- கவிஞன் என்பவன் யார்?
- மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக் களை பறித்து, தத்துவ நீர்பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.
- மாற்றம் குறித்து கண்ணதாசன் கூறுவன யாவை?
- மாற்றம் என்பது மானிடத் தத்துவம்
- மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகச் சிறப்பை அறிவேன்.
- நன்மை எவை, தீமை எவை என்பதை அறிந்து அதன் அடிப்படையில் என் வாழ்க்கைப் பயணம் செல்லும்.
- தலைவர்கள் மாறுவர்; காட்சிகள் மாறும்; தத்துவம் மட்டுமே நிலையாக நிற்கும்.
- கண்ணதாசன் தன்னுடைய கவிதைகளின் சிறப்பாக எவற்றைக் காட்டுகிறார்?
- நல்ல கருத்துக்களைக் கவிதையாக விதைப்பேன். பொன்னைவிட விலைமதிப்பு மிகுந்தது என்னுடைய கவிதைகள்.
- சரி என்று தோன்றும் கருத்துக்களைக் கவிதையாக ஆக்குவது, அளிப்பது, அழிப்பது என்னுடைய வேலை.
- கண்ணதாசன் தன்னுடைய குணங்களாக எவற்றைக் காட்டுகிறார்?
- செல்வர்க்கு அடிபணிய மாட்டேன்.
- பதவியைக் கண்டு பயப்பட மாட்டேன்.
- அன்புடன் பழகுவேன்.
- பிடித்ததைச் செய்வேன்.
- என்னிடம் பொருளுண்டு என்றால் பிறருக்குக் கொடுப்பேன்.
- என்னிடம் பொருள் இல்லை என்றால் காலதேவனிடம் அடைக்கலம் புகுவேன்.
- வண்டாக எழுந்து மலர்களில் அமர்வேன்.
- எனக்குக் கிடைத்த செல்வத்தை ஊருக்கெல்லாம் கொடுப்பேன்.
- சிறந்த கவிஞர்களான கம்பர், பாரதி, பாரதிதாசன் சொல்லாத செய்திகளைச் சொல்ல முயற்சி செய்வேன்.
- புகழ்ச்சியைக் கண்டு மயங்கமாட்டேன். இகழ்ச்சியைக் கண்டு மனம் வாடமாட்டேன்.
- கண்ணதாசன் குறிப்பு வரைக
- இயற்பெயர் :முத்தையாஊர் :சிவகங்கை மாவட்டம்- சிறுகூடல்பட்டி.
- பெற்றோர் :சாத்தப்பன் -விசாலாட்சி.
- சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
- சேரமான் காதலி என்னும் நாவலுக்காக சாகித்திய அகடாமி விருது பெற்றவர்.
- தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
- தமது திரைப்படப் பாடல்கள் மூலம் எளிய முறையில் மெய்யியலை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
Wednesday, March 30, 2022
காலக்கணிதம் 2 மதிப்பெண் வினாக்கள்
Tuesday, March 29, 2022
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
முன்னுரை
"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன் "
என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, ஞானப் பெண்ணாய் ஞாலம் அளந்தாள், வீரமங்கை. நிலவைப் பார்த்து உணவுண்ட காலத்திலேயே, நிலவில் சோறு உண்ணக் கனாக் கண்டவள், கல்பனா. வானில் நட்சத்திரங்களை எண்ணி எண்ணி, அவள் வானத்து நட்சத்திரமான வரலாறு காண்போம், வாரீர்!
குழந்தைப் பருவம்
அரியானா மாநிலம் கர்னல் என்னும் ஊரில் பனாரஸ் லால் சாவ்லா - சன்யோகிதா தேவி இணையருக்கு மகளாக மார்ச் 17, 1962 ஆம் ஆண்டு பிறந்தார், கல்பனா. கல்பனா என்ற பெயருக்கு 'கற்பனை' என்று பொருள். கல்பனாவுக்கு, விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜே. ஆர். டி. டாடா (ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அவர்களைப் பார்த்தது முதல் விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.
கல்வி
கல்பனா பள்ளிக்கல்வியைத் தாகூர் அரசுப் பள்ளியிலும், இளங்கலை விண்வெளிப் பொறியியல் படிப்பைப் பஞ்சாப் பொறியியல் கல்லூரியிலும், முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலையிலும், முனைவர்பட்ட விண்வெளிப் பொறியியல் படிப்பைக் கொலராடோ பல்கலையிலும் படித்தார்.
பணி
நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தோடு இணைக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட முறைகள் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரை இறங்குதல் பற்றித் திரவ இயக்கவியல் கணக்கீடு ஆராய்ச்சி மேற்கொண்டார். விமானம் மற்றும் மிதவை வானூர்திகளை (கிளைடர்களை) ஓட்டக் கற்றுக் கொடுக்கும் தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு, ஓட்ட அனுமதியும் பெற்றார்.
1995ஆம் ஆண்டு நாசா விண்வெளிவீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.
சாதனைகள்
1997ஆம் ஆண்டு விண்வெளி விண்கலப் பணி ஊர்தி 87 இல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தொழில்நுட்ப வல்லுநராக விண்வெளி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டார்.
ஜனவரி 16, 2003 விண்வெளி விண்கலப்பணி ஊர்தி 107 இல் விண்வெளிக்குச் சென்றார். கல்பனா சாவ்லாவின் பொறுப்புகளாக 'நுண் ஈர்ப்புச்' ( மைக்ரோ கிராவிட்டி) சோதனைகள் அமைந்திருந்தன. கல்பனாவின் குழு எண்பது பரிசோதனைகளை மேற்கொண்டது.
விபத்து
பிப்ரவரி 1, 2003 இல் தனது பதினாறுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியானார்கள். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
விருதுகள்
அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசாவின் விண்ணோட்டப் பதக்கம் மற்றும் சிறப்பு சமூக சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கப்பட்டது. இளம்பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடக அரசு 2004 முதல் 'கல்பனா சாவ்லா விருது' வழங்கி வருகிறது. இஸ்ரோ 'கல்பனா சாவ்லா' பெயரில் ஒரு விண்கலத்தை ஏவியது. அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் தனது விண்கலத்திற்கு 'எஸ்எஸ் கல்பனா' என்று பெயரிட்டுள்ளது.
முடிவுரை
விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு, தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது தியாகம் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்ற பாரதியின் வரிகளை மனத்தில் கொண்டு, கனவுகளை நனவாக்கிச், சாதனை படைத்த சாவ்லாவின் வழியைப் பின்பற்றுவோம், வாரீர்!
- மலர் மகேந்திரன்
அன்னை மொழியே 2 மதிப்பெண் வினாக்கள்
- சின்னக் குழந்தையின் சிரிப்பாகவும் பழுத்த நரையின் பட்டறிவாகவும் ஆனவள் யார்?
- தமிழ்த் தாய்
- 'பழுத்த நரை' என்ற சொல்லின் பொருள் யாது?
- கற்றறிந்த சான்றோர்
- 'பட்டறிவு' என்ற சொல்லின் பொருள் யாது?
- அனுபவ அறிவு
- வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டவர் யார்?
- தமிழ்த் தாய்
- கல் போன்ற மனத்தையும் கற்கண்டாக்குபவள் யார்?
- தமிழ்த்தாய்
- அறிவைப் பெருக்கி அன்பை வயப்படுத்துபவள் யார்?
- தமிழ்த்தாய்
- தமிழ்த் தாய் யாருடைய சிரிப்பாகவும் யாருடைய பட்டறிவாகவும் இருக்கிறாள்?
- தமிழ்த்தாய் சின்னக் குழந்தையின் சிரிப்பாகவும்
- பழுத்த நரையின் பட்டறிவாகவும் இருக்கிறாள்.
- தமிழ்த்தாய் எவற்றையெல்லாம் கவிதையாகக் கொண்டிருக்கிறாள்?
- தமிழ்த் தாய் வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டிருக்கிறாள்.
- தமிழ்த்தாய் எதைக் கற்கண்டாக்குவாள்?
- கல் போன்ற மனத்தையும் கற்கண்டுடாக்குவாள்
- தமிழ்த் தாய் எதைப் பெருக்குவாள்? எதை வயப்படுத்துவாள்?
- அறிவைப் பெருக்குவாள்
- அன்பை வயப்படுத்துவாள்
- யாருடைய பெருமை செப்புவதற்கு அரியது?
- தமிழ்த் தாயின் பெருமை செப்புவதற்கு அரியது
- தமிழ்த் தாய் ஆண்ட பகுதி எது?
- குமரிக்கண்டம்
- தமிழ்த்தாயின் தொன்மை யாது?
- பழமைக்கும் பழமையானது
- தமிழ்த் தாய் யாருடைய மகள் ஆவார்?
- தமிழ்த் தாய் பாண்டிய மன்னனின் மகள் ஆவார்
- தமிழ்த்தாய் எதனுடைய பெருமைக்கு உரியவராக கருதப்படுகிறார்?
- தமிழ்த் தாய் திருக்குறளின் பெருமைக்கு உரியவராகக் கருதப்படுகிறார்.
- சங்க இலக்கியங்கள் எவை?
- பத்துப்பாட்டு
- எட்டுத்தொகை
- நற்கணக்கு எனப்படுவது எது?
- பதினெண் கீழ்க்கணக்கு
- கணக்கு என்ற சொல்லின் பொருள் யாது?
- நூல்
- நற்கணக்கு என்ற சொல்லின் பொருள் யாது?
- நல்ல நீதியைக் கூறும் நூல்
- கீழ்க்கணக்கு என்ற சொல்லின் பொருள் யாது?
- குறைந்த அடிகளை உடைய அல்லது குறைந்த பாடல் எண்ணிக்கையை உடைய நூல்
- பத்துப்பாட்டு நூல்கள் எவை?
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- குறிஞ்சிப்பாட்டு
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)
- நெடுநல்வாடை
- எட்டுத்தொகை நூல்கள் எவை?
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவை?
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னாநாற்பது
- இனியவை நாற்பது
- கார் நாற்பது
- களவழி நாற்பது
- ஐந்திணை ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமொழி ஐம்பது
- திணைமாலை நூற்றைம்பது
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஏலாதி
- சிறுபஞ்சமூலம்
- ஆசாரக்கோவை
- பழமொழி
- முதுமொழிக்காஞ்சி
- கைந்நிலை அல்லது இன்னிலை
- ஐம்பெரும் காப்பியங்கள் எவை?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழன்னையை வாழ்த்தக் காரணம் யாது?
- அன்னை மொழி
- அழகு நிறைந்த செந்தமிழ்
- பழமைக்கும் பழமையாய் தோன்றிய நறுங்கனி
- குமரிக் கண்டத்தை ஆட்சி செய்தவள்
- பாண்டிய மன்னனின் மகள்
- திருக்குறளின் பெருமைக்கு உரியவள்
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆக இருப்பவள்.
- இந்த நினைவுகள் யாவும் பொங்கி எழுவதால் தலைபணிந்து வாழ்த்துகிறோம்
- பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு உள்ளக்கனல் மூளக் காரணம் யாது?
- முந்தை தனிப்புகழ்
- இலக்கிய வளம்
- நீண்ட நிலைத்த தன்மை
- வேற்றுமொழியார் புகழுரை
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எதைப்போல பாடி முழங்குகிறார்?
- வண்டு செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போல பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடி முழங்குகிறார்.
- பாவலரேறு எழுதிய இதழ்கள் யாவை?
- தென்மொழி
- தமிழ்ச்சிட்டு
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் எவை?
- உலகியல் நூறு
- பாவியக் கொத்து
- நூறாசிரியம்
- கனிச்சாறு
- எண்சுவை எண்பது
- மகபுகுவஞ்சி
- பள்ளிப் பறவைகள்
- தமிழுக்கு கருவூலமாக அமைந்த நூல் எது?
- திருக்குறள் மெய்ப்பொருளுரை
தமிழ்ச்சொல் வளம் 2மதிப்பெண் வினாக்கள்
- நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் யார்?
- மகாகவி பாரதியார்
- கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மொழி எது?
- தமிழ்மொழி
- பல்வேறு சிறப்பு இயல்புகளைக் கொண்ட மொழி எது?
- தமிழ் மொழி
- தமிழ்மொழியில் அனைத்து வளமும் உண்டு என்று விடை பகர்வது எது?
- தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரை
- இலக்கியச் செம்மொழிகளுக்கு எல்லாம் பொதுவானது எது?
- சொல்வளம்
- சொல்வளத்தில் தலைசிறந்த மொழி எது?
- தமிழ் மொழி
- திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
- கால்டுவெல்
- சொல்வளத்தைக் குறிப்பிட்டு கால்டுவெல் கூறியது யாது?
- தமிழில் உள்ள ஒருபொருட்பலசொல் வரிசைகள் பிற திராவிட மொழிகளில் இல்லை.
- பிற திராவிட மொழிச் சொற்களும் தமிழில் உள.
- பயிர்களின் அடி வகைச் சொற்கள் யாவை?
- தாள்
- தண்டு
- கோல்
- தூறு
- தட்டு அல்லது தட்டை
- கழி
- கழை
- அடி
- பயிர்களின் கிளைப்பிரிவுகள் யாவை?
- கவை
- கொம்பு அல்லது கொப்பு
- கிளை
- சினை
- போத்து
- குச்சு
- இணுக்கு
- காய்ந்த அடி மற்றும் கிளைகளின் பெயர்கள் யாவை?
- சுள்ளி
- விறகு
- வெங்கழி
- கட்டை
- இலை வகைகளின் பெயர்களை எழுதுக
- இலை
- தாள்
- தோகை
- ஓலை
- சண்டு
- சருகு
- கொழுந்து வகைகளின் பெயர்களை எழுதுக
- துளிர் அல்லது தளிர்
- முறி
- கொழுந்து
- குருத்து
- கொழுந்தாடை
- பூவின் நிலைகளின் பெயர்களை குறிப்பிடுக
- அரும்பு
- போது
- மலர் அல்லது அலர்
- வீ
- செம்மல்
- சொல் ஆராய்ச்சியில் பாவாணர் வியந்த பெருமகனார் யார்?
- தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்
- திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்? எங்கு நிறுவப்பட்டுள்ளது?
