- ஒழுக்கத்தை ஏன் உயிரை விட மேலானதாகக் கருதி காக்க வேண்டும்?
- ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால்...
- ஒழுக்கம் உடையவர் எந்த நிலையை அடைவர்? ஒழுக்கம் இல்லாதவர் எந்த நிலையை அடைவர்?
- ஒழுக்கம் உடையவர் மேன்மை அடைவர்
- ஒழுக்கம் இல்லாதவர் அடையக் கூடாத பழியை அடைவர்
- யார் பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுவார்?
- நல்ல பண்புகளை உடைய உயர்ந்தாரோடு ஒத்து வாழக் கல்லாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுவார்
- அறிவு எனப்படுவது எது?
- எந்தப் பொருள் எந்த இயல்பானதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
- எப்போது ஆசை, சினம், அறியாமை ஆகியவற்றால் வரும் துன்பம் அழியும்?
- ஆசை, சினம், அறியாமை அழியும்போது அவற்றால் வரும் துன்பமும் அழியும்
- அரியவற்றுள் எல்லாம் அரியது எது?
- பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே அரியவற்றுள் எல்லாம் அரியது.
- எப்படிப்பட்ட மன்னன் தானே அழிவான்?
- குற்றம் கண்ட பொழுது இடித்துக் கூறும் பெரியாரின் துணை இல்லாத மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான்.
- பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது எது?
- நற்பண்பு உடையவரின் நட்பை கைவிடுவது...
- கள்வன் வழிப்பறி செய்வதற்கு நிகரான செயல் எது?
- அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு 'முறையற்ற வரி' விதிப்பது, ஆயுதங்களைக் காட்டி கள்வன் வழிப்பறி செய்வதற்கு நிகரானது.
- எப்படிப்பட்ட மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழப்பான்?
- தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன், தன் நாட்டை நாள்தோறும் இழப்பான்.
- இரக்கமில்லாத கண்கள் எதனுடன் ஒப்பிடப்படுகிறது?
- பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை.
- அதுபோல, இரக்கமில்லாத கண்களால் பயனில்லை.
- இந்த உலகம் யாருக்கு உரிமையானது?
- நடுவுநிலைமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இந்த உலகம் உரிமை உடையதாகும்.
- யார், பிறர் நன்மை கருதி நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவார்?
- விரும்பத்தகுந்த இரக்க இயல்பு கொண்டவர், பிறர் நன்மை கருதி நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவார்.
- பெருமை தருவது எது?
- ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எண்ணிச் சோர்வு அடையாமல் இருக்க வேண்டும்
- அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.
- யாரால் பிறருக்கு உதவ முடியும்?
- விடாமுயற்சி என்னும் உயர்பண்பு கொண்டவர்களால்தான் பிறருக்கு உதவ முடியும்.
- யாரிடம் செல்வம் பெருகும்? யாரிடம் வறுமை வந்து சேரும்?
- முயற்சி உடையவரிடம் செல்வம் பெருகும்
- முயற்சியே இல்லாதவரிடம் வறுமையே வந்து சேரும்.
- இழிவு இல்லாதது எது? இழிவானது எது?
- ஐம்புலன்களில் ஏதேனும் குறை இருந்தால், அது இழிவன்று.
- அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவாகும்.
- யாரால் முன்வினையைத் தோற்கடித்து வெற்றி பெற இயலும்?
- சோர்வு இல்லாது முயற்சி செய்பவரால், முன்வினையைத் தோற்கடித்து வெற்றி பெற இயலும்.
- யாருடைய செல்வத்தால் பயன் இல்லை?
- பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவரிடம் உள்ள செல்வத்தால் பயன் ஏதுமில்லை.
- பிறருக்கு உதவி செய்யாதவன் பெற்ற செல்வம் எதைப் போன்றது?
- ஊரின் நடுவே நச்சுமரம் பழுத்தது போன்றது.
- வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு-இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
- உவமை அணி
- பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்-இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
- எடுத்துக்காட்டு உவமையணி
- நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று-இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
- உவமை அணி.
Tuesday, March 29, 2022
இயல் 3 திருக்குறள்-இரண்டு மதிப்பெண் வினாக்கள்
எழுத்து சொல் 2 மதிப்பெண் வினாக்கள்
- இலக்கணத்தின் பயன் யாது?
- மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவுகிறது
- மொழியின் சிறப்புகளை அறிய உதவுகிறது
- சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஒளகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
- சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
- அளபெடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- அளபெடைகள் இரண்டு வகைப்படும். அவை,
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- அளபெடைகள் இரண்டு வகைப்படும். அவை,
- அளபெடையின் பயன் யாது?
- உணர்வை வெளிப்படுத்துவதற்கும்...
- இனிய ஓசையைத் தருவதற்கும்...
- உயிரளபெடை என்றால் என்ன?
- செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்.
- அவ்விடங்களில் நெடில் எழுத்துக்களின் இனமான குறில் எழுத்துக்கள் அவற்றின் பின்னால் வரும்.
- உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை.
- உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
- செய்யுளிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்கிறோம்
- எ.கா.
- ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்-மொழி முதலில் அளபெடுத்தது
- உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅர்க்கு வாழிய நெஞ்சே-மொழி இடையில் அளபெடுத்தது
- நல்ல படாஅ பறை-மொழி இறுதியில் அளபெடுத்தது
- இன்னிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
- எ.கா. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை
- சொல்லிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஒரு பெயர்ச்சொல், எச்சச் சொல்லாகத் திரிந்து அளவெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்
- எடுத்துக்காட்டு
- உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்
- நசை- விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என்று அளவு எடுத்தது. பெயர்ச்சொல் வினையடையாக மாறியது.
- ஒற்றளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துக்கள் பத்தும் ( ஞ ண ந ம ன ய ல வ ள) ஆய்த எழுத்தும் அளவெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
- எடுத்துக்காட்டு:
- எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர் வெஃஃ குவார்க்கில்லை வீடு
- சொல் என்றால் என்ன?
- ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்
- சொல்லின் பண்புகளைக் குறிப்பிடுக
- இருதிணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்
- மூவகை இடங்களிலும் வரும்
- உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்
- வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்
- மூவகை மொழிகள் யாவை?
- தனிமொழி
- தொடர்மொழி
- பொதுமொழி
- தனிமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனி மொழி எனப்படும்
- எ.கா. கண், படி
- பதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? எடுத்துக்காட்டு தருக.
- பதம் இரண்டு வகைப்படும். அவை,
- பகுபதம்
- எ.கா. கண்ணன், படித்தான்
- பகாப்பதம்
- எ.கா. கண், படி
- பகுபதம்
- பதம் இரண்டு வகைப்படும். அவை,
- தொடர் மொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழியாகும்
- எ.கா. கண்ணன் வந்தான்.
- பொதுமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
- எடுத்துக்காட்டு: எட்டு
- 'எட்டு' தனித்து நின்று 8 என்ற எண்ணைக் குறிக்கும்
- 'எட்டு'=எள்+து-->எனத் தொடர் மொழியாகப் பிரிந்து நின்று 'எள்ளை உண்' என்று பொருள் தருகிறது
- இவ்வாறு தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால், இது பொதுமொழி ஆகிறது
- வேங்கை எவ்வாறு பொது மொழியாகிறது?
- வேங்கை- தனித்து நின்று மரத்தைக் குறிக்கிறது
- 'வேம்+கை' எனப் பிரிந்து நின்று 'வேகின்ற கை' என்று பொருள் தருகிறது.
- இவ்வாறு தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால், இது பொதுமொழி ஆகிறது
- தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
- எ.கா. ஈதல், நடத்தல்
- விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
- வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
- நட+தல்=நடத்தல்
- எதிர்மறைத் தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர் ஆகும்.
- எ.கா. நடவாமை, கொல்லாமை
- முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயர் ஆதல் முதல்நிலைத் தொழிற்பெயர் ஆகும்.
- எடுத்துக்காட்டு: தட்டு, உரை, அடி. இவை முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும்போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.
- முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- விகுதி பெறாமல் முதல்நிலை திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
- எ.கா. கெடு- கேடு, சுடு-சூடு
- வினையாலணையும் பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்
- எ.கா. வந்தவர் அவர்தான்.
- தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
பெருமாள் திருமொழி 2 மதிப்பெண் வினாக்கள்
- சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்து இருக்கக் காரணம் என்ன?
- தமிழர், பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருப்பதால்...
- சங்க இலக்கியத்திற்கு இணையாக எவ்வகை இலக்கியங்களில் அறிவியல் கருத்துக்கள் காணப்படுகின்றன?
