Tuesday, March 29, 2022

எழுத்து சொல் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. இலக்கணத்தின் பயன் யாது?
    1. மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவுகிறது
    2. மொழியின் சிறப்புகளை அறிய உதவுகிறது
  2. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
      1. உயிர்மெய்
      2. ஆய்தம்
      3. உயிரளபெடை
      4. ஒற்றளபெடை
      5. குற்றியலிகரம்
      6. குற்றியலுகரம்
      7. ஐகாரக்குறுக்கம்
      8. ஒளகாரக்குறுக்கம்
      9. மகரக்குறுக்கம்
      10. ஆய்தக்குறுக்கம்
  3. அளபெடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • அளபெடைகள் இரண்டு வகைப்படும். அவை,
      1. உயிரளபெடை
      2. ஒற்றளபெடை
  4. அளபெடையின் பயன் யாது?
    1. உணர்வை வெளிப்படுத்துவதற்கும்...
    2. இனிய ஓசையைத் தருவதற்கும்...
  5. உயிரளபெடை என்றால் என்ன?
    1. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்.
    2. அவ்விடங்களில் நெடில் எழுத்துக்களின் இனமான குறில் எழுத்துக்கள் அவற்றின் பின்னால் வரும்.
  6. உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
      1. செய்யுளிசை அளபெடை
      2. இன்னிசை அளபெடை
      3. சொல்லிசை அளபெடை.
  7. செய்யுளிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்கிறோம்
    2. எ.கா.
      1. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்-மொழி முதலில் அளபெடுத்தது
      2. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅர்க்கு வாழிய நெஞ்சே-மொழி இடையில் அளபெடுத்தது
      3. நல்ல படாஅ பறை-மொழி இறுதியில் அளபெடுத்தது
  8. இன்னிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
    2. எ.கா. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை
  9. சொல்லிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல், எச்சச் சொல்லாகத் திரிந்து அளவெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்
    2. எடுத்துக்காட்டு
      • உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்
      • நசை- விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என்று அளவு எடுத்தது.  பெயர்ச்சொல் வினையடையாக மாறியது.
  10. ஒற்றளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துக்கள் பத்தும் ( ஞ ண ந ம ன ய ல வ ள) ஆய்த எழுத்தும் அளவெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
    2. எடுத்துக்காட்டு:
      • எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர் வெஃஃ குவார்க்கில்லை வீடு
  11. சொல் என்றால் என்ன?
    • ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்
  12. சொல்லின் பண்புகளைக் குறிப்பிடுக
    1. இருதிணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்
    2. மூவகை இடங்களிலும் வரும்
    3. உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்
    4. வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்
  13. மூவகை மொழிகள் யாவை?
    1. தனிமொழி
    2. தொடர்மொழி
    3. பொதுமொழி
  14. தனிமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனி மொழி எனப்படும்
    2. எ.கா. கண், படி
  15. பதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? எடுத்துக்காட்டு தருக.
    • பதம் இரண்டு வகைப்படும். அவை,
      1. பகுபதம்
        • எ.கா. கண்ணன், படித்தான்
      2. பகாப்பதம்
        • எ.கா. கண், படி
  16. தொடர் மொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழியாகும்
    2. எ.கா. கண்ணன் வந்தான்.
  17. பொதுமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு சொல்  தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
    2. எடுத்துக்காட்டு: எட்டு
      1. 'எட்டு' தனித்து நின்று 8 என்ற எண்ணைக் குறிக்கும்
      2. 'எட்டு'=எள்+து-->எனத் தொடர் மொழியாகப் பிரிந்து நின்று 'எள்ளை உண்' என்று பொருள் தருகிறது
      3. இவ்வாறு தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால், இது பொதுமொழி ஆகிறது
  18. வேங்கை எவ்வாறு பொது மொழியாகிறது?
    1. வேங்கை- தனித்து நின்று மரத்தைக் குறிக்கிறது
    2. 'வேம்+கை' எனப் பிரிந்து நின்று 'வேகின்ற கை' என்று பொருள் தருகிறது.
    3. இவ்வாறு தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால், இது பொதுமொழி ஆகிறது
  19. தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ  உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
    2. எ.கா. ஈதல், நடத்தல்
  20. விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
    • வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
    • நட+தல்=நடத்தல்
  21. எதிர்மறைத் தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர் ஆகும்.
    2. எ.கா. நடவாமை, கொல்லாமை
  22. முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயர் ஆதல் முதல்நிலைத் தொழிற்பெயர் ஆகும்.
    2. எடுத்துக்காட்டு: தட்டு, உரை, அடி. இவை முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும்போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.
  23. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. விகுதி பெறாமல் முதல்நிலை திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
    2. எ.கா. கெடு- கேடு, சுடு-சூடு
  24. வினையாலணையும் பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்
    2. எ.கா. வந்தவர் அவர்தான்.
  25. தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

பெருமாள் திருமொழி 2 மதிப்பெண் வினாக்கள்

  1. சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்து இருக்கக் காரணம் என்ன?
    • தமிழர், பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருப்பதால்...
  2. சங்க இலக்கியத்திற்கு இணையாக எவ்வகை இலக்கியங்களில் அறிவியல் கருத்துக்கள் காணப்படுகின்றன?
    • பக்தி இலக்கியங்களில்...
  3. குலசேகர ஆழ்வார், இறைவனை வழிபடுவதற்குக் கூறும் உவமை யாது?
    • மருத்துவர், உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
  4. குலசேகர ஆழ்வார், இறைவனை எவ்வாறு வழிபடுகிறார்?
    1. மருத்துவர், உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
    2. வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள அன்னையே! அதுபோன்று உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தைக் எனக்குத் தந்தாலும், அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.
