Saturday, October 15, 2022
Tuesday, July 26, 2022
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
எந்த காட்சி கொடுக்கப்பட்டாலும் இந்த ஒரே கவிதை போதும்.
கண்ணில் தோன்றும் இக்காட்சி-மனக்
கண்ணில் நீளுது அதன்நீட்சி !
என்னைக் கவர்ந்த இக்காட்சி -என்னை
என்னவோ செய்யுது ஆட்சி !
எண்ணங்கள் பலவாய் விரியுது-என்றன்
எழுத்துகள் கவியாய் மலருது !
உண்மையை உள்ளம் உணருது-உள்ளம்
உரக்கச் சொல்லத் துடிக்குது !!
Tuesday, July 19, 2022
முதல் இடைப் பருவ மாதிரித் தேர்வு ஜூலை 2022
முதல் இடைப் பருவ மாதிரித் தேர்வு
ஜூலை 2022
மொத்த மதிப்பெண்கள் 50. நேரம்: 1மணி 30நிமிடங்கள்
பகுதி 1
சரியான விடையைத் தேர்வு செய்க. 6×1=6
- 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'. இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே_______
- பாடிய கேட்டவர்
- பாடல் பாடிய
- கேட்டவர் பாடிய
- பாடல் கேட்டவர்
- காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது_____
- இலையும் சருகும்
- தோகையும் சண்டும்
- தாளும் ஓலையும்
- சருகும் சண்டும்
- செய்தி 1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலக காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம். செய்தி 2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே. செய்தி 3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.
- செய்தி 2 மட்டும் சரி
- செய்தி 1,2 ஆகியன சரி
- செய்தி 3 மட்டும் சரி
- செய்தி 1,3 ஆகியன சரி
- உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்-பாரதியாரின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?
- உருவகம், எதுகை
- மோனை, எதுகை
- முரண், இயைபு
- உவமை, எதுகை
- காசிக் காண்டம் என்பது______
- காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
- காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
- காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
- காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்.
- விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை_______
- நிலத்திற்கேற்ற விருந்து
- இன்மையிலும் விருந்து
- அல்லிலும் விருந்து
- உற்றாரின் விருந்து
பொருத்துக 4×1=4
- கொண்டல் -மேற்கு
- கோடை- தெற்கு
- வாடை -கிழக்கு
- தென்றல் -வடக்கு
- 'இறடிப்பொம்மல் பெறுகுவீர்'-இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக
- கலைச்செல் தருக. Tornado, Homograph
- இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக. மலை -மாலை, வளி-வாளி
- சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க. இன்சொல், முத்துப்பல்
- 'வேங்கை' என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
- நச்சப்படாதவன் செல்வம் இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
- உண்பதூஉம் உடுப்பதூஉம் காணின் பிறர் மேல் வடுக்காண் வற்றாகும் கீழ் -இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
- தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக. (அல்லது) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
- புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர். திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்து அளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது. இப்படியாகக் காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக. (அல்லது) உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால் ....உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
- தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். -இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக. (அல்லது) அறிந்தது அறியாதது புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக
- வேலொடு நின்றான் இடு என்றது போலும் கோலொடு நின்றான் இரவு-. குறளில் பயின்று வரும் அணியை விளக்குக. (அல்லது) நயம் பாராட்டுக. "கத்துக்கடல் சூழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரிசி வரும். குத்தி உலையிலிட ஊரடங்கும். ஒரு அகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்."-காளமேகப் புலவர்.
- உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக. (அல்லது) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
- தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக. (அல்லது) சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
- 'முயற்சி' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
- 'சிறுதாம்பு' எனத் தொடங்கும் முல்லைப்பாட்டுப் பாடலை எழுதுக.
Sunday, May 15, 2022
பொதுத்தமிழ் பதினோராம் வகுப்பு
- யுகத்தின் பாடல் எழுதியவர் வில்வரத்தினம்
- வில்வரத்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள புங்குடு தீவில் பிறந்தவர்
- வில்வரத்தினம் எழுதிய கவிதைகளின் தொகுப்பு உயிர்த்தெழும் காலத்துக்காக
- உயிர்த்தெழும் காலத்துக்காக தொகுக்கப்பட்ட ஆண்டு 2001
- தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை என்றவர் ரசூல் கம்சதேவ்
- கலைகளின் உச்சம் கவிதை
- இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றவர் மகாகவி பாரதி
- மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களை தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன என்றவர் எர்னஸ்ட் காசிரர்
- கவிதைகளை எதிரில் இருக்கும் வாசகன் உடன் பேசுவதுபோல் அமைப்பது நேரடி மொழி
- நேரடி மொழி ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்றவர் மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா
- குறியீட்டுக் கவிதை என்பது பொருள்களை பதிவு செய்வதன்று. நினைவு கூரத்தக்க தருணங்களை பதிவு செய்வதாகும்.
- குறியீடுகளின் கூட்டம் ஒரு முனையிலும் கவிதையின் பேச்சு மொழி மறுமுனையில் இருக்கையில் இடையில் இருக்கும் வெளியில் புழங்குகிறது-இது மல்லார்மே போன்ற கவிஞர்கள் உத்தி.
- இறுக்கி சுற்றப்பட்ட கம்பிகளை போன்று அல்லாமல் பேச்சு மொழிக்கு உரிய தளர்வுடன் கட்டப்பட்ட கவிதைகள் -வால்ட் விட்மன் போன்ற கவிஞர்களின் உத்தி.
- புல்லின் இதழ்கள் என்ற நூல் எழுதியவர் வால்ட் விட்மன்
- வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் இதழாளர் கட்டுரையாளர்
- மல்லார்மே பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்
- மல்லார்மே அவரைப் புரிந்து கொள்வதன் மூலம் குறியீட்டியத்தையும் புரிந்துகொள்ள முடியும்
- வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையைப் பற்றி பேசும் கவிதை பாப்லோ நெரூடா
- பாப்லோ நெருடா சிலி நாட்டில் பிறந்தவர்
- பாப்லோ நெருடா நோபல் பரிசு பெற்ற ஆண்டு 1971
- கவிதை என்பது ஒரு பொருள் அன்று
- கவிதை மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்து விடுவதற்காக முயலும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு.
- பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம் என்ற நூலின் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகடாமி விருது பெற்றவர் இந்திரன்
- இந்திரனின் இயற்பெயர் ராஜேந்திரன்
- இந்திரன் சாகித்ய அகடமி விருது பெற்ற ஆண்டு 2011.
- முப்பட்டை நகரம் எழுதியவர் இந்திரன்
- சாம்பல் வார்த்தைகள் எழுதியவர் இந்திரன்
- தமிழ் அழகியல் எழுதியவர் இந்திரன்
- நவீன ஓவியம் எழுதியவர் இந்திரன்
- வெளிச்சம் இதழை நடத்தியவர் இந்திரன்
- நுண்கலை இதழை நடத்தியவர் இந்திரன்
- பாயிரத்துக்கு உரிய 7 பெயர்கள் முகவுரை பதிகம் அணிந்துரை புனைந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை
- முகவுரை என்பது நூலுக்கு முன் சொல்லப்படுவது
- பதிகம் என்பது ஐந்து பொதுவும் பதினோரு சிறப்பும் ஆகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்து சொல்வது
- அணிந்துரை புனைந்துரை என்பவை நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்து சொல்வது
- நூல்முகம் என்பது நூலுக்கு முகம் போல முற்பட்டு இருப்பது
- புறவுரை என்பது நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே செல்வது
- தந்துரை என்பது நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை தந்து சொல்வது
- பாயிரம் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் என இரண்டு வகைப்படும்
- நூலின் இயல்பு ஆசிரியரின் இயல்பு கற்பிக்கும் முறை மாணவரின் இயல்பு கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்
- சிறப்புப்பாயிரம் 8 செய்திகளை தெரிவிப்பது
- நன்னூல் எழுதப்பட்ட ஆண்டு கிபி 13ம் நூற்றாண்டு
- நன்னூலின் எழுத்ததிகாரம் ஐந்து பகுதிகளாகவும் சொல்லதிகாரம் ஐந்து பகுதிகளாகவும் அமைந்துள்ளன
- சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூல் இயற்றினார் எனப் பாயிரம் குறிப்பிடுகிறது.
- பவணந்தியாரின் சிற்பம் உள்ள இடம் ஈரோடு மாவட்டம் மேட்டுப்புதூர் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திர பிரபாவின் கோவிலில்.
- வடக்குவீதி என்னும் நூலை எழுதியவர் முத்துலிங்கம்
- வம்சவிருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவர் முத்துலிங்கம்
- அக்கா என்ற சிறுகதைத் தொகுப்பு எழுதியவர் முத்துலிங்கம்
- மகாராஜாவின் ரயில் வண்டி என்ற சிறுகதைத் தொகுப்பு எழுதியவர் முத்துலிங்கம்
- திகட சக்கரம் என்ற சிறுகதைத் தொகுப்பு எழுதியவர் முத்துலிங்கம்
பொதுத்தமிழ்
- சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் என்று பாடியவர் சச்சிதானந்தன்
- கனிச்சாறு பாடியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய இதழ்கள் தென்மொழி தமிழ்ச்சிட்டு
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம்
- உலகியல் நூறு என்னும் நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- பாவியக் கொத்து என்னும் நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- நூறாசிரியம் எனும் நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- எண்சுவை எண்பது என்ற நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- மகபுகுவஞ்சி என்னும் நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- பள்ளிப்பறவைகள் என்னும் நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர் தமிழ்த்திரு ரா இளங்குமரனார்
- இமைகளை மூடியபடியே எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர் இளங்குமரனார்
- தமிழ்வழி திருமணங்களை நடத்தி வருபவர் இளங்குமரனார்
- திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் திருச்சிக்கு அருகிலுள்ள அல்லூர்
- சொல் ஆராய்ச்சியில் பாவாணர் வியந்த பெருமகனார் இளங்குமரனார்
- இலக்கண வரலாறு என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
- தமிழிசை இயக்கம் என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
