Tuesday, April 26, 2022

மொழியை ஆள்வோம் இயல் 6 பக்கம் 149

 மொழியை ஆள்வோம்!

தொடர்களை அறிவோம், தொடர்ந்து செய்வோம்

தனிச் சொற்றொடர் : (தனி வாக்கியம்)

ஒரு தொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமைவது தனிச் சொற்றொடர் எனப்படும.

எ.கா. 

  1. மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார்.
  2. மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.


தொடர் சொற்றொடர்:(தொடர் வாக்கியம்)

ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலைகளைக் கொண்டிருக்கும் தொடர் 

எ.கா. 

  1. இனிய நிலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.
  2. அன்வர் அரங்கத்திற்கு வந்து, நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.


கலவைச் சொற்றொடர்: (கலவை வாக்கியம்)

கலவைத் தொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத் தொடர்களும் கலந்து வரும்.

எ.கா.

மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்.

  • பள்ளிக்கு நடந்து வந்தான் -முதன்மைத் தொடர்
  • மழை கொட்டிக் கொண்டிருந்தாலும்-துணைத் தொடர்



.

Friday, April 22, 2022

மெல்லக் கற்போருக்கான மூன்று மதிப்பெண் வினாக்கள்

1) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவது யாவை?
  1. பழமை
  2. குமரி நில ஆட்சி
  3. தென்னன் தமிழ்
  4. திருக்குறளின் புகழ்
  5. பதினெண்மேற்கணக்கு
  6. பதினெண்கீழ்க்கணக்கு
  7. சிலப்பதிகாரம்
  8. மணிமேகலை

2) ‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’. இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
  1. நெல்நாற்று நடப்பட்டுள்ளது
  2. மாங்கன்று நடப்பட்டுள்ளது
  3. தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது
  4. வாழைக்குருத்து வளர்ந்துள்ளது
  5. சோளப் பைங்கூழ் வளர்ந்துள்ளது.

3) ‘அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது’ இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை எல்லாம் எமக்குத் தெரியும்.
 இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற் பெயர்களாக மாற்றி எழுதுக.

வினைமுற்றுகள் – தொழிற் பெயர்கள்:

  1. அறிந்தது – அறிதல்
  2. அறியாதது – அறியாமை
  3. புரிந்தது – புரிதல்
  4. புரியாதது – புரியாமை
  5. தெரிந்தது – தெரிதல்
  6. தெரியாதது – தெரியாமை
  7. பிறந்தது – பிறத்தல்
  8. பிறவாதது – பிறவாமை

4) மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வர்ணித்து எழுதுக .

குறிப்பு : இலைகளில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘ சளப் தளப் ‘ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்

இலைகளில் சொட் சொட் என்று நீர் சொட்டுகிறது.  உடலில் மெல்லிய குளிர் ஓடுகிறது. தேங்கிய குட்டையில் ‘ சளப் தளப் ‘ என்று  குழந்தைகள் குதிக்கின்றனர்.   நீரில் காகிதக் கப்பல் விடுகின்றனர்.

5) தோட்டத்தில் மல்லிகைப்பூப் பறித்த பூங்கொடி வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டிற்கு வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.
  1. மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  2. பூப்பறித்த- இரண்டாம் வேற்றுமைத்தொகை.
  3. ஆடுமாடுகள்- உம்மைத்தொகை.
  4. தண்ணீர்த்தொட்டி -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.
  5. குடிநீர்- வினைத்தொகை.
  6. சுவர்க் கடிகாரம்- ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

6) கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீ எழும்பு!
மாமழை பெய்கையிலே 
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!

-இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

தொடர் வகைகள்

  1. கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்
  2. காலையில் நீ எழும்பு! – ஐந்தாம் வேற்றுமைத் தொடர்.
  3. மாமழை பெய்கையிலே – உரிச்சொற்றொடர்.
  4. மாம்பூவே கண்ணுறங்கு! – விளித்தொடர்
  5. பாடினேன் தாலாட்டு! – வினைமுற்றுத் தொடர்.
  6. ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – அடுக்குத்தொடர்

7) வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
அணி: உவமை அணி
விளக்கம்: உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வந்துள்ளது.

8) “மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
இறைவன் நீங்காத துன்பத்தைத் தந்தாலும், அவனது அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன் 

9) நேற்று இரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலட்சுமி கூப்பிடுகிறாள், போய் பார்” என்றார். “இதோ சென்று விட்டேன்” என்றவாற அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு, அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

  1. நிறைத்திருந்தது
  2. இலட்சுமி கூப்பிடுகிறாள்
  3. இதோ சென்று விட்டேன்
  4. என்னடா விளையாட வேண்டுமா?
  5. நீயும் இவனும் விளையாடுங்கள்
  6. இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்

 10) ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போது மொழிபெயர்ப்பது, விளக்குவது (interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிக் கேட்பியில் (headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர்கள் முன் உள்ள காதணிக்கேட்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார். 

 இப்பகுதியில் இருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

  1. ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறதா?
  2. மொழிபெயர்ப்பது என்பது யாது?
  3. விளக்குவது என்பது யாது?
  4.  ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் எங்கு அமர்ந்திருப்பர்?
  5. ஐ.நா. அவையில் காதணிக்கேட்பியின் பயன்பாடு யாது?

11) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார் . அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
  1. இளமையில் கல்
  2. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  3. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
  4. இன்று நீ வேலைக்குச் சென்றால், உனக்குக் கிடைக்கும் தொகை பெரியதாகத் தோன்றும். ஆனால், உன்னுடைய எதிர்காலம் வீணாகும் என்று கூறுவேன்.

12) ‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’. – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக

குறிஞ்சி-

அன்று-தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்
இன்று-சுற்றுலா

முல்லை-

அன்று-ஆடுமாடு மேய்த்தல்
இன்று-காடுகள் சார்ந்த தொழில்கள்

மருதம்-

அன்று-வேளாண்மை
இன்று- வேளாண்மை

நெய்தல்-

அன்று- மீன்பிடித்தல், உப்பு விளைத்தல்
இன்று- மீன்பிடித்தல், உப்பு விளைத்தல்

பாலை- 

அன்று-வழிப்பறி செய்தல்
இன்று-எண்ணெய் எடுத்தல்

13) வள்ளுவம் , சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
 
  1. கருவி, காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிதல்
  2. மனவலிமை, குடிமக்களைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகியவற்றுடன் திகழ்தல்.
  3. நுண்ணறிவு, நூலறிவு, உலக நடைமுறைகளை அறிதல் ஆகியவை இன்றும் பொருந்துகின்றன.

14) பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

  1. சுற்றத்தாருடன் அன்பு, துணை, வலிமை இல்லை என்றால் பகைவரை எதிர்கொள்ள முடியாது.
  2. துணிவு, அறிதல், அன்பு, உதவி இல்லாதவர் எளிதில் பகைக்கு ஆட்படுவார்.