- திருவள்ளுவர் தவச்சாலை எழுதியவர் இரா இளங்குமரனார்
- திருவள்ளுவர் தவச்சாலை திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது
- இரா இளங்குமரனார் தமிழகம் முழுவதும் எதைப்பற்றிய சொற்பொழிவுகளை வழங்கி வந்தார்?
- திருக்குறள் தொடர்பான சொற்பொழிவுகள்
- இளங்குமரனார் எவ்வழியில் திருமணங்களை நடத்தி வைத்து வந்தவர்?
- தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வந்தவர்
- இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை இரா. இளங்குமரனார் ஏன் கற்றுக் கொண்டார்?
- விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழை இழந்து விடக்கூடாது என்று எண்ணியதால்...
- ரா இளங்குமரனார் யாரைப் பின்பற்றி இமைகளை மூடியபடி எழுதக் கற்றுக் கொண்டார்?
- திரு.வி.க
- இரா இளங்குமரனாரின் தமிழ்ப் பணியை தரம் உயர்த்திய நல்முத்துக்கள் எவை?
- இலக்கண வரலாறு
- தமிழிசை இயக்கம்
- தனித்தமிழ் இயக்கம்
- பாவாணர் வரலாறு
- குண்டலகேசி உரை
- யாப்பருங்கல உரை
- புறத்திரட்டு உரை
- திருக்குறள் தமிழ் மரபுரை
- காக்கைபாடினியம்
- தேவநேயம்
- இரா இளங்குமரனாரின் புனைப் பெயர் என்ன?
- தமிழ்த்திரு
- பிஞ்சு வகைகளின் பெயர்கள் யாவை?
- பூம்பிஞ்சு
- பிஞ்சு
- வடு
- மூசு
- கவ்வை
- குரும்பை
- முட்டுக் குரும்பை
- இளநீர்
- நுழாய்
- கருக்கல்
- கச்சல்
- குலை வகைகளின் பெயர்கள் யாவை?
- கொத்து
- குலை
- தாறு
- கதிர்
- அலகு அல்லது குரல்
- சீப்பு
- கெட்டுப்போன காய்கனி வகைகளின் பெயர்களை எழுதுக
- சூம்பல்
- சிவியல்
- சொத்தை
- வெம்பல்
- அளியல்
- அழுகல்
- சொண்டு
- கெட்டுப்போன தேங்காய்களின் பெயர்கள் யாவை?
- கோட்டன்காய் அல்லது கூகைக்காய்
- தேரைக்காய்
- அல்லிக்காய்
- ஒல்லிக்காய்
- பழத்தோல் வகைகளின் பெயர்களை எழுதுக
- தொலி
- தோல்
- தோடு
- ஓடு
- குடுக்கை
- மட்டை
- கொம்மை
- மணிவகைகளின் பெயர்களை எழுதுக
- கூலம்
- பயறு
- கடலை
- விதை
- காழ்
- முத்து
- கொட்டை
- தேங்காய்
- முதிரை
- இளம் பயிர் வகைகளின் பெயர்களை எழுதுக
- நாற்று
- கன்று
- குருத்து
- பிள்ளை
- குட்டி
- மடலி அல்லது வடலி
- பைங்கூழ்
- பொதுமக்களால் அமைவது எது? புல மக்களால் அமைவது எது?
- பொதுமக்களால் அமைவது மொழி
- புல மக்களால் அமைவது இலக்கியம்
- தமிழ்ப் பொதுமக்கள் இலைகளை அதன் வன்மை மென்மை பற்றி எவ்வாறு பாகுபாடு செய்தனர்?
- தாள்
- இலை
- தோகை
- ஓலை
- தமிழ்நாடு பொருள்வளமுடையது என்பது எவ்வாறு விளங்கும்?
- விளைபொருள் வகைகளை நோக்கும் போது...
- கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக
- சம்பாக்கோதுமை
- குண்டுக்கோதுமை
- வாற்கோதுமை
- தமிழ்நாட்டு நெல் வகைகளைக் குறிப்பிடுக
- செந்நெல்
- வெண்ணெல்
- கார்நெல்
- சம்பா
- மட்டை
- கார்
- சம்பா நெல் வகைகளின் பெயர்களை எழுதுக.
- ஆவிரம் பூச்சம்பா
- ஆனைக்கொம்பன் சம்பா
- குண்டுச் சம்பா
- குதிரைவாலிச் சம்பா
- சிறுமணிச் சம்பா
- சீரகச் சம்பா
- தமிழ்நாட்டில் விளையும் சிறு கூலங்கள் யாவை?
- வரகு
- காடைக்கண்ணி
- குதிரைவாலி
- ஒரு நாட்டு மக்களின் அறிவு ஒழுக்கங்கள் எதன்படி அமைந்திருக்கும்?
- அந்த நாட்டின் வளத்திற்குத் தக்கபடி...
- பண்டையத் தமிழ்மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருந்தமைக்கான காரணம் யாது?
- நாட்டின் தனிப்பெரும் வளத்தினால்...
- ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரீகத்தை அளந்தறிவதற்குச் சிறந்த வழி எது?
- மொழி
- திருந்திய மக்களை மற்ற உயிரின்றும் பிரித்துக் காட்டுவது எது?
- மொழி
- பொருட்களை நுண் பாகுபாடு செய்து அவற்றிற்கு ஏற்பப் பருப்பொருள் சொற்களும் நுண்பொருள் சொற்களும் அமைத்துக்கொள்வது எத்தகைய மக்களுக்கு இயலும்?
- சிறந்த மதிநுட்பமும் பண்பாடும் உடைய மக்களுக்கே இயலும்
- உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு எது?
- மலேசியா
- உலகிலேயே முதன் முதலில் எந்த மொழிக்காக உலகமாநாடு நடத்தப்பட்டது?
- தமிழ் மொழி
- பன்மொழிப்புலவர் எனப்படுபவர் யார்?
- க அப்பாத்துரையார்
- தாள் எனப்படுவது யாது?
- நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடிப்பகுதி தாள் எனப்படுகிறது
- நெல்லை அறுவடை செய்தபின் நிலத்தில் விடப்படும் அடிப்பகுதி நெல்தாள் ஆகும்
- தண்டு என்ற சொல்லின் பொருள் யாது?
- கீரை, வாழை முதலியவற்றின் அடிப்பகுதி தண்டு எனப்படுகிறது.
- கீரைத்தண்டு, வாழைத்தண்டு
- கோல் என்ற சொல்லின் பொருள் யாது?
- நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடிப்பகுதி கோல் எனப்படுகிறது
- தூறு என்றால் என்ன?
- குத்துச் செடி, புதர் முதலியவற்றின் அடிப்பகுதி எனப்படுகிறது.
- தட்டு அல்லது தட்டை என்றால் என்ன?
- கம்பு, சோளம் முதலியவற்றின் அடிப்பகுதி தட்டு அல்லது தட்டை எனப்படுகிறது
- கம்பந்தட்டை, சோளத்தட்டை
- கழி என்ற சொல்லின் பொருள் யாது?
- கரும்பின் அடிப்பகுதி கழி எனப்படுகிறது
- கரும்பை அறுவடை செய்தபின் வயலில் விடப்படும் கரும்பின் அடிப்பகுதி கரும்புக்கழி அல்லது கருப்பங்கழி எனப்படுகிறது.
- கழை என்ற சொல்லின் பொருள் யாது?
- மூங்கிலின் அடிப்பகுதி கழை எனப்படுகிறது
- மூங்கில்கழை
- மூங்கிலைக் கையில் ஏந்தி கயிற்றில் நடந்து சாகசம் செய்பவர்களைக் 'கழைக்கூத்தாடிகள்' என அழைப்பதுண்டு.
- அடி என்ற சொல்லின் பொருள் யாது?
- பெரிய மரங்களின் அடிப்பகுதி 'அடி' என்று அழைக்கப்படுகிறது
- கவை என்ற சொல்லின் பொருள் யாது?
- அடிமரத்தில் இருந்து பிரியும் பெரிய கிளை 'கவை' எனப்படுகிறது
- கொம்பு அல்லது கொப்பு என்ற சொல்லின் பொருள் யாது?
- கவையில் இருந்து பிரியும் கிளைப்பகுதி 'கொம்பு' அல்லது 'கொப்பு' என அழைக்கப்படுகிறது
- சினை என்ற சொல்லின் பொருள் யாது?
- கொம்பு அல்லது கொப்பு மேலும் பிரிந்தால் அது 'சினை' எனப்படுகிறது
- போத்து என்றால் என்ன?
- சினை மேலும் பிரிந்தால் அது 'போத்து' எனப்படுகிறது
- போத்தின் பிரிவின் பெயர் என்ன?
- குச்சு
- இணுக்கு என்றால் என்ன?
- குச்சியின் பிரிவு 'இணுக்கு' எனப்படுகிறது
- சுள்ளி என்றால் என்ன?
- காய்ந்த குச்சி 'சுள்ளி' எனப்படுகிறது
- விறகு என்றால் என்ன?
- காய்ந்த சிறுகிளை 'விறகு' எனப்படுகிறது
- கட்டை என்றால் என்ன?
- காய்ந்த கொப்பும் கவையும் அடியும் கட்டை எனப்படுகிறது
- வெங்கழி என்றால் என்ன?
- காய்ந்த கழி 'வெங்கழி' எனப்படுகிறது
- ஓலை எனப்படுவது யாது?
- தென்னை, பனை முதலியவற்றின் இலைப் பகுதி ஓலை எனப்படுகிறது
- தோகை என்றால் என்ன?
- சோளம், கரும்பு முதலியவற்றின் இலைப்பகுதி தோகை எனப்படுகிறது
- நெல், புல் முதலியவற்றின் இலைப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- தாள்
- சண்டு என்பது எதைக் குறிக்கிறது?
- காய்ந்த தாளும் தோகையும்
- சருகு என்பது எதைக் குறிக்கிறது?
- காய்ந்த இலை
- நெல், புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- தளிர் அல்லது துளிர்
- முறி என்பது எதைக் குறிக்கிறது?
- புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
- சோளம், கரும்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- குருத்து
- தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- குருத்து
- கொழுந்தாடை என்பது என்ன?
- கரும்பின் கொழுந்து
- பூவின் தோற்ற நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- அரும்பு
- பூ விரியத் தொடங்கும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- போது
- அலர் என்றால் என்ன?
- மலர் மலர்ந்த நிலை
- வீ எனப்படுவது யாது?
- மரஞ்செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை
- செம்மல் என்றால் என்ன?
- பூ வாடிய நிலை
- பூம்பிஞ்சு எனப்படுவது யாது?
- பூவோடு கூடிய இளம்பிஞ்சு
- இளம் காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- பிஞ்சு
- வடு என்றால் என்ன?
- மாம்பிஞ்சு
- மூசு என்றால் என்ன?
- பலாப்பிஞ்சு
- கவ்வை என்றால் என்ன?
- எள் பிஞ்சு
- குரும்பை என்றால் என்ன?
- தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
- முட்டுக் குரும்பை என்றால் என்ன?
- சிறு குரும்பை
- முற்றாத தேங்காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- இளம் தேங்காய்
- நுழாய் என்றால் என்ன?
- இளம் பாக்கு
- கருக்கல் என்றால் என்ன?
- இளம் நெல்
- கச்சல் எனப்படுவது யாது?
- வாழைப்பிஞ்சு
- கொத்து எனப்படுவது யாது?
- அவரை, துவரை முதலியவற்றின் குலை
- குலை எனப்படுவது யாது?
- முந்திரி போன்றவற்றின் குலை
- தாறு எனப்படுவது யாது?
- வாழைக்குலை
- கதிர் எனப்படுவது யாது?
- கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் குலை
- அலகு அல்லது குரல் எனப்படுவது யாது?
- நெல், தினை முதலியவற்றின் குலை
- சீப்பு எனப்படுவது யாது?
- வாழைத்தாற்றின் பகுதி
- நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- சூம்பல்
- சிவியல் எனப்படுவது யாது?
- சுருங்கிய பழம்
- சொத்தை எனப்படுவது யாது?
- புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி
- வெம்பல் என்றால் என்ன?
- சூட்டினால் பழுத்த பிஞ்சு
- அளியல் என்றால் என்ன?
- குளுகுளுத்த பழம்
- அழுகல் என்றால் என்ன?
- குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்
- சொண்டு என்றால் என்ன?
- பதராய்ப் போன மிளகாய்
- தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- தேரைக்காய்
- அல்லிக்காய்
- தென்னையில் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- ஒல்லிக்காய்
- மிக மெல்லிய தோல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- தொலி
- திண்ணமான தோல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- தோல்
- வன்மையான தோல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- தோடு
- மிக வன்மையான தோல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- ஓடு
- சுரையின் ஓடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- குடுக்கை
- மட்டை எனப்படுவது யாது?
- தேங்காய் நெற்றின் மேற்பகுதி
- உமி எனப்படுவது யாது?
- நெல், கம்பு முதலியவற்றின் மூடி
- கொம்மை எனப்படுவது யாது?
- வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
- கூலம் எனப்படுவது யாது?
- நெல், கம்பு முதலியவற்றின் தானியங்கள்
- பயறு எனப்படுவது யாது?
- அவரை, உளுந்து முதலியவற்றின் தானியங்கள்
- விதை எனப்படுவது யாது?
- கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து
- காழ் எனப்படுவது யாது?
- புளி, காஞ்சிரை முதலியவற்றின் வித்து
- வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- முத்து
- மா, பனை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- கொட்டை
- முதிரை எனப்படுவது யாது?
- அவரை, துவரை முதலியவற்றின் வித்துக்கள்
- அவரை வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- பயறு
- முதிரை
- நாற்று என்றால் என்ன?
- நெல், கத்தரி முதலியவற்றின் இளம் பருவம்
- மா, புளி, வாழை முதலியவற்றின் இளம் பருவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- கன்று
- வாழையின் இளம் பருவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- கன்று
- குருத்து
- தென்னையின் இளம் பருவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- பிள்ளை
- குட்டி எனப்படுவது யாது?
- விளாவின் இளம் பருவம்
- பனையின் இளம் பருவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- வடலி
- மடலி
- பைங்கூழ் எனப்படுவது யாது?
- நெல், சோளம் முதலியவற்றின் பசும்பயிர்
- நெல்லின் இளம் பருவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- நாற்று
- பைங்கூழ்
- மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
- தேவநேயப் பாவாணர்
- தமிழ்ச் சொல் வளம் என்னும் கட்டுரை எதில் இடம்பெற்றுள்ளது?