  5. வித்துவக்கோட்டு இறைவனைப் பற்றிக் கூறு.
    1. வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.
    2. குலசேகர ஆழ்வார், வித்துவக்கோட்டு இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியுள்ளார்.
  6. பெருமாள் திருமொழி -குறிப்பு வரைக.
    1. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது
    2. 105 பாடல்கள் உள்ளன
    3. பாடியவர்: குலசேகர ஆழ்வார்
    4. காலம்: எட்டாம் நூற்றாண்டு.

இலக்கணம் பொது 2 மதிப்பெண் வினாக்கள்

  1. திணை என்றால் என்ன? உயர்திணை என்றால் என்ன? அஃறிணை என்றால் என்ன?
    1. திணை என்பது ஒழுக்கம் ஆகும்
    2. உயர்திணை என்பது உயர்ந்த ஒழுக்கம் உடைய மனிதர்களைக் குறிக்கும்.
    3. அஃறிணை என்பது ஒழுக்கமில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்
  2. பால் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    1. பால் என்பது திணையின் உட்பிரிவு
    2. பால் ஐந்து வகைப்படும். அவை,
      1. ஆண்பால்
      2. பெண்பால்
      3. பலர்பால்
      4. ஒன்றன்பால்
      5. பலவின்பால்.
  3. உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
    1. ஆண்பால்
    2. பெண்பால்
    3. பலர்பால்
  4. அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
    1. ஒன்றன்பால்
    2. பலவின்பால்
  5. ஒன்றன்பால் என்றால் என்ன?
    • அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்
  6. பலவின்பால் என்றால் என்ன?
    • அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
  7. இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • இடம் மூன்று வகைப்படும். அவை,
      1. தன்மை
      2. முன்னிலை
      3. படர்க்கை
  8. தன்மைப் பெயர்கள் யாவை?
    • நான், யான், நாம், யாம்...
  9. முன்னிலைப் பெயர்கள் யாவை?
    • நீ, நீர், நீவிர், நீங்கள்
  10. படர்க்கைப் பெயர்கள் யாவை?
    • அவன், அவள், அவர்
    • அது, அவை...
  11. வழாநிலை என்றால் என்ன?
    • இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்
  12. வழு என்றால் என்ன?
    • இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
  13. வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • வழு ஏழு வகைப்படும் அவை,
      1. திணை வழு
      2. பால் வழு
      3. இட வழு
      4. கால வழு
      5. வினா வழு
      6. விடை வழு
      7. மரபு வழு
  14. செழியன் வந்தது, கண்ணகி உண்டான், நீ வந்தேன், நேற்று வருவான்- இவை எவ்வகை வழுக்கள் என்று கூறு?
    1. செழியன் வந்தது-திணை வழு
    2. கண்ணகி உண்டான்-பால் வழு,
    3. நீ வந்தேன்-இட வழு,
    4. நேற்று வருவான்-கால வழு
  15. ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்- எவ்வகை வழு?
    • வினா வழு
  16. 'கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்கு, 'கண்ணாடி பைக்குள் இருக்கிறது' என்று விடை அளித்தல்-எவ்வகை வழு?
    • விடை வழு
  17. தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந் தோட்டம் என்று கூறுதல் -எவ்வகை வழு?
    • மரபு வழு
  18. வழுவமைதி என்றால் என்ன?
    • இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்
  19. திணை வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக?
    • "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும்
    • இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது
  20. பால் வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
    • "வாடா ராஜா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது, பால் வழுவமைதி ஆகும்.
    • இங்கு உவப்பின் காரணமாக பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
  21. இடவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இட வழுவமைதி ஆகும்.
  22. காலவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்
    • இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாக கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித் தன்மையை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
  23. மரபு வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • "கத்தும் குயிலோசை- சற்றே வந்து காதிற் படவேணும்"-பாரதியார்
    • குயில் கூவும் என்பதே மரபு. குயில் கத்தும் என்பது மரபு வழு.
    • இங்குக் கவிதையில் இடம் பெற்று இருப்பதால் இது மரபுவழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  24. "அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்" என்பது எவ்வகை வழுவமைதி எனக் காட்டு.
    1. இத்தொடர், "அமைச்சர் நாளை விழாவிற்கு வருவார்" என்று அமைதல் வேண்டும்.
    2. அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை.
    3. ஏனெனில், அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
  25. "இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான். -இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
    • இத்தொடர், கண்ணன் என்பவர் தனக்குத் தானே கூறிக்கொண்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.
    • தன்னைத் தன்மையிடத்தில் கூறுவதற்குப் பதிலாக படர்க்கை இடத்தில் கூறியுள்ளார்.
    • இவ்வாறு கூறுவது இலக்கண ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதால், இது இடவழுவமைதியாகும்.
  26. சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்-இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
    1. "சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடினோம்" என்று வந்திருக்க வேண்டும்.
    2. இறந்தகாலம் வருவதற்குப் பதிலாக எதிர்காலம் வந்துள்ளது.
    3. எனவே, இது கால வழுவமைதி ஆகும்.
  27. செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.-இது எவ்வகை வழுவமைதி என்று கூறு.
    1. இத்தொடர், "செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறான்" என்று வந்திருக்க வேண்டும்.
    2. ஆண்பால் வருவதற்குப் பதிலாகப் பலர்பால் வந்துள்ளது.
    3. எனவே, இது 'பால் வழுவமைதி' ஆகும்.
  28. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. தந்தை, "மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா" என்று சொன்னார். (ஆண்பாற் பெயர்களை பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக)
    • தாய், "மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா" என்று சொன்னார்.