- பக்தி இலக்கியங்களில்...
- குலசேகர ஆழ்வார், இறைவனை வழிபடுவதற்குக் கூறும் உவமை யாது?
- மருத்துவர், உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
- குலசேகர ஆழ்வார், இறைவனை எவ்வாறு வழிபடுகிறார்?
- மருத்துவர், உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
- வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள அன்னையே! அதுபோன்று உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தைக் எனக்குத் தந்தாலும், அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.
- வித்துவக்கோட்டு இறைவனைப் பற்றிக் கூறு.
- வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.
- குலசேகர ஆழ்வார், வித்துவக்கோட்டு இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியுள்ளார்.
- பெருமாள் திருமொழி -குறிப்பு வரைக.
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது
- 105 பாடல்கள் உள்ளன
- பாடியவர்: குலசேகர ஆழ்வார்
- காலம்: எட்டாம் நூற்றாண்டு.
இலக்கணம் பொது 2 மதிப்பெண் வினாக்கள்
- திணை என்றால் என்ன? உயர்திணை என்றால் என்ன? அஃறிணை என்றால் என்ன?
- திணை என்பது ஒழுக்கம் ஆகும்
- உயர்திணை என்பது உயர்ந்த ஒழுக்கம் உடைய மனிதர்களைக் குறிக்கும்.
- அஃறிணை என்பது ஒழுக்கமில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்
- பால் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- பால் என்பது திணையின் உட்பிரிவு
- பால் ஐந்து வகைப்படும். அவை,
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்.
- உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
- ஒன்றன்பால்
- பலவின்பால்
- ஒன்றன்பால் என்றால் என்ன?
- அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்
- பலவின்பால் என்றால் என்ன?
- அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
- இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- இடம் மூன்று வகைப்படும். அவை,
- தன்மை
- முன்னிலை
- படர்க்கை
- இடம் மூன்று வகைப்படும். அவை,
- தன்மைப் பெயர்கள் யாவை?
- நான், யான், நாம், யாம்...
- முன்னிலைப் பெயர்கள் யாவை?
- நீ, நீர், நீவிர், நீங்கள்
- படர்க்கைப் பெயர்கள் யாவை?
- அவன், அவள், அவர்
- அது, அவை...
- வழாநிலை என்றால் என்ன?
- இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்
- வழு என்றால் என்ன?
- இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
- வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- வழு ஏழு வகைப்படும் அவை,
- திணை வழு
- பால் வழு
- இட வழு
- கால வழு
- வினா வழு
- விடை வழு
- மரபு வழு
- வழு ஏழு வகைப்படும் அவை,
- செழியன் வந்தது, கண்ணகி உண்டான், நீ வந்தேன், நேற்று வருவான்- இவை எவ்வகை வழுக்கள் என்று கூறு?
- செழியன் வந்தது-திணை வழு
- கண்ணகி உண்டான்-பால் வழு,
- நீ வந்தேன்-இட வழு,
- நேற்று வருவான்-கால வழு
- ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்- எவ்வகை வழு?
- வினா வழு
- 'கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்கு, 'கண்ணாடி பைக்குள் இருக்கிறது' என்று விடை அளித்தல்-எவ்வகை வழு?
- விடை வழு
- தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந் தோட்டம் என்று கூறுதல் -எவ்வகை வழு?
- மரபு வழு
- வழுவமைதி என்றால் என்ன?
- இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்
- திணை வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக?
- "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும்
- இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது
- பால் வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
- "வாடா ராஜா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது, பால் வழுவமைதி ஆகும்.
- இங்கு உவப்பின் காரணமாக பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
- இடவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இட வழுவமைதி ஆகும்.
- காலவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்
- இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாக கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித் தன்மையை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
- மரபு வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- "கத்தும் குயிலோசை- சற்றே வந்து காதிற் படவேணும்"-பாரதியார்
- குயில் கூவும் என்பதே மரபு. குயில் கத்தும் என்பது மரபு வழு.
- இங்குக் கவிதையில் இடம் பெற்று இருப்பதால் இது மரபுவழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- "அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்" என்பது எவ்வகை வழுவமைதி எனக் காட்டு.
- இத்தொடர், "அமைச்சர் நாளை விழாவிற்கு வருவார்" என்று அமைதல் வேண்டும்.
- அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை.
