Friday, October 23, 2020

கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள்

கல்வித் தொலைக்காட்சி வீடியோக்களைப் பார்க்க...

இயங்கலைத் தேர்வு பாடவாரியாக

இயங்கலைத்தேர்வு இயல் 1

ஐந்து வினாக்களை கொண்டது. தேர்வினை எழுத இங்கு தொடவும்


இயங்கலைத்தேர்வு இயல் 2

ஐந்து வினாக்களை கொண்டது. தேர்வினை எழுத இங்கு தொடவும்

Tuesday, October 20, 2020

இயல் 9, மொழிபெயர்ப்பு

 இயல் 9


ஆங்கிலப் பகுதி


(1). Education is what remains after one has forgotten what one has learned in school.

-Albert Einstein


in school - பள்ளியில்


what one has learned -படித்ததில்


after one has forgotton -

மறந்தது போக


What remains -மீதம் இருப்பவையே


Education is -கல்வியாகும்.



பள்ளியில் படித்தவற்றுள் மறந்தபின் மீதம் உள்ளவையே கல்வியாகும்



(2). Tomorrow is often the busiest day of the week .


- Spanish proverb


day of the week- வாரத்தின் நாள்களில்


Tomorrow is -நாளை என்பதே


often -பெரும்பாலும்


Busiest -சுறுசுறுப்பான நாளாகும்


வாரத்தின் நாள்களில் நாளை என்பதே பெரும்பாலும் சுறுசுறுப்பான நாளாகும்.


(3). it is during our darkest moments that we must focus to see the light.


- Aristotle


it is during our darkest moments 

- கடினமான சூழலில்


that we must focus to see the light.

- நமது கவனம் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும்.


கடினமான சூழலில் நமது கவனம் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும்.


(4). Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts.

- Winston Churchill.


Success is not final வெற்றி என்பது இறுதியானது அன்று


failure is not fatal- தோல்வி என்பது அழிவு அன்று.


To continue - தொடர்ச்சியான


 It is the courage - துணிவே


that counts - பெருமையானது.


வெற்றி என்பது இறுதி அன்று. தோல்வி என்பது அழிவு அன்று. தொடர்ச்சியான துணிவே சிறப்பானது.


- மலர் மகேந்திரன்

இயல் 8, மொழிபெயர்ப்பு

 இயல் 8


ஆங்கிலப் பகுதி


once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city, "he is helped whom God helps". The second beggar used to cry,"he is helped whom the king helps". This was repeated by them everyday. The emperor of Rome heard it often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be backed and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar's behaviour, the emperor summoned him to his presence and asked him, "what have you done with the loaf of bread that I had sent you lately?". The man replied, "I sold it to my friend, because it was heavy and didn't seem well backed". Then emperor said,"truly he whom God helps is helped indeed", and turned the beggar out of his palace.





Once upon a time - முன்பு ஒரு காலத்தில்


There were two beggars in Rome

- ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் வாழ்ந்து வந்தார்கள்




In the streets of the city- நகரின் தெருக்களில்


He is helped by whom God helps

- யாருக்குக் கடவுள் உதவுகிறாரோ, அவனே உதவியைப் பெறுகிறான்


The first beggar used to cry

முதல் பிச்சைக்காரன் இவ்வாறு இறைஞ்சினான்


He is helped whom the king helps

- யாருக்கு அரசர் உதவுகிறாரோ, அவனே உதவியைப் பெறுகிறான்


The second beggar used to try

- இரண்டாவது பிச்சைக்காரன் இவ்வாறு இறைஞ்சினான்


This was repeated by them everyday

ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது.



The emperor Rome heard it so often

ரோமப் பேரரசர் இதை அடிக்கடி கேள்விப்பட்டார்


That he was decided to help

அதனால் அவனுக்கு உதவி செய்யத் தீர்மானித்தார்


The beggar who popularized him in the streets of Rome.

ரோம் நகரத் தெருக்களில் அரசரின் புகழைப் பரப்பியவனுக்கு


To be backed and filled with pieces of gold

தங்க கட்டிகளால் நிரப்பப்பட்ட


He ordered a loaf of bread

ஒரு பெரிய ரெட்டியைத் தயார் செய்யச் சொன்னார், அரசர்




When the beggar felt the heavy weight of the bread - பிச்சைக்காரன் ரொட்டித்துண்டு கனமாக இருப்பதை உணர்ந்தான்


As soon as he met him

அவனது நண்பனைச் சந்தித்த உடனே


He sold it to his friend

அவனது நண்பனிடம் அதை விற்று விட்டான்




The latter carried it home

வாங்கிய நண்பன் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றான்


When he cut the loaf of bread

பெரிய ரொட்டித் துண்டை வெட்டி பார்த்தபோது


He found sparkling pieces of gold

மின்னும் தங்கத் துண்டுகள் இருப்பதைக் கண்டான்



Thanking God

கடவுளுக்கு நன்றி கூறினான்


He stopped begging from that day

அந்த நாளில் இருந்து பிச்சை எடுப்பதை நிறுத்தி விட்டான்



But the other continued to beg through the city

மற்றொரு பிச்சைக்காரன் நகரில் பிச்சை எடுப்பதைத் தொடர்ந்தான்


Puzzled by the beggar's behaviour

பிச்சைக்காரனின் நடத்தையினால் குழம்பினார் அரசர்


The emperor summoned him to his presence

அந்த பிச்சைகாரனை அவரின் முன் அழைத்து வரச் சொன்னார்



That I had sent lately

நான் முன்பு அனுப்பிய


What have you done with the loaf of bread

பெரிய ரொட்டித் துண்டை என்ன செய்தாய்?