  29. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
    • அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பினார்
  30. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. "இதோ முடித்து விடுவேன்" என்பது செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
    • இதோ முடித்து விட்டேன்
  31. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையை படர்க்கையாக மாற்றுக)
    • நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை
  32. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக?
    • குழந்தை அழுகிறது, பார்.

நீதி வெண்பா 2 மதிப்பெண் வினாக்கள்

  1. "கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது? "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது?
    • கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -சங்க இலக்கியம்
    • "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -திருக்குறள்
  2. அறிவு பெறுவது எவ்வாறு?
    • பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல, நூல்களை நாடிச்சென்று அறிவு பெற வேண்டும்.
  3. கல்வியின் பயன் யாது?
    1. அருளைப் பெருக்குவது
    2. அறிவைச் சீராக்குவது
    3. மயக்கம் அகற்றுவது
    4. அறிவுக்குத் தெளிவு தருவது
    5. உயிருக்கு அரிய துணையாய் இருப்பது
    6. இன்பம் சேர்ப்பது
  4. கல்வியை ஏன் கற்க வேண்டும்?
    1. அருளைப் பெருக்குவதால்
    2. அறிவைச் சீராக்குவதால்
    3. மயக்கம் அகற்றுவதால்
    4. அறிவுக்குத் தெளிவு தருவதால்
    5. உயிருக்கு அரிய துணையாய் இருப்பதால்
    6. இன்பம் சேர்ப்பதால் கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும்
  5. சதாவதானம் குறிப்பு வரைக.
    1. சதம் என்றால் நூறு என்று பொருள்
    2. அவதானம் என்றால் கவனித்தல்
    3. ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளித்தலே சதாவதானம் எனப்படும்.
  6. செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பு வரைக.
    1. சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்.
    2. ஊர்: கன்னியாகுமரி மாவட்டம்- இடலாக்குடி
    3. 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
    4. சீறாப் புராணத்திற்கு உரை எழுதியவர்
    5. 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப் பெற்றார்.
  7. செய்குத்தம்பிப் பாவலருக்கு அரசு செய்த சிறப்பு என்ன?
    1. இவரது நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும்  அமைக்கப்பட்டுள்ளது
    2. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

வினா விடை வகைகள் பொருள்கோள் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • வினா 6 வகைப்படும். அவை,
      1. அறி வினா
      2. அறியா வினா
      3. ஐய வினா
      4. கொளல் வினா
      5. கொடை வினா
      6. ஏவல் வினா
  2. அறி வினா என்றால் என்ன?
    1. தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது அறி வினா ஆகும்
    2. எடுத்துக்காட்டு: மாணவரிடம், "இந்தக் கவிதையின் பொருள் யாது?" என்று ஆசிரியர் கேட்டல்
  3. அறியா வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
    2. எடுத்துக்காட்டு: ஆசிரியரிடம், "இந்த கவிதையின் பொருள் யாது?" என்று மாணவர் கேட்டல்
  4. ஐய வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. தான் ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது
    2. எடுத்துக்காட்டு: "இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?" என வினவுதல்
  5. கொளல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது
    2. எடுத்துக்காட்டு: "ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?" என்று நூலகரிடம் வினவுதல்
  6. கொடை வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது
    2. எடுத்துக்காட்டு: "என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?" என்று கொடுப்பதற்காக வினவுதல்.
  7. ஏவல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுதல்
    2. எடுத்துக்காட்டு: "வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?" என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்
  8. விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • விடை எட்டு வகைப்படும். அவை,
      1. சுட்டு விடை
      2. மறை விடை
      3. நேர் விடை
      4. ஏவல் விடை
      5. வினா எதிர் வினாதல் விடை
      6. உற்றது உரைத்தல் விடை
      7. உறுவது கூறல் விடை
      8. இனமொழி விடை
  9. சுட்டு விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. சுட்டிக் கூறும் விடை
    2. "கடைத்தெரு எங்கு உள்ளது?" என்ற வினாவிற்கு 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறல்
  10. மறை விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. மறுத்துக் கூறும் விடை
    2. "கடைக்கு போவாயா?" என்ற கேள்விக்குப் 'போக மாட்டேன்' என மறுத்துக் கூறல்
  11. நேர் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. உடன்பட்டுக் கூறும் விடை
    2. "கடைக்கு போவாயா?" என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறல்
  12. ஏவல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை
    2. "இது செய்வாயா?" என்று வினவியபோது, 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது
  13. வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது
    2. "என்னுடன் ஊருக்கு வருவாயா?" என்ற வினாவிற்கு, 'வராமல் இருப்பேனா?' என்று கூறுவது
  14. உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல்
    2. "நீ விளையாட வில்லையா?" என்ற வினாவிற்குக், 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது
  15. உறுவது கூறல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்
    2. "நீ விளையாடவில்லையா?" என்ற வினாவிற்குக், 'கால் வலிக்கும்' என்று உறுவதைக் கூறுவது
  16. இனமொழி விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்
    2. "உனக்கு கதை எழுதத் தெரியுமா?"  என்ற வினாவிற்குக் "கட்டுரை எழுதத் தெரியும்" என்று கூறுவது.
  17. பொருள்கோள் என்றால் என்ன?
    • செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள் என்று பெயர்
  18. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை,
      1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
      2. மொழிமாற்றுப் பொருள்கோள்
      3. நிரல்நிறைப் பொருள்கோள்
      4. விற்பூட்டுப் பொருள்கோள்
      5. தாப்பிசைப் பொருள்கோள்
      6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
      7. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
      8. அடிமறி மாற்றுப் பொருள்கோள்
  19. ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனப்படும்
    2. எடுத்துக்காட்டு:அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
  20. நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது 'நிரல்நிறைப் பொருள்கோள்' எனப்படும்
    2. எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
  21. நிரல்நிறைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • நிரல்நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும். அவை,
      1. முறை நிரல்நிறைப் பொருள்கோள்
      2. எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
  22. முறை நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளியல் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும்
    2. எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
  23. எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள்கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்
    2. எடுத்துக்காட்டு: விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
  24. கொண்டுகூட்டு பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆகும்
    2. எடுத்துக்காட்டு: ஆலத்து மேல குவளை குளத்துல வாலின் நெடிய குரங்கு
  25. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
    • "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?" என்ற வினாவுக்கு "இந்த வழியாகச் செல்லுங்கள்" என்று விடை அளிப்பது.
      1. "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?"-அறியா வினா
      2. "இந்த வழியாகச் செல்லுங்கள்"-சுட்டு விடை
  26. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
    • "எனக்கு எழுதித் தருகிறாயா?" என்ற வினாவுக்கு, "எனக்கு யார் எழுதித் தருவார்கள்?" என்று விடையளிப்பது.
      1. "எனக்கு எழுதித் தருகிறாயா?" -ஏவல் வினா
      2. "எனக்கு யார் எழுதித் தருவார்கள்- ஏவல் விடை
  27. உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக
    • பாமகள்: வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?- அறியா வினா
    • ஆதிரை: ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்- நேர் விடை
    • பாமகள்: அப்படியா! என்ன தலைப்பு?- அறியா வினா
    • ஆதிரை: கல்வியில் சிறக்கும் தமிழர்!- (நேர் விடை) நீங்கள் கவியரங்கத்திற்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?- ஐய வினா
    • பாமகள்:ஏன் வராமல்?...வினா எதிர் வினாதல் விடை

கம்பராமாயணம் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. கவிஞனின் எல்லை எது?
    • கலையின் உச்சம் பெறுவதுதான் கவிஞனின் எல்லை ஆகும்
  2. 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் யார்?
    • பாரதியார்
  3. கம்பனைப் பற்றி பாரதியார் கூறுவது என்ன?
    • 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பாரதியார் பெருமைப்படுகிறார்
  4. கவிதை எனப்படுவது யாது?
    • உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை
  5. கவிஞனின் உலகம் பற்றிக் குறிப்பிடு
    1. கவிஞனின் உலகம் இட எல்லை அற்றது
    2. கால எல்லை அற்றது
    3. கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியை, சொல்லைக் கொண்டு எழுப்புகிறான்
    4. அவன் கண்ட காட்சிகள் அதற்குத் துணைபுரிகின்றன
    5. கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன
    6. விழுமியங்கள் துணைபுரிகின்றன
    7. ஒப்புமைகள் துணைபுரிகின்றன
    8. கலையின் உச்சம் பெறுவதுதான் அவன் எல்லை ஆகிறது.
  6. சரயு ஆறு பாயும் விதத்தைக் கூறு
    1. மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி வேலியை உடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் ஆகிய அனைத்திலும் சரயு ஆறு பாய்ந்து ஓடுகிறது.
    2. அது, ஒரு உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போலப் பல இடங்களில் பாய்கிறது.
  7. இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பர் எவ்வாறு கவி பாடுகிறார்?
    1. குளிர்ந்த சோலைகளில் மயில்கள் நடனமாட,
    2. தாமரை மலர்கள் விளக்காக ஒளிர,
    3. மேகங்கள் மத்தளம் ஒலிக்க,
    4. குவளை மலர்கள் கண்விழித்துப் பார்க்க,
    5. தெளிந்த அலைகளை உடைய நீர்நிலைகள் திரைச்சீலையாய்  விரிய,
    6. மகர யாழின் இசையை வண்டுகள் பாடுகின்றன. 
  8. ஒன்றின் இருப்பால் மற்றொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக் கொண்டு ஒருநாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி பற்றி எழுது.
    1. கோசல நாட்டில் வறுமை சிறிதுமில்லை என்பதால், கொடைக்கு அங்கே இடமில்லை.
    2. நேருக்குநேர் போர்புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக் காட்ட வாய்ப்பு இல்லை.
    3. பொய்ம்மொழி இல்லாமையால் மெய்மை தனித்து விளங்க வில்லை.
    4. மற்ற பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை.
  9. இராமனை வருணிக்கும் கம்பன்,  தன் இயலாமையை எவ்வாறு இயன்றதாக்குகிறான்?
    1. பகலவனின் ஒளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு கரைந்து விடுகிறது.
    2. இடையே இல்லை என்று சொல்லும்படியாக, நுண்ணிய இடையை உடைய சீதையோடும் இளையவன் இலக்குவனோடும் இராமன் நடந்து சென்றான்.
    3. அவனது நிறம் மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? என்று வர்ணித்த கம்பன், ஐயோ! இவன் ஒப்பற்ற அழியாத அழகினை உடையவன் என்று சொல்வதன் மூலமாக தன் இயலாமையை இயன்றதாக்குகிறான்.
  10. "ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா" என்ற பாரதியின் சொல்லிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கம்பனின் கூற்று யாது?
    1. ஆழமும் பெரிய அலைகளையுமுடைய கங்கை ஆற்றை பரதன் முதலானோர் கடந்து செல்வார்களா?
    2. யானைகள் கொண்ட சேனையைக் கண்டு புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்?
    3. 'தோழமை' என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா?
    4. தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால், அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என்று உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா?
  11. கும்பகருணனை எழுப்பும் காட்சியை விவரிக்க.
    1. உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது
    2. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
    3. காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற, வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே இனிப் படுத்து உறங்குவாயாக!