- ஏனெனில், அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
- "இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான். -இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
- இத்தொடர், கண்ணன் என்பவர் தனக்குத் தானே கூறிக்கொண்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.
- தன்னைத் தன்மையிடத்தில் கூறுவதற்குப் பதிலாக படர்க்கை இடத்தில் கூறியுள்ளார்.
- இவ்வாறு கூறுவது இலக்கண ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதால், இது இடவழுவமைதியாகும்.
- சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்-இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
- "சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடினோம்" என்று வந்திருக்க வேண்டும்.
- இறந்தகாலம் வருவதற்குப் பதிலாக எதிர்காலம் வந்துள்ளது.
- எனவே, இது கால வழுவமைதி ஆகும்.
- செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.-இது எவ்வகை வழுவமைதி என்று கூறு.
- இத்தொடர், "செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறான்" என்று வந்திருக்க வேண்டும்.
- ஆண்பால் வருவதற்குப் பதிலாகப் பலர்பால் வந்துள்ளது.
- எனவே, இது 'பால் வழுவமைதி' ஆகும்.
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. தந்தை, "மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா" என்று சொன்னார். (ஆண்பாற் பெயர்களை பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக)
- தாய், "மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா" என்று சொன்னார்.
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
- அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பினார்
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. "இதோ முடித்து விடுவேன்" என்பது செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
- இதோ முடித்து விட்டேன்
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையை படர்க்கையாக மாற்றுக)
- நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக?
- குழந்தை அழுகிறது, பார்.
நீதி வெண்பா 2 மதிப்பெண் வினாக்கள்
- "கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது? "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது?
- கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -சங்க இலக்கியம்
- "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -திருக்குறள்
- அறிவு பெறுவது எவ்வாறு?
- பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல, நூல்களை நாடிச்சென்று அறிவு பெற வேண்டும்.
- கல்வியின் பயன் யாது?
- அருளைப் பெருக்குவது
- அறிவைச் சீராக்குவது
- மயக்கம் அகற்றுவது
- அறிவுக்குத் தெளிவு தருவது
- உயிருக்கு அரிய துணையாய் இருப்பது
- இன்பம் சேர்ப்பது
- கல்வியை ஏன் கற்க வேண்டும்?
- அருளைப் பெருக்குவதால்
- அறிவைச் சீராக்குவதால்
- மயக்கம் அகற்றுவதால்
- அறிவுக்குத் தெளிவு தருவதால்
- உயிருக்கு அரிய துணையாய் இருப்பதால்
- இன்பம் சேர்ப்பதால் கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும்
- சதாவதானம் குறிப்பு வரைக.
- சதம் என்றால் நூறு என்று பொருள்
- அவதானம் என்றால் கவனித்தல்
- ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளித்தலே சதாவதானம் எனப்படும்.
- செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பு வரைக.
- சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்.
- ஊர்: கன்னியாகுமரி மாவட்டம்- இடலாக்குடி
- 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
- சீறாப் புராணத்திற்கு உரை எழுதியவர்
- 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப் பெற்றார்.
- செய்குத்தம்பிப் பாவலருக்கு அரசு செய்த சிறப்பு என்ன?
- இவரது நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் அமைக்கப்பட்டுள்ளது
- இவரது அனைத்து நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
வினா விடை வகைகள் பொருள்கோள் 2 மதிப்பெண் வினாக்கள்
- வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- வினா 6 வகைப்படும். அவை,
- அறி வினா
- அறியா வினா
- ஐய வினா
- கொளல் வினா
- கொடை வினா
- ஏவல் வினா
- வினா 6 வகைப்படும். அவை,
- அறி வினா என்றால் என்ன?
- தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது அறி வினா ஆகும்
- எடுத்துக்காட்டு: மாணவரிடம், "இந்தக் கவிதையின் பொருள் யாது?" என்று ஆசிரியர் கேட்டல்
- அறியா வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
- எடுத்துக்காட்டு: ஆசிரியரிடம், "இந்த கவிதையின் பொருள் யாது?" என்று மாணவர் கேட்டல்
- ஐய வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- தான் ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது
- எடுத்துக்காட்டு: "இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?" என வினவுதல்
- கொளல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது
- எடுத்துக்காட்டு: "ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?" என்று நூலகரிடம் வினவுதல்
- கொடை வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது
- எடுத்துக்காட்டு: "என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?" என்று கொடுப்பதற்காக வினவுதல்.
