Tuesday, March 29, 2022

இலக்கணம் பொது 2 மதிப்பெண் வினாக்கள்

  1. திணை என்றால் என்ன? உயர்திணை என்றால் என்ன? அஃறிணை என்றால் என்ன?
    1. திணை என்பது ஒழுக்கம் ஆகும்
    2. உயர்திணை என்பது உயர்ந்த ஒழுக்கம் உடைய மனிதர்களைக் குறிக்கும்.
    3. அஃறிணை என்பது ஒழுக்கமில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்
  2. பால் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    1. பால் என்பது திணையின் உட்பிரிவு
    2. பால் ஐந்து வகைப்படும். அவை,
      1. ஆண்பால்
      2. பெண்பால்
      3. பலர்பால்
      4. ஒன்றன்பால்
      5. பலவின்பால்.
  3. உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
    1. ஆண்பால்
    2. பெண்பால்
    3. பலர்பால்
  4. அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
    1. ஒன்றன்பால்
    2. பலவின்பால்
  5. ஒன்றன்பால் என்றால் என்ன?
    • அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்
  6. பலவின்பால் என்றால் என்ன?
    • அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
  7. இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • இடம் மூன்று வகைப்படும். அவை,
      1. தன்மை
      2. முன்னிலை
      3. படர்க்கை
  8. தன்மைப் பெயர்கள் யாவை?
    • நான், யான், நாம், யாம்...
  9. முன்னிலைப் பெயர்கள் யாவை?
    • நீ, நீர், நீவிர், நீங்கள்
  10. படர்க்கைப் பெயர்கள் யாவை?
    • அவன், அவள், அவர்
    • அது, அவை...
  11. வழாநிலை என்றால் என்ன?
    • இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்
  12. வழு என்றால் என்ன?
    • இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
  13. வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • வழு ஏழு வகைப்படும் அவை,
      1. திணை வழு
      2. பால் வழு
      3. இட வழு
      4. கால வழு
      5. வினா வழு
      6. விடை வழு
      7. மரபு வழு
  14. செழியன் வந்தது, கண்ணகி உண்டான், நீ வந்தேன், நேற்று வருவான்- இவை எவ்வகை வழுக்கள் என்று கூறு?
    1. செழியன் வந்தது-திணை வழு
    2. கண்ணகி உண்டான்-பால் வழு,
    3. நீ வந்தேன்-இட வழு,
    4. நேற்று வருவான்-கால வழு
  15. ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்- எவ்வகை வழு?
    • வினா வழு
  16. 'கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்கு, 'கண்ணாடி பைக்குள் இருக்கிறது' என்று விடை அளித்தல்-எவ்வகை வழு?
    • விடை வழு
  17. தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந் தோட்டம் என்று கூறுதல் -எவ்வகை வழு?
    • மரபு வழு
  18. வழுவமைதி என்றால் என்ன?
    • இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்
  19. திணை வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக?
    • "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும்
    • இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது
  20. பால் வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
    • "வாடா ராஜா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது, பால் வழுவமைதி ஆகும்.
    • இங்கு உவப்பின் காரணமாக பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
  21. இடவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இட வழுவமைதி ஆகும்.
  22. காலவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்
    • இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாக கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித் தன்மையை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
  23. மரபு வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    • "கத்தும் குயிலோசை- சற்றே வந்து காதிற் படவேணும்"-பாரதியார்
    • குயில் கூவும் என்பதே மரபு. குயில் கத்தும் என்பது மரபு வழு.
    • இங்குக் கவிதையில் இடம் பெற்று இருப்பதால் இது மரபுவழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  24. "அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்" என்பது எவ்வகை வழுவமைதி எனக் காட்டு.
    1. இத்தொடர், "அமைச்சர் நாளை விழாவிற்கு வருவார்" என்று அமைதல் வேண்டும்.
    2. அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை.
    3. ஏனெனில், அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
  25. "இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான். -இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
    • இத்தொடர், கண்ணன் என்பவர் தனக்குத் தானே கூறிக்கொண்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.
    • தன்னைத் தன்மையிடத்தில் கூறுவதற்குப் பதிலாக படர்க்கை இடத்தில் கூறியுள்ளார்.
    • இவ்வாறு கூறுவது இலக்கண ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதால், இது இடவழுவமைதியாகும்.
  26. சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்-இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
    1. "சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடினோம்" என்று வந்திருக்க வேண்டும்.
    2. இறந்தகாலம் வருவதற்குப் பதிலாக எதிர்காலம் வந்துள்ளது.
    3. எனவே, இது கால வழுவமைதி ஆகும்.
  27. செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.-இது எவ்வகை வழுவமைதி என்று கூறு.
    1. இத்தொடர், "செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறான்" என்று வந்திருக்க வேண்டும்.
    2. ஆண்பால் வருவதற்குப் பதிலாகப் பலர்பால் வந்துள்ளது.
    3. எனவே, இது 'பால் வழுவமைதி' ஆகும்.
  28. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. தந்தை, "மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா" என்று சொன்னார். (ஆண்பாற் பெயர்களை பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக)
    • தாய், "மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா" என்று சொன்னார்.
  29. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
    • அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பினார்
  30. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. "இதோ முடித்து விடுவேன்" என்பது செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
    • இதோ முடித்து விட்டேன்
  31. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையை படர்க்கையாக மாற்றுக)
    • நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை
  32. அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக?
    • குழந்தை அழுகிறது, பார்.

நீதி வெண்பா 2 மதிப்பெண் வினாக்கள்

  1. "கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது? "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது?
    • கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -சங்க இலக்கியம்
    • "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -திருக்குறள்
  2. அறிவு பெறுவது எவ்வாறு?
    • பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல, நூல்களை நாடிச்சென்று அறிவு பெற வேண்டும்.
  3. கல்வியின் பயன் யாது?
    1. அருளைப் பெருக்குவது
    2. அறிவைச் சீராக்குவது
    3. மயக்கம் அகற்றுவது
    4. அறிவுக்குத் தெளிவு தருவது
    5. உயிருக்கு அரிய துணையாய் இருப்பது
    6. இன்பம் சேர்ப்பது
  4. கல்வியை ஏன் கற்க வேண்டும்?
    1. அருளைப் பெருக்குவதால்
    2. அறிவைச் சீராக்குவதால்
    3. மயக்கம் அகற்றுவதால்
    4. அறிவுக்குத் தெளிவு தருவதால்
    5. உயிருக்கு அரிய துணையாய் இருப்பதால்
    6. இன்பம் சேர்ப்பதால் கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும்
  5. சதாவதானம் குறிப்பு வரைக.
    1. சதம் என்றால் நூறு என்று பொருள்
    2. அவதானம் என்றால் கவனித்தல்
    3. ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளித்தலே சதாவதானம் எனப்படும்.
  6. செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பு வரைக.
    1. சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்.
    2. ஊர்: கன்னியாகுமரி மாவட்டம்- இடலாக்குடி
    3. 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
    4. சீறாப் புராணத்திற்கு உரை எழுதியவர்
    5. 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப் பெற்றார்.
