Saturday, October 17, 2020
Friday, October 16, 2020
3 மதிப்பெண் வினாக்கள், இயல் 1
இயல் 1
3 மதிப்பெண் வினாக்கள்
1). தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு யாவை?
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள்:
- அன்னை மொழியாகவும், அழகாய் அமைந்த செந்தமிழாகவும் விளங்குபவள்.
- பழமைக்கும் பழமையாய்த் தோன்றி, நறுங்கனியாய்ச் சுவை தருபவள்.
- கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசாய் வீற்றிருந்தவள்.
- பாண்டிய மன்னனின் மகளாகப் பிறந்தவள்.
- திருக்குறளின் பெருமைக்கு உரியவள்.
- பத்துப்பாட்டாய், எட்டுத்தொகையாய், பதினெண்கீழ்க்கணக்காய், சிலப்பதிகாரமாய், மணிமேகலையாய்த் திகழ்பவள்.
இவையே பாவலரேறு, தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள் ஆகும்.
2). 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'. இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
இளம்பயிர் வகை அமைந்த தொடர்கள்:
- பெண்கள் நெல்நாற்றுகளை நடுகிறார்கள்.
- மாங்கன்று நட்டு வளர்த்தால், பின்னாளில் சுவைமிகு கனிதரும்.
- வாழைக்குருத்து தளிர்விட்டு வளர்கிறது.
- தென்னம்பிள்ளையை நடுவதற்கு மூன்றடிக்குழி தோண்டவேண்டும்.
- சோளப்பைங்கூழ் பசுமையாய் இருக்கிறது.
வினைமுற்றுகள் - தொழிற் பெயர்கள்:
- அறிந்தது - அறிதல்
- அறியாதது - அறியாமை
- புரிந்தது - புரிதல்
- புரியாதது - புரியாமை
- தெரிந்தது - தெரிதல்
- தெரியாதது - தெரியாமை
- பிறந்தது - பிறத்தல்
- பிறவாதது - பிறவாமை
Thursday, October 15, 2020
2 மதிப்பெண் வினாக்கள், இயல் 9
இயல் 9
2 மதிப்பெண் வினாக்கள்
1). நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. - இத்தொடரை இரு தொடர்களாக்குக.
தனி வாக்கியங்கள்:
- நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு.
- நான் எழுதுவதற்கு உரிய காரணம் உண்டு.
வாழ்வில் தலைக்கனம்:
தலைக்கனமே வாழ்வு:
காய் மணியாகும் முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்:
- முதல் நிலைத் தீவகம்
- இடை நிலைத் தீவகம்
- கடை நிலைத் தீவகம்.
2 மதிப்பெண் வினாக்கள், இயல் 8
இயல் 8
2 மதிப்பெண் வினாக்கள்
1). குறிப்பு வரைக. - அவையம்
அவையம்:
அறம் கூறும் மன்றங்கள், அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.
அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு.
உறையூரில் இருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மதுரைக்காஞ்சி, 'மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது' என்கிறது.
2). காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்தது:
கையிலே வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத்தூரிகை கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார்.
3). 'கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது'
அ).அடி எதுகையை எடுத்து எழுதுக.
ஆ)இலக்கணக் குறிப்பு எழுதுக.
கொள்க, குரைக்க.
விடை:
அ). அடியெதுகை: 'ள்'
கொள்வோர்
உள்வாய்
ஆ). இலக்கணக் குறிப்பு:
கொள்க, குரைக்க - வியங்கோள் வினைமுற்றுகள்
4). குறள் வெண்பாவின் இலக்கணத்தைக் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
குறள் வெண்பாவின் இலக்கணம்:
வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதல் அடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.
எடுத்துக்காட்டு:
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
5). வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கலோசை ஆகும். துள்ளலோசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
கலவைத் தொடர்:
வஞ்சிப்பாவிற்குத் தூங்கலோசையும், கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியன.
2 மதிப்பெண் வினாக்கள், இயல் 7
இயல் 7
2 மதிப்பெண் வினாக்கள்
1). வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, தனக்குத் விருப்பமான புத்தகங்களை மிகமிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார். குறைந்த விலைக்கு நல்ல நூலொன்று கிடைத்துவிட்டால் பேரானந்தம் அடைவார்.
2). பொருத்தமான இடங்களில் நிறுத்தற்குறி இடுக.
பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.
விடை:
பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.
3). மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
மெய்க்கீர்த்தி பாடப்படுவது நோக்கம்:
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள். அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.
4). பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
பாசவர் - வெற்றிலை விற்பவர்
வாசவர் - ஏலம் முதலான நறுமணப்பொருள்கள் விற்பவர்
பல்நிண விலைஞர் - பல்வகை இறைச்சி விற்பவர்
உமணர் - வெண்மையான உப்பு விற்பவர்
5). புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
புறத்திணைகளில் எதிரெதிர்த்திணைகள்:
வெட்சி × கரந்தை
வஞ்சி × காஞ்சி
நொச்சி × உழிஞை
2 மதிப்பெண் வினாக்கள், இயல் 6
இயல் 6
2 மதிப்பெண் வினாக்கள்
அயற்கூற்று:
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள்
முதற்பொருள்:
கருப்பொருள்:
குறளின் கருத்து:
2 மதிப்பெண் வினாக்கள் இயல் 5
இயல் 5
2 மதிப்பெண் வினாக்கள்
1). தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.
தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நான் கற்க விரும்பும் மொழி பிரெஞ்சு மொழி.
காரணம்: ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அதிகமான இலக்கிய நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு மொழியைக் கற்று, அம்மொழி சார்ந்த இலக்கியம், பண்பாடு, தொழில்வளர்ச்சி, கலை அறிவியல் குறித்த செய்திகளைத் தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்புகிறேன்.
2). செய்குத் தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்தொடர்களாக்குக.
அ) அருளைப் பெருக்கு!
அறிவைத் திருத்து !!
மயக்கம் அகற்று !!!
ஆ) அறிவுக்குத் தெளிவு தரும் !
உயிருக்குத் துணையாய் வரும்!!
3). "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுதுணர்ந்த கபிலன் தன்பால் பொழிந்த கேண்மையினால் இடைக்காட்டு புலவன் தென்சொல்" - இவ்வடிகளில் கழிந்த பெரும்கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?
- கழிந்த பெரும் கேள்வியினான் - மன்னன் குசேல பாண்டியன்
- காதல் மிகு கேண்மையினான் - புலவர் இடைக்காடனார்