- இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு எது? 1906
- காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை எங்கு தொடங்கினார்? தென் ஆப்பிரிக்கா
- காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைச் எப்போது தொடங்கினார்? 1906
- சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1906
- ம பொ சி பிறந்த ஆண்டு எது? 1906
- ம பொ சி என்பதன் விரிவாக்கம் என்ன? மயிலாப்பூர் பொன்னுசாமி மகன் சிவஞானம்
- ம பொ சி பிறந்த நாள் எப்போது? ஜூன் 26
- ம பொ சி எங்கு பிறந்தார்? சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் - சால்வன் குப்பம்
- ம பொ சி யின் தந்தை யார்? பொன்னுச்சாமி
- ம பொ சி அவர்களின்தாயார் யார்? சிவகாமி
- ம பொ சி யின் இயற்பெயர் என்ன? ஞானப்பிரகாசம்
- ம பொ சி அவர்களை சிவஞானி என அழைத்தவர் யார்? சரபையர் என்ற முதியவர்
- ம பொ சி எந்த வகுப்போடு கல்வியை நிறுத்தினார்? மூன்றாம் வகுப்பு
- ம பொ சி யின் கல்வி எப்போது தடைபட்டது? மூன்றாம் வகுப்பில் நுழைந்த 7 ஆம் நாளோடு
- ம பொ சி யின் கல்வி ஏன் தடைபட்டது? ம பொ சி அவர்களின் குடும்ப வறுமை காரணமாக
- ம பொ சி காலத்தில் மூன்றாம் வகுப்பிற்கு தேவைப்பட்ட பாடப் புத்தகங்கள் எவை? தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடப் புத்தகங்கள்
- பள்ளியிலிருந்து ம பொ சி ஏன் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தார்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர் துரத்திவிட்டார். அதை அவமானமாகக் கருதியதால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார்.
- ம பொ சி எதை அவமானமாகக் கருதினர்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்த மா பொ சி யை துரத்தி விட்டதால், அதை அவமானமாகக் கருதினர்.
- ம பொ சி யை வீட்டிற்கு விரட்டி விட்டதற்காக அவரின் தந்தை என்ன செய்தார்? ஆசிரியரை வாயார வைதார்
- ம பொ சி சிறுவயதில் அன்னையிடம் கற்ற பாடல்கள் எவை?
- அரசாணி மாலை
- பவளக்கொடி மாலை
- ம பொ சி தானாகவே விரும்பி படித்த பாடல்கள் எவை? சித்தர் பாடல்கள்
- ம பொ சி யின் கேள்வி ஞானத்தை பெருகியதில் பெரும் பங்கு வகித்தவர் யார்? திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்
- ம பொ சி எதனுடன் கடும் போர் புரிந்ததாக குறிப்பிடுகிறார்? தனது அறியாமையுடன்
- ம பொ சி எப்போது பேரானந்தம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்? குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விடும் போது
- ம பொ சி எவற்றைத் தம் சொத்துக்களாகக் கருதினார்? தம்மிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களை
- பேராயக் கட்சி எனப்படுவது எது? காங்கிரஸ் கட்சி
- காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது? 1931
- அந்நியத் துணி கடை மறியல் எதன்படி அனுமதிக்கப்படவில்லை? காந்தி-இர்வின் ஒப்பந்தம்
- காந்தி-இர்வின் ஒப்பந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி செய்தது என்ன?
- தீண்டாமை விலக்கு
- கதர் விற்பனை
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை எப்போது வழங்கப்பட்டது? செப்டம்பர் 30 ,1932
- ம பொ சி முதன்முதலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு எது?1932
- மபொசி முதல் முதலில் எதற்காக சிறையிலிடப்பட்டார்?தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட தண்டனை என்ன?
- மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை
- 300 ரூபாய் அபராதம். கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை.
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் தன்மை யாது? நூற்றுக் கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டிருந்தது
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் சிறப்பம்சம் யாது? பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது
- ம.பொ.சி அவர்களுக்குச் சிறையில் வழங்கப்பட்ட சோறு எந்த வகுப்பைச் சார்ந்தது?'சி' வகுப்பு
- இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் எது?1942 ஆகஸ்ட் 8
- இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?1942
- இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? பம்பாய் காங்கிரஸ் மாநாடு
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்திற்காக கைது செய்யப்பட்ட தலைவர்கள் யார்? காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி சிறையில் அடைக்கப்பட்ட நாள் எது? 1942 ஆகஸ்ட் 13
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி முதலில் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?வேலூர்
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக வேலூர் சிறையிலிருந்து எந்தச் சிறைக்கு மாற்றப்பட்டார்?அமராவதி
- அமராவதி சிறைச்சாலையின் அவல நிலை யாது? கூரை துத்தநாக தகடுகளால் வேயப்பட்டு இருந்தது
- வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது எப்போது? இந்திய விடுதலைக்கு மறுநாள்
- வடக்கெல்லை மீட்சிக்கு அழைப்பு விடுத்தது யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
- வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச்செய்தவர் யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
- ஆந்திரத் தலைவர்கள் எந்த மாவட்டத்தை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர்?சித்தூர்
- தமிழர் மாநாடு எங்கு நடைபெற்றது? திருத்தணி, சென்னை
- தமிழர் மாநாட்டை நடத்தியது யார்? தமிழரசுக் கழகம்
- தமிழரசுக் கழகம் யாருடன் இணைந்து தமிழர் மாநாட்டை நடத்தியது? தமிழ் ஆசான் மங்கலங்கிழார்
- வடக்கெல்லை போராட்டம் நடைபெற்ற இடங்கள் யாவை? சித்தூர் புத்தூர் திருத்தணி
- வடக்கெல்லை போராட்டத்தில் சிறைப்பட்டு உயிர் நீத்தவர் யாவர்?
- இராஜமுந்திரி சிறையில் இருந்த திருவாலங்காடு கோவிந்தராசன்
- பழனி சிறையிலிருந்த மாணிக்கம்
- மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? சர்தார் கே எம் பணிக்கர்
- மொழிவாரி ஆணையத்தின் தாக்கம் என்ன? சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிடம் அளித்துவிட்டது
- திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்கள் எந்த ஆணையத்தால் மீட்கப்பட்டன?படாஸ்கர் ஆணையம்
- இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு இல்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் எத?சிலப்பதிகாரம்
- தமிழினத்தின் பொதுச்சொத்து என்று மபொசி எதனைக் குறிப்பிடுகிறார்? சிலப்பதிகாரம்
- சிலம்புச் செல்வர் யார்?ம பொ சி
- தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்க முன் வந்தவர் யார்?இராஜாஜி
- ஆந்திரா மாநிலம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஆணையம் எது?நீதிபதி வாஞ்சு ஆணையம்
- தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? சென்னை மாநகராட்சி
- தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் யார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது? மாநகர தந்தை செங்கல்வராயன்
- ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்? பிரதமர் நேரு
- ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை எப்போது வெளியிடப்பட்டது? 25-3-1953
- மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எங்கு பேசினார்? வடிவீஸ்வரம்
- மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எப்போது பேசினார்?25-10-1946
- மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எந்த விழாவில் பேசினார்?வடிவை வாலிபர் சங்க ஆண்டு விழா
- தெற்கெல்லை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் யாவர்? தேவசகாயம், செல்லையா
- இயற்கையாகவே போர்க்குணம் கொண்டவர் யார்? மார்ஷல் நேசமணி
- தெற்கெல்லை போராட்டம் யாருடைய வருகைக்குப் பிறகு வலுப்பெற்றது? மார்சல் நேசமணி
- கன்னியாகுமரி மாவட்டம் எப்போது தமிழ்நாட்டுடன் இணைந்தது?1956 நவம்பர் 1
- மார்ஷல் நேசமணி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு யாது? நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபம் நிறுவியது.
- பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை எப்போது வெளியானது?10-10-1955
- பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை யாது? மொழிவாரி மாநிலம் அமைப்பது.
- பசல் அலி ஆணையத்தால் நம் கையை விட்டு சென்ற பகுதிகள் எவை? தேவிகுளம், பீர்மேடு
- ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக எவை அமைய வேண்டும்? மலையும் கடலும்
- தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும் தெற்கு எல்லையாக குமரி முனையையும் குறிப்பிடும் இலக்கியங்கள் எவை? புறநானூறு, சிலப்பதிகாரம்
- ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் எது? வியன்னா
- அலெக்ஸாண்ட்ரியா துறைமுகம் எங்கு உள்ளது? எகிப்து
- கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்த காலத்தைச் சார்ந்தது? கிபி இரண்டாம் நூற்றாண்டு
- கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? ஆஸ்திரியா நாட்டின் வியன்னா அருங்காட்சியகத்தில்
- கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்தத் தாளில் எழுதப்பட்டுள்ளது? பாபிரஸ்
- மபொசி அவர்களின் தன் வரலாற்று நூல் எது? எனது போராட்டம்
- மபொசி எப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்?1952-1954
- மபொசி எப்போது சட்டமேலவை தலைவராக இருந்தார்?1972-1978
- தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?ம பொ சிவஞானம்
- மபொசி அவர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
- மபொசி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு என்ன? திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் சிலை நிறுவியது
- வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது? 1966
Tuesday, March 29, 2022
சிற்றகல்ஒளி 1 மதிப்பெண் வினாக்கள்
சிற்றகல்ஒளி 2 மதிப்பெண் வினாக்கள்
- ஒருவரைப் படிப்பாளியாகவும் படைப்பாளியாகவும் பக்குவப்படுத்துவது எது? கதை படிப்பது
- இந்திய வரலாற்றில் 1906ஆம் ஆண்டு சிறப்புடைய ஆண்டாகும். எவ்வாறு?
- அந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்
- அந்த ஆண்டில்தான் வ உ சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
- ம பொ சி எங்கு எப்போது பிறந்தார்?
- சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் சால்வன் குப்பம் என்ற பகுதியில்
- ஜூன் 26, 1906 இல் பிறந்தார்
- ம பொ சி அவர்களின் பெற்றோர் யாவர்?
- பொன்னுச்சாமி - சிவகாமி
- ம பொ சி அவர்களுக்கு சிவஞானம் என்ற பெயர் வரக் காரணம் யாது?
- பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம்
- சரபையர் என்னும் முதியவர் சிவஞானி என்று அழைத்தார். சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்ற பெயர் நிலைத்தது.
- ம பொ சி வறுமையால் கல்வியை இழந்தார். அந்த நிகழ்வை விளக்குக.
- ம பொ சி மூன்றாம் வகுப்பில் நுழைந்த ஏழாம் நாளில் புத்தகம் இன்றி வந்ததற்காக ஆசிரியர் பள்ளியிலிருந்து விரட்டிவிட்டார்
- புத்தகம் கூட வாங்கிக் கொடுக்க முடியாத வறுமையின் காரணமாக கல்வியை இழந்தார்.
- ம பொ சி அவர்களின் கல்வி ஞானம் எத்தகையது?
- வறுமையின் காரணமாக பள்ளிக்கல்வியை இழந்தார்
- இருப்பினும் தாயார் மூலமாக அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்கள் கேட்டு இலக்கிய அறிவை வளர்த்து வந்தார்.
- சித்தர் பாடல்களை மனனம் செய்வது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவற்றின் மூலமாக இலக்கிய அறிவை வளர்த்தார்.
- ம.பொ.சி ஒரு புத்தகப் பித்தன் என்பதை நிறுவுக
- உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கி விட்டு பல வேளைகளில் பட்டினி கிடந்து இருக்கிறார்
- போதிய பணம் இல்லாத காரணத்தால் பழைய புத்தகக் கடைகளில் குறைந்த விலைக்குப் புத்தகங்கள் வாங்குவார்.
- குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விட்டால் பேரானந்தம் அடைவார்
- 'தமிழா! துள்ளி எழு' -துண்டறிக்கை குறிப்பு வரைக
- 30-9-1932இல் விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்த அறிக்கை 'தமிழா! துள்ளி எழு' என்பதாகும்
- நூற்றுக்கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டன
- இதை வெளியிட்டதற்காக மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் ம.பொ.சி அவர்களுக்கு விதிக்கப்பட்டது
- 'தமிழா! துள்ளி எழு'-துண்டறிக்கையின் சாரம்சம் யாது?
- பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது
- ம.பொ.சி அவர்களின் சிறை வாழ்க்கை பற்றிக் கூறு.
- 'தமிழா! துள்ளி எழு' துண்டறிக்கையை விநியோகம் செய்ததற்காக 6 மாத காலத்திற்குச் சிறைத்தண்டனை பெற்றார்
- 'சி' வகுப்புச் சோறு அவரின் பசியைப் போக்கினாலும் அவரது குடும்பத்தின் பட்டினியை எண்ணி வருந்தினார்
- வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட ம.பொ.சி துத்தநாகத் தகடுகளால் வேயப்பட்டிருந்த அமராவதி சிறையில் வாடினார்
- ம.பொ.சி அவர்களது வடக்கெல்லைப் போராட்டம் குறிப்பு வரைக
- மங்கலக் கிழாருடன் தமிழரசுக் கழகம் இணைந்து சென்னையிலும் திருத்தணியில் 'தமிழர் மாநாடு' நடத்தியது.
- சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய இடங்களில் வடக்கெல்லைப் போராட்டத்தைத் தொடங்கியது
- சர்தார் கே. எம். பணிக்கர் ஆணையம் 'சித்தூர்' மாவட்டத்தை ஆந்திராவிற்கு வழங்கியதை ஏற்காமல், "மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்" என்று முழங்கினார். அதனால், திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்களை மீட்கப்பட்டன.
- தலைநகரை மீட்கும் போராட்டம்-குறிப்பு வரைக
- ஆந்திர மாநிலம் அமைவதற்கான நீதிபதி வாஞ்சு ஆணையம், அதன் தலைநகராகச் சென்னையைப் பரிந்துரை செய்ததாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கள் நிலவின
- இராஜாஜி தனதுமுதலமைச்சர் பதவியைத் துறக்க முன்வந்தார்
- சென்னை மாநகராட்சியில் 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழங்கி, தீர்மானம் ஒன்றை ம.பொ.சி கொண்டு வந்தார்.
- இறுதியில், 25-03-1953இல் பாரத பிரதமர் நேரு ஆந்திர நாட்டின் தலைநகர் அதன் எல்லைக்குள்ளேயே அமையும் என்று அறிவித்தார்.
- தெற்கெல்லைப் போராட்டம் -குறிப்பு வரைக
- ம.பொ.சி அவர்கள் 25-10-1946இல் வடிவீசுவரத்தில் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றிப் பேசினார்
- 1953-54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைக் கிளர்ச்சிகளைத் தொடங்கி வைத்தது தமிழரசுக் கழகம்தான் என்றாலும் அதனை நடத்துகிற பொறுப்பு அந்தப் பகுதித் தலைவர்களிடமே இருந்தது
- போராட்டத்தில் தேவசகாயம், செல்லையா ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்
- மார்ஷல் நேசமணியின் வருகைக்குப் பிறகு போராட்டம் வலுப்பெற்றது
- பசல் அலி ஆணையம் -குறிப்பு வரைக
- 10-10-1955இல் பரிந்துரை வெளியானது
- மொழிவாரி மாநிலக் கொள்கை ஏற்கப்பட்டது
- திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீஸ்வரம், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு இணையவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. தேவிகுளம், பீர்மேடு நம் கைவிட்டுப் போனது.
- சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டங்கள் கேரளத்தோடு இணைய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது
- கடல் கடந்த தமிழ் வணிகம் பற்றிய சான்று தருக
- ஆஸ்திரிய நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது
- இச்சுவடி சேரநாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழர் ஒருவருக்கும் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் ஆகும்.
- இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
- ம.பொ.சி குறிப்பு வரைக
- சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்
- விடுதலைப் போராட்ட வீரர்
- சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் மேலவைத் தலைவராகவும் பதவி வகித்தவர்
- 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
- சிலம்புச் செல்வர் என்று ம.பொ.சி அழைக்கப்படக் காரணம் யாது?
- இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடு இல்லாதவகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஒரு இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தை தவிர வேறு இல்லை என்று உறுதியாக நம்பினார்.
- அதனால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார். இதன் காரணமாகவே ம.பொ.சி அவர்கள் 'சிலம்புச் செல்வர்' என்று அழைக்கப்படுகிறார்
- மார்ஷல் நேசமணி- குறிப்பு வரைக
- இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்
- வழக்கறிஞர்
- நாகர்கோவிலில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்
- குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
- தமிழக அரசு, இவருடைய நினைவாக நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.
மெய்க்கீர்த்தி ஒரு மதிப்பெண் வினாக்கள்
- கல் இலக்கியமாக அமைந்தது எது? மெய்க்கீர்த்தி
- மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இலக்கியம் எது? பதிற்றுப்பத்து
- மெய்க்கீர்த்தி யாருடைய காலத்தில் செப்பமான வடிவம் பெற்றது? சோழர் காலத்தில்
- மெய்கீர்த்தி யாருடைய காலங்களில் முளைவிட்டது? பல்லவர், பாண்டியர்
- இந்திரன் முதல் திசாபாலர் எண்மர் யாவர்? இந்திரன், அக்னி தேவன், எமதர்மன், வருண பகவான், நிருதி தேவன், வாயு பகவான், குபேரன், ஈசானன்
- மனுவாணை-பொருள் தருக. மனு தர்மத்தின் படி
- மனுதர்மத்தின்படி ஆட்சி செய்த சோழ மன்னன் யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
- சோழ நாட்டில் பிணிக்கப்படுபவை எவை? பட்டத்துயானைகள்
- சோழநாட்டில் புலம்புபவை எவை? சிலம்புகள்
- சோழ நாட்டின் கலங்குபவை எவை? ஓடைகள்
- சோழ நாட்டில் சிறைப்படுபவை எவை? ஆற்று நீர்
- சோழநாட்டில் வடுப்படுவன எவை? மாங்காய்கள்
- சோழ நாட்டில் பறிக்கப்படுவன எவை? மலர்கள்
- சோழ நாட்டில் கொடியன எவை? காடுகள்
- சோழநாட்டில் கள்ளுண்பன எவை? வண்டுகள்
- சோழ நாட்டில் வெறுமை உடையன எவை? மலை மூங்கில்
- சோழ நாட்டில் போராய் எழுவது எங்கே? வயல்களில்
- சோழநாட்டில் எங்கு இருள் சூழ்ந்து இருக்கிறது? நீண்ட மலைகளில்
- சோழ நாட்டில் யாரிடத்தில் மருட்சி காணப்படுகிறது? இளம் மான்களின் கண்களில்
- சோழ நாட்டில் பிறழ்ந்து செல்வது யார்? குளத்து மீன்கள்
- சோழ நாட்டில் சினம்கொள்பவர் யார்? செவிலித் தாயர்
- சோழநாட்டில் பொருள் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது? புலவர்தம் பாட்டில்
- சோழநாட்டில் கூடி ஆடுவது யார்? இசைப்பாணர்
- விழிப்பெற்ற பயனாகவும் மெய்பெற்ற அருளாகவும் மொழிபெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூலாகவும் திகழ்வது யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
- ராஜராஜன் கால தமிழ் கல்வெட்டு எத்தனையாவது நூற்றாண்டைச் சார்ந்தது?11
- கோப்பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் யார்? இரண்டாம் ராஜராஜ சோழன்
- கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம் பட எழுதப்படும் வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? மெய்க்கீர்த்திகள்
சிலப்பதிகாரம் ஒரு மதிப்பெண் வினாக்கள்
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? இளங்கோவடிகள்
- தண் நறுஞ் சாந்தம் பொருள் தருக. குளிர்ந்த மணம் மிக்க சந்தனம்
- மேவிய விரை பொருள் தருக. எழுந்து பரவுகின்ற நறுமணம்
- பகர்வனர் பொருள் தருக. விற்பனை செய்பவர்
- காருகர் பொருள் தருக. நெசவாளர்
- தூசு பொருள் தருக. பட்டு
- துகிர் பொருள் தருக. பவளம்
- ஆரம் பொருள் தருக. சந்தனம்
- அருங்கல வெறுக்கை பொருள் தருக. பலவகையான செல்வம்
- நனந்தலை மறுகு பொருள் தருக.-அகன்ற வீதி
- பால்வகை பொருள் தருக. பலவகை
- கூலம் பொருள் தருக. தானியம்
- காழியர் பொருள் தருக. பிட்டு வணிகர்
- கூவியர் பொருள் தருக. அப்பம் சுடுபவர்
- கல்நொடை ஆட்டியர்-பொருள் தருக. வலைச்சியர்
- பகருநர் பொருள் தருக. விற்பவர்
- பாசவர் பொருள் தருக வெற்றிலை விற்பவர்
- வாசவர் பொருள் தருக. நறுமண பொருட்கள் விற்பவர்
- பல் நிண விலைஞர்-பொருள் தருக. பலவகையான இறைச்சி விற்பவர்
- ஓசுநர்-பொருள் தருக. எண்ணெய் விற்பவர்
- கஞ்ச காரர்-பொருள் தருக வெண்கலப் பாத்திரம் செய்பவர்
- கருங்கைக் கொல்லர்-பொருள் தருக.இரும்பினால் கருவிகள் செய்பவர்
- கண்ணுள் வினைஞர் -பொருள் தருக. ஓவியர்
- மண்ணீட்டு ஆளர்-பொருள் தருக. சிற்பி
- நன்கலம் தருநர்-பொருள் தருக. இரத்தின வேலை செய்பவர்
- துன்ன காரர் -பொருள் தருக. தையல் தைப்பவர்
- தோலின் துன்னர்-தோல்பொருள் தைப்பவர்
- கிழி-பொருள் தருக. துணி
- கிடை -பொருள் தருக. கட்டை
- பால்கெழு மாக்கள்- பொருள் தருக. பலவகைத் தொழில் செய்யும் மக்கள்
- குரல் முதல் 7 எவை? குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
- மறு இன்றி -பொருள் தருக. குற்றமின்றி
- ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணியை முதலில் வைத்து பாடும் நூல் எது? திருத்தணிகையுலா
- வண்ணமும் சுண்ணமும்- இலக்கணக்குறிப்பு தருக. எண்ணும்மை