  12. இராமாயணம் -குறிப்பு வரைக
    1. இராமனது வரலாற்றைக் கூறும் நூல்
    2. இந்நூலுக்கு கம்பர் 'இராம அவதாரம்' எனப் பெயரிட்டார்
    3. இந்நூல் ஆறு காண்டங்களை உடையது
    4. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
  13. கம்பர் - குறிப்பு வரைக.
    1. சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
    2. திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
    3. 'விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்று புகழப்பெற்றவர்.
    4. "கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" போன்ற முதுமொழிகளுக்கு உரியவர்.
    5. சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.

ஒரு மதிப்பெண் வினா-விடை இயல் 4 5 6

ஒரு மதிப்பெண் வினா விடை
1) வித்துவக்கோடு எங்கு உள்ளது? கேரள மாநிலம் பாலக்காடு
2) வித்துவக்கோட்டில் உள்ள இறைவன் யார்? உய்யவந்த பெருமாள்
3) பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?குலசேகர ஆழ்வார்
4) பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக உள்ளது? ஐந்தாம் திருமொழி
5) பெருமாள் திருமொழியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எத்தனை?105
6) குலசேகர ஆழ்வாரின் காலம் என்ன? எட்டாம் நூற்றாண்டு
7) ஆறறிவுடைய மக்களை எவ்வாறு அழைப்பர்? உயர்திணை
8) மக்கள் தவிர மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் எவ்வாறு அழைப்பர்?அஃறிணை
9) திணையின் உட்பிரிவு யாது?பால்
10) உயர்திணை எத்தனை பால் பிரிவுகளை உடையது?3
11) அஃறிணை எத்தனை பால் பிரிவுகளை உடையது?2
12) இடம் எத்தனை வகைப்படும்?3
13) இலக்கண முறையுடன் பிழையின்றி எழுதுவதும் பேசுவதும் வழாநிலை  எனப்படும்
14) இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
15) இலக்கணப் பிழைகள் இல்லாது இருப்பின் அவை______ எனப்படும்(வழாநிலை)
16) கண்ணகி உண்டான் என்பது______வழு(பால்வழு)
17) செழியன் வந்தது என்பது______வழு(திணை வழு)
18) நீ வந்தேன் என்பது_____வழு(இட வழு)
19) நேற்று வருவான் என்பது________வழு(கால வழு)
20) ஒரு விரலைக் காட்டி ‘சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்பது_______வழு(வினா வழு)
21) “ எங்கே இருக்கிறார்?” என்ற வினாவிற்குக் “கண்ணாடி பைக்குள் இருக்கிறது” என்று விடை அளித்தல்________வழு(விடை வழு)
22) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல்_______(மரபு வழு)
23) இலக்கண முறைப்படி பிழை உடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது_________(வழுவமைதி)
24) “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது_________வழுவமைதி(திணை வழுவமைதி)
25) “வாடா ராஜா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது______வழுவமைதி(பால் வழுவமைதி)
26) மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது_______வழுவமைதி(இட)
27) ‘குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' என்பது____வழுவமைதி(கால)
28) “கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் படவேண்டும்” என்று பாரதியார் பாடுவது________வழுவமைதி(மரபு)
29) ‘அமைச்சர் நாளை விழாவிற்கு வரு கிறார்' என்பது_____வழுவமைதி(கால)
30) ‘அவனும் நீயும் அலுவலரை பார்க்க ஆயத்தமாகுங்கள்' என்பது________வழுவமைதி(இட)
31) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்-என்பது_________வழுவமைதி(இட)
32) “செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்” என்பது _______வழுவமைதி(இட)
33) “சிறுவயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்” என்பது_______வழுவமைதி(கால)
34) “அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது” என்பது_____வழு(திணை)
35) “அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை' என்பது_____வழுவமைதி(இட)
36) “குழந்தை அழுகிறான், பார்” என்பது_______வழு(திணை)
37) ‘உனதருளே பார்ப்பன் அடியேனே' யார் யாரிடம் கூறியது_______,_______(குலசேகர ஆழ்வார், இறைவனிடம்)
38) குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.இது _______வழுவமைதி(பால்)
39) பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். இது___________வழுவமைதி(திணை)
40) வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்.இது____________வழுவமைதி(கால)
41) “சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்பான்” என்று இறமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயை பற்றிக் கூறினார்.இது_________வழு(திணை)
42) ‘பெய்த மழை' என்பதன் வினைத்தொகை_______(பெய்மழை)
43) மீளாத்துயர் என்பதன் எதிர்மறை________(மீண்ட துயர்)
44) அவிர்தல் பொருள் தருக(ஒளிர்தல்)
45) அழல் பொருள் தருக(நெருப்பு)
46) உவா பொருள் தருக(முழு நிலவு)
47) கங்குல் பொருள் தருக(இரவு)
48) கனலி பொருள் தருக(சூரியன்)
49) புயலுக்குப் பின்- எதிர்மறையாக எழுதுக(புயலுக்கு முன்)
50) பெரியவரின் அமைதி-எதிர்மறையாக எழுதுக(சிறுவனின் அமைதி)
51) அருகில் அமர்க- எதிர்மறையாக எழுதுக(தொலைவில் அமர்க)
52) மறைத்து காட்டு- எதிர்மறையாக எழுதுக(வெளிப்படையாகக் காட்டு)
53) கொடுத்துச் சிவந்த- எதிர்மறையாக எழுதுக(கொடுக்காமல் சிவந்த)
54) Nanotechnology-கலைச்சொல் தருக(மீநுண் தொழில்நுட்பம்)
55) Biotechnology-கலைச்சொல் தருக(உயிரித் தொழில்நுட்பம்)
56) Ultraviolet rays-கலைச்சொல் தருக(புற ஊதாக் கதிர்கள்)
57) Space technology-கலைச்சொல் தருக(விண்வெளி தொழில்நுட்பம்)
58) Cosmic rays-கலைச்சொல் தருக(விண்வெளிக் கதிர்கள்)
59) Infrared red-கலைச்சொல் தருக(அகச்சிவப்பு கதிர்)
60) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்_________(செய்குத்தம்பி பாவலர்)
61) செய்குத்தம்பி பாவலரின் ஊர்________(கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி)
62) செய்குத்தம்பிப் பாவலர் _____ வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றார்(15)
63) சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்________(செய்குத்தம்பி பாவலர்)
64) _____________அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்துகாட்டி சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர் செய்குத்தம்பி பாவலர்.(சென்னை விக்டோரியா)
65) _______நாளில் செய்குத்தம்பிப் பாவலர் சதாவதானி பட்டம் பெற்றார்(1907 மார்ச் 10)
66) செய்குத்தம்பி பாவலர் மணிமண்டபம் ________ல் உள்ளது(இடலாக்குடி)
67) சதம் என்றால் ______ என்பது பொருள்(நூறு)
68) கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம்______(சங்க இலக்கியம்)
69) தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறும் நூல் ________(திருக்குறள்)
70) கல்வியைப் போற்றுவதை _________ காலத்திலிருந்து தமிழர் தொடர்கின்றனர்(சங்க)
71) உயிருக்கு அரிய துணையாய் இருப்பது_______(கல்வி)
72) மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தருவது_______(கல்வி)
73) அருளைப் பெருக்கி அறிவைத் திருத்துவது_______(கல்வி)
74) வினா _____ வகைப்படும்(6)
75) தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது_______வினா(அறி)
76) தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது________வினா(அறியா)
77) ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது______வினா(ஐய)
78) தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது_______வினா(கொளல்)
79) பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது________வினா(கொடை)
80) ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுவது________வினா(ஏவல்)
81) “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் செல்லுதல்_________வினா(ஏவல்)
82) “என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?” என்று கொடுப்பதற்காக வினவுதல்_________வினா(கொடை)
83) “ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?” என்று நூலகரிடம் வினவுதல்________வினா(கொளல்)
84) “இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?” என வினவுதல்______வினா(ஐய)
85) ஆசிரியரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று மாணவர் கேட்டல்______வினா(அறியா)
86) மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் கேட்டல்______வினா(அறி)
87) விடை_____வகைப்படும்(8)
88) “கடைத்தெரு எங்கு உள்ளது?” என்ற வினாவிற்கு, “வலப்பக்கத்தில் உள்ளது” எனக் கூறல்______விடை(சுட்டு)
89) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போக மாட்டேன்” என மறுத்துக் கூறல்_____விடை(மறை)
90) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்_______விடை(நேர்)
91) “இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது_______விடை(ஏவல்)
92) “என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு “வராமல் இருப்பேனா?” என்று கூறுவது_______விடை(வினா எதிர் வினாதல்)
93) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கிறது” என்று உற்றதை உரைப்பது______விடை(உற்றது உரைத்தல்)
94) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கும்” என்று உறுவதை உரைப்பது_______விடை(உறுவது கூறல்)
95) “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது________விடை(இன மொழி)
96) பொருள்கோள்_____வகைப்படும்(8)
97) செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் __________ என்று பெயர்.(பொருள்கோள்)
98) ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால், அது __________ பொருள்கோள் ஆகும்.(ஆற்று நீர்)
99) ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது _______ பொருள்கோள் ஆகும்.(நிரல் நிறை)
100) நிரல்நிறைப் பொருள்கோள் _____ வகைப்படும்(2)
101) செய்யுளில் எழுவாய்களை வரிசைபடுத்தி அவை  ஏற்கும் பயனிலை களை நிரல்நிறையாகக் கொண்டு பொருள் கொள்ளுதல் _______________(முறை நிரல் நிறை) பொருள்கோள் ஆகும்.
102) செய்யுளில் ஏழுவாய்களை வரிசைப் படுத்தி அதை ஏற்கும் பயனிலைகளைக் கொண்டு பொருள்கொள்ளுதல் _______நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்(எதிர் நிரல் நிறை)
103) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் ________________(எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்)
104) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்__________(முறை நிரல்நிறைப் பொருள்கோள்)
105) ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு –இப்பாடலில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
106) ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டிப் பொருள் கொள்வது____________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
107) “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?”-இது எவ்வகை வினா?(அறியா வினா)
108) “இந்த வழியாகச் செல்லுங்கள்”-இது எவ்வகை விடை?(சுட்டு விடை)
109) “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(வினா எதிர் வினாதல் விடை)
110) “ஆதிரை, ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?”-எவ்வகை வினா?(அறியா வினா)
111) “கவி அரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்”-எவ்வகை விடை?(நேர் விடை)
112) “நீங்கள் கவி அரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?”- எவ்வகை வினா?(ஐய வினா)
113) “இங்கு நகரப் பேருந்துகள் நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது எவ்வகை வினா?(அறியா வினா)
114) “அதோ, அங்கே பேருந்து நிற்கும்” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(சுட்டு விடை)
115) ‘அருந்துணை’ என்பதைப் பிரித்து எழுதுக(அருமை+ துணை)
116) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”-என்ற பாடல் வரியில் குறிப்பிடப்படுவது எது?(கல்வி)
117) “மின்விளக்கின் சொடுக்கு எந்தப் பக்கம் இருக்கிறது?”-எவ்வகை வினா?(அறியா வினா)
118) “சொடுக்கிய போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?”-எவ்வகை வினா?(ஐய வினா)
119) முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்-இதில் அமைந்துள்ள பொருள்கோள்________(ஆற்றுநீர்ப் பொருள்கோள்)
120) Lute music-கலைச்சொல் தருக(யாழிசை)
121) Chamber-கலைச்சொல் தருக(அறை)
122) To look up-கலைச்சொல் தருக(எட்டிப் பார்)
123) Grand-daughter-கலைச்சொல் தருக(பேத்தி)
124) Rote-கலைச்சொல் தருக(நெட்டுரு)
125) Didactic compilation-கலைச்சொல் தருக(நீதி நூல் திரட்டு)
126) “அருணா பாடினாள்” என்பதைப் பெயரெச்சத்தொடராக்கு(பாடிய அருணா)
127) ‘ஓடிய அருணா' என்பதை வினையெச்சத் தொடராக்கு.(ஓடி வந்தாள்)
128) ‘ஓடிய அருணா' என்பதை விளித்தொடராக்கு(அருணா, ஓடு)
129) “அம்மா சொன்னார்” என்பதை பெயரெச்சத் தொடராக்கு(சொன்ன அம்மா)
130) “அம்மா சொன்னார்” என்பதை விளித்தொடராக்கு(அம்மா, சொல்)
131) ‘தா' என்னும் வேர்ச்சொல்லைப் பயன்படுத்தி எழுவாய்த் தொடர் அமைக்க.(முருகன் தந்தான்)
132) “துளிர் பார்த்தாள்” என்பதைப் பெயரெச்சத் தொடராக்கு
133) “குழந்தை வந்தது” என்பதை வினையெச்சத் தொடராக்கு.
