Saturday, September 21, 2024

பயிற்சித் தேர்வு 3

 

மெல்லக் கற்போர் பயிற்சித் தேர்வு வினாத்தாள் 3

இயல் 5

பலவுள் தெரிக.

1.   மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

a.   சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

b.   காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

c.   பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

d.   சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

2.   அருந்துணை என்பதை பிரித்தால்______

a.   அருமை+துணை

b.   அரு+துணை

c.   அருமை+இணை

d.   அரு+இணை

3.   இங்கு நகரப் பேருந்து நிற்குமா?”என்று வழிப்போக்கர் கேட்டது____வினா.

அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது______விடை.

a.   ஐயவினா, வினா எதிர் வினாதல்

b.   அறிவினா, மறைவிடை

c.   அறியா வினா, சுட்டுவிடை

d.   கொளல் வினா, இனமொழி விடை

4.   அருளை பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”- என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

a.   தமிழ்

b.   அறிவியல்

c.   கல்வி

d.   இலக்கியம்

5.   இடைக்காடனாரின் பாடலை இழந்தவர்_____இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்_____

a.   அமைச்சர், மன்னன்

b.   அமைச்சர், இறைவன்

c.   இறைவன், மன்னன்

d.   மன்னன், இறைவன்

இயல் 6

6.   குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்______

a.   முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

b.   குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

c.   குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

d.   மருதம், நெய்தல்

e.   , பாலை நிலங்கள்

7.   கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்

கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

a.   கூற்று 1 மற்றும் 2 சரி

b.   கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

c.   கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

d.   கூற்று 1 மற்றும் 2 தவறு.

8.   மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

a.   அள்ளி முகர்ந்தால்

b.   தளரப் பிணைத்தால்

c.   இறுக்கி முடிச்சிட்டால்

d.   காம்பு முறிந்தால்

9.   தூக்கு மேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?

a.   கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

10. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

a.   நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

b.   ஊரில் விளைச்சல் இல்லாததால்

c.   அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

d.   அங்கு வறுமை இல்லாததால்

 

 

 

No comments:

Post a Comment