15) “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

இடம்: ம.பொ.சி. அவர்களின் ‘எனது போராட்டம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. 

விளக்கம்: ம.பொ.சி. அவர்கள் சென்னை பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார்

16) பின்வரும் பத்தியைப் படித்து மையக் கருத்தை எழுதுக.
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவான இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்துத் தொடக்கத்தில் அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.  
சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் பழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிசப் பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும், இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்தி கோளின் வமிச பரம்பரை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சி ஆண்டு, போர் வெற்றிகள், வரலாறு, வாழ்த்து, சாசனம் எழுந்த நிகழ்ச்சி ஆகியவை காணப்படும். முதல் இராஜராஜனுடைய எட்டாம் ஆட்சி ஆண்டில்தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. 

17) “பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
 பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
 தூசும் துகிரும் ஆரமும் அகிலும்” 
அ) இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
ஈ). காருகர் – பொருள் தருக.
உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

அ). இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
பகர்வனர் 
பட்டினும் 
பருத்தி
தூசும்
துகிரும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பகர்வனர் 
நகர வீதியும்
பட்டினும் 
கட்டு
ஈ). காருகர் – பொருள் தருக.
காருகர் – நெய்பவர்
உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனம், அகில்.

18) ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

  1. அளவடிகளைப் பெற்று வரும்
  2. இயற்சீர் பயின்று வரும். பிற சீரும் வரும். 
  3. ஆசிரியத் தளைகள் பயின்று வரும். பிற தளைகளும் கலந்து வரும்.
  4. மூன்றடி முதல் பல அடிகள் வரை வரும்.
  5. அகவலோசை பெற்று வரும்.
  6. ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.

19) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

  1. அறம் செய்வதில் வணிக நோக்கம் கூடாது
  2. செங்கோல் போன்று ஆட்சி மேற்கொள்ளவேண்டும். 
  3. நீர்நிலை பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமை ஆகும்
  4. குற்றத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்
போன்ற அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே.

20) ‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. (குறிப்பு : சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

சுற்றுச்சூழலைப் பேணுவதில் நாம் போதிய அக்கறை காட்டாமல் இருந்து வருகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மையால் சுற்றுச்சூழல் விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இது மிகவும் கவலைக்குரியதாகும். அறநெறியில் நின்று வாழ்க்கை நடத்தியவர்கள் நம் முன்னோர். அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். பூமியைத் தெய்வமாகவும் விலங்குகளை உற்ற தோழனாகவும் பாவித்தார்கள். காடுகளையும் காட்டு விலங்குகளையும் பாதுகாத்தார்கள். அவர்களது வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி நாமும் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ வேண்டும். 

21) எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

  1. உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
  2. உடலின் தன்மையை அறியேன்.
  3. உணவுத் தேடும் வழி அறியேன்.
  4. காட்டில் செல்லும் வழி அறியேன்.

22) கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

"ஆரெயில் நெடுங்கொடி ‘வாரல்’ என்பனபோல் மறித்துக் கைகாட்ட"

கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக் கருதி கொடிகள் கையசைத்து ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். எனவே, இது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.

23) ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதைமாந்தர் வாயிலாக விளக்குக.

  1. அவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டது. அதைக் கொண்டாட விரும்பினார்.
  2. பார்வையற்ற பிச்சைக்காரனின் அலுமினிய பாத்திரத்தில் இரண்டணாவை இட்டு மகிழ்ந்தார். டிக்கெட் விலை ஓரணா கூடியிருந்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிடத்திற்குள் ஒரு அணாவுக்கு யாசிக்கும் நிலை வந்ததை எண்ணினார்.
  3. பிச்சைக்காரனின் அலுமினியப் பாத்திரத்தில் தான் இட்ட இரண்டணா தன்னுடையது என்றும், தனக்குச் சொந்தமில்லை என்றும், ஓரணா போட்டுவிட்டு இரண்டணா எடுத்துக் கொண்டால் என்ன என்றும் தனக்குள் தர்க்கம் புரிந்தார். 

மெல்லக் கற்போருக்கான இரண்டு மதிப்பெண் வினாக்கள் 2022

1. “மண்ணும் சிலம்பே மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்கப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

  1. சீவக சிந்தாமணி 
  2. வளையாபதி 
  3. குண்டலகேசி

2. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
-மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
1). சரியான தொடர்கள்:
    1. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
    2. ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
2). பிழையான தொடர்:
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
3). பிழைக்கான காரணம்:
தாற்றில் தான் சீப்புகள் இருக்கும்.

3. ‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
  1. வேங்கை = மரம்
  2. வேம்+கை = வேகின்ற கை
  3. ‘வேங்கை’ எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்து, பொதுமொழியாகிறது.

4. ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்‘ – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
  1. உடுப்பதூஉம் உண்பதூஉம்-இன்னிசை அளபெடை
  2. செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக உயிர் எழுத்துகள் அளபெடுப்பது, இன்னிசை அளபெடையாகும்.

5). “நமக்கு உயிர் காற்று 
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி அறியாமல் நட்டு வளர்ப்போம்” – இது போன்ற உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழுக்கத் தொடர்களை எழுதுக.

1). மரம் தரும் உயிர்வளி 
     மனிதர் வாழ …
     மரம் வளர்ப்பதே ஒரே வழி.

2). பட்டம் கூட முட்டும்!
     பாழ்படுத்தாதீர்..!
     நித்தம் மூச்சும் முட்டும்!

6). வசன கவிதை – குறிப்பு வரைக.
  1. உரைநடையும் கவிதையும் இணைந்து, யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ‘வசனகவிதை’ எனப்படுகிறது.  
  2. இவ்வடிவம் பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.  

7). பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
  1. அம்மாவும் அப்பாவும் இப்போதே வந்துவிடுவர். அழாதே செல்லம்! அழாதே!
  2. உனக்குப் பிடித்த தின்பண்டம் வாங்கி வருவார்கள். உருட்டி விளையாடப் பொம்மை வாங்கி வருவார்கள். அழாதே தங்கம்! அழாதே!

8). மாஅல் – பொருளும் இலக்கண குறிப்பும் தருக.
  1. பொருள்: திருமால்.
  2. இலக்கணக்குறிப்பு:  செய்யுளிசை அளபெடை

9). தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

  1. தண்ணீரைக் குடி. தினமும் ஐந்து லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  2. தயிரை உடைய குடம். அவள் தயிரை உடைய குடத்தை எடுத்து வந்தாள்.

10). ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடர் ஆனது. ‘சிரித்துப் பேசினாள்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
‘சிரித்துப் பேசினாள்’ என்பது ‘சிரித்துச் சிரித்துப் பேசினாள்’ என அடுக்குத்தொடர் ஆகும்.

11). பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
  1. பாரதியார் கவிஞர்- பெயர்ப் பயனிலை
  2. நூலகம் சென்றார்-வினைப் பயனிலை
  3. அவர் யார்?- வினாப் பயனிலை.

12). ‘நச்சப்படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
நச்சப்படாதவன் – பிறருக்கு உதவி செய்யாததால், ஒருவராலும் விரும்பப்படாதவன்.

13). கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். – இத்திருக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் – இன்னிசை அளபெடை

14). பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணி காக்கப்படும் – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம்பழுத்து போன்று – உயிரினும் ஓம்பப்படும்.
இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் – நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

விடை:
அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் – உயிரினும் ஓம்பப் படும்.
ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்று – நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.
இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.

15). எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ). கூவிளம் தேமா மலர்

ஆ). கூவிளம் புளிமா மலர்

இ). தேமா புளிமா காசு

ஈ). புளிமா தேமா பிறப்பு

விடை:
அ). கூவிளம் தேமா மலர்

16). மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். 

17). வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்- இத்தொடர் காலவழுவமைதி எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

‘வருகின்ற கோடை விடுமுறை’ என்பது எதிர்காலம். நிகழ்ச்சியின் உறுதித்தன்மை குறித்து இது காலவழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.

18). “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிரக் கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிரக் கடிக்காது” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.

19). செய்குத் தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்தொடர்களாக்குக.

அ) அருளைப் பெருக்கு!
       அறிவைத் திருத்து !!
       மயக்கம் அகற்று !!!

ஆ) அறிவுக்குத் தெளிவு தரும் !
       உயிருக்குத் துணையாய் வரும்!!


20). அமர்ந்தான்- பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்+த்(ந்)+த்+ஆன்
  • அமர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

21). இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ இருக்கிறதே …சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே !மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்து எழுதுக.

  1. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? – அறியா வினா
  2. மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? – ஐய வினா


22). “நேற்று நான் பார்த்த ‘அருச்சுனன் தபசு’ என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற் கூற்றாக எழுதுக.
அயற்கூற்று:
முன்தினம் அவன் பார்த்த ‘அருச்சுனன் தபசு’ என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் கூறினான்.

23). உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’ 
காலதூதர் கையில் ‘உறங்குவாய் உறங்குவாய்’
 கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
  1. உம்முடைய பொய்யான வாழ்வு இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது என்று எழுப்புகிறார்கள்.. 
  2. காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக” என்று உறங்கச் சொல்கிறார்கள்.

24). காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
முதற்பொருள்:
  1. நிலம்: முல்லை (காடு)
  2. பெரும்பொழுது: கார்காலம் (மழைக்காலம்)
சிறுபொழுது: மாலை
கருப்பொருள்:
உணவு: வரகு

25). கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
  1. உழவர்கள் வயலில் உழுதனர்.
  2. நெய்தல் பூச்செடிகளைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
26). ‘கரப்பிடும்பை இல்லார்’ இத்தொடரின் பொருள் கூறுக.

தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத் தராத நல்லார்’ என்பது இதன் பொருளாகும்.

27). தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.
  • தஞ்/சம் – நேர் நேர் – தேமா
  • எளி/யர் – நிரை நேர் – புளிமா
  • பகைக்/கு – (நிரை நேர்) – நிரைபு – பிறப்பு
 
28). வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
குறளின் கருத்து:
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.
29). பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
 பெரிய கத்தி, இரும்பு, ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.
  1. உழைத்ததால் கிடைத்த ஊதியம்
  2. ஏனெனில், அது பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதமாகும்
30)வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார். 

31). பொருத்தமான இடங்களில் நிறுத்தற்குறி இடுக.

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

விடை:

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

32). மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பி, அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.

33). பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

  1. பாசவர் – வெற்றிலை விற்பவர் 
  2. வாசவர் – ஏலம் முதலான நறுமணப்பொருள்கள் விற்பவர்
  3. பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சி விற்பவர் 
  4. உமணர் – வெண்மையான உப்பு விற்பவர்

34). புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

  1. வெட்சி × கரந்தை 
  2. வஞ்சி × காஞ்சி 
  3. நொச்சி × உழிஞை

35)குறிப்பு வரைக. – அவையம்

அவையம்:
அறம் கூறும் மன்றங்கள், அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன. 

36). ‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’

அ).அடி எதுகையை எடுத்து எழுதுக.

ஆ)இலக்கணக் குறிப்பு எழுதுக.

 கொள்க, குரைக்க.

விடை:

அ). அடியெதுகை: ‘ள்‘
கொள்வோர்
ள்வாய்

ஆ). இலக்கணக் குறிப்பு:
கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்றுகள்

37). குறள் வெண்பாவின் இலக்கணத்தைக் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதல் அடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.

எடுத்துக்காட்டு:
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

38). வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கலோசை ஆகும். துள்ளலோசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

கலவைத் தொடர்:
வஞ்சிப்பாவிற்குத் தூங்கலோசையும், கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியன.

39). நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. – இத்தொடரை இரு தொடர்களாக்குக.

தனி வாக்கியங்கள்:
  1. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு.
  2. அதற்கு உரிய காரணமும் உண்டு.

40). “காய் மணி ஆகும் முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” – உவமை உணர்த்தும் கருத்து யாது?

இளம்பயிர் நெல்மணிகளைக் காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டன போல, கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றான்.

 

41). தீவக அணியின் வகைகள் யாவை?
  1. முதல் நிலைத் தீவகம் 
  2. இடை நிலைத் தீவகம் 
  3. கடை நிலைத் தீவகம்.
42). ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’ – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
இக்குறளில் சொல்லையும் பொருளையும் வரிசைப்படி நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளதால், இது நிரல்நிறை அணியாயிற்று.

