Tuesday, October 20, 2020

இயல் 4, மொழிபெயர்ப்பு

 இயல் 4



ஆங்கிலப் பகுதி


Malar : Devi, switch off the lights when you leave the room.


Devi : yeah. We have to save electricity


Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.


Devi : who knows? In feature our country may launch artificial moons to light our night time sky!


Malar : I have read some other countries are going to launch these types of illumination satellites near future.


Devi : superb news! If we have lunch artificial moons they can assist in disaster relief by beaming light on areas that lost power!


மொழியாக்கம்:




(1) Malar : Devi, 


switch off the lights -விளக்குகளை அணைக்க வேண்டும்


when you leave the room - நீ அறையை விட்டுச் செல்லும்போது




(2) Devi : yeah. We have to save electricity - நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்




(3) Malar : Our nation -நமது நாடு


 spends a lot of electricity - அதிகமான மின்சாரத்தைச் செலவு செய்கிறது


 for lighting up our streets - தெரு விளக்குகளை ஒளிரச் செய்ய


in the night. - இரவு நேரத்தில்




(4) Devi : who knows? - யாருக்கு தெரியும்


In feature our country may launch artificial moons - எதிர்காலத்தில் நமது நாடும் செயற்கை நிலவுகளை நிறுவலாம்


 to light our night time sky! - இரவில் வானத்தை ஒளிரச் செய்ய




(5) Malar : I have read -நான் படித்திருக்கிறேன்


some other countries -சில நாடுகளும்


are going to launch -நிறுவ


these types of illumination satellites - இந்தவகையான ஒளிரும் செயற்கைக்கோள்களை


 near future - எதிர்காலத்தில்




(6) Devi : superb news! -அற்புதமான செய்தி


If we have lunch artificial moons - செயற்கை நிலவுகளை நாமும் நிறுவினால்


they can assist -அவை பயன்படும்


in disaster relief -பேரிடர் மீட்பில்


by beaming light -ஒளிர செய்வதன்மூலம்


on areas that lost power! -மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளை




திருத்தப்பட்ட மொழியாக்கம்


மலர் : தேவி, நீ அறையை விட்டுச் செல்லும்போது விளக்குகளை அனைத்து விட்டுச் செல்.


தேவி: ஆமாம், நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்


மலர்: இரவில் நம் வீதிகளை ஒளிரச் செய்வதற்காக நம் நாடு நிறைய மின்சாரத்தைச் செலவு செய்கிறது


தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில் நம் நாடு இரவு நேர வானத்தை ஒளிரச் செய்ய செயற்கை நிலவுகளை நிறுவலாம்.


மலர்: வேறு சில நாடுகளும் எதிர்காலத்தில் இந்த ஒளியூட்டும் செயற்கைக்கோள்களை விரைவில் நிறுவ உள்ளதாக நான் படித்திருக்கிறேன்.


தேவி: அற்புதமான செய்தி! செயற்கை நிலவுகளை நாமும் நிறுவினால், மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஒளி வீசச் செய்வதன்மூலம் பேரிடர் மீட்பில் அவற்றைப் பயன்படுத்தலாம்.

இயல் 3, மொழிபெயர்ப்பு

 இயல் 3

ஆங்கிலப் பகுதி


Respected ladies and gentleman, I am Elangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils where best in culture and civilization about 2,000 years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and worldwide. Through our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.




(1) Respected ladies and gentleman, I am Elangovan studying tenth standard.


Respected ladies and gentleman - மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே...


 I am Elangovan - என் பெயர் இளங்கோவன்


studying tenth standard - பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன்


 (2) I have come here to say a few words about our Tamil culture. 


I - நான்


about our Tamil culture - தமிழ்ப் பண்பாட்டை பற்றிச்


to say a few words - சில வார்த்தைகள் சொல்ல


have come here -வந்திருக்கிறேன்

 

(3) Sangam literature shows that Tamils where best in culture and civilization about 2,000 years ago. 

 

about 2,000 years ago - 2000 ஆண்டுகளுக்கு முன்னரே


Tamils - தமிழர்கள்


where best in culture and civilization - பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்தவர்கள் என்று


Sangam literature - சங்க இலக்கியம்


shows that - தெரிவிக்கிறது


(4) Tamils who have defined grammar for language have also defined grammar for life. 


Tamils who have defined grammar for language - தமிழர்கள் மொழிக்கு இலக்கணம் வகுத்து இருந்தனர்


also - மேலும்


have also defined grammar for life- வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து இருந்தனர்.


 (5) Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and worldwide. 


Tamil culture - தமிழர் பண்பாடு


is throughout India, Srilanka, Malaysia, Singapore, England and worldwide - இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள


in the life styles of Tamils - தமிழர்களின் வாழ்க்கை முறையில்


is rooted - வேரூன்றி இருந்தது.

 

(6) Though our culture is very old, it has been updated consistently. 


Though our culture is very old - நமது பண்பாடு மிகவும் பழமையானதாக இருந்தாலும்


it has been updated consistently - ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது


 (7) We should feel proud about our culture. Thank you one and all.

about our culture - நமது பண்பாடு குறித்து


We should feel proud - நாம் பெருமைப்படுவோமாக...


Thank you one and all -அனைவருக்கும் நன்றி.



திருத்தப்பட்ட மொழியாக்கம்


மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே... என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். நான் நமது தமிழ்ப் பண்பாடு குறித்து ஒரு சில வார்த்தைகள் சொல்ல வந்துள்ளேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்தவர்கள் என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் வாழ்வியலுக்கும் இலக்கணத்தை வகுத்திருக்கிறார்கள். தமிழ்ப் பண்பாடு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என உலகளாவிய நிலையில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறையில் வேரூன்றி உள்ளது. நமது பண்பாடு மிகவும் பழமையானது. எனினும் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நமது பண்பாடு குறித்துப் பெருமைப்படுவோமாக...!

அனைவருக்கும் நன்றி...!


இயல் 2, மொழியாக்கம்

 இயல் 2

ஆங்கிலப் பகுதி:


The golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds starts their wandering. The colourful birds start twitting their morning melodies in Percussion. The cute butterflies dance around the flowers. The blowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.


(1) The golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. 


The golden sun - பொன்னிறக் கதிரவன்


early in the morning - அதிகாலையில்


gets up - எழுந்து


and starts its bright rays - ஒளிமிக்க கதிர்களை வீசி


to fade away the dark - இருளை விலக்குகிறது


(2) The milky clouds starts their wandering. 


The milky clouds - வெண்ணிற மேகங்கள்


starts their wandering- அலையத் துவங்குகின்றன.




 (3) The colourful birds start twitting their morning melodies in Percussion. 


The colourful birds - வண்ணப் பறவைகள்


their morning melodies - காலை பாடலை


 in Percussion - இசையுடன்


start twitting - பாடத் துவங்குகின்றன




 (4) The cute butterflies dance around the flowers.  


The cute butterflies - அழகான வண்ணத்துப் பூச்சிகள்


around the flowers - பூக்களைச் சுற்றி


dance - நடனமாடுகின்றன




(5) The blowers fragrance fills the breeze. 


The blowers - பூக்களின்


 fragrance - நறுமணம்


fills the breeze - தென்றலில் கலக்கிறது.




 (6) The breeze gently blows everywhere and makes everything pleasant.


The breeze - தென்றல்


everywhere - எல்லா இடங்களிலும்


and makes everything எல்லாவற்றிலும்


gently blows -மெல்லப் பரவி


 makes pleasant - இன்பமளிக்கிறது.


திருத்தப்பட்ட மொழியாக்கம்

பொன்னிறக் கதிரவன் அதிகாலையில் எழுந்து ஒளிமிக்க கதிர்களை வீசி இருளை விலக்குகிறது. வெண்ணிற மேகங்கள் அலையத் துவங்குகின்றன. வண்ணப் பறவைகள் காலைப் பாடலை இசையுடன் பாடத் துவங்குகின்றன. அழகான வண்ணத்துப் பூச்சிகள் பூக்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் நறுமணம் தென்றலில் கலக்கிறது. தென்றல் எங்கும் பரவி இன்பமூட்டுகிறது.

இயல் 1, மொழியாக்கம்

 இயல் 1


(மொழியாக்கம் என்பது சொல்லுக்குச் சொல் மொழி பெயர்ப்பு செய்வது அன்று. அது இடத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப அமைவதாக இருக்க வேண்டும்)

ஆங்கிலப் பகுதி:


(1) If you talk to a man in a language he understand, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart.


- Nelson Mandela




வாக்கியம்: 1

If you talk to a man in a language he understand, that goes to his head:


You - நீங்கள்


to a man- ஒரு மனிதரிடம்


in a language- ஒரு மொழியில்


If talk-பேசினால்


that- அது


goes to his head- அவரின் அறிவை சென்றடைகிறது


he understand- அவர் புரிந்து கொள்கிறார்.


திருத்தப்படாத மொழியாக்கம்:


நீங்கள் ஒரு மனிதரிடம் ஒரு மொழியில் பேசும் போது அது அவரின் அறிவைச் சென்றடைவதால் அவர் புரிந்து கொள்கிறார்.


வாக்கியம்: 2

If you talk to him in his one language that goes to his heart:


You- நீங்கள்


in his own language-அவருடைய சொந்த மொழியில் (தாய்மொழியில்)


Talk to him-அவரிடம் பேசினால்


that- அது


goes to his heart-அவருடைய இதயத்தைத் தொடுகிறது.


திருத்தப்படாத மொழியாக்கம்:


நீங்கள் அவருடைய தாய்மொழியில் அவரிடம் பேசினால், அது அவருடைய இதயத்தைத் தொடுகிறது.


திருத்தப்பட்ட மொழியாக்கம்


நீங்கள் ஒரு மனிதரிடம் ஒரு மொழியில் பேசினால், அது அவரின் அறிவைச் சென்றடைகிறது. நீங்கள் அவருடைய தாய்மொழியில் பேசினால், அது அவருடைய இதயத்தைத் தொடுகிறது.


- நெல்சன் மண்டேலா




(2). Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going.


-Rita mae Brown.


வாக்கியம் : 1


Language is the road map of a culture.


Language - மொழி


of a culture - பண்பாட்டின்


is the road map - வழிகாட்டி




வாக்கியம் : 2


It tells you where its people come from and where they are going.


where its people come from - மக்கள் எங்கிருந்து வருகிறார்கள்


and where they are going - எங்கு அவர்கள் செல்கிறார்கள்


It tells - அது கூறும்.




திருத்தப்பட்ட ஆங்கிலப் பகுதி

மொழி என்பது பண்பாட்டின் வழி காட்டி. அது மக்கள் எங்கே இருந்து வருகிறார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதனைக் கூறும்.


- ரீட்டா மே பிரவுன்.

3 மதிப்பெண் வினாக்கள், இயல் 8

 இயல் 8

3 மதிப்பெண் வினாக்கள்


1). சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

இன்றைக்கும் தேவையான அறங்கள்

  1. பலரும் புகழ் பெறுதல் வேண்டியே அறம் செய்கின்றனர். "இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது" என்ற அறம், இன்றைய புகழ் விரும்பிகளுக்குத் தேவையான அறமாகும்.
  2. "ஆட்சியாளர், செங்கோல் போன்று நேரிய ஆட்சி மேற்கொள்ளவேண்டும். நீர்நிலை பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமை ஆகும்" என்ற அறம், இன்றைய ஆட்சியாளர்களுக்கு மிகவும் தேவையானதாகும்.
  3.  "குற்றத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்.  'அறங்கூறு அவையம்' துலாக்கோல் போல நடுநிலை மிக்கது" என்ற அறம், இன்றைய நீதிமான்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.
  4.  "போரின் கொடுமையிலிருந்து பார்ப்பனர், பெண்டிர், நோயாளிகள், புதல்வர்களை பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும். தம்மைவிட வலிமையில் குறைந்தவருடன் போர் செய்வது கூடாது" என்ற அறம், இன்றைய உலக நாடுகளுக்குப் பொருந்துவதாகும்.
  5.  "தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி. செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனில் தப்புந பலவே.  இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது" என்ற அறம், இன்று அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறம் ஆகும்.

2). ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

  1. அளவடிகளைப் பெற்று வரும்
  2. இயற்சீர் பயின்று வரும். பிற சீரும் வரும். ஆனால், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர்கள் வாரா.
  3. ஆசிரியத் தளைகள் பயின்று வரும். பிற தளைகளும் கலந்து வரும்.
  4. குறைந்தது மூன்று அடிகளாகவும், புலவரின் மனக்கருத்திற்கேற்பப் பல அடிகளைப் பெற்றும் வரும்.
  5. அகவலோசை பெற்று வரும்.
  6. ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
3). வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை - இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

காலக்கழுதை


எங்கள் வீட்டுச் சாளரத்தின் கதவுகள் தேக்கு மரக்கட்டையால் ஆனவை.  கதவுகளில் தெருப்புழுதி வந்து ஒட்டியதாலும், கரையான் மண்வீடு கட்டியதாலும், முன்பு ஒருமுறை தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்து சாயம் அடித்தேன்.  காலஓட்டத்தில் கதவுகளில் மீண்டும் தூசிபடிந்து கரையான் அரித்துக் காணப்படுகிறது. மீண்டும் கையில் வாளித் தண்ணீர் எடுத்துக்கொண்டேன். கந்தைத்துணியைத் தண்ணீரில் நனைத்துச் சுத்தம் செய்தேன். சாயக்குவளையில் கட்டைத்தூரிகையை நனைத்து, கதவுகளுக்குச் சாயம் அடித்தேன்.  எத்தனை முறை புழுதி வந்து படிந்தாலும், கரையான் அரித்தாலும், மீண்டும் மீண்டும் கதவைச் சுத்தம் செய்யும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்.


4). 'சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.  (குறிப்பு : சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

உரைக்குறிப்பு

சுற்றுச்சூழலை பேணுவதே இன்றைய அறம்


பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் இப்போது 'சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில் பேச இருக்கிறேன்.

நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்ற காரணிகளே சுற்றுச்சூழல் ஆகும். நாம் வாழும் பூமியை  மாசுபடுத்தாமல் வைத்திருக்க வேண்டியது நமது கடமை.  அறிவியல் வளர்ச்சியின் பக்கவிளைவுகளாகப் பல்வேறு தொழிற்சாலைகளும் வாகனங்களும் நமது சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்தி வருகின்றன.  வளிமண்டலத்தில் கார்பனின் அளவு அதிகரித்து 'வெப்பமயமாதல்' நிகழ்வு ஏற்படுகிறது.  இதனால் பனிமலைகள் உருகுவதும், பருவகாலங்கள் மாறுவதும் அடிக்கடி நிகழ்கின்றன.  இதன் காரணமாக எழுகின்ற இயற்கைப் பேரழிவுகள், பெரிய அளவிலான உயிர்ச் சேதத்தையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்துகின்றன.

தொழிற்சாலைக் கழிவுகள், வேதிப்பொருட்கள், அணுக்கழிவுகள் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்துகின்றன.  இவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்துகின்றன. பயிர்களின் விளைச்சலைக் குறைக்கின்றன.  

சுற்றுச்சூழலைப் பேணுவதில் நாம் போதிய அக்கறை காட்டாமல் இருந்து வருகிறோம்.  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மையால் சுற்றுச்சூழல் விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன.  இது மிகவும் கவலைக்குரியதாகும்.  அறநெறியில் நின்று வாழ்க்கை நடத்தியவர்கள் நம் முன்னோர்.  அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர்.  பூமியைத் தெய்வமாகவும் விலங்குகளை உற்ற தோழனாகவும் பாவித்தார்கள்.  காடுகளையும் காட்டு விலங்குகளையும் பாதுகாத்தார்கள். அவர்களது வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி நாமும் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ வேண்டும்.  நாம் அனைவரும் 'சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்' என்ற உறுதிமொழியை ஏற்று சுயக்கட்டுப்பாட்டுடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருந்தால் போதும்.  பூமியின் இழந்த அழகை மீட்க முடியும்.  பசுமையான உலகம் படைக்க ஒன்றிணைவோம், வாரீர்!

  இதுவரை நான் பேச வாய்ப்பளித்த அன்பு உள்ளங்களுக்கு, என் நன்றியை உரித்தாக்குகிறேன். நன்றி, வணக்கம்!

- மலர் மகேந்திரன்

3 மதிப்பெண் வினாக்கள், இயல் 9

 இயல் 9

3 மதிப்பெண் வினாக்கள்


1). ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் 'தர்க்கத்திற்கு அப்பால்' கதைமாந்தர் வாயிலாக விளக்குக.

தர்க்கத்திற்கு அப்பால்...

வழக்கம்போல் தோல்வியை எண்ணி சென்றவர், அன்று தோற்றுப்போனார். அவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டது. அதைக் கொண்டாட விரும்பினார். தன்னிடம் ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே இருந்தது. ஊர் திரும்ப முக்கால் ரூபாய் ஒதுக்கினார். இரண்டு அணாவில் காபி அருந்தினார். ஊர் திரும்பவதற்கு வைத்திருந்ந பன்னிரண்டணா போக கையில் இருக்கும் இரண்டு அணாவை 'ஒரு ராஜாவைப் போல' செலவு செய்ய நினைத்தார். 

பார்வையற்ற பிச்சைக்காரனின் அலுமினிய பாத்திரத்தில் அந்த இரண்டணாவை இட்டு மகிழ்ந்தார். உண்மையிலேயே அந்த நாலணாவில், அந்த நல்ல நாளைக் கொண்டாடிவிட்ட நிறைவில் டிக்கெட் கவுண்டரில் பன்னிரண்டணா கொடுத்து டிக்கெட் கேட்டார். டிக்கெட் விலை ஓரணா கூடியிருந்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிடத்திற்குள் ஒரு அணாவுக்கு யாசிக்கும் நிலை வந்ததை எண்ணி வாழ்க்கையின் தர்க்கத்தை உணர்ந்தார். பிச்சைக்காரனின் அலுமினியப் பாத்திரத்தில் தான் இட்ட இரண்டணா தன்னுடையது என்றும், தனக்குச் சொந்தமில்லை என்றும், ஓரணா போட்டுவிட்டு இரண்டணா எடுத்துக் கொண்டால் என்ன என்றும் தனக்குள் தர்க்கம் புரிந்தார். 

ஓரணா போட்டுவிட்டு இரண்டணா எடுத்துக்கொண்டார். "பார்வையற்ற என்னை ஏமாற்றாதே" என்ற பிச்சைக்காரனின் சொல்லில் நெருப்புக்கட்டியைக் கையில் எடுத்தது போல் உணர்ந்தார்; அந்த இரண்டணாவை அலுமினியத் தட்டில் உதறினார்; "தெரியாமல் எடுத்து விட்டேன்" என்று குறுகினார். அவர் போக வேண்டிய ரயில் வந்து போய்விட்டது.  அன்று தவறவிட்ட ரயில் விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்திலிருந்து அவர் தப்பித்தது, தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.


2). "சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது" - இடஞ்சுட்டிப் பொருள் தருக.

சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது 

இடம்: நாகூர் ரூமி எழுதிய 'சித்தாளு' என்ற கவிதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்: அடுத்த வேளை உணவுக்காக அலுக்காமல் கல்சுமக்கும் சித்தாளின் மனத்தில் எத்தகைய துயரங்கள் இருந்தாலும், அவற்றைத் தலையில் உள்ள செங்கற்கள் அறியாது.


3). எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

'எவையெல்லாம் அறியேன்' என்று கருணையன் கூறியவை:

  1. உயிர் பிழைக்கும் வழி அறியேன்.
  2. நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்.
  3. உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகை அறியேன்.
  4. காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்.
4). கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

தற்குறிப்பேற்ற அணி


அணி இலக்கணம்: இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

எடுத்துக்காட்டு:
 'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 'வாரல்' என்பனபோல் மறித்துக் கைகாட்ட'

பாடலின் பொருள்: கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் என தடுப்பது போல, கை காட்டியது என்பது பொருள்.

அணிப் பொருத்தம்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக் கருதி கொடிகள் கையசைத்து 'இம்மதுரைக்குள் வரவேண்டா' என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

3 மதிப்பெண் வினாக்கள், இயல் 7

 இயல் 7

3 மதிப்பெண் வினாக்கள்


1). "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்


இடம்: ம.பொ.சி. அவர்களின் 'எனது  போராட்டம்' என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. ஆந்திர மாநிலத்தின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதிய போது, அதை எதிர்த்து ம. பொ. சி. அவர்கள் சென்னை மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டி, "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார்.

விளக்கம்: சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து ஆந்திரம் அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம், ஆந்திரத்தின் தலைநகராகச் சென்னை இருக்க வேண்டும் என்ற இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கள் நிலவின. இதை எதிர்த்து ம.பொ.சி. அவர்கள், மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் ஒன்றை அப்போதைய மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டி, சென்னை பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து, "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார்.


2). 'முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாகக் கு. ப. ராஜகோபாலன் கவிபாடுகிறார்?

ஏர் புதிதா?

  1. முதல் மழை விழுந்ததும் மேல்மண் பதம் ஆகிறது; வெள்ளி முளைக்கிறது; கிழக்கு வெளுக்கிறது. 
  2. காளைகளை விரைந்து ஓட்டிக் கழனி செல்கின்றனர். பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்ல வேளையில் கொழுவை நாட்டுகின்றனர்.  
  3. மாட்டைப் பூட்டிக் காட்டைக் கீறுகின்றனர். அவர்களின் ஏரும் காரும் புதிதன்று; நாளும் நட்சத்திரமும் புதிது; ஊக்கமும் உரமும் புதிது. 
  4. மாட்டைத் தூண்டி, கொழுவை அமிழ்த்துகின்றனர். மண் புரளுகிறது; மழை பொழிகிறது; நிலம் சிலிர்க்கிறது; நாற்று நிமிர்கிறது; எல்லைத் தெய்வம் காவல் காக்கிறது.

3).  பின்வரும் பத்தியைப் படித்து மையக் கருத்தை எழுதுக.

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவான இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்துத் தொடக்கத்தில் அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.  
சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் பழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிசப் பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன.  எனினும், இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது.  இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்தி கோளின் வமிச பரம்பரை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சி ஆண்டு, போர் வெற்றிகள், வரலாறு, வாழ்த்து, சாசனம் எழுந்த நிகழ்ச்சி ஆகியவை காணப்படும்.  முதல் இராஜராஜனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதில் சோழ வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. பின்னர் வந்த மெய்க்கீர்த்திகள் அவற்றை விரித்துக் கூறுகின்றன.


4). "பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
 பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
 தூசும் துகிரும் ஆரமும் அகிலும்" 

அ) இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
ஈ). காருகர் - பொருள் தருக.
உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

அ). இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்

ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
கர்வனர் 
ட்டினும் 
ருத்தி

தூசும்
துகிரும்

ர்வமும்
கிலும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

ர்வனர் 
ர வீதியும்

ட்டினும் 
ட்டு

ஈ). காருகர் - பொருள் தருக.

காருகர் - நெய்பவர்

உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

சந்தனம், அகில்.


5). அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான். அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

  1. அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான் - இது வஞ்சித் திணை ஆகும்.
  2. வஞ்சித் திணை: மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி, வஞ்சிப் பூவைச் சூடி போருக்குச் செல்வது வஞ்சித் திணை ஆகும்.
  3. திணை விளக்கம்: அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டைக் கைப்பற்ற விரும்புகிறான். மண்ணாசை காரணமாக வஞ்சிப் பூவைச் சூடி போருக்குச் செல்வதால், இது வஞ்சித்திணை ஆயிற்று.