And asked him - என்று அவனிடம் கேட்டார்


It was heavy and - அது கனமாகவும்


Didn't seem well backed- சரியாக வேகாமலும்


Because - இருந்ததால்


I sold it to my friend- நான் எனது நண்பனிடம் விற்று விட்டேன்


The man replied - என்று அவன் பதிலளித்தான்.


Truly he whom God helps

உண்மையிலேயே கடவுள் யாருக்கு உதவி செய்கிறாரோ


Is helped indeed

அவனே உண்மையில் உதவியைப் பெறுகிறான்


The emperor said 

என்று பேரரசர் சொன்னார்


Out of his palace

அரண்மனையை விட்டு வெளியே



And turned the beggar

பிச்சைக்காரனைத் திருப்பி அனுப்பினார்


திருத்தப்பட்ட மொழியாக்கம்


முன்பு ஒரு காலத்தில் ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். 


 அதில் ஒருவன் நகரத் தெருக்களில் பிச்சை எடுக்கும் போது, "கடவுள் யாருக்கு உதவுகிறாரோ அவனே உதவியைப் பெறுவான்" என்று இறைஞ்சினான்.


மற்றொருவன்," அரசர் யாருக்கு உதவி செய்கிறாரோ அவனே உதவியைப் பெறுவான்" என்று இறைஞ்சினான்.


இது நாள்தோறும் தொடர்ந்தது.


ரோமப் பேரரசர் இதை அடிக்கடி கேள்விப்பட்டார்.


ரோம் நகரத் தெருக்களில் அரசரின் புகழை பரப்பியவனுக்கு உதவி செய்ய முடிவெடுத்தார்


தங்க கட்டிகள் நிரப்பிய பெரிய ரொட்டியைத் தயார் செய்து அவனுக்குக் கொடுக்குமாறு ஆணையிட்டார்.


ரொட்டி கனமாக இருந்ததால் அவனது நண்பனைக் கண்டவுடன் அதை அவன் விற்று விட்டான்.


மற்றொருவன் அந்த ரொட்டியை வீட்டிற்கு எடுத்து வந்தான்.


ரெட்டியை வெட்டிப் பார்த்தபோது அதில் மின்னும் தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டான்.


கடவுளுக்கு நன்றி கூறினான்.


அன்றிலிருந்து பிச்சை எடுப்பதை நிறுத்தி விட்டான்.


மற்றொருவனோ நகரத் தெருக்களில் பிச்சை எடுப்பதைத் தொடர்ந்தான். அவனின் நடத்தையால் பேரரசர் குழம்பினார்.


அவனை அரசர் முன் வரச்செய்து அவனிடம்,"நான் உனக்கு அனுப்பிய ரொட்டித் துண்டுகளை என்ன செய்தாய்?"என்று கேட்டார்.


"அது கனமாகவும் சரியாக வேகாமலும் இருந்ததால் அதை என் நண்பனிடம் விற்று விட்டேன்" என்றான் அவன்.


பிறகு,"கடவுள் யாருக்கு உண்மையிலேயே உதவுகிறாரோ, அவனே உண்மையில் உதவியைப் பெறுகிறான்" என்றார் பேரரசர்.


அத்துடன்,

அந்தப் பிச்சைக்காரனை அரண்மனையை விட்டு வெளியேற்றினார்.




இயல் 7, மொழிபெயர்ப்பு

 இயல் 7


ஆங்கிலப் பகுதி



Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was fit for cultivation as it had the most fertile lands. The property of a former depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamil.




(1) Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was fit for cultivation as it had the most fertile lands. 


in Sangam literature- சங்க இலக்கியங்கள் குறிப்பிடும்


of the Tamil country - தமிழகத்தின்



Among the five geographical divisions - ஐவகை நிலப் பிரிவுகளில்



the Marutam region - மருத நிலப் பகுதி



 was fit for cultivation - பயிரிடத் தகுதியான



as it had the most fertile lands - வளம் நிறைந்த நிலமாக இருந்துள்ளது




(2) The property of a former depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. 


The property of a former - ஓர் உழவரின் செழுமை


on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil -போதுமான சூரிய ஒளி, பருவமழை மற்றும் வளமான மண் ஆகியவற்றைப்



depended - பொறுத்து அமைந்தது




(3) Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamil


Among these elements of nature- இயற்கையின் இந்தக் கூறுகளில்


by the ancient Tamil- பண்டைத்தமிழரால்


 sunlight - சூரிய ஒளி


indispensable - தவிர்க்கமுடியாத ஒன்றாகக்


was considered - கருதப்பட்டது


திருத்தப்பட்ட மொழியாக்கம்


சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தமிழகத்தின் ஐவகை நிலப் பிரிவுகளில் மருதநிலம் பயிரிடத் தகுதியான வளம் நிறைந்த நிலமாக இருந்துள்ளது.  


போதுமான சூரிய ஒளி, பருவமழை மற்றும் வளமான மண் ஆகியவற்றைப் பொறுத்தே ஓர் உழவரின் செழுமை அமைந்தது.   


இயற்கையின் இந்தக் கூறுகளில் சூரிய ஒளி தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதப்பட்டது.


இயல் 6, மொழிபெயர்ப்பு

 இயல் 6


ஆங்கிலப் பகுதி


Therukoothu is as, its name indicates a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from ethics like Ramayana, Mahabharata and other ancient puranas. There are more songs in the Play with dialogues improvised by the artists on the spot. 15 to 20 actors with a small orchestra forms koothu troupe. Though the orchestra singer the artist sing in their own voices. Artist dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.


மொழியாக்கம்:


  (1) Therukoothu is as, its name indicates a popular form of theatre performed in the streets. 


Therukoothu is - தெருக்கூத்து


 as its name indicates - அதன் பெயருக்கேற்ப


performed in the streets - தெருக்களில் நடத்தப்படும்


a popular form of theatre - ஒரு பிரபலமான மேடை நாடகக் கலையாகும்.



  (2) It is performed by rural artists. 

இது, கிராமியக் கலைஞர்களால் நடத்தப்படுகிறது



  (3) The stories are derived from ethics like Ramayana, Mahabharata and other ancient puranas. 

இதற்குரிய கதைகள் இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றன.


  (4) There are more songs in the Play with dialogues improvised by the artists on the spot. 


in the Play -தெருக்கூத்தில்


There are more songs - அதிகமான பாடல்களும்


with dialogues - உரையாடல்களும்


on the spot -உடனுக்குடன்


 improvised by the artists -கலைஞர்களால் உருவாக்கப்படுகின்றன


 (5) Fifteen to twenty actors -15 முதல் 20 கலைஞர்களுடன்


with a small orchestra - சிறு இசைக் குழுவினரும் சேர்ந்து


forms koothu troupe. - தெருக்கூத்து குழு அமையும்


(6) the orchestra has a singer - இசைக் குழுவில் ஒரு பாடகர்


Though - இருந்தபோதிலும்

  

In their own voices. - அவர்களுடைய சொந்த குரலில்


the artists- கூத்துக்கலைஞர்கள் 

 

Sing - பாடுவர்

    

 (7) Artists - கலைஞர்கள்


themselves - அவர்களாகவே


dress with heavy costumes -கனமான ஆடைகளை அணிவதுடன்


 and bright makeup. - பிரகாசமாக ஒப்பனை செய்து கொள்கிறார்கள்.



  (8) Koothu - தெருக்கூத்து


among rural areas. -கிராம மக்களிடையே


Is very popular - மிகவும் பிரபலம்


திருத்தப்பட்ட மொழியாக்கம்


தெருக்கூத்து என்பது அதன் பெயருக்கேற்ப தெருக்களில் நடத்தப்படும் ஒரு பிரபலமான மேடை நாடகக் கலை ஆகும்.  


 இது கிராமிய கலைஞர்களால் நடத்தப்படுகிறது.   


இதன் கதைகள் இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் இருந்து தேர்வு செய்யப்படுகிறது.  


தெருக்கூத்துகளில் அதிகமான பாடல்களும் உரையாடல்களும் கூத்துக் கலைஞர்களால் உடனுக்குடன் உருவாக்கப்படுகின்றன.



15 முதல் 20 கலைஞர்களுடன் ஒரு சிறு இசைக்குழுவும் சேர்ந்து தெருக்கூத்துக்குழு அமையும்.  


இசைக்குழுவில் ஒரு பாடகர் இருந்தாலும் கூத்துக் கலைஞர்கள் தங்களுடைய சொந்த குரலிலேயே பாடுகிறார்கள்.   


கூத்துக் கலைஞர்கள் தாங்களாகவே, கனமான ஆடைகளை அணிவதுடன் பிரகாசமாக ஒப்பனை செய்து கொள்கிறார்கள். தெருக்கூத்து கிராமங்களில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.


இயல் 5, மொழிபெயர்ப்பு

 இயல் 5




It's like new lute music

யாழிசை


Wondering at the lute music

அறைக்குள் யாழிசை


Coming from the chamber


Entered I to look up to in still

ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்


My grand-daughter

பேத்தி,


Learning by rote the verses

நெட்டுருப் பண்ணினாள்


Of a didactic compilation

நீதி நூல் திரட்டையே.


- பாரதிதாசன்

       -Translated by kavingar Desini


Chamber

அறை


To look up

எட்டிப்பார்த்தேன்


Grand-daughter

பேத்தி



Rote

நெட்டுரு



Didactic compilation

நீதி நூல் திரட்டு