134) “மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்”- இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமைமை செய்க.
135) “கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
136) “வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களை கற்றுத் தருகிறது”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
137) “ மாணவர்கள் அனைவரும் தனித்தனியே எழுதித் தரவேண்டும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
138) “தார் போன்ற நிறமுண்டு. கரியுமில்லை. பார்முழுதும் பரந்து திரிவேன் மேகமும் இல்லை” -நான் யார்?(காகம்)
139) மன்றல்-பொருள் தருக(திருமணம்)
140) அடிச்சுவடு-பொருள் தருக(நடந்து வந்த காலடித்தடம்)
141) அகராதி-பொருள் தருக(அகரமுதலி)
142) தூவல்-பொருள் தருக(பேனா)
143) மருள்-பொருள் தருக(மயக்கம்)
144) Emblem-கலைச்சொல் தருக(சின்னம்)
145) Thesis-கலைச்சொல் தருக(ஆய்வேடு)
146) Intellectual-கலைச்சொல் தருக(அறிவாளர்)
147) Symbolism-கலைச்சொல் தருக(குறியீட்டியல்)
148) உள்ளதை உணர்ந்தபடி கூறுவது______(கவிதை)
149) “கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்” என்று பெருமைப்படுபவர்________(பாரதியார்)
150) ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பல இடங்களில் பாயும் ஆறு _______(சரயு ஆறு)
151) கொடை இல்லாத நாடு எது?(கோசலை)
152) “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று பாடியவர்__________(பாரதியார்)
153) ஏழைமை வேடன் யார்?(குகன்)
154) வேழ நெடும்படை கொண்டவர் யார்?(பரதன்)
155) தோழமை என்று சொன்னவர் யார்?(இராமன்)
156) கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி________ எனப் பெயரிட்டார்(இராமாவதாரம்)
157) இராமாயணம் ____ காண்டங்களை உடையது(6)
158) இராமாயணப் பாடல்கள் _____ நயம் மிக்கவை.(சந்த)
159) கம்பரின் ஊர்________(திருவழுந்தூர்)
160) கம்பரை ஆதரித்த வள்ளல்___________(சடையப்ப வள்ளல்)
161) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்தும்________ஐந்திணை(அன்பின்)
162) அகத் திணை எத்தனை வகைப்படும்?(7)
163) முதற்பொருள் என்பது_______,_________(நிலமும் பொழுதும்)
164) பொழுது எத்தனை வகைப்படும்?(2)
165) சிறுபொழுது எத்தனை வகைப்படும்?(6)
166) பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?(6)
167) கார் காலம் என்பது_______,______மாதங்கள்(ஆவணி புரட்டாசி)
168) குளிர்காலம் என்பது______&_________(ஐப்பசி கார்த்திகை)
169) முன்பனிக்காலம் என்பது________&________( மார்கழி தை)
170) பின்பனிக் காலம் என்பது______&______(மாசி பங்குனி)
171) இளவேனில் காலம் என்பது________&_______(சித்திரை வைகாசி)
172) முதுவேனில் காலம் என்பது______&_______(ஆனி ஆடி)
173) காலை என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 6 மணி முதல் 10 மணி வரை)
174) நண்பகல் என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 10 மணி முதல் 2 மணி வரை)
175) எற்பாடு என்பது_____மணி முதல்____மணி வரை(பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை)
176) மாலை என்பது_____மணி முதல்____மணி வரை(மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை)
177) யாமம் என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை)
178) வைகறை என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை)
179) குறிஞ்சித் திணைக்கு உரிய சிறுபொழுது______(யாமம்)
180) முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது ___________(மாலை)
181) மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது__________(வைகறை)
182) நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது ____________(எற்பாடு)
183) பாலைத் திணைக்குரிய சிறுபொழுது_________(நண்பகல்)
184) ஆறு பெரும் பொழுதுகளும் வரக்கூடிய திணை______,_________(மருதம் நெய்தல்)
185) குறிஞ்சித் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________,_________(குளிர்காலம் முன்பனிக்காலம்)
186) பாலைத் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________&_______(இளவேனில் முதுவேனில் பின்பனி)
187) முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது___________ (கார்காலம்)