- தனித்தமிழ் இயக்கம் என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
- பாவாணர் வரலாறு என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
- குண்டலகேசி உரை என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
- யாப்பருங்கலம் உரை என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
- புறத்திரட்டு உரை நூலை எழுதியவர் இளங்குமரனார்
- திருக்குறள் தமிழ் மரபுரை எழுதியவர் இளங்குமரனார்
- காக்கைபாடினியம் உரை எழுதியவர் இளங்குமரனார்
- தேவநேயம் என்னும் நூலை எழுதியவர் இளங்குமரனார்
- உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு மலேசியா
- மொழி ஞாயிறு எனப்படுபவர் தேவநேயப்பவாணர்
- செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் தேவநேயப்பவாணர்
- உலகத் தமிழ் கழகத்தை நிறுவியவர் தேவநேயப் பாவாணர்
- கடல் கடந்து அச்சேறிய முதல் இந்திய மொழி தமிழ்
- கடல் கடந்து அச்சேறிய முதல் தமிழ் நூல் கார்டிலா
- கார்டிலா அச்சேறிய ஆண்டு 1554
- கார்டிலா எந்த நாட்டில் மொழிபெயர்க்கப்பட்டது? போர்ச்சுக்கல்
- சந்தக்கவிமணி தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்
- முதல் தமிழ் கணினி வெளிவந்த நாள் 1983 செப்டம்பர்
- முதல் தமிழ் கணினியின் பெயர் திருவள்ளுவர்
- உவமையும் பொருளும் வேற்றுமை அறிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகம் ஆகும் என்று எழுதியவர் தண்டி
- குறிஞ்சி மலர் எழுதியவர் நா பார்த்தசாரதி
- எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துவது இணை ஒப்பு
- மழையும் புயலும் எழுதியவர் ராமசாமி
- தமிழ்தென்றல் எனப்படுபவர் thiru.vi.ka
- சொல்லின் செல்வர் ரா பி சேதுப்பிள்ளை
- உண்மையில் முரண்படாத மெய்மைகளைச் செல்வது முரண்படு மெய்மை
- எதிரும் புதிரும் முரண்படும் கருத்துகளை சொல்வது எதிரிணை இசைவு
- புதிய உரைநடை என்னும் நூலை எழுதியவர் எழில்முதல்வன்
- எழில் முதல்வனின் இயற்பெயர் இராமலிங்கம்
- எழில் முதல்வன் எழுதி சாகித்திய அகடமி விருது பெற்ற நூல் புதிய உரைநடை
- தென்னவன் சிறுமலை எங்கு உள்ளது? திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை
- மரமது மரத்தில் ஏறி மரம் அதைத் தோளில் வைத்து என்னும் கவிதை பாடியவர் சுந்தர கவிராயர்
- தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம் எனும் பாடலை பாடியவர் கவிமணி தேசிய விநாயகம்
- தேனினும் இனிய நற் செந்தமிழ் மொழியே என்று பாடியவர் நமச்சிவாயர்
- நாம் ஏன் தமிழ் கற்க வேண்டும் என்னும் நூலை எழுதியவர் முனைவர் சேதுமணி மணியன்
- தவறின்றித் தமிழ் எழுதுவோம் எனும் நூலை எழுதியவர் மா நன்னன்
- பச்சை நிழல் எனும் நூலை எழுதியவர் உதயசங்கர்.
- வாயுதாரணை என்னும் அதிகாரம் எழுதியவர் அவ்வையார்
- கிழக்கு என்பதன் பெயர் குணக்கு
- கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்
- மேற்கு என்பதன் பெயர் குடக்கு
- கிழக்கிலிருந்து வீசும் காற்று மழையைத் தரும்
- மேற்கிலிருந்து வீசும் காற்று வெப்பத்தை தரும்
- வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று
- தெற்கில் இருந்து வீசும் காற்று தென்றல் கற்று
- ஊதைக்காற்று எனப்படுவது வடக்கிலிருந்து வீசும் காற்று
- வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்று பாடும் இலக்கியம் சிலப்பதிகாரம்
- நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பில்-என்று பாடியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது பாடியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்று பாடும் நூல் புறநானூறு
- வளிதொழில் ஆண்ட உரவோன் கரிகாலச்சோழன்
- ஹிப்பாலஸ் என்பவர் கிரேக்க மாலுமி
- ஹிப்பாலஸ் அவர்களின் காலம் முதலாம் நூற்றாண்டு
- வளிதொழில் ஆண்டவன் கரிகாலன் என்று பாடியவர் வெண்ணிக் குயத்தியார்
- வளி மிகின் வலி இல்லை என்று பாடியவர் ஐயூர் முடவனார்
- காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை குறைவதாக அறிவித்துள்ள நிறுவனம் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
- உலக காற்று நாள் ஜூன் 15
- குளோரோ புளோரோ கார்பன் ஒரு மூலக்கூறு ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்துவிடும்
- மென் துகிலாய் உடல் வருடி வாஞ்சையுடன் மனம் வருடி- என்று பாடியவர் தேவகோட்டை மூர்த்தி
- தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் பாடல்கள் திருவெம்பாவை திருப்பாவை
- நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா பாரதியார்
- சிந்துக்கு தந்தை பாரதியார்
- எட்டயபுரத்து ஏந்தல் பாரதியார்
- பாரதியார் இந்தியா சுதேசமித்திரன் முதலிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர்
- முல்லைப்பாட்டு பாடியவர் நப்பூதனார்
- முல்லைப் பாட்டில் உள்ள பாடல் அடிகள் 103
- பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் முல்லைப்பாட்டு
- புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறை உருவான ஆண்டு 2000
- கஜா என்ற பெயரை தந்த நாடு இலங்கை
- பெய்ட்டி என்ற பெயர் தந்த நாடு தாய்லாந்து
- கொரியாலிஸ் விளைவை கண்டறிந்தவர் காஸ்பார்ட் குஸ்டாவ்
- கொரியாலிஸ் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1835
- ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை ஹவாய் தீவுகளை தாக்கும் புயல்கள் வலம்புரி புயல்கள்
- அமெரிக்காவை ஜப்பானை சீனாவை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள்
- வங்க கடலில் வீசும் புயல்கள் இடம்புரி புயல்கள்
- புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் புயலிலே ஒரு தோணி
- புயலிலே ஒரு தோணி என்னும் புதினம் எழுதியவர் சிங்காரம்
- சிங்காரம் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி
- பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற பாடல் வரிகள் இடம்பற்றுள்ள நூல் அகநானூறு
- அதோ அந்த பறவை போல என்ற நூலை எழுதியவர் முகமது அலி
- உலகின் மிகச்சிறிய தவளை என்ற நூலை எழுதியவர் எஸ் ராமகிருஷ்ணன்
- தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம்
- உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு
- உண்டால் அம்ம இவ்வுலகம் என்னும் பாடலை பாடியவர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் கம்பராமாயணம்
- விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மலர் போல என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் கலிங்கத்துப் பரணி
- அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் நற்றிணை
- ஏழடி நடந்து சென்று வழி அனுப்பும் செய்தி இடம் பெற்றுள்ள நூல் பொருநராற்றுப்படை
- குரல் உணங்கு விதை திணை உரல் வாய்ப்பெய்து என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு
- நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு
- விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து சமைத்து விருந்து படைத்தவர் இளையான்குடி மாறநாயனார்
- நெய்தல் நிலத்தை வருபவர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று பாடும் நூல் சிறுபாணாற்றுப்படை
- காலின் ஏடிப் பின்சென்று என்ற பாடும் நூல் பொருநராற்றுப்படை
- மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் என்று பாடியவர் அம்சப்ரியா
- பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ என்று பாடும் நூல் குறுந்தொகை
- மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று பாடும் நூல் கொன்றை வேந்தன்
- வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் என்று பாடியவர் அவ்வையார்
- வாழை இலை விருந்து விழா கொண்டாடப்படும் இடம் அமெரிக்காவின் மினசோட்டா
- இட்டதோர் தாமரைப் பூ இதழ் விரித்திருத்தல் போல என்று பாடியவர் பாரதிதாசன்
- காசிக்காண்டம் பாடியவர் அதிவீரராம பாண்டியர்
- அதிவீரராம பாண்டியர் கொற்கையின் அரசர்
- அதிவீரராம பாண்டியர் பாடிய மற்றொரு நூல் வெற்றிவேற்கை
- அதிவீரராம பாண்டியரின் வேறு பெயர் சீவல மாறன்
- நைடதம் பாடியவர் அதிவீரராம பாண்டியர்
- லிங்க புராணம் பாடியவர் அதிவீரராம பாண்டியர்
- திருக்கருவை அந்தாதி பாடியவர் அதிவீரராம பாண்டியர்
- வாயுசம்கிதை பாடியவர் அதிவீரராம பாண்டியர்
- கூர்ம புராணம் பாடியவர் அதிவீரராம பாண்டியர்
- ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி என்ற பாடல் இடம்பெறும் நூல் விவேக சிந்தாமணி
- மலைபடுகடாம் என்ற நூலின் வேறுபெயர் கூத்தர்ஆற்றுப்படை
- மலைபடுகடாம் நூலில் இடம்பெற்றுள்ள பாடலடிகள் 583
- மலைபடுகடாம் நன்னனை பற்றிப் பாடுகிறது
- மலைபடுகடாமைப் பாடியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
- கி ராஜநாராயணனுக்கு முன்பு எழுத தொடங்கியவர் அழகிரிசாமி
- கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் ராஜநாராயணன்
- கோபல்லபுரத்து மக்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு 1991
- கறங்கு இசை விழவின் உறந்தை என்று பாடும் நூல் அகநானூறு
- கி ராஜநாராயணனின் ஊர் கோவில்பட்டி இடைசெவல்
- சிறுவர் நாடோடிக் கதைகள் எழுதியவர் கி ராஜநாராயணன்
- ஆறாம்திணை எழுதியவர் மருத்துவர் கு சிவராமன்
- செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன் வெளியானஆண்டு 2016
- இலா ஒரு உரையாடு மென்பொருள்
- இலா பாரத் ஸ்டேட் வங்கியின் உரையாடும் மென்பொருள்
- பெப்பர் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்
- வித்துவக்கோட்டு இறைவன் உய்யவந்த பெருமாள்
- வித்துவக்கோடு கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது
- பெருமாள் திருமொழி பாடியவர் குலசேகர ஆழ்வார்
