்தைப் படித்தான்

3.        மூன்றாம் வேற்றுமையில் வல்லினம் மிகாது.(ஆல், ஆன், ஒடு, ஓடு)

அண்ணனோடு போ

4.        நான்காம் வேற்றுமையில் வல்லினம் மிகும்.(கு)

ஊருக்குச் செல்

5.        ஐந்தாம் வேற்றுமையில் வல்லினம் மிகாது

(இல்-இருந்து, இன்-நின்று)

மரத்தினின்று குதித்தான்

மரத்திலிருந்து குதித்தான்

6.        ஆறாம் வேற்றுமையில் வல்லினம் மிகாது (அது,ஆது,)

எனது புத்தகம்

7.        ஏழாம் வேற்றுமையில் வல்லினம் மிகாது

(கண், இல், மேல், கீழ், உள்)

மதிலின்கண் பூனை

மதில்மேல் பூனை

வீட்டில் குழந்தை

8.        விளி வேற்றுமையில் வல்லினம் மிகாது

தந்தையே பாருங்கள்

வேற்றுமைத் தொகையில் வல்லினம்

1.        இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது ()

பாடம் படித்தான் (பாடத்தைப் படித்தான்)

2.        மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது (ஆல்)

கைதட்டு(கையால் தட்டு)

3.        நான்காம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.(கு)

வீடு சென்றார் (வீட்டுக்குச் சென்றார்)

நிலைமொழி அஃறிணை ஆயின் அதில் நான்காம் வேற்றுமைத் தொகை வரினும் வல்லினம் மிகும்.

கூலிப்படை   -(கூலிக்குப் படை)

குறிஞ்சித்தலைவன்- (குறிஞ்சிக்குத் தலைவன்)

4.        ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது (இருந்து, இல், நின்று, இன்)

கரை பாய்ந்தான் (கரையிலிருந்து பாய்ந்தான்)

5.        ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணை ஆயின் வல்லினம் மிகாது. (அது,இது,அ,உடைய)

இது கமலா புத்தகம் (இது கமலாவினுடைய புத்தகம்)

என் புத்தகம் (னது புத்தகம்)

தொண்டர் படை (தொண்டருடைய படை) தலைவி கூற்று (தலைவியினுடைய கூற்று)

 

 

ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணை ஆயின் வல்லினம் மிகும்.

புலித்தோல் (புலியினது தோல்)

புலிக்குட்டி (புலியினது குட்டி)

6.        ஏழாம் வேற்றுமைத்தொகை தனித்து வராது. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை என்பதாகவே வரும். அதாவது, மலைப்பாம்பு என்பது மலைமேல் வாழும் பாம்பு என்று விரியும்

வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம்

1.        இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

தயிர்க்குடம் (தயிரை உடைய குடம்) , உடைய

நகைக்கடை (நகையை விற்கும் கடை) , விற்கும்

எலிப்பொறி (எலியைப் பிடிக்கும் பொறி) , பிடிக்கும்

2.        மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்

வெள்ளிக்கிண்ணம் (வெள்ளியால் ஆன கிண்ணம்) ஆல், ஆன

இரும்புப்பெட்டி (இரும்பால் ஆன பெட்டி) ஆல், ஆன

தேங்காய்ச்சட்னி (தேங்காயால் ஆன சட்னி) ஆல், ஆன

3.        நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.

கோழித்தீவனம் (கோழிக்குப் போடும் தீவனம்) கு, போடும்

குழந்தைப்பால் (குழந்தைக்குத் தரும் பால்)கு, தரும்

4.        ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.

வாய்ப்பாட்டு (வாயிலிருந்து வரும் பாட்டு) இருந்து, வரும்

கனிச்சாறு (கனியிலிருந்து எடுக்கப்படும் சாறு) இருந்து, எடுக்கப்படும்

5.        ஆறாம் வேற்றுமைத் தொகை அமையும். ஆனால், ஆறாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை அமையாது. அதனால், ஆறாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையில் வல்லினம் மிகுமா? மிகாதா? என்ற கேள்வி எழவில்லை.

6.        ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.

தண்ணீர்ப்பாம்பு (தண்ணீரில் வாழும் பாம்பு) இல், வாழும்

சென்னைக்கல்லூரி (சென்னையில் உள்ள கல்லூரி)இல், உள்ள

மதுரைக்கோவில் (மதுரையில் உள்ள கோவில்)இல், உள்ள

மலைப்பாம்பு (மலையில் வாழும் பாம்பு)இல், வாழும்

அல்வழியில் வல்லினம்

1.        வினைத்தொகையில் வல்லினம் மிகாது

அலைகடல் (அலைந்த கடல், அலைகின்ற கடல், அலையும் கடல்)

ஏவுகணை (ஏவிய கணை, ஏவுகின்ற கணை, ஏவும் கணை)

ஊறுகாய் (ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊரும் காய்)

2.        பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

வெள்ளைத்தட்டு (வெள்ளை நிறமுடைய தட்டு)

புதுத்துணி (புதுமை ஆகிய துணி)

தீமைக்குணம் (தீமை ஆகிய குணம்)

3.        இருபெயரொட்டுப்பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

மல்லிகைப்பூ (மல்லிகை, பூ)

சாரைப்பாம்பு (சாரை, பாம்பு)

உழவுத் தொழில் (உழவு, தொழில்)

 

4.        உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.

தாமரைக்கை (தாமரை போன்ற கை)

மலர்க்கண் (மலர் போன்ற கண்)

5.        உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

தாய்தந்தை (தாயும் தந்தையும்)

சேரசோழபாண்டியர் (சேரரும் சோழரும் பாண்டியரும்)

பெயரெச்சத்தில் வல்லினம்

1.        பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.

a.        வந்த சிரிப்பு (வந்த-எச்சம், சிரிப்பு -பெயர்)

b.       பார்த்த பையன்(பார்த்த-எச்சம், பையன்-பெயர்)

2.        ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்

அறியாப்பிள்ளை (அறியா பிள்ளை)

ஓடாக்குதிரை (ஓடா குதிரை)

காணாப்பொருள் (காணா பொருள்)

இறுதி எழுத்து கெட்டும் எதிர்மறைப் பொருளிலும் எச்சமாகவும் பெயர்ச்சொல்லோடும் வந்துள்ளது

வினையெச்சத்தில் வல்லினம்

1.        அகர ஈற்று வினையெச்சத்தில் வல்லினம் மிகும்

பாடக் கற்றான்()

2.        இகர ஈற்று வினையெச்சத்தில் வல்லினம் மிகும்

பாடித் திரிந்தான் ()

3.        வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சத்தில் வல்லினம் மிகும்

கேட்டுக் கொண்டான்(ட்டு)

பார்த்துச் செல்(த்து)

4.        யகர மெய் ஈற்று வினையெச்சத்தில் வல்லினம் மிகும்

போய்ப் பார்த்தான் (ய்)

5.        ஆக, ஆய், என ஈற்று வினையெச்சத்தில் வல்லினம் மிகும்

நன்றாகப் படி (ஆக)

விரைவாய்ச் செல்(ஆய்)

மெல்லெனப் பேசு (என)

(பொதுவாக வினையெச்சத்தில் வல்லினம் மிகும் என்பதை உணர்க)

முற்றியலுகரத்திலும் குற்றியலுகரத்திலும் வல்லினம்

1.        முற்றியலுகரச் சொற்களின்பின் வல்லினம் மிகும்.

நடுக்கடல்

புதுப்புத்தகம்

2.        வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

பாக்குத்தோப்பு (க்கு)

அச்சுப்புத்தகம்(ச்சு)

3.        சில மென்தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.

மருந்துச்சீட்டு (ந்து)

பாம்புத்தோல் (ம்பு)

4.        சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.

முதுகுத்தண்டு

விறகுக்கடை

தொகா நிலையில் வல்லினம்

1.        வியங்கோள் வினைமுற்றில் வல்லினம் மிகாது.

வாழ்க தலைவர ()

2.        அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது.

தம்பி  தம்பி

3.        சால, தவ, தட, குழ ஆகிய உரிசொற்களின் பின் மட்டும் வல்லினம் மிகும். பிற உரிச் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

சாலச் சிறந்தது

தவப் பெரியவர்

4.        இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது.

தடதட

 

பிறவிதிகளில் வல்லினம்

1.        ஓரெழுத்துச் சொற்களின் பின் வல்லினம் மிகும்

தைப்பொங்கல், தீச்சுடர்

2.        , , , அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு, அதற்கு, இதற்கு, எதற்கு, அவ்வகை, அத்துணை, எத்துணை, யாண்டு, ஈண்டு, மிக, இனி, தனி, என, ஆக, எட்டு, பத்து, போன்ற ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்.

3.        எட்டு, பத்து தவிர பிற எண்ணுப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

4.         கள் பன்மை விகுதி பெறும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

5.        ஐகாரத்தை இறுதியாக உடைய ஓரெழுத்துச் சொற்களின் பின் கள் விகுதி சேரும் போது வல்லினம் மிகாது.

6.        அது, இது, எது, அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவை, இவை, எவை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட, நேற்றைய, இன்றைய, நாளைய, படி, ஆறு ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.

7.        நிலைமொழி உயர்திணையாய் வரும் தொடரில் வல்லினம் மிகாது.

8.        மகர ஈறுகெட்டு உயிர்ஈறு நிற்கும் இடங்களில் வல்லினம் மிகும். குளக்கரை, தொடக்கப்பள்ளி.

9.        தனிக்குறிலை அடுத்து வரும் ஆகாரச் சொற்களை பின் வல்லினம் மிகும். கனாக் கண்டேன்.

10.    திசைப் பெயர்களின் பின் வல்லினம் மிகும். வடக்குத்தெரு

11.    சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். உலகப்பந்து, வாழ்க்கைப்படகு.

No comments:

Post a Comment