188) ஒரு நிலத்தின் தெய்வம் மக்கள் தொழில் விலங்கு இவையெல்லாம்____________(கருப்பொருள்கள்)
189) குறிஞ்சித் திணைக்குரிய தெய்வம்_____(முருகன்)
190) முல்லைத் திணைக்குரிய தெய்வம்________(திருமால்)
191) மருதத் திணைக்குரிய தெய்வம்_________(இந்திரன்)
192) நெய்தல் திணைக்குரிய தெய்வம்________(வருணன்)
193) பாலைத் திணைக்குரிய தெய்வம் _________(கொற்றவை)
194) குறிஞ்சித் திணைக்குரிய பறை_______(தொண்டகப் பறை)
195) முல்லைத் திணைக்குரிய பறை________(ஏறுகோட்பறை)
196) மருதத் திணைக்குரிய பறை______&_______(மணமுழா, நெல்லரிகிணை)
197) பாலைத் திணைக்குரிய பறை_______(துடி)
198) நெய்தல் திணைக்குரிய பறை_________(மீன்கோட்பறை)
199) நெய்தல் திணைக்குரிய பண்_________(செவ்வழிப்பண்)
200) பாலைத் திணைக்குரிய பண்________(பஞ்சுரப்பண்)
201) குறிஞ்சித் திணைக்குரிய தொழில்கள்________&________(தேனெடுத்தல் கிழங்கு அகழ்தல்)
202) முல்லைத் திணைக்குரிய தொழில்கள்________&________(ஏறுதழுவுதல் நிரை மேய்த்தல்)
203) மருதத் திணைக்கு உரிய தொழில்கள்________&________(நெல்லரிதல் களை பறித்தல்)
204) நெய்தல் திணைக்குரிய தொழில்கள்________&_______(மீன்பிடித்தல் உப்பு விளைத்தல்)
205) பாலைத் திணைக்கு உரிய தொழில்கள்________&_______(வழிப்பறி, நிரை கவர்தல்)
206) குறிஞ்சித் திணைக்குரிய மக்கள்_______&________&_______(வெற்பன் குறவர் குறத்தி
207) முல்லைத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்)
208) மருதத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(ஊரன் உழவர் உழத்தியர்)
209) நெய்தல் திணைக்குரிய மக்கள்______&_____&______(சேர்ப்பன் பரதர் பரத்தியர்)
210) பாலைத் திணைக்குரிய மக்கள்______&______(எயினர் எயிற்றியர்)
211) குறிஞ்சித் திணைக்குரிய உணவு______&_____(மலைநெல், தினை)
212) முல்லைத் திணைக்குரிய உணவு_____&______(வரகு, சாமை)
213) மருதத் திணைக்குரிய உணவு______&_____(செந்நெல், வெண்ணெல்)
214) நெய்தல் திணைக்கு உரிய உணவு_____&_______(மீன் உப்புக்குப் பெற்ற பொருள்)
215) பாலைத் திணைக்குரிய உணவு____________(சூறையாடலால் வரும் பொருள்)
216) குரவம், பாதிரி ஆகியவை எந்தத் திணைக்குரிய பூக்கள்?(பாலை)
217) தாழை -எந்த திணைக்குரிய பூ?(நெய்தல்)
218) செங்கழுநீர் -எந்த திணைக்குரிய பூ?(மருதம்)
219) தோன்றி- எந்த திணைக்குரிய பூ?(முல்லை)
220) காந்தள்-எந்த திணைக்குரிய பூ?(குறிஞ்சி)
221) நீர்நாய் எந்த திணைக்குரிய விலங்கு?(மருதம்)
222) வலியிழந்த யானை எந்த திணைக்குரிய விலங்கு?(பாலை)
223) புன்னை ஞாழல் எந்த திணைக்குரிய மரங்கள்?(நெய்தல்)
224) இலுப்பை எந்த நிலத்திற்குரிய மரம்?(பாலை)
225) காஞ்சி எந்த நிலத்திற்குரிய மரம்?(மருதம்)
226) கொன்றை காயா எந்த நிலத்திற்குரிய மரங்கள்?(முல்லை)
227) அகில், வேங்கை எந்த நிலத்திற்குரிய மரம்?(குறிஞ்சி)
228) புறா எந்த நிலத்திற்குரிய பறவை?(பாலை)
229) குறும்பு எந்த நிலத்திற்குரிய ஊர்?(பாலை)
230) பாடி சேரி எந்த நிலத்திற்குரிய ஊர்கள்?(நெய்தல்)
231) சிறுகுடி எந்த நிலத்திற்குரிய ஊர்?(குறிஞ்சி)
232) பொய்கை எந்த நிலத்திற்குரிய நீர்?(மருதம்)
233) குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்_______&______&________(குறிஞ்சி மருதம் நெய்தல்)
234) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?(வறுமை இல்லாமையால்)
235) தால்-பொருள் தருக(நாக்கு)
236) உழுவை-பொருள் தருக(புலி)
237) அகவுதல்-பொருள் தருக(அழைத்தல்)
238) ஏந்தெழில்-பொருள் தருக(மிகுந்த அழகு)
239) அணிமை-பொருள் தருக(அருகில்)
240) Aesthetics-கலைச்சொல் தருக(அழகியல்)
241) Artifacts-கலைச்சொல் தருக(கலைப்படைப்புகள்)
242) Terminology-கலைச்சொல் தருக(கலைச்சொல்)
243) Myth-கலைச்சொல் தருக.(தொன்மம்)
244) சிறந்த அமைச்சருக்கு உரிய இயல்புகள் எத்தனை?(5) 
245) பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
246) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி)
247) இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
248) மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்-இதில் வந்துள்ள அணி______(உவமை அணி)
249) தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்-இதில் வந்துள்ள அணி யாது?(வஞ்சப்புகழ்ச்சி அணி)
250) சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி)