இயல் 6
3 மதிப்பெண் வினாக்கள்
1). படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.
அ). தேவராட்டம் - குறிப்பு வரைக.
தேவராட்டம்
தேவராட்டம், வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம். 'உருமி' எனப் பொதுவாக அழைக்கப்படும் 'தேவதுந்துபி' தேவராட்டத்திற்கான இசைக்கருவி ஆகும். இந்தக் கலை, வேட்டி கட்டியும் தலையிலும் இடையிலும் சிறிய துணி கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகிறது. இவ்வாட்டத்தில் பெரும்பான்மையாக எட்டு முதல் பதின்மூன்று கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பது பொதுமரபாக உள்ளது. தேவராட்டம் குறிப்பாகச் சடங்கு சார்பாக ஆடப்படுகிறது.
கரகாட்டம்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
- திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.
- இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடின.
- பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்து ஆடியது.
- பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவமான சுட்டி பதிந்தாடியது.
- கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குலைகளும் அசைந்தாடின.
- உச்சிக் கொண்டையும் அதைச்சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துக்களோடு ஆடியது.
- தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளியுள்ள முருகனின் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆடியது.
திணைத்தொழில்கள்- அன்றும் இன்றும்
- குறிஞ்சி நிலத்தில், அன்று வேட்டையாடுதல், கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல் போன்றவை நடைபெற்றன. இன்று குறிஞ்சி நிலம், வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மலைவாழ் இன மக்கள் தேன் எடுத்தல், மூலிகைகள் சேகரித்தல், கைவினைப் பொருள்கள் தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முல்லை நிலத்தில் அன்று முதல் இன்று வரை கால்நடைகளை மேய்க்கும் தொழில் நடைபெற்று வருகிறது. சிற்றூர்களில் மிகுதியான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெரும் பண்ணைகளும் உருவாகியுள்ளன. தயிர், நெய் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பணியை இன்று பெருந்தொழிற்சாலைகள் செய்கின்றன.
- மருதநிலத்தில் அன்று இயற்கை வேளாண்மையும், இன்று நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய வேளாண்மையும் நடைபெற்று வருகிறது.
- நெய்தல் நிலத்தில் அன்று முதல் இன்று வரை மீன்பிடித்தலும் உப்பு தயாரித்தலும் நடைபெற்று வருகிறது. எனினும், இன்று இயந்திரப் படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்று நவீன வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். மீன்களைப் பதப்படுத்துகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
- பாலை நிலத்தில் அன்று வழிப்பறி நடைபெற்றது. வழிப்பறி, இன்று சில இடங்களில் பரவலாக நடைபெறுகிறது.
அமைச்சு
- ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செய்பவரே அமைச்சர் ஆவார்.
- மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சர் ஆவார்.
- இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் பெற்றிருப்பவரே அமைச்சர் ஆவார்.
- ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செய்பவரே அமைச்சர் ஆவார்.
- சுற்றத்தாருடன் ஒருவர், அன்பு இல்லாமலும், பொருந்திய துணை இல்லாமலும், வலிமை இல்லாமலும், இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்?
- மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் அன்பு இல்லாதவராய், பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.