- பயில்தொழில் -இலக்கணக்குறிப்பு தருக. வினைத்தொகை
- சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலை புனைந்தான் நந்தா வளையாபதி தருவான் வாசகனுக்கு ஈந்தான் திளையாத குண்டலகேசிக்கும்-என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? திருத்தணிகை உலா
- கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் எந்தப் பாதையில் அழைத்துச் சென்றார்? இடைப்பட்ட வழி
- தென்னவன் சிறுமலையின் இடப்பக்கம் வழியாகச் சென்றால்__________வழியாக மதுரை செல்லலாம். (திருமால் குன்றம்)
- நெடுவேள் குன்றம் என்று அழைக்கப்படும் மலை எது? சுருளிமலை
- கண்ணகி, சுருளி மலையில் எந்த இடத்தை அடைந்தாள்? வேங்கைக் கானல்
- கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்துச் சென்றவர் யார்? கவுந்தி அடிகள்
- கொடும்பாளூர் என்னும் இடத்தில் இருந்து மதுரைக்குச் செல்லும் வழிகள் எத்தனை? 3
- காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து கொடும்பாளூர் செல்லும் வழி யாது? உறையூர்- திருவரங்கம்
- சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை எது? உரைப்பாட்டு மடை
- உரைப்பாட்டு மடை என்பதன் பொருள் யாது? உரைநடைப் பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு
- மடை என்பது யாது? வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை
- உரை என்பது யாது? பேசும் மொழியின் ஓட்டம்
- சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் யாவை? முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
- சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? 3
- சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை? 30
- இரட்டைக் காப்பியங்கள் எனப்படுபவை எவை? சிலப்பதிகாரம், மணிமேகலை
- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்
- மணிமேகலையின் ஆசிரியர் யார்? சீத்தலைச்சாத்தனார்
- கோவலன் கண்ணகி கதையைக் கூறி, 'அடிகள் நீரே அருளுக' என்றவர் யார்? சீத்தலைச்சாத்தனார்
- நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்றவர் யார்? இளங்கோவடிகள்
- சிலப்பதிகாரத்தில் உள்ள மூன்று காண்டங்கள் எவை? புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்
அகப்பொருள் இலக்கணம் 2 மதிப்பெண் வினாக்கள்
- அன்பின் ஐந்திணை யாவை?
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- பொருள் இலக்கணம் என்றால் என்ன?
- பொருள் என்பது ஒழுக்க முறை.
- அக வாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைப் பற்றி கூறுவது பொருள் இலக்கணம் ஆகும்.
- அகத்திணை என்றால் என்ன?
- அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலையைக் கூறுவது அகத்திணை ஆகும்
- அகத்திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- அகத்திணை ஏழு வகைப்படும். அதை
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- கைக்கிளை
- பெருந்திணை
- அகத்திணை ஏழு வகைப்படும். அதை
- ஐந்து திணைகளுக்கும் உரியன யாவை?
- முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்
- முதற்பொருள் என்றால் என்ன?
- நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆகும்
- நிலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- நிலம் ஐந்து வகைப்படும். அவை,
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- நிலம் ஐந்து வகைப்படும். அவை,
- குறிஞ்சி என்றால் என்ன? மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும்
- முல்லை என்றால் என்ன? காடும் காடு சார்ந்த இடமும் முல்லை ஆகும்
- மருதம் என்றால் என்ன? வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும்
- நெய்தல் என்றால் என்ன? கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும்
- பாலை என்றால் என்ன? சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை ஆகும்
- பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- பொழுது இரண்டு வகைப்படும் அவை,
- சிறுபொழுது
- பெரும்பொழுது
- பொழுது இரண்டு வகைப்படும் அவை,
- சிறுபொழுது என்றால் என்ன?
- ஒரு நாளின் 6 கூறுகளைச் சிறுபொழுது என்று பிரித்துள்ளனர்
- பெரும்பொழுது என்றால் என்ன?
- ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று பிரித்துள்ளனர்
- கார் காலத்திற்குரிய மாதங்கள் எவை? ஆவணி புரட்டாசி
- குளிர் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? ஐப்பசி கார்த்திகை
- முன்பனிக் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? மார்கழி தை
- பின்பனிக் காலத்திற்குரிய மாதங்கள் எவை? மாசி பங்குனி
- இளவேனில் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? சித்திரை வைகாசி
- முதுவேனில் காலத்துக்கு உரிய மாதங்கள் எவை? ஆணி ஆடி
- காலை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? காலை 6 மணி முதல் 10 மணி வரை
- நண்பகல் என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? காலை 10 மணி முதல் 2 மணி வரை
- எற்பாடு என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
- மாலை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
- யாமம் என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? இரவு 10 மணி முதல் 2 மணி வரை
- வைகறை என்பது எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை? இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
- எற்பாடு என்றால் என்ன?எல்-சூரியன், பாடு-மறையும் நேரம். ஏற்பாடு என்பது சூரியன் மறையும் நேரம் ஆகும்
- கருப்பொருள் என்றால் என்ன? ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு முதலானவை கருப்பொருள்கள் ஆகும்.
- குறிஞ்சி நிலத்திற்கு உரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுதுக
- தெய்வம் -முருகன்
- மக்கள் -குறவர், குறத்தியர்
- உணவு -மலைநெல், தினை
- பூ -குறிஞ்சி, காந்தள்
- முல்லை நிலத்திற்கு உரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுது
- தெய்வம் -திருமால்
- மக்கள் -ஆயர் ஆய்ச்சியர்
- உணவு -வரகு சாமை
- பூ -முல்லை தோன்றி
- மருத நிலத்துக்குரிய கருப்பொருள்கள் ஏதேனும் நான்கு எழுது
- தெய்வம் -இந்திரன்
- மக்கள் -உழவர் உழத்தியர்
- உணவு -செந்நெல் வெண்ணெல்
- பூ -செங்கழுநீர் தாமரை
- நெய்தல் நிலத்துக்குரிய கருப்பொருட்கள் ஏதேனும் நான்கு எழுது
- தெய்வம் -வருணன்
- மக்கள் -பரதன், பரத்தியர்
- உணவு -மீன், உப்புக்கு பெற்ற பொருள்
- பூ -தாழை, நெய்தல்
- பாலை நிலத்துக்குரிய கருப்பொருள் ஏதேனும் நான்கு எழுது
- தெய்வம் -கொற்றவை
- மக்கள் -எயினர், எயிற்றியர்
- உணவு -சூறையாடலால் வரும்பொருள்
- பூ-குரவம், பாதிரி
திருக்குறள் 2மதிப்பெண் வினாக்கள்
- அரிய செயலைச் செய்வதற்கு அமைச்சர் அறிந்து கொள்ள வேண்டியவை எவை?
- தொழில் செய்வதற்குத் தேவையான கருவி
- அதற்கு ஏற்ற காலம்
- செயலின் தன்மை
- செய்யும் முறை
- அமைச்சருக்கு உரிய தகுதிகள் எவை?
- மனவலிமை
- குடிகளைக் காத்தல்
- ஆட்சி முறைகளைக் கற்றல்
- நூல்களைக் கற்றல்
- விடாமுயற்சி
- எப்படிப்பட்ட அமைச்சருக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது? இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சருக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது
- ஓர் அமைச்சர் ஒரு செயலை செய்வதற்கு உரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருந்தாலும் அவர் செய்ய வேண்டுவன யாது? உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்
- பொருளின் சிறப்பு யாது? ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.
- ஒருவருக்கு அறத்தையும் இன்பத்தையும் தருவது எது? முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த செல்வம் ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் தரும்.
- எத்தகைய செல்வத்தை நீக்கிவிட வேண்டும்? மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்
- மலைமேல் நின்று யானைப் போரைக் காண்பதற்கு ஒப்பானது எது? தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் செய்யும் செயல்
- ஒருவர் செல்வத்தை ஏன் சேர்க்க வேண்டும்? ஒருவர் பொருளை ஈட்டவேண்டும். அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை.
- பகைவரின் அழுத கண்ணீரின் உள்ளே வஞ்சகம் மறைந்து இருப்பது எதனோடு ஒப்பிடப்படுகிறது?பகைவரின் தொழுது நிற்கும் கையினுள் கொலைக்கருவி மறைந்திருப்பதற்கு ஒப்பானது
- யாரால் பகைவரை எதிர்கொள்ள இயலாது?
- சுற்றத்தாருடன் அன்பு இல்லாதவர்
- பொருந்திய துணை இல்லாதவர்
- வலிமை இல்லாதவர்
- பகைக்கு எளிதில் ஆட்படுபவர் யார்?
- மனதில் அன்பு இல்லாதவர்
- அறிய வேண்டியவற்றை அறியாதவர்
- பொருந்தும் பண்பு இல்லாதவர்
- பிறருக்குக் கொடுத்து உதவாதவர்
- யாருடைய குடி உயர்ந்து நிற்கும்?
- விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து நிற்கும்
- யாரை உலகத்தார் உறவாக கொண்டு போற்றுவார்?
- குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்
- ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது? வறுமை
- வறுமையின் கொடுமை எப்போது முழுவதும் கெடும்? தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்
- இரப்பவரின் உள்ளத்தினுள்ளே எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்? இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தினுள்ளே மகிழ்ச்சி பொங்கும்
- எதைப் போன்ற தோற்ற ஒப்புமையை எங்கும் காண இயலாது? மக்களைப் போன்ற கயவர்களின் தோற்ற ஒப்புமையை எங்கும் காண இயலாது
- தேவரும் கயவரும் ஒரே தன்மையர் எவ்வாறு? தேவர்களைப் போல கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவார்.
- சான்றோர் எப்போது பயன்படுவர்? கயவர் எப்போது பயன்படுவர்?
- ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்ட உடனே சான்றோர் உதவி செய்வர்
- கரும்பைப் பொழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் கயவர் பயன்படுவர்
மெய்க்கீர்த்தி 2 மதிப்பெண் வினாக்கள்
- மெய்க்கீர்த்தி என்றால் என்ன? கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம் பட எழுதப்படும் வரிகளே மெய்க்கீர்த்திகள் ஆகும்
- இரண்டாம் இராஜராஜ சோழன் யாரைப் போல ஆட்சி நடத்தினான்? இந்திரன் முதலாகத் திசை பாலகர் எட்டு பேரும் ஓர் உருவம் பெற்றது போல ஆட்சி செலுத்தினான்.
- இரண்டாம் ராஜராஜ சோழன் பெற்ற பட்டங்கள் எவை? கோப்பரகேசரி, திரிபுவனச் சக்கரவர்த்தி
- இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் பிணிக்கப்படுவன, புலம்புவன, கலக்கமடைவன, அடைக்கப்படுவன எவை?
- பிணிக்கப்படுவன -யானைகள்
- புலம்புவன -சிலம்புகள்
- கலக்கமடைவன- ஓடைகள்
- அடைக்கப்படுவன -ஆற்றுநீர்
- இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் வடுப்படுவன, பறிக்கப்படுவன, கொடியன, கள்ளுண்பன எவை?
- வடுப்படுவன-மாங்காய்கள்
- பறிக்கப்படுவன-மலர்கள்
- கொடியன-காடுகள்
- கள்ளுண்பன-வண்டுகள்
- இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் வெறுமையாய்த் தோன்றுவன, போராய் எழுவன, இருள் சூழ்ந்தன, மருள்வன எவை?
- வெறுமையாய்த் தோன்றுவன-மூங்கில்கள்
- போராய் எழுவன-நெற்கதிர்கள்
- இருள் சூழ்ந்தன-நீண்ட மலைகள்
- மருள்வன-இளமான்கள்
- இரண்டாம் ராஜராஜ சோழனின் நாட்டில் பிறழ்வன, சினம் காட்டுபவர், பொருள் மறைத்து வைப்பவர், தெருவில் கடிஆடிப்பாடுபவர் யாவர்?
- பிறழ்வன-குளத்து மீன்கள்
- சினம் காட்டுபவர்-செவிலித் தாயார்
- பொருள் மறைத்து வைப்பவர்-புலவர்கள்
- தெருவில் கூடி ஆடிப்பாடுபவர்-இசைப்பாணர்
- இரண்டாம் ராஜராஜ சோழனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு நிலை யாது?
- இரண்டாம் ராஜராஜ சோழன் தந்தை இல்லாதவருக்குத் தந்தையாக இருக்கிறான்
- தாய் இல்லாதவருக்குத் தாயாக இருக்கிறாள்
- மகன் இல்லாதவருக்கு மகனாக இருக்கிறான்
- உலகிலுள்ள உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கிறான்.
- இரண்டாம் ராஜராஜ சோழன் எவ்வாறெல்லாம் ஒப்பிடப்படுகிறார்?
- விழி பெற்ற பயன்
- மெய் பெற்ற அருள்
- மொழி பெற்ற பொருள்
- புகழ் பெற்ற நூல்
- மெய்க்கீர்த்தி -தோற்றம் குறித்து எழுதுக
- சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களில் உள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி
- பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்டது
- சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி என்ற செப்பமான வடிவம் பெற்றது
Subscribe to:
Posts (Atom)