- ஏவல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுதல்
- எடுத்துக்காட்டு: "வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?" என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்
- விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- விடை எட்டு வகைப்படும். அவை,
- சுட்டு விடை
- மறை விடை
- நேர் விடை
- ஏவல் விடை
- வினா எதிர் வினாதல் விடை
- உற்றது உரைத்தல் விடை
- உறுவது கூறல் விடை
- இனமொழி விடை
- விடை எட்டு வகைப்படும். அவை,
- சுட்டு விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- சுட்டிக் கூறும் விடை
- "கடைத்தெரு எங்கு உள்ளது?" என்ற வினாவிற்கு 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறல்
- மறை விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- மறுத்துக் கூறும் விடை
- "கடைக்கு போவாயா?" என்ற கேள்விக்குப் 'போக மாட்டேன்' என மறுத்துக் கூறல்
- நேர் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- உடன்பட்டுக் கூறும் விடை
- "கடைக்கு போவாயா?" என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறல்
- ஏவல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை
- "இது செய்வாயா?" என்று வினவியபோது, 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது
- வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது
- "என்னுடன் ஊருக்கு வருவாயா?" என்ற வினாவிற்கு, 'வராமல் இருப்பேனா?' என்று கூறுவது
- உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல்
- "நீ விளையாட வில்லையா?" என்ற வினாவிற்குக், 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது
- உறுவது கூறல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்
- "நீ விளையாடவில்லையா?" என்ற வினாவிற்குக், 'கால் வலிக்கும்' என்று உறுவதைக் கூறுவது
- இனமொழி விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்
- "உனக்கு கதை எழுதத் தெரியுமா?" என்ற வினாவிற்குக் "கட்டுரை எழுதத் தெரியும்" என்று கூறுவது.
- பொருள்கோள் என்றால் என்ன?
- செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள் என்று பெயர்
- பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை,
- ஆற்றுநீர்ப் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- நிரல்நிறைப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
- தாப்பிசைப் பொருள்கோள்
- அளைமறிபாப்புப் பொருள்கோள்
- கொண்டுகூட்டுப் பொருள்கோள்
- அடிமறி மாற்றுப் பொருள்கோள்
- பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை,
- ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனப்படும்
- எடுத்துக்காட்டு:அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
- நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது 'நிரல்நிறைப் பொருள்கோள்' எனப்படும்
- எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
- நிரல்நிறைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- நிரல்நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும். அவை,
- முறை நிரல்நிறைப் பொருள்கோள்
- எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
- நிரல்நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும். அவை,
- முறை நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளியல் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும்
- எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
- எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள்கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்
- எடுத்துக்காட்டு: விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
- கொண்டுகூட்டு பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆகும்
- எடுத்துக்காட்டு: ஆலத்து மேல குவளை குளத்துல வாலின் நெடிய குரங்கு
- வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
- "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?" என்ற வினாவுக்கு "இந்த வழியாகச் செல்லுங்கள்" என்று விடை அளிப்பது.
- "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?"-அறியா வினா
- "இந்த வழியாகச் செல்லுங்கள்"-சுட்டு விடை
- "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?" என்ற வினாவுக்கு "இந்த வழியாகச் செல்லுங்கள்" என்று விடை அளிப்பது.
- வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
- "எனக்கு எழுதித் தருகிறாயா?" என்ற வினாவுக்கு, "எனக்கு யார் எழுதித் தருவார்கள்?" என்று விடையளிப்பது.
- "எனக்கு எழுதித் தருகிறாயா?" -ஏவல் வினா
- "எனக்கு யார் எழுதித் தருவார்கள்- ஏவல் விடை
- "எனக்கு எழுதித் தருகிறாயா?" என்ற வினாவுக்கு, "எனக்கு யார் எழுதித் தருவார்கள்?" என்று விடையளிப்பது.
- உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக
- பாமகள்: வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?- அறியா வினா
- ஆதிரை: ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்- நேர் விடை
- பாமகள்: அப்படியா! என்ன தலைப்பு?- அறியா வினா
- ஆதிரை: கல்வியில் சிறக்கும் தமிழர்!- (நேர் விடை) நீங்கள் கவியரங்கத்திற்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?- ஐய வினா
- பாமகள்:ஏன் வராமல்?...வினா எதிர் வினாதல் விடை
கம்பராமாயணம் 2 மதிப்பெண் வினாக்கள்
- கவிஞனின் எல்லை எது?
