Saturday, September 21, 2024

பயிற்சித் தேர்வு 2

 

மெல்லக் கற்போர் பயிற்சித் தேர்வு வினாத்தாள் 2

இயல் 3

பலவுள் தெரிக.

1.   பின்வருவனவற்றுள் முறையான தொடர்-

a.   தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடம் உண்டு.

b.   தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

c.   தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

d.   தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

2.   சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்னும் அடியில் பாக்கம் என்பது-

a.   புத்தூர்

b.   மூதூர்

c.   பேரூர்

d.   சிற்றூர்

3.   அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது-

a.   வேற்றுமை உருபு

b.   எழுவாய்

c.   உவம உருபு

d.   உரிச்சொல்

4.   காசிக்காண்டம் என்பது-

a.   காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

b.   காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

c.   காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

d.   காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

5.   விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச்சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-

a.   நிலத்திற்கேற்ற விருந்து

b.   இன்மையிலும் விருந்து

c.   அல்லிலும் விருந்து

d.   உற்றாரின் விருந்து

6.   பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக

a.   உயிரை விடச் சிறப்பாகப் பேணிக்காக்கப்படும்- ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

b.   ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது- உயிரினும் ஓம்பப்படும்

c.   ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்-நடு தருள் நச்சுமரம் பழுத்தற்று

7.   எய்துவர் எய்தாப் பழி-இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

a.   கூவிளம் தேமா மலர்

b.   கூவிளம் புளிமா நாள்

c.   தேமா புளிமா காசு

d.   புளிமா தேமா பிறப்பு

 

இயல் 4

8.   உனதருளே பார்ப்பன் அடியேனே”- யாரிடம் யார் கூறியது?

a.    குலசேகராழ்வாரிடம் இறைவன்

b.   இறைவனிடம் குலசேகராழ்வார்

c.   மருத்துவரிடம் நோயாளி

d.   நோயாளியிடம் மருத்துவர்

9.   தலைப்புகளுக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.

திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது

a.   தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

b.   குறிப்புகளுக்கு தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

c.   தலைப்புக்கு தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

d.   குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

10.  பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

a.   வானத்தையும் பாட்டையும்

b.   வானத்தையும் புகழையும்

c.   வானத்தையும் பூமியையும்

d.   வானத்தையும் பேரொலியையும்

11.  குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே-

a.   மரபு வழுவமைதி, திணை வழுவமைதி

b.   இட வழுவமைதி, மரபு வழுவமைதி

c.   பால் வழுவமைதி, திணை வழுவமைதி

d.   கால வலுவமைதி, இட வழுவமைதி

12.  பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடும் மென்பொருள் எது?

a.   துலா

b.   சீலா

c.   குலா

d.   இலா

 

 

No comments:

Post a Comment