- பெருமாள் திருமொழியில் 150 பாடல்கள் உள்ளன
- பெருமாள் திருமொழியில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதல் ஆயிரத்தில் உள்ளது
- குலசேகர ஆழ்வாரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு
- பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது
- அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்று பாடியவர் மாணிக்கவாசகர்
- பரிபாடலில் 70 பாடல்கள் உள்ளன
- பரிபாடலில் 24 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன
- பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் நிறுவப்பட்ட ஆண்டு 1988
- பெரியர் அறிவியல் தொழில்நுட்ப கழக கோளரங்கத்தில் 360 பாகை அரைவட்ட வானத்திரை அமைக்கப்பட்ட ஆண்டு 2009
- தற்காலத்தின் ஐன்ஸ்டைன் ஸ்டீபன் ஹாக்கிங்
- ஸ்டீபன் ஹாக்கிங் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க வேண்டியதில்லை என்றார்
- கருந்துளை கோட்பாட்டை உருவாக்கியவர் ஜான் வீலர்
- உல்ஃப் விருது பெற்றவர் ஸ்டீபன் ஹாக்கிங்
- காப்ளி பதக்கம் பெற்றவர் ஸ்டீபன் ஹாக்கிங்
- கலிலியோவின் நினைவுநாளில் பிறந்து ஐன்ஸ்டைனின் பிறந்தநாளில் இறந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்
- தலைவிதியை நம்புபவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்றவர் ஸ்டீபன் ஹாக்கிங்
- 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா நாயகர் ஸ்டீபன் ஹாக்கிங்
- 60வது பிறந்தநாளை போயிங் 727 விமானத்தில் கொண்டாடியவர் ஸ்டீபன் ஹாக்கிங்
- காலத்தின் சுருக்கமான வரலாறு 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது
- காலத்தின் சுருக்கமான வரலாறு வெளிவந்த ஆண்டு 1988
- அறிவை விட மிக முக்கியமானது கற்பனைத்திறன் என்றவர் ஐன்ஸ்டைன்
- கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமா வியல் நகர் கருவூர் முன்துறை என்ற பாடல் இடம்பெறும் நூல் அகநானூறு
- பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் எழுதியவர் நீலமணி
- அன்றாட வாழ்வில் அறிவியல் எனும் நூலை எழுதியவர் தமிழ்ச்செல்வன்
- உன் மொழியில் உணர்த்தப்பட்டதை வேறு ஒரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் மணவை முஸ்தபா
- உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிறகும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் என்றவர் ஜகந்நாதராஜா
- சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்ததற்கான சான்று சின்னமனூர்ச் செப்பேடு
- மொழிபெயர்த்தல் என்ற தொடர் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது
- மொகு சாஸ்ட்டு என்ற தொடரின் பொருள் விடை தர அவகாசம் வேண்டும்
- வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதியவர் ராகுல் சாங்கிருத்தியாயன்
- வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டு 1942
- வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்த ஆண்டு 1949
- வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை டாக்டர் என் ஸ்ரீதர் மொழிபெயர்த்த ஆண்டு 2016
- முத்து மீனாட்சி வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை 2016 ஆண்டு மொழிபெயர்த்தார்
- 2018 ஆம் ஆண்டு வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை மொழி பெயர்த்தவர் யூமா வாசுகி
- காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகள் எல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ வேண்டும் என்று குறிப்பிடுபவர் குலோத்துங்கன்
- மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் ஓலைச்சுவடி இருக்கும் இடம் பிரான்சு தேசிய நூற்கூடம்
- செய்கு தம்பி பாவலர் சதாவதானி பட்டம் பெற்ற இடம் சென்னை விக்டோரியா அரங்கம்
- செய்குத்தம்பி பாவலர் சதாவதானி பட்டம் பெற்ற நாள் 1907 மார்ச் 10
- செய்கு தம்பிப் பாவலரின் ஊர் கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி
- திருவிளையாடல் புராணத்தில் 3 காண்டங்கள் 64 படலங்கள் உடையது
- பரஞ்சோதி முனிவரின் காலம் கிபி பதினேழாம் நூற்றாண்டு
- பரஞ்சோதி முனிவர் வேதாரண்ய புராணம் பாடியுள்ளார்
- திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா பாடியவர் பரஞ்சோதி முனிவர்
- மதுரை பதிற்றுப்பத்தந்தாதி பாடியவர் பரஞ்சோதி முனிவர்
- மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- உனக்குப் படிக்கத் தெரியாது என்ற நூலைப் படைத்தவர் கமலாலயன்
- கமலாலயனின் இயற்பெயர் குணசேகரன்
- கொற்கைக் கோமான் கொற்கை அம் பெருந்துறை என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு
- ஒடுக்கப்பட்ட கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக இருந்த அமெரிக்க கருப்பின பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்
- சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று என்ற நூலை எழுதியவர் வல்லிக்கண்ணன்
- குட்டி இளவரசன் என்ற நூலை எழுதியவர் ஸ்ரீராம்
- ஆசிரியரின் டைரி என்ற நூலை எழுதியவர் அகிலா
- தேவர் ஆட்டத்தில் 13 கலைஞர்கள் ஆடுவர்
- தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளம் ஆக்கியவர் முத்துச்சாமி
- கலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் முத்துசாமி
- நாடகக் கலையை மீட்டெடுப்பது தமது குறிக்கோள் என்றவர் முத்துசாமி
- ராஜ சோழன் தெரு உள்ள ஊர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர்
- கவிஞர் உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்
- நட்சத்திரங்களின் நடுவே என்ற நூலை எழுதியவர் உமா மகேஸ்வரி
- வெறும் பொழுது என்ற நூலை எழுதியவர் உமா மகேஸ்வரி
- கற்பாவை என்ற கவிதை நூலை எழுதியவர் உமா மகேஸ்வரி
- குமரகுருபரரின் காலம் கிபி பதினேழாம் நூற்றாண்டு
- கந்தர் கலிவெண்பா பாடியவர் குமரகுருபரர்
- மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் பாடியவர் குமரகுருபரர்
- மதுரைக் கலம்பகம் பாடியவர் குமரகுருபரர்
- சகலகலாவல்லிமாலை பாடியவர் குமரகுருபரர்
- நீதிநெறி விளக்கம் பாடியவர் குமரகுருபரர்
- திருவாரூர் மும்மணிக்கோவை பாடியவர் குமரகுருபரர்
- தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் கந்தசாமி
- சாயாவனம் எழுதியவர் கந்தசாமி
- விசாரணைக் கமிஷன் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கந்தசாமி
- சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருது வென்றவர் கந்தசாமி
- தொலைந்து போனவர்கள் எழுதியவர் கந்தசாமி
- சூரியவம்சம் எழுதியவர் கந்தசாமி
- சாந்தகுமாரி எழுதியவர் கந்தசாமி
- ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம்
- சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் என்று பாடியவர் மகாகவி
- திருக்குறள் நீதி இலக்கியம் பாடியவர் திருநாவுக்கரசு
- நாட்டார் கலைகள் எழுதியவர் பெருமாள்
- ம பொ சி பிறந்த ஆண்டு 1906
- படாஸ்கர் ஆணையம் திருத்தணி வரை உள்ள நிலத்தை மீட்டது
- பணிக்கர் ஆணையம் சித்தூரை ஆந்திராவுக்கு வழங்கியது
- வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு சாகித்திய அகாடெமி விருதை வென்ற ஆண்டு 1966
- கு ப ராஜகோபாலன் பிறந்த ஊர் கும்பகோணம்
- அகலிகை என்ற நூலை எழுதியவர் குப ராஜகோபாலன்
- ஆத்ம சிந்தனை என்ற நூலை எழுதியவர் கூபா ராஜகோபாலன்
Wednesday, April 27, 2022
மெல்லக் கற்போருக்கான நெடுவினாக்கள்
தமிழின் சொல்வளம்பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.
- தமிழ் சொல் வளம் உடையது.
- அடி வகையில் மட்டும் தாள், தண்டு, கோல், தூறு, தட்டை, கழி, கழை, அடி என்ற சொற்கள் உள்ளன.
- இதேபோன்று கிளைப்பிரிவுகள், இலை வகைகள், கொழுந்து வகைகள், பூவின் நிலைகள், பிஞ்சு வகைகள், குலை வகைகள், கெட்டுப்போன காய்கனி வகைகள், மணி வகை, இளம் பயிர் வகை என்று ஏராளமான தமிழ்ச் சொற்கள் உள்ளன.
- தமிழ் மொழி வளர்ந்து வரும் மொழியாகும்.
- புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில் காலப்போக்கில் தமிழ் மொழி வழக்கொழிந்து விடும்.
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை 'கோபல்லபுரத்து மக்கள்' கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
- அன்னமய்யா சன்னியாசி ஒருவன் தடுமாறி வருவதைக் கவனிக்கிறான்.
- அவன் அருகில் சென்று நீ யார் எனக் கேட்கிறான். அவன் குடிக்கத் தண்ணீர் கேட்டதும் அவனை அழைத்து வருகிறான்.
- அவனுக்கு நீச்சுத் தண்ணியைக் கலயத்தில் ஊற்றிக் கொடுக்கிறான். சன்னியாசி அதை வாங்கிக் குடித்துவிட்டுத் தூங்கி விடுகிறான்.
- அன்னமய்யா அவனை, "ஒரு தாய் குழந்தையைப் பார்ப்பது போல" பார்க்கிறான்.
- கண் விழித்த சன்னியாசி "உனது பெயர் என்ன?" என்று கேட்கிறான். அன்னமிட்டவனின் பெயர் 'அன்னமய்யா' என்பதை அறிந்து பெயர்ப் பொருத்தத்தை எண்ணி வியக்கிறான்.
'சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்' என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக. அன்பும் பண்பும் குணச்சித்திரம் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்கடை போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் சான்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் கவி காட்டுகிறது. தண்டலை மயில்கள் ஆட....
- கல்வியில் உயர் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபடும் என்பார்கள்.
- மேகங்கள் மத்தளம் வாசிக்க,
- மயில்கள் ஆட,
- வண்டுகள் பாட,
- தாமரை மலர்கள் விளக்குகள் ஏந்த,
- குவளை மலர்கள் கண்விழித்துப் பார்க்க,
- இக்காட்சியை அங்குள்ள நீர்நிலைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
- இராமனுடன் இலக்குவன் மற்றும் சீதை நடந்து செல்கின்றனர்.
- இராமனின் மேனியிலிருந்து வரும் ஒளியில் கதிரவனின் ஒளி மங்குகிறது.
- அவனை "மை, மரகதம், மறிகடல், மழைமுகில்" என்றெல்லாம் பாராட்டி இறுதியில் "ஐயோ! இவன் வடிவு என்பது அழியா அழகு!" என்று நிறைவு செய்கிறார் கம்பர்.
பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலில் நயத்தை விளக்குக.
- ஒன்றின் இருப்பால் மற்றொன்று இல்லை என்னும் படியாக, மெய்கீர்த்திப் பாடல் பின்வரும் கருத்துக்களை விளக்குகிறது.
- யானைகள் மட்டுமே பிணிக்கப்படுகின்றன. மக்கள் பிணிக்கப்படுவதில்லை.
- கால்சிலம்புகளே புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை.
- ஓடைகள் மட்டுமே கலங்குகின்றன. மக்கள் கலங்குவதில்லை.
- ஆற்றுநீரே அடைக்கப்படுகின்றது. மக்கள் சிறையில் அடைக்கப் படுவதில்லை.
- மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன. மக்கள் வடுப்படுவதில்லை.
- மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன. மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது இல்லை.
- காடுகள் மட்டுமே கொடிகளை உடையனவாய் உள்ளன. மக்களில் கொடியவர் எவரும் இல்லை.
- வண்டுகள் மட்டுமே கள் உண்கின்றன. மக்கள் கள் உண்பதில்லை.
- மலை மூங்கில்களில் மட்டுமே வெறுமை உள்ளது. மக்களிடம் வறுமை இல்லை.
- வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன. நாட்டில் போர் இல்லை.
- மலைகளில் மட்டுமே இருள் சூழ்ந்து இருக்கின்றது. மக்களிடம் வெறுமை இல்லை.
- இளம் மான்களின் கண்கள் மட்டுமே மருள்கின்றன. மக்கள் மருள்வதில்லை.
- குளத்து மீன்கள் மட்டுமே பிறழ்ந்து செல்கின்றன. மக்கள் நெறிதவறி நடப்பதில்லை.
- செவிலித்தாயரே சினம் காட்டுவர். வேறு யாரும் சினம் கொள்வதில்லை.
- புலவர் பாட்டில் மட்டுமே பொருள் மறைந்து இருக்கும். மக்கள் யாரும் பொருளை மறைத்து வைப்பதில்லை.
- இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப் பாடுவர். தேவையற்று வேறு யாரும் ஆடிப் பாடுவதில்லை. இராசராசன் நாட்டின் இயல்பு இது.
குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
நாடகம்:மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
மொழியை ஆள்வோம் அனைத்து இயல்களும்
மொழியை ஆள்வோம்
சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
திருத்தம்:
"தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவைதேறும் சிலப்பதி காரமதைஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்ஓதி யுணர்ந்தின் புறுவோமே"
கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்
ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்
நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்
பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறுசொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.
ஞாலத்தில் வாழும் மாந்தர்களில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
வள்ளல் குமணன் இன்மையால் வாடிவந்த பாவலனுக்குத் தனது தலையை அளித்து மங்கா இசை பெற்றான்
நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போலக் மகிழ்ச்சி கொண்டனர்.
பூங்காவில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனுண்டன
ஆ போல் அமைதியும் வேங்கைபோல் வலிமையும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்
மொழியை ஆள்வோம்! இயல் 2
சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க
தொடர்: எழுகதிரைத் தொழுதெழ இன்பங்கூடுமடி பாப்பா!
கீரியும் பாம்பும் சண்டையிட்டுக் கொண்டன.
தொடர்: பூப்போன்ற குழலை உடைய பெண் வந்தாள்
தொடர்: மலையின்கண் வாழும் மலைவாழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினர்.
தொடர்: முருகப்பெருமானின் முத்துப்பல் ஒளி வீசியது.
செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுது
விடை: மலரும், மலருக்குப் பெயரும் உண்டு
விடை: காய் தோன்றிக் கனியாகி….
- பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.
- கள்ளிப்பூ இறைவழிபாட்டிற்கு உரியது.
குறிப்புப் பெயரெச்சம்
மொழியை ஆள்வோம் இயல் 4
வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக
திருத்தம்
- காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா?
- எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடியிருக்கும். மற்ற(ப்)படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது(க்) கேட்கும்.
- பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி(ப்) பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு(க்) குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே(க்) கூறலாம்.
அடைப்புக் குறிக்குள் உள்ளவற்றை நீக்க வேண்டும். புரிதலுக்காக அடைப்புக் குறிக்குள் நீக்கப்பட வேண்டிய எழுத்துக்கள் தனியாகக் காட்டப்பட்டுள்ள
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க
பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன
கோடு போட உன்னுடைய அளவுகோலைக் கொடு.
பூமிக்கோள் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏற்ற சூழலைக் கொண்டிருக்கின்றது
சீறும் பாம்பைக் கண்டதும் சிறுவன் நடுங்கினான்.
அவர்கள் தாமே செய்ய வேண்டிய செயல்களைக் கூட என்னிடம்தான் ஒப்படைத்தார்கள்.
விதியை நொந்து வீதியில் அலையாதே!
பத்தியைப் படித்துப் பதில் தருக.
பழமொழிகளை நிறைவு செய்க
பத்தியைப் படித்துக் கருத்தை சுருக்கி எழுதுக
பழைய சோறு
சுருங்கிய வடிவம்
மொழியை ஆள்வோம் இயல் 5
அட்டவணையில் விடுபட்டதை எழுதுக
- எழுவாய்த் தொடர்- அருணா ஓடினாள்
- பெயரெச்சத் தொடர்- ஓடிய அருணா
- வினையெச்சத் தொடர்- ஓடி வந்தாள்
- விளித்தொடர்- அருணா ஓடாதே
- வேற்றுமைத் தொடர்- அருணாவிற்காக ஓடினாள்
- எழுவாய்த் தொடர்- அம்மா சொன்னார்
- பெயரெச்சத் தொடர்- சொன்ன அம்ம
- வினையெச்சத் தொடர்- சொல்லிச் சென்றார்.
- விளித்தொடர்- அம்மா, சொல்!
- வேற்றுமைத் தொடர்- கதையைச் சொன்னார்
- எழுவாய்த் தொடர்- அரசர் தந்தார்
- பெயரெச்சத் தொடர்- அந்த அரசர்
- வினையெச்சத் தொடர்- தந்து சென்றார்
- விளித் தொடர்- அரசே தருக!
- வேற்றுமைத் தொடர்- பரிசைத் தந்தார்
- எழுவாய்த் தொடர்- துளிர் பார்த்தாள்
- பெயரெச்சத் தொடர்– பார்த்த துளிர்
- வினையெச்சத் தொடர்– பார்த்துச் சிரித்தாள்
- விளித் தொடர்- துளிர் பார்!
- வேற்றுமைத் தொடர்– துளிருடன் பார்த்தேன்
- எழுவாய்த்தொடர்- குழந்தை வந்தது
- பெயரெச்சத் தொடர்- வந்த குழந்தை
- வினையெச்சத் தொடர்– தவழ்ந்து வந்தது
- விளித்தொடர்- குழந்தாய் வா!
- வேற்றுமைத் தொடர்- குழந்தைக்குத் தாலாட்டு
தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
நிழலையும் காய்கனிகளையும் ஒருங்கே தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்
நீண்ட நெடிய வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களை கற்றுத் தருகிறது.
என்றும் அழியாத கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
சுட்டித்தனம் செய்யும் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.
மொழியை ஆள்வோம்
தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக
(தொடர் சொற்றொடராக மாற்றுக)
இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தகங்களில் அடுக்கி, கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)
ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக் கொண்டனர். அவர்கள் காலில் சலங்கை அணிந்து கொண்டனர். அவர்கள் கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஆடுவர்.
(கலவைச் சொற்றொடராக மாற்றுக)
கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)
ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை சட்டென நின்றது. அதனால் அறையில் உள்ளவர்களின் பேச்சு தடைபட்டது.
பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக
நாட்டுப்புறப் பாடலுக்கேற்ற சூழலை எழுதுக.
பாடல்
பாடல் எழுந்த சூழல்
பாடல்
பாடல் எழுந்த சூழல்
மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க.
மொழியை ஆள்வோம்
பின்வரும் தொடர்களை கொண்டு பொருத்தமான தொடரமைக்க
- நம் நாட்டில் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது
- இந்தியர்களுக்கு தேசப்பற்று கொஞ்சம் அதிகம்.
- திருடன் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தான்.
- பிறர் செய்த தீங்கை மறக்க நினைக்கிறேன்.
தொகைச் சொற்களைப் பிரித்து எழுதித் தமிழ் எண்ணுரு தருக.
- மூவேந்தர்கள்=மூன்று+வேந்தர்கள் ங
- நாற்றிசை =நான்கு+திசை ச
- முத்தமிழ் =மூன்று+தமிழ் ங
- இருதிணை =இரண்டு+திணை உ
- முப்பால் =மூன்று+பால் ங
- ஐந்திணை =ஐந்து+திணை ரு
- நானிலம் =நான்கு+நிலம் ச
- அறுசுவை=ஆறு+சுவை சா
- பத்துப்பாட்டு =பத்து+பாட்டு க0
- எட்டுத்தொகை=எட்டு+தொகை அ
கவிதையை உரையாடலாக மாற்றுக
உரையாடல்
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக
- மனக்கோட்டை-தொண்டர் ஒருவர், தனக்குத் தலைவர் பதவி கிடைக்கும் என மனக்கோட்டை கட்டினார்
- கண்ணும் கருத்தும்-இளம் வயதிலேயே மாணவர்கள் கண்ணும் கருத்துமாய்ப் படித்தால் உயர்ந்த நிலையை அடையலாம்.
- அள்ளி இறைத்தல்-தலைவர் தேர்தலில் வென்ற மகிழ்ச்சியில், பணத்தை அள்ளி இறைத்தார்
- ஆறப்போடுதல்-முருகன் தனது இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்கும் பணியை இரண்டு நாட்களுக்கு ஆறப்போட்டான்