Thursday, September 10, 2020

எழுத்து, சொல்

சார்பெழுத்துகள்

  1. உயிர்மெய் 
  2. ஆய்தம் 
  3. உயிரளபெடை 
  4. ஒற்றளபெடை 
  5. குற்றியலுகரம் 
  6. குற்றியலிகரம் 
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஒளகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம் 
  10. ஆய்தக்குறுக்கம்

 உயிரளபெடை

செய்யுளில் ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் நீண்டு அளவெடுக்கும்.
அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் பின்னால் வரும்.
உயிரளபெடை மூன்று வகைப்படும்.

1. செய்யுளிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துகள் அளபெடுக்கும்.
இதனை இசைநிறை அளபெடை என்பர்
  1. ஓஒதல் வேண்டும்-மொழிக்கு முதலில்
  2. றாஅர்க்கு உறுநோய்-மொழிக்கு இடையில்
  3. நல்ல படாஅ பறை-மொழிக்கு இறுதியில்
(ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை 
ஆஅதும் என்னும் அவர்.
ஓஒதல்-ஒழித்து விடுதல்
ஆஅதும்-ஆக்கம்)

(உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் 
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
உறாஅர்க்கு-அன்பு இல்லாதவர்க்கு
செறாஅஅய்-தூர் வாருவாய்)

(அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.
காம்பினை கிள்ளி எறியாமல் அனிச்சப்பூவை
 அணிந்து விட்டாள். அதனால் அவள் இடை வருந்தும்.  பறை ஓசை அவளுக்கு இனிமையாக இருக்காது. அவ்வளது மென்மையானது அவளது இடை!)

2. இன்னிசை அளபடை

செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக குறில் நெடில் ஆகி நீண்டு ஒலிப்பது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே 
எடுப்பதூஉம் எல்லாம் மழை

3. சொல்லிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையும்போது அவ்வோசையை நிறைவிக்க உயிர்  எழுத்துக்கள் அளபெடுப்பது

செய்யுளில் ஒரு பெயர்ச்சொல், எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது

உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் 
வரனசைஇ இன்னும் உளேன்

(உரனசைஇ-வெற்றியை விரும்பி 
உள்ளம் துணை யாக-ஊக்கத்தை துணையாகக் கொண்டு

வரனசைஇ=வரல்+நசைஇ
உரனசைஇ=உரம்+நசைஇ)

நசை-விருப்பம்(பெயர்ச்சொல்)
நசைஇ-விரும்பி(எச்சச் சொல்)


ஒற்றளபெடை


செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய மெல்லின எழுத்துக்களும் ஆறும், இடையின எழுத்துக்களில் ர,ழ தவிர்த்து நான்கும் ஆயுத எழுத்து ஒன்று ம் ஆகிய 11 எழுத்துக்கள் அளபெடுக்கும்.

எடுத்துக்காட்டு
  • ங்ங்கிறைவன்
  • ஃஃகிலங்கிய கையராய் இன்னுயிர்

சொல்


எழுத்துகள் தனித்தோ, சேர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்

  • இருதிணை, ஐம்பால்களிலும் வரும்
  • மூவிடங்களிலும் வரும்
  • உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.
  • வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பொருள் தரும்.

மூவகை மொழி

  1. தனி மொழி 
  2. தொடர் மொழி 
  3. பொது மொழி 

1.தனி மொழி

ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும் .

எடுத்துக்காட்டு 

கண், படி -பகாப்பதம் 
கண்ணன், படித்தான் -பகுபதம்


தொடர்மொழி


இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி மொழிகள் சேர்ந்து பொருள் தருவது தொடர்மொழி எனப்படும்

எடுத்துக்காட்டு

கண்ணன் வந்தான்
முருகன் வீட்டுக்குச் சென்றான்


பொதுமொழி


ஒரு சொல் தனியாக வந்து ஒரு பொருளையும் அதே சொல் பிரிந்து நின்று வேறொரு பொருளையும் தந்து தனி மொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்

எடுத்துக்காட்டு

  • எட்டு- 8, எள்+து=எள்ளை உண்
  • வேங்கை-ஒரு வகை மரம், ஒரு வகைப் புலி, வேம்+கை=வேகின்ற கை

தொழிற்பெயர் 



ஒரு வினை அல்லது செயலை குறிக்கும் பெயரானது பால், எண், இடம், காலம் ஆகியவற்றை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் ஆகும்

எடுத்துக்காட்டு

நடத்தல், அடக்கம்

விகுதி பெற்ற தொழிற்பெயர்

வினையடி உடன் விகுதி சேர்ந்து வருவது.

எடுத்துக்காட்டு

நட+நல்=நடத்தல்
வாழ்+கை=வாழ்க்கை

ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்
நட+தல்=நடத்தல்
நட+ஐ=நடை
நட+அத்து+ஐ=நடத்தை

எதிர்மறைத் தொழிற்பெயர்
எதிர்மறைப் பொருளில் வருவது

எடுத்துக்காட்டு
நடவாமை, செல்லாமை


முதனிலைத் தொழிற்பெயர்

விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயர் ஆதல் முதல்நிலைத் தொழிற்பெயர் ஆகும்.

எடுததுக்காட்டு
படி, நடி

படி என்பது படித்தல்
நடி என்பது நடித்தல் 

முதனிலை திரிந்த தொழிற்பெயர்
விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்

எடுத்துக்காட்டு
கெடுதல்-->கெடு-->கேடு
சுடுதல்-->சுடு-->சூடு

வினையாலணையும் பெயர்

ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்கா மலும் வேறொரு பயனிலை யைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்.

மூவிடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்

எடுத்துக்காட்டு 

வந்தவர் அவர்தான்
 பொறுத்தார் பூமி ஆள்வார்



No comments:

Post a Comment