- கலையின் உச்சம் பெறுவதுதான் கவிஞனின் எல்லை ஆகும்
- 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் யார்?
- பாரதியார்
- கம்பனைப் பற்றி பாரதியார் கூறுவது என்ன?
- 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பாரதியார் பெருமைப்படுகிறார்
- கவிதை எனப்படுவது யாது?
- உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை
- கவிஞனின் உலகம் பற்றிக் குறிப்பிடு
- கவிஞனின் உலகம் இட எல்லை அற்றது
- கால எல்லை அற்றது
- கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியை, சொல்லைக் கொண்டு எழுப்புகிறான்
- அவன் கண்ட காட்சிகள் அதற்குத் துணைபுரிகின்றன
- கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன
- விழுமியங்கள் துணைபுரிகின்றன
- ஒப்புமைகள் துணைபுரிகின்றன
- கலையின் உச்சம் பெறுவதுதான் அவன் எல்லை ஆகிறது.
- சரயு ஆறு பாயும் விதத்தைக் கூறு
- மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி வேலியை உடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் ஆகிய அனைத்திலும் சரயு ஆறு பாய்ந்து ஓடுகிறது.
- அது, ஒரு உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போலப் பல இடங்களில் பாய்கிறது.
- இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பர் எவ்வாறு கவி பாடுகிறார்?
- குளிர்ந்த சோலைகளில் மயில்கள் நடனமாட,
- தாமரை மலர்கள் விளக்காக ஒளிர,
- மேகங்கள் மத்தளம் ஒலிக்க,
- குவளை மலர்கள் கண்விழித்துப் பார்க்க,
- தெளிந்த அலைகளை உடைய நீர்நிலைகள் திரைச்சீலையாய் விரிய,
- மகர யாழின் இசையை வண்டுகள் பாடுகின்றன.
- ஒன்றின் இருப்பால் மற்றொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக் கொண்டு ஒருநாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி பற்றி எழுது.
- கோசல நாட்டில் வறுமை சிறிதுமில்லை என்பதால், கொடைக்கு அங்கே இடமில்லை.
- நேருக்குநேர் போர்புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக் காட்ட வாய்ப்பு இல்லை.
- பொய்ம்மொழி இல்லாமையால் மெய்மை தனித்து விளங்க வில்லை.
- மற்ற பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை.
- இராமனை வருணிக்கும் கம்பன், தன் இயலாமையை எவ்வாறு இயன்றதாக்குகிறான்?
- பகலவனின் ஒளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு கரைந்து விடுகிறது.
- இடையே இல்லை என்று சொல்லும்படியாக, நுண்ணிய இடையை உடைய சீதையோடும் இளையவன் இலக்குவனோடும் இராமன் நடந்து சென்றான்.
- அவனது நிறம் மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? என்று வர்ணித்த கம்பன், ஐயோ! இவன் ஒப்பற்ற அழியாத அழகினை உடையவன் என்று சொல்வதன் மூலமாக தன் இயலாமையை இயன்றதாக்குகிறான்.
- "ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா" என்ற பாரதியின் சொல்லிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கம்பனின் கூற்று யாது?
- ஆழமும் பெரிய அலைகளையுமுடைய கங்கை ஆற்றை பரதன் முதலானோர் கடந்து செல்வார்களா?
- யானைகள் கொண்ட சேனையைக் கண்டு புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்?
- 'தோழமை' என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா?
- தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால், அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என்று உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா?
- கும்பகருணனை எழுப்பும் காட்சியை விவரிக்க.
- உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது
- அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
- காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற, வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே இனிப் படுத்து உறங்குவாயாக!
- இராமாயணம் -குறிப்பு வரைக
- இராமனது வரலாற்றைக் கூறும் நூல்
- இந்நூலுக்கு கம்பர் 'இராம அவதாரம்' எனப் பெயரிட்டார்
- இந்நூல் ஆறு காண்டங்களை உடையது
- கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
- கம்பர் - குறிப்பு வரைக.
- சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
- திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
- 'விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்று புகழப்பெற்றவர்.
- "கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" போன்ற முதுமொழிகளுக்கு உரியவர்.
- சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.
Subscribe to:
Posts (Atom)