Wednesday, March 30, 2022

காலக்கணிதம் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. கவிஞன் என்பவன் யார்?
    • மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக் களை பறித்து, தத்துவ நீர்பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.
  2. மாற்றம் குறித்து கண்ணதாசன் கூறுவன யாவை?
    1. மாற்றம் என்பது மானிடத் தத்துவம்
    2. மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகச் சிறப்பை அறிவேன்.
    3. நன்மை எவை, தீமை எவை என்பதை அறிந்து அதன் அடிப்படையில் என் வாழ்க்கைப் பயணம் செல்லும்.
    4. தலைவர்கள் மாறுவர்; காட்சிகள் மாறும்; தத்துவம் மட்டுமே நிலையாக நிற்கும்.
  3. கண்ணதாசன் தன்னுடைய கவிதைகளின் சிறப்பாக எவற்றைக் காட்டுகிறார்?
    1. நல்ல கருத்துக்களைக் கவிதையாக விதைப்பேன். பொன்னைவிட விலைமதிப்பு மிகுந்தது என்னுடைய கவிதைகள்.
    2. சரி என்று தோன்றும் கருத்துக்களைக் கவிதையாக ஆக்குவது, அளிப்பது, அழிப்பது என்னுடைய வேலை.
  4. கண்ணதாசன் தன்னுடைய குணங்களாக எவற்றைக் காட்டுகிறார்?
    1. செல்வர்க்கு அடிபணிய மாட்டேன்.
    2. பதவியைக் கண்டு பயப்பட மாட்டேன்.
    3. அன்புடன் பழகுவேன்.
    4. பிடித்ததைச் செய்வேன்.
    5. என்னிடம் பொருளுண்டு என்றால் பிறருக்குக் கொடுப்பேன்.
    6. என்னிடம் பொருள் இல்லை என்றால் காலதேவனிடம் அடைக்கலம் புகுவேன்.
    7. வண்டாக எழுந்து மலர்களில் அமர்வேன்.
    8. எனக்குக் கிடைத்த செல்வத்தை ஊருக்கெல்லாம் கொடுப்பேன்.
    9. சிறந்த கவிஞர்களான கம்பர், பாரதி, பாரதிதாசன் சொல்லாத செய்திகளைச் சொல்ல முயற்சி செய்வேன்.
    10. புகழ்ச்சியைக் கண்டு மயங்கமாட்டேன்.  இகழ்ச்சியைக் கண்டு மனம் வாடமாட்டேன்.
  5. கண்ணதாசன் குறிப்பு வரைக
    1. இயற்பெயர் :முத்தையாஊர் :சிவகங்கை மாவட்டம்- சிறுகூடல்பட்டி.
    2. பெற்றோர் :சாத்தப்பன் -விசாலாட்சி.
    3. சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
    4. சேரமான் காதலி என்னும் நாவலுக்காக சாகித்திய அகடாமி விருது பெற்றவர். 
    5. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
    6. தமது திரைப்படப் பாடல்கள் மூலம் எளிய முறையில் மெய்யியலை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

Tuesday, March 29, 2022

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்


முன்னுரை

"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி

பேணி வளர்த்திடும் ஈசன் "

என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, ஞானப் பெண்ணாய் ஞாலம் அளந்தாள், வீரமங்கை. நிலவைப் பார்த்து உணவுண்ட காலத்திலேயே, நிலவில் சோறு உண்ணக் கனாக் கண்டவள், கல்பனா. வானில் நட்சத்திரங்களை எண்ணி எண்ணி, அவள் வானத்து நட்சத்திரமான வரலாறு காண்போம், வாரீர்!

குழந்தைப் பருவம்

அரியானா மாநிலம் கர்னல் என்னும் ஊரில் பனாரஸ் லால் சாவ்லா - சன்யோகிதா தேவி இணையருக்கு மகளாக மார்ச் 17, 1962 ஆம் ஆண்டு பிறந்தார், கல்பனா. கல்பனா என்ற பெயருக்கு 'கற்பனை' என்று பொருள். கல்பனாவுக்கு, விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜே. ஆர். டி. டாடா (ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அவர்களைப் பார்த்தது முதல் விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்வி

கல்பனா பள்ளிக்கல்வியைத் தாகூர் அரசுப் பள்ளியிலும், இளங்கலை விண்வெளிப் பொறியியல் படிப்பைப் பஞ்சாப் பொறியியல் கல்லூரியிலும், முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலையிலும், முனைவர்பட்ட விண்வெளிப் பொறியியல் படிப்பைக் கொலராடோ பல்கலையிலும் படித்தார்.

பணி

நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தோடு இணைக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட முறைகள் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரை இறங்குதல் பற்றித் திரவ இயக்கவியல் கணக்கீடு ஆராய்ச்சி மேற்கொண்டார். விமானம் மற்றும் மிதவை வானூர்திகளை (கிளைடர்களை) ஓட்டக் கற்றுக் கொடுக்கும் தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு, ஓட்ட அனுமதியும் பெற்றார்.

1995ஆம் ஆண்டு நாசா விண்வெளிவீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.

சாதனைகள்

1997ஆம் ஆண்டு விண்வெளி விண்கலப் பணி ஊர்தி 87 இல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தொழில்நுட்ப வல்லுநராக விண்வெளி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டார்.

ஜனவரி 16, 2003 விண்வெளி விண்கலப்பணி ஊர்தி 107 இல் விண்வெளிக்குச் சென்றார். கல்பனா சாவ்லாவின் பொறுப்புகளாக 'நுண் ஈர்ப்புச்' ( மைக்ரோ கிராவிட்டி) சோதனைகள் அமைந்திருந்தன. கல்பனாவின் குழு எண்பது பரிசோதனைகளை மேற்கொண்டது.

விபத்து

பிப்ரவரி 1, 2003 இல் தனது பதினாறுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியானார்கள். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

விருதுகள்

அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசாவின் விண்ணோட்டப் பதக்கம் மற்றும் சிறப்பு சமூக சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கப்பட்டது. இளம்பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடக அரசு 2004 முதல் 'கல்பனா சாவ்லா விருது' வழங்கி வருகிறது. இஸ்ரோ 'கல்பனா சாவ்லா' பெயரில் ஒரு விண்கலத்தை ஏவியது. அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் தனது விண்கலத்திற்கு 'எஸ்எஸ் கல்பனா' என்று பெயரிட்டுள்ளது.

முடிவுரை

விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு, தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது தியாகம் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்ற பாரதியின் வரிகளை மனத்தில் கொண்டு, கனவுகளை நனவாக்கிச், சாதனை படைத்த சாவ்லாவின் வழியைப் பின்பற்றுவோம், வாரீர்!

- மலர் மகேந்திரன்


அன்னை மொழியே 2 மதிப்பெண் வினாக்கள்

  1. சின்னக் குழந்தையின் சிரிப்பாகவும் பழுத்த நரையின் பட்டறிவாகவும் ஆனவள் யார்?
    • தமிழ்த் தாய்
  2. 'பழுத்த நரை' என்ற சொல்லின் பொருள் யாது?
    • கற்றறிந்த சான்றோர்
  3. 'பட்டறிவு' என்ற சொல்லின் பொருள் யாது?
    • அனுபவ அறிவு
  4. வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டவர் யார்?
    • தமிழ்த் தாய்
  5. கல் போன்ற மனத்தையும் கற்கண்டாக்குபவள் யார்?
    • தமிழ்த்தாய்
  6. அறிவைப் பெருக்கி அன்பை வயப்படுத்துபவள் யார்?
    • தமிழ்த்தாய்
  7. தமிழ்த் தாய் யாருடைய சிரிப்பாகவும் யாருடைய பட்டறிவாகவும் இருக்கிறாள்?
    • தமிழ்த்தாய் சின்னக் குழந்தையின் சிரிப்பாகவும்
    • பழுத்த நரையின் பட்டறிவாகவும் இருக்கிறாள்.
  8. தமிழ்த்தாய் எவற்றையெல்லாம் கவிதையாகக் கொண்டிருக்கிறாள்?
    • தமிழ்த் தாய் வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டிருக்கிறாள்.
  9. தமிழ்த்தாய் எதைக் கற்கண்டாக்குவாள்?
    • கல் போன்ற மனத்தையும் கற்கண்டுடாக்குவாள்
  10. தமிழ்த் தாய் எதைப் பெருக்குவாள்? எதை வயப்படுத்துவாள்?
    1. அறிவைப் பெருக்குவாள்
    2. அன்பை வயப்படுத்துவாள்
  11. யாருடைய பெருமை செப்புவதற்கு அரியது?
    • தமிழ்த் தாயின் பெருமை செப்புவதற்கு அரியது
  12. தமிழ்த் தாய் ஆண்ட பகுதி எது?
    • குமரிக்கண்டம்
  13. தமிழ்த்தாயின் தொன்மை யாது?
    • பழமைக்கும் பழமையானது
  14. தமிழ்த் தாய் யாருடைய மகள் ஆவார்?
    • தமிழ்த் தாய் பாண்டிய மன்னனின் மகள் ஆவார்
  15. தமிழ்த்தாய் எதனுடைய பெருமைக்கு உரியவராக கருதப்படுகிறார்?
    • தமிழ்த் தாய் திருக்குறளின் பெருமைக்கு உரியவராகக் கருதப்படுகிறார்.
  16. சங்க இலக்கியங்கள் எவை?
    1. பத்துப்பாட்டு
    2. எட்டுத்தொகை
  17. நற்கணக்கு எனப்படுவது எது?
    • பதினெண் கீழ்க்கணக்கு
  18. கணக்கு என்ற சொல்லின் பொருள் யாது?
    • நூல்
  19. நற்கணக்கு என்ற சொல்லின் பொருள் யாது?
    • நல்ல நீதியைக் கூறும் நூல்
  20. கீழ்க்கணக்கு என்ற சொல்லின் பொருள் யாது?
    • குறைந்த அடிகளை உடைய அல்லது குறைந்த பாடல் எண்ணிக்கையை உடைய நூல்
  21. பத்துப்பாட்டு நூல்கள் எவை?
    1. திருமுருகாற்றுப்படை
    2. பொருநராற்றுப்படை
    3. சிறுபாணாற்றுப்படை
    4. பெரும்பாணாற்றுப்படை
    5. குறிஞ்சிப்பாட்டு
    6. முல்லைப்பாட்டு
    7. மதுரைக்காஞ்சி
    8. பட்டினப்பாலை
    9. மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)
    10. நெடுநல்வாடை
  22. எட்டுத்தொகை நூல்கள் எவை?
    1. நற்றிணை
    2. குறுந்தொகை
    3. ஐங்குறுநூறு
    4. பதிற்றுப்பத்து
    5. பரிபாடல்
    6. கலித்தொகை
    7. அகநானூறு
    8. புறநானூறு
  23. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவை?
    1. நாலடியார்
    2. நான்மணிக்கடிகை
    3. இன்னாநாற்பது
    4. இனியவை நாற்பது
    5. கார் நாற்பது
    6. களவழி நாற்பது
    7. ஐந்திணை ஐம்பது
    8. ஐந்திணை எழுபது
    9. திணைமொழி ஐம்பது
    10. திணைமாலை நூற்றைம்பது
    11. திருக்குறள்
    12. திரிகடுகம்
    13. ஏலாதி
    14. சிறுபஞ்சமூலம்
    15. ஆசாரக்கோவை
    16. பழமொழி
    17. முதுமொழிக்காஞ்சி
    18. கைந்நிலை அல்லது இன்னிலை
  24. ஐம்பெரும் காப்பியங்கள் எவை?
    1. சிலப்பதிகாரம்
    2. மணிமேகலை
    3. சீவகசிந்தாமணி
    4. வளையாபதி
    5. குண்டலகேசி
  25. பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழன்னையை வாழ்த்தக் காரணம் யாது?
    1. அன்னை மொழி
    2. அழகு நிறைந்த செந்தமிழ்
    3. பழமைக்கும் பழமையாய் தோன்றிய நறுங்கனி
    4. குமரிக் கண்டத்தை ஆட்சி செய்தவள்
    5. பாண்டிய மன்னனின் மகள்
    6. திருக்குறளின்  பெருமைக்கு உரியவள்
    7. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆக இருப்பவள்.
    8. இந்த நினைவுகள் யாவும் பொங்கி எழுவதால் தலைபணிந்து வாழ்த்துகிறோம்
  26. பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு உள்ளக்கனல் மூளக் காரணம் யாது?
    1. முந்தை தனிப்புகழ்
    2. இலக்கிய வளம்
    3. நீண்ட நிலைத்த தன்மை
    4. வேற்றுமொழியார் புகழுரை
  27. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எதைப்போல பாடி முழங்குகிறார்?
    • வண்டு செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போல பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடி முழங்குகிறார்.
  28. பாவலரேறு எழுதிய இதழ்கள் யாவை?
    1. தென்மொழி
    2. தமிழ்ச்சிட்டு
  29. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் எவை?
    1. உலகியல் நூறு
    2. பாவியக் கொத்து
    3. நூறாசிரியம்
    4. கனிச்சாறு
    5. எண்சுவை எண்பது
    6. மகபுகுவஞ்சி
    7. பள்ளிப் பறவைகள்
  30. தமிழுக்கு கருவூலமாக அமைந்த நூல் எது?
    • திருக்குறள் மெய்ப்பொருளுரை

தமிழ்ச்சொல் வளம் 2மதிப்பெண் வினாக்கள்

  1. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் யார்?
    • மகாகவி பாரதியார்
  2. கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மொழி எது?
    • தமிழ்மொழி
  3. பல்வேறு சிறப்பு இயல்புகளைக் கொண்ட மொழி எது?
    • தமிழ் மொழி
  4. தமிழ்மொழியில் அனைத்து வளமும் உண்டு என்று விடை பகர்வது எது?
    • தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரை
  5. இலக்கியச் செம்மொழிகளுக்கு எல்லாம் பொதுவானது எது?
    • சொல்வளம்
  6. சொல்வளத்தில் தலைசிறந்த மொழி எது?
    • தமிழ் மொழி
  7. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
    • கால்டுவெல்
  8. சொல்வளத்தைக் குறிப்பிட்டு கால்டுவெல் கூறியது யாது?
    1. தமிழில் உள்ள ஒருபொருட்பலசொல் வரிசைகள் பிற திராவிட மொழிகளில் இல்லை.
    2. பிற திராவிட மொழிச் சொற்களும் தமிழில் உள.
  9. பயிர்களின் அடி வகைச் சொற்கள் யாவை?
    1. தாள்
    2. தண்டு
    3. கோல்
    4. தூறு
    5. தட்டு அல்லது தட்டை
    6. கழி
    7. கழை
    8. அடி
  10. பயிர்களின் கிளைப்பிரிவுகள் யாவை?
    1. கவை
    2. கொம்பு அல்லது கொப்பு
    3. கிளை
    4. சினை
    5. போத்து
    6. குச்சு
    7. இணுக்கு
  11. காய்ந்த அடி மற்றும் கிளைகளின் பெயர்கள் யாவை?
    1. சுள்ளி
    2. விறகு
    3. வெங்கழி
    4. கட்டை
  12. இலை வகைகளின் பெயர்களை எழுதுக
    1. இலை
    2. தாள்
    3. தோகை
    4. ஓலை
    5. சண்டு
    6. சருகு
  13. கொழுந்து வகைகளின் பெயர்களை எழுதுக
    1. துளிர் அல்லது தளிர்
    2. முறி
    3. கொழுந்து
    4. குருத்து
    5. கொழுந்தாடை
  14. பூவின் நிலைகளின் பெயர்களை குறிப்பிடுக
    1. அரும்பு
    2. போது
    3. மலர் அல்லது அலர்
    4. வீ
    5. செம்மல்
  15. சொல் ஆராய்ச்சியில் பாவாணர் வியந்த பெருமகனார் யார்?
    • தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்
  16. திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்? எங்கு நிறுவப்பட்டுள்ளது?
    1. திருவள்ளுவர் தவச்சாலை எழுதியவர் இரா இளங்குமரனார்
    2. திருவள்ளுவர் தவச்சாலை திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது
  17. இரா இளங்குமரனார் தமிழகம் முழுவதும் எதைப்பற்றிய சொற்பொழிவுகளை வழங்கி வந்தார்?
    • திருக்குறள் தொடர்பான சொற்பொழிவுகள்
  18. இளங்குமரனார் எவ்வழியில் திருமணங்களை நடத்தி வைத்து வந்தவர்?
    • தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வந்தவர்
  19. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை இரா. இளங்குமரனார் ஏன் கற்றுக் கொண்டார்?
    • விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழை இழந்து விடக்கூடாது என்று எண்ணியதால்...
  20. ரா இளங்குமரனார் யாரைப் பின்பற்றி இமைகளை மூடியபடி எழுதக் கற்றுக் கொண்டார்?
    • திரு.வி.க
  21. இரா இளங்குமரனாரின் தமிழ்ப் பணியை தரம் உயர்த்திய நல்முத்துக்கள் எவை?
    1. இலக்கண வரலாறு
    2. தமிழிசை இயக்கம்
    3. தனித்தமிழ் இயக்கம்
    4. பாவாணர் வரலாறு
    5. குண்டலகேசி உரை
    6. யாப்பருங்கல உரை
    7. புறத்திரட்டு உரை
    8. திருக்குறள் தமிழ் மரபுரை
    9. காக்கைபாடினியம்
    10. தேவநேயம்
  22. இரா இளங்குமரனாரின் புனைப் பெயர் என்ன?
    • தமிழ்த்திரு
  23. பிஞ்சு வகைகளின் பெயர்கள் யாவை?
    1. பூம்பிஞ்சு
    2. பிஞ்சு
    3. வடு
    4. மூசு
    5. கவ்வை
    6. குரும்பை
    7. முட்டுக் குரும்பை
    8. இளநீர்
    9. நுழாய்
    10. கருக்கல்
    11. கச்சல்
  24. குலை வகைகளின் பெயர்கள் யாவை?
    1. கொத்து
    2. குலை
    3. தாறு
    4. கதிர்
    5. அலகு அல்லது குரல்
    6. சீப்பு
  25. கெட்டுப்போன காய்கனி வகைகளின் பெயர்களை எழுதுக
    1. சூம்பல்
    2. சிவியல்
    3. சொத்தை
    4. வெம்பல்
    5. அளியல்
    6. அழுகல்
    7. சொண்டு
  26. கெட்டுப்போன தேங்காய்களின் பெயர்கள் யாவை?
    1. கோட்டன்காய் அல்லது  கூகைக்காய்
    2. தேரைக்காய்
    3. அல்லிக்காய்
    4. ஒல்லிக்காய்
  27. பழத்தோல் வகைகளின் பெயர்களை எழுதுக
    1. தொலி
    2. தோல்
    3. தோடு
    4. ஓடு
    5. குடுக்கை
    6. மட்டை
    7. கொம்மை
  28. மணிவகைகளின் பெயர்களை எழுதுக
    1. கூலம்
    2. பயறு
    1. கடலை
    2. விதை
    3. காழ்
    4. முத்து
    5. கொட்டை
    6. தேங்காய்
    7. முதிரை
  29. இளம் பயிர் வகைகளின் பெயர்களை எழுதுக
    1. நாற்று
    2. கன்று
    3. குருத்து
    4. பிள்ளை
    5. குட்டி
    6. மடலி அல்லது வடலி
    7. பைங்கூழ்
  30. பொதுமக்களால் அமைவது எது? புல மக்களால் அமைவது எது?
    1. பொதுமக்களால் அமைவது மொழி
    2. புல மக்களால் அமைவது இலக்கியம்
  31. தமிழ்ப் பொதுமக்கள் இலைகளை அதன் வன்மை மென்மை பற்றி எவ்வாறு பாகுபாடு செய்தனர்?
    1. தாள்
    2. இலை
    3. தோகை
    4. ஓலை
  32. தமிழ்நாடு பொருள்வளமுடையது என்பது எவ்வாறு விளங்கும்?
    • விளைபொருள் வகைகளை நோக்கும் போது...
  33. கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக
    1. சம்பாக்கோதுமை
    2. குண்டுக்கோதுமை
    3. வாற்கோதுமை
  34. தமிழ்நாட்டு நெல் வகைகளைக் குறிப்பிடுக
    1. செந்நெல்
    2. வெண்ணெல்
    3. கார்நெல்
    4. சம்பா
    5. மட்டை
    6. கார்
  35. சம்பா நெல் வகைகளின் பெயர்களை எழுதுக.
    1. ஆவிரம் பூச்சம்பா
    2. ஆனைக்கொம்பன் சம்பா
    3. குண்டுச் சம்பா
    4. குதிரைவாலிச் சம்பா
    5. சிறுமணிச் சம்பா
    6. சீரகச் சம்பா
  36. தமிழ்நாட்டில் விளையும் சிறு கூலங்கள் யாவை?
    1. வரகு
    2. காடைக்கண்ணி
    3. குதிரைவாலி
  37. ஒரு நாட்டு மக்களின் அறிவு ஒழுக்கங்கள் எதன்படி அமைந்திருக்கும்?
    • அந்த நாட்டின் வளத்திற்குத் தக்கபடி...
  38. பண்டையத் தமிழ்மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருந்தமைக்கான காரணம் யாது?
    • நாட்டின் தனிப்பெரும் வளத்தினால்...
  39. ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரீகத்தை அளந்தறிவதற்குச் சிறந்த வழி எது?
    • மொழி
  40. திருந்திய மக்களை மற்ற உயிரின்றும் பிரித்துக் காட்டுவது எது?
    • மொழி
  41. பொருட்களை நுண் பாகுபாடு செய்து அவற்றிற்கு ஏற்பப் பருப்பொருள் சொற்களும் நுண்பொருள் சொற்களும் அமைத்துக்கொள்வது எத்தகைய மக்களுக்கு இயலும்?
    • சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்களுக்கே இயலும்
  42. உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு எது?
    • மலேசியா
  43. உலகிலேயே முதன் முதலில் எந்த மொழிக்காக உலகமாநாடு நடத்தப்பட்டது?
    • தமிழ் மொழி
  44. பன்மொழிப்புலவர் எனப்படுபவர் யார்?
    • க அப்பாத்துரையார்
  45. தாள் எனப்படுவது யாது?
    • நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடிப்பகுதி தாள் எனப்படுகிறது
    • நெல்லை அறுவடை செய்தபின் நிலத்தில் விடப்படும் அடிப்பகுதி நெல்தாள் ஆகும்
  46. தண்டு என்ற சொல்லின் பொருள் யாது?
    • கீரை, வாழை முதலியவற்றின் அடிப்பகுதி தண்டு எனப்படுகிறது.
    • கீரைத்தண்டு, வாழைத்தண்டு
  47. கோல் என்ற சொல்லின் பொருள் யாது?
    • நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடிப்பகுதி கோல் எனப்படுகிறது
  48. தூறு என்றால் என்ன?
    • குத்துச் செடி, புதர் முதலியவற்றின் அடிப்பகுதி எனப்படுகிறது.
  49. தட்டு அல்லது தட்டை என்றால் என்ன?
    • கம்பு, சோளம் முதலியவற்றின் அடிப்பகுதி தட்டு அல்லது தட்டை எனப்படுகிறது
    • கம்பந்தட்டை, சோளத்தட்டை
  50. கழி என்ற சொல்லின் பொருள் யாது?
    • கரும்பின் அடிப்பகுதி கழி எனப்படுகிறது
    • கரும்பை அறுவடை செய்தபின் வயலில் விடப்படும் கரும்பின் அடிப்பகுதி கரும்புக்கழி அல்லது கருப்பங்கழி எனப்படுகிறது.
  51. கழை என்ற சொல்லின் பொருள் யாது?
    • மூங்கிலின் அடிப்பகுதி கழை எனப்படுகிறது
    • மூங்கில்கழை
    • மூங்கிலைக் கையில் ஏந்தி கயிற்றில் நடந்து சாகசம் செய்பவர்களைக் 'கழைக்கூத்தாடிகள்' என அழைப்பதுண்டு.
  52. அடி என்ற சொல்லின் பொருள் யாது?
    • பெரிய மரங்களின் அடிப்பகுதி 'அடி' என்று அழைக்கப்படுகிறது
  53. கவை என்ற சொல்லின் பொருள் யாது?
    • அடிமரத்தில் இருந்து பிரியும் பெரிய கிளை 'கவை' எனப்படுகிறது
  54. கொம்பு அல்லது கொப்பு என்ற சொல்லின் பொருள் யாது?
    • கவையில் இருந்து பிரியும் கிளைப்பகுதி 'கொம்பு' அல்லது 'கொப்பு' என அழைக்கப்படுகிறது
  55. சினை என்ற சொல்லின் பொருள் யாது?
    • கொம்பு அல்லது கொப்பு மேலும் பிரிந்தால் அது 'சினை' எனப்படுகிறது
  56. போத்து என்றால் என்ன?
    • சினை மேலும் பிரிந்தால் அது 'போத்து' எனப்படுகிறது
  57. போத்தின் பிரிவின் பெயர் என்ன?
    • குச்சு
  58. இணுக்கு என்றால் என்ன?
    • குச்சியின் பிரிவு 'இணுக்கு' எனப்படுகிறது
  59. சுள்ளி என்றால் என்ன?
    • காய்ந்த குச்சி 'சுள்ளி' எனப்படுகிறது
  60. விறகு என்றால் என்ன?
    • காய்ந்த சிறுகிளை 'விறகு' எனப்படுகிறது
  61. கட்டை என்றால் என்ன?
    • காய்ந்த கொப்பும் கவையும் அடியும் கட்டை எனப்படுகிறது
  62. வெங்கழி என்றால் என்ன?
    • காய்ந்த கழி 'வெங்கழி' எனப்படுகிறது
  63. ஓலை எனப்படுவது யாது?
    • தென்னை, பனை முதலியவற்றின் இலைப் பகுதி ஓலை எனப்படுகிறது
  64. தோகை என்றால் என்ன?
    • சோளம், கரும்பு முதலியவற்றின் இலைப்பகுதி தோகை எனப்படுகிறது
  65. நெல், புல் முதலியவற்றின் இலைப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • தாள்
  66. சண்டு என்பது எதைக் குறிக்கிறது?
    • காய்ந்த தாளும் தோகையும்
  67. சருகு என்பது எதைக் குறிக்கிறது?
    • காய்ந்த இலை
  68. நெல், புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • தளிர் அல்லது துளிர்
  69. முறி என்பது எதைக் குறிக்கிறது?
    • புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
  70. சோளம், கரும்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • குருத்து
  71. தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • குருத்து
  72. கொழுந்தாடை என்பது என்ன?
    • கரும்பின் கொழுந்து
  73. பூவின் தோற்ற நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • அரும்பு
  74. பூ விரியத் தொடங்கும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • போது
  75. அலர் என்றால் என்ன?
    • மலர் மலர்ந்த நிலை
  76. வீ எனப்படுவது யாது?
    • மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை
  77. செம்மல் என்றால் என்ன?
    • பூ வாடிய நிலை
  78. பூம்பிஞ்சு எனப்படுவது யாது?
    • பூவோடு கூடிய இளம்பிஞ்சு
  79. இளம் காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • பிஞ்சு
  80. வடு என்றால் என்ன?
    • மாம்பிஞ்சு
  81. மூசு என்றால் என்ன?
    • பலாப்பிஞ்சு
  82. கவ்வை என்றால் என்ன?
    • எள் பிஞ்சு
  83. குரும்பை என்றால் என்ன?
    • தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
  84. முட்டுக் குரும்பை என்றால் என்ன?
    • சிறு குரும்பை
  85. முற்றாத தேங்காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • இளம் தேங்காய்
  86. நுழாய் என்றால் என்ன?
    • இளம் பாக்கு
  87. கருக்கல் என்றால் என்ன?
    • இளம் நெல்
  88. கச்சல் எனப்படுவது யாது?
    • வாழைப்பிஞ்சு
  89. கொத்து எனப்படுவது யாது?
    • அவரை, துவரை முதலியவற்றின் குலை
  90. குலை எனப்படுவது யாது?
    • முந்திரி போன்றவற்றின் குலை
  91. தாறு எனப்படுவது யாது?
    • வாழைக்குலை
  92. கதிர் எனப்படுவது யாது?
    • கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் குலை
  93. அலகு அல்லது குரல் எனப்படுவது யாது?
    • நெல், தினை முதலியவற்றின் குலை
  94. சீப்பு எனப்படுவது யாது?
    • வாழைத்தாற்றின் பகுதி
  95. நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • சூம்பல்
  96. சிவியல் எனப்படுவது யாது?
    • சுருங்கிய பழம்
  97. சொத்தை எனப்படுவது யாது?
    • புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி
  98. வெம்பல் என்றால் என்ன?
    • சூட்டினால் பழுத்த பிஞ்சு
  99. அளியல் என்றால் என்ன?
    • குளுகுளுத்த பழம்
  100. அழுகல் என்றால் என்ன?
    • குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்
  101. சொண்டு என்றால் என்ன?
    • பதராய்ப் போன மிளகாய்
  102. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    1. தேரைக்காய்
    2. அல்லிக்காய்
  103. தென்னையில் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • ஒல்லிக்காய்
  104. மிக மெல்லிய தோல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • தொலி
  105. திண்ணமான தோல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • தோல்
  106. வன்மையான தோல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • தோடு
  107. மிக வன்மையான தோல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • ஓடு
  108. சுரையின் ஓடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • குடுக்கை
  109. மட்டை எனப்படுவது யாது?
    • தேங்காய் நெற்றின் மேற்பகுதி
  110. உமி எனப்படுவது யாது?
    • நெல், கம்பு முதலியவற்றின் மூடி
  111. கொம்மை எனப்படுவது யாது?
    • வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
  112. கூலம் எனப்படுவது யாது?
    • நெல், கம்பு முதலியவற்றின் தானியங்கள்
  113. பயறு எனப்படுவது யாது?
    • அவரை, உளுந்து முதலியவற்றின் தானியங்கள்
  114. விதை எனப்படுவது யாது?
    • கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து
  115. காழ் எனப்படுவது யாது?
    • புளி, காஞ்சிரை முதலியவற்றின் வித்து
  116. வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • முத்து
  117. மா, பனை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • கொட்டை
  118. முதிரை எனப்படுவது யாது?
    • அவரை, துவரை முதலியவற்றின் வித்துக்கள்
  119. அவரை வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    1. பயறு
    2. முதிரை
  120. நாற்று என்றால் என்ன?
    • நெல், கத்தரி முதலியவற்றின் இளம் பருவம்
  121. மா, புளி, வாழை முதலியவற்றின் இளம் பருவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • கன்று
  122. வாழையின் இளம் பருவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    1. கன்று
    2. குருத்து
  123. தென்னையின் இளம் பருவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • பிள்ளை
  124. குட்டி எனப்படுவது யாது?
    • விளாவின் இளம் பருவம்
  125. பனையின் இளம் பருவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    1. வடலி
    2. மடலி
  126. பைங்கூழ் எனப்படுவது யாது?
    • நெல், சோளம் முதலியவற்றின் பசும்பயிர்
  127. நெல்லின் இளம் பருவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    1. நாற்று
    2. பைங்கூழ்
  128. மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
    • தேவநேயப் பாவாணர்
  129. தமிழ்ச் சொல் வளம் என்னும் கட்டுரை எதில் இடம்பெற்றுள்ளது?
    • சொல்லாய்வுக் கட்டுரைகள் என்னும் நூலில்...
  130. தமிழ்ச் சொல்லாராய்ச்சில் உச்சம் தொட்டவர் யார்?
    • தேவநேயப் பாவாணர்
  131. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் யார்?
    • தேவநேயப் பாவாணர்
  132. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியவர் யார்?
    • தேவநேயப் பாவாணர்
  133. தேவநேயப் பாவாணர் குறிப்பு வரைக
    1. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
    2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியாற்றியவர்
    3. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்
  134. முதல் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது? எப்போது மொழிபெயர்க்கப்பட்டது?எங்கு மொழிபெயர்க்கப்பட்டது?
    1. கார்டிலா
    2. 1554
    3. போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிசுபன்
  135. தரிசு என்றால் என்ன?
    • வேளாண் பயன்பாட்டிற்கு உதவாத நிலம்
  136. கரிசல் என்றால் என்ன?
    • கரிசல் மண்ணால் ஆன நிலம்
  137. சிவல் என்றால் என்ன?
    • செம்மண்ணால் ஆன நிலம்
  138. முரம்பு என்றால் என்ன?
    • பருக்கைக் கற்கள் நிறைந்த மேட்டு நிலம்
  139. புறம்போக்கு என்றால் என்ன?
    • ஊருக்குப் புறம்போக்காக அமைந்த வேளாண் பயன்பாடற்ற நிலம்
  140. சுவல் என்றால் என்ன?
    • உயர்ந்த மேட்டு நிலம்
  141. அவல் என்றால் என்ன?
    • அகன்ற பள்ளமான நிலம்
    • குளம்
    • வேளாண் நிலம்
  142. சொல்லுதல் என்னும் பொருள் தரும் பலசொற்களைப் பட்டியலிடுக
    1. பேசுதல்
    2. விளம்புதல்
    3. செப்புதல்
    4. உரைத்தல்
    5. கூறல்
    6. இயம்பல்
    7. மொழிதல்
  143. அடி வகைச் சொற்கள் எத்தனை?
    • 8
  144. கிளைப் பிரிவுகள் எத்தனை?
    • 7
  145. இலை வகை எத்தனை? காய்ந்த இலை வகை எத்தனை?
    1. 4
    2. 2
  146. காய்ந்த அடி மற்றும் கிளை வகை எத்தனை?
    • 4
  147. கொழுந்து வகை எத்தனை?
    • 4
  148. பூவின் நிலைகள் எத்தனை?
    • 5
  149. பிஞ்சு வகைகள் எத்தனை?
    • 11
  150. குலை வகை எத்தனை?
    • 6
  151. கெட்டுப்போன காய் கனி வகை எத்தனை?
    • 11
  152. பழத் தோல் வகை எத்தனை?
    • 8
  153. மணிவகை எத்தனை?
    • 9
  154. இளம் பயிர் வகை எத்தனை?
    • 7
  155. சம்பாவில் காணப்படும் உள்வகைகள் எத்தனை? 60