- சொல்லாய்வுக் கட்டுரைகள் என்னும் நூலில்...
- தமிழ்ச் சொல்லாராய்ச்சில் உச்சம் தொட்டவர் யார்?
- தேவநேயப் பாவாணர்
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் யார்?
- தேவநேயப் பாவாணர்
- உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியவர் யார்?
- தேவநேயப் பாவாணர்
- தேவநேயப் பாவாணர் குறிப்பு வரைக
- தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியாற்றியவர்
- உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்
- முதல் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது? எப்போது மொழிபெயர்க்கப்பட்டது?எங்கு மொழிபெயர்க்கப்பட்டது?
- கார்டிலா
- 1554
- போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிசுபன்
- தரிசு என்றால் என்ன?
- வேளாண் பயன்பாட்டிற்கு உதவாத நிலம்
- கரிசல் என்றால் என்ன?
- கரிசல் மண்ணால் ஆன நிலம்
- சிவல் என்றால் என்ன?
- செம்மண்ணால் ஆன நிலம்
- முரம்பு என்றால் என்ன?
- பருக்கைக் கற்கள் நிறைந்த மேட்டு நிலம்
- புறம்போக்கு என்றால் என்ன?
- ஊருக்குப் புறம்போக்காக அமைந்த வேளாண் பயன்பாடற்ற நிலம்
- சுவல் என்றால் என்ன?
- உயர்ந்த மேட்டு நிலம்
- அவல் என்றால் என்ன?
- அகன்ற பள்ளமான நிலம்
- குளம்
- வேளாண் நிலம்
- சொல்லுதல் என்னும் பொருள் தரும் பலசொற்களைப் பட்டியலிடுக
- பேசுதல்
- விளம்புதல்
- செப்புதல்
- உரைத்தல்
- கூறல்
- இயம்பல்
- மொழிதல்
- அடி வகைச் சொற்கள் எத்தனை?
- 8
- கிளைப் பிரிவுகள் எத்தனை?
- 7
- இலை வகை எத்தனை? காய்ந்த இலை வகை எத்தனை?
- 4
- 2
- காய்ந்த அடி மற்றும் கிளை வகை எத்தனை?
- 4
- கொழுந்து வகை எத்தனை?
- 4
- பூவின் நிலைகள் எத்தனை?
- 5
- பிஞ்சு வகைகள் எத்தனை?
- 11
- குலை வகை எத்தனை?
- 6
- கெட்டுப்போன காய் கனி வகை எத்தனை?
- 11
- பழத் தோல் வகை எத்தனை?
- 8
- மணிவகை எத்தனை?
- 9
- இளம் பயிர் வகை எத்தனை?
- 7
- சம்பாவில் காணப்படும் உள்வகைகள் எத்தனை? 60
தொகைநிலைத் தொடர்கள் 2 மதிப்பெண் வினாக்கள்
- நீரின்றி அமையாது உலகு என்பது போல, எது இன்றி அமையாது உலகு உயிர் இயக்கம்?
- காற்றின்றி அமையாது உலக உயிர் இயக்கம்
- காற்று, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையை எங்கிருந்து கொண்டு வருகிறது?
- மகரந்தத் தூள்களிலிருந்து...
- காற்றுக்கு மிகுந்த ப்ராண ரஸம் எங்கிருந்து கிடைக்கிறது?
- இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராயும்போது...
- காற்று, எது நீடித்து நிற்பதற்காக வீச வேண்டும்?
- உயிர் - நெருப்பு
- காற்றின் சக்தி குறைந்தால் என்ன ஆகும்? காற்று, பேய்போல் வீசினால் என்ன ஆகும்?
- காற்றின் சக்தி குறைந்தால் உயிர் - நெருப்பு அவிந்துவிடும்
- காற்று, பேய்போல் வீசினால் உயிர் - நெருப்பு மடிந்துவிடும்
- காற்று எவ்வாறு வீச வேண்டும்?
- மெதுவாக நல்ல லயத்துடன் வீச வேண்டும்
- நெடுங்காலம் வீச வேண்டும்
- காற்று நல்ல லயத்துடன் நெடுங்காலம் வீசினால், பாரதியார் என்ன செய்வதாகக் கூறுகிறார்?
- பாட்டுகள் பாடுகிறோம்
- புகழ்ச்சிகள் கூறுகிறோம்
- வழிபடுகிறோம்
- பாரதியார் எத்தகைய பாராட்டுக்கு உரியவர்?
- நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
- சிந்துக்குத் தந்தை
- பாட்டுக்கொரு புலவன்
- பாரதியாரின் பன்முகங்கள் யாவை?
- கவிஞர்
- கட்டுரையாளர்
- சிறுகதை ஆசிரியர்
- இதழாளர்
- பாரதியார் எதை எதிர்த்து எழுதியவர்?
- சமுதாய ஏற்றத்தாழ்வுகள்
- பெண்ணடிமைத்தனம்
- குழந்தைகளுக்காக பாரதியார் எழுதிய நூல்கள் எவை?
- கண்ணன் பாட்டு
- பாப்பா பாட்டு
- புதிய ஆத்திசூடி
- பாரதியார் எழுதிய காவியங்கள் எவை?
- குயில் பாட்டு
- பாஞ்சாலி சபதம்
- பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் எவை?
- இந்தியா
- சுதேசமித்திரன்
- கருத்துப்படம் - கேலிச்சித்திரம் போன்றவற்றை உருவாக்கியவர் யார்?
- பாரதியார்
- வசன கவிதை- குறிப்பு வரைக
- உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது
- இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது
- இந்த வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம் ஆயிற்று
- எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் யார்?
- பாரதியார்
- காற்று என்னும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
- பாரதியார் கவிதைகள்.
காற்றே வா 2 மதிப்பெண் வினாக்கள்
- நீரின்றி அமையாது உலகு என்பது போல, எது இன்றி அமையாது உலகு உயிர் இயக்கம்?
- காற்றின்றி அமையாது உலக உயிர் இயக்கம்
- காற்று, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையை எங்கிருந்து கொண்டு வருகிறது?
- மகரந்தத் தூள்களிலிருந்து...
- காற்றுக்கு மிகுந்த ப்ராண ரஸம் எங்கிருந்து கிடைக்கிறது?
- இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராயும்போது...
- காற்று, எது நீடித்து நிற்பதற்காக வீச வேண்டும்?
- உயிர் - நெருப்பு
- காற்றின் சக்தி குறைந்தால் என்ன ஆகும்? காற்று, பேய்போல் வீசினால் என்ன ஆகும்?
- காற்றின் சக்தி குறைந்தால் உயிர் - நெருப்பு அவிந்துவிடும்
- காற்று, பேய்போல் வீசினால் உயிர் - நெருப்பு மடிந்துவிடும்
- காற்று எவ்வாறு வீச வேண்டும்?
- மெதுவாக நல்ல லயத்துடன் வீச வேண்டும்
- நெடுங்காலம் வீச வேண்டும்
- காற்று நல்ல லயத்துடன் நெடுங்காலம் வீசினால், பாரதியார் என்ன செய்வதாகக் கூறுகிறார்?
- பாட்டுகள் பாடுகிறோம்
- புகழ்ச்சிகள் கூறுகிறோம்
- வழிபடுகிறோம்
- பாரதியார் எத்தகைய பாராட்டுக்கு உரியவர்?
- நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
- சிந்துக்குத் தந்தை
- பாட்டுக்கொரு புலவன்
- பாரதியாரின் பன்முகங்கள் யாவை?
- கவிஞர்
- கட்டுரையாளர்
- சிறுகதை ஆசிரியர்
- இதழாளர்
- பாரதியார் எதை எதிர்த்து எழுதியவர்?
- சமுதாய ஏற்றத்தாழ்வுகள்
- பெண்ணடிமைத்தனம்
- குழந்தைகளுக்காக பாரதியார் எழுதிய நூல்கள் எவை?
- கண்ணன் பாட்டு
- பாப்பா பாட்டு
- புதிய ஆத்திசூடி
- பாரதியார் எழுதிய காவியங்கள் எவை?
- குயில் பாட்டு
- பாஞ்சாலி சபதம்
- பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் எவை?
- இந்தியா
- சுதேசமித்திரன்
- கருத்துப்படம் - கேலிச்சித்திரம் போன்றவற்றை உருவாக்கியவர் யார்?
- பாரதியார்
- வசன கவிதை- குறிப்பு வரைக
- உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது
- இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது
- இந்த வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணம் ஆயிற்று
- எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் யார்?
- பாரதியார்
- காற்று என்னும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
- பாரதியார் கவிதைகள்.
கோபல்லபுரத்து மக்கள் 2 மதிப்பெண் வினாக்கள்
- கிராமத்து விருந்தோம்பல் எத்தகையது?
- பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கின்ற நேயம் கிராமத்து விருந்தோம்பல் ஆகும்
- கோபல்லபுரத்து மக்கள் கதையில் கொத்தாளியின் கூற்று யாது?
- வரட்டும் வரட்டும்; ஒரு வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்.
- லாட சன்னியாசிகள் வேட்டி கட்டி இருக்கும் விதத்தை கூறு.
- இடுப்பை மறைத்த வேட்டி அதன் இரண்டு சொருகுநுனிகளும் குறுக்க மறுக்க மார்பின் மேல் ஏறிப் பிடரியில் வந்து முடிச்சாகி இருக்கும்.
- வேட்டியே வேட்டியும் மேல்வேட்டியுமாக இருக்கும்
- அன்னமய்யாவின் கூட வந்தவனின் தோற்றம் யாது?
- தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாட்டமும் வயோதிகன் போலவும் சாமியாரைப் போலவும் இருந்தது.
- ஆனால் அவன் இளைஞன். அவன் கண்களில் தீட்சண்யம் தெரிந்தது.
- வாலிபன் அன்னமய்யாவிடம் என்ன கேட்டான்?
- தம்பி, கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?
- கலயங்களின் வாய் எதன்கொண்டு மூடப்பட்டிருந்தது?
- தேங்காய் பருமனுள்ள கற்கள் கொண்டு மூடப்பட்டிருந்தது
- கரிசல் இலக்கியம் பற்றிக் குறிப்பு வரைக
- கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் கரிசல் இலக்கியம் ஆகும்.
- காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கின்ற மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் இவை.
- கரிசல் இலக்கியத்தை முதலில் எழுதியவர் கு. அழகிரிசாமி
- கரிசல் இலக்கியத்தை நிலைநிறுத்தியவர் கி.ராஜநாராயணன்
- கரிசல் இலக்கியப் பரம்பரை யாவர்?
- பா செயப்பிரகாசம்
- பூமணி
- வீர வேலுச்சாமி
- சோ தர்மன்
- வேல ராமமூர்த்தி, இன்னும் பலர்
- இளைஞனின் பெயர் என்ன? அவன் தன்னை எவ்வாறு கூப்பிடச் சொன்னான்?
- பரமேஸ்வரன்
- மணி
- கோபல்லபுரத்து மக்கள் - குறிப்பு வரைக
- கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள்
- இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
- இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது
- 1991ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடெமி பரிசு பெற்றது
- கி.ராஜநாராயணன் குறிப்பு வரைக.
- 20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்
- இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்
- இவரின் கதைகள் அனைத்தும் 'கி ராஜநாராயணன் கதைகள்' எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன
- "கரிசல் வட்டாரச் சொல் அகராதி" ஒன்றை உருவாக்கியுள்ளார்
- இவர் தொடங்கிய வட்டார மரபு புனைகதைகள் 'கரிசல் இலக்கியம்' என்று அழைக்கப்படுகிறது
- எழுத்துலகில் கி.ரா. என்று குறிப்பிடப்படுகிறார்
தொகாநிலைத்தொடர்கள் 2 மதிப்பெண் வினாக்கள்
- தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.
- ஒரு தொடரில் இரு சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து நிற்காமல், அப்படியே பொருள் தருவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
- எ.கா. காற்று வீசியது
- தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும். அவை,
- எழுவாய்த் தொடர்
- விளித்தொடர்
- வினைமுற்றுத் தொடர்
- பெயரெச்சத் தொடர்
- வினையெச்சத் தொடர்
- வேற்றுமைத் தொடர்
- இடைச்சொல் தொடர்
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத் தொடர்
- தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும். அவை,
- எழுவாய்த்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- எழுவாயுடன் பயனிலைகள் தொடர்வது எழுவாய்த் தொடராகும்
- பயனிலைகள் பெயர், வினை, வினா என மூவகைப்படும்
- எ.கா. காவிரி பாய்ந்தது
- விளித்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- விளிச்சொல்லை அடுத்து வினைச்சொல் தொடர்வது விளித்தொடராகும்.
- எ.கா. நண்பா எழுது!
- வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- வினைமுற்றை அடுத்து பெயர்ச்சொல் தொடர்வது வினைமுற்றுத் தொடர் ஆகும்
- எ.கா. பாடினாள் கண்ணகி
- பெயரெச்சத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- எச்சவினை, பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் ஆகும்
- எ.கா. கேட்ட பாடல்
- வினையெச்சத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- எச்சவினை, வினையைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் ஆகும்
- எ.கா. பாடி மகிழ்ந்தனர்
- வேற்றுமைத் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர் வேற்றுமைத் தொடர் ஆகும்
- எ.கா. கட்டுரையைப் படித்தாள்
- இத்தொடரில் 'ஐ' என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
- "அன்பால் கட்டினார்" என்பது எவ்வகைத் தொகாநிலைத் தொடர் ஆகும்?
- அன்பால் கட்டினார்-இத்தொடரில் 'ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்து பொருளை உணர்த்துகிறது.
- எனவே, இது மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்
- "அறிஞருக்குப் பொன்னாடை" என்பது எவ்வகைத் தொகாநிலைத்தொடர் ஆகும்?
- அறிஞருக்குப் பொன்னாடை-இத்தொடரில் 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்து பொருளை உணர்த்துகிறது.
- எனவே, இது நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.
- இடைச்சொல் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- இடைச்சொல்லை அடுத்து பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடராகும்
- எ.கா. மற்றொன்று
- 'மற்று' என்னும் இடைச்சொல்லை அடுத்து 'ஒன்று' என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
- உரிச்சொல் தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- உரிச்சொல்லை அடுத்து பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்
- எ.கா. சாலச் சிறந்தது
- அடுக்குத்தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும்
- எ.கா. வருக! வருக! வருக!