  7. செய்குத்தம்பிப் பாவலருக்கு அரசு செய்த சிறப்பு என்ன?
    1. இவரது நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும்  அமைக்கப்பட்டுள்ளது
    2. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

வினா விடை வகைகள் பொருள்கோள் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • வினா 6 வகைப்படும். அவை,
      1. அறி வினா
      2. அறியா வினா
      3. ஐய வினா
      4. கொளல் வினா
      5. கொடை வினா
      6. ஏவல் வினா
  2. அறி வினா என்றால் என்ன?
    1. தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது அறி வினா ஆகும்
    2. எடுத்துக்காட்டு: மாணவரிடம், "இந்தக் கவிதையின் பொருள் யாது?" என்று ஆசிரியர் கேட்டல்
  3. அறியா வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
    2. எடுத்துக்காட்டு: ஆசிரியரிடம், "இந்த கவிதையின் பொருள் யாது?" என்று மாணவர் கேட்டல்
  4. ஐய வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. தான் ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது
    2. எடுத்துக்காட்டு: "இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?" என வினவுதல்
  5. கொளல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது
    2. எடுத்துக்காட்டு: "ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?" என்று நூலகரிடம் வினவுதல்
  6. கொடை வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது
    2. எடுத்துக்காட்டு: "என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?" என்று கொடுப்பதற்காக வினவுதல்.
  7. ஏவல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுதல்
    2. எடுத்துக்காட்டு: "வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?" என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்
  8. விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • விடை எட்டு வகைப்படும். அவை,
      1. சுட்டு விடை
      2. மறை விடை
      3. நேர் விடை
      4. ஏவல் விடை
      5. வினா எதிர் வினாதல் விடை
      6. உற்றது உரைத்தல் விடை
      7. உறுவது கூறல் விடை
      8. இனமொழி விடை
  9. சுட்டு விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. சுட்டிக் கூறும் விடை
    2. "கடைத்தெரு எங்கு உள்ளது?" என்ற வினாவிற்கு 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறல்
  10. மறை விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. மறுத்துக் கூறும் விடை
    2. "கடைக்கு போவாயா?" என்ற கேள்விக்குப் 'போக மாட்டேன்' என மறுத்துக் கூறல்
  11. நேர் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. உடன்பட்டுக் கூறும் விடை
    2. "கடைக்கு போவாயா?" என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறல்
  12. ஏவல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை
    2. "இது செய்வாயா?" என்று வினவியபோது, 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது
  13. வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது
    2. "என்னுடன் ஊருக்கு வருவாயா?" என்ற வினாவிற்கு, 'வராமல் இருப்பேனா?' என்று கூறுவது
  14. உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல்
    2. "நீ விளையாட வில்லையா?" என்ற வினாவிற்குக், 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது
  15. உறுவது கூறல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்
    2. "நீ விளையாடவில்லையா?" என்ற வினாவிற்குக், 'கால் வலிக்கும்' என்று உறுவதைக் கூறுவது
  16. இனமொழி விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்
    2. "உனக்கு கதை எழுதத் தெரியுமா?"  என்ற வினாவிற்குக் "கட்டுரை எழுதத் தெரியும்" என்று கூறுவது.
  17. பொருள்கோள் என்றால் என்ன?
    • செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள் என்று பெயர்
  18. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை,
      1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
      2. மொழிமாற்றுப் பொருள்கோள்
      3. நிரல்நிறைப் பொருள்கோள்
      4. விற்பூட்டுப் பொருள்கோள்
      5. தாப்பிசைப் பொருள்கோள்
      6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
      7. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
      8. அடிமறி மாற்றுப் பொருள்கோள்
  19. ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனப்படும்
    2. எடுத்துக்காட்டு:அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
  20. நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது 'நிரல்நிறைப் பொருள்கோள்' எனப்படும்
    2. எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
  21. நிரல்நிறைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    • நிரல்நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும். அவை,
      1. முறை நிரல்நிறைப் பொருள்கோள்
      2. எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
  22. முறை நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
    1. செய்யுளியல் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும்
    2. எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
  23. எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள்கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்
    2. எடுத்துக்காட்டு: விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
  24. கொண்டுகூட்டு பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
    1. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆகும்
    2. எடுத்துக்காட்டு: ஆலத்து மேல குவளை குளத்துல வாலின் நெடிய குரங்கு
  25. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
    • "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?" என்ற வினாவுக்கு "இந்த வழியாகச் செல்லுங்கள்" என்று விடை அளிப்பது.
      1. "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?"-அறியா வினா
      2. "இந்த வழியாகச் செல்லுங்கள்"-சுட்டு விடை
  26. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
    • "எனக்கு எழுதித் தருகிறாயா?" என்ற வினாவுக்கு, "எனக்கு யார் எழுதித் தருவார்கள்?" என்று விடையளிப்பது.
      1. "எனக்கு எழுதித் தருகிறாயா?" -ஏவல் வினா
      2. "எனக்கு யார் எழுதித் தருவார்கள்- ஏவல் விடை
  27. உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக
    • பாமகள்: வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?- அறியா வினா
    • ஆதிரை: ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்- நேர் விடை
    • பாமகள்: அப்படியா! என்ன தலைப்பு?- அறியா வினா
    • ஆதிரை: கல்வியில் சிறக்கும் தமிழர்!- (நேர் விடை) நீங்கள் கவியரங்கத்திற்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?- ஐய வினா
    • பாமகள்:ஏன் வராமல்?...வினா எதிர் வினாதல் விடை

கம்பராமாயணம் 2 மதிப்பெண் வினாக்கள்

  1. கவிஞனின் எல்லை எது?
    • கலையின் உச்சம் பெறுவதுதான் கவிஞனின் எல்லை ஆகும்
  2. 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் யார்?
    • பாரதியார்
  3. கம்பனைப் பற்றி பாரதியார் கூறுவது என்ன?
    • 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பாரதியார் பெருமைப்படுகிறார்
  4. கவிதை எனப்படுவது யாது?
    • உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை
  5. கவிஞனின் உலகம் பற்றிக் குறிப்பிடு
    1. கவிஞனின் உலகம் இட எல்லை அற்றது
    2. கால எல்லை அற்றது
    3. கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியை, சொல்லைக் கொண்டு எழுப்புகிறான்
    4. அவன் கண்ட காட்சிகள் அதற்குத் துணைபுரிகின்றன
    5. கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன
    6. விழுமியங்கள் துணைபுரிகின்றன
    7. ஒப்புமைகள் துணைபுரிகின்றன
    8. கலையின் உச்சம் பெறுவதுதான் அவன் எல்லை ஆகிறது.
  6. சரயு ஆறு பாயும் விதத்தைக் கூறு
    1. மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி வேலியை உடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் ஆகிய அனைத்திலும் சரயு ஆறு பாய்ந்து ஓடுகிறது.
    2. அது, ஒரு உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போலப் பல இடங்களில் பாய்கிறது.
  7. இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பர் எவ்வாறு கவி பாடுகிறார்?
    1. குளிர்ந்த சோலைகளில் மயில்கள் நடனமாட,
    2. தாமரை மலர்கள் விளக்காக ஒளிர,
    3. மேகங்கள் மத்தளம் ஒலிக்க,
    4. குவளை மலர்கள் கண்விழித்துப் பார்க்க,
    5. தெளிந்த அலைகளை உடைய நீர்நிலைகள் திரைச்சீலையாய்  விரிய,
    6. மகர யாழின் இசையை வண்டுகள் பாடுகின்றன. 
  8. ஒன்றின் இருப்பால் மற்றொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக் கொண்டு ஒருநாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி பற்றி எழுது.
    1. கோசல நாட்டில் வறுமை சிறிதுமில்லை என்பதால், கொடைக்கு அங்கே இடமில்லை.
    2. நேருக்குநேர் போர்புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக் காட்ட வாய்ப்பு இல்லை.
    3. பொய்ம்மொழி இல்லாமையால் மெய்மை தனித்து விளங்க வில்லை.
    4. மற்ற பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை.
  9. இராமனை வருணிக்கும் கம்பன்,  தன் இயலாமையை எவ்வாறு இயன்றதாக்குகிறான்?
    1. பகலவனின் ஒளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு கரைந்து விடுகிறது.
    2. இடையே இல்லை என்று சொல்லும்படியாக, நுண்ணிய இடையை உடைய சீதையோடும் இளையவன் இலக்குவனோடும் இராமன் நடந்து சென்றான்.
    3. அவனது நிறம் மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? என்று வர்ணித்த கம்பன், ஐயோ! இவன் ஒப்பற்ற அழியாத அழகினை உடையவன் என்று சொல்வதன் மூலமாக தன் இயலாமையை இயன்றதாக்குகிறான்.
  10. "ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா" என்ற பாரதியின் சொல்லிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கம்பனின் கூற்று யாது?
    1. ஆழமும் பெரிய அலைகளையுமுடைய கங்கை ஆற்றை பரதன் முதலானோர் கடந்து செல்வார்களா?
    2. யானைகள் கொண்ட சேனையைக் கண்டு புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்?
    3. 'தோழமை' என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா?
    4. தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால், அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என்று உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா?
  11. கும்பகருணனை எழுப்பும் காட்சியை விவரிக்க.
    1. உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது
    2. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
    3. காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற, வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே இனிப் படுத்து உறங்குவாயாக!
  12. இராமாயணம் -குறிப்பு வரைக
    1. இராமனது வரலாற்றைக் கூறும் நூல்
    2. இந்நூலுக்கு கம்பர் 'இராம அவதாரம்' எனப் பெயரிட்டார்
    3. இந்நூல் ஆறு காண்டங்களை உடையது
    4. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
  13. கம்பர் - குறிப்பு வரைக.
    1. சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
    2. திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
    3. 'விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்று புகழப்பெற்றவர்.
    4. "கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" போன்ற முதுமொழிகளுக்கு உரியவர்.
    5. சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.

ஒரு மதிப்பெண் வினா-விடை இயல் 4 5 6

ஒரு மதிப்பெண் வினா விடை
1) வித்துவக்கோடு எங்கு உள்ளது? கேரள மாநிலம் பாலக்காடு
2) வித்துவக்கோட்டில் உள்ள இறைவன் யார்? உய்யவந்த பெருமாள்
3) பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?குலசேகர ஆழ்வார்
4) பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக உள்ளது? ஐந்தாம் திருமொழி
5) பெருமாள் திருமொழியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எத்தனை?105
6) குலசேகர ஆழ்வாரின் காலம் என்ன? எட்டாம் நூற்றாண்டு
7) ஆறறிவுடைய மக்களை எவ்வாறு அழைப்பர்? உயர்திணை
8) மக்கள் தவிர மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் எவ்வாறு அழைப்பர்?அஃறிணை
9) திணையின் உட்பிரிவு யாது?பால்
10) உயர்திணை எத்தனை பால் பிரிவுகளை உடையது?3
11) அஃறிணை எத்தனை பால் பிரிவுகளை உடையது?2
12) இடம் எத்தனை வகைப்படும்?3
13) இலக்கண முறையுடன் பிழையின்றி எழுதுவதும் பேசுவதும் வழாநிலை  எனப்படும்
14) இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
15) இலக்கணப் பிழைகள் இல்லாது இருப்பின் அவை______ எனப்படும்(வழாநிலை)
16) கண்ணகி உண்டான் என்பது______வழு(பால்வழு)
17) செழியன் வந்தது என்பது______வழு(திணை வழு)
18) நீ வந்தேன் என்பது_____வழு(இட வழு)
19) நேற்று வருவான் என்பது________வழு(கால வழு)
20) ஒரு விரலைக் காட்டி ‘சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்பது_______வழு(வினா வழு)
21) “ எங்கே இருக்கிறார்?” என்ற வினாவிற்குக் “கண்ணாடி பைக்குள் இருக்கிறது” என்று விடை அளித்தல்________வழு(விடை வழு)
22) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல்_______(மரபு வழு)
23) இலக்கண முறைப்படி பிழை உடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது_________(வழுவமைதி)
24) “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது_________வழுவமைதி(திணை வழுவமைதி)
25) “வாடா ராஜா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது______வழுவமைதி(பால் வழுவமைதி)
26) மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது_______வழுவமைதி(இட)
27) ‘குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' என்பது____வழுவமைதி(கால)
28) “கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் படவேண்டும்” என்று பாரதியார் பாடுவது________வழுவமைதி(மரபு)
29) ‘அமைச்சர் நாளை விழாவிற்கு வரு கிறார்' என்பது_____வழுவமைதி(கால)
30) ‘அவனும் நீயும் அலுவலரை பார்க்க ஆயத்தமாகுங்கள்' என்பது________வழுவமைதி(இட)
31) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்-என்பது_________வழுவமைதி(இட)
32) “செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்” என்பது _______வழுவமைதி(இட)
33) “சிறுவயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்” என்பது_______வழுவமைதி(கால)
34) “அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது” என்பது_____வழு(திணை)
35) “அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை' என்பது_____வழுவமைதி(இட)
36) “குழந்தை அழுகிறான், பார்” என்பது_______வழு(திணை)
37) ‘உனதருளே பார்ப்பன் அடியேனே' யார் யாரிடம் கூறியது_______,_______(குலசேகர ஆழ்வார், இறைவனிடம்)
38) குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.இது _______வழுவமைதி(பால்)
39) பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். இது___________வழுவமைதி(திணை)
40) வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்.இது____________வழுவமைதி(கால)
41) “சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்பான்” என்று இறமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயை பற்றிக் கூறினார்.இது_________வழு(திணை)
42) ‘பெய்த மழை' என்பதன் வினைத்தொகை_______(பெய்மழை)
43) மீளாத்துயர் என்பதன் எதிர்மறை________(மீண்ட துயர்)
44) அவிர்தல் பொருள் தருக(ஒளிர்தல்)
45) அழல் பொருள் தருக(நெருப்பு)
46) உவா பொருள் தருக(முழு நிலவு)
47) கங்குல் பொருள் தருக(இரவு)
48) கனலி பொருள் தருக(சூரியன்)
49) புயலுக்குப் பின்- எதிர்மறையாக எழுதுக(புயலுக்கு முன்)
50) பெரியவரின் அமைதி-எதிர்மறையாக எழுதுக(சிறுவனின் அமைதி)
51) அருகில் அமர்க- எதிர்மறையாக எழுதுக(தொலைவில் அமர்க)
52) மறைத்து காட்டு- எதிர்மறையாக எழுதுக(வெளிப்படையாகக் காட்டு)
53) கொடுத்துச் சிவந்த- எதிர்மறையாக எழுதுக(கொடுக்காமல் சிவந்த)
54) Nanotechnology-கலைச்சொல் தருக(மீநுண் தொழில்நுட்பம்)
55) Biotechnology-கலைச்சொல் தருக(உயிரித் தொழில்நுட்பம்)
56) Ultraviolet rays-கலைச்சொல் தருக(புற ஊதாக் கதிர்கள்)
57) Space technology-கலைச்சொல் தருக(விண்வெளி தொழில்நுட்பம்)
58) Cosmic rays-கலைச்சொல் தருக(விண்வெளிக் கதிர்கள்)
59) Infrared red-கலைச்சொல் தருக(அகச்சிவப்பு கதிர்)
60) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்_________(செய்குத்தம்பி பாவலர்)
61) செய்குத்தம்பி பாவலரின் ஊர்________(கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி)
62) செய்குத்தம்பிப் பாவலர் _____ வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றார்(15)
63) சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்________(செய்குத்தம்பி பாவலர்)
64) _____________அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்துகாட்டி சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர் செய்குத்தம்பி பாவலர்.(சென்னை விக்டோரியா)
65) _______நாளில் செய்குத்தம்பிப் பாவலர் சதாவதானி பட்டம் பெற்றார்(1907 மார்ச் 10)
66) செய்குத்தம்பி பாவலர் மணிமண்டபம் ________ல் உள்ளது(இடலாக்குடி)
67) சதம் என்றால் ______ என்பது பொருள்(நூறு)
68) கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம்______(சங்க இலக்கியம்)
69) தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறும் நூல் ________(திருக்குறள்)
70) கல்வியைப் போற்றுவதை _________ காலத்திலிருந்து தமிழர் தொடர்கின்றனர்(சங்க)
71) உயிருக்கு அரிய துணையாய் இருப்பது_______(கல்வி)
72) மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தருவது_______(கல்வி)
73) அருளைப் பெருக்கி அறிவைத் திருத்துவது_______(கல்வி)
74) வினா _____ வகைப்படும்(6)
75) தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது_______வினா(அறி)
76) தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது________வினா(அறியா)
77) ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது______வினா(ஐய)
78) தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது_______வினா(கொளல்)
79) பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது________வினா(கொடை)
80) ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுவது________வினா(ஏவல்)
81) “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் செல்லுதல்_________வினா(ஏவல்)
82) “என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?” என்று கொடுப்பதற்காக வினவுதல்_________வினா(கொடை)
83) “ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?” என்று நூலகரிடம் வினவுதல்________வினா(கொளல்)
84) “இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?” என வினவுதல்______வினா(ஐய)
85) ஆசிரியரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று மாணவர் கேட்டல்______வினா(அறியா)
86) மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் கேட்டல்______வினா(அறி)
87) விடை_____வகைப்படும்(8)
88) “கடைத்தெரு எங்கு உள்ளது?” என்ற வினாவிற்கு, “வலப்பக்கத்தில் உள்ளது” எனக் கூறல்______விடை(சுட்டு)
89) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போக மாட்டேன்” என மறுத்துக் கூறல்_____விடை(மறை)
90) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்_______விடை(நேர்)
91) “இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது_______விடை(ஏவல்)
92) “என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு “வராமல் இருப்பேனா?” என்று கூறுவது_______விடை(வினா எதிர் வினாதல்)
93) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கிறது” என்று உற்றதை உரைப்பது______விடை(உற்றது உரைத்தல்)
94) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கும்” என்று உறுவதை உரைப்பது_______விடை(உறுவது கூறல்)
95) “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது________விடை(இன மொழி)
96) பொருள்கோள்_____வகைப்படும்(8)
97) செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் __________ என்று பெயர்.(பொருள்கோள்)
98) ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால், அது __________ பொருள்கோள் ஆகும்.(ஆற்று நீர்)
99) ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது _______ பொருள்கோள் ஆகும்.(நிரல் நிறை)
100) நிரல்நிறைப் பொருள்கோள் _____ வகைப்படும்(2)
101) செய்யுளில் எழுவாய்களை வரிசைபடுத்தி அவை  ஏற்கும் பயனிலை களை நிரல்நிறையாகக் கொண்டு பொருள் கொள்ளுதல் _______________(முறை நிரல் நிறை) பொருள்கோள் ஆகும்.
102) செய்யுளில் ஏழுவாய்களை வரிசைப் படுத்தி அதை ஏற்கும் பயனிலைகளைக் கொண்டு பொருள்கொள்ளுதல் _______நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்(எதிர் நிரல் நிறை)
103) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் ________________(எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்)
104) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்__________(முறை நிரல்நிறைப் பொருள்கோள்)
105) ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு –இப்பாடலில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
106) ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டிப் பொருள் கொள்வது____________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
107) “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?”-இது எவ்வகை வினா?(அறியா வினா)
108) “இந்த வழியாகச் செல்லுங்கள்”-இது எவ்வகை விடை?(சுட்டு விடை)
109) “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(வினா எதிர் வினாதல் விடை)
110) “ஆதிரை, ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?”-எவ்வகை வினா?(அறியா வினா)
111) “கவி அரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்”-எவ்வகை விடை?(நேர் விடை)
112) “நீங்கள் கவி அரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?”- எவ்வகை வினா?(ஐய வினா)
113) “இங்கு நகரப் பேருந்துகள் நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது எவ்வகை வினா?(அறியா வினா)
114) “அதோ, அங்கே பேருந்து நிற்கும்” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(சுட்டு விடை)
115) ‘அருந்துணை’ என்பதைப் பிரித்து எழுதுக(அருமை+ துணை)
116) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”-என்ற பாடல் வரியில் குறிப்பிடப்படுவது எது?(கல்வி)
117) “மின்விளக்கின் சொடுக்கு எந்தப் பக்கம் இருக்கிறது?”-எவ்வகை வினா?(அறியா வினா)
118) “சொடுக்கிய போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?”-எவ்வகை வினா?(ஐய வினா)
119) முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்-இதில் அமைந்துள்ள பொருள்கோள்________(ஆற்றுநீர்ப் பொருள்கோள்)
120) Lute music-கலைச்சொல் தருக(யாழிசை)
121) Chamber-கலைச்சொல் தருக(அறை)
122) To look up-கலைச்சொல் தருக(எட்டிப் பார்)
123) Grand-daughter-கலைச்சொல் தருக(பேத்தி)
124) Rote-கலைச்சொல் தருக(நெட்டுரு)
125) Didactic compilation-கலைச்சொல் தருக(நீதி நூல் திரட்டு)
126) “அருணா பாடினாள்” என்பதைப் பெயரெச்சத்தொடராக்கு(பாடிய அருணா)
127) ‘ஓடிய அருணா' என்பதை வினையெச்சத் தொடராக்கு.(ஓடி வந்தாள்)
128) ‘ஓடிய அருணா' என்பதை விளித்தொடராக்கு(அருணா, ஓடு)
129) “அம்மா சொன்னார்” என்பதை பெயரெச்சத் தொடராக்கு(சொன்ன அம்மா)
130) “அம்மா சொன்னார்” என்பதை விளித்தொடராக்கு(அம்மா, சொல்)
131) ‘தா' என்னும் வேர்ச்சொல்லைப் பயன்படுத்தி எழுவாய்த் தொடர் அமைக்க.(முருகன் தந்தான்)
132) “துளிர் பார்த்தாள்” என்பதைப் பெயரெச்சத் தொடராக்கு
133) “குழந்தை வந்தது” என்பதை வினையெச்சத் தொடராக்கு.
134) “மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்”- இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமைமை செய்க.
135) “கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
136) “வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களை கற்றுத் தருகிறது”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
137) “ மாணவர்கள் அனைவரும் தனித்தனியே எழுதித் தரவேண்டும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
138) “தார் போன்ற நிறமுண்டு. கரியுமில்லை. பார்முழுதும் பரந்து திரிவேன் மேகமும் இல்லை” -நான் யார்?(காகம்)
139) மன்றல்-பொருள் தருக(திருமணம்)
140) அடிச்சுவடு-பொருள் தருக(நடந்து வந்த காலடித்தடம்)
141) அகராதி-பொருள் தருக(அகரமுதலி)
142) தூவல்-பொருள் தருக(பேனா)
143) மருள்-பொருள் தருக(மயக்கம்)
144) Emblem-கலைச்சொல் தருக(சின்னம்)
145) Thesis-கலைச்சொல் தருக(ஆய்வேடு)
146) Intellectual-கலைச்சொல் தருக(அறிவாளர்)
147) Symbolism-கலைச்சொல் தருக(குறியீட்டியல்)
148) உள்ளதை உணர்ந்தபடி கூறுவது______(கவிதை)
149) “கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்” என்று பெருமைப்படுபவர்________(பாரதியார்)
150) ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பல இடங்களில் பாயும் ஆறு _______(சரயு ஆறு)
151) கொடை இல்லாத நாடு எது?(கோசலை)
152) “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று பாடியவர்__________(பாரதியார்)
153) ஏழைமை வேடன் யார்?(குகன்)
154) வேழ நெடும்படை கொண்டவர் யார்?(பரதன்)
155) தோழமை என்று சொன்னவர் யார்?(இராமன்)
156) கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி________ எனப் பெயரிட்டார்(இராமாவதாரம்)
157) இராமாயணம் ____ காண்டங்களை உடையது(6)
158) இராமாயணப் பாடல்கள் _____ நயம் மிக்கவை.(சந்த)
159) கம்பரின் ஊர்________(திருவழுந்தூர்)
160) கம்பரை ஆதரித்த வள்ளல்___________(சடையப்ப வள்ளல்)
161) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்தும்________ஐந்திணை(அன்பின்)
162) அகத் திணை எத்தனை வகைப்படும்?(7)
163) முதற்பொருள் என்பது_______,_________(நிலமும் பொழுதும்)
164) பொழுது எத்தனை வகைப்படும்?(2)
165) சிறுபொழுது எத்தனை வகைப்படும்?(6)
166) பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?(6)
167) கார் காலம் என்பது_______,______மாதங்கள்(ஆவணி புரட்டாசி)
168) குளிர்காலம் என்பது______&_________(ஐப்பசி கார்த்திகை)
169) முன்பனிக்காலம் என்பது________&________( மார்கழி தை)
170) பின்பனிக் காலம் என்பது______&______(மாசி பங்குனி)
171) இளவேனில் காலம் என்பது________&_______(சித்திரை வைகாசி)
172) முதுவேனில் காலம் என்பது______&_______(ஆனி ஆடி)
173) காலை என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 6 மணி முதல் 10 மணி வரை)
174) நண்பகல் என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 10 மணி முதல் 2 மணி வரை)
175) எற்பாடு என்பது_____மணி முதல்____மணி வரை(பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை)
176) மாலை என்பது_____மணி முதல்____மணி வரை(மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை)
177) யாமம் என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை)
178) வைகறை என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை)
179) குறிஞ்சித் திணைக்கு உரிய சிறுபொழுது______(யாமம்)
180) முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது ___________(மாலை)
181) மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது__________(வைகறை)
182) நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது ____________(எற்பாடு)
183) பாலைத் திணைக்குரிய சிறுபொழுது_________(நண்பகல்)
184) ஆறு பெரும் பொழுதுகளும் வரக்கூடிய திணை______,_________(மருதம் நெய்தல்)
185) குறிஞ்சித் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________,_________(குளிர்காலம் முன்பனிக்காலம்)
186) பாலைத் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________&_______(இளவேனில் முதுவேனில் பின்பனி)
187) முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது___________ (கார்காலம்)
188) ஒரு நிலத்தின் தெய்வம் மக்கள் தொழில் விலங்கு இவையெல்லாம்____________(கருப்பொருள்கள்)
189) குறிஞ்சித் திணைக்குரிய தெய்வம்_____(முருகன்)
190) முல்லைத் திணைக்குரிய தெய்வம்________(திருமால்)
191) மருதத் திணைக்குரிய தெய்வம்_________(இந்திரன்)
192) நெய்தல் திணைக்குரிய தெய்வம்________(வருணன்)
193) பாலைத் திணைக்குரிய தெய்வம் _________(கொற்றவை)
194) குறிஞ்சித் திணைக்குரிய பறை_______(தொண்டகப் பறை)
195) முல்லைத் திணைக்குரிய பறை________(ஏறுகோட்பறை)
196) மருதத் திணைக்குரிய பறை______&_______(மணமுழா, நெல்லரிகிணை)
197) பாலைத் திணைக்குரிய பறை_______(துடி)
198) நெய்தல் திணைக்குரிய பறை_________(மீன்கோட்பறை)
199) நெய்தல் திணைக்குரிய பண்_________(செவ்வழிப்பண்)
200) பாலைத் திணைக்குரிய பண்________(பஞ்சுரப்பண்)
201) குறிஞ்சித் திணைக்குரிய தொழில்கள்________&________(தேனெடுத்தல் கிழங்கு அகழ்தல்)
202) முல்லைத் திணைக்குரிய தொழில்கள்________&________(ஏறுதழுவுதல் நிரை மேய்த்தல்)
203) மருதத் திணைக்கு உரிய தொழில்கள்________&________(நெல்லரிதல் களை பறித்தல்)
204) நெய்தல் திணைக்குரிய தொழில்கள்________&_______(மீன்பிடித்தல் உப்பு விளைத்தல்)
205) பாலைத் திணைக்கு உரிய தொழில்கள்________&_______(வழிப்பறி, நிரை கவர்தல்)
206) குறிஞ்சித் திணைக்குரிய மக்கள்_______&________&_______(வெற்பன் குறவர் குறத்தி
207) முல்லைத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்)
208) மருதத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(ஊரன் உழவர் உழத்தியர்)
209) நெய்தல் திணைக்குரிய மக்கள்______&_____&______(சேர்ப்பன் பரதர் பரத்தியர்)
210) பாலைத் திணைக்குரிய மக்கள்______&______(எயினர் எயிற்றியர்)
211) குறிஞ்சித் திணைக்குரிய உணவு______&_____(மலைநெல், தினை)
212) முல்லைத் திணைக்குரிய உணவு_____&______(வரகு, சாமை)
213) மருதத் திணைக்குரிய உணவு______&_____(செந்நெல், வெண்ணெல்)
214) நெய்தல் திணைக்கு உரிய உணவு_____&_______(மீன் உப்புக்குப் பெற்ற பொருள்)
215) பாலைத் திணைக்குரிய உணவு____________(சூறையாடலால் வரும் பொருள்)
216) குரவம், பாதிரி ஆகியவை எந்தத் திணைக்குரிய பூக்கள்?(பாலை)
217) தாழை -எந்த திணைக்குரிய பூ?(நெய்தல்)
218) செங்கழுநீர் -எந்த திணைக்குரிய பூ?(மருதம்)
219) தோன்றி- எந்த திணைக்குரிய பூ?(முல்லை)
220) காந்தள்-எந்த திணைக்குரிய பூ?(குறிஞ்சி)
221) நீர்நாய் எந்த திணைக்குரிய விலங்கு?(மருதம்)
222) வலியிழந்த யானை எந்த திணைக்குரிய விலங்கு?(பாலை)
223) புன்னை ஞாழல் எந்த திணைக்குரிய மரங்கள்?(நெய்தல்)
224) இலுப்பை எந்த நிலத்திற்குரிய மரம்?(பாலை)
225) காஞ்சி எந்த நிலத்திற்குரிய மரம்?(மருதம்)
226) கொன்றை காயா எந்த நிலத்திற்குரிய மரங்கள்?(முல்லை)
227) அகில், வேங்கை எந்த நிலத்திற்குரிய மரம்?(குறிஞ்சி)
228) புறா எந்த நிலத்திற்குரிய பறவை?(பாலை)
229) குறும்பு எந்த நிலத்திற்குரிய ஊர்?(பாலை)
230) பாடி சேரி எந்த நிலத்திற்குரிய ஊர்கள்?(நெய்தல்)
231) சிறுகுடி எந்த நிலத்திற்குரிய ஊர்?(குறிஞ்சி)
232) பொய்கை எந்த நிலத்திற்குரிய நீர்?(மருதம்)
233) குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்_______&______&________(குறிஞ்சி மருதம் நெய்தல்)
234) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?(வறுமை இல்லாமையால்)
235) தால்-பொருள் தருக(நாக்கு)
236) உழுவை-பொருள் தருக(புலி)
237) அகவுதல்-பொருள் தருக(அழைத்தல்)
238) ஏந்தெழில்-பொருள் தருக(மிகுந்த அழகு)
239) அணிமை-பொருள் தருக(அருகில்)
240) Aesthetics-கலைச்சொல் தருக(அழகியல்)
241) Artifacts-கலைச்சொல் தருக(கலைப்படைப்புகள்)
242) Terminology-கலைச்சொல் தருக(கலைச்சொல்)
243) Myth-கலைச்சொல் தருக.(தொன்மம்)
244) சிறந்த அமைச்சருக்கு உரிய இயல்புகள் எத்தனை?(5) 
245) பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
246) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி)
247) இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
248) மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்-இதில் வந்துள்ள அணி______(உவமை அணி)
249) தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்-இதில் வந்துள்ள அணி யாது?(வஞ்சப்புகழ்ச்சி அணி)
250) சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி) 

சிற்றகல்ஒளி 1 மதிப்பெண் வினாக்கள்

  1. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு எது? 1906
  2. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை எங்கு தொடங்கினார்? தென் ஆப்பிரிக்கா
  3. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைச் எப்போது தொடங்கினார்? 1906
  4. சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1906
  5. ம பொ சி பிறந்த ஆண்டு எது? 1906
  6. ம பொ சி என்பதன் விரிவாக்கம் என்ன? மயிலாப்பூர் பொன்னுசாமி மகன் சிவஞானம்
  7. ம பொ சி பிறந்த நாள் எப்போது? ஜூன் 26
  8. ம பொ சி எங்கு பிறந்தார்? சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் - சால்வன் குப்பம்
  9. ம பொ சி யின் தந்தை யார்? பொன்னுச்சாமி
  10. ம பொ சி அவர்களின்தாயார் யார்? சிவகாமி
  11. ம பொ சி யின் இயற்பெயர் என்ன? ஞானப்பிரகாசம்
  12. ம பொ சி அவர்களை சிவஞானி என அழைத்தவர் யார்? சரபையர் என்ற முதியவர்
  13. ம பொ சி எந்த வகுப்போடு கல்வியை நிறுத்தினார்? மூன்றாம் வகுப்பு
  14. ம பொ சி யின் கல்வி எப்போது தடைபட்டது? மூன்றாம் வகுப்பில் நுழைந்த 7 ஆம் நாளோடு
  15. ம பொ சி யின் கல்வி ஏன் தடைபட்டது? ம பொ சி அவர்களின் குடும்ப வறுமை காரணமாக
  16. ம பொ சி காலத்தில் மூன்றாம் வகுப்பிற்கு தேவைப்பட்ட பாடப் புத்தகங்கள் எவை? தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடப் புத்தகங்கள்
  17. பள்ளியிலிருந்து ம பொ சி ஏன் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தார்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர் துரத்திவிட்டார். அதை அவமானமாகக் கருதியதால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார்.
  18. ம பொ சி எதை அவமானமாகக் கருதினர்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்த மா பொ சி யை துரத்தி விட்டதால், அதை அவமானமாகக் கருதினர்.
  19. ம பொ சி யை வீட்டிற்கு விரட்டி விட்டதற்காக அவரின் தந்தை என்ன செய்தார்? ஆசிரியரை வாயார வைதார்
  20. ம பொ சி சிறுவயதில் அன்னையிடம் கற்ற பாடல்கள் எவை?
    1. அரசாணி மாலை
    2. பவளக்கொடி மாலை
  21. ம பொ சி தானாகவே விரும்பி படித்த பாடல்கள் எவை? சித்தர் பாடல்கள்
  22. ம பொ சி யின் கேள்வி ஞானத்தை பெருகியதில் பெரும் பங்கு வகித்தவர் யார்? திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்
  23. ம பொ சி எதனுடன் கடும் போர் புரிந்ததாக குறிப்பிடுகிறார்? தனது அறியாமையுடன்
  24. ம பொ சி எப்போது பேரானந்தம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்? குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விடும் போது
  25. ம பொ சி எவற்றைத் தம் சொத்துக்களாகக் கருதினார்? தம்மிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களை
  26. பேராயக் கட்சி எனப்படுவது எது? காங்கிரஸ் கட்சி
  27. காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது? 1931
  28. அந்நியத் துணி கடை மறியல் எதன்படி அனுமதிக்கப்படவில்லை? காந்தி-இர்வின் ஒப்பந்தம்
  29. காந்தி-இர்வின் ஒப்பந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி செய்தது என்ன?
    1. தீண்டாமை விலக்கு
    2. கதர் விற்பனை
  30. தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை எப்போது வழங்கப்பட்டது? செப்டம்பர் 30 ,1932
  31. ம பொ சி முதன்முதலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு எது?1932
  32. மபொசி முதல் முதலில் எதற்காக சிறையிலிடப்பட்டார்?தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக
  33. தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட தண்டனை என்ன?
    1. மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை
    2. 300 ரூபாய் அபராதம். கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை.
  34. தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் தன்மை யாது? நூற்றுக் கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டிருந்தது
  35. தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் சிறப்பம்சம் யாது? பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது
  36. ம.பொ.சி அவர்களுக்குச் சிறையில் வழங்கப்பட்ட சோறு எந்த வகுப்பைச் சார்ந்தது?'சி' வகுப்பு
  37. இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் எது?1942 ஆகஸ்ட் 8
  38. இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?1942
  39. இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? பம்பாய் காங்கிரஸ் மாநாடு
  40. இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்திற்காக கைது செய்யப்பட்ட தலைவர்கள் யார்? காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
  41. இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி சிறையில் அடைக்கப்பட்ட நாள் எது? 1942 ஆகஸ்ட் 13
  42. இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி முதலில் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?வேலூர்
  43. இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக வேலூர் சிறையிலிருந்து எந்தச் சிறைக்கு மாற்றப்பட்டார்?அமராவதி
  44. அமராவதி சிறைச்சாலையின் அவல நிலை யாது? கூரை துத்தநாக தகடுகளால் வேயப்பட்டு இருந்தது
  45. வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது எப்போது? இந்திய விடுதலைக்கு மறுநாள்
  46. வடக்கெல்லை மீட்சிக்கு அழைப்பு விடுத்தது யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
  47. வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச்செய்தவர் யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
  48. ஆந்திரத் தலைவர்கள் எந்த மாவட்டத்தை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர்?சித்தூர்
  49. தமிழர் மாநாடு எங்கு நடைபெற்றது? திருத்தணி, சென்னை
  50. தமிழர் மாநாட்டை நடத்தியது யார்? தமிழரசுக் கழகம்
  51. தமிழரசுக் கழகம் யாருடன் இணைந்து தமிழர் மாநாட்டை நடத்தியது? தமிழ் ஆசான் மங்கலங்கிழார்
  52. வடக்கெல்லை போராட்டம் நடைபெற்ற இடங்கள் யாவை? சித்தூர் புத்தூர் திருத்தணி
  53. வடக்கெல்லை போராட்டத்தில் சிறைப்பட்டு உயிர் நீத்தவர் யாவர்?
    1. இராஜமுந்திரி சிறையில் இருந்த திருவாலங்காடு கோவிந்தராசன்
    2. பழனி சிறையிலிருந்த மாணிக்கம்
  54. மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? சர்தார் கே எம் பணிக்கர்
  55. மொழிவாரி ஆணையத்தின் தாக்கம் என்ன? சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிடம் அளித்துவிட்டது
  56. திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்கள் எந்த ஆணையத்தால் மீட்கப்பட்டன?படாஸ்கர் ஆணையம்
  57. இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு இல்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் எத?சிலப்பதிகாரம்
  58. தமிழினத்தின் பொதுச்சொத்து என்று மபொசி எதனைக் குறிப்பிடுகிறார்? சிலப்பதிகாரம்
  59. சிலம்புச் செல்வர் யார்?ம பொ சி
  60. தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்க முன் வந்தவர் யார்?இராஜாஜி
  61. ஆந்திரா மாநிலம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஆணையம் எது?நீதிபதி வாஞ்சு ஆணையம்
  62. தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? சென்னை மாநகராட்சி
  63. தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் யார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது? மாநகர தந்தை செங்கல்வராயன்
  64. ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்? பிரதமர் நேரு
  65. ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை எப்போது வெளியிடப்பட்டது? 25-3-1953
  66. மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எங்கு பேசினார்? வடிவீஸ்வரம்
  67. மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எப்போது பேசினார்?25-10-1946
  68. மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எந்த விழாவில் பேசினார்?வடிவை வாலிபர் சங்க ஆண்டு விழா
  69. தெற்கெல்லை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் யாவர்? தேவசகாயம், செல்லையா
  70. இயற்கையாகவே போர்க்குணம் கொண்டவர் யார்? மார்ஷல் நேசமணி
  71. தெற்கெல்லை போராட்டம் யாருடைய வருகைக்குப் பிறகு வலுப்பெற்றது? மார்சல் நேசமணி
  72. கன்னியாகுமரி மாவட்டம் எப்போது தமிழ்நாட்டுடன் இணைந்தது?1956 நவம்பர் 1
  73. மார்ஷல் நேசமணி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு யாது? நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபம் நிறுவியது.
  74. பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை எப்போது வெளியானது?10-10-1955
  75. பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை யாது? மொழிவாரி மாநிலம் அமைப்பது.
  76. பசல் அலி ஆணையத்தால் நம் கையை விட்டு சென்ற பகுதிகள் எவை? தேவிகுளம், பீர்மேடு
  77. ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக எவை அமைய வேண்டும்? மலையும் கடலும்
  78. தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும் தெற்கு எல்லையாக குமரி முனையையும் குறிப்பிடும் இலக்கியங்கள் எவை? புறநானூறு, சிலப்பதிகாரம்
  79. ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் எது? வியன்னா
  80. அலெக்ஸாண்ட்ரியா துறைமுகம் எங்கு உள்ளது? எகிப்து
  81. கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்த காலத்தைச் சார்ந்தது? கிபி இரண்டாம் நூற்றாண்டு
  82. கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? ஆஸ்திரியா நாட்டின் வியன்னா அருங்காட்சியகத்தில்
  83. கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்தத் தாளில் எழுதப்பட்டுள்ளது? பாபிரஸ்
  84. மபொசி அவர்களின் தன் வரலாற்று நூல் எது? எனது போராட்டம்
  85. மபொசி எப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்?1952-1954
  86. மபொசி எப்போது சட்டமேலவை தலைவராக இருந்தார்?1972-1978
  87. தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?ம பொ சிவஞானம்
  88. மபொசி அவர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
  89. மபொசி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு என்ன? திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் சிலை நிறுவியது
  90. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது? 1966

சிற்றகல்ஒளி 2 மதிப்பெண் வினாக்கள்

  1. ஒருவரைப் படிப்பாளியாகவும் படைப்பாளியாகவும் பக்குவப்படுத்துவது எது? கதை படிப்பது
  2. இந்திய வரலாற்றில் 1906ஆம் ஆண்டு சிறப்புடைய ஆண்டாகும். எவ்வாறு?
    1. அந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்
    2. அந்த ஆண்டில்தான் வ உ சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
  3. ம பொ சி எங்கு எப்போது பிறந்தார்?
    1. சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் சால்வன் குப்பம் என்ற பகுதியில்
    2. ஜூன் 26, 1906 இல் பிறந்தார்
  4. ம பொ சி அவர்களின் பெற்றோர் யாவர்?
    1. பொன்னுச்சாமி - சிவகாமி
  5. ம பொ சி அவர்களுக்கு சிவஞானம் என்ற பெயர் வரக் காரணம் யாது?
    1. பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம்
    2. சரபையர் என்னும் முதியவர் சிவஞானி என்று அழைத்தார். சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்ற பெயர் நிலைத்தது.
  6. ம பொ சி வறுமையால் கல்வியை இழந்தார். அந்த நிகழ்வை விளக்குக.
    1. ம பொ சி மூன்றாம் வகுப்பில் நுழைந்த ஏழாம் நாளில் புத்தகம் இன்றி வந்ததற்காக ஆசிரியர் பள்ளியிலிருந்து விரட்டிவிட்டார்
    2. புத்தகம் கூட வாங்கிக் கொடுக்க முடியாத வறுமையின் காரணமாக கல்வியை இழந்தார்.
  7. ம பொ சி அவர்களின் கல்வி ஞானம் எத்தகையது?
    1. வறுமையின் காரணமாக பள்ளிக்கல்வியை இழந்தார்
    2. இருப்பினும் தாயார் மூலமாக அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்கள் கேட்டு இலக்கிய அறிவை வளர்த்து வந்தார்.
    3. சித்தர் பாடல்களை மனனம் செய்வது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவற்றின் மூலமாக இலக்கிய அறிவை வளர்த்தார்.
  8. ம.பொ.சி ஒரு புத்தகப் பித்தன் என்பதை நிறுவுக
    1. உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கி விட்டு பல வேளைகளில் பட்டினி கிடந்து இருக்கிறார்
    2. போதிய பணம் இல்லாத காரணத்தால் பழைய புத்தகக் கடைகளில் குறைந்த விலைக்குப் புத்தகங்கள் வாங்குவார்.
    3. குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விட்டால் பேரானந்தம் அடைவார்
  9. 'தமிழா! துள்ளி எழு' -துண்டறிக்கை குறிப்பு வரைக
    1. 30-9-1932இல் விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்த அறிக்கை 'தமிழா! துள்ளி எழு' என்பதாகும்
    2. நூற்றுக்கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டன
    3. இதை வெளியிட்டதற்காக மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் ம.பொ.சி அவர்களுக்கு விதிக்கப்பட்டது
  10. 'தமிழா! துள்ளி எழு'-துண்டறிக்கையின் சாரம்சம் யாது?
    • பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது
  11. ம.பொ.சி அவர்களின் சிறை வாழ்க்கை பற்றிக் கூறு.
    1. 'தமிழா! துள்ளி எழு' துண்டறிக்கையை விநியோகம் செய்ததற்காக 6 மாத காலத்திற்குச் சிறைத்தண்டனை பெற்றார்
    2. 'சி' வகுப்புச் சோறு அவரின் பசியைப் போக்கினாலும் அவரது குடும்பத்தின் பட்டினியை எண்ணி வருந்தினார்
    3. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட ம.பொ.சி துத்தநாகத் தகடுகளால் வேயப்பட்டிருந்த அமராவதி சிறையில் வாடினார்
  12. ம.பொ.சி அவர்களது வடக்கெல்லைப் போராட்டம் குறிப்பு வரைக
    1. மங்கலக் கிழாருடன் தமிழரசுக் கழகம் இணைந்து சென்னையிலும் திருத்தணியில் 'தமிழர் மாநாடு' நடத்தியது.
    2. சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய இடங்களில் வடக்கெல்லைப் போராட்டத்தைத் தொடங்கியது
    3. சர்தார் கே. எம். பணிக்கர் ஆணையம் 'சித்தூர்' மாவட்டத்தை ஆந்திராவிற்கு வழங்கியதை ஏற்காமல், "மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்" என்று முழங்கினார். அதனால், திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்களை மீட்கப்பட்டன.
  13. தலைநகரை மீட்கும் போராட்டம்-குறிப்பு வரைக
    1. ஆந்திர மாநிலம் அமைவதற்கான நீதிபதி வாஞ்சு ஆணையம், அதன் தலைநகராகச் சென்னையைப் பரிந்துரை செய்ததாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கள் நிலவின
    2. இராஜாஜி தனதுமுதலமைச்சர் பதவியைத் துறக்க முன்வந்தார்
    3. சென்னை மாநகராட்சியில் 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழங்கி, தீர்மானம் ஒன்றை ம.பொ.சி கொண்டு வந்தார்.
    4. இறுதியில், 25-03-1953இல் பாரத பிரதமர் நேரு ஆந்திர நாட்டின் தலைநகர் அதன் எல்லைக்குள்ளேயே அமையும் என்று அறிவித்தார்.
  14. தெற்கெல்லைப் போராட்டம் -குறிப்பு வரைக
    1. ம.பொ.சி அவர்கள் 25-10-1946இல் வடிவீசுவரத்தில் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றிப் பேசினார்
    2. 1953-54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைக் கிளர்ச்சிகளைத் தொடங்கி வைத்தது தமிழரசுக் கழகம்தான்  என்றாலும் அதனை நடத்துகிற பொறுப்பு அந்தப் பகுதித் தலைவர்களிடமே இருந்தது
    3. போராட்டத்தில் தேவசகாயம், செல்லையா ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்
    4. மார்ஷல் நேசமணியின் வருகைக்குப் பிறகு போராட்டம் வலுப்பெற்றது
  15. பசல் அலி ஆணையம் -குறிப்பு வரைக
    1. 10-10-1955இல் பரிந்துரை வெளியானது
    2. மொழிவாரி மாநிலக் கொள்கை ஏற்கப்பட்டது
    3. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீஸ்வரம், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு இணையவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. தேவிகுளம், பீர்மேடு நம் கைவிட்டுப் போனது.
    4. சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டங்கள் கேரளத்தோடு இணைய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது
  16. கடல் கடந்த தமிழ் வணிகம் பற்றிய சான்று தருக
    1. ஆஸ்திரிய நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது
    2. இச்சுவடி சேரநாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழர் ஒருவருக்கும் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் ஆகும்.
    3. இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
  17. ம.பொ.சி குறிப்பு வரைக
    1. சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்
    2. விடுதலைப் போராட்ட வீரர்
    3. சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் மேலவைத் தலைவராகவும் பதவி வகித்தவர்
    4. 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
  18. சிலம்புச் செல்வர் என்று ம.பொ.சி அழைக்கப்படக் காரணம் யாது?
    1. இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடு இல்லாதவகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஒரு இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தை தவிர வேறு இல்லை என்று உறுதியாக நம்பினார்.
    2. அதனால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார். இதன் காரணமாகவே ம.பொ.சி அவர்கள் 'சிலம்புச் செல்வர்' என்று அழைக்கப்படுகிறார்
  19. மார்ஷல் நேசமணி- குறிப்பு வரைக
    1. இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்
    2. வழக்கறிஞர்
    3. நாகர்கோவிலில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்
    4. குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
    5. தமிழக அரசு, இவருடைய நினைவாக நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.