- கூட்டுநிலைப் பெயரெச்சம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.
- ஒன்றிற்கு மேற்பட்ட எச்சவினைகள், பெயரைக் கொண்டு முடிவது கூட்டுநிலைப் பெயரெச்சம் ஆகும்
- 'செய' என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை அடுத்து "வேண்டிய, கூடிய, தக்க, வல்ல" முதலான பெயரெச்சங்கள் தொடர்வது கூட்டுநிலைப் பெயரெச்சம் ஆகும்.
- எ.கா. கேட்க வேண்டிய பாடல்
- 'சொல்லத் தக்க செய்தி'- எவ்வாறு கூட்டு நிலைப் பெயரெச்சமாகிறது எனக் காட்டு.
- சொல்லத் தக்க செய்தி- இதில் 'சொல்ல' என்பது 'செய' என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஆகும்.
- 'தக்க செய்தி' என்பது பெயரெச்சம் ஆகும்.
- 'செய' என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்தை அடுத்து பெயரெச்சம் தொடர்ந்து வந்துள்ளதால், இது 'கூட்டு நிலைப் பெயரெச்சம்' ஆகிறது.
- இறங்கினார் முகமது- என்பது எவ்வகைத் தொகாநிலைத் தொடர் ஆகும்?
- இறங்கினார் முகமது - இதில் 'இறங்கினார்' என்னும் வினைமுற்றை அடுத்து 'முகமது' என்னும் பெயர் தொடர்ந்து வந்துள்ளது.
- இவ்வாறு வினைமுற்றை அடுத்து பெயர் தொடர்வது வினைமுற்றுத் தொடர் ஆகும்
- அவர் பாடகர்-இது எவ்வகைத் தொகாநிலைத்தொடர் எனக் காட்டு.
- அவர் பாடகர்- 'அவர்' என்பது எழுவாய். 'பாடகர்' என்பது பயனிலை.
- எழுவாயை அடுத்து பயனிலை தொடர்ந்து வருவது எழுவாய்த் தொடர் ஆகும்.
- பாடுவதும் கேட்பதும்-எவ்வகை தொகாநிலைத்தொடர் எனக் காட்டு.
- பாடுவதும் கேட்பதும்- இதில் 'உம்' என்னும் இடைச்சொல்லை அடுத்து வினைச்சொல் வந்துள்ளது.
- இடைச்சொல்லை அடுத்து பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடராகும்.
- கேட்ட பாடல்கள், கேட்காத பாடல்கள்- இவை எவ்வகைத் தொகாநிலைத்தொடர் எனக் காட்டு.
- கேட்ட பாடல்கள்-இதில் 'கேட்ட' என்னும் எச்சவினை, 'பாடல்கள்' என்னும் பெயரைக்கொண்டு தொடர்ந்து வந்துள்ளதால், இது பெயரெச்சத் தொடராகும்.
- கேட்காத பாடல்கள்- இதில் 'கேட்காத' என்னும் எச்சவினை, 'பாடல்கள்' என்னும் பெயரைக்கொண்டு தொடர்ந்து வந்துள்ளதால் இது பெயரெச்சத் தொடர் ஆகும். இதில் 'கேட்காத' என்னும் எதிர்மறைச் சொல் வந்துள்ளதால், இது 'எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்' ஆகும்.
- அடுக்கு அடுக்காக, பழகப் பழக-என்னும் தொடர்கள் எவ்வகைத் தொகாநிலைத் தொடர் எனக் கூறு.
- அடுக்கு அடுக்காக- இதில் 'அடுக்கு' என்னும் சொல் இரண்டு முறை அடுக்கி வந்துள்ளதால், இது அடுக்குத்தொடர் ஆகும்.
- பழகப்பழக-இதில் 'பழக' என்னும் சொல் இரண்டு முறை அடுக்கி வந்துள்ளதால், இது அடுக்குத்தொடர் ஆகும்.
- வந்தார் அண்ணன்-எவ்வகைத் தொடர்?
- வந்தார் அண்ணன்-'வந்தார்' என்னும் வினைமுற்று 'அண்ணன்' என்னும் பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.
- இவ்வாறு வினைமுற்றுச் சொல் பெயரைக் கொண்டு முடிவது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
- வடித்த கஞ்சி, நன்றாகப் பேசினான்-இவை எவ்வகைத் தொகாநிலைத் தொடர்கள் என்று கூறு.
- வடித்த கஞ்சி- இதில் 'வடித்த' என்னும் எச்சவினை, 'கஞ்சி' என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளதால், இது பெயரெச்சத் தொடர் ஆகும்.
- நன்றாகப் பேசினான்- இதில் 'நன்றாக' என்னும் எச்சவினை, 'பேசினான்' என்ற வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளதால், இது வினையெச்சத் தொடர் ஆகும்
- கவிதைகளின் தொகுப்பு-இது எவ்வகைத் தொகாநிலைத் தொடர்?
- கவிதைகளின் தொகுப்பு-இதில் 'இன்' என்னும் வேற்றுமை உருபு வெளிப்பட வந்து பொருள் உணர்த்தியமையால், இது வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.
இயல் 3 திருக்குறள்-இரண்டு மதிப்பெண் வினாக்கள்
- ஒழுக்கத்தை ஏன் உயிரை விட மேலானதாகக் கருதி காக்க வேண்டும்?
- ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால்...
- ஒழுக்கம் உடையவர் எந்த நிலையை அடைவர்? ஒழுக்கம் இல்லாதவர் எந்த நிலையை அடைவர்?
- ஒழுக்கம் உடையவர் மேன்மை அடைவர்
- ஒழுக்கம் இல்லாதவர் அடையக் கூடாத பழியை அடைவர்
- யார் பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுவார்?
- நல்ல பண்புகளை உடைய உயர்ந்தாரோடு ஒத்து வாழக் கல்லாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவராகக் கருதப்படுவார்
- அறிவு எனப்படுவது எது?
- எந்தப் பொருள் எந்த இயல்பானதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
- எப்போது ஆசை, சினம், அறியாமை ஆகியவற்றால் வரும் துன்பம் அழியும்?
- ஆசை, சினம், அறியாமை அழியும்போது அவற்றால் வரும் துன்பமும் அழியும்
- அரியவற்றுள் எல்லாம் அரியது எது?
- பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே அரியவற்றுள் எல்லாம் அரியது.
- எப்படிப்பட்ட மன்னன் தானே அழிவான்?
- குற்றம் கண்ட பொழுது இடித்துக் கூறும் பெரியாரின் துணை இல்லாத மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான்.
- பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது எது?
- நற்பண்பு உடையவரின் நட்பை கைவிடுவது...
- கள்வன் வழிப்பறி செய்வதற்கு நிகரான செயல் எது?
- அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு 'முறையற்ற வரி' விதிப்பது, ஆயுதங்களைக் காட்டி கள்வன் வழிப்பறி செய்வதற்கு நிகரானது.
- எப்படிப்பட்ட மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழப்பான்?
- தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன், தன் நாட்டை நாள்தோறும் இழப்பான்.
- இரக்கமில்லாத கண்கள் எதனுடன் ஒப்பிடப்படுகிறது?
- பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை.
- அதுபோல, இரக்கமில்லாத கண்களால் பயனில்லை.
- இந்த உலகம் யாருக்கு உரிமையானது?
- நடுவுநிலைமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இந்த உலகம் உரிமை உடையதாகும்.
- யார், பிறர் நன்மை கருதி நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவார்?
- விரும்பத்தகுந்த இரக்க இயல்பு கொண்டவர், பிறர் நன்மை கருதி நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவார்.
- பெருமை தருவது எது?
- ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எண்ணிச் சோர்வு அடையாமல் இருக்க வேண்டும்
- அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.
- யாரால் பிறருக்கு உதவ முடியும்?
- விடாமுயற்சி என்னும் உயர்பண்பு கொண்டவர்களால்தான் பிறருக்கு உதவ முடியும்.
- யாரிடம் செல்வம் பெருகும்? யாரிடம் வறுமை வந்து சேரும்?
- முயற்சி உடையவரிடம் செல்வம் பெருகும்
- முயற்சியே இல்லாதவரிடம் வறுமையே வந்து சேரும்.
- இழிவு இல்லாதது எது? இழிவானது எது?
- ஐம்புலன்களில் ஏதேனும் குறை இருந்தால், அது இழிவன்று.
- அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவாகும்.
- யாரால் முன்வினையைத் தோற்கடித்து வெற்றி பெற இயலும்?
- சோர்வு இல்லாது முயற்சி செய்பவரால், முன்வினையைத் தோற்கடித்து வெற்றி பெற இயலும்.
- யாருடைய செல்வத்தால் பயன் இல்லை?
- பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவரிடம் உள்ள செல்வத்தால் பயன் ஏதுமில்லை.
- பிறருக்கு உதவி செய்யாதவன் பெற்ற செல்வம் எதைப் போன்றது?
- ஊரின் நடுவே நச்சுமரம் பழுத்தது போன்றது.
- வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு-இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
- உவமை அணி
- பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்-இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
- எடுத்துக்காட்டு உவமையணி
- நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று-இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
- உவமை அணி.
எழுத்து சொல் 2 மதிப்பெண் வினாக்கள்
- இலக்கணத்தின் பயன் யாது?
- மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவுகிறது
- மொழியின் சிறப்புகளை அறிய உதவுகிறது
- சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஒளகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
- சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
- அளபெடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- அளபெடைகள் இரண்டு வகைப்படும். அவை,
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- அளபெடைகள் இரண்டு வகைப்படும். அவை,
- அளபெடையின் பயன் யாது?
- உணர்வை வெளிப்படுத்துவதற்கும்...
- இனிய ஓசையைத் தருவதற்கும்...
- உயிரளபெடை என்றால் என்ன?
- செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்.
- அவ்விடங்களில் நெடில் எழுத்துக்களின் இனமான குறில் எழுத்துக்கள் அவற்றின் பின்னால் வரும்.
- உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை.
- உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை,
- செய்யுளிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்கிறோம்
- எ.கா.
- ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்-மொழி முதலில் அளபெடுத்தது
- உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅர்க்கு வாழிய நெஞ்சே-மொழி இடையில் அளபெடுத்தது
- நல்ல படாஅ பறை-மொழி இறுதியில் அளபெடுத்தது
- இன்னிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
- எ.கா. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை
- சொல்லிசை அளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஒரு பெயர்ச்சொல், எச்சச் சொல்லாகத் திரிந்து அளவெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்
- எடுத்துக்காட்டு
- உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்
- நசை- விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என்று அளவு எடுத்தது. பெயர்ச்சொல் வினையடையாக மாறியது.
- ஒற்றளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துக்கள் பத்தும் ( ஞ ண ந ம ன ய ல வ ள) ஆய்த எழுத்தும் அளவெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
- எடுத்துக்காட்டு:
- எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர் வெஃஃ குவார்க்கில்லை வீடு
- சொல் என்றால் என்ன?
- ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்
- சொல்லின் பண்புகளைக் குறிப்பிடுக
- இருதிணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்
- மூவகை இடங்களிலும் வரும்
- உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்
- வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்
- மூவகை மொழிகள் யாவை?
- தனிமொழி
- தொடர்மொழி
- பொதுமொழி
- தனிமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனி மொழி எனப்படும்
- எ.கா. கண், படி
- பதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? எடுத்துக்காட்டு தருக.
- பதம் இரண்டு வகைப்படும். அவை,
- பகுபதம்
- எ.கா. கண்ணன், படித்தான்
- பகாப்பதம்
- எ.கா. கண், படி
- பகுபதம்
- பதம் இரண்டு வகைப்படும். அவை,
- தொடர் மொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழியாகும்
- எ.கா. கண்ணன் வந்தான்.
- பொதுமொழி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
- எடுத்துக்காட்டு: எட்டு
- 'எட்டு' தனித்து நின்று 8 என்ற எண்ணைக் குறிக்கும்
- 'எட்டு'=எள்+து-->எனத் தொடர் மொழியாகப் பிரிந்து நின்று 'எள்ளை உண்' என்று பொருள் தருகிறது
- இவ்வாறு தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால், இது பொதுமொழி ஆகிறது
- வேங்கை எவ்வாறு பொது மொழியாகிறது?
- வேங்கை- தனித்து நின்று மரத்தைக் குறிக்கிறது
- 'வேம்+கை' எனப் பிரிந்து நின்று 'வேகின்ற கை' என்று பொருள் தருகிறது.
- இவ்வாறு தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக அமைவதால், இது பொதுமொழி ஆகிறது
- தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
- எ.கா. ஈதல், நடத்தல்
- விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன?
- வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
- நட+தல்=நடத்தல்
- எதிர்மறைத் தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- எதிர்மறைப் பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர் ஆகும்.
- எ.கா. நடவாமை, கொல்லாமை
- முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயர் ஆதல் முதல்நிலைத் தொழிற்பெயர் ஆகும்.
- எடுத்துக்காட்டு: தட்டு, உரை, அடி. இவை முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும்போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.
- முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- விகுதி பெறாமல் முதல்நிலை திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.
- எ.கா. கெடு- கேடு, சுடு-சூடு
- வினையாலணையும் பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபை ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்
- எ.கா. வந்தவர் அவர்தான்.
- தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
பெருமாள் திருமொழி 2 மதிப்பெண் வினாக்கள்
- சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்து இருக்கக் காரணம் என்ன?
- தமிழர், பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருப்பதால்...
- சங்க இலக்கியத்திற்கு இணையாக எவ்வகை இலக்கியங்களில் அறிவியல் கருத்துக்கள் காணப்படுகின்றன?
- பக்தி இலக்கியங்களில்...
- குலசேகர ஆழ்வார், இறைவனை வழிபடுவதற்குக் கூறும் உவமை யாது?
- மருத்துவர், உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
- குலசேகர ஆழ்வார், இறைவனை எவ்வாறு வழிபடுகிறார்?
- மருத்துவர், உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
- வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள அன்னையே! அதுபோன்று உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தைக் எனக்குத் தந்தாலும், அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.
- வித்துவக்கோட்டு இறைவனைப் பற்றிக் கூறு.
- வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.
- குலசேகர ஆழ்வார், வித்துவக்கோட்டு இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியுள்ளார்.
- பெருமாள் திருமொழி -குறிப்பு வரைக.
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது
- 105 பாடல்கள் உள்ளன
- பாடியவர்: குலசேகர ஆழ்வார்
- காலம்: எட்டாம் நூற்றாண்டு.
இலக்கணம் பொது 2 மதிப்பெண் வினாக்கள்
- திணை என்றால் என்ன? உயர்திணை என்றால் என்ன? அஃறிணை என்றால் என்ன?
- திணை என்பது ஒழுக்கம் ஆகும்
- உயர்திணை என்பது உயர்ந்த ஒழுக்கம் உடைய மனிதர்களைக் குறிக்கும்.
- அஃறிணை என்பது ஒழுக்கமில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்
- பால் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- பால் என்பது திணையின் உட்பிரிவு
- பால் ஐந்து வகைப்படும். அவை,
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்.
- உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?
- ஒன்றன்பால்
- பலவின்பால்
- ஒன்றன்பால் என்றால் என்ன?
- அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்
- பலவின்பால் என்றால் என்ன?
- அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
- இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- இடம் மூன்று வகைப்படும். அவை,
- தன்மை
- முன்னிலை
- படர்க்கை
- இடம் மூன்று வகைப்படும். அவை,
- தன்மைப் பெயர்கள் யாவை?
- நான், யான், நாம், யாம்...
- முன்னிலைப் பெயர்கள் யாவை?
- நீ, நீர், நீவிர், நீங்கள்
- படர்க்கைப் பெயர்கள் யாவை?
- அவன், அவள், அவர்
- அது, அவை...
- வழாநிலை என்றால் என்ன?
- இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்
- வழு என்றால் என்ன?
- இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
- வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- வழு ஏழு வகைப்படும் அவை,
- திணை வழு
- பால் வழு
- இட வழு
- கால வழு
- வினா வழு
- விடை வழு
- மரபு வழு
- வழு ஏழு வகைப்படும் அவை,
- செழியன் வந்தது, கண்ணகி உண்டான், நீ வந்தேன், நேற்று வருவான்- இவை எவ்வகை வழுக்கள் என்று கூறு?
- செழியன் வந்தது-திணை வழு
- கண்ணகி உண்டான்-பால் வழு,
- நீ வந்தேன்-இட வழு,
- நேற்று வருவான்-கால வழு
- ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்- எவ்வகை வழு?
- வினா வழு
- 'கண்ணன் எங்கே இருக்கிறார்?' என்ற வினாவிற்கு, 'கண்ணாடி பைக்குள் இருக்கிறது' என்று விடை அளித்தல்-எவ்வகை வழு?
- விடை வழு
- தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந் தோட்டம் என்று கூறுதல் -எவ்வகை வழு?
- மரபு வழு
- வழுவமைதி என்றால் என்ன?
- இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்
- திணை வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக?
- "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும்
- இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது
- பால் வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
- "வாடா ராஜா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது, பால் வழுவமைதி ஆகும்.
- இங்கு உவப்பின் காரணமாக பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
- இடவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இட வழுவமைதி ஆகும்.
- காலவழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்
- இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாக கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித் தன்மையை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
- மரபு வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- "கத்தும் குயிலோசை- சற்றே வந்து காதிற் படவேணும்"-பாரதியார்
- குயில் கூவும் என்பதே மரபு. குயில் கத்தும் என்பது மரபு வழு.
- இங்குக் கவிதையில் இடம் பெற்று இருப்பதால் இது மரபுவழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- "அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்" என்பது எவ்வகை வழுவமைதி எனக் காட்டு.
- இத்தொடர், "அமைச்சர் நாளை விழாவிற்கு வருவார்" என்று அமைதல் வேண்டும்.
- அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை.
- ஏனெனில், அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.
- "இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான். -இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
- இத்தொடர், கண்ணன் என்பவர் தனக்குத் தானே கூறிக்கொண்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.
- தன்னைத் தன்மையிடத்தில் கூறுவதற்குப் பதிலாக படர்க்கை இடத்தில் கூறியுள்ளார்.
- இவ்வாறு கூறுவது இலக்கண ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதால், இது இடவழுவமைதியாகும்.
- சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்-இது எவ்வகை வழுவமைதி எனக் கூறு.
- "சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடினோம்" என்று வந்திருக்க வேண்டும்.
- இறந்தகாலம் வருவதற்குப் பதிலாக எதிர்காலம் வந்துள்ளது.
- எனவே, இது கால வழுவமைதி ஆகும்.
- செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.-இது எவ்வகை வழுவமைதி என்று கூறு.
- இத்தொடர், "செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறான்" என்று வந்திருக்க வேண்டும்.
- ஆண்பால் வருவதற்குப் பதிலாகப் பலர்பால் வந்துள்ளது.
- எனவே, இது 'பால் வழுவமைதி' ஆகும்.
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. தந்தை, "மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா" என்று சொன்னார். (ஆண்பாற் பெயர்களை பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக)
- தாய், "மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா" என்று சொன்னார்.
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
- அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழி அனுப்பினார்
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. "இதோ முடித்து விடுவேன்" என்பது செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
- இதோ முடித்து விட்டேன்
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையை படர்க்கையாக மாற்றுக)
- நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை
- அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக. குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக?
- குழந்தை அழுகிறது, பார்.
நீதி வெண்பா 2 மதிப்பெண் வினாக்கள்
- "கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது? "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது?
- கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -சங்க இலக்கியம்
- "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்று குறிப்பிடும் இலக்கியம் -திருக்குறள்
- அறிவு பெறுவது எவ்வாறு?
- பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல, நூல்களை நாடிச்சென்று அறிவு பெற வேண்டும்.
- கல்வியின் பயன் யாது?
- அருளைப் பெருக்குவது
- அறிவைச் சீராக்குவது
- மயக்கம் அகற்றுவது
- அறிவுக்குத் தெளிவு தருவது
- உயிருக்கு அரிய துணையாய் இருப்பது
- இன்பம் சேர்ப்பது
- கல்வியை ஏன் கற்க வேண்டும்?
- அருளைப் பெருக்குவதால்
- அறிவைச் சீராக்குவதால்
- மயக்கம் அகற்றுவதால்
- அறிவுக்குத் தெளிவு தருவதால்
- உயிருக்கு அரிய துணையாய் இருப்பதால்
- இன்பம் சேர்ப்பதால் கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும்
- சதாவதானம் குறிப்பு வரைக.
- சதம் என்றால் நூறு என்று பொருள்
- அவதானம் என்றால் கவனித்தல்
- ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளித்தலே சதாவதானம் எனப்படும்.
- செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பு வரைக.
- சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்.
- ஊர்: கன்னியாகுமரி மாவட்டம்- இடலாக்குடி
- 15 வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
- சீறாப் புராணத்திற்கு உரை எழுதியவர்
- 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப் பெற்றார்.
- செய்குத்தம்பிப் பாவலருக்கு அரசு செய்த சிறப்பு என்ன?
- இவரது நினைவாக இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் அமைக்கப்பட்டுள்ளது
- இவரது அனைத்து நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
வினா விடை வகைகள் பொருள்கோள் 2 மதிப்பெண் வினாக்கள்
- வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- வினா 6 வகைப்படும். அவை,
- அறி வினா
- அறியா வினா
- ஐய வினா
- கொளல் வினா
- கொடை வினா
- ஏவல் வினா
- வினா 6 வகைப்படும். அவை,
- அறி வினா என்றால் என்ன?
- தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது அறி வினா ஆகும்
- எடுத்துக்காட்டு: மாணவரிடம், "இந்தக் கவிதையின் பொருள் யாது?" என்று ஆசிரியர் கேட்டல்
- அறியா வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
- எடுத்துக்காட்டு: ஆசிரியரிடம், "இந்த கவிதையின் பொருள் யாது?" என்று மாணவர் கேட்டல்
- ஐய வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- தான் ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது
- எடுத்துக்காட்டு: "இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?" என வினவுதல்
- கொளல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது
- எடுத்துக்காட்டு: "ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?" என்று நூலகரிடம் வினவுதல்
- கொடை வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது
- எடுத்துக்காட்டு: "என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?" என்று கொடுப்பதற்காக வினவுதல்.
- ஏவல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுதல்
- எடுத்துக்காட்டு: "வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?" என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்
- விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- விடை எட்டு வகைப்படும். அவை,
- சுட்டு விடை
- மறை விடை
- நேர் விடை
- ஏவல் விடை
- வினா எதிர் வினாதல் விடை
- உற்றது உரைத்தல் விடை
- உறுவது கூறல் விடை
- இனமொழி விடை
- விடை எட்டு வகைப்படும். அவை,
- சுட்டு விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- சுட்டிக் கூறும் விடை
- "கடைத்தெரு எங்கு உள்ளது?" என்ற வினாவிற்கு 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறல்
- மறை விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- மறுத்துக் கூறும் விடை
- "கடைக்கு போவாயா?" என்ற கேள்விக்குப் 'போக மாட்டேன்' என மறுத்துக் கூறல்
- நேர் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- உடன்பட்டுக் கூறும் விடை
- "கடைக்கு போவாயா?" என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறல்
- ஏவல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை
- "இது செய்வாயா?" என்று வினவியபோது, 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது
- வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது
- "என்னுடன் ஊருக்கு வருவாயா?" என்ற வினாவிற்கு, 'வராமல் இருப்பேனா?' என்று கூறுவது
- உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல்
- "நீ விளையாட வில்லையா?" என்ற வினாவிற்குக், 'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது
- உறுவது கூறல் விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்
- "நீ விளையாடவில்லையா?" என்ற வினாவிற்குக், 'கால் வலிக்கும்' என்று உறுவதைக் கூறுவது
- இனமொழி விடை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்
- "உனக்கு கதை எழுதத் தெரியுமா?" என்ற வினாவிற்குக் "கட்டுரை எழுதத் தெரியும்" என்று கூறுவது.
- பொருள்கோள் என்றால் என்ன?
- செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள் என்று பெயர்
- பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை,
- ஆற்றுநீர்ப் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- நிரல்நிறைப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
- தாப்பிசைப் பொருள்கோள்
- அளைமறிபாப்புப் பொருள்கோள்
- கொண்டுகூட்டுப் பொருள்கோள்
- அடிமறி மாற்றுப் பொருள்கோள்
- பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை,
- ஆற்றுநீர்ப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ஆற்றுநீர்ப் பொருள்கோள் எனப்படும்
- எடுத்துக்காட்டு:அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
- நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது 'நிரல்நிறைப் பொருள்கோள்' எனப்படும்
- எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
- நிரல்நிறைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- நிரல்நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும். அவை,
- முறை நிரல்நிறைப் பொருள்கோள்
- எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
- நிரல்நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும். அவை,
- முறை நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
- செய்யுளியல் எழுவாயாக அமையும் பெயர்ச் சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும்
- எடுத்துக்காட்டு: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
- எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள்கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்
- எடுத்துக்காட்டு: விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
- கொண்டுகூட்டு பொருள்கோள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
- ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆகும்
- எடுத்துக்காட்டு: ஆலத்து மேல குவளை குளத்துல வாலின் நெடிய குரங்கு
- வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
- "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?" என்ற வினாவுக்கு "இந்த வழியாகச் செல்லுங்கள்" என்று விடை அளிப்பது.
- "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?"-அறியா வினா
- "இந்த வழியாகச் செல்லுங்கள்"-சுட்டு விடை
- "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?" என்ற வினாவுக்கு "இந்த வழியாகச் செல்லுங்கள்" என்று விடை அளிப்பது.
- வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.
- "எனக்கு எழுதித் தருகிறாயா?" என்ற வினாவுக்கு, "எனக்கு யார் எழுதித் தருவார்கள்?" என்று விடையளிப்பது.
- "எனக்கு எழுதித் தருகிறாயா?" -ஏவல் வினா
- "எனக்கு யார் எழுதித் தருவார்கள்- ஏவல் விடை
- "எனக்கு எழுதித் தருகிறாயா?" என்ற வினாவுக்கு, "எனக்கு யார் எழுதித் தருவார்கள்?" என்று விடையளிப்பது.
- உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக
- பாமகள்: வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?- அறியா வினா
- ஆதிரை: ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்- நேர் விடை
- பாமகள்: அப்படியா! என்ன தலைப்பு?- அறியா வினா
- ஆதிரை: கல்வியில் சிறக்கும் தமிழர்!- (நேர் விடை) நீங்கள் கவியரங்கத்திற்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?- ஐய வினா
- பாமகள்:ஏன் வராமல்?...வினா எதிர் வினாதல் விடை
கம்பராமாயணம் 2 மதிப்பெண் வினாக்கள்
- கவிஞனின் எல்லை எது?
- கலையின் உச்சம் பெறுவதுதான் கவிஞனின் எல்லை ஆகும்
- 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் யார்?
- பாரதியார்
- கம்பனைப் பற்றி பாரதியார் கூறுவது என்ன?
- 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பாரதியார் பெருமைப்படுகிறார்
- கவிதை எனப்படுவது யாது?
- உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை
- கவிஞனின் உலகம் பற்றிக் குறிப்பிடு
- கவிஞனின் உலகம் இட எல்லை அற்றது
- கால எல்லை அற்றது
- கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியை, சொல்லைக் கொண்டு எழுப்புகிறான்
- அவன் கண்ட காட்சிகள் அதற்குத் துணைபுரிகின்றன
- கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன
- விழுமியங்கள் துணைபுரிகின்றன
- ஒப்புமைகள் துணைபுரிகின்றன
- கலையின் உச்சம் பெறுவதுதான் அவன் எல்லை ஆகிறது.
- சரயு ஆறு பாயும் விதத்தைக் கூறு
- மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள், குருக்கத்தி வேலியை உடைய கமுகந்தோட்டங்கள், நெல்வயல்கள் ஆகிய அனைத்திலும் சரயு ஆறு பாய்ந்து ஓடுகிறது.
- அது, ஒரு உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போலப் பல இடங்களில் பாய்கிறது.
- இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பர் எவ்வாறு கவி பாடுகிறார்?
- குளிர்ந்த சோலைகளில் மயில்கள் நடனமாட,
- தாமரை மலர்கள் விளக்காக ஒளிர,
- மேகங்கள் மத்தளம் ஒலிக்க,
- குவளை மலர்கள் கண்விழித்துப் பார்க்க,
- தெளிந்த அலைகளை உடைய நீர்நிலைகள் திரைச்சீலையாய் விரிய,
- மகர யாழின் இசையை வண்டுகள் பாடுகின்றன.
- ஒன்றின் இருப்பால் மற்றொன்று அடையாளப்படுத்தப்படுகிறது என்ற மெய்யியலைக் கொண்டு ஒருநாட்டின் பெருமையைப் புலப்படுத்தும் கம்பனின் உத்தி பற்றி எழுது.
- கோசல நாட்டில் வறுமை சிறிதுமில்லை என்பதால், கொடைக்கு அங்கே இடமில்லை.
- நேருக்குநேர் போர்புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக் காட்ட வாய்ப்பு இல்லை.
- பொய்ம்மொழி இல்லாமையால் மெய்மை தனித்து விளங்க வில்லை.
- மற்ற பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை.
- இராமனை வருணிக்கும் கம்பன், தன் இயலாமையை எவ்வாறு இயன்றதாக்குகிறான்?
- பகலவனின் ஒளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு கரைந்து விடுகிறது.
- இடையே இல்லை என்று சொல்லும்படியாக, நுண்ணிய இடையை உடைய சீதையோடும் இளையவன் இலக்குவனோடும் இராமன் நடந்து சென்றான்.
- அவனது நிறம் மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? என்று வர்ணித்த கம்பன், ஐயோ! இவன் ஒப்பற்ற அழியாத அழகினை உடையவன் என்று சொல்வதன் மூலமாக தன் இயலாமையை இயன்றதாக்குகிறான்.
- "ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா" என்ற பாரதியின் சொல்லிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் கம்பனின் கூற்று யாது?
- ஆழமும் பெரிய அலைகளையுமுடைய கங்கை ஆற்றை பரதன் முதலானோர் கடந்து செல்வார்களா?
- யானைகள் கொண்ட சேனையைக் கண்டு புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்?
- 'தோழமை' என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா?
- தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால், அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என்று உலகத்தார் என்னைப் பழி சொல்ல மாட்டார்களா?
- கும்பகருணனை எழுப்பும் காட்சியை விவரிக்க.
- உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது
- அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
- காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற, வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே இனிப் படுத்து உறங்குவாயாக!
- இராமாயணம் -குறிப்பு வரைக
- இராமனது வரலாற்றைக் கூறும் நூல்
- இந்நூலுக்கு கம்பர் 'இராம அவதாரம்' எனப் பெயரிட்டார்
- இந்நூல் ஆறு காண்டங்களை உடையது
- கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
- கம்பர் - குறிப்பு வரைக.
- சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
- திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
- 'விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்று புகழப்பெற்றவர்.
- "கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" போன்ற முதுமொழிகளுக்கு உரியவர்.
- சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.
ஒரு மதிப்பெண் வினா-விடை இயல் 4 5 6
ஒரு மதிப்பெண் வினா விடை
1) வித்துவக்கோடு எங்கு உள்ளது? கேரள மாநிலம் பாலக்காடு
2) வித்துவக்கோட்டில் உள்ள இறைவன் யார்? உய்யவந்த பெருமாள்
3) பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?குலசேகர ஆழ்வார்
4) பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக உள்ளது? ஐந்தாம் திருமொழி
5) பெருமாள் திருமொழியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எத்தனை?105
6) குலசேகர ஆழ்வாரின் காலம் என்ன? எட்டாம் நூற்றாண்டு
7) ஆறறிவுடைய மக்களை எவ்வாறு அழைப்பர்? உயர்திணை
8) மக்கள் தவிர மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் எவ்வாறு அழைப்பர்?அஃறிணை
9) திணையின் உட்பிரிவு யாது?பால்
10) உயர்திணை எத்தனை பால் பிரிவுகளை உடையது?3
11) அஃறிணை எத்தனை பால் பிரிவுகளை உடையது?2
12) இடம் எத்தனை வகைப்படும்?3
13) இலக்கண முறையுடன் பிழையின்றி எழுதுவதும் பேசுவதும் வழாநிலை எனப்படும்
14) இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
15) இலக்கணப் பிழைகள் இல்லாது இருப்பின் அவை______ எனப்படும்(வழாநிலை)
16) கண்ணகி உண்டான் என்பது______வழு(பால்வழு)
17) செழியன் வந்தது என்பது______வழு(திணை வழு)
18) நீ வந்தேன் என்பது_____வழு(இட வழு)
19) நேற்று வருவான் என்பது________வழு(கால வழு)
20) ஒரு விரலைக் காட்டி ‘சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்பது_______வழு(வினா வழு)
21) “ எங்கே இருக்கிறார்?” என்ற வினாவிற்குக் “கண்ணாடி பைக்குள் இருக்கிறது” என்று விடை அளித்தல்________வழு(விடை வழு)
22) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல்_______(மரபு வழு)
23) இலக்கண முறைப்படி பிழை உடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது_________(வழுவமைதி)
24) “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது_________வழுவமைதி(திணை வழுவமைதி)
25) “வாடா ராஜா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது______வழுவமைதி(பால் வழுவமைதி)
26) மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது_______வழுவமைதி(இட)
27) ‘குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' என்பது____வழுவமைதி(கால)
28) “கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் படவேண்டும்” என்று பாரதியார் பாடுவது________வழுவமைதி(மரபு)
29) ‘அமைச்சர் நாளை விழாவிற்கு வரு கிறார்' என்பது_____வழுவமைதி(கால)
30) ‘அவனும் நீயும் அலுவலரை பார்க்க ஆயத்தமாகுங்கள்' என்பது________வழுவமைதி(இட)
31) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்-என்பது_________வழுவமைதி(இட)
32) “செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்” என்பது _______வழுவமைதி(இட)
33) “சிறுவயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்” என்பது_______வழுவமைதி(கால)
34) “அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது” என்பது_____வழு(திணை)
35) “அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை' என்பது_____வழுவமைதி(இட)
36) “குழந்தை அழுகிறான், பார்” என்பது_______வழு(திணை)
37) ‘உனதருளே பார்ப்பன் அடியேனே' யார் யாரிடம் கூறியது_______,_______(குலசேகர ஆழ்வார், இறைவனிடம்)
38) குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.இது _______வழுவமைதி(பால்)
39) பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். இது___________வழுவமைதி(திணை)
40) வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்.இது____________வழுவமைதி(கால)
41) “சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்பான்” என்று இறமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயை பற்றிக் கூறினார்.இது_________வழு(திணை)
42) ‘பெய்த மழை' என்பதன் வினைத்தொகை_______(பெய்மழை)
43) மீளாத்துயர் என்பதன் எதிர்மறை________(மீண்ட துயர்)
44) அவிர்தல் பொருள் தருக(ஒளிர்தல்)
45) அழல் பொருள் தருக(நெருப்பு)
46) உவா பொருள் தருக(முழு நிலவு)
47) கங்குல் பொருள் தருக(இரவு)
48) கனலி பொருள் தருக(சூரியன்)
49) புயலுக்குப் பின்- எதிர்மறையாக எழுதுக(புயலுக்கு முன்)
50) பெரியவரின் அமைதி-எதிர்மறையாக எழுதுக(சிறுவனின் அமைதி)
51) அருகில் அமர்க- எதிர்மறையாக எழுதுக(தொலைவில் அமர்க)
52) மறைத்து காட்டு- எதிர்மறையாக எழுதுக(வெளிப்படையாகக் காட்டு)
53) கொடுத்துச் சிவந்த- எதிர்மறையாக எழுதுக(கொடுக்காமல் சிவந்த)
54) Nanotechnology-கலைச்சொல் தருக(மீநுண் தொழில்நுட்பம்)
55) Biotechnology-கலைச்சொல் தருக(உயிரித் தொழில்நுட்பம்)
56) Ultraviolet rays-கலைச்சொல் தருக(புற ஊதாக் கதிர்கள்)
57) Space technology-கலைச்சொல் தருக(விண்வெளி தொழில்நுட்பம்)
58) Cosmic rays-கலைச்சொல் தருக(விண்வெளிக் கதிர்கள்)
59) Infrared red-கலைச்சொல் தருக(அகச்சிவப்பு கதிர்)
60) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்_________(செய்குத்தம்பி பாவலர்)
61) செய்குத்தம்பி பாவலரின் ஊர்________(கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி)
62) செய்குத்தம்பிப் பாவலர் _____ வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றார்(15)
63) சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்________(செய்குத்தம்பி பாவலர்)
64) _____________அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்துகாட்டி சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர் செய்குத்தம்பி பாவலர்.(சென்னை விக்டோரியா)
65) _______நாளில் செய்குத்தம்பிப் பாவலர் சதாவதானி பட்டம் பெற்றார்(1907 மார்ச் 10)
66) செய்குத்தம்பி பாவலர் மணிமண்டபம் ________ல் உள்ளது(இடலாக்குடி)
67) சதம் என்றால் ______ என்பது பொருள்(நூறு)
68) கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம்______(சங்க இலக்கியம்)
69) தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறும் நூல் ________(திருக்குறள்)
70) கல்வியைப் போற்றுவதை _________ காலத்திலிருந்து தமிழர் தொடர்கின்றனர்(சங்க)
71) உயிருக்கு அரிய துணையாய் இருப்பது_______(கல்வி)
72) மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தருவது_______(கல்வி)
73) அருளைப் பெருக்கி அறிவைத் திருத்துவது_______(கல்வி)
74) வினா _____ வகைப்படும்(6)
75) தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது_______வினா(அறி)
76) தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது________வினா(அறியா)
77) ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது______வினா(ஐய)
78) தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது_______வினா(கொளல்)
79) பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது________வினா(கொடை)
80) ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுவது________வினா(ஏவல்)
81) “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் செல்லுதல்_________வினா(ஏவல்)
82) “என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?” என்று கொடுப்பதற்காக வினவுதல்_________வினா(கொடை)
83) “ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?” என்று நூலகரிடம் வினவுதல்________வினா(கொளல்)
84) “இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?” என வினவுதல்______வினா(ஐய)
85) ஆசிரியரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று மாணவர் கேட்டல்______வினா(அறியா)
86) மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் கேட்டல்______வினா(அறி)
87) விடை_____வகைப்படும்(8)
88) “கடைத்தெரு எங்கு உள்ளது?” என்ற வினாவிற்கு, “வலப்பக்கத்தில் உள்ளது” எனக் கூறல்______விடை(சுட்டு)
89) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போக மாட்டேன்” என மறுத்துக் கூறல்_____விடை(மறை)
90) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்_______விடை(நேர்)
91) “இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது_______விடை(ஏவல்)
92) “என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு “வராமல் இருப்பேனா?” என்று கூறுவது_______விடை(வினா எதிர் வினாதல்)
93) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கிறது” என்று உற்றதை உரைப்பது______விடை(உற்றது உரைத்தல்)
94) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கும்” என்று உறுவதை உரைப்பது_______விடை(உறுவது கூறல்)
95) “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது________விடை(இன மொழி)
96) பொருள்கோள்_____வகைப்படும்(8)
97) செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் __________ என்று பெயர்.(பொருள்கோள்)
98) ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால், அது __________ பொருள்கோள் ஆகும்.(ஆற்று நீர்)
99) ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது _______ பொருள்கோள் ஆகும்.(நிரல் நிறை)
100) நிரல்நிறைப் பொருள்கோள் _____ வகைப்படும்(2)
101) செய்யுளில் எழுவாய்களை வரிசைபடுத்தி அவை ஏற்கும் பயனிலை களை நிரல்நிறையாகக் கொண்டு பொருள் கொள்ளுதல் _______________(முறை நிரல் நிறை) பொருள்கோள் ஆகும்.
102) செய்யுளில் ஏழுவாய்களை வரிசைப் படுத்தி அதை ஏற்கும் பயனிலைகளைக் கொண்டு பொருள்கொள்ளுதல் _______நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்(எதிர் நிரல் நிறை)
103) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் ________________(எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்)
104) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்__________(முறை நிரல்நிறைப் பொருள்கோள்)
105) ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு –இப்பாடலில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
106) ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டிப் பொருள் கொள்வது____________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
107) “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?”-இது எவ்வகை வினா?(அறியா வினா)
108) “இந்த வழியாகச் செல்லுங்கள்”-இது எவ்வகை விடை?(சுட்டு விடை)
109) “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(வினா எதிர் வினாதல் விடை)
110) “ஆதிரை, ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?”-எவ்வகை வினா?(அறியா வினா)
111) “கவி அரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்”-எவ்வகை விடை?(நேர் விடை)
112) “நீங்கள் கவி அரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?”- எவ்வகை வினா?(ஐய வினா)
113) “இங்கு நகரப் பேருந்துகள் நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது எவ்வகை வினா?(அறியா வினா)
114) “அதோ, அங்கே பேருந்து நிற்கும்” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(சுட்டு விடை)
115) ‘அருந்துணை’ என்பதைப் பிரித்து எழுதுக(அருமை+ துணை)
116) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”-என்ற பாடல் வரியில் குறிப்பிடப்படுவது எது?(கல்வி)
117) “மின்விளக்கின் சொடுக்கு எந்தப் பக்கம் இருக்கிறது?”-எவ்வகை வினா?(அறியா வினா)
118) “சொடுக்கிய போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?”-எவ்வகை வினா?(ஐய வினா)
119) முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்-இதில் அமைந்துள்ள பொருள்கோள்________(ஆற்றுநீர்ப் பொருள்கோள்)
120) Lute music-கலைச்சொல் தருக(யாழிசை)
121) Chamber-கலைச்சொல் தருக(அறை)
122) To look up-கலைச்சொல் தருக(எட்டிப் பார்)
123) Grand-daughter-கலைச்சொல் தருக(பேத்தி)
124) Rote-கலைச்சொல் தருக(நெட்டுரு)
125) Didactic compilation-கலைச்சொல் தருக(நீதி நூல் திரட்டு)
126) “அருணா பாடினாள்” என்பதைப் பெயரெச்சத்தொடராக்கு(பாடிய அருணா)
127) ‘ஓடிய அருணா' என்பதை வினையெச்சத் தொடராக்கு.(ஓடி வந்தாள்)
128) ‘ஓடிய அருணா' என்பதை விளித்தொடராக்கு(அருணா, ஓடு)
129) “அம்மா சொன்னார்” என்பதை பெயரெச்சத் தொடராக்கு(சொன்ன அம்மா)
130) “அம்மா சொன்னார்” என்பதை விளித்தொடராக்கு(அம்மா, சொல்)
131) ‘தா' என்னும் வேர்ச்சொல்லைப் பயன்படுத்தி எழுவாய்த் தொடர் அமைக்க.(முருகன் தந்தான்)
132) “துளிர் பார்த்தாள்” என்பதைப் பெயரெச்சத் தொடராக்கு
133) “குழந்தை வந்தது” என்பதை வினையெச்சத் தொடராக்கு.
134) “மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்”- இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமைமை செய்க.
135) “கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
136) “வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களை கற்றுத் தருகிறது”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
137) “ மாணவர்கள் அனைவரும் தனித்தனியே எழுதித் தரவேண்டும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
138) “தார் போன்ற நிறமுண்டு. கரியுமில்லை. பார்முழுதும் பரந்து திரிவேன் மேகமும் இல்லை” -நான் யார்?(காகம்)
139) மன்றல்-பொருள் தருக(திருமணம்)
140) அடிச்சுவடு-பொருள் தருக(நடந்து வந்த காலடித்தடம்)
141) அகராதி-பொருள் தருக(அகரமுதலி)
142) தூவல்-பொருள் தருக(பேனா)
143) மருள்-பொருள் தருக(மயக்கம்)
144) Emblem-கலைச்சொல் தருக(சின்னம்)
145) Thesis-கலைச்சொல் தருக(ஆய்வேடு)
146) Intellectual-கலைச்சொல் தருக(அறிவாளர்)
147) Symbolism-கலைச்சொல் தருக(குறியீட்டியல்)
148) உள்ளதை உணர்ந்தபடி கூறுவது______(கவிதை)
149) “கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்” என்று பெருமைப்படுபவர்________(பாரதியார்)
150) ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பல இடங்களில் பாயும் ஆறு _______(சரயு ஆறு)
151) கொடை இல்லாத நாடு எது?(கோசலை)
152) “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று பாடியவர்__________(பாரதியார்)
153) ஏழைமை வேடன் யார்?(குகன்)
154) வேழ நெடும்படை கொண்டவர் யார்?(பரதன்)
155) தோழமை என்று சொன்னவர் யார்?(இராமன்)
156) கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி________ எனப் பெயரிட்டார்(இராமாவதாரம்)
157) இராமாயணம் ____ காண்டங்களை உடையது(6)
158) இராமாயணப் பாடல்கள் _____ நயம் மிக்கவை.(சந்த)
159) கம்பரின் ஊர்________(திருவழுந்தூர்)
160) கம்பரை ஆதரித்த வள்ளல்___________(சடையப்ப வள்ளல்)
161) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்தும்________ஐந்திணை(அன்பின்)
162) அகத் திணை எத்தனை வகைப்படும்?(7)
163) முதற்பொருள் என்பது_______,_________(நிலமும் பொழுதும்)
164) பொழுது எத்தனை வகைப்படும்?(2)
165) சிறுபொழுது எத்தனை வகைப்படும்?(6)
166) பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?(6)
167) கார் காலம் என்பது_______,______மாதங்கள்(ஆவணி புரட்டாசி)
168) குளிர்காலம் என்பது______&_________(ஐப்பசி கார்த்திகை)
169) முன்பனிக்காலம் என்பது________&________( மார்கழி தை)
170) பின்பனிக் காலம் என்பது______&______(மாசி பங்குனி)
171) இளவேனில் காலம் என்பது________&_______(சித்திரை வைகாசி)
172) முதுவேனில் காலம் என்பது______&_______(ஆனி ஆடி)
173) காலை என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 6 மணி முதல் 10 மணி வரை)
174) நண்பகல் என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 10 மணி முதல் 2 மணி வரை)
175) எற்பாடு என்பது_____மணி முதல்____மணி வரை(பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை)
176) மாலை என்பது_____மணி முதல்____மணி வரை(மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை)
177) யாமம் என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை)
178) வைகறை என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை)
179) குறிஞ்சித் திணைக்கு உரிய சிறுபொழுது______(யாமம்)
180) முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது ___________(மாலை)
181) மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது__________(வைகறை)
182) நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது ____________(எற்பாடு)
183) பாலைத் திணைக்குரிய சிறுபொழுது_________(நண்பகல்)
184) ஆறு பெரும் பொழுதுகளும் வரக்கூடிய திணை______,_________(மருதம் நெய்தல்)
185) குறிஞ்சித் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________,_________(குளிர்காலம் முன்பனிக்காலம்)
186) பாலைத் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________&_______(இளவேனில் முதுவேனில் பின்பனி)
187) முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது___________ (கார்காலம்)
188) ஒரு நிலத்தின் தெய்வம் மக்கள் தொழில் விலங்கு இவையெல்லாம்____________(கருப்பொருள்கள்)
189) குறிஞ்சித் திணைக்குரிய தெய்வம்_____(முருகன்)
190) முல்லைத் திணைக்குரிய தெய்வம்________(திருமால்)
191) மருதத் திணைக்குரிய தெய்வம்_________(இந்திரன்)
192) நெய்தல் திணைக்குரிய தெய்வம்________(வருணன்)
193) பாலைத் திணைக்குரிய தெய்வம் _________(கொற்றவை)
194) குறிஞ்சித் திணைக்குரிய பறை_______(தொண்டகப் பறை)
195) முல்லைத் திணைக்குரிய பறை________(ஏறுகோட்பறை)
196) மருதத் திணைக்குரிய பறை______&_______(மணமுழா, நெல்லரிகிணை)
197) பாலைத் திணைக்குரிய பறை_______(துடி)
198) நெய்தல் திணைக்குரிய பறை_________(மீன்கோட்பறை)
199) நெய்தல் திணைக்குரிய பண்_________(செவ்வழிப்பண்)
200) பாலைத் திணைக்குரிய பண்________(பஞ்சுரப்பண்)
201) குறிஞ்சித் திணைக்குரிய தொழில்கள்________&________(தேனெடுத்தல் கிழங்கு அகழ்தல்)
202) முல்லைத் திணைக்குரிய தொழில்கள்________&________(ஏறுதழுவுதல் நிரை மேய்த்தல்)
203) மருதத் திணைக்கு உரிய தொழில்கள்________&________(நெல்லரிதல் களை பறித்தல்)
204) நெய்தல் திணைக்குரிய தொழில்கள்________&_______(மீன்பிடித்தல் உப்பு விளைத்தல்)
205) பாலைத் திணைக்கு உரிய தொழில்கள்________&_______(வழிப்பறி, நிரை கவர்தல்)
206) குறிஞ்சித் திணைக்குரிய மக்கள்_______&________&_______(வெற்பன் குறவர் குறத்தி
207) முல்லைத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்)
208) மருதத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(ஊரன் உழவர் உழத்தியர்)
209) நெய்தல் திணைக்குரிய மக்கள்______&_____&______(சேர்ப்பன் பரதர் பரத்தியர்)
210) பாலைத் திணைக்குரிய மக்கள்______&______(எயினர் எயிற்றியர்)
211) குறிஞ்சித் திணைக்குரிய உணவு______&_____(மலைநெல், தினை)
212) முல்லைத் திணைக்குரிய உணவு_____&______(வரகு, சாமை)
213) மருதத் திணைக்குரிய உணவு______&_____(செந்நெல், வெண்ணெல்)
214) நெய்தல் திணைக்கு உரிய உணவு_____&_______(மீன் உப்புக்குப் பெற்ற பொருள்)
215) பாலைத் திணைக்குரிய உணவு____________(சூறையாடலால் வரும் பொருள்)
216) குரவம், பாதிரி ஆகியவை எந்தத் திணைக்குரிய பூக்கள்?(பாலை)
217) தாழை -எந்த திணைக்குரிய பூ?(நெய்தல்)
218) செங்கழுநீர் -எந்த திணைக்குரிய பூ?(மருதம்)
219) தோன்றி- எந்த திணைக்குரிய பூ?(முல்லை)
220) காந்தள்-எந்த திணைக்குரிய பூ?(குறிஞ்சி)
221) நீர்நாய் எந்த திணைக்குரிய விலங்கு?(மருதம்)
222) வலியிழந்த யானை எந்த திணைக்குரிய விலங்கு?(பாலை)
223) புன்னை ஞாழல் எந்த திணைக்குரிய மரங்கள்?(நெய்தல்)
224) இலுப்பை எந்த நிலத்திற்குரிய மரம்?(பாலை)
225) காஞ்சி எந்த நிலத்திற்குரிய மரம்?(மருதம்)
226) கொன்றை காயா எந்த நிலத்திற்குரிய மரங்கள்?(முல்லை)
227) அகில், வேங்கை எந்த நிலத்திற்குரிய மரம்?(குறிஞ்சி)
228) புறா எந்த நிலத்திற்குரிய பறவை?(பாலை)
229) குறும்பு எந்த நிலத்திற்குரிய ஊர்?(பாலை)
230) பாடி சேரி எந்த நிலத்திற்குரிய ஊர்கள்?(நெய்தல்)
231) சிறுகுடி எந்த நிலத்திற்குரிய ஊர்?(குறிஞ்சி)
232) பொய்கை எந்த நிலத்திற்குரிய நீர்?(மருதம்)
233) குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்_______&______&________(குறிஞ்சி மருதம் நெய்தல்)
234) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?(வறுமை இல்லாமையால்)
235) தால்-பொருள் தருக(நாக்கு)
236) உழுவை-பொருள் தருக(புலி)
237) அகவுதல்-பொருள் தருக(அழைத்தல்)
238) ஏந்தெழில்-பொருள் தருக(மிகுந்த அழகு)
239) அணிமை-பொருள் தருக(அருகில்)
240) Aesthetics-கலைச்சொல் தருக(அழகியல்)
241) Artifacts-கலைச்சொல் தருக(கலைப்படைப்புகள்)
242) Terminology-கலைச்சொல் தருக(கலைச்சொல்)
243) Myth-கலைச்சொல் தருக.(தொன்மம்)
244) சிறந்த அமைச்சருக்கு உரிய இயல்புகள் எத்தனை?(5)
245) பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
246) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி)
247) இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
248) மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்-இதில் வந்துள்ள அணி______(உவமை அணி)
249) தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்-இதில் வந்துள்ள அணி யாது?(வஞ்சப்புகழ்ச்சி அணி)
250) சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி)
சிற்றகல்ஒளி 1 மதிப்பெண் வினாக்கள்
- இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு எது? 1906
- காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை எங்கு தொடங்கினார்? தென் ஆப்பிரிக்கா
- காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைச் எப்போது தொடங்கினார்? 1906
- சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1906
- ம பொ சி பிறந்த ஆண்டு எது? 1906
- ம பொ சி என்பதன் விரிவாக்கம் என்ன? மயிலாப்பூர் பொன்னுசாமி மகன் சிவஞானம்
- ம பொ சி பிறந்த நாள் எப்போது? ஜூன் 26
- ம பொ சி எங்கு பிறந்தார்? சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் - சால்வன் குப்பம்
- ம பொ சி யின் தந்தை யார்? பொன்னுச்சாமி
- ம பொ சி அவர்களின்தாயார் யார்? சிவகாமி
- ம பொ சி யின் இயற்பெயர் என்ன? ஞானப்பிரகாசம்
- ம பொ சி அவர்களை சிவஞானி என அழைத்தவர் யார்? சரபையர் என்ற முதியவர்
- ம பொ சி எந்த வகுப்போடு கல்வியை நிறுத்தினார்? மூன்றாம் வகுப்பு
- ம பொ சி யின் கல்வி எப்போது தடைபட்டது? மூன்றாம் வகுப்பில் நுழைந்த 7 ஆம் நாளோடு
- ம பொ சி யின் கல்வி ஏன் தடைபட்டது? ம பொ சி அவர்களின் குடும்ப வறுமை காரணமாக
- ம பொ சி காலத்தில் மூன்றாம் வகுப்பிற்கு தேவைப்பட்ட பாடப் புத்தகங்கள் எவை? தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடப் புத்தகங்கள்
- பள்ளியிலிருந்து ம பொ சி ஏன் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தார்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர் துரத்திவிட்டார். அதை அவமானமாகக் கருதியதால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தார்.
- ம பொ சி எதை அவமானமாகக் கருதினர்? பாடப்புத்தகம் இன்றி பள்ளிக்கு வந்த மா பொ சி யை துரத்தி விட்டதால், அதை அவமானமாகக் கருதினர்.
- ம பொ சி யை வீட்டிற்கு விரட்டி விட்டதற்காக அவரின் தந்தை என்ன செய்தார்? ஆசிரியரை வாயார வைதார்
- ம பொ சி சிறுவயதில் அன்னையிடம் கற்ற பாடல்கள் எவை?
- அரசாணி மாலை
- பவளக்கொடி மாலை
- ம பொ சி தானாகவே விரும்பி படித்த பாடல்கள் எவை? சித்தர் பாடல்கள்
- ம பொ சி யின் கேள்வி ஞானத்தை பெருகியதில் பெரும் பங்கு வகித்தவர் யார்? திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்
- ம பொ சி எதனுடன் கடும் போர் புரிந்ததாக குறிப்பிடுகிறார்? தனது அறியாமையுடன்
- ம பொ சி எப்போது பேரானந்தம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்? குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விடும் போது
- ம பொ சி எவற்றைத் தம் சொத்துக்களாகக் கருதினார்? தம்மிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களை
- பேராயக் கட்சி எனப்படுவது எது? காங்கிரஸ் கட்சி
- காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது? 1931
- அந்நியத் துணி கடை மறியல் எதன்படி அனுமதிக்கப்படவில்லை? காந்தி-இர்வின் ஒப்பந்தம்
- காந்தி-இர்வின் ஒப்பந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி செய்தது என்ன?
- தீண்டாமை விலக்கு
- கதர் விற்பனை
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை எப்போது வழங்கப்பட்டது? செப்டம்பர் 30 ,1932
- ம பொ சி முதன்முதலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு எது?1932
- மபொசி முதல் முதலில் எதற்காக சிறையிலிடப்பட்டார்?தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட தண்டனை என்ன?
- மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை
- 300 ரூபாய் அபராதம். கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை.
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் தன்மை யாது? நூற்றுக் கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டிருந்தது
- தமிழா! துள்ளி எழு- துண்டறிக்கையின் சிறப்பம்சம் யாது? பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது
- ம.பொ.சி அவர்களுக்குச் சிறையில் வழங்கப்பட்ட சோறு எந்த வகுப்பைச் சார்ந்தது?'சி' வகுப்பு
- இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் எது?1942 ஆகஸ்ட் 8
- இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?1942
- இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? பம்பாய் காங்கிரஸ் மாநாடு
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்திற்காக கைது செய்யப்பட்ட தலைவர்கள் யார்? காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி சிறையில் அடைக்கப்பட்ட நாள் எது? 1942 ஆகஸ்ட் 13
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக மபொசி முதலில் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?வேலூர்
- இந்தியாவை விட்டு வெளியேறு தீர்மானத்தில் பங்கு பெற்றதற்காக வேலூர் சிறையிலிருந்து எந்தச் சிறைக்கு மாற்றப்பட்டார்?அமராவதி
- அமராவதி சிறைச்சாலையின் அவல நிலை யாது? கூரை துத்தநாக தகடுகளால் வேயப்பட்டு இருந்தது
- வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டது எப்போது? இந்திய விடுதலைக்கு மறுநாள்
- வடக்கெல்லை மீட்சிக்கு அழைப்பு விடுத்தது யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
- வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளச்செய்தவர் யார்? தமிழாசிரியர் மங்கலங்கிழார்
- ஆந்திரத் தலைவர்கள் எந்த மாவட்டத்தை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர்?சித்தூர்
- தமிழர் மாநாடு எங்கு நடைபெற்றது? திருத்தணி, சென்னை
- தமிழர் மாநாட்டை நடத்தியது யார்? தமிழரசுக் கழகம்
- தமிழரசுக் கழகம் யாருடன் இணைந்து தமிழர் மாநாட்டை நடத்தியது? தமிழ் ஆசான் மங்கலங்கிழார்
- வடக்கெல்லை போராட்டம் நடைபெற்ற இடங்கள் யாவை? சித்தூர் புத்தூர் திருத்தணி
- வடக்கெல்லை போராட்டத்தில் சிறைப்பட்டு உயிர் நீத்தவர் யாவர்?
- இராஜமுந்திரி சிறையில் இருந்த திருவாலங்காடு கோவிந்தராசன்
- பழனி சிறையிலிருந்த மாணிக்கம்
- மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? சர்தார் கே எம் பணிக்கர்
- மொழிவாரி ஆணையத்தின் தாக்கம் என்ன? சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிடம் அளித்துவிட்டது
- திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்கள் எந்த ஆணையத்தால் மீட்கப்பட்டன?படாஸ்கர் ஆணையம்
- இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு இல்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் எத?சிலப்பதிகாரம்
- தமிழினத்தின் பொதுச்சொத்து என்று மபொசி எதனைக் குறிப்பிடுகிறார்? சிலப்பதிகாரம்
- சிலம்புச் செல்வர் யார்?ம பொ சி
- தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்க முன் வந்தவர் யார்?இராஜாஜி
- ஆந்திரா மாநிலம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஆணையம் எது?நீதிபதி வாஞ்சு ஆணையம்
- தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் எங்கு நிறைவேற்றப்பட்டது? சென்னை மாநகராட்சி
- தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற தீர்மானம் யார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது? மாநகர தந்தை செங்கல்வராயன்
- ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை வெளியிட்டவர் யார்? பிரதமர் நேரு
- ஆந்திர அரசின் தலைநகரம் அந்த நாட்டின் எல்லைக்கு உள்ளேயே அமையும் என்ற அறிவிப்பை எப்போது வெளியிடப்பட்டது? 25-3-1953
- மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எங்கு பேசினார்? வடிவீஸ்வரம்
- மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எப்போது பேசினார்?25-10-1946
- மபொசி அவர்கள் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி முதலில் எந்த விழாவில் பேசினார்?வடிவை வாலிபர் சங்க ஆண்டு விழா
- தெற்கெல்லை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் யாவர்? தேவசகாயம், செல்லையா
- இயற்கையாகவே போர்க்குணம் கொண்டவர் யார்? மார்ஷல் நேசமணி
- தெற்கெல்லை போராட்டம் யாருடைய வருகைக்குப் பிறகு வலுப்பெற்றது? மார்சல் நேசமணி
- கன்னியாகுமரி மாவட்டம் எப்போது தமிழ்நாட்டுடன் இணைந்தது?1956 நவம்பர் 1
- மார்ஷல் நேசமணி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு யாது? நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபம் நிறுவியது.
- பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை எப்போது வெளியானது?10-10-1955
- பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை யாது? மொழிவாரி மாநிலம் அமைப்பது.
- பசல் அலி ஆணையத்தால் நம் கையை விட்டு சென்ற பகுதிகள் எவை? தேவிகுளம், பீர்மேடு
- ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக எவை அமைய வேண்டும்? மலையும் கடலும்
- தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும் தெற்கு எல்லையாக குமரி முனையையும் குறிப்பிடும் இலக்கியங்கள் எவை? புறநானூறு, சிலப்பதிகாரம்
- ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் எது? வியன்னா
- அலெக்ஸாண்ட்ரியா துறைமுகம் எங்கு உள்ளது? எகிப்து
- கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்த காலத்தைச் சார்ந்தது? கிபி இரண்டாம் நூற்றாண்டு
- கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? ஆஸ்திரியா நாட்டின் வியன்னா அருங்காட்சியகத்தில்
- கிரேக்க வணிகருக்கும் முசிறி வணிகருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த கையெழுத்துச் சுவடி எந்தத் தாளில் எழுதப்பட்டுள்ளது? பாபிரஸ்
- மபொசி அவர்களின் தன் வரலாற்று நூல் எது? எனது போராட்டம்
- மபொசி எப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்?1952-1954
- மபொசி எப்போது சட்டமேலவை தலைவராக இருந்தார்?1972-1978
- தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?ம பொ சிவஞானம்
- மபொசி அவர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
- மபொசி அவர்களுக்கு தமிழக அரசு செய்த சிறப்பு என்ன? திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் சிலை நிறுவியது
- வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது? 1966
சிற்றகல்ஒளி 2 மதிப்பெண் வினாக்கள்
- ஒருவரைப் படிப்பாளியாகவும் படைப்பாளியாகவும் பக்குவப்படுத்துவது எது? கதை படிப்பது
- இந்திய வரலாற்றில் 1906ஆம் ஆண்டு சிறப்புடைய ஆண்டாகும். எவ்வாறு?
- அந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்
- அந்த ஆண்டில்தான் வ உ சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
- ம பொ சி எங்கு எப்போது பிறந்தார்?
- சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் சால்வன் குப்பம் என்ற பகுதியில்
- ஜூன் 26, 1906 இல் பிறந்தார்
- ம பொ சி அவர்களின் பெற்றோர் யாவர்?
- பொன்னுச்சாமி - சிவகாமி
- ம பொ சி அவர்களுக்கு சிவஞானம் என்ற பெயர் வரக் காரணம் யாது?
- பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம்
- சரபையர் என்னும் முதியவர் சிவஞானி என்று அழைத்தார். சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்ற பெயர் நிலைத்தது.
- ம பொ சி வறுமையால் கல்வியை இழந்தார். அந்த நிகழ்வை விளக்குக.
- ம பொ சி மூன்றாம் வகுப்பில் நுழைந்த ஏழாம் நாளில் புத்தகம் இன்றி வந்ததற்காக ஆசிரியர் பள்ளியிலிருந்து விரட்டிவிட்டார்
- புத்தகம் கூட வாங்கிக் கொடுக்க முடியாத வறுமையின் காரணமாக கல்வியை இழந்தார்.
- ம பொ சி அவர்களின் கல்வி ஞானம் எத்தகையது?
- வறுமையின் காரணமாக பள்ளிக்கல்வியை இழந்தார்
- இருப்பினும் தாயார் மூலமாக அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்கள் கேட்டு இலக்கிய அறிவை வளர்த்து வந்தார்.
- சித்தர் பாடல்களை மனனம் செய்வது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவற்றின் மூலமாக இலக்கிய அறிவை வளர்த்தார்.
- ம.பொ.சி ஒரு புத்தகப் பித்தன் என்பதை நிறுவுக
- உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கி விட்டு பல வேளைகளில் பட்டினி கிடந்து இருக்கிறார்
- போதிய பணம் இல்லாத காரணத்தால் பழைய புத்தகக் கடைகளில் குறைந்த விலைக்குப் புத்தகங்கள் வாங்குவார்.
- குறைந்த விலைக்கு நல்ல நூல் ஒன்று கிடைத்து விட்டால் பேரானந்தம் அடைவார்
- 'தமிழா! துள்ளி எழு' -துண்டறிக்கை குறிப்பு வரைக
- 30-9-1932இல் விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்த அறிக்கை 'தமிழா! துள்ளி எழு' என்பதாகும்
- நூற்றுக்கணக்கான பிரதிகள் கையால் எழுதப்பட்டன
- இதை வெளியிட்டதற்காக மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் ம.பொ.சி அவர்களுக்கு விதிக்கப்பட்டது
- 'தமிழா! துள்ளி எழு'-துண்டறிக்கையின் சாரம்சம் யாது?
- பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தது
- ம.பொ.சி அவர்களின் சிறை வாழ்க்கை பற்றிக் கூறு.
- 'தமிழா! துள்ளி எழு' துண்டறிக்கையை விநியோகம் செய்ததற்காக 6 மாத காலத்திற்குச் சிறைத்தண்டனை பெற்றார்
- 'சி' வகுப்புச் சோறு அவரின் பசியைப் போக்கினாலும் அவரது குடும்பத்தின் பட்டினியை எண்ணி வருந்தினார்
- வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட ம.பொ.சி துத்தநாகத் தகடுகளால் வேயப்பட்டிருந்த அமராவதி சிறையில் வாடினார்
- ம.பொ.சி அவர்களது வடக்கெல்லைப் போராட்டம் குறிப்பு வரைக
- மங்கலக் கிழாருடன் தமிழரசுக் கழகம் இணைந்து சென்னையிலும் திருத்தணியில் 'தமிழர் மாநாடு' நடத்தியது.
- சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய இடங்களில் வடக்கெல்லைப் போராட்டத்தைத் தொடங்கியது
- சர்தார் கே. எம். பணிக்கர் ஆணையம் 'சித்தூர்' மாவட்டத்தை ஆந்திராவிற்கு வழங்கியதை ஏற்காமல், "மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்" என்று முழங்கினார். அதனால், திருத்தணி வரை உள்ள தமிழ்நிலங்களை மீட்கப்பட்டன.
- தலைநகரை மீட்கும் போராட்டம்-குறிப்பு வரைக
- ஆந்திர மாநிலம் அமைவதற்கான நீதிபதி வாஞ்சு ஆணையம், அதன் தலைநகராகச் சென்னையைப் பரிந்துரை செய்ததாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கள் நிலவின
- இராஜாஜி தனதுமுதலமைச்சர் பதவியைத் துறக்க முன்வந்தார்
- சென்னை மாநகராட்சியில் 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழங்கி, தீர்மானம் ஒன்றை ம.பொ.சி கொண்டு வந்தார்.
- இறுதியில், 25-03-1953இல் பாரத பிரதமர் நேரு ஆந்திர நாட்டின் தலைநகர் அதன் எல்லைக்குள்ளேயே அமையும் என்று அறிவித்தார்.
- தெற்கெல்லைப் போராட்டம் -குறிப்பு வரைக
- ம.பொ.சி அவர்கள் 25-10-1946இல் வடிவீசுவரத்தில் தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றிப் பேசினார்
- 1953-54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைக் கிளர்ச்சிகளைத் தொடங்கி வைத்தது தமிழரசுக் கழகம்தான் என்றாலும் அதனை நடத்துகிற பொறுப்பு அந்தப் பகுதித் தலைவர்களிடமே இருந்தது
- போராட்டத்தில் தேவசகாயம், செல்லையா ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்
- மார்ஷல் நேசமணியின் வருகைக்குப் பிறகு போராட்டம் வலுப்பெற்றது
- பசல் அலி ஆணையம் -குறிப்பு வரைக
- 10-10-1955இல் பரிந்துரை வெளியானது
- மொழிவாரி மாநிலக் கொள்கை ஏற்கப்பட்டது
- திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீஸ்வரம், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு இணையவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. தேவிகுளம், பீர்மேடு நம் கைவிட்டுப் போனது.
- சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டங்கள் கேரளத்தோடு இணைய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது
- கடல் கடந்த தமிழ் வணிகம் பற்றிய சான்று தருக
- ஆஸ்திரிய நாட்டுத் தலைநகரான வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது
- இச்சுவடி சேரநாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழர் ஒருவருக்கும் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் ஆகும்.
- இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
- ம.பொ.சி குறிப்பு வரைக
- சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்
- விடுதலைப் போராட்ட வீரர்
- சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் மேலவைத் தலைவராகவும் பதவி வகித்தவர்
- 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
- சிலம்புச் செல்வர் என்று ம.பொ.சி அழைக்கப்படக் காரணம் யாது?
- இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடு இல்லாதவகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஒரு இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தை தவிர வேறு இல்லை என்று உறுதியாக நம்பினார்.
- அதனால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார். இதன் காரணமாகவே ம.பொ.சி அவர்கள் 'சிலம்புச் செல்வர்' என்று அழைக்கப்படுகிறார்
- மார்ஷல் நேசமணி- குறிப்பு வரைக
- இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்
- வழக்கறிஞர்
- நாகர்கோவிலில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்
- குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
- தமிழக அரசு, இவருடைய நினைவாக